Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தாயகத்தை அமெரிக்கா ஏற்கிறதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குணா, இந்தப் பிரேரணை ஊதிப் பெருப்பிக்கப் படுகிறது என்றே நான் கருதுகிறேன்.

 மேலும் இது அறிமுகம் செய்யப் பட்டிருக்கிறதே தவிர நிறைவேற்றப் படவில்லை. (2019 இல் அறிமுகம் செய்யப்பட்ட இது போன்ற பத்தாம் ஆண்டு நினைவுப் பிரேரணை இன்னும் நிறைவேற்றப் படவோ, வாக்கெடுப்புக்கு விடப் படவோ இல்லையென்பது முக்கியமானது).

அமெரிக்க அரசாங்கம் ஒன்றிலொன்று சார்ந்திராத 3 பிரிவுகள் கொண்டது:

1. சட்டவாக்கப் பிரிவு (அமெரிக்க காங்கிரஸ்)

2. நிறைவேற்றுப் பிரிவு (வெள்ளை மாளிகையும், அமைச்சுக்களும்)

3. நீதித்துறை (உயர்நீதிமன்றும் அதன் கீழுள்ள நீதிமன்றங்களும்).

இவற்றுள் நீங்கள் சொன்னது போல நடைமுறைக்குப் பயனுள்ள முடிவுகளை நிறைவேற்றுப் பிரிவின் கீழ் வரும் வெளிநாட்டமைச்சு (State Department) போன்றவை தான் தமிழர் விடயத்தில் எடுக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

On 4/6/2021 at 19:54, Kuna kaviyalahan said:

நேற்று இதை பார்த்து விட்டு இதில் @Kadancha வையும் tag பண்ண வேண்டும் என நினைத்தேன் சீமான் சோலியில் மறந்து விட்டேன்.

இதை நம்மை பேச வைத்து, அதனால் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து - அதன் மூலம் தன் காரியத்தை சாதிக்க அமெரிக்கா முயல்கிறதா?

அப்படி என்றால் நாம் மீண்டும் இலவு காத்த கிளிதான்.

போன வீடியோவில் குணா, இந்தியாவின் லிமிட்டை இலங்கை தொட்டு விட்டதாக கூறி இருந்தார்.

அதன்படி பார்த்தால் கடந்த தீர்மானங்கள் போலல்லாது இந்த தீர்மானம் வேறு திசையில் செல்ல கூடும் என்றும் கருதலாம்.

அண்மையில், இந்த செய்தி வந்தபின், நேரம் கிடைத்த போது அமெரிக்காவில் காங்கிரசில் ஒரு பிரேரணை சட்டம் ஆகும் படிமுறை பற்றி மேலோட்டமாக வாசித்தேன்.

நான் வாசித்த மட்டில் இது இன்னும் பல படிகளை தாண்ட வேண்டும் போல இருக்கிறது.

அப்படி பார்த்தால் - இப்போதைக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சாதனமாகவே இதை பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் எவர் எதைக் கூறினாலும் செய்தாலும் எங்கள் உள்ளுணர்வுக்குத் தெரியும் எங்கள் எதிர்காலம் என்னவென்று !!!!!!

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

யார் எவர் எதைக் கூறினாலும் செய்தாலும் எங்கள் உள்ளுணர்வுக்குத் தெரியும் எங்கள் எதிர்காலம் என்னவென்று !!!!!!

கொஞ்சம் வெளியாலயும் சொல்லுங்களன் கேட்க 🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் வெளியாலயும் சொல்லுங்களன் கேட்க 🙂

4_12_2021-4_20_54-PM.png

 இவரைத் தெரிகிறதா.. 😜

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

4_12_2021-4_20_54-PM.png

 இவரைத் தெரிகிறதா.. 😜

கொஞ்சம் மங்கலா தெரியுது🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

கொஞ்சம் மங்கலா தெரியுது🤣

ஒரே பனி மூட்டமா இருக்கு. 😂

  • தொடங்கியவர்
On 5/6/2021 at 22:32, goshan_che said:

நேற்று இதை பார்த்து விட்டு இதில் @Kadancha வையும் tag பண்ண வேண்டும் என நினைத்தேன் சீமான் சோலியில் மறந்து விட்டேன்.

இதை நம்மை பேச வைத்து, அதனால் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து - அதன் மூலம் தன் காரியத்தை சாதிக்க அமெரிக்கா முயல்கிறதா?

அப்படி என்றால் நாம் மீண்டும் இலவு காத்த கிளிதான்.

போன வீடியோவில் குணா, இந்தியாவின் லிமிட்டை இலங்கை தொட்டு விட்டதாக கூறி இருந்தார்.

அதன்படி பார்த்தால் கடந்த தீர்மானங்கள் போலல்லாது இந்த தீர்மானம் வேறு திசையில் செல்ல கூடும் என்றும் கருதலாம்.

அண்மையில், இந்த செய்தி வந்தபின், நேரம் கிடைத்த போது அமெரிக்காவில் காங்கிரசில் ஒரு பிரேரணை சட்டம் ஆகும் படிமுறை பற்றி மேலோட்டமாக வாசித்தேன்.

நான் வாசித்த மட்டில் இது இன்னும் பல படிகளை தாண்ட வேண்டும் போல இருக்கிறது.

அப்படி பார்த்தால் - இப்போதைக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சாதனமாகவே இதை பார்க்க முடியும்.

சட்டமாக்குவாதற்காக கொண்டுவரப்படும் தீர்மான முறைமை வேறு இது வேறு. இது வெறும் அறிக்கை பெறுமானம் மட்டுமே உடையது. இன்னொரு காணொளியில் விளக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kuna kaviyalahan said:

சட்டமாக்குவாதற்காக கொண்டுவரப்படும் தீர்மான முறைமை வேறு இது வேறு. இது வெறும் அறிக்கை பெறுமானம் மட்டுமே உடையது. இன்னொரு காணொளியில் விளக்கிறேன் 

நன்றி குணா.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dailymirror.lk/top_story/EU-Parliament-adopts-resolution-on-Sri-Lanka/155-213843
திண்ணையில் இதை நிழலி பகிர்ந்திருந்தார்.

@Kadanchaமுன்பு ஒரு திரியில் அமேரிக்காவில் சளிப்பிடித்தால் யூகே, ஈயுவில் தும்மல் வரும் என்றேன். வந்து விட்டது போல் படுகிறது.

ஆனால் குணா சொல்வது போல் எல்லாம் சட்ட வலுவற்ற பூர்வாங்க நடவடிக்கை போலத்தான் படுகிறது.

இவற்றை காட்டி இலங்கையை வழிக்கு கொண்டு வர முயற்சிக்க கூடும். அதற்கு மேல் போவார்கள் போல் தெரியவில்லை.

18 minutes ago, goshan_che said:

ஆனால் குணா சொல்வது போல் எல்லாம் சட்ட வலுவற்ற பூர்வாங்க நடவடிக்கை போலத்தான் படுகிறது.

இவற்றை காட்டி இலங்கையை வழிக்கு கொண்டு வர முயற்சிக்க கூடும். அதற்கு மேல் போவார்கள் போல் தெரியவில்லை.

 கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும்  பொறுப்பில்லாமல் உதறி தள்ளி காலத்தை கடத்தி விட்டு அடுத்தவன் தீர்மானம் போடுவான் என்று காலம் முழுவதும் காத்திருக்க வேண்டியது தான். 

குணா விளக்க முதல் நான் முந்திரிக் கொட்டை மாதிரி முந்த விரும்பவில்லை!😎

ஆனால் ஒரு விடயத்தை மட்டும் இங்கே வாழும் ஒருவர் என்ற வகையில் சொல்ல விரும்புகிறேன்: பிரேரணை என்பது சட்ட வலுவற்றது. ஆனால், ஒரு பிரேரணை கூட பிரதிநிதிகள் சபையூடாக வாக்கெடுப்பிற்கு விடப் படும் வாய்ப்புகள் மிகவும் அரிது - இதனால் தான் அந்த 2019 பிரேரணையே அறிமுக நிலையைத் தாண்டவில்லை!

காரணம் என்ன? இந்த மக்கள் பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) இருக்கும் 435 பேருக்கும், இலங்கையில் இருக்கும் பா.உ க்களுக்கும் செயற்பாட்டளவில் பெரிய வித்தியாசமில்லை. இந்தப் பிரதிநிதிகளை அவர்களின் உதவியாளர்கள் இல்லாமல் தனியே மடக்கி இலங்கையை உலக வரை படத்தில் காட்டும் படி கேட்டால் அரை வாசிப் பேருக்கு மேல் தெரியாமல் தடுமாறுவர் -அவ்வளவு தான் பெரும்பாலான பிரதிநிதிகளின் பொது அறிவு, சராசரி அமெரிக்கனை விடக் குறைவு.

இந்த நிலையினால் உள்ளூர் பிரச்சினைகளையே தீர்க்க முடியாமல் பெரும்பாலானோர் கட்சி அரசியல் மட்டும் செய்து சம்பளம் கிம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் பிரச்சினை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

 கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும்  பொறுப்பில்லாமல் உதறி தள்ளி காலத்தை கடத்தி விட்டு அடுத்தவன் தீர்மானம் போடுவான் என்று காலம் முழுவதும் காத்திருக்க வேண்டியது தான். 

இங்கே இவரது புலம்பல்களை எவரும் கவனிப்பதில்லையா அல்லது ***** என்று விலகி போகிறார்களா???

Edited by நிழலி
நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, விசுகு said:

இங்கே இவரது புலம்பல்களை எவரும் கவனிப்பதில்லையா அல்லது **** என்று விலகி போகிறார்களா???

 வணக்கம் விசுகர்!  அந்த புலம்பல்களை பலர் நீண்ட காலமாக கவனிக்காமல் விட்டு விட்டனர் என்பதை நீங்கள் கவனிக்கவில்லை என்பதை மிக மன வருத்தத்தோடு அறியத்தருகின்றேன்.😁

Edited by நிழலி
நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இவரை விட தலைவர் 2008 மாவீரர் தின நிகழ்வுரையில் சொல்லிட்டார்.. உலக பூகோள - இராணுவ அரசில் வியூகங்கள்.. வளர்ந்து வரும்.. ஆசிய பொருண்மியம் நோக்கியே  இருக்கும் என்று.

சீமான் சொல்வது போல... எதுவும் சாத்தியத்தில் இருந்து உருவாவதில்லை.. தேவையில் இருந்தே உருவாகிறது.

சொறீலங்கா சிங்கள இனவாத ஆட்சியாளர்கள் சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் வரை தமிழர்களுக்கு  சில சாதகமான களங்கள் உலகப் பூகோள அரசியல் தளத்தில் இருக்கவே சாத்தியமுள்ளது.

முன்னர் புலிகளை சாட்டி தமிழர்களை விலக்கி வைச்சவர்களுக்கும்.. இப்போ புலிகளே இல்லை என்ற சூழலில்... தமிழர்கள் நியாயங்களை நிராகரிக்க முடியாவிட்டாலும்... தமக்கான தேவைக்கு பயன்படுத்தவே முனைவார்கள். உலகில் எல்லா புதிய தேசங்களின் பிறப்புகளின் பின்னாடியும்.. இப்படி ஒரு கதை இருக்கவே செய்கிறது.

இதில்... தமிழர்கள் செய்ய வேண்டியது... சொறீலங்கா சிங்கள இனவாத ஆட்சியாளர்கள்.. இன்னும் இன்னும் சீனச்சார்ப்பு நிலைப்பாட்டை நோக்கி நகர்வதை வெளிப்படுத்திக் காட்டுவதில் தான் இருக்கிறது. அதேபோல்.... தமிழர்கள் வெறுமனவே ஹிந்திய சார்ப்பு நிலை எடுப்பது எப்படி சிங்களம் சீனச் சார்ப்பு நிலைப்பாடு எடுத்து சிக்கலை சந்திக்கிறதோ.. அதையே தமிழர்களுக்கு ஏற்படுத்தும். மீண்டும் தமிழர்களை பேரழிவுக்குள் ஹிந்தியம் தள்ளும்.

தமிழர்கள் செய்ய வேண்டியது மேற்குலக நலன் சார்ந்து.. ஹிந்தியாவை மேற்குலகின் தேவைப்பாட்டுக்குள் நிறுத்தி மேற்குலகின் நலன் சார்ந்து ஹிந்திய நலனை நேர்கோட்டில் கொண்டு வரத்தக்க நகர்வு தான். சீன இந்து - பசுபிக் பிராந்திய ஆக்கிரமிப்பு அல்லது விரிவாக்கம்.. என்பது.. நிச்சயம் மேற்குலகிற்கு நிம்மதியான ஒன்றல்ல. அது ஹிந்தியாவுக்கும் நிம்மதியான ஒன்றல்ல. எனவே சிங்களம் இன்று எடுத்துள்ள கடும் சீனச் சார்ப்பு போக்கை தமிழர்கள் தமக்கு ஆதாயமாகப் பாவிக்கத் தவறின்.. மீண்டும் வாய்ப்புக்கள் இழக்கப்படுமே தவிர வெற்றிக்கு வழியில்லை.

மேற்குலகின் தேவைப்பாட்டுக்குள் தமிழர்களின் பூகோள அரசியல் வெற்றி சாத்தியப்படுமா என்று சிந்திக்க வேண்டிய நேரமிது.

வெறும் யுரியுப் பார்வைகளை கூட்ட காணொளியிடுபவர்களின் நிலையில் நின்று இதனை நோக்க முடியாது. சமகாலத் தேவைப்பாடுகளில் இருந்து எமக்கான சாத்தியத்தை உருவாக்கிக் கொள்ளனும்.

புலிகள் போர் இராஜதந்திரம் சார்ந்து சில தவறுகளை விட்டிருந்தாலும்.. புலிகளின் மேற்குலக சார்பு நகர்வானது.. தமிழர்களின் நீண்ட கால தேவைகளுக்கு ஒரு நல்ல படிக்கல் என்றே சொல்லலாம். 

கடந்த சில தசாப்தங்களில் பிறந்த புதிய தேசங்கள் மேற்குலக தேவைகளை ஒட்டிப் பிறந்தவையே அன்றி சீனச் சார்ப்பு.. எடுத்து எவையும் பிறந்ததாகத் தெரியவில்லை.. வியட்நாம் போருக்குப் பின்னர் சீன சோசலிசம்.. புதிய தேசங்களை உருவாக்க உதவியதை விட.. அந்தப் போராட்டங்களை நசுக்க விளைந்த அதிகார சக்திகளுக்கு உதவி அவர்களை கடன்வலையில் மாட்டி.. அவர்களை தனது கைக்குள் போட்டது தான் அதிகம். அதனால்.. அந்த அதிகார மையங்கள் மேற்குலகால் சரித்து வீழ்ந்தப்பட்டதே நடந்து.

அது சேர்பியா தொடங்கி.. லிபியா வரை நடந்தது ஒன்று தான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

 வணக்கம் விசுகர்!  அந்த புலம்பல்களை பலர் நீண்ட காலமாக கவனிக்காமல் விட்டு விட்டனர் என்பதை நீங்கள் கவனிக்கவில்லை என்பதை மிக மன வருத்தத்தோடு அறியத்தருகின்றேன்.😁

எப்ப பார்த்தாலும்

எங்கப்பன் கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும்  பொறுப்பில்லாமல் உதறி தள்ளி காலத்தை கடத்தி விட்டான்

காலத்தை கடத்தி விட்டான் என்று புலம்பியபடி...

அடுத்த  கட்டம்

அடுத்த வேலைத்திட்டம்

எதையுமே கதைக்க முடியாது

கூடாது

வந்திடுவார் *********....

எங்கப்பன் கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும்  பொறுப்பில்லாமல் உதறி தள்ளி காலத்தை கடத்தி விட்டான்

காலத்தை கடத்தி விட்டான் என்று புலம்பியபடி.

கொலை வெறியில  இருக்கிறன்  சொல்லிப்போட்டன்😡

Edited by நிழலி
நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, விசுகு said:

இங்கே இவரது புலம்பல்களை எவரும் கவனிப்பதில்லையா அல்லது ******** என்று விலகி போகிறார்களா???

ஒவ்வொரு யாழ் உறுப்பினரும் தமிழர் நிலை பற்றிய தங்கள் அக்கறையை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். நாம் எடுக்காத நடவடிக்கைகள் பற்றி ருல்பென் நினைவூட்டுவது அவருடைய வழி - இதை ***** என்று சொல்வது சரியாகப் படவில்லை!

குழுவாதம் குறித்த முன்னெச்சரிக்கை காரணமாக நான் ருல்பெனுக்கு பச்சை போடவில்லை - ஆனால் அவரது கருத்து உங்களுடையதைப் போலவே கவனத்திற்குரியது!

Edited by நிழலி
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து திருத்தப்பட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

நீக்கப்பட்டது

நான் மேற்கோள் காட்டியதை மொட்டையாக நீக்கப்பட்டதாம்.

Quote

மேற்கோள் காட்டப்பட்ட கருத்து திருத்தப்பட்டது

ஜஸ்ரின் எழுதியதை நீக்கிவிட்டு மேற்கோள் காட்டியதை நீக்கப்பட்டதாம். 

நிழலியில் சமத்துவ உலகம். 🤣

நிழலியின் சமத்துவ உலகம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

குணா விளக்க முதல் நான் முந்திரிக் கொட்டை மாதிரி முந்த விரும்பவில்லை!😎

ஆனால் ஒரு விடயத்தை மட்டும் இங்கே வாழும் ஒருவர் என்ற வகையில் சொல்ல விரும்புகிறேன்: பிரேரணை என்பது சட்ட வலுவற்றது. ஆனால், ஒரு பிரேரணை கூட பிரதிநிதிகள் சபையூடாக வாக்கெடுப்பிற்கு விடப் படும் வாய்ப்புகள் மிகவும் அரிது - இதனால் தான் அந்த 2019 பிரேரணையே அறிமுக நிலையைத் தாண்டவில்லை!

காரணம் என்ன? இந்த மக்கள் பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) இருக்கும் 435 பேருக்கும், இலங்கையில் இருக்கும் பா.உ க்களுக்கும் செயற்பாட்டளவில் பெரிய வித்தியாசமில்லை. இந்தப் பிரதிநிதிகளை அவர்களின் உதவியாளர்கள் இல்லாமல் தனியே மடக்கி இலங்கையை உலக வரை படத்தில் காட்டும் படி கேட்டால் அரை வாசிப் பேருக்கு மேல் தெரியாமல் தடுமாறுவர் -அவ்வளவு தான் பெரும்பாலான பிரதிநிதிகளின் பொது அறிவு, சராசரி அமெரிக்கனை விடக் குறைவு.

இந்த நிலையினால் உள்ளூர் பிரச்சினைகளையே தீர்க்க முடியாமல் பெரும்பாலானோர் கட்சி அரசியல் மட்டும் செய்து சம்பளம் கிம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் பிரச்சினை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!

குணா சொல்லமுதலே சொல்வதற்கு என்னையும் மன்னிக்கவும். 

எனது புரிதல் யூகே பாராளுமன்றை பற்றியே ஆனால் அடிப்படைகளில் பெரிய மாற்றம் இராது என நினைக்கிறேன்.

சட்டமூலத்துக்கும், பிரேரணைக்கும் வேறுபாடு உள்ளது. 

சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேறினால் -அது சட்டம் - அதை அரசு கடைப்பிடிக்க வேண்டும்.

பிரேரணைகள் - கடப்பாடு உடையனவாயும் (binding effect), கடப்பாடு அற்றனவாயும் அமையலாம் (non binding). 

முதலாவதை அரசு புறம்தள்ளலாம். இரெண்டாவதை அரசு புறம்தள்ள முடியாது.

இப்படித்தான் அமெரிக்க காங்கிரசிலுமா?

ஆம் எனில் இது binding resolution ஆ? Non binding resolution ஆ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

 கிடைத்த எல்லா சந்தர்ப்பத்தையும்  பொறுப்பில்லாமல் உதறி தள்ளி காலத்தை கடத்தி விட்டு அடுத்தவன் தீர்மானம் போடுவான் என்று காலம் முழுவதும் காத்திருக்க வேண்டியது தான். 

குழு மோதலாக மாறக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக கடந்த காலத்தை பற்றி இங்கே எழுதாமல் போகிறேன்.

ஆனால் இனி என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்க கூடிய நிலையில் நாம் இல்லாவிடிலும் ஒரு மாற்றம் நிகழும் போது அதை எமக்கு சார்பாக பயன்படுத்தவாவது நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

கடற்கரையில் surfing செய்யும் போது - அலையடிப்பை நாம் கட்டுப்படுத்த முடியாது ஆனால் அலைவரும் போது surfboard ஐ சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான கோணத்தில் வைத்தால் we can ride the wave. 

4 hours ago, goshan_che said:

ஆனால் இனி என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்க கூடிய நிலையில் நாம் இல்லாவிடிலும் ஒரு மாற்றம் நிகழும் போது அதை எமக்கு சார்பாக பயன்படுத்தவாவது நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ஒரு மாற்றம் நிகழும் போது அதை எமக்கு சார்பாக பயன்படுத்தும் நிலையில் நாம் இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளுகிறேன். அதுவே சரியான நடைமுறையாக இருக்கும் 

ஆனால் அதை பயன்படுத்தும் நிலைக்கு எம்மை தயாராக்க எம்மில்  பல மாற்றங்களை நடைமுறை சாத்திய தன்மைகளை  ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா? 

அவ்வாறான மாற்றங்களை உள்வாங்குவோர் தமிழ்  சூழலில் அரசியல்ஊ செய்வோரால் ஊக்குவிக்கப்படுகின்றனரா? 

அவ்வாறான மாற்றங்களை உள்வாங்கும் மனநிலையில் எமது அரசியல் முன்னெடுக்கப்படுகிறதா? இங்கு யாழில் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் 90 வீதமானவை பழைய தோற்றுப்போன அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் தொடர்சசிதானே!  

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

ஆம்,

இல்லை,

இல்லை,

நான் எனது மனதுக்கு பட்டதை சொல்கிறேன். உங்களுக்கும் எனக்கும் மட்டும் அல்ல - அந்த 90% மானவர்களுக்கும் பிழைகள் எவை, அவை விட்ட இடங்கள் என்ன என்பது தெரியும்.

நாம் சிலதை நினைவூட்டுவதாக நினைத்து சொல்லலாம். ஆனால் அதுவே அவர்களுக்கு குத்தி காட்டுவதாயும் அமையலாம்.

இன்னுமொன்று - நாம் யாரும் புலிகள் எடுத்தது போல பெரிய முடிவுகளை எடுக்கபோவதில்லை. சம் சும் உட்பட நாம் எல்லோரும். 

எமது களம், யதார்த்தம், சவால்கள் எல்லாமே வேறு.

ஆகவே அவர்களிடத்தில் இருந்து ஓரளவுக்கு மேல் இப்போதைய சூழலை கையாள்தல் பற்றி பாடம் படிக்கவும் முடியாது.

ஆகவே முன்னோக்கி பார்ப்பது வினைத்திறனாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

தமிழர்கள் செய்ய வேண்டியது மேற்குலக நலன் சார்ந்து.. ஹிந்தியாவை மேற்குலகின் தேவைப்பாட்டுக்குள் நிறுத்தி மேற்குலகின் நலன் சார்ந்து ஹிந்திய நலனை நேர்கோட்டில் கொண்டு வரத்தக்க நகர்வு தான்.

அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றி ஏதாவது செய்யும் என்று நம்புகிறார்கள் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றி ஏதாவது செய்யும் என்று நம்புகிறார்கள் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்.

அமெரிக்கா எங்கும் தன்னிச்சையாகச் செய்யாது. அதற்கு சாதகமான சூழல் உருவாகும் வாய்ப்பிருந்தால் செய்யும். அது குறித்து தான் சிந்திக்கனும். மேலும்.. அமெரிக்காவை.. மட்டுமோ.. ஹிந்தியாவை மட்டுமோ கருத வேண்டும் என்றில்லை. ஒட்டுமொத்த மேற்குலகின் நலனில்..இலங்கைத் தீவில்.. எமது நிலத்தின் இனத்தின்.. இருப்பும் தாக்கமும் குறித்து சிந்திக்கனும். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.