Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆர்மீனியர்கள் படுகொலை: இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்மீனியர்கள் படுகொலை: இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

ஆர்மீனியர்கள் படுகொலை: இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார்.

நவீன கால துருக்கியின் உருவாக்க காரணமாக அமைந்த ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுற்ற காலகட்டத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றன.

இந்த அட்டூழியங்களை துருக்கி ஒப்புக் கொண்ட போதும் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை நிராகரித்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை துருக்கி “முற்றிலுமாக நிராகரிக்கிறது” என வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

மேலும் தங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை என்றும் டுவிட் செய்துள்ளார்.

இதனை அடுத்து துருக்கிய வெளிவிவகார அமைச்சு அங்காராவின் வலுவான எதிர்ப்பை வெளியிடும் முகமாக அமெரிக்க தூதுவரை சந்திக்கவுள்ளது.

நேட்டோ நட்பு நாடான துருக்கியுடனான உறவுகளை முறிவடைய செய்யும் என்ற காரணத்தினால் கடந்த அமெரிக்க அரசாங்ககங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை முறையான அறிக்கைகளில் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1212200

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஆர்மீனியர்கள் படுகொலை: இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார்.

பல விடயங்கள் பைடன் அரசில் தூசு தட்டப்படும் போல் இருக்கின்றது. ஆர்மேனியா,குர்திஷ் இன அழிவுகள் போல் ஆசியாவிலும் ஒரு குட்டி நாட்டில் நடைபெற்று உள்ளது.  இது ஒரு சில இலங்கை தமிழர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம் ஆறாயிரம் ஆர்மேனியர்களைக் கொன்றால் இனப்படுகொலை.. 60 ஆயிரம் தமிழர்களை ஒரே இரவில் கொன்றது.. ஒன்றுமே இல்லை. 

அமெரிக்கன் தனக்கு ஆதாயமுன்னா.. என்னவும் அறிவிப்பான். 

  • கருத்துக்கள உறவுகள்

Countries that Recognize the Armenian Genocide

ஆர்மேனிய இனப்படுகொலையை அடையாளம் கண்ட நாடுகளாவன:

  1. Argentina
  2. Austria
  3. Belgium
  4. Bolivia
  5. Brazil
  6. Canada
  7. Chile
  8. Cyprus
  9. Czech Republic
  10. Denmark
  11. France
  12. Germany
  13. Greece
  14. Italy
  15. Lebanon
  16. Lithuania
  17. Luxembourg
  18. Netherlands
  19. Paraguay
  20. Poland
  21. Portugal
  22. Russia
  23. Slovakia
  24. Sweden
  25. Switzerland
  26. Syria
  27. Vatican City
  28. Venezuela
  29. United States
  30. Uruguay
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

உலக நாடுகளில் கால்வாசி நாடுகளுக்கு கூட இந்த இனப்படுகொலை தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம் ஆறாயிரம் ஆர்மேனியர்களைக் கொன்றால் இனப்படுகொலை.. 60 ஆயிரம் தமிழர்களை ஒரே இரவில் கொன்றது.. ஒன்றுமே இல்லை. 

அமெரிக்கன் தனக்கு ஆதாயமுன்னா.. என்னவும் அறிவிப்பான். 

ஈழத்தமிழினம் எல்லா வகையிலும் போராடிவிட்டது.  சிறு பலன்கள் கூட கிடைக்கவில்லை.தமிழ் அரசியல்வாதிகள் கொழுத்ததை தவிர.... இனிவரும் காலங்களில் ஆதாய அரசியலாவது உதவுகின்றதா என பார்ப்போம். :)

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:

உலக நாடுகளில் கால்வாசி நாடுகளுக்கு கூட இந்த இனப்படுகொலை தெரியவில்லை

இதைச்செய்த துருக்கிக்கே தெரியவில்லை  இது இனப்படுகொலை தானென்று மேலேயுள்ள 30 நாடுகளும் சொன்னபோதும் இல்லையென மறுக்கிறார்கள்  என்றாலும் கூட  ஆர்மேனியர்களைப் பாதுகாக்கத்தான் இதைச்செய்தேனென்று (இலங்கைப்பாணியில்  )கூறவில்லை இதில் இலங்கையின்  நிலையென்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kandiah57 said:

இதைச்செய்த துருக்கிக்கே தெரியவில்லை  இது இனப்படுகொலை தானென்று மேலேயுள்ள 30 நாடுகளும் சொன்னபோதும் இல்லையென மறுக்கிறார்கள்  என்றாலும் கூட  ஆர்மேனியர்களைப் பாதுகாக்கத்தான் இதைச்செய்தேனென்று (இலங்கைப்பாணியில்  )கூறவில்லை இதில் இலங்கையின்  நிலையென்ன?

Plan von Präsident Erdogan: Türkei will Truppen nach Libyen schicken -  Politik - Tagesspiegel

மேலைத்தேய நாடுகளுக்கு எதிரானவர்களுடன் கை குலுக்கியவர்.

இவர்  தன் அரசியல் லாபத்திற்காக அகதிகள் எனும் பெயரில் பலரை ஐரோப்பாவுக்குள் ஊடுருவ விட்டவர். இவர் தன்னை ஒரு கிங் என நினைக்கின்றார். பல இடங்களில் இவரின் தெனாவெட்டு பேச்சும் நடவடிக்களைகளும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை கொஞ்சம் சினம் கொள்ள வைத்துள்ளது. எப்படியும் வாலை ஒட்ட நறுக்கிவிடத்தான் போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஓம் தெரியும் இவர் ஒரு முஸலிம் தீவிரவாதி  .கோபக்காரனும் கூட. ஆனால் துருக்கியமக்கள் ஆதரவுண்டு  ஐரோப்பா  இந்த இணைக்கிறேன்.   ....இந்த.  துருக்கியை ...இணைக்கிறேன்.   என்று எமாற்றிவிட்டது.  அது  இவருக்கு கடும் கோபம். அங்கெல மெர்கலையும்.  கடுமையாக.  விமர்சித்தவர்.  இலங்கை  இவருக்கு ஆதரவு என நினைக்கிறேன்.  😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kandiah57 said:

ஓம் தெரியும் இவர் ஒரு முஸலிம் தீவிரவாதி  .கோபக்காரனும் கூட. ஆனால் துருக்கியமக்கள் ஆதரவுண்டு  ஐரோப்பா  இந்த இணைக்கிறேன்.   ....இந்த.  துருக்கியை ...இணைக்கிறேன்.   என்று எமாற்றிவிட்டது.  அது  இவருக்கு கடும் கோபம். அங்கெல மெர்கலையும்.  கடுமையாக.  விமர்சித்தவர்.  இலங்கை  இவருக்கு ஆதரவு என நினைக்கிறேன்.  😎

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் ராஜபக்சவிற்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியவர். சுனாமி அழிவுகளுக்கு சிங்கள பிரதேசங்களுக்கு மட்டும் உதவி ஒத்தாசை செய்தது மட்டுமல்லாமல் நேரடியாக சிங்கள பிரதேசங்களுக்கு மட்டும் சென்று பார்வையிட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம் ஆறாயிரம் ஆர்மேனியர்களைக் கொன்றால் இனப்படுகொலை.. 60 ஆயிரம் தமிழர்களை ஒரே இரவில் கொன்றது.. ஒன்றுமே இல்லை. 

அதை சொல்லும் சுமத்திரனை  அறிவாளி எண்டு சொல்ல மகா அறிவாளி கூட்டம் இங்குண்டு .

  • கருத்துக்கள உறவுகள்

1915ல் நடந்ததை இப்போதுதான் கண்டுபிடித்துள்ளார்.நாங்கள் அவசரப்படத்தேவையில்லை

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

ஆறாயிரம் ஆர்மேனியர்களைக் கொன்றால் இனப்படுகொலை.

ஏறத்தாழ ஒரு மில்லியன்  (800, 000 - 1, 200, 000) கொலை அல்லது அவர்கள் இறப்பதற்கன சூழலை ஏற்றப்படுத்தியன் மூலமாக.

இதை விட 1 மில்லியன் நாடு கடத்தப்பட்டது என்றும் பின் ஆய்வுகலின் முடிவு.

1915 -1917 இல் 90% ஆமெர்னியர் பதிவுகளில் இருந்து முற்றாக  நீக்கம் என்றும் பின் ஆய்வுகலின் முடிவு.

இவை எல்லாம் அண்ணளவான  கணிப்பீடுகள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்மேனியர்கள் படுகொலை விவகாரம் அமெரிக்காவுக்கு துருக்கி கண்டனம்

123-696x388.png
 16 Views

ஆர்மேனியர்கள் படுகொலை  ஓர் இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளதற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1915 – 1916-ம் ஆண்டு காலப்பகுதியில் ஓட்டோமான் பேரரசு நடத்திய ஆர்மேனியர்கள் படுகொலையை “இனப்படுகொலை“ என அறிவித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் என்பதும் குறிப்பிடத்தக்கது.‌

இந்த படுகொலை குறித்து ஜோ பைடன்  கூறுகையில் ‘‘ஒட்டோமான் கால ஆர்மேனிய இனப்படுகொலையில் இறந்த அனைவரின் வாழ்க்கையையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம், மேலும் இதுபோன்ற ஒரு கொடுமை மீண்டும் நிகழாமல் தடுக்க நம்மை மறுபரிசீலனை செய்கிறோம். இனப்படுகொலை என அறிவிப்பதின் நோக்கம், குற்றம் சாட்டுவது அல்ல, என்ன நடந்ததோ அது மீண்டும் நிகழாமல் இருக்க உறுதி செய்வதாகும்’’ என்றார்.

இதனிடையே அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரை நேரில் அழைத்து  தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.

ட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு. முதல் உலகப் போர் சமயத்தில் ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக நாட்டில் பல புரட்சி இயக்கங்கள் உருவாகின.

இதன் பின்னணியில் ஆர்மேனியர்கள் இருப்பதை கண்டு கொண்ட ஓட்டோமான் பேரரசு 1915-ம் ஆண்டு ஏப்ரல் 24ம் திகதி  ஆர்மேனியர்களை படுகொலை செய்யத் தொடங்கியது. 1915 – 1916-ம் ஆண்டுகளில் 15 இலட்சம் ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போதைய ஆர்மேனியா உட்பட பல நாடுகள் இதை இனப்படுகொலை என கூறுகின்றன. ஆனால் ஓட்டோமான் பேரரசுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கி குடியரசு இதனை இனப்படுகொலை என கூறுவதை மறுக்கிறது.

மேலும் 1915 – 1916-ம் ஆண்டுகளில் 3 இலட்சம் ஆர்மேனியர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகக் கூறி வருகிறது.

https://www.ilakku.org/?p=48312

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2021 at 06:21, nedukkalapoovan said:

ஆமாம் ஆமாம் ஆறாயிரம் ஆர்மேனியர்களைக் கொன்றால் இனப்படுகொலை.. 60 ஆயிரம் தமிழர்களை ஒரே இரவில் கொன்றது.. ஒன்றுமே இல்லை. 

அமெரிக்கன் தனக்கு ஆதாயமுன்னா.. என்னவும் அறிவிப்பான். 

எமக்கு நடந்தது இனக்கொலை. அதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாமலிருப்பது தமது சொந்த லாப நட்டங்களுக்காகத்தான்.

ஆனால், ஏனைய இனக்கொலைகளை இதற்காக நாம் கேவலப்படுத்தத் தேவையில்லை. சர்வதேச கணிப்பீட்டின்படி ஆர்மீனியாவில் துருக்கி ஒட்டோமான் ராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட ஆர்மீனியர்களின் எண்ணிக்கை 6000 அல்ல, நான்குலட்சம். இதன் உண்மையான எண்ணிக்கை எட்டு லட்சம் வரை இருக்கலாம் என்று ஆர்மீனியர்கள் கூறுகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.