Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சக்களத்தி வந்துவிட்டாள் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ள பெண்டாடிக்கே, உழைச்சு போட வக்கில்லை... உதுக்குள்ள சக்களத்தியை கொண்டாந்து, வீட்டுக்குள் வைத்து விட்டானே.

இலங்கையின் உத்தியோக பூர்வ மொழி தமிழ் இல்லை அய்யா, இல்லை.

large.CheeLanka.jpg.6a2cae8437efed2d545a954cb24589a3.jpg

Edited by Nathamuni

  • Replies 61
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குவேனியை நோக்கிய சீன இளவரசனும் .....

ch2.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Barking Up the Wrong Tree”

அணில் ஏற விட்ட நாயார் யாரோ?

இப்ப வந்து புலம்புவினம்..... அதெல்லாம் ராசதந்தந்திரத்தோடை அலுவல் நடக்குது.... இருந்து பாருங்கோவன்....

Why Do Dogs Kick Up Your Lawn After They Pee? | Family Handyman

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

"வடக்கின் வசந்தம்"  என்று சொன்ன... டக்ளசும்,
"கிழக்கின் விடியல்" என்று சொன்ன... கருணா, பிள்ளையானும்.....
மகிந்தவுக்கு.... முதுகு, சொறிஞ்சு கொண்டு இருக்கிறார்களா?

உள் நாட்டில்... பிரச்சினையை  தீர்ப்போம் என்று...
ஐ.நா. சபையில், சொறி லங்காவுக்கு, வக்காலத்து வாங்கிய சுமந்திரன் எங்கே?

போங்கடா... நீங்களும், உங்கள் அரசியலும்.
மக்களை.... நிம்மதியாக, இருக்க விடுங்கடா.   

  • கருத்துக்கள உறவுகள்

சக்களத்தி  என்ற சொல்லைப் பார்த்துவிட்டு ஓடோடி வந்தால் .....

ச்சூ...😡

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மொழியை தொடர்ச்சியாக புறக்கணித்தால் சீனாவுக்கு எதிராக வீதியில் இறங்குவோம்; மனோ

Mano-01-696x365.jpg
 2 Views

“இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான அவரின் ருவிட்டர் பதிவு வருமாறு:-

“தமிழைத் தவிர்த்து, சீனர்கள் மொழிச் சட்டத்தை இங்கு மீறுகின்றார்கள். சிங்களம், தமிழ் இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டுமுள்ள பெயர்ப் பலகைகளும் உள்ளன. நான் சீனத் தூதுவரைச் சந்தித்து இது பற்றி விளக்கியுள்ளேன். எனினும், பயனில்லை. இந்நிலை தொடருமானால், நாம் தெருப் போராட்டம் செய்ய வேண்டி வரும்.”

https://www.ilakku.org/?p=50443

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

தமிழ்மொழியை தொடர்ச்சியாக புறக்கணித்தால் சீனாவுக்கு எதிராக வீதியில் இறங்குவோம்; மனோ

சிங்களவனுக்கு எதிராக போராட போய் கடைசியில் சீனாக்காரனுக்கு எதிராக போராட போகிறோமா?

11 hours ago, Nathamuni said:

இப்ப வந்து புலம்புவினம்..... அதெல்லாம் ராசதந்தந்திரத்தோடை அலுவல் நடக்குது.... இருந்து பாருங்கோவன்....

ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்.

ரஜீவ்காந்தியின் ஒப்பந்தம் இருக்கு அதை வைத்து ஒரு வழி பண்ணிவிடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ போலியாக ஃபோட்டோஷொப்பில் தயாரித்த Port City பாஸ்போர்ட்டை வைத்து பெரிய அலசலே நடக்கின்றது😁

இதை பல வாட்ஸப் குழுமங்களிலும் பார்த்தேன். ஒருவரும் கணக்கெடுக்கவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இது பாஸ்போர்ட்(passport) இல்லை போர்ட்பாஸ்(port pass) அப்பு. ஆகவே பயப்பட ஒன்றும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாரோ போலியாக ஃபோட்டோஷொப்பில் தயாரித்த Port City பாஸ்போர்ட்டை வைத்து பெரிய அலசலே நடக்கின்றது😁

இதை பல வாட்ஸப் குழுமங்களிலும் பார்த்தேன். ஒருவரும் கணக்கெடுக்கவில்லை..

இப்படி தான் பலர் அடித்து கிளப்பி கொண்டு இருக்கிறார்கள். இவளவு தரத்துடன் யாரும் போட்டோஷாப் பண்ண முடியாது. வேலை இல்லாத, நாவிதர், பூனைக்கு சிரைத்த கதை போல இங்கு இல்லை.

நான் கேள்விப்பட்ட வகையில், பல டிசைன் செய்து, அரசுக்கும், சீன அரசுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை யாரு லீக் பண்ணி விட்டார்கள். ஆழம் பார்ப்பதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் மொழியும் சேர்க்குமாறு கூறப்பட்டுள்ளது. 

எதுவானாலும் விரைவில் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இவளவு தரத்துடன் யாரும் போட்டோஷாப் பண்ண முடியாது. வேலை இல்லாத, நாவிதர், பூனைக்கு சிரைத்த கதை போல இங்கு இல்லை.

நம்பிட்டோம்😜

நீங்களும் வாட்ஸப்பில்தான் எடுத்திருப்பீர்கள். எந்த ஒரு ரப்லொயிட் கூட இதை ஒரு பரபரப்பு செய்தியாக இன்னும் பிரசுரிக்கவில்லை என்பது உங்களிடம் ஒரு source உம் இல்லையென்பதில் இருந்து தெரிகின்றது. 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

நம்பிட்டோம்😜

நீங்களும் வாட்ஸப்பில்தான் எடுத்திருப்பீர்கள். எந்த ஒரு ரப்லொயிட் கூட இதை ஒரு பரபரப்பு செய்தியாக இன்னும் பிரசுரிக்கவில்லை என்பது உங்களிடம் ஒரு source உம் இல்லையென்பதில் இருந்து தெரிகின்றது. 😁

அய்யா.... அடம் பிடியாதீங்கோ...

எந்த பத்திரிக்கையுமே உத்தியோகபூர்வமானதை தான் வெளிவிடும்.

இது வேண்டுமென்றே லீக் ஆக வைத்துள்ளனர். உதாரணமாக, தமிழீழம் கடவுசீட்டு என்றால், பம்மாத்து என்று, புலிகள் இருக்கும் போது கூட சொல்லலாம்.

ஆனால், இது இலங்கை பாராளுமன்றில் விவாதிக்கப்படும் ஒரு சட்ட மூலத்தின் தொடர்ச்சி. ஆகவே சும்மா தள்ளி விட முடியாது.

ஆகவே பொறுத்திருப்போம்.👌

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றம் ஒப்புதல்.. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தா?

unnamed-file.jpg
 24 Views

கொழும்பு துறைமுக நகரம் என்ற பெயரில் சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக அமையும் என கூறப்படுகிறது.

ஆண்டுகளாக பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்துவரும் சீனா,  கொழும்பு துறைமுகத்தை ஒட்டி, 10, 228 கோடி ரூபாய் மதிப்பில் நகரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.  இந்த துறைமுக நகரத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக சீனாவே வைத்திருக்கும் என்பதால், இங்கு சீனா, ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கான மசோதாவுக்கு, இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், சீனாவின் சுயாட்சி பிரதேசத்தால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இலங்கை நிலப்பரப்பில் முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை யார் வசம் இருக்கிறதோ, அந்த நாடுதான் தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டது என்பது நிதர்சனம்.

அந்த வகையில், தெற்காசியாவில் இந்தியாவை மீறி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த துடிக்கும் சீனா, கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை தனது எல்லை விஸ்தரிப்பு திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் எனக் கூறும் அரசியல் வல்லுநர்கள், இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு லடாக், டோக்லாம், அருணாச்சல பிரதேசங்களை விட  மிக மிக மோசமான அச்சுறுத்தல் உள்ள பிரதேசமாக வங்க கடல் உருவெடுத்திருப்பதாகவும் எச்சரிக்கின்றனர்.

எனவே, தேசப் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இன்றி இந்தியா செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

நன்றி – News 18 Tamil

https://www.ilakku.org/?p=50455

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம் போலியானதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அய்யா.... அடம் பிடியாதீங்கோ...

எந்த பத்திரிக்கையுமே உத்தியோகபூர்வமானதை தான் வெளிவிடும்.

இது வேண்டுமென்றே லீக் ஆக வைத்துள்ளனர்.

டிசைனில் biometric passport icon ஐயும் மறந்துவிட்டார்கள். தமிழை சேர்க்கும்போது இதையும் கவனிக்க சொல்லிவிடுங்கள்😏

spacer.png
spacer.png

இதுவா உங்கள் source? அவரே ட்ரெண்டிங்கிற்காக எல்லா ஹஷ்ராக்ஸையும் அள்ளிவிட்டிருக்கின்றார்.😃

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

large.CheeLanka.jpg.6a2cae8437efed2d545a954cb24589a3.jpg

அடிப்படை ஆங்கில அறிவும்,  கூகுள்  தேடு பொறியில் சிறிய அனுபவமும், இவ் ஆவணமானது போலியானது என அறிந்து கொள்ளலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

டிசைனில் biometric passport icon ஐயும் மறந்துவிட்டார்கள். தமிழை சேர்க்கும்போது இதையும் கவனிக்க சொல்லிவிடுங்கள்😏

இதுவா உங்கள் source? அவரே ட்ரெண்டிங்கிற்காக எல்லா ஹஷ்ராக்ஸையும் அள்ளிவிட்டிருக்கின்றார்.😃

இதுக்கு அடிப்படை ஆங்கில அறிவே தேவை இல்லை.

இது மிக கிட்டிய காலத்தில் நிதர்சனம் ஆகப் போகிறதா, இல்லையா?

அதற்கு பதிலை தேடாமல், தெளிவான சிந்தனை இல்லாமல், இன்டர்நெட் எல்லாம், ஊர்வலம் போவதில் பிரயோசனம் இல்லை.

ஆகக்குறைந்தது அந்த சட்டமூலத்தில், இந்த குறித்த பகுதி, இலங்கை குடி வரவு அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்கு உள்ப்படாது என்ற ஒரு வரி உள்ளது என்பதாவது தெரியுமா?

11 minutes ago, zuma said:

அடிப்படை ஆங்கில அறிவும்,  கூகுள்  தேடு பொறியில் சிறிய அனுபவமும், இவ் ஆவணமானது போலியானது என அறிந்து கொள்ளலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஹொங்கொங்கும் கொழும்பு துறைமுக நகரமும் சீன மொழியில் எழுதினால் ஒரே மாதிரி வருகிறது! உண்மையாகத் தான் இருக்கும்! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக, இருக்குது, இல்லாமல் போகுது. இந்தியாவுக்கு, ஆப்பு என்று நினைப்பதில் மகிழ்ச்சி. மகிழ்ச்சி அடையாதோர், வந்து குமுறலாம். 🤗

இந்த காணொளி, இந்தியா செய்த துரோகத்தை சொல்கிறது.😰

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

உண்மையாக, இருக்குது, இல்லாமல் போகுது. இந்தியாவுக்கு, ஆப்பு என்று நினைப்பதில் மகிழ்ச்சி. மகிழ்ச்சி அடையாதோர், வந்து குமுறலாம். 🤗

இந்த காணொளி, இந்தியா செய்த துரோகத்தை சொல்கிறது.😰

 உண்மையா இல்லையா என்பதை விட நாதம் சுடுகிற வடைக்கு உப்புக் காரம் சேர்க்கிறதா என்று தான் பார்க்க வேண்டும்! 

இது நல்ல ரேஸ்ராக இருப்பதால், தொடர்ந்து பரப்புங்கள்! 😁

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

உள்ள பெண்டாடிக்கே, உழைச்சு போட வக்கில்லை... உதுக்குள்ள சக்களத்தியை கொண்டாந்து, வீட்டுக்குள் வைத்து விட்டானே.

இலங்கையின் உத்தியோக பூர்வ மொழி தமிழ் இல்லை அய்யா, இல்லை.

large.CheeLanka.jpg.6a2cae8437efed2d545a954cb24589a3.jpg

ஐயோ வடை போச்சே. ஹிந்தி பொறிக்கப்படவேண்டிய இடத்தில் சீனமொழி உட்கார்ந்து உள்ளது. இந்திய மத்திய புலனாய்வுத்துறை என்ன அயோக்கியத்தனம் செய்யலாம் என்று இப்போது தலையை சொரிகின்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சுட்ட வடை இல்லை. யாரோ சுட்டுக் கொண்டிருக்கும் வடை. அதை பகிர்ந்தேன்.

மே 18ம் திகதி ஈழக்கனவு முடித்து வைக்கப்பட்ட அதேதினத்தில், பாராளுமன்றில் புதிய சட்ட மூலம் சமர்ப்பித்து சீனக்கனவு ஆரம்பித்து வைக்கப்படுள்ளது.

இந்த பகுதியில் வாழப்போகும் இலங்கை மற்றும் சீன மக்களுக்கு ஒரு அடையாள சான்றிதழ், வழங்கப்பட போகிறது. அது எப்படி இருக்கும் என்பதே, இந்த ஆவணத்தின், கருத்து ஆக உள்ளதே அன்றி, இதுதான் இறுதி என்று முடிவாக யாரும் சொல்லவில்லை, நானும் சொல்லவில்லை.

நிதர்சனமாக, கண் முன்னே தெரியும் ஒரு நிகழ்வுக்கு, வடை, பாயாசம் கதையுடன் வந்து நேரத்தை வீணடியாமல் இருந்தால் நல்லது.

http://www.sundaytimes.lk/210523/columns/will-sri-lankas-port-city-be-chinas-trojan-horse-444550.html

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

 உண்மையா இல்லையா என்பதை விட நாதம் சுடுகிற வடைக்கு உப்புக் காரம் சேர்க்கிறதா என்று தான் பார்க்க வேண்டும்! 

இது நல்ல ரேஸ்ராக இருப்பதால், தொடர்ந்து பரப்புங்கள்! 😁

ஒரு போலியான படத்தை போட்டு அதை நியாயப்படுத்த நாதம்ஸ் சட்டமூலம் (அது வேறு திரிகளில் உள்ளது.. நமது தமிழ்  சட்டவாளர்களும் பாராளுமன்றில் அலசுகின்றார்கள்), கருணாநிதி என்று கிளைகள் எல்லாம் தாவுகின்றார்!🤣

இன்ரநெற்றில் உண்மைகளும் நிறைந்துள்ளன. போலிகளும் உள்ளன.  போலியான படங்களை அடையாளம் காணவும் கூகிளில் படங்களை வைத்தே தேடும் வசதி உதவுகின்றது😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

ஒரு போலியான படத்தை போட்டு அதை நியாயப்படுத்த நாதம்ஸ் சட்டமூலம் (அது வேறு திரிகளில் உள்ளது.. நமது தமிழ்  சட்டவாளர்களும் பாராளுமன்றில் அலசுகின்றார்கள்), கருணாநிதி என்று கிளைகள் எல்லாம் தாவுகின்றார்!🤣

இன்ரநெற்றில் உண்மைகளும் நிறைந்துள்ளன. போலிகளும் உள்ளன.  போலியான படங்களை அடையாளம் காணவும் கூகிளில் படங்களை வைத்தே தேடும் வசதி உதவுகின்றது😀

மின்னம்பலத்தில் வந்தால் தான் நம்புவீர்களாக்கும். 😜

இது மிக அண்மையில் உண்மையாகுமா, இல்லையா? அதுக்கு பதிலை சொல்லுங்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

மின்னம்பலத்தில் வந்தால் தான் நம்புவீர்களாக்கும். 😜

மின்னம்பலம் என்ன எந்த அம்பலம் என்றாலும் கொஞ்சம் மூளையை பாவித்தால் போலியா இல்லையா என்று பகுத்தறியலாம். 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.