Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அசிங்கப்படுத்தும் சமந்தா.

  • Replies 63
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழர்களை அசிங்கப்படுத்தும் சமந்தா.

முழுவதும் பார்த்து முடித்தேன், ஈழப்பிரியன். நாய் வாலை நிமிர்த்த முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Maruthankerny said:

Image

வணக்கம் மருதர். சுகம்தானே.

இதை அனுப்பியது தமிழ்நாடு அரசின் தலைமை செயலகமா?

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணி சமந்தா என்ன சொல்கின்றார்? 🤔

 

இது வற்சப்பில் வந்தது:

 

1178 signatures are still needed, can you add your signature? ✍️

http://chng.it/JP9ykPxN

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

வணக்கம் மருதர். சுகம்தானே.

இதை அனுப்பியது தமிழ்நாடு அரசின் தலைமை செயலகமா?

நலமாக இருக்கிறேன் 
திண்ணையில் பார்த்தேன் நீங்களும் நலமாக இருப்பதாக 

ஆம் தமிழ்நாட்டு தலைமை செய்யலகம்தான் அனுப்பி இருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

The Family man -2 தொடருக்கு தடை கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்

 
1-96.jpg
 13 Views

அமேசான் பிரைமில் வெளியாக உள்ள  The Family man -2 தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு  தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.

இது தமிழர்களை தீவிரவாதிகள் போல சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் தமிழக அரசு தடை கோரி இவ்வாறு கடிதம் எழுதியுள்ளது.

The Family man -2 தொடரை தடை செய்ய வலியுறுத்தி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “ஈழத்தமிழர்களை தவறாகவும் மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய The Family man -2 என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள மேற்கூறிய தொடரின் முன்னோட்டமானது இலங்கையில் ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்புவாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், இழிவுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

நெடிய ஜனநாயகப் போராட்டக் களத்தில் அவர்களது தியாகங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அது எந்த வகையிலும் தமிழ்ப் பண்பாட்டின் மதிப்புகளைக் கொண்டதாக இல்லை.

பெருமைமிகு தமிழ்ப் பண்பாட்டை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகளைக் கொண்ட தொடரை எந்த வகையிலும் ஒளிப்பரப்புக்கு ஏற்ற மதிப்புகளைக் கொண்டது என கருத முடியாது. எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பேசும் நடிகையான சமந்தாவை தீவிரவாதியாகக் காட்சிப்படுத்தியுள்ளது, உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித் தாக்குதல் என்பதோடு, இதுபோன்ற உள்நோக்கமும் விஷமத்தனமுமான பரப்புரையை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது.

இந்தத் தொடரின் முன்னோட்டம் ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது, இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்திற்காக பல ஆண்டுகளாக நமது உடன்பிறப்புகளான ஈழத் தமிழர்கள் போராடி வருகையில், அமேசான் பிரைம் போன்ற நிறுவனம் இதுபோன்றதொரு பரப்புரையை மேற்கொள்வது அவசியமற்றதாகும்.

மேற்கூறிய தொடரானது, ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது தமிழகத் தமிழர்களின் உணர்வுகளையும் பெருமளவில் புண்படுத்தியுள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தைப் பேணுவது கடினமாகும்.

இந்தச் சூழ்நிலையில், அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்பப்படவுள்ள இந்தத் தொடரை, தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=50632

 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

நலமாக இருக்கிறேன் 
திண்ணையில் பார்த்தேன் நீங்களும் நலமாக இருப்பதாக 

ஆம் தமிழ்நாட்டு தலைமை செய்யலகம்தான் அனுப்பி இருக்கிறார்கள் 

நல்லது🙏🏾. காஜலும் நலமாக இருப்பதாக டிவிட்டரில் கண்டேன் 🤣.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை காட்டி கொடுத்தது யார் ? போராளிகள்+ஐ.எஸ்.ஐ Vs இந்தியா; என்ன சொல்கிறது The Family Man-Season2 ?

0805733b-b250-4a12-96bf-ef22d13f4d9f-369

சென்னை: அமேசான் பிரைமில் கடும் சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் வெளியாகி உள்ளது The Family Man - Season 2.

The Family Man - Season1- சீரிசானது ஜம்மு காஷ்மீர் பிரச்சனை மற்றும் முஸ்லிம்களை மையமாக கொண்டதாக இருந்தது. பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் இந்தியாவில் ஐ.எஸ்.ஐ. மேஜர் சமீர், சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் பயங்கரவாதிகளுடன் இணைந்து மிகப் பெரும் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டுவதும் அது முறியடிக்கப்படுவதுமாகவும் இருந்தது.
 

மாட்டிறைச்சி வைத்ததற்காக கொல்லப்படுதல், மாட்டிறைச்சியையே தாக்குதல் ஆயுதமாக கொண்டு செல்லும் கரீம் உள்ளிட்ட 3 இளைஞர்கள் படுகொலை செய்யப்படுதல், அதை போலி என்கவுண்ட்டராக காட்டுதல், ஜம்மு காஷ்மீரில் அடக்குமுறை ஏவிவிடப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் போலீஸ் அதிகாரி, தினம் தினம் உங்களுக்கு எங்க விசுவாசத்தை காட்டனுமா? என கேட்கும் இந்திய ராணுவத்தில் இருக்கும் முஸ்லிம் வீரர் என ஏகப்பட்ட விஷயங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சியான TASC பிரிவு எப்படி முறியடிக்கிறது? TASC பிரிவின் அதிகாரி ஶ்ரீகாந்த் குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகள் என காதலும் மோதலுமாக முதல் சீரிஸ் படுவிறுவிறுப்பாக இருந்தது. அதனால் முதல் சீரிஸ் பேசுபொருளாகவும் கவனத்தையும் ஈர்த்தது. அதேநேரத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளும் இல்லாமல் இல்லை. தீவிரவாதிகள் எப்படி அமெரிக்காவின் கூலிகளாக இருக்கின்றனர்? அரசுகளுக்கு அப்பால் நாடுகளின் புலனாய்வு முகாமைகள் எப்படி கைகோர்த்து சொந்த நாடுகளின் ஆதாயங்களுக்காக காட்டி கொடுக்கின்றன என்கிற காட்சிகளும் அந்த தொடரில் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்துதான்ன் The Family Man - Season 2 வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தாங்கள் நடத்த திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் ப்ளான் A முறியடிக்கப்பட்டதால் 2-வது சதித்திட்டத்தை செயல்படுத்த முனைவதும் அது என்னவானது என்பதுதான் இதன் அடிப்படை. இந்த 2-வது தொடரில் ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகள், ஈழ விடுதலைப் போராளி குழு ஒன்றை தங்கள் வலைக்குள் கொண்டு வந்து கூட்டாளியாக்கிக் கொண்டு நாசகார திட்டத்தை செயல்படுத்துவதை பற்றி விவரிக்கிறது. வெறும் தீவிரவாதிகள், புலனாய்வாளர்கள் சாகசங்கள் என்பதுடன் மட்டுமல்லாது முதல் தொடரைப் போலவே உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை ஏராளமான சோ கால்ட் குறியீடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

தொடரின் தொடக்கமே ஈழ விடுதலைக் குழுவின் தலைவர் பாஸ்கரன், அரசியல் பிரிவு தலைவர் தீபன், வெளியுறவு விவகாரங்களுக்கான சுப்பு என்ற சுப்பிரமணியம் பழனிவேல் என மூவரணியை காட்டுகிறது. இது அப்படியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடக்க காலங்களை நினைவூட்டுவதாக இருக்கிறது. அதாவது பிரபாகரன், மாத்தையா, கிட்டு அல்லது பிரபாகரன், கே.பி, கிட்டு அல்லது பிரபாகரன், கே.பி., பாலசிங்கம் என்கிற சாய்ல்களை வெளிப்படுத்துவதாக இந்த காட்சி அமைப்புகள் இருக்கின்றன. ஏற்கனவே மெட்ராஸ் கபே திரைப்படத்தில் பிரபாகரனுக்கு வைக்கப்பட்ட பாஸ்கரன் என்ற பெயர்தான் இந்த தொடரிலும் வைக்கப்பட்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

தமிழகத்தில் 1970களில் குட்டிமணி, தங்கதுரை காலம் முதல் காலந்தோறும் ஈழ விடுதலைக் குழுக்கள் தலைவர்கள் கைது செய்யப்படுவதும் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவது அல்லது சிறையில் அடைக்கப்படுவது என்பது தொடருகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழ விடுதலை இயக்கத்தின் வெளியுறவு பொறுப்பாளர் சுப்பு, காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்படுகிற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படி ஈழ விடுதலை குழு தலைவர்களில் ஒருவரான சுப்புவை கைது செய்வதற்கான காரணம்தான் சர்வதேச அரசியலைப் பேசுகிறது. இலங்கையின் வடக்கு பகுதியில் துறைமுகம் ஒன்றை கட்டமைக்க சீனாவுக்கு அனுமதி தரப் போகிறது இலங்கை; இதனை தடுக்க இந்திய பிரதமர் திருமதி பாசு தீவிரம் காட்டுகிறார். இதற்காக இலங்கைக்கு இந்தியா தருகிற பரிசுதான் ஈழ விடுதலை தலைவர் சுப்பு. சுப்புவை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்க நினைக்கிறது இந்திய மத்திய அரசு. சென்னையில் தஞ்சமடைந்த சுப்புவை எப்படி ஒரு எம்.பி. காட்டி கொடுக்கிறார் என்கிற காட்சியும் கூட தமிழகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிற பல காட்டி கொடுப்புகளின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

இப்படி இந்தியாவுக்கும் ஈழ விடுதலை குழுவுக்கும் இடையேயான மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த திட்டம் போடுகிறது ஐ.எஸ். பயங்கரவாத கும்பல். இதனால் சென்னையில் ஈழ விடுதலை சுப்புவை ஸ்கூட்டர் வெடிகுண்டு மூலம்ம் கொல்கிறது. இந்த படுகொலையால் இந்தியா மீது ஈழ விடுதலை குழு தலைவரான, நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமரான பாஸ்கரன் கடும் கோபம் கொள்ள வைக்கப்படுகிறார். இந்த கோபத்தை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. -ன் மேஜர் சமீர் பயன்படுத்திக் கொண்டு நட்பு பாராட்டுகிறார். பிறகு என்ன ஈழ விடுதலை குழுவின் ஸ்லீப்பர் செல்களும் ஐஎஸ் பயங்கரவாதிகளும் இணைந்து இந்திய பிரதமர் பாசுவை படுகொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இந்த திட்டத்தை என்.ஐ.ஏ.வின் TASC எப்படி எதிர்கொண்டது? சதித் திட்டம் நிறைவேறியதா? என்பதை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது The Family Man - Season2-வது தொடர்.

ஈழ விடுதலை போராளிகளின் செயல் தளமாக இருந்த வேதாரண்யம், வேதாரண்யத்தில் இருந்த மக்கள் ஆதரவு ஆகியவையும் வேறு ஒரு பெயரில் போகிற போக்கில் காட்டப்படுகிறது. ஈழ விடுதலை குழுவின் ஸ்லீப்பர் செல்லாக இருகக் கூடியவர்தான் நடிகை சமந்தா எனும் ராஜி. மில் தொழிலாளியாக பணிபுரிந்து கொண்டு வக்கிர மனிதர்களிடம் சிக்கி தவிப்பதும் அதை கர்ண கொடூரமாக முறியடிக்கிற சில காட்சிகளும் ரொம்பவே டூ மச் என சொல்ல வைக்கிறது. சமந்தா தொடர்பான பல காட்சிகள் ரொம்பவும் மிகைப்படுத்தலாகவே உறுத்துகிறது. ஈழ விடுதலைக் களத்தில் இருக்கிற பெண் போராளிகளுக்குள் ஒரு பயங்கரமான குரூரம் இருப்பதாக காட்டப்படுவதை சகிக்க முடியாது. இந்த அபத்த காட்சிகள், அவதூறு காட்சி அமைப்புகள்தான் தமிழகத்தில் எதிர்ப்பு எழவும் காரணம்.

இலங்கையுடன் நெருங்கும் சீனாவை இந்தியா தன்வசமாக்கிக் கொள்ள முனைகிறது; இதற்காக ஈழ விடுதலை குழு தலைவர் பலி கொடுக்கப்படுகிறார். இதனால் இந்தியாவுக்கு எதிரிக்கு எதிரி நண்பர்கள் என்ற அடிப்படையில் பாக். ஐ.எஸ்.ஐ.- ஈழ விடுதலை குழு கை கோர்க்கின்றன. அத்துடன் மத்திய அரசில் உள்ள அதிகாரிகள் ஈழ விடுதலை குழுக்களை, ஈழ விடுதலை பிரச்சனையை எப்படி எல்லாம் அலட்சியமாகக் கையாண்டார்கள் என்பதும் பல்வேறு காட்சிகளில் நுணுக்கமாக காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் இந்தியா- இலங்கை இணக்கமான உறவுக்கு எதிரான கொந்தளிப்பை எள்ளி நகையாடக் கூடியதான இன்று வரை மத்திய அரசு கடைபிடிக்கும் போக்கும் இந்த தொடரின் காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு, ரா, ஐபி போன்றவைகள் உளவாளிகளுடன் எப்படியான உறவுகளை கையாளுகின்றனர்; உளவாளிகள் எப்படி எல்லாம் தகவல் கொடுக்கின்றனர்; பிடிபடும் தீவிரவாதிகள், போராளிகளிடம் நயவஞ்சமாக விசாரணை அதிகாரிகள் நடந்து கொள்ளும் முறைகள் என உலக அரசுகள் என்ற அமைப்புகளின் இருட்டு முகங்களும் இந்த படத்திக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவைகளுக்கு அப்பால் மனோஜ் பாஜ்பாய்- பிரியாமணியின் குடும்ப காட்சிகள் ரசிக்கக் கூடியதாகவும் சற்றே இளைப்பாறிக் கொள்ளும் இடமாகவும் இருந்துவிடுகின்றன. கொள்கையை வகுக்கும் அரசு கட்டிடங்களுக்குளும் அரசியல்வாதிகளின் உள்ளுக்குள்ளும்தான் ஒவ்வொரு வரலாற்று சம்பவங்களிலும் ஏராளமான மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அந்த மர்மங்கள் இப்படி எல்லாம் இருக்கக் கூடும் என்பதை பல இடங்களில் காட்டுகிறது இந்த தொடர். அதேநேரத்தில் ஈழ விடுதலை குழு தலைவர் பாஸ்கரனை இந்தியாவின் நெருக்கடிக்காக ஈழ விடுதலை குழுவின் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமரே காட்டிக் கொடுக்கிறார் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

ஏனெனில் 2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஈழ ஆயுதக் குழு அழிக்கப்பட்டது. ஆனால் அதன் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி எனும் கே. பத்மநாபன், இன்னமும் இலங்கையில் சுதந்திரமாகவே இருக்கிறார். அவரது காட்டிக் கொடுப்புதான் ஈழ விடுதலை போரின் பேரழிவுக்கு காரணம் என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு. இதை வைத்துதான் பாஸ்கரனை ஆரம்ப கால தோழர் தீபன் காட்டி கொடுத்தார் என்பதாக The Family Man - Season2 காட்சிகள் இடம்பெற்றதா? என்கிற கேள்விகளும் எழுகின்றன.

முதல் தொடரில் காஷ்மீர் பிரச்சனை; 2-வது தொடரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பிளஸ் ஈழ விடுதலை குழு என கலந்து கட்டி பற்றி எரியும் பிரச்சனைகளில் தங்கள் பங்குக்கு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது The Family Man - Season2... நிஜங்களின் வலி தெரியாமல்!

https://tamil.oneindia.com/review-of-amazon-s-the-family-man-season-2-cs-423061.html

  • கருத்துக்கள உறவுகள்

 

விஷமப் பரப்புரை செய்யும் தி பேமிலி மேன் 2 : ஆபத்தினை விளக்கும் ராஜவேல் நாகராஜன்.

  • கருத்துக்கள உறவுகள்

அமேசன் பிறைம் இருந்தாலும் இப்படியொரு தொடர் இருந்ததே எனக்குத் தெரியாது. இப்ப இந்த இரண்டாம் சீசன் எதிர்ப்பலை கவனத்தை ஈர்த்ததால் பார்க்க இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக்கூடாது, வேற லெவல் தமிழர்களை (ஈழத்தமிழர்களையும் தமிழ்நாட்டு தமிழர்களையும்) சகட்டு மேனிக்கு செஞ்சிருக்கிறது பெமலி மேன், பானிபூரி விற்பவன் போல் இருக்கும்  பான் பீடா வாயன் மனோஜ் பாஜ்பாய் சகட்டுமேனிக்கு ஹீரோயிசத்தில் பின்னி எடுக்கிறார், தமிழ் நாட்டு தமிழர்கள் வழமை போல எப்போதும் சாரயத்தில் மிதந்துகொண்டு வாய் பூராக கெட்ட வார்த்தை பேசிக்கொண்டு திரிய, முன்னால் போராளி சமந்தாவோ தன்னுடைய தேவைகளை நிறைவேற்ற படுக்கைக்கு கூட செல்லக்கூடியவராக காட்டப்பட்டிருக்கிறார்,  தமிழர்களுடனான தங்களது தனிப்பட்ட அரிப்பை நன்றாகவே சொறிந்து தீர்த்திருக்கிறது படக்குழு,

 

 

  • கருத்துக்கள உறவுகள்

The Family Man 2 இணையத்தொடர் திரையிடுவதை நிறுத்த வேண்டும்’ – சீமான் வலியுறுத்தல்

 
seeman4354545-1564027066.jpg
 47 Views

The Family Man 2 சீரீஸ் ஒளிபரப்பை நிறுத்தவில்லை என்றால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ப்ரைம் வீடியோ உள்ளிட்ட அனைத்து அமேசான் சேவைகளையும் புறக்கணிப்போம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 

 

இது தொடர்பில் தனது ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஈழ விடுதலை போராட்டம் தவறான முறையில் காட்டப்பட்டுள்ளதாகவும், தமிழர்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

https://www.ilakku.org/?p=51605

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

அமேசன் பிறைம் இருந்தாலும் இப்படியொரு தொடர் இருந்ததே எனக்குத் தெரியாது. இப்ப இந்த இரண்டாம் சீசன் எதிர்ப்பலை கவனத்தை ஈர்த்ததால் பார்க்க இருக்கிறேன்.

அடடா அப்படியா, உடனே பார்த்துவிட்டு உங்கள் பென்னான விமர்சனத்தை பகிருங்கள், ஆவலோடு ஏதிர்பார்க்கும் ஈழ தமிழ்நாட்டு தமிழர்கள்🤓🤓

  • கருத்துக்கள உறவுகள்

1.விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தும் இந்த படத்தை நான் பார்க்கப்போவதில்லை. என்னால் காட்ட கூடிய ஒரே எதிர்ப்பு இப்போதைக்கு இது மட்டும்தான். தவிர நான் அனுபவித்த போராட்டம் இது. இதன் நியாயமும், தவறுகளும் எனக்கு தெரியும் - எந்த பானி பூரி வாயனிடமும் அதை பற்றி கேட்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.

2.“புறக்கணி தமிழா” அனுபவத்தில் -அமேசன் பிரைமை தமிழர்கள் புறகணிப்பார்கள் என நான் நினைக்கவில்லை. தவிரவும் அமேசன் பிரைம் என்பது தனியே வீடியோ மட்டும் அல்ல - அதில் express delivery உட்பட பல விடயங்கள் உள்ளன - இன்றைய சூழலில் - இதை பாவிக்கும் அளவுக்கு வசதி உள்ள தமிழர்கள் இதை புறகணிப்பது சாத்தியமாகவும் தெரியவில்லை.

அமேசன் பிரைம் இல்லாதவர்கள் - புறக்கணிக்க முடியாது.

3. மிக முக்கியமாக - இப்படி புறக்கணிப்போம் என சீமான் அமேசன் பிரைமை மிரட்டி அறிக்கை விடுவது எதிர் வினையையே counter productive தரும். தமிழர்கள் கருத்து சுதந்திரத்தை விரும்பாதோர் என்ற தோற்றபாட்டையும், இந்த படத்துக்கு தேவையற்ற விளம்பரத்தையும் இது பெற்று கொடுக்கும்.

நமக்கு இந்த படம் பொய்யுரைக்கிறது என்பது விளங்குகிறது, ஆனால் ஏனைய உலகத்திற்கு அப்படி இல்லை. சல்மான் ருஸ்டியின் புத்தகம் வந்த போது முஸ்லீம்கள் கொதித்தார்கள். ஆனால் எமது மனநிலை எப்படி இருந்தது? அதே போலத்தான் இப்போ ஏனையவர்களின் மனநிலை.

ஆகவே இப்படி அறிக்கை அரசியல் செய்வது சீமானின் பின்பற்றிகளை குசிப்படுத்தலாம், நிச்சயமாக இனத்துக்கு கேட்டையே தரும். (கீழே புள்ளி 4 ஐ தொடர்புபடுத்தி பார்க்கவும்)

4. இந்த முரணின் இரெண்டு பக்கமும் கதை, திரைக்கதை, இயக்கம் செய்வது ஒரே சக்தி என நான் அனுமானிக்கிறேன்.

ஒரு வழியில் சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு படத்தை ஐ எஸ் உடன் புலிகளை சம்பந்தபடுத்தி எடுப்பது - அதில் சமந்தாவை நடிக்க வைத்து தெலுங்கு கோணத்தையும் இழுத்து விடுவது.

மறுவழியில் ஏஜெண்டுகளை வைத்து இதை மொக்குதனமாக எதிர்ப்பது.

இப்போ படத்தை பார்க்கும் ஒரு வெள்ளை இனத்தவரின் மனதில் எப்படி படியும்?

இவர்கள் அப்போதும் மூர்க்கர்கள்….இப்போதும் மூர்க்கர்கள்….ஆகவே படம் சொல்வது உண்மைதான் போலும்.

இந்த படத்தினையும், அதன் எதிர்ப்பையும் தமது கட்டுபாட்டில் வைத்திருக்கும் சக்தி விரும்புவது 👆🏼 இதைத்தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அடடா அப்படியா, உடனே பார்த்துவிட்டு உங்கள் பென்னான விமர்சனத்தை பகிருங்கள், ஆவலோடு ஏதிர்பார்க்கும் ஈழ தமிழ்நாட்டு தமிழர்கள்🤓🤓

இதற்கெல்லாம் விமர்சனம் எழுதும் அளவுக்கு நேரமில்லை!

நான் சொன்ன விடயம்: என்னைப் போல எத்தனை பேர் இப்போது இந்த எதிர்ப்பலையினால் இந்தத் தொடர் பற்றி அறிந்து பார்க்க விளைவார்கள் என்பது தான்!

(அமேசன் தொடர் பற்றிய விளம்பரத்தை நிறுத்தி விட்டதாக ஓரு இடத்தில் எழுதியிருந்தார்கள், தொடருக்கு எதிர்ப்பாளர்களே விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அமேசனுக்கு விளம்பரச் செலவு மிச்சம் தானே?😂)

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த அனுபவம் : 
என்னுடன் இரண்டு வடக்கு இந்திய  பேர்வழிகள் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர், ஒருத்தர் எப்போதும் இரவு நேரத்தில் வேலைக்கு செல்வதால் காண்பது அரிது, மற்றயது மார்வாடி வசிப்பறையில் இருக்கும் தொலைக்காட்சியில் அதிகம் செலவிடுவது நானும் எனது தமிழ்நாட்டு நன்பனும் தான் (திரைப்பட பிரியர்கள் என்பதால் ) ,இந்த மார்வாடி பயல் எப்போதாவது இருந்துவிட்டுத்தான் தொலைக்காட்சி பார்க்க வருவான் வந்தாலும் பார்ப்பது ரீபாப்லிக் டீவியில் பந்தில் வெடி வாங்கிய டாக் போல கத்தும் அர்னாப் கோஸ்வாமியின் கதறலை மட்டும் தான், ஆனால் பய நேற்றில் இருந்து பேமிலி மான் 2 ஐ binge-watch பண்ணி அனைத்து  பகுதிகளையும் முடித்துவிட்டான், அவனுக்கு புலிகளையும் தெரியாது ,ராஜிவ் காந்தி கொலையை பற்றியும் தெரியாது. அவனை அப்படி பார்க்கவைத்தது பேமிலி மான் 1 ஏற்படுத்தியிருந்த தாக்கம், BJP பயலுகளுக்கு முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பட்டம் கொடுத்து பார்ப்பது அல்வா சாப்பிடுவதுபோல், அனைத்தையும் பார்த்துவிட்டு அவன் கேட்டது இப்படித்தான் உங்கடை ஸ்ரீலங்கன் terrorists இருப்பார்களா, பெண்களை எல்லாம் நன்றாக பாவிக்கிறீர்கள் மேன் என்று விட்டு நக்கலாக ஒரு லுக்கு விட்டுவிட்டு உள்ளே  போய்விட்டான்.
நாங்கள் பானி பூரி வாயன் எங்களுக்கு சொல்லிதரத்தேவையில்லை என்று எங்களது போர்வையை தலை வரை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிவிடலாம், சிலவேளை சீமான் இந்த வெப்சீரிஸை  எதிர்ப்பதால் மட்டுமே எங்களுக்கு  கோபம் பொத்திக்கொண்டுவரலாம், திராவிடியன் ஸ்டாக்கே பொத்திக்கொண்டு இருக்கும் போது நீ என் கூவுற என்ற கேள்வியும் எழலாம். ஆனால் பேமலி மான் 1 ஏற்படுத்திய தாக்கத்தில், பிரபல்யத்தில் பேமிலி மான் 2 பார்க்க தொலைக்காட்ச்சி முன் வந்து உட்காரப்போகும் ஒவ்வொரு பானிபூரி வாயனுக்கும் கடத்தப்படப்போகும் செய்தி இலங்கை தமிழ் பெண் போராளிப்பெண்கள் விபச்சாரிகள்     

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சொந்த அனுபவம் : 
என்னுடன் இரண்டு வடக்கு இந்திய  பேர்வழிகள் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர், ஒருத்தர் எப்போதும் இரவு நேரத்தில் வேலைக்கு செல்வதால் காண்பது அரிது, மற்றயது மார்வாடி வசிப்பறையில் இருக்கும் தொலைக்காட்சியில் அதிகம் செலவிடுவது நானும் எனது தமிழ்நாட்டு நன்பனும் தான் (திரைப்பட பிரியர்கள் என்பதால் ) ,இந்த மார்வாடி பயல் எப்போதாவது இருந்துவிட்டுத்தான் தொலைக்காட்சி பார்க்க வருவான் வந்தாலும் பார்ப்பது ரீபாப்லிக் டீவியில் பந்தில் வெடி வாங்கிய டாக் போல கத்தும் அர்னாப் கோஸ்வாமியின் கதறலை மட்டும் தான், ஆனால் பய நேற்றில் இருந்து பேமிலி மான் 2 ஐ binge-watch பண்ணி அனைத்து  பகுதிகளையும் முடித்துவிட்டான், அவனுக்கு புலிகளையும் தெரியாது ,ராஜிவ் காந்தி கொலையை பற்றியும் தெரியாது. அவனை அப்படி பார்க்கவைத்தது பேமிலி மான் 1 ஏற்படுத்தியிருந்த தாக்கம், BJP பயலுகளுக்கு முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பட்டம் கொடுத்து பார்ப்பது அல்வா சாப்பிடுவதுபோல், அனைத்தையும் பார்த்துவிட்டு அவன் கேட்டது இப்படித்தான் உங்கடை ஸ்ரீலங்கன் terrorists இருப்பார்களா, பெண்களை எல்லாம் நன்றாக பாவிக்கிறீர்கள் மேன் என்று விட்டு நக்கலாக ஒரு லுக்கு விட்டுவிட்டு உள்ளே  போய்விட்டான்.
நாங்கள் பானி பூரி வாயன் எங்களுக்கு சொல்லிதரத்தேவையில்லை என்று எங்களது போர்வையை தலை வரை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிவிடலாம், சிலவேளை சீமான் இந்த வெப்சீரிஸை  எதிர்ப்பதால் மட்டுமே எங்களுக்கு  கோபம் பொத்திக்கொண்டுவரலாம், திராவிடியன் ஸ்டாக்கே பொத்திக்கொண்டு இருக்கும் போது நீ என் கூவுற என்ற கேள்வியும் எழலாம். ஆனால் பேமலி மான் 1 ஏற்படுத்திய தாக்கத்தில், பிரபல்யத்தில் பேமிலி மான் 2 பார்க்க தொலைக்காட்ச்சி முன் வந்து உட்காரப்போகும் ஒவ்வொரு பானிபூரி வாயனுக்கும் கடத்தப்படப்போகும் செய்தி இலங்கை தமிழ் பெண் போராளிப்பெண்கள் விபச்சாரிகள்     

இதை எப்படி எதிர் கொள்ளலாம்?

சீமானின் எதிர்பறிக்கையை உங்கள் பாணிபூரி வாய் நண்பர் வாசிப்பாரா?

வாசித்தாலும் நம்புவாரா?

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை இதை எதிர்கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது.

ஆங்கிலத்தில், பிரச்சார படம் போல அல்லாமல் ஒரு உண்மையான docudrama வை எடுத்து, எமது பக்க நியாயத்தை சொல்வது. அதை இதே அமேசன் பிரைமில் வெளியிடுவது.

சீமான், பாரதிராஜா எல்லாம் இயக்குநர்கள்தான் - சசிகலாவுக்கு, ஸ்டாலினுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்காமல் தமது திறமையை இப்படி பயன்படுத்தலாம்.

சீமானுக்கு தமிழில் வரும் மேதகு படத்தை காயடிக்க நேரம் போதவில்லை.

ஆகவே அவர் செய்யமாட்டார். அப்படி செய்ய அவரை ரோவும் விடாது.

ஆனால் நாங்கள் முயலலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இதை எப்படி எதிர் கொள்ளலாம்?

சீமானின் எதிர்பறிக்கையை உங்கள் பாணிபூரி வாய் நண்பர் வாசிப்பாரா?

வாசித்தாலும் நம்புவாரா?

 

 சீமான் எதிர்ப்பு அறிக்கை விடாவிட்டால் ஏன் சீமான் எதிர்ப்பு அறிக்கை விடவில்லை என கேட் கும் முதலாவது ஆளும் நீங்கள் தானே???

1 minute ago, goshan_che said:

என்னை பொறுத்தவரை இதை எதிர்கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது.

ஆங்கிலத்தில், பிரச்சார படம் போல அல்லாமல் ஒரு உண்மையான docudrama வை எடுத்து, எமது பக்க நியாயத்தை சொல்வது. அதை இதே அமேசன் பிரைமில் வெளியிடுவது.

சீமான், பாரதிராஜா எல்லாம் இயக்குநர்கள்தான் - சசிகலாவுக்கு, ஸ்டாலினுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்காமல் தமது திறமையை இப்படி பயன்படுத்தலாம்.

சீமானுக்கு தமிழில் வரும் மேதகு படத்தை காயடிக்க நேரம் போதவில்லை.

ஆகவே அவர் செய்யமாட்டார். அப்படி செய்ய அவரை ரோவும் விடாது.

ஆனால் நாங்கள் முயலலாம். 

றோ சொன்னதற்கு ஆதாரம் உள்ளதா உங்களிடம்??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

 சீமான் எதிர்ப்பு அறிக்கை விடாவிட்டால் ஏன் சீமான் எதிர்ப்பு அறிக்கை விடவில்லை என கேட் கும் முதலாவது ஆளும் நீங்கள் தானே???

இடம், பொருள், ஏவல்…

செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதும்.

செய்யகூடாத நேரத்தில் செய்ய கூடாததை செய்வதும்

பொம்மைகளாக, இன்னொருவரின் நிகழ்சிநிரலில் இயக்கும் ஏஜெண்டுகளின் இயல்பு.

உதாரணம்

மேதகு படம் - அது வெளிவரவேண்டிய படம். ஆனால் RAW விரும்பவில்லை. ஆகவே சீமான் அதை வெளியிட எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.

இந்த அறிக்கை- அமேசனை புறகணிப்போம் என ஒரு தமிழ்நாட்டில் 6.8% ஆதரவுள்ள துக்கடா அரசியல்வாதி செய்யும் வாய்ஜம்பம் நிச்சயம் counter productive ஆகவே அமையும்.

RAW இதை விரும்புகிறது. சீமான் செய்கிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இடம், பொருள், ஏவல்…

செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதும்.

செய்யகூடாத நேரத்தில் செய்ய கூடாததை செய்வதும்

பொம்மைகளாக, இன்னொருவரின் நிகழ்சிநிரலில் இயக்கும் ஏஜெண்டுகளின் இயல்பு.

உதாரணம்

மேதகு படம் - அது வெளிவரவேண்டிய படம். ஆனால் RAW விரும்பவில்லை. ஆகவே சீமான் அதை வெளியிட எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.

இந்த அறிக்கை- அமேசனை புறகணிப்போம் என ஒரு தமிழ்நாட்டில் 6.8% ஆதரவுள்ள துக்கடா அரசியல்வாதி செய்யும் வாய்ஜம்பம் நிச்சயம் counter productive ஆகவே அமையும்.

RAW இதை விரும்புகிறது. சீமான் செய்கிறார்.

 

றோ விரும்பிதை உங்களிடம் சொன்னார்களா? இல்லை எழுந்தமானத்துக்கு அடித்து விடுவதா?? (சீமானை எதிர்த்து ஏதாவது ஒரு  மறை கருத்தை நுழைக்க வேண்டும் என்பதற்காக)
 

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது எபிசோட் பார்க்க ஆரம்பித்தேன். 50 நிமிடங்கள் உள்ள எபிசோட்டில் 25 நிமிடங்களுக்குப் பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது! ஏனென்றால்..

அப்படியே நித்திரையாகிவிட்டேன்  😴💤

மிச்சம் பார்க்கும் பிளான் இல்லை😶

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.