Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் மூன்றாவது சக்தி யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் மூன்றாவது சக்தி யார்?

spacer.png

ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, நாளை மே 2 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியான எக்சிட் போல் முடிவுகளில் பல திமுகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

யார் ஆட்சியைப் பிடிப்பது என்பது மட்டுமல்ல, பல்வேறு காரணிகளை முன் வைத்து வெவ்வேறு விதமான பகுப்பாய்வுகளையும் இந்த எக்சிட் போல் முடிவுகளில் நிகழ்த்தியுள்ளனர்.

எந்தக் கட்சி முதலிடம் என்பது மட்டுமல்ல... இரண்டாம் இடம் பெறும் கட்சி எது? தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது இடத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் கட்சி எது என்பது பற்றியெல்லாம் எக்சிட் போல் முடிவுகளில் விவாதங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

மூன்றாவது இடம் என்றால், இந்தத் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமல்ல...அடுத்து பத்து, பதினைந்து வருடங்களுக்கு தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுக்கப் போகும் கட்சி எது என்ற கேள்வியும் எழுகிறது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை திமுக, அதிமுகவை அடுத்து மூன்றாவது என்ற அந்தஸ்தைப் பெற நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது..

அமமுக, மநீம ஆகிய கட்சிகள் கூட்டணியோடு தேர்தலை சந்தித்திருக்கின்றன. ஒரு காலத்தில் மூன்றாவது சக்தியாக வரவேற்பைப் பெற்ற தேமுதிக, இம்முறை அமமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்ததால் மூன்றாவது சக்தி என்ற பட்டியலிலேயே தேமுதிகவுக்கு இடம் கிடைக்காமல் போயிருக்கிறது.

கூட்டணி எதுவும் இல்லாமல் தனித்தே இம்முறை போட்டியிடும் நாம் தமிழர் கட்சி எக்சிட் போல் தொடர்பான விவாதங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி இந்த சட்டமன்றத் தேர்தலில் 8% வாக்குகளைப் பெற்றாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதற்கு அடுத்த இடத்திலேயே மக்கள் நீதிமய்யம், அமமுக ஆகியவை இடம்பிடிக்கும் என்றும் கணிக்கிறார்கள்.

ஆனால் இதுகுறித்து அரசியல் ஆய்வாளரான லலித் குமார் வித்தியாசமான இன்னொரு கோணத்தில் தமிழகத்தின் மூன்றாவது சக்தியை இந்தத் தேர்தல் அடையாளம் காட்டும் என்கிறார்.

அவரிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.

“இந்தத் தேர்தலின் மூலம் தமிழகம் காணப் போகும் மூன்றாவது சக்தி சீமானின் நாம் தமிழர் கட்சியாகத்தான் இருக்கும். அமமுகவை சிலர் மூன்றாவது இடத்துக்குரிய கட்சிகளில் ஒன்றாக பரவலாக பேசுகிறார்கள்.ஆனால் நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. அமமுக என்பது அதிமுகவை கைப்பற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக தளம்தான். தினகரன் வாங்குவதை அதிமுகவின் வாக்குகளாகத்தான் பார்க்க வேண்டும். எனவே திமுக, அதிமுகவுக்கு எதிரான மூன்றாவது சக்தியாக தினகரன் நீடிக்க முடியாது. 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஜானகியும் சிவாஜி கணேசனின் கட்சியும் கூட்டணி அமைத்து மூன்றாவது அணி என்றார்கள். ஆனால் அது அந்தத் தேர்தலோடு முடிந்துவிட்டது.

spacer.png

சீமான் மீது சில பல விமர்சனங்கள் இருந்தாலும் அவர் பின்னால் ஒரு பெரும் கூட்டம் உருவாகியிருக்கிறது. இன்னும் பத்து, பதினைந்து வருடங்கள் அவர் கட்சியை ஒழுங்காக நடத்தினார் என்றால் காலம் சீமானை தமிழகத்தின் முக்கிய இடத்தில் கொண்டு போய் நிறுத்தும்.

வேட்பாளர்களில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு, தமிழகத்தை நாசமாக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற வெளிப்படையான கொள்கை, பட்டியல் இன வேட்பாளர்களை பொதுத் தொகுதியில் நிறுத்தியது, அரசியல் பிரதிநிதித்துவம் என்றால் என்னவென்றே அறியாத வண்ணார், குயவர் உள்ளிட்ட எளிய அடித்தட்டு சமூகத்தினரை வேட்பாளர்கள் ஆக்கியது. வெற்றி தோல்வி அடுத்தது. தேர்தல் அரசியல் களத்தில் இந்த எளிய சமூகத்தினருக்கு வாய்ப்பளிப்பது என்பது மிக முக்கியமானது. இப்படிப்பட்ட கருத்தியல் ரீதியிலான கொள்கைகளை களத்திலும் நடைமுறைப்படுத்துபவர் சீமான் தான். இது இளைஞர்களில் பலரை கவர்ந்திருப்பதாக அறிகிறேன்.

கமல்ஹாசன் கணிசமான வாக்குகள் வாங்கினாலும் அவர் எதிர்காலத் தமிழகத்துக்கான மூன்றாவது சக்தியாக தெரியவில்லை. அவரது அரசியலில் இன்னும் ஒரு தெளிவில்லை. அவரது அஜெண்டா என்பதை அவர் இன்னமும் விளக்கவில்லை. மய்யம் என்பதே குழப்பமானதுதான். அவரது அரசியலில் வெளிப்படைத் தன்மை இல்லை.

எனவே இந்தத் தேர்தலில் மூன்றாவது இடம் மட்டுமல்ல, அடுத்த பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கான மூன்றாவது சக்தியாக திகழப் போவது சீமான் என்ற முடிவையும் மக்கள் தேர்தல் முடிவில் தெரிவிப்பார்கள்” என்கிறார் அரசியல் ஆய்வாளர் லலித்குமார்.

https://minnambalam.com/politics/2021/05/01/28/third-force-of-tamilnadu-who-seeman-ttv-dinakaran-kamalhasan

  • கருத்துக்கள உறவுகள்

இது கடந்த எட்டாம் திகதி CMR வானொலியில் தமிழக மூத்த  ஊடகவியலாளர் ஏகலைவன் இவரின் கணிப்புக்கள் அநேகமானவை தவறுவது கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்

100 வீதம் உண்மை... சீமான் தமிழ்நாட்டின் மூன்றாவது சக்தியாக உருவெடுப்பதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்று கடைசிவரை கூட்டணி வைக்க மாட்டேன் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பது.. இது மாற்றம் என்று நம்பும் ஒவ்வொரு புதுக்கட்சியும் தேர்தல் நேரம் பெரியகட்சிகளில் ஒன்றுடன் கொள்கைகளை காற்றில் விட்டு விட்டு சங்கமம் ஆகிவிட்டு அதுக்கு ஒரு சப்பை கட்டு கட்டுவதை பார்த்து பார்த்து வெறுத்துப்போன இளைஞர்களுக்கு சீமானின் கொள்கை உறுதி பெரிய ஆட்சரியத்தையும் சிறிது சிறிதாக நம்பிக்கையையும் கொடுத்து இருக்கிறது.. ஈழத்தமிழர்கள் முட்டாள்தனமாக இரண்டு பகுதிகளாக பிரிந்து நின்று ஒரு பகுதி சீமானை திட்டுவதிலும் இன்னொரு பகுதி திமுக வைகோ அண்ணன் திருமாவை திட்டுவதிலும் காலத்தை வீணாக்குகிறார்கள்.. எமக்கு எல்லா சக்திகளும் தேவை.. அவர்களுக்குள் மோதிக்கொள்வது அவர்கள் உள்ளூர் அரசியல்.. . சிங்களவன் எப்படி சீனாவையும் இந்தியாவையும் ஒரே நேரத்தில் அரவணைத்து போகிறான் என்பதை பார்த்தாவது பாடம் படிக்காவிட்டால் ஈழத்தமிழர்கள் இப்படியே அணில் ஏறவிட்ட நாயைப்போல் குரைத்துகொண்டு கிடக்கவேண்டியது தான்.. 

  • கருத்துக்கள உறவுகள்

மின்னம்பலம் சொல்லி போட்டுது, அதுதான் தல, போட்டு இருக்கிறார்.

000 எண்டு போட்டவர் யோசிப்பாரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

மின்னம்பலம் சொல்லி போட்டுது, அதுதான் தல, போட்டு இருக்கிறார்.

000 எண்டு போட்டவர் யோசிப்பாரோ?

தேர்தல் முடிவுகளில் ஸிம்மானின் நாம் தமிழருக்கு தங்க முட்டைகள்தான்..😂 அதை விட்டுவிட்டு எத்தனை தொகுதிகளில் டெப்பாஸிட் திரும்பக்கிடைக்கும் என்று எண்ணுவது நல்லது🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

100 வீதம் உண்மை... சீமான் தமிழ்நாட்டின் மூன்றாவது சக்தியாக உருவெடுப்பதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்று கடைசிவரை கூட்டணி வைக்க மாட்டேன் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பது.. இது மாற்றம் என்று நம்பும் ஒவ்வொரு புதுக்கட்சியும் தேர்தல் நேரம் பெரியகட்சிகளில் ஒன்றுடன் கொள்கைகளை காற்றில் விட்டு விட்டு சங்கமம் ஆகிவிட்டு அதுக்கு ஒரு சப்பை கட்டு கட்டுவதை பார்த்து பார்த்து வெறுத்துப்போன இளைஞர்களுக்கு சீமானின் கொள்கை உறுதி பெரிய ஆட்சரியத்தையும் சிறிது சிறிதாக நம்பிக்கையையும் கொடுத்து இருக்கிறது.. ஈழத்தமிழர்கள் முட்டாள்தனமாக இரண்டு பகுதிகளாக பிரிந்து நின்று ஒரு பகுதி சீமானை திட்டுவதிலும் இன்னொரு பகுதி திமுக வைகோ அண்ணன் திருமாவை திட்டுவதிலும் காலத்தை வீணாக்குகிறார்கள்.. எமக்கு எல்லா சக்திகளும் தேவை.. அவர்களுக்குள் மோதிக்கொள்வது அவர்கள் உள்ளூர் அரசியல்.. . சிங்களவன் எப்படி சீனாவையும் இந்தியாவையும் ஒரே நேரத்தில் அரவணைத்து போகிறான் என்பதை பார்த்தாவது பாடம் படிக்காவிட்டால் ஈழத்தமிழர்கள் இப்படியே அணில் ஏறவிட்ட நாயைப்போல் குரைத்துகொண்டு கிடக்கவேண்டியது தான்.. 

சத்தியமான உண்மை. 👍

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள்  நாம் தமிழர் கட்சி அநேகமான இடங்களில்  3 ம் இடத்தில உள்ளதை காட்டுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

காசுக்கு வாக்குகளை விற்கும் நிலையிலும்

பணத்தை எதுக்காக வாங்கினாலும் வாங்கிய பணத்துக்கு வஞ்சகம் செய்யக்கூடாது என்ற மூடநம்பிக்கை உள்ளநிலையிலும் எவற்றை துறந்தவர்கள் அல்லது தமக்குள் பணத்தை வீசி உறுப்பினர்களை அல்லது கட்சிகளை  தெரிவு செய்யாதவர்கள் வெல்வது கடினம்.

ஆனால் 3 வது சக்தியாக வருதலே தற்போது செய்யக்கூடியது 

அது நடந்தால்?????

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

காசுக்கு வாக்குகளை விற்கும் நிலையிலும்

பணத்தை எதுக்காக வாங்கினாலும் வாங்கிய பணத்துக்கு வஞ்சகம் செய்யக்கூடாது என்ற மூடநம்பிக்கை உள்ளநிலையிலும் எவற்றை துறந்தவர்கள் அல்லது தமக்குள் பணத்தை வீசி உறுப்பினர்களை அல்லது கட்சிகளை  தெரிவு செய்யாதவர்கள் வெல்வது கடினம்.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். 

நெடுக்ஸின் பொன்மொழிதான் ஞாபகம் வருகின்றது🤑

5 hours ago, கிருபன் said:

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். 

நெடுக்ஸின் பொன்மொழிதான் ஞாபகம் வருகின்றது🤑

நீங்கள் எல்லாம் அறிவு சுடர்கள் எங்களுக்கு அறிவு சொல்ல வந்து.விட்டார்கள் .........

Edited by appan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, appan said:

நீங்கள் எல்லாம் அறிவு சுடர்கள் எங்களுக்கு அறிவு சொல்ல வந்து.விட்டார்கள் .........

உங்களுக்கு அறிவு சொல்வது கஷ்டம்தான் அப்பன்😂

9 minutes ago, கிருபன் said:

உங்களுக்கு அறிவு சொல்வது கஷ்டம்தான் அப்பன்😂

அப்ப உங்கள் பருப்பு வோகவில்லையா ( அப்ப எப்படி உங்களுக்கு பிழைப்பு நடக்கும். எங்களுக்கு தேவைப்படாது ஏனென்றால நாங்கள் கொடுத்து தான் பழக்கம் .

ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை தானே) 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலினும் காங்கிரசும்தான் தமிழர்களைக்காப்பாற்றுவார்கள். நம்பியிருங்கள்.விழுந்து கிடப்பன் ஒருகாலும் நமிர முடியாது விழ விழ ஏழுவோம். 10 கட்சிகளுடன் கூட்டணிவைத்துக்கொண்டு பணபலம் ஊடகபலம்,iபேக் ரீம் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டுமு; அவர்களால் புனைவாக வொல்லப்பட்ட கருத்துத் திணிப்பின் அளவுக்கு கூட அவர்களால் வரமுடியவில்லை. தனித்து நின்று களமாடிய நாம் தமிழருக்கு வாழ்த்துகள். முயற்சி தொடரட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

ஸ்டாலினும் காங்கிரசும்தான் தமிழர்களைக்காப்பாற்றுவார்கள். நம்பியிருங்கள்.விழுந்து கிடப்பன் ஒருகாலும் நமிர முடியாது விழ விழ ஏழுவோம். 10 கட்சிகளுடன் கூட்டணிவைத்துக்கொண்டு பணபலம் ஊடகபலம்,iபேக் ரீம் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டுமு; அவர்களால் புனைவாக வொல்லப்பட்ட கருத்துத் திணிப்பின் அளவுக்கு கூட அவர்களால் வரமுடியவில்லை. தனித்து நின்று களமாடிய நாம் தமிழருக்கு வாழ்த்துகள். முயற்சி தொடரட்டும்.

அல்லும்பகலும் எதிரிகளை உருவகித்து கசப்பையும் காழ்ப்பையும் கக்கிக் கொண்டிருந்தால் இப்படித்தான் சலிப்பு வரும்.

அடுத்த தேர்தலில் சசிகலா, பிஜேபி, தினகரன் எல்லோருடனும் பேரம்பேசி நாம் தமிழர் கூட்டு வைத்து ஆட்சியில் பங்குகொள்ளும். கவலைப்படாதீர்கள். திமுகவை அகற்ற இப்படியான இராஜதந்திரம் தெரிந்தவர்தான் மேதகு ஸிம்மான்!

2 hours ago, கிருபன் said:

அல்லும்பகலும் எதிரிகளை உருவகித்து கசப்பையும் காழ்ப்பையும் கக்கிக் கொண்டிருந்தால் இப்படித்தான் சலிப்பு வரும்.

தங்கள் அறிவு போல் எங்களையும்  நக்கி வாழ்க்கையை ஓட்ட சொல்கிறீர்கள் அவ்வளவு தானே  நாங்களும் இனி உபி மாதிரி நக்கி பிழைக்கிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2021 at 09:57, கிருபன் said:
  1. வேட்பாளர்களில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு,

  2. தமிழகத்தை நாசமாக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்ற வெளிப்படையான கொள்கை,

  3. பட்டியல் இன வேட்பாளர்களை பொதுத் தொகுதியில் நிறுத்தியது, அரசியல் பிரதிநிதித்துவம் என்றால் என்னவென்றே அறியாத வண்ணார், குயவர் உள்ளிட்ட எளிய அடித்தட்டு சமூகத்தினரை வேட்பாளர்கள் ஆக்கியது.

சீமானை ஆதரிக்க இவையே போதுமானவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.