Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவர் உபசரிப்பில் டுபாய்பிட்டு -சந்திரவதனா அனுபவப் பகிர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் நடக்குறப்போ ஆனந்தி அக்கா பொறக்கவே இல்ல...

  • Replies 95
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

முதலில் ஒன்றைத் தெளிவாகப்புரிந்து கொள்ளுங்கள். சீமானை  நாங்கள் எதிர்கவில்லை  மாறாக வரவேற்கிறோம் சீமான் நன்றாக தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  அந்தயுரிமை அவருக்குண்டு  நாங்கள்எதிர்பபது தமிழீழப்போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுடன் போட்டு குழப்புவதை. இந்தக்குழப்பம் இரண்டுகப்பலில் கால் வைப்பது போன்றது நம்பும்படியான விடயங்களை சொல்ல வேண்டும். இந்தியாவுக்குள்ள  தண்ணீரை  இநதியாவுக்கை  (தமிழ்கொநாடு)கொண்டு வாருங்கள்  இதுவே  முடியாத நீங்கள் எப்படி இலங்கைத்தமிழர் பிரச்சனையை தீர்க்க உதவமுடியும் 

திராவிட கூமுட்டைகளுக்கு சீமானை  பிடிக்காது .

சிங்களவர்களுக்கு சீமானை  பிடிக்காது .

வடகிழக்கு முஸ்லிம்களுக்கு சீமானை  பிடிக்காது .

முன்னாள் மாற்று இயக்கக்காரர்களுக்கும் சீமானை  பிடிக்காது .

தமிழ்த்தேசிய மாற்றுக்கருதளர்களுக்கும் சீமானை நினைத்து நித்திரை இல்லையாம் .

ஹிந்தியை பரப்புவர்களுக்கும் சீமானை கண்டால் காறி  துப்புகினம் .

டெல்லி சவுத் புளக் (இப்ப எல்லாம் சவுத் புளக் என்று அப்படி இப்படி எழுதினால்த்தான் கொஞ்சம் சரக்குள்ளவன் என்று நினைப்பினமாம் .😀🤣) அவையளுக்கும் பிடிக்காதாம் .

சீமானை வேதக்காரன் என்கினம் ஆனால் ஜெகத் கஸ்பருக்கும் பிடிக்காதாம் .

கூடங்குள அணுஉலைக்கு தொடராக போராடி வரும் உதயகுமாருக்கும்  சீமானை கண்ணிலை  காட்டக்கூடாது .

ரசனிக்கும்  சீமானை  பிடிக்காது .

கனடாவில் கண்டபடி கதைத்து  கைவிலங்கு போட்டு ஆளை நாடுகடத்திய போது  இங்குள்ள நம்மாளுக்கு இம்பரஸ் ஆகி அவருக்கு  அன்று தொடங்கி சீமானை  பிடிக்காது . அல்லது தான் சாப்பிடாத ஆமைக்கறியை சாப்பிட்டு விட்டார் என்ற கவலையோ தெரியலை .

தான் படித்த ரசித்த எழுத்தாளர்கள் சீமானை எதிர்க்கினம் என்பதுக்காக  நம்ம கிருபன்சாமிக்க்கும் (நல்லூர் முருகன் சொல்லி வேலன்சுவாமி ஆகின்றது  போல் அல்ல இது )சீமானை  பிடிக்காது .

எல்லாருக்கும் திங்கள் இரவு நன்றாக இருக்கணும் என்று இப்பவே கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

1) புலம்பெயர்ந்து சொகுசாக இருக்கும் நாம் இதையெல்லாம் மறந்து, இன்னொரு ஷோ பார்க்க தமிழகத்தில் ஸிம்மான் பின்னால் போகவிழைகின்றோம்!

2) இந்த இனவெறிக் கருத்தை யாழ் களத்தில் உள்ள ஸிம்மான் தம்பிகள் மெளனமாக ஆமோதிப்பார்கள். ஆனால்

3) ஸிம்மானின் இனவெறி அரசியலை எதிர்க்கும் நம்மைப் போன்றவர்கள்

சொன்னால் ஸிம்மான் அப்படிச் சொல்லவில்லையே.. அவர் இனவெறியாளர் இல்லையே என்று ஓடிவருவார்கள்.. ஆதாரம் கேட்பார்கள்.

4) ஸிம்மானிஸத்தை ஆதரிக்கும் தமிழகனின் கருத்தைத்தான் ஸிம்மானின் தம்பிகளும் உளப்பூர்வமாக நம்புகின்றார்கள்.. ஆனால் பொதுவெளியில் நல்லவர்களாகவும், மனிதாபிகளாகவும் காட்டிக்கொள்வார்கள். 

1) சோசல் காசில் வாழ்க்கை நடாத்தும் பலருக்கு தமிழர்களின் கடும் உழைப்பும், சேமிப்பும், கொடையும் வேப்பங்காயாகக் கசப்பதில் வியப்பேதும் இல்லை. கடின உழைப்பில் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றி சொகுசாக வாழ்வது அவர்கள் உரிமை. 

(பானைக்குள் இருக்கிறதுதானே/இருந்தால்தானே அகப்பையில் வரும்..?)

2) நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்..? நீங்கள் இனவாதி இல்லை என்று கூறவருகிறீர்களா..? நம்பீட்டோம்.

இங்கு பலருக்கு இருக்கும் வியாதிகளில் ஒன்று தங்கள் சமூகத்தில் உள்ளவர்களைத் திட்டியாவது தங்களை முன்னிறுத்த வேண்டும் என்பது. அடுத்த வியாதி தங்களை முற்போக்காளர்களாகக் காட்டிக் கொள்ள விரும்புவது. அதற்காக யாரையாவது கோர்த்து/இழுத்து விடுவது.

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடாது என்பது இதைத்தான் போலும். 

🤦🏼‍♂️

3) சீமானிசத்தை மட்டும்தான் வசதியாக எதிர்ப்பீர்களோ..?  சாதி, பிரதேசம், மதம் போன்ற எம் சமூகத்தில் ஆழ வேரூன்றியுள்ளவற்றை ஈசியாக மறப்பீர்கள்.  இந்தியாவிலுள்ள / உலகத்திலுள்ள மற்றைய பிரச்சனைகள் உங்கள் கண்ணுக்குத் தெரியாது. அப்படித்தானே.

எமது சமூகத்திலுள்ள சாதி, சமய, பிரதேசவாத்தை எதிர்த்தால் சுயரூபம் தெரிய வருமெல்லோ...😜

4) தமிழகனுக்கு அற்வைஸ் வேறா ? அடக் கடவுளே...🤦🏼‍♂️

கிருபன் கருணாநிதியிடம் காசு ஏதாகிலும் கடன் கிடன் பட்டிருப்பார் போலும். அதிகமாகக் கூவுகிறார்..

🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kandiah57 said:

முதலில் ஒன்றைத் தெளிவாகப்புரிந்து கொள்ளுங்கள். சீமானை  நாங்கள் எதிர்கவில்லை  மாறாக வரவேற்கிறோம் சீமான் நன்றாக தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  அந்தயுரிமை அவருக்குண்டு  நாங்கள்எதிர்பபது தமிழீழப்போராட்டத்தை தமிழ்நாட்டு அரசியலுடன் போட்டு குழப்புவதை. இந்தக்குழப்பம் இரண்டுகப்பலில் கால் வைப்பது போன்றது நம்பும்படியான விடயங்களை சொல்ல வேண்டும். இந்தியாவுக்குள்ள  தண்ணீரை  இநதியாவுக்கை  (தமிழ்கொநாடு)கொண்டு வாருங்கள்  இதுவே  முடியாத நீங்கள் எப்படி இலங்கைத்தமிழர் பிரச்சனையை தீர்க்க உதவமுடியும் 

நாம் தமிழர் அரசியல் வரைபு மிக தெளிவாக நாம் ஆட்சிக்கு வந்தால் ஈழ விடயத்தை எப்படி கையாள்வோம் என சொல்லியுள்ளது.

மேதகுவை தலைவராக வழிகாட்டியாக கொள்வதை தவிர்த்து, இதை விட வேறு எந்த ஈழ விடயத்திலும் நாம் அலட்டி கொள்வதில்லை.

தண்ணீர், கச்சதீவு சகலதும் நாம் ஆட்சி ஏறியவுடன், தமிழ் உணர்வுள்ள ஒரு அரசாக கச்சிதமாக கையாளப்படும்.

எம்மையிட்டு கவலை கொள்ளாமல், எமக்கு ஆணைகள் இடாமல், உங்கள் நாட்டில் இருக்கும் அரசியலை பார்த்தாலே போதுமானது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

1) சோசல் காசில் வாழ்க்கை நடாத்தும் பலருக்கு 

(பானைக்குள் இருக்கிறதுதானே/இருந்தால்தானே அகப்பையில் வரும்..?)

 

கிருபன் கருணாநிதியிடம் காசு ஏதாகிலும் கடன் கிடன் பட்டிருப்பார் போலும். அதிகமாகக் கூவுகிறார்..

🤣🤣

என்னடா ஒரு பெரிய சாப்ட்வேர் என்சினுயருக்கு வந்த சோதனை... 😂😂 இரக்கமே இல்லாம சட்டுனு சோசல் காசுனு சொல்லிட்டானுக... 🤦🏻🤦🏻😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழகன் said:

அவர் அண்ணனை நோக்கி கல் எறியாது போகின், எமக்கும் அவர் பற்றி ஒரு பொருட்டும் இல்லை.

இது தமிழக  எழுத்து இல்லிங்க 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழகன் said:

நாம் தமிழர் அரசியல் வரைபு மிக தெளிவாக நாம் ஆட்சிக்கு வந்தால் ஈழ விடயத்தை எப்படி கையாள்வோம் என சொல்லியுள்ளது.

மேதகுவை தலைவராக வழிகாட்டியாக கொள்வதை தவிர்த்து, இதை விட வேறு எந்த ஈழ விடயத்திலும் நாம் அலட்டி கொள்வதில்லை.

தண்ணீர், கச்சதீவு சகலதும் நாம் ஆட்சி ஏறியவுடன், தமிழ் உணர்வுள்ள ஒரு அரசாக கச்சிதமாக கையாளப்படும்.

எம்மையிட்டு கவலை கொள்ளாமல், எமக்கு ஆணைகள் இடாமல், உங்கள் நாட்டில் இருக்கும் அரசியலை பார்த்தாலே போதுமானது.

மேதகுவின் வழிகாட்டி இந்தியாவின தலைவர் ஒருவர் தான் நான எவரைபபறறியும்கவலைப்படவே ...ஆணையிடவே... எந்தநாடடிலும் அரசியல் செயய்வில்லை... இநதக் களத்தில்  உறிப்பினர்  கருத்துக்களை எழுதமுடியும்.  பிடிக்காதவரகள்....பதில் இலலாதவர்கள்.  ...விலகிச்செல்வது ..நன்று. 

4 minutes ago, நந்தன் said:

இது தமிழக  எழுத்து இல்லிங்க 

அட..எப்படி  கண்டு  பிடித்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழகன் said:

நாம் தமிழர் அரசியல் வரைபு மிக தெளிவாக நாம் ஆட்சிக்கு வந்தால் ஈழ விடயத்தை எப்படி கையாள்வோம் என சொல்லியுள்ளது

ஆணியே புடுங்க வேணாம் 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நந்தன் said:

இது தமிழக  எழுத்து இல்லிங்க 

புரியவில்லை?

3 minutes ago, நந்தன் said:

ஆணியே புடுங்க வேணாம் 

ஏன் இந்த வன்மம்? 

 

10 minutes ago, பெருமாள் said:

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்! | சந்திரவதனா - Vanakkam London

மேதகுவின் ராஜ கம்பீரம்!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

மேதகுவின் வழிகாட்டி இந்தியாவின தலைவர் ஒருவர் தான் நான எவரைபபறறியும்கவலைப்படவே ...ஆணையிடவே... எந்தநாடடிலும் அரசியல் செயய்வில்லை... இநதக் களத்தில்  உறிப்பினர்  கருத்துக்களை எழுதமுடியும்.  பிடிக்காதவரகள்....பதில் இலலாதவர்கள்.  ...விலகிச்செல்வது ..நன்று. 

அட..எப்படி  கண்டு  பிடித்தீர்கள்?

உங்களுக்கு மிக தெளிவாக பதில் எழுதவே விழைந்தேன். ஆனால் தனிபட்டு குடிகள் பற்றி எழுதல் ஆகாது என அறிவுறுத்த பட்டுள்ளேன். உறுப்புரிமையை இழக்க விரும்பாமையால் அமைகிறேன்.

அண்ணன் சீமான் கூற்றுப்படி

1. நாம் அரசமைக்கும் போது - அத்தனை மாநில வளத்தையும் திசை திருப்பி - மாநிலத்தையே ஸ்தம்பிக்க செய்து - ஈழத்தில் நீதியான தீர்வுக்கு தொடர் அளுத்தம் கொடுப்போம். உச்சகட்ட ஒத்துழையாமை இயக்கம் - ஆட்சியை கலைத்தால் - மீண்டும் போட்டி -வெற்றி- போராட்டம். ஈழ உறவுகளுக்கு தீர்வு வரும் வரை.

2. இதை ஒத்த நடைமுறையை தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனைகளிலும் எடுப்போம். 

3. வெல்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நந்தன் said:

ஆணியே புடுங்க வேணாம் 

eprlf plot வாசனை வீசுகிறது.. 🥴

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழகன் said:

உங்களுக்கு மிக தெளிவாக பதில் எழுதவே விழைந்தேன். ஆனால் தனிபட்டு குடிகள் பற்றி எழுதல் ஆகாது என அறிவுறுத்த பட்டுள்ளேன். உறுப்புரிமையை இழக்க விரும்பாமையால் அமைகிறேன்.

இயல்பாக இருங்கள். 😝

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனின் நேற்றைய அறிக்கையை இணத்தேன். நீக்கபட்டுள்ளது போல் தெரிகிறது.

ஒன்றும் மோசமில்லை இருக்கட்டும்.

மக்கள் பெரு மாற்றத்தை விரும்புகிறார்கள், பாதி அமைச்சர்கள் பெண்கள், பெண் சபாநாயகர் என அண்ணன் மிக நம்பிக்கையோடு அறிக்கையிட்டுள்ளார்.

நாமும் நம்பிக்கையோடு காத்திருப்போம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

eprlf plot வாசனை வீசுகிறது.. 🥴

அடுத்து எவனாச்சும் கருத்து எழுதுனா epdpனு ஒரே போடா போட்டு விடுன்னே... 😂

spacer.png

 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழகன் said:

உங்களுக்கு மிக தெளிவாக பதில் எழுதவே விழைந்தேன். ஆனால் தனிபட்டு குடிகள் பற்றி எழுதல் ஆகாது என அறிவுறுத்த பட்டுள்ளேன். உறுப்புரிமையை இழக்க விரும்பாமையால் அமைகிறேன்.

அண்ணன் சீமான் கூற்றுப்படி

1. நாம் அரசமைக்கும் போது - அத்தனை மாநில வளத்தையும் திசை திருப்பி - மாநிலத்தையே ஸ்தம்பிக்க செய்து - ஈழத்தில் நீதியான தீர்வுக்கு தொடர் அளுத்தம் கொடுப்போம். உச்சகட்ட ஒத்துழையாமை இயக்கம் - ஆட்சியை கலைத்தால் - மீண்டும் போட்டி -வெற்றி- போராட்டம். ஈழ உறவுகளுக்கு தீர்வு வரும் வரை.

2. இதை ஒத்த நடைமுறையை தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனைகளிலும் எடுப்போம். 

3. வெல்வோம்.

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி எனது பதில். கடந்த காலம் கற்றுத்தந்தது..அனுபவம் கற்றுத்தந்தது. ஆயுதவழங்கல் ...புலிகளின் கப்பல்களைக்காட்டிக்  கொடுத்தல்.  ....இவற்றைப்போராடி  நிறுத்தியிருத்தாலே.  ஈழத்தமிழருக்கு...பெரிய  உதவியாகயிருந்துயிருக்கும். நடத்தவை கடத்தவை  நடக்கப்போவதைப்பார்ப்போம் உங்கள்பதில் நம்பிக்கையளிக்கிறது...ஆனால். நம்பமுடியவிலலை..நீங்கள் சீமானை ஆதரிப்போரை விட எதிர்போரை (என்போன்ற. )வரவேற்க்கவேண்டும் எனெனில் ஒருவனின வளர்ச்சியில்  எதிரபோர் முக்கிய பங்குயற்றுகிறார்கள்😎😎😎

குறிப்பு..இங்கே பையன்26 என ஒருவரிருந்தார் அவர் வந்து எழுதினால் உங்களுக்கு உதவியாகவிருககும்..வ....ரு.........வா.....ர்........வ.......ரு.....

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்…

தலைவர் உபசரிப்பில் டுபாய்பிட்டு

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.

கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின், இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன்மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.

´அண்ணன்` அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளி இருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.

வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து, தளிர்த்து, சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. !நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்.` எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.

என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காகத் தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு அளவளாவ வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.

என் ஆசைக்கு அணை போட முடியாத கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.

நேற்று முன் தினம் மாலை நான்கு மணியளவில் வெயிலில் மூழ்கியிருந்த கிளிநொச்சி வெண்புறா நிறுவனத்தில் நிழலும் தண்மையும் தேடி வரவேற்பறையின் ஓர் மூலையில் நான் அமர்ந்திருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் ஆளனுப்பியிருந்தார். எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் ஏழு மணிக்கு வாகனம் அனுப்புவதாகவும் சொல்லி விட்டிருந்தார்.

ஏழு மணிக்குச் சில நிமிடங்கள் முன்னரே வாகனம் வந்தது. போனோம். நட்பு நிறைந்த பார்வைகள் எம்மை வரவேற்க அரசியல்துறை அலுவலகம் தனக்கே உரிய பாணியில் உள்ளேயும் வெளியேயும் அழகாகக் காட்சி அளித்தது.

அதே சிரிப்பு..! எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்த அதே சிரிப்புடன் தமிழ்ச்செல்வன் எம்மை வரவேற்றார். அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார். களத்தில் காவியமான எனது தம்பிமாரைப் பற்றிக் கதைத்தார். முன்னர் பருத்தித்துறையில் புத்தக வெளியீடு செய்த தங்கை பற்றி விசாரித்தார். கதைகள் பல திசைகளிலும் விரிந்திருந்தன.

அவருடனான இரவு உணவு நளபாகம்தான். இறால், இறைச்சி, மரக்கறி… என்று சுவையாக இருந்தது. அங்கிருந்த உறவுகள் அதை நட்போடு பரிமாறிய விதம் மிகவும் இதமாக இருந்தது. அந்த இனிய உபசரிப்பில் மனசும் வயிறும் நிறைந்திருக்க நாம் விடை பெற எழுந்து கொண்டோம்.

அப்போதுதான் தமிழ்ச்செல்வன் என்னைத் தனியாகக் கூப்பிட்டு அந்த இனிய செய்தியைச் சொன்னார். “வியாழக்கிழமை (அண்ணன்) உங்களைச் சந்திக்க விரும்புறார்” என்றார். எனக்கு ஒரு தரம் மனம் சிலிர்த்தது.

அண்ணையைச் சந்திப்பது பற்றி தமிழ்ச்செல்வன் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் பதட்டமாகி விட்டேன்.

வெளியில் வந்து அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த போதோ, சமையல் செய்தவர்களிடமும், உணவு பரிமாறியவர்களிடமும் நன்றி கூறி விடைபெற்ற போதோ நான் ஒன்றிலும் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் பதட்டமாகவே இருந்தேன்.

உண்மைதானா..? மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நான் சந்திக்கப் போகிறேனா..? சந்தோசம்..! சந்தேகம்..! பதட்டம்..! பரபரப்பு..! எல்லாம் என்னுள். இன்று காலை தமிழச்செல்வன் அவர்கள் வெண்புறா வரை வந்து “மாலை நாலுமணிக்கு வாகனம் வரும்” என்று சொன்ன போதும், எனது படபடப்புகள் குறைய வில்லை.

நான்கு மணிக்கு வருவதாகச் சொன்ன வாகனம் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது. போரின் அனர்த்தங்களால் குழி விழுந்து போயிருந்த வீதியில் வாகனம் ஏறி இறங்கிச் சென்ற போது நாங்கள் குலுங்கினோம். கூட வந்தவரின் சற்றலைற் தொலைபேசி சிணுங்கினாலே ´எங்கே.. இன்று எம்மால் அண்ணையைச் சந்திக்க முடியாது` என்று தகவல் சொல்லி விடுவார்களோ என்று மனசு பயப்பட்டது.

அண்ணனைச் சந்திக்கும் வரை எதையும் நம்ப மனசு மறுத்தது. வாகனம் எம்மை ஒரு இடத்தில் இறக்கிய போது அங்குதான் அண்ணன் நிற்பார் என நினைத்தேன். பின் அரை மணி நேரமாகக் காத்திருந்த போது அண்ணன் அங்கு வருவார் என்ற நினைப்பில் காத்திருந்தேன்.

ஆனால் வந்தது இன்னுமொரு வாகனம். போராளிகளின் மருத்துவரான, ரேகா ஓட்டி வந்தார். முதற் சந்திப்பிலேயே காலாகாலத்துக்கும் பரிச்சயமான ஒரு உறவு போல அக்கா.. அக்கா.. என்று உரிமையோடு இனிமையாகப் பேசினார்.

சில நிமிடங்களில் வாகனம் மரங்கள் குடை விரித்திருந்த ஒரு இடத்துக்குள் நுழைந்தது. முற்றத்தில் கதிரை போட்டுத் தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்தார். அதே சிரிப்புடன் எம்மை வரவேற்றார். உள்ளே வீடா, அலுவலகமா தெரிய வில்லை. மின் விளக்கில் பல முகங்கள் தெரிந்தன.

சில நிமிட உரையாடல்களின் பின் இன்னொரு வாகனம் வந்தது. கேற்றடியில் சற்று இருள் சூழ்ந்திருந்தது. ஆனாலும் இறங்கியவர்களில் தலைவர் பிரபாகரன் அவர்களும் இருக்கிறார் என்பதை அவர் நடையிலேயே கண்டு கொண்டேன். இப்போதுதான் மனசு முழுதாக நம்பிக்கை கொண்டது.

சந்திப்புக்கான பிரத்தியேகமான, தனியாக இருந்த ஒரு கட்டிடத்துள் அவர்கள் நுழைய நாங்களும் அழைக்கப் பட்டோம்.

மதிப்புக்குரிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரே கண்டதும் எப்போதும் என் வாயில் சரளமாக வரும் வணக்கம் கூட வரமறுத்தது. நா பேச மறந்து பின்னிக் கொண்டு பின் நின்றது. நம்ப முடியாதிருந்தது. சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.

எல்லோரும் உள்ளே நுழைந்ததும் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அங்கும் தமிழ்ச்செல்வன் அவர்களுடனான சந்திப்பின் போது போலவே அழகாகவும் பண்பாகவும் உபசரித்தார்கள். சில நிமிடங்களில் தயக்கமும் தவிப்பும் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தேன். அண்ணன் பிரபாகரன் மிகவும் இயல்பாகப் பேசினார். உரிமையோடு எம்மோடு அருகிருந்து பேசினார். நான் சிரிக்கும் போது “மயூரனின் சிரிப்புப் போலவே இருக்கிறது” என்றார். “இதே சுருள் தலைமயிர்தான் மயூரனுக்கும்” என்றார்.

பூநகிரித் தவளைப் பாய்ச்சலில் உடலம் கூடக் கிடைக்காமற் சிதறிப் போன மயூரனின் குறும்புகள் பற்றி நிறையச் சொன்னார். தகடை மாற்றிக் கட்டிக் கொண்டு திரியும் அவனது விளையாட்டுத் தனங்களைப் பற்றிச் சொன்னார். மொறிஸ் பற்றிச் சொன்னார். “ஆனால் மொறிஸை கடைசியில் சந்திக்க முடியாமற் போய் விட்டது.” என்றார். மொறிஸ் ஒரு கிழமையில் அவரிடம் வருவதாக இருந்தானாம். அதற்கிடையில் பருத்தித்துறையில் விதையாகி விட்டான். மயூரன்ரை அந்த எழுதுற அக்கான்ரை கடிதங்களை எனக்கு நல்லாப் பிடிக்கும். எல்லாரும் விட்டிட்டு வா எண்டுதான் கடிதங்கள் போடுவினம். ஆனால் அவ மட்டும் அப்பிடி எழுத மாட்டா. நம்பிக்கையும் உறுதியும் கூறி எழுதுவா” என்றார். அவர் குறிப்பிட்டது சந்திரா ரவீந்திரனை. புலம் பெயர்ந்து விட்ட எனது தங்கையைக் கூட அவர் இத்தனை ஞாபகம் வைத்திருப்பது எனக்குள் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது. மறைந்த கவிஞர் தீட்சண்யன் பொட்டம்மானின் மகன் பார்த்திபனுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்தது பற்றிச் சொன்னார்.

பலதரப்பட்ட உரையாடல்களின் மத்தியில் “சாப்பிடுவோம் வாங்கோ” என அவர் அழைத்த போது ஆச்சரியப் பட்டுத்தான் போனேன். அரைமணி நேரம்தான் எமக்காக ஒதுக்குவார் என நினைத்தேன். ஏற்கெனவே கூடிய நேரம் கதைத்து விட்டோம். விருந்து வேறையா..! மனசு புளகாங்கிதமடைந்தது.

சாப்பாடு அந்த மாதிரி இருந்தது. டுபாய் பிட்டு மிகவும் மென்மையாகச் சுவையாக இருந்தது. சாப்பிடும் போது நிறையக் கதைத்தோம். மனம் விட்டுச் சிரித்தோம். பெண்ணியத்திலிருந்த அரசியல் வரை அலசினோம்.

பெண்ணியம் பேசும் போதுதான் அண்ணன் பிரபாகரன் வன்னியில் வாழ்ந்தாலும் எத்தகையதொரு முற்போக்குச் சிந்தனையுடன் இருக்கிறார் என்பதும் செயற்படுகிறார் என்பதும் தெரிந்தது. அவர் பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் கொடுக்கிறார். பெண்கள் தாழ்ந்து போவதில் எந்தவிதமான இஷ்டமும் அவருக்கு இல்லை.

அங்கெல்லாம் அனேகமாக ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்கள் சமையலில் முடங்கிப் போய்விடக் கூடாதென்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். பெண்களால் சமையல் தவிர்ந்த வேறு ஆக்க பூர்வமான பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதில் அவர் நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

சில பெண்கள் சொல்லச் சொல்லக் கேளாமல் சாப்பாட்டைக் குறைத்து விட்டு களத்தில் விரைவில் களைத்துப் போய் விடுகிறார்கள் என்று அக்கறையோடு கவலைப்பட்டார். நீச்சல் தெரிந்த பெண்நீச்சல்ஆசிரியர் இல்லாத ஆரம்ப கால கட்டத்தில் பெண்களுக்கு நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த முயன்ற போது எழுந்த கஷ்டங்களை விளக்கினார்.

“சில போராளிகள் ´ஆங்கிலத்தைப் படியுங்கோ படியுங்கோ` என்று சொன்னாலும் அக்கறைப் படுகிறார்கள் இல்லை” என்று வருந்தினார்.

அவரோடு பேசும் போது ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்சமூகத்தின் மீதான அவரது அக்கறை புரிந்தது.

பேச்சுத் திசைமாறித் திசைமாறி எனது கணவரின் நகைச்சுவைப் பேச்சுக்களினால் எழுந்த சிரிப்பலைகளோடு மீண்டும் சாப்பாட்டில் வந்து நின்றது. டுபாய் பிட்டும், கோழிக்கறியும் உண்மையில் சுவையாக இருந்தது. அண்ணனிடம் சொன்னேன். “#டுபாய்புட்டு நல்லாயிருக்கு. எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு” என்று. அதை எப்படிச் சமைப்பதெனவும் கேட்டேன். “சமைக்கிறவையளைக் கூப்பிட்டுத்தான் சொல்லோணும்” என்றார்.

இப்படியே ஒரு விடயமென்றில்லாமல் குடும்பம், அரசியல், போராட்டம்… என்று பல் வேறுபட்ட கதைகளுடன் சில மணித்தியாலங்கள் களிப்போடு கழிந்தன. சேர்ந்து புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.

விடைபெறும் போது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அண்ணையைத்தான் சந்தித்திருக்கிறேன் என்பதை. அதற்கு மேல் என்னால் தலைவர் என்று சொல்ல முடியவில்லை. அவருடனான பொழுதுகள் அவ்வளவு நெருக்கமாக இருந்தன.

“எனது வேண்டுக்கோளுக்கமைய என்னை இவ்வளவு விரைவாகச் சந்தித்து மகிழ்ச்சிப் படுத்தியதற்கும் உங்கள் இனிய உபசரிப்புக்கும் மிகவும் நன்றி” என்று அண்ணையிடம் சொன்னேன்.

உடனே அண்ணன் “இல்லை, இல்லை, இதற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும். உங்கடை குடும்பத்திலை மூன்று பேரை நாட்டுக்காகக் குடுத்திருக்கிறீங்கள். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும்” என்றார்.

அவரது அந்தப் பெருமிதமற்ற பேச்சில் உண்மையிலேயே நான் நெகிழ்ந்து போனேன். அந்த நெகிழ்ச்சியோடே, எனது பயணத்துக்கு அர்த்தம் சொன்ன அந்த இனிமையான பொழுதுகளை மனதுக்குள் நிறைத்த படி புறப்பட்டோம். வெண்புறா வந்த பின்னும் இனிய நினைவுகள் என்னுள் நிறைந்திருந்தன.

அடுத்தநாள், எனக்கு அந்த டுபாய்பிட்டை அவித்துக் காட்ட என நிமலனையும், புகழோவியனையும் அண்ணை அனுப்பியிருந்தார். எனக்கு நம்பவே இயலாமல் இருந்தது. எனக்கு அந்த டுபாய்பிட்டுப் பிடித்திருக்கிறது. அதை எப்படிச் சமைப்பது என்று ஒரு வார்த்தை கேட்டதற்காக அவர் இத்தனை அன்பாக நடந்து கொள்வார் என்று நான் துளியும் எதிர் பார்க்கவில்லை.

அண்ணை என்னோடும், என்னுடைய குடும்பத்தோடும் மட்டும் அப்படிப் பழகவில்லை. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அத்தனை உறவுகளின் குடும்பங்களுக்கும் அவர் மதிப்புக் கொடுத்து, அவர்களை எந்தளவு தூரம் தனக்குள் பூஜித்து வைத்திருக்கிறார் என்பதை அவரோடு பழகிய அந்த சிலமணி நேரங்களில் புரிந்து கொண்டேன்.

அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அவர் வெறுமனே ஒரு இராணுவத் தளபதியல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அவரோடு கதைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அவர் ஒவ்வொரு போராளிக்கும் எப்படியெப்படி தனது இதயத்துள் இடம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். எல்லோரும் நினைப்பார்கள் ´ஆயுதந் தூக்கிப் போராடுபவர்கள் தானே` என்று. அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பது அவரோடு நேரே பேசும் போதுதான் தெரிந்தது. போராளிகளின் மீது அவர் கொண்டிருந்த பாசமும் நெருக்கமும் என்னை வியக்க வைத்தன.

மாவீரர்கள் எல்லோரையும் அவர் மனதில் நிறுத்தி வைத்திருப்பதை, எந்த மாவீரன் பற்றிப் பேசினாலும் அந்த மாவீரனைத் தன் நினைவில் கொண்டு வந்து அந்த மாவீரன் பற்றி அவன் இப்படி அவன் அப்படி என்று அவர் சொன்ன போது அறிந்து நான் வியந்து போனேன். தலைவர் என்பதன் அர்த்தத்தை அங்குதான் புரிந்து கொண்டேன்.

வன்னியின் நேர்த்தி மட்டுமா..! எது விடயத்திலும் அவர் காட்டும் ஒழுங்கு. தானே அந்த ஒழுங்கைக் கடைப் பிடிக்கும் கண்ணியமான அழகு. உண்மையான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள். என்னுள் எல்லாமே ஆழ்ந்த அதிசயமான வியப்பைத்தான் ஏற்படுத்தின.

எல்லோரும் நினைப்பது போல போராட்டம் மட்டுந்தான் அவரது குறியல்ல. ஒரு சுதந்திர தமிழீழத்தையும் அங்கு ஒரு சுதந்திர சமுதாயத்தையும் உருவாக்குவதிலேயே அவர் கவனமும் செயற்பாடும் இருக்கிறது. பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு. போராட்டக் களங்களுக்குள் எந்த தவறுகளும் ஏற்பட்டு களம் களங்கப் பட்டு விடாதபடி அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகள்… சொல்லி முடியாத பிரமிப்பு என்னுள்.

அண்ணையுடனான அந்தப் பொழுதுகள் எதையுமே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது கூட அண்ணையைச் சந்தித்த அந்தப் பொழுதுகளும் அண்ணை எம்மோடு பழகியவிதமும் மிகவும் இனிமையாக பசுமையாக என்னுள்ளே பதிந்திருக்கின்றன.

சந்திரவதனா
ஜெர்மனி

https://orupaper.com/thalaivarudan589743_47953258/

இணைப்பிற்கு.... நன்றி, நெடுக்ஸ்.
இக் கட்டுரையாளர் சந்திரவதனா முன்பு யாழ். களத்திலும் எழுதி வந்தவர்.
யாழ். கள உறுப்பினரும், ஓவியருமாகிய கவி அருணாசலம் அவர்களின் மனைவி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அடுத்து எவனாச்சும் கருத்து எழுதுனா epdpனு ஒரே போடா போட்டு விடுன்னே... 😂

spacer.png

 

 

எனது அனுபவம் பேசுகிறது. உங்களுக்கேன் வியர்க்கிறது. 

(Epdp என இழுத்து விடுகிறீர்கள். பேச்சுவாக்கில் உண்மை வெளிப்பட்டுவிட்டது போல. நீங்கள் தமிழகத்தவரில்லை என்கின்ற உணர்வு ஏற்கனவே எனக்கிருந்தது. உறுதிப்படுத்தியதற்கு நன்றி. 👏)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

சொல்லுறன் எண்டு குறை நினைக்காதேயுங்கோ - சந்தித்தவர் அவரின் மாற்றீட்டு விம்பமாக செயற்பட்டவர். இறந்தவரும் அவரே என்கிறார்கள்.

அண்ணை, உது டூ மச்,

தலைவரின் விருந்தோம்பலைப் பொய்யென்று நிறுவ முற்படுறியள் போலக் கிடக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி எனது பதில். கடந்த காலம் கற்றுத்தந்தது..அனுபவம் கற்றுத்தந்தது. ஆயுதவழங்கல் ...புலிகளின் கப்பல்களைக்காட்டிக்  கொடுத்தல்.  ....இவற்றைப்போராடி  நிறுத்தியிருத்தாலே.  ஈழத்தமிழருக்கு...பெரிய  உதவியாகயிருந்துயிருக்கும். நடத்தவை கடத்தவை  நடக்கப்போவதைப்பார்ப்போம் உங்கள்பதில் நம்பிக்கையளிக்கிறது...ஆனால். நம்பமுடியவிலலை..நீங்கள் சீமானை ஆதரிப்போரை விட எதிர்போரை (என்போன்ற. )வரவேற்க்கவேண்டும் எனெனில் ஒருவனின வளர்ச்சியில்  எதிரபோர் முக்கிய பங்குயற்றுகிறார்கள்😎😎😎

குறிப்பு..இங்கே பையன்26 என ஒருவரிருந்தார் அவர் வந்து எழுதினால் உங்களுக்கு உதவியாகவிருககும்..வ....ரு.........வா.....ர்........வ.......ரு.....

அன்றைய காலத்தில் தமிழகம் ஒரு தமிழரல்லாதாரால் ஆளப்பட்டு - உறங்கு நிலையில் இருக்கும் படி இருந்தது.

காத்திரமான எதிர் மறை விமர்சனங்களை நாம் வெறுப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

எனது அனுபவம் பேசுகிறது. உங்களுக்கேன் வியர்க்கிறது. 

(Epdp என இழுத்து விடுகிறீர்கள். பேச்சுவாக்கில் உண்மை வெளிப்பட்டுவிட்டது )

பக்கத்துல நிக்குரவனுக்கு அடிப்பானுங்கன்னு பாத்தா நா கொடுத்த கட்டைய வச்சு எனக்கேவா... மாப்புள்ளைக்கு அவ்ளோ வெறி..😂😂

8 minutes ago, Kapithan said:

 நீங்கள் தமிழகத்தவரில்லை என்கின்ற உணர்வு ஏற்கனவே எனக்கிருந்தது. உறுதிப்படுத்தியதற்கு நன்றி. 👏)

நா எப்போ சொன்னேன் தமிழ்நாடுனுப்பா..?  🤦🏻🤦🏻

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, தமிழ் சிறி said:

இணைப்பிற்கு.... நன்றி, நெடுக்ஸ்.
இக் கட்டுரையாளர் சந்திரவதனா முன்பு யாழ். களத்திலும் எழுதி வந்தவர்.
யாழ். கள உறுப்பினரும், ஓவியருமாகிய கவி அருணாசலம் அவர்களின் மனைவி.

இது ஆகப்பழைய பதிவு சிறித்தம்பி.
இப்ப தூசு தட்டியிருக்கினம். அதுவும் நல்லதுக்குத்தான் 😁

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

இக் கட்டுரையாளர் சந்திரவதனா முன்பு யாழ். களத்திலும் எழுதி வந்தவர்.
யாழ். கள உறுப்பினரும், ஓவியருமாகிய கவி அருணாசலம் அவர்களின் மனைவி.

அது மட்டுமல்ல மாவீரர்களான கப்டன் மொறிஸினதும், தலைவரின் அருகில் நின்ற மயூரனனினதும் சகோதரியார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழகன் said:

உங்களுக்கு மிக தெளிவாக பதில் எழுதவே விழைந்தேன். ஆனால் தனிபட்டு குடிகள் பற்றி எழுதல் ஆகாது என அறிவுறுத்த பட்டுள்ளேன். உறுப்புரிமையை இழக்க விரும்பாமையால் அமைகிறேன்.

அண்ணன் சீமான் கூற்றுப்படி

1. நாம் அரசமைக்கும் போது - அத்தனை மாநில வளத்தையும் திசை திருப்பி - மாநிலத்தையே ஸ்தம்பிக்க செய்து - ஈழத்தில் நீதியான தீர்வுக்கு தொடர் அளுத்தம் கொடுப்போம். உச்சகட்ட ஒத்துழையாமை இயக்கம் - ஆட்சியை கலைத்தால் - மீண்டும் போட்டி -வெற்றி- போராட்டம். ஈழ உறவுகளுக்கு தீர்வு வரும் வரை.

2. இதை ஒத்த நடைமுறையை தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனைகளிலும் எடுப்போம். 

 

தமிழகன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். 
அநேக தமிழக தமிழரை போல் அல்லாது ஈழ தமிழர் யார் யார் வாய் கேர்ப்பினும் மெய்ப் பொருள் கான்பது அறிவு எனற நிலைப்பாட்டில் இருப்பவர்கள். அது மட்டும் அல்ல நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பார்கள், அது மேதகுவாய் இருந்தாலும். நீங்கள் புதியவர், போக போக உங்களுக்கு புரியும். 


நீங்கள் ஒருமுறை யாழ் கள விதி முறைகளை வாசித்து விட்டு பதிவுகளை இடவும். பின்னர் குறை சொல்லக்கூடாது.

 

Edited by zuma

5 hours ago, Paanch said:

அப்படிக் கூற முடியாது. தமிழ்நாட்டு மானிலம் தி.மு.க ஆட்சிக்கு உட்பட்டிருந்த போது... தமிழீழம் பற்றி முடிவெடுக்கும் உரிமையையும் மத்திய அரசு தி.மு.க தலைவருக்குக் கொடுத்திருந்ததையும் மறுக்க முடியாது. அச்சமயம் ஒரு தெலுங்கன் தலைவனாக இருந்ததால் எல்லாம் தொலைந்தது. ஒரு தமிழன் இருந்திருந்தால் இன்று நிலமை வேறாக இருந்திருக்கும்.

 எந்த ஆதாரமோ இன்றி இந்திய அரசியல் வரலாறு, அரசியல் சட்டம் தொடர்பான அடிப்படை அறிவு  கூட யாழ்கள உறுப்பினர்களுக்கு இல்லை என்ற உங்களது   எடுகோளின் அடிப்படையில் தான் இந்த கூற்றை நீங்கள் கூறியுள்ளீர்கள். என்ன இருந்தாலும் இவ்வளவு மோசமான அறிவிலிகளாக எம்மை நீங்கள் அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை பாஞ்ச்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.