Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்... அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு

யாழில்... அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு

மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காக யாழ்.நகரில் அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்.நகரின் பிரதான வீதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு,  இராணுவம் மற்றும் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டள்ளனர்.

மேலும் அவசர தேவை தவிர்ந்த ஏனைய வாகனங்கள் உள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன்  அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியே வருகின்றவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

அத்துடன் அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் மாத்திரமே யாழ்.நகரில் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

batti-2-2.jpg

https://athavannews.com/2021/1218101

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

யாழில்... அதிகளவான வீதித்தடைகள் அமைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு

இதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் சுத்த ஏமாற்று. உண்மைக் காரணம் என்ன என்றால்... இன்று வெசாக் பண்டிகை. தமிழர்களும் வெசாக் பண்டிகையைக் கொண்டாடி சிங்கள மக்களை சற்று மகிழ வைத்து விட்டால்.... அடுத்துத் தேர்தல் வரும்போது மகிந்த, கோத்தா கும்பலுக்கு சிங்கள மக்கள் வாக்குகள் அம்போதான் என்று தெரியும்.😲 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேலை.. புல்லா யாழ்ப்பாணத்தை முடக்கினாங்கள் எண்டா எங்கட சனம் தப்பீடும்... சிங்களவன் எங்கட சனத்துக்கு தடுப்பூசி தரப்போறதில்லை.. வடக்குகிழக்கில இருக்கிற ஆஸ்பத்திரியளும் பெரிய அளவு நோயாளிகளை தாங்கும் சக்தியும் இல்ல.. அழியட்டும் தமிழன் எண்டு ஊரடங்கு போடாமல் விட்டுவிடுவானோ எண்டு பயந்திட்டன்.. அவன் என்ன எண்ணத்தில ஆமியைக்குவிக்கிறானோ தெரியேல்ல ஆனா நமக்கு நல்லதுதான்.. எங்கட சனம் பாதுகாப்பா இருங்கோ எண்டு சொன்னா கேக்காது.. இப்பிடி ஊரடங்கு போட்டாதான் நோய் சங்கிலியை உடைக்கலாம்.. 

  • கருத்துக்கள உறவுகள்

ஊசி "இந்தா வருகிறது , அந்தா வருகிறது" என பேய்க்காட்டுவதாக  பெற்றோர் சொல்கிறார்கள். காவல்துறை அத்தியாவசிய பொருட் கள், மருந்து வகைகள் வாங்க மட்டும் அனுமதிக்கின்றது. நோய் பரவும் வீதம் அதிகரிப்பதாகவும் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை எண்டு திரியிறவனுகளுக்கு நல்லொரு சாட்டு கிடைச்சிட்டுது.  
  விடுவானுகளோ? கூடாரம் போட்டாச்சு, இனி தங்கள் திட்டத்தையும் சேர்த்து நடைமுறைப்படுத்த வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, satan said:

எங்கை எண்டு திரியிறவனுகளுக்கு நல்லொரு சாட்டு கிடைச்சிட்டுது.  
  விடுவானுகளோ? கூடாரம் போட்டாச்சு, இனி தங்கள் திட்டத்தையும் சேர்த்து நடைமுறைப்படுத்த வேண்டியதுதான். 

அழிவுகளை வைத்தே சிங்களம் தன்னை தக்க வைத்துக்கொள்ளும். இது அன்று முதல் இன்று வரைக்கும் உள்ள அனுபவ வரலாறுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா இன்னும் பயங்கரவாதியை சமாளிக்க, போர் ஆயுதங்களுடன் படையினர் தயார் நிலையில் உள்ளனர். 
 
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அழிவுகளை வைத்தே சிங்களம் தன்னை தக்க வைத்துக்கொள்ளும். இது அன்று முதல் இன்று வரைக்கும் உள்ள அனுபவ வரலாறுகள்.

உண்மை தான்...! 
சுனாமியால் பாதிக்கப் பட்டவன் பசித்துக் கிடக்க....பிச்சையெடுத்ததைக் கூடப் புசித்தவன் சிங்களவன்!

புத்தனிடம் அவர்கள் படித்தது இதை மட்டும் தான்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, புங்கையூரன் said:

உண்மை தான்...! 
சுனாமியால் பாதிக்கப் பட்டவன் பசித்துக் கிடக்க....பிச்சையெடுத்ததைக் கூடப் புசித்தவன் சிங்களவன்!

புத்தனிடம் அவர்கள் படித்தது இதை மட்டும் தான்...!

இலங்கையில் சிங்களவர்கள் மதத்தின் பெயரால் தமிழர்களை அழிவுகளாலும் அடக்குமுறைகளாலும் ஆக்கிரமித்து வருகின்றனர்.
ஆனால் ஈழத்தமிழர்கள் இனவிடுதலைக்காக மத தீவிரவாதத்தை கையில் எடுத்ததே கிடையாது.திராவிடத்திற்கும் இடமில்லை.தலித்திற்கும் இடமில்லை.

நான்/நாங்கள் தமிழர் என்பதே நமது தாரக மந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

திராவிடத்திற்கும் இடமில்லை.தலித்திற்கும் இடமில்லை.

நான்/நாங்கள் தமிழர் என்பதே நமது தாரக மந்திரம்.

இத வாசிச்சா வறணி ஜேசீப்பி மிசின் கவட்டுக்க சிரிக்கும்.. 😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இத வாசிச்சா வறணி ஜேசீப்பி மிசின் கவட்டுக்க சிரிக்கும்.. 😂

இயக்கங்களில் தலித் என ஒதுக்கினார்களா என்பதற்கும் எம்மிடையே சாதியம் உள்ளது என்பதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இத வாசிச்சா வறணி ஜேசீப்பி மிசின் கவட்டுக்க சிரிக்கும்.. 😂

எல்லா இடங்களிலும் அப்படி நடக்கவில்லைத்தானே ஓணாண்டி 😎

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் நடமாடுவோரை டோர்ன் கமராக்கள் மூலம் கண்காணிப்பு!

பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் நடமாடுவோரை கண்காணிக்க பொலிஸாருடன் இணைந்து விமானப்படையின் டோர்ன் கமரா கண்காணிப்பு இன்று (26) ஆரம்பித்தது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் பயணக் கட்டுப்பாடுகளை மீறி நடமாடுவோர் கைதுசெய்யப்படவுள்ளன

https://www.todayjaffna.com/238386

18 hours ago, nunavilan said:

ஊசி "இந்தா வருகிறது , அந்தா வருகிறது" என பேய்க்காட்டுவதாக  பெற்றோர் சொல்கிறார்கள். காவல்துறை அத்தியாவசிய பொருட் கள், மருந்து வகைகள் வாங்க மட்டும் அனுமதிக்கின்றது. நோய் பரவும் வீதம் அதிகரிப்பதாகவும் சொல்கிறார்கள்.

நீங்கள் உப்படி சொல்கின்றீர்கள் 

ஆனால் பின்வரும் சம்பவங்களும் நடக்கின்றன. 

யாழில் கூடியிருந்த குடிமகன்கள்; வாங்கவந்தவர்கள், விற்றவர்கள் அனைவரும் கைது!

யாழ்.நல்லுார் இராமசாமி பரியாரியார் சந்தியை அண்மித்த பகுதியில் உள்ள மதுபானசாலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு அங்கு கூடியிருந்த குடிமகன்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பெருமளவு மதுபான போதல்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் வாங்க வந்தவர்கள், விற்றவர் என அனைவரும் கைது செய்யப்பட்டள்ளனர். நாட்டில் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

https://tamilbreakingnews.com/arrest-in-jaffna-peoples/

எங்கவீட்டிலும்தான் நுணா.. போதாதிற்கு டயபிட்டிக் பேசண்ட் வேற.. இவனுங்க சிங்களவனுக்கே தடுப்பூசிய கிள்ளி தெளிக்குறானுவ இதில தமிழருக்கு எங்க தரப்போறானுங்க... வீட்ட நினைச்சு ஒவ்வொருநாளும் நிம்மதி இல்லாமல் போய்க்கொண்டிருக்கு பயத்தில...🥲🥲

26 minutes ago, colomban said:

யாழில் பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் நடமாடுவோரை டோர்ன் கமராக்கள் மூலம் கண்காணிப்பு!

பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் நடமாடுவோரை கண்காணிக்க பொலிஸாருடன் இணைந்து விமானப்படையின் டோர்ன் கமரா கண்காணிப்பு இன்று (26) ஆரம்பித்தது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் பயணக் கட்டுப்பாடுகளை மீறி நடமாடுவோர் கைதுசெய்யப்படவுள்ளன

https://www.todayjaffna.com/238386

நீங்கள் உப்படி சொல்கின்றீர்கள் 

ஆனால் பின்வரும் சம்பவங்களும் நடக்கின்றன. 

யாழில் கூடியிருந்த குடிமகன்கள்; வாங்கவந்தவர்கள், விற்றவர்கள் அனைவரும் கைது!

யாழ்.நல்லுார் இராமசாமி பரியாரியார் சந்தியை அண்மித்த பகுதியில் உள்ள மதுபானசாலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு அங்கு கூடியிருந்த குடிமகன்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பெருமளவு மதுபான போதல்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் வாங்க வந்தவர்கள், விற்றவர் என அனைவரும் கைது செய்யப்பட்டள்ளனர். நாட்டில் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

https://tamilbreakingnews.com/arrest-in-jaffna-peoples/

நல்ல விடயம்.. இயக்கம் இருந்திருந்தா உவனுகளுக்கு பச்சை மட்டை அடி விழுந்திருக்கும் குடிகாரக்க்போதிங்க... ஆமி அடிச்சு கையகால ரெண்டுமூண்டு பேருக்கு உடைச்சாங்கள் எண்டா மூடிட்டு இருப்பானுங்க... வருத்தக்காரரை வீட்டில வச்சிருக்குரதுவள் ஒவ்வொரு நாளும் வயித்தில நெருப்பகட்டிட்டு நாளைக்கடத்திட்டு இருக்குதுவள்.. இதுங்களுக்கு குடி கூத்தாடி கேக்குது நாடு போய்க்கிட்டுருக்கிர நிலமையில..🥲🥲

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரம் வடமராட்சி , யாழ்நகரபகுதி நிலமை

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எங்கவீட்டிலும்தான் நுணா.. போதாதிற்கு டயபிட்டிக் பேசண்ட் வேற.. இவனுங்க சிங்களவனுக்கே தடுப்பூசிய கிள்ளி தெளிக்குறானுவ இதில தமிழருக்கு எங்க தரப்போறானுங்க... வீட்ட நினைச்சு ஒவ்வொருநாளும் நிம்மதி இல்லாமல் போய்க்கொண்டிருக்கு பயத்தில...🥲🥲

நல்ல விடயம்.. இயக்கம் இருந்திருந்தா உவனுகளுக்கு பச்சை மட்டை அடி விழுந்திருக்கும் குடிகாரக்க்போதிங்க... ஆமி அடிச்சு கையகால ரெண்டுமூண்டு பேருக்கு உடைச்சாங்கள் எண்டா மூடிட்டு இருப்பானுங்க... வருத்தக்காரரை வீட்டில வச்சிருக்குரதுவள் ஒவ்வொரு நாளும் வயித்தில நெருப்பகட்டிட்டு நாளைக்கடத்திட்டு இருக்குதுவள்.. இதுங்களுக்கு குடி கூத்தாடி கேக்குது நாடு போய்க்கிட்டுருக்கிர நிலமையில..🥲🥲

புலிகள் இந்த பரவலை - நியுசிலாந்து ரேஞ்சில டீல் பண்ணி இருப்பார்கள்.

கொழும்பில flats இல இருக்கிற பலருக்கு தொத்துது. அதாதல் பரவாயில்லை வேற வழி இல்லை. ஊரில விட்டு வீதியாதானே கிடக்கு. நாங்கள் சண்டை காலம் எல்லாம் பதுங்கி வாழேலையே? போத்திலால போட்டால் சரிவரும்.

வீட்டுகாரரை டயபிடீஸ்சை நல்ல கட்டுப்பாட்டில் வச்சிருக்க சொல்லுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.