Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில், தமது கட்சியின் ஆதரவுடன் ஆதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவை தொடர்பாகத் தம்முடனும் கலந்துரையாட வேண்டியது தார்மீகக் கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரே ஒப்புக் கொள்கிறார் சட்டங்கள் மீறப்படவில்லை என.

  • Replies 59
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். முதல்வர் மணிவண்ணனிடம் தீவிர விசாரணை தொடர்கிறது !

யாழ் மாநகர மேயர் மணிவண்ணனிடம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் :  சட்டத்தரணி மணிவண்ணன் | Virakesari.lk

 

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பில் மாநகரசபை முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு வவுனியாவில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணியளவில் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு  அவர் அழைத்துச் செல்லப்பட்டார். 

பரிசோதனைகளின் பின்னர் கண்டி வீதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை அவரை சந்திப்பதற்காக வவுனியாவை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் மணிவன்ணனின் சகோதரனும் சட்டத்தரணியுமான வி.திருக்குமரன் அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை மணிவண்ணனிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவரது கணனி உட்பட சிலபொருட்களும் விசாரணை பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்தும் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் வருகைதந்து விசாரணை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். முதல்வர் மணிவண்ணனிடம் தீவிர விசாரணை தொடர்கிறது ! | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மேயரின் கைதுக்கு தமிழ் எம்.பி.க்கள் சபையில் போர்க்கொடி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் சபையில் போர்க்கொடி தூக்கியதுடன், அவரை உடனடியாக விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10.00 மணிக்கு கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணம், வாய் மூல விடைக்கான வினாக்களைத் தொடர்ந்து யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர். இது தொடர்பில் முதலில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கூறுகையில்,

யாழ் மாநகரசபை பகுதிகளை தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்ததற்காக புலிக்கதை கூறி யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அமைத்த காவல் படையின் சீருடை புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒப்பானது என்று கூறியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சீருடை கொழும்பு மாநகரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட சீருடைக்கு ஒப்பானது. எனவே நாட்டில் ஜனநாயகம் பேணப்பட வேண்டுமானால் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இது போன்ற நடவடிக்கைகளினால் நாடு பாரதூரமான விளைவுகளை நோக்கியே நகரும் என்றார்.

இதன் பின்னர் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில்,

யாழ் மாநகரசபை  முதல்வர் மணிவண்ணன் எமது கட்சியின் முன்னாள் உறுப்பினராவார். விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த  சீருடைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இள நீல சீருடை அணிபவர்களையெல்லாம் குற்றவாளிகளாக காட்டவே நீங்கள் முற்படுகின்றீர்கள். மணிவண்ணனின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றே தோன்றுகின்றது.

நாங்கள் நினைத்துக் கூட  பார்க்க முடியாதளவுக்கு நாடு இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது. தமக்கு பிடிக்காதவர்கள் ,எதிரானவர்கள் அடக்கப்படுகின்றனர். எனவே அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்த விடயம் குறித்து சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி கருத்து தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான  இரா.சாணக்கியன் கூறுகையில்,

கொழும்பு மாநகர சபையில் பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் யாழ் மாநகர சபையிலும் பின்பற்றினார்கள். ஆனால் கொழும்பில் நல்லதாகவுள்ளது யாழ்ப்பாணத்தில் கெட்டதாகப் பார்க்கப்படுகின்றது. இங்கு சீருடையுடன் நின்று செய்வது சரி, யாழ்ப்பாணத்தில் செய்வது பிழையா என்றார். இதன் பின்னர் உரையாற்றிய கோவிந்தன் கருணாகரனும் தனது உரையில் யாழ் மாநகரசபை  முதல்வர் மணிவண்ணனின் கைது குறித்தும் பேசியிருந்தார்.

யாழ் மேயரின் கைதுக்கு தமிழ் எம்.பி.க்கள் சபையில் போர்க்கொடி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு 12 வருடங்கள் யார் கண்களிலும் படாமல் காட்டில் மறைந்து வாழ வேண்டும் என்ற துரியோதனது கட்டளையை ஏற்று யார் கண்ணிலும் பாடாமல் 12 வருட வனவாசம் முடித்து திரும்பி வந்து துரியோதனன் வாக்கு அளித்தபடி தங்கள் நாட்டை திருப்பி தரும் படி கேக்கிறார்கள்.சத்திய வாக்கை தவறிய துயோதனன் தர்மமும் அறமும் தவறி நின்று அவர்கள் நாட்டை திருப்பி கொடுக்க மறுக்கிறான்.அதன் பின் அவர்கள் ஐந்து கிராமங்கள் கேட்டார்கள் அதுகும் இல்லை என்றான். ஐந்து வீடுகள் கேட்டார்கள் அதுகும் இல்லை என்று பாண்டவர்களுக்கு ஒரு சிறு ஊசி நுழையக் கூடிய இடமும் தர மாட்டேன் என்றான். இது போல் தான் இன்று இலங்கை ஆட்சியாளர்கள் சொல்லுவது. சூதாட்டத்தில் தோற்று போன தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தருவோன் 13 ம் சரத்துக்கு மேல் போய் நில அதிகாரம் போலீஸ் அதிகாரம் எல்லாம் தருவேன் என்றார்கள். இப்போ ஐந்து காவலாளிகளைய் யாழ்ப்பாண மேயர் நியமித்து விட்டார் என்று எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டது. ஐந்து காவலாளிகளையே தராதவர்கள் அத்தோடு என்ன உடையை தமிழர்கள் அணிய வேண்டும் அணியக் கூடாதென்று அடிப்படை உரிமைகளை மறுப்பவர்கள் எதை தருவார்கள் என்று நினைக்கிறீர்கள். தமிழர் அடையாளம் அவர்களது தேசிய இனம் சுய நிர்ணய உரிமைக்களை கதைப்பவர்களும் இனி வரும் காலங்களில் வன வாசம் செல்ல நேரிடலாம். இவைகளை கதைக்காதவர்கள் எழுதாதவர்கள்  ஒரே நாடு ஒரே சட்டத்தை பின் பற்றுபவர்கள் மட்டும் வாயையும்  கையையும் கட்டி விட்டு  மரத்தில் படரும் கொடிகளை போல் அடிமையாக இருந்து இங்கு அபிவிருத்தி அரசியலை மட்டும் பார்த்தால் போதுமாம். அறிவுடை சமூகம் ஆழமாக இதை சிந்தித்தால் நலம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் 

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வராக வர உதவிய டக்ளசு ஒன்றுமே பேசவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

முதல்வராக வர உதவிய டக்ளசு ஒன்றுமே பேசவில்லையா?

நான் என்ன, நினைக்கிறேன் எண்டா, மணிவண்ணனை ஒரு தியாகியாக காட்டி, கஜேந்திரகுமாருக்கு, அரசியல் குடைச்சல் குடுக்கிற ஐடியா இருக்குமோ எண்டு.... சொல்ல ஏலாது பாருங்கோ... 🤔

ஒருக்கா சிறைக்கு போட்டு வந்தால், அரசியலில் ஒரு 16 அடி பாயலாம் எல்லோ. 🤗

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணியின் கைதுக்கு ஐதேக கண்டனம் – அரசை நோக்கி அதிரடி கேள்விகளை கேட்டது!

யாழ்ப்பாணம் முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு ஐக்கிய தேசிய கட்சி அதிகாரபூர்வ அறிக்கையூடாக தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன்,

தேர்தெடுக்கப்பட்ட ஒரு அதிகாரியை குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நடவடிக்கைக்கு உட்படுத்த முன்னர், தொடர்புடைய அமைச்சால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கட்சி நம்புகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு மாநகர தரப்பிட அதிகாரிகளின் சீருடைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகளுடையதை ஒத்ததாக பார்க்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.

மணியின் கைதுக்கு ஐதேக கண்டனம் – அரசை நோக்கி அதிரடி கேள்விகளை கேட்டது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, uthayakumar said:

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு 12 வருடங்கள் யார் கண்களிலும் படாமல் காட்டில் மறைந்து வாழ வேண்டும் என்ற துரியோதனது கட்டளையை ஏற்று யார் கண்ணிலும் பாடாமல் 12 வருட வனவாசம் முடித்து திரும்பி வந்து துரியோதனன் வாக்கு அளித்தபடி தங்கள் நாட்டை திருப்பி தரும் படி கேக்கிறார்கள்.சத்திய வாக்கை தவறிய துயோதனன் தர்மமும் அறமும் தவறி நின்று அவர்கள் நாட்டை திருப்பி கொடுக்க மறுக்கிறான்.அதன் பின் அவர்கள் ஐந்து கிராமங்கள் கேட்டார்கள் அதுகும் இல்லை என்றான். ஐந்து வீடுகள் கேட்டார்கள் அதுகும் இல்லை என்று பாண்டவர்களுக்கு ஒரு சிறு ஊசி நுழையக் கூடிய இடமும் தர மாட்டேன் என்றான். இது போல் தான் இன்று இலங்கை ஆட்சியாளர்கள் சொல்லுவது. சூதாட்டத்தில் தோற்று போன தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தருவோன் 13 ம் சரத்துக்கு மேல் போய் நில அதிகாரம் போலீஸ் அதிகாரம் எல்லாம் தருவேன் என்றார்கள். இப்போ ஐந்து காவலாளிகளைய் யாழ்ப்பாண மேயர் நியமித்து விட்டார் என்று எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டது. ஐந்து காவலாளிகளையே தராதவர்கள் அத்தோடு என்ன உடையை தமிழர்கள் அணிய வேண்டும் அணியக் கூடாதென்று அடிப்படை உரிமைகளை மறுப்பவர்கள் எதை தருவார்கள் என்று நினைக்கிறீர்கள். தமிழர் அடையாளம் அவர்களது தேசிய இனம் சுய நிர்ணய உரிமைக்களை கதைப்பவர்களும் இனி வரும் காலங்களில் வன வாசம் செல்ல நேரிடலாம். இவைகளை கதைக்காதவர்கள் எழுதாதவர்கள்  ஒரே நாடு ஒரே சட்டத்தை பின் பற்றுபவர்கள் மட்டும் வாயையும்  கையையும் கட்டி விட்டு  மரத்தில் படரும் கொடிகளை போல் அடிமையாக இருந்து இங்கு அபிவிருத்தி அரசியலை மட்டும் பார்த்தால் போதுமாம். அறிவுடை சமூகம் ஆழமாக இதை சிந்தித்தால் நலம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் 

நன்றி... உதயகுமார்.
இந்தக் காட்சியை... பார்க்க, 
என்னால்  முடியவில்லை... என்றாலும்,
எனது... பிள்ளைகள், பார்த்துக் கொள்வார்கள்.

அதனைத் தான்.... தமிழீழத் தலைவர்  மேதகு  பிரபாகரன் அவர்கள்  சொல்லியுள்ளார். 

இதற்கு.... ஆதாரம் கேட்பவனை,  நான்... செருப்பால் அடிப்பேன்.

எனக்கு... என் இனம் முக்கியம். வருங்கால சந்ததி முக்கியம், நாடு முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நான் என்ன, நினைக்கிறேன் எண்டா, மணிவண்ணனை ஒரு தியாகியாக காட்டி, கஜேந்திரகுமாருக்கு, அரசியல் குடைச்சல் குடுக்கிற ஐடியா இருக்குமோ எண்டு.... சொல்ல ஏலாது பாருங்கோ... 🤔

ஒருக்கா சிறைக்கு போட்டு வந்தால், அரசியலில் ஒரு 16 அடி பாயலாம் எல்லோ. 🤗

எனக்கும் இது தமிழரின் பலத்தை மேலும் மேலும் சிதைக்க எடுக்கப்படும் நரித்தனமாகவே தெரிகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்

Published on 2021-04-09 21:49:32

 
 

 

இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

00__1_.jpg

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றிரவு அவர் முற்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில்,  2 இலட்ச ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் 6 ஆம் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் மாநகர சபையில் வரி வசூலிப்பாளர்களுக்கு சீருடை வழங்கியமையை அடுத்து சர்ச்சை எழுந்தது. தமிழீழ காவற்றுறையின் சீருடையை ஒத்த சீருடையை வழங்கியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவினால் இன்று அதிகாலை 1.40 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

00__2_.jpg

அதன் பின்னர் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மதியம் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு  அவர் அழைத்துச்செல்லப்பட்டார். 

பரிசோதனைகளின் பின்னர் கண்டிவீதியில் அமைந்துள்ள பயங்கரவாரத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிற்கு மீண்டும் அழைத்துச்செல்லப்பட்டிருந்தார்.

சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர் முதல்வர் வி. மணிவண்ணன் இன்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்

இந்நிலையில் சற்றுமுன்னர் யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யாழ். முதல்வர் .சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிணையில் விடுதலையானார் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தான் மணிவண்ணணுக்காக நேரில் சென்று வாதாடி இருக்கின்றார் என அறிய முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எனக்கும் இது தமிழரின் பலத்தை மேலும் மேலும் சிதைக்க எடுக்கப்படும் நரித்தனமாகவே தெரிகிறது

மைத்திரி, ரணில் இருக்கும் போது, இப்படி நடக்கவில்லை, நாடு ஒகே ஆக இருந்தது, சர்வதேசமும், அவர்கள் வெட்டி, கிளிப்பார்கள் என்று நினைத்தது.

நான் ஆரம்பத்தில் இருந்து சொல்வது என்னவென்றால், இந்த அரசாங்கமே, எமக்கு வேண்டியதை செய்கிறது.

நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களாளோ இல்லையோ, 2009ல், சர்வதேச ரீதியாக புலிகள், 'பயங்கரவாதிகள்' என தமிழர்களுக்கு சுமையாக இருந்தார்கள்.

இன்று அதே நிலையில், சிங்களவர்கள் இருக்கிறார்கள். 'யுத்த குற்றவாளிகளின் அரசு' ஒன்றினை தெரிவு செய்து அதனையே தமது சுமையாக மாற்றிக்  கொண்டு உள்ளனர்  . இவர்கள் செயல்கள் குறித்து சந்தோசப்படுங்கள்.

டொரண்டோ மேயர் இன்று, இந்த கைதினை கண்டித்து உள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

மாநகர காவல் படை உருவாக்கம்: யாழ். மாநகர சபை அமர்வைப் புறக்கணித்தது ஈ.பி.டி.பி.

மாநகர காவல் படை உருவாக்கம்: யாழ். மாநகர சபை அமர்வைப் புறக்கணித்தது ஈ.பி.டி.பி.

யாழ். மாநகர சபையின் இன்றைய அமர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை முதல்வரினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை தொடர்பாக தம்முடன் கலந்துரையாடப்படாமையே இந்தப் புறக்கணிப்பிற்குக் காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலில் ஆர்வம் செலுத்துகின்ற இளைய தலைமுறையினருக்குச் சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என்றே சட்டத்தரணி மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமது கட்சித் தலைமை தீர்மானித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தமது கட்சியின் ஆதரவுடன் ஆதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அவை தொடர்பாகத் தம்முடனும் கலந்துரையாட வேண்டியது தார்மீகக் கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாநகர காவல்படை உருவாக்கம் குறித்து தம்மோடு கலந்துரையாடப்படவில்லை என்பதில் கரிசனையை வெளிப்படுத்தும் விதமாகவே இன்றைய அமர்வுகளைப் புறக்கணித்துள்ளதாக யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1208635

###############   ###############   ###########

சிங்களவனை விட... இவர்கள் மோசமானவர்கள்.

மாநகர சபை அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல் தான்தோன்றித்தனமாக மேயர் செயற்பட்டது நிச்சயமாக தவறுதான். சீருடை வழங்கல் பரிசோதகர் பணி  அமர்வு இரகசியமாக செய்யப்படவேண்டிய விடயம் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமாச்சாரம் கலந்துரையாடல் செய்யப்படுதல் அவசியம்.

கொழும்பு மேயரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள நகரஙகளின் மேயர்களோ மாநகர சபையின் அங்கத்தவர்க்களுடன் அபிப்பிராயம் கேட்காது ஒரு தலைப்பட்சமாக செயற்பட்டால் என்ன நடக்கும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஊடகங்களே துரத்தி, துரத்தி உருட்டி எடுக்கும்.

அரச பணியாற்றும் வளர்ந்து வரும் ஒரு இளைய தலைமுறை சேவையாளருக்கு இப்படியான மனநிலை காணப்படுவது ஆரோக்கியமானது இல்லை.

எதிர்காலத்தில் மேயர் மணிவண்ணன் இந்த விடயத்தில் கவனம் எடுப்பார் என எதிர்பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

'யுத்த குற்றவாளிகளின் அரசு' ஒன்றினை தெரிவு செய்து அதனையே தமது சுமையாக மாற்றிக்  கொண்டு உள்ளனர்  . இவர்கள் செயல்கள் குறித்து சந்தோசப்படுங்கள்.

டொரண்டோ மேயர் இன்று, இந்த கைதினை கண்டித்து உள்ளார். 

நிதர்சனமும் அதுவே. தெரியாமல் தமிழர்களை பழிவாங்க எடுத்த முடிவு, அவர்களுக்கு எதிராய் மாறிவிட்டது. சாதாரணமாக சொல்கிறார்கள்: நாங்கள் சிங்கள, பவுத்த மக்களால் இந்த காரியங்களுக்காகவே   தெரிவு செய்யபட்டவர்கள். ஆகவே அவர்கள் கொண்டுவந்ததை அவர்களே சுமக்க வேண்டும்.

வேலிக்கு வைச்ச முள்ளு வைத்தவரின் காலையே தைச்ச கதை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

சுகாதார கண்காணிப்பு குழுவின் சீருடை விடுதலைப்புலிகளின் காவல்துறையின் ஆடையை ஒத்திருப்பதாகக் கூறியே மணிவண்ணனை அதிகாலை வேளையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்திருக்கின்றது.

கனவிலும் காக்காவுக்கு ** அழையுற எண்ணம்.

10 hours ago, உடையார் said:

கொழும்பு மாநகர சபையும் இள நீல நிற சீருடையுடன் பணியாளர்களை அமர்த்தியுள்ளது

கொழும்பு மாநகர முதல்வரையும் அதன் பணியாளர்களையும் கைது செய்து விசாரிக்கலாமே?

திறமை அற்ற, பழிவாங்கும் அரசு உள்ள  நாடு விரைவாக வீழ்ச்சியுறும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

நான் என்ன, நினைக்கிறேன் எண்டா, மணிவண்ணனை ஒரு தியாகியாக காட்டி, கஜேந்திரகுமாருக்கு, அரசியல் குடைச்சல் குடுக்கிற ஐடியா இருக்குமோ எண்டு.... சொல்ல ஏலாது பாருங்கோ... 🤔

ஒருக்கா சிறைக்கு போட்டு வந்தால், அரசியலில் ஒரு 16 அடி பாயலாம் எல்லோ. 🤗

 

குணாவின் கருத்துக்களைப் பார்க்க தலை சுற்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

சீருடை வழங்கல் பரிசோதகர் பணி  அமர்வு இரகசியமாக செய்யப்படவேண்டிய விடயம் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமாச்சாரம் கலந்துரையாடல் செய்யப்படுதல் அவசியம்.

நாதமுனி சொன்னது போல் தன்னை சிறை சென்ற தியாகியாக காட்டுவது அரசியல் தலைவராக வருவதற்கு பெரிதும் உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

எனக்கும் இது தமிழரின் பலத்தை மேலும் மேலும் சிதைக்க எடுக்கப்படும் நரித்தனமாகவே தெரிகிறது

ஒன்று தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள், சமுதாய முன்னேற்றத்திற்காய் உழைக்க கூடியவர்களை ஆரம்பத்திலேயே தன்னோடு சேர்த்து தமிழ் மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும், அல்லது அவர்களை மிரட்டி சேவையிலிருந்து விரட்டும் சிங்களம்.

9 hours ago, ஈழப்பிரியன் said:

முதல்வராக வர உதவிய டக்ளசு ஒன்றுமே பேசவில்லையா?

 அவர் தனக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே இவருக்கு உதவினார். இவரோ தன் பாதையில் சென்றது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரே போட்டுக்கொடுத்திருப்பார். அவருக்கு இது ஒன்றும் புதிதில்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

அவர் தனக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே இவருக்கு உதவினார். இவரோ தன் பாதையில் சென்றது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரே போட்டுக்கொடுத்திருப்பார். அவருக்கு இது ஒன்றும் புதிதில்லையே. 

போட்டும் கொடுத்திட்டு
பிணையும் எடுத்திருக்கிறார்.

அவர் சொன்னதாலேயே ஜனாதிபதி விடுவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அவர் சொன்னதாலேயே ஜனாதிபதி விடுவித்துள்ளார்.

இத்தனை தலைவர்கள் விட்ட கோரிக்கைக்கு மேலாக இவர் சொன்னதால்த்தான் ஜனாதிபதி விடுவித்தார் என்று பிதற்றுவதன் மூலம்: தானும், ஜனாதிபதியும் திட்டமிட்டு நடத்திய நாடகம் இதுவென ஒப்புக்கொண்டுள்ளார். பாதை  விலகிப் போகும் மணிவண்ணனுக்கு கடிவாளம் இரண்டாவது தடவை போடப்பட்டிருக்குது. இவர்களின் சிறிய அசைவையும் உடனடியாக சர்வதேசத்துக்கு கொண்டுபோய் இவர்களின் வெளிவேடத்தை கிழிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

சுமந்திரன் தான் மணிவண்ணணுக்காக நேரில் சென்று வாதாடி இருக்கின்றார் என அறிய முடிகின்றது.

டக்கிளஸ் தான் ஜனாதிபதியுடன் பேசி அவரை விடுதலை செய்தவராம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

நான் என்ன, நினைக்கிறேன் எண்டா, மணிவண்ணனை ஒரு தியாகியாக காட்டி, கஜேந்திரகுமாருக்கு, அரசியல் குடைச்சல் குடுக்கிற ஐடியா இருக்குமோ எண்டு.... சொல்ல ஏலாது பாருங்கோ... 🤔

ஒருக்கா சிறைக்கு போட்டு வந்தால், அரசியலில் ஒரு 16 அடி பாயலாம் எல்லோ. 🤗

உங்கள் கருத்து மிக மிக உண்மையானது நாதமுனி .

காகம் அகத்தியரின் கமண்டலத்தை தெரிந்தே  தட்டி விட்டது அது போல் இங்கும் மலிவான அரசியலை நோக்கி நேற்று முளைத்த காளான்கள்  ஆடுகின்றன .

8 hours ago, ஈழப்பிரியன் said:

 

குணாவின் கருத்துக்களைப் பார்க்க தலை சுற்றுகிறது.

குணா ஒன்றும் தவறாக சொல்லவில்லையே பாஸ் . மலசல கூடங்களை அமைத்து கொடுத்தபின் இப்படியான தண்டனை முறைகளை கொண்டுவருவது நல்லது என்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே இரவில் உலக  புகழ் தியாகி ஆவது  எப்படி என்று மணிவண்ணனிடம் பாடம் படிக்கணும் சிங்கள நந்தசேன கோத்தபாய அரசு மன்னிப்பு கொடுக்கிறார்கலாம் இதே மகிந்த கோத்த  யாழில் பிரசாரத்துக்கு வந்த போது  தமிழ் அரசியலகைதிகளுக்கு பொது மன்னிப்பு தாங்கள்  வந்தால் கொடுப்பம்  என்றார்கள் இப்ப நடப்பது என்ன என்று நீங்களே பாருங்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சிங்கள நந்தசேன கோத்தபாய அரசு மன்னிப்பு கொடுக்கிறார்

எப்போதும் ஏற்றுக்கொள்ளாமல், மறுத்திருக்க வேண்டியதே, மணிவண்ணன் செய்து இருக்க வேண்டும்.

சட்டதிற்கு உட்பட்டு செய்யும் பொது, மன்னிப்பு எதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை.. முன்னாள் நிதி அமைச்சர் கருத்து

மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை.. முன்னாள் நிதி அமைச்சர் கருத்து

யாழ். முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நீண்டநேர விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அனைவரினதும் அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை சட்டத்தின் வலுவான ஆட்சி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விடுதலை புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றதாக கொழும்பு முதல்வர் மீது குற்றம் சாட்ட முடியுமா என கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நகர சபை காவல் படையின் சீருடை தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதவேளை கொழும்பு நகராட்சியின் காவல் படையினரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சீருடைகளை அணிகின்றார்கள்.

இந்நிலையில் கொழும்பு முதல்வர் விடுதலை புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றார் என குற்றம் சாட்டப் போகின்றோமா? என கேள்வியுடன் மங்கள சமரவீர பதிவிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1208965

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.