Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஜேர்மனி என்றதும் சிங்கம் குதிச்சு என்றி ஆகுது  ஏன் சிங்கள் சாந்தி அக்கா குறிப்பிட்ட சஞ்சிகைகள் , எழுத்தாளர்கள் புலிகளுக்கும் , தலைவர்களுக்கும் இப்பவரைக்கும் அங்கிருந்து எழுதுகிறார்கள் இதற்கு நீங்கள் ஏதேனும் இடத்தில் எதிப்புக்கு கையை தூக்கி இருக்றீர்களா??

இப்படி பல நாடுகளிலும் இருந்தும் எழுதி இலங்கைக்கே பார்சல் பண்ணுகிறார்கள் அதை முகநூலில் பலர் காவிக்கொண்டே திரிகிறார்கள்  இதெல்லம் படித்து கடக்கிறார்கள் பதில் ஏதும் சொல்லாமல் .

எனக்கென்னமோ கொல்லன் பழுத்த இரும்பை கண்டால் எதையோ  ஆட்டி ஆட்டி அடிப்பது போல த்தான்  இருக்கு 

இதிலை யார் கொல்லன்? யார் பழுத்த இரும்பு? :cool:

  • Replies 101
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

இதிலை யார் கொல்லன்? யார் பழுத்த இரும்பு? :cool:

அத்தோட கொல்லன் எதையோ தூக்கி அடிப்பார் எண்டு எழுதி இருக்கிறார். சம்மட்டியைதானே கொல்லர் பாவிப்பார்கள்?🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, goshan_che said:

அத்தோட கொல்லன் எதையோ தூக்கி அடிப்பார் எண்டு எழுதி இருக்கிறார். சம்மட்டியைதானே கொல்லர் பாவிப்பார்கள்?🤣

நாம் தமிழர் கட்சியை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய இனத்தின் தனிப்பெரும்தலைவன்  மேதகு பிரபாகரன் அவர்களையும்  விடுதலைப்புலிகளையும் கொச்சைப் படுத்துவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
அண்மைக்காலமாக நாம்தமிழர்கட்சியை அடிப்பதாக நினைத்துக்கொண்டு நமது ஈழப்போராட்டங்களை காயப்படுத்தியும் கொச்சைப்படுத்தியும் கொண்டிருக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

மிக மோசமாக. 

ஆனால் இது ஒன்றும் தற்செயலானது அல்ல. 

நீண்ட கால நோக்கற்ற உடனடி உணர்சியால் உந்த பட்ட செயல்களும் அல்ல.

இதன் பின்னால் தமிழ்நாட்டில் தலைவரையும், போராட்டத்தையும், முழு ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரிக்கும் திட்டம் உள்ளது.

இந்த மோதலின் இரெண்டு தரப்புமே அந்த சதியாளர்களால்தான் வழிநடத்தப்படுகிறார்கள்.

இந்த நிலை வரும் என நான் முன்பே எழுதியுள்ளேன். 

பிகு|| 

நான் மேலே எழுதிய கொல்லன் கமெண்டுக்கும் இதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இந்த மோதலின் இரெண்டு தரப்புமே அந்த சதியாளர்களால்தான் வழிநடத்தப்படுகிறார்கள்.

இந்த நிலை வரும் என நான் முன்பே எழுதியுள்ளேன். 

சீமானுக்காக திமுகவை தாக்கும் ஈழ தமிழர்கள் யாரால் வழிநடத்தபடுகிறார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமானுக்காக திமுகவை தாக்கும் ஈழ தமிழர்கள் யாரால் வழிநடத்தபடுகிறார்கள்?

1. இதில் அநேகம் பேரை உளவு அமைப்புகள் வழிநடத்த வேண்டிய தேவை இல்லை. மிக சிலரே நேரடியாக உளவு அமைப்புகளால் வழிநடத்த படுகிறார்கள் (இரெண்டு பக்கமும்). மிகுதி எல்லாம் - தொடர் சங்கிலியாக. நீ என் தலைவனை அடித்தால், நான் உன் தலைவனை அடிப்பேன் என்ற ரீதியில் களத்தில் தன்னிச்சையாக இறங்கி ஆடுவார்கள். ஒருவகை டொமினோ எபெக்ட்.  

2. எல்லா ஈழத்தமிழரும் சீமானுக்காக இல்லை. சீமானை எதிர்த்த, எதிர்க்கும் பலரும் தலைவருக்காக, இயக்கத்துக்காக இறங்குகிறார்கள். சீமான் ஆதரவாளரும் கூடவே. இவர்கள் யாராலும் வழிநடத்த படவில்லை. இவர்கள் இயற்கையான தற்காப்பு, மான உணர்வு, இவற்றால் உந்த படுகிறார்கள்.

நடந்ததது இதுதான்

1. தி மு கவின் இறந்த தலைவர்களை குறிவைத்து நாதகவின் தொடர் சீண்டல் ( இது இயக்கப்பட்டது).

2. 👆🏼இதை எதிர்கொள்ள சீமானை எதிர்த்து பலனில்லை, புலிகள், தலைவர் மீதான நற்பெயரை கெடுக்க வேண்டும் என்று திமுக முடிவு எடுக்கிறது, அல்லது இந்த முடிவுக்கு தள்ளப்படுகிறது (இதுவும் இயக்கப்பட்டது).

3. கருணாநிதி பிறந்த தினமன்று அவரை தம்பிகள் கொச்சை படுத்துவது வழமை. இதை எதிர்பார்த்து, எதிர் தாக்குதல் திட்டமிடப்படுள்ளது. பேமிலி மான் ரிலீஸ்,   ஒருக்கிணைக்கபட்ட்ட டிவிட்டர் தாக்குதல்கள் இருபுறமும் தொடக்கி வைக்கப்பட்டது.

4. மிச்சம் மேலே கூறியது போல் டொமினோ எபெக்ட். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

 "நில தமிழ்ச்சங்கம் ஊடாக தாயக மக்களுக்கு முதல் பகுதி உதவியை அனுப்பி விட்டு, தற்போது இரண்டாம் கட்டம் அனுப்ப தயார்படுத்திக் கொண்டே இதை எழுதுகிறேன் - எனவே என்னைத் திட்டாதீர்கள்!)  

உங்களைப் போல நேசக்கரமும் ஒருகட்ட உதவியை வழங்கியிருக்கிறது. அடுத்த கட்டமாக நேற்று முன்தினம் குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. 

படங்கள் எடுக்கவில்லை. எங்களால் முடிந்தளவு செய்யப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 சாந்தி அக்கா! கண்டவன் கிண்டவன் கதைக்கிறதை எல்லாம் சாட்சி வீடியோவாய் போட வெளிக்கிட்டியள் எண்டால் எல்லாம் நாறும்.பதிலுக்கு என்னிடமும் காணொளிகள் பல கைவசம் இருக்கு. வேண்டாம் உந்த விளையாட்டு. யாருக்குமே அழகில்லை. எல்லோரும் யாழ்கள நலன் கருதி/தமிழின நலன் கருதி அடக்கி வாசிப்போம். 😁

தம்பிகுமாரசாமி இது கருத்துக்களம். அனைவருக்கும் கருத்துரிமை இருக்கிறது. அதை நீங்கள் எந்த வீடியோவையும் போட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 

நீ வீடியோ போட்டால் நானும் போடுவேன் போடவா என உங்களை விளையாட்டு அரங்கம் போகச் சொல்லி சொல்லமாட்டேன்.

இங்கே நான் இணைத்துள்ள வீடியோ கண்டவன் நிண்டவன் வீடியோ ஆனால் இந்த செய்தியோடு தொடர்புபட்ட வீடியோ.

உங்கள் வீடியோ ஆதாரங்களை உங்கள் உரிமையை நீங்கள் தாராளமாக பயன்படுத்துங்கள். அது உங்கள் உரிமை.👍

  • கருத்துக்கள உறவுகள்

சாட்டையின் கைதின் பின் பிளவடைந்திருந்த (கல்யாண், ராஜீவ் விலகல்) நாம் தமிழர் தம்பிகள் ஒண்ணாயிட்டாங்களாம்! இதனை ஒருங்கிணைப்பாளரும் அவருக்கு நெருக்கமானோரும் விரும்பலயாம்!

Edited by ஏராளன்
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எளிமையான கேள்வி..

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மக்கள்  தான் நாடார்கள் என்று அழைக்கப்படுகிறார்களா? - Quora

2009 இல் பெரும் தமிழின அழிப்பு யுத்தத்தை சிங்களத்திடன் கூட்டிணைந்து முடித்ததும்.. தி மு க தனது தூதுக்குழுவை அனுப்பி.. ராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்தியது. அப்போது சொல்லப்பட்டது இந்த விஜயம்.. தமிழ் மக்களின் சுகத்தை விசாரிக்க என்று.

கேள்வி.. இந்த தூதுக்குழு.. 2009 க்குப் பின்.. 2021 வரை எத்தனை தடவைகள்.. ஈழத்துக்கு வந்து தமிழ் மக்களின் சுகத்தை விசாரித்துள்ளது..??!

கருணாநிதிக்கு முள்ளுத்தண்டுப் பிரச்சனை என்றால்.. கனிமொழிக்கு என்ன நீண்ட நாரிப்பிடிப்பா..???!

மொத்தத்தில்.. ஈழ இனப்படுகொலையின் கூட்டுப்பங்காளி தி மு க தனது கூட்டாளி காங்கிரஸின் நேரடிக் கைப்பாவையாக.. இன்றும்.. தமிழகத்தில் குடும்ப ஆட்சியே இவர்கள் முதன்மை நோக்கம். அதற்காக ஈழத்தை மட்டுமல்ல.. தமிழகத்தையும் சுடுகாடாக்குவார்கள்.

எனவே.. தி மு க - காங்கிரஸ் - பி ஜே பி இவை.. தமிழகத்தில் இருப்பது தமிழர்களுக்கு என்றுமே ஆபத்து தான். 

எழுவர் விடுதலையை நிச்சயம் தி மு க சாத்தியமாக்காது.  அது பேசுபொருளாகவே இருக்கும். அதி மு க செய்ததை ஒட்டி.. எழுவரையும் பகுதி நேரமாக வீட்டுக்கு வந்து போக செய்வார்கள். மற்றும் படி எழுவர் விடுதலை தி மு கவிற்கான தமிழர் அக்கறை என்ற போலி முகத்திரைக்கு பாவிக்கப்படும்.. ஒரு விடயமாக மட்டுமே இருக்கும். 

தமிழகத்தில் இருக்கும் சீமான் கூட தி மு க ஆட்சியில் நெகிழ்ச்சியை காணலாம்.. ஆனால் நிச்சயம்.. உண்மையான.. ஈழத்தமிழன் காணமாட்டான். 

Edited by nedukkalapoovan

1 hour ago, nedukkalapoovan said:

தமிழகத்தில் இருக்கும் சீமான் கூட தி மு க ஆட்சியில் நெகிழ்ச்சியை காணலாம்.. ஆனால் நிச்சயம்.. உண்மையான.. ஈழத்தமிழன் காணமாட்டான்.

அப்படி நெகிழ்சசியை  காணவேண்டிய தேவையும் இல்லை. அது  தமிழக மக்களின் வேலை. ஈழத்தமிழர் வாழ்வது இலங்கை தீவில். ஆகவே தமது புத்தி கூர்மையை பயன்படுத்தி இலங்கைத்தீவில் தமக்கான உரிமைகளை பெறுவதிலேயே ஈழத்தமிழர் தமது நெகிழச்சியை காண முடியும்.என்ன வகைத் தீர்வு  வந்தாலும் எமது அடுத்த தலைமுறை வாழப்போவது சிங்களதுடன் தானே தவிர தமிழகத்துடன் அல்ல. 

மற்றப்படி தமிழகத்திற்கு சுற்றுலா போகலாம். தமிழக திரைப்படங்களை பார்தது ரசிக்கலாம். சினிமா பாடல்களை கேட்டு மகிழலாம். அங்குள்ள எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசிக்கலாம். அங்குள்ள அரசியலை பார்தது ரசித்து பொழுது போக்கலாம். அங்குள்ள காமடியர்களின் காமடிகளை ரசிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

உங்களின் சிந்தனை சுருக்கம் என்பதை இக்கருத்தினூடாக மட்டுமன்றி பல கருத்துக்களின் ஊடாக விளங்கிக் கொண்டுள்ளேன்.

உங்களின் சிந்தனையில் உங்களைப் போன்ற சிலரைத் தவிர வேறு யாருமே இருக்க முடியாது.

கடந்த ஆண்டில்.. நீங்கள் வாழும் சுவிஸ் நாட்டுக்கு வந்திருந்தேன். அங்கே பேரூந்து ஓட்டுனர் சொன்ன நேரத்துக்கு சொன்ன இடத்துக்கு வரத்தவறியதால்.. ஒரு வெள்ளைப் பெண்மணி.. கறுப்பின ஓட்டினரை கேள்வி கேட்டார். அவரும் விளக்கம் சொன்னார். எனி நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்றும் சொன்னார். சுமூகமாக போய்விட்டார்கள். ஏனைய பயணிகளுக்கும்.. பயண நேரங்களுக்கும் இடைஞ்சல் இன்றி முடிந்தது அந்தச் சம்பாசணை.

அடுத்த தலைமுறை ஈழத்தில்.. சிங்களவனோடு வாழனுமா.. இல்லையா என்பதை அந்த தலைமுறையும் சிங்களவனும் தீர்மானிக்கட்டும். கடந்த காலத்தை எல்லா தலைமுறைக்கும் சொல்லி வைக்க வேண்டியது நமது கடமை. ஏனெனில்.. இன்னும் இன்னும் இனக்கலவரங்களையும் இன அழிப்புக்களையும் தாங்கும் சக்தி அடுத்த தலைமுறையிடம் இருக்காது. அதற்கான பொறுமையும் அவர்களிடம் இல்லை.

மேலும்.. அந்த ஓட்டுனர் அந்த ஒரு பயணியை மட்டும் சிந்தித்திருந்தால்.. கேள்வி கேட்ட பயணிக்காக நேரம் செலவழிப்பதையும் பதில் சொல்வதையுமே வேலையாகக் கொண்டிருப்பார். சக பயணிகளையும் பற்றி சிந்தித்ததால்.. தன் தொழிலை திறம்பட செய்ய முடிவு செய்தார்.

அதேபோல்.. தமிழகம் நாம் தமிழராக ஒருங்கிணைந்து இந்த பூகோளப் பந்தில்.. பயணிக்கும் தமிழர் பேரூந்தின் முக்கிய பயணி. அதனை புறக்கணித்து பயணம் செய்ய முடியாது. செய்யவும் கூடாது.

மேலும்.. பயணித்தின் போது திரையில் காட்சிகளை காணலாம்.. யன்னல் வழி.. இயற்கையை ரசிக்கலாம்.. ஆனால்.. போகுமிடத்தை மறக்க கூடாது. அது போலத்தான்.. தமிழகத்தில் இருந்தான சேவைகள்.. உற்பத்திகளை ஈழம் ரசிக்கலாம்.. சுவைக்கலாம்.. அதற்காக ஈழத்தமிழனின் இலட்சியத்தை மறக்கக் கூடாது.

நாம்... யாரோடு கூடி வாழ்வது என்பதை நாம் தான் தீர்மானிக்கனும்.. அடுத்தவனோ.. அவனது ஆக்கிரமிப்போ அல்ல. 

Edited by nedukkalapoovan

1 hour ago, tulpen said:

அப்படி நெகிழ்சசியை  காணவேண்டிய தேவையும் இல்லை. அது  தமிழக மக்களின் வேலை. ஈழத்தமிழர் வாழ்வது இலங்கை தீவில். ஆகவே தமது புத்தி கூர்மையை பயன்படுத்தி இலங்கைத்தீவில் தமக்கான உரிமைகளை பெறுவதிலேயே ஈழத்தமிழர் தமது நெகிழச்சியை காண முடியும்.என்ன வகைத் தீர்வு  வந்தாலும் எமது அடுத்த தலைமுறை வாழப்போவது சிங்களதுடன் தானே தவிர தமிழகத்துடன் அல்ல. 

மற்றப்படி தமிழகத்திற்கு சுற்றுலா போகலாம். தமிழக திரைப்படங்களை பார்தது ரசிக்கலாம். சினிமா பாடல்களை கேட்டு மகிழலாம். அங்குள்ள எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசிக்கலாம். அங்குள்ள அரசியலை பார்தது ரசித்து பொழுது போக்கலாம். அங்குள்ள காமடியர்களின் காமடிகளை ரசிக்கலாம். 

ஈழத்தமிழர் வாழ்வது இலங்கை தீவில். ஆகவே தமது புத்தி கூர்மையை பயன்படுத்தி இலங்கைத்தீவில் தமக்கான உரிமைகளை பெறுவதிலேயே ஈழத்தமிழர் தமது நெகிழச்சியை காண முடியும்.

அப்படி வாழ்ந்தவர்களை இப்பவும் மாற்று இயக்கத்தினர் இந்திய உடன் இணக்கம் மாக போக வேண்டும் என்று ஏன் இப்பவும் குத்தி முறியினம். 

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் மறைவின் பின்னர் நமக்கு சார்பாயிருந்த அத்தனை தமிழக எழுச்சியும் மொத்தமாய் படுத்துக்கொண்டது.

அதனை மீள கட்டமைக்க புலிகளும் தமிழக எம் போராட்ட ஆதரவாளர்களும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல,  ஒரு 50% கூட கடைசிவரை மீட்க முடியாமல் போன நிலையிலேயே எம் போராட்ட சக்தியும் எமது உரிமை போரும் முற்று பெற்றது.

ஒரு பேச்சுக்கு இன்று எமது போராட்ட அமைப்பும் அதன் தலைமையும் இருந்து இருந்தால் தமிழகத்தில் புலிகளுக்கும் அதன் தலைவருக்கும்  எதிராய் கருத்து சொல்பவர்களை மிரட்ட அடிக்க உதைக்க அச்சுறுத்தல் விடுக்க அனுமதி வழங்கியிருக்குமா?

அல்லது அந்த செயலை ஆதரித்திருக்குமா? 

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் தலைவரை பற்றிதான் நான் பேசினேன் என்று அந்த பதிவை இட்டவன் நீதி மன்றில் சொன்னால் எம் பக்கம் ஏதாவது ஒரு சட்டத்தின் பிரிவு துணை நிற்குமா? 

இதுமாதிரியான செயல்கள் தமிழகத்தில் புலிகள்மீதான அபிமானத்தை அதிகரிக்குமா அல்லது அங்குள்ளவர்களை மேலும் மேலும் ஆத்திரபட வைக்குமா? 

புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் செய்யும் சிறு பிள்ளைதனம் டக்ளஸ் தேவானந்தா ரகம்.

வெறும் உணர்ச்சிகளும் கொந்தளிப்புகளும் கேலிக்குரியவை , செயல்கள்  மட்டுமே நம்மை தூக்கி நிறுத்தும் என்று கடைசிவரை அதுபோலவே வாழ்ந்து மறைந்த எம் போராட்ட அமைப்பையும் அதன் தலைவரையும் வைத்து, இப்போது இவர்கள் செய்யும் பொறுப்பற்ற செயல் யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்ட  அப்பட்டமான இந்திய சினிமா வில்லதனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

👆🏼#ரத்தினச்சுருக்கம்👌

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

இதில் நிறைய கற்பனை தான் இருக்குது.

1987 இலேயே புலிகளை ஒழித்துக்கட்ட தீர்மானிச்சாச்சு. தலைவரை குறிவைத்து ஹிந்தியப் படை ராஜீவின் தலைமையில் நடவடிக்கையையும் எடுத்துவிட்டது. அன்று தலைவர் மயிரிழையில் உயிர் தப்பினார். 

இது வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரிந்த விடயம். ஆக ராஜீவ் காந்தியின் மரணம் என்பது புலிகளின் அழிப்புக்கு காரணமல்ல. அதற்கான காரணங்களை ஏலவே ஹிந்தியா நிறுவித்தான் காத்திருந்தது. ராஜீவ் கொலை என்பது அதற்கு இன்னும் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. அதற்கு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகளும் தமது ஆட்சி அதிகார ஆசையின் பால் இசைந்து கொடுத்தன.

இந்திரா காந்தி கொலையோடு.. எப்படி சீக்கியர்களின் காலிஸ்தான் விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டதோடு அதே பாணியில் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க ராஜீவ் கொலைக்கு முன்னரே திட்டம் தீட்டியாயிற்கு. குறிப்பாக ஈழக்களத்தில் புலிகளின் கை ஓங்க ஆரம்பித்த போதே.. ஹிந்திய உளவுத்துறையும் மத்திய கொள்கை வகுப்பாளர்களும்.. ஒரு குழப்பமான முடிவுகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் விளைவு இன்று சொறீலங்காவை சீனா ஆக்கிரமித்து நிற்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

அன்று அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து ஜே ஆர் அரசுக்கு எதிராக இந்திரா காந்தி அம்மையார் ஈழப்போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக ஆதரித்து நின்ற நிலையில்.. ராஜீவ் காந்தியின் இராஜதந்திரமற்ற அணுகுமுறையால்.. ஈழப்போராட்டம் ஹிந்திய எதிர்ப்புப் போராட்டமாகியது. இதன் நுட்பமான அரசியலை விளங்கிக் கொள்ளும் நிலை தமிழகத்தில் இருக்கவில்லை. அதற்கு அங்கு ஆட்சியில் இருந்த திராவிட ஆட்சிகளும்.. எம் ஜி ஆரின் திடீர் மறைவும் முக்கிய  காரணங்களாகும்.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு.. ராஜீவின் படைகள் ஈழத்தில் நடத்திய இனப்படுகொலைகள் தொடர்பில்.. போர்க்குற்றங்கள் தொடர்பில் யாரும் மூச்சும் விடுவதில்லை. ஹிந்திய படைகளை 1990 களில் வரவேற்க மறுத்த கருணாநிதி கூட பின்னர் அவை பற்றி மூச்சே விடுவதில்லை. இவை எல்லாம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டன.. காரணம்.. எதை முதன்மை படுத்தினால்.. ஹிந்தியாவின் அராஜக வலையத்துக்குள் ஈழத்தை வைக்கலாம்.. சிங்கள ஆதரவை கட்டி வளர்க்கலாம் என்று நாயர்களும்.. அம்பிகளும்.. நம்பிகளும் மத்திக்கு ஆலோசனை வழங்கும் நிலைக்கு வந்துவிட்டனர்.

இன்று வடக்கில் இருந்து தெற்கு வரை சீன ஆதிக்கத்தால் சூழப்பட்டுள்ளது... ஹிந்தியா. சீன ரகன்களின் சுடு வலயத்துக்குள் மொத்த ஹிந்தியாவும் வந்துவிட்டது. இந்த நிலையில்.. சீனாவின் அடுத்த நகர்வு என்ன என்பது தான் இன்றைய கேள்வி..??! எனி புலிகளும் இல்லை.. ஈழத்தமிழர்கள் ஹிந்தியாவை நம்பும் நிலையும் இல்லை.

ஆனால்.. தமிழகத்தில் இருந்தான தார்மீக ஆதரவு என்பது ஈழத்தமிழருக்கு எப்போதும் அவசியம்.. அதற்கான சார்ப்புக் குரல்கள் ஒலிக்க எந்த தடையும் இல்லை. ஏலவே சீமானை தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் வழக்கில் கைது செய்தனர்.. வை கோவை கைது செய்தனர்.. தேசிய தலைவர் பிரபாகரனை கொள்கை அளவில் ஆதரிப்பது பயங்கரவாதத்துக்கு ஆதரவான செயல் அல்ல என்பதை நீதிமன்றங்கள் தீர்ப்புக்களில் சொல்லிவிட்டன. அதன் பின்னர் தான் சீமான் வை கோ உட்பட பலரும் தேசிய தலைவரையும்.. புலிகள் இயக்கத்தையும் பகிரங்கமாக ஆதரிக்கத் தொடங்கினர்.

இன்று அது மக்களால் புரியப்பட்டு.. ஈழத்தமிழர்களின் துன்பங்கள் உணரப்பட்டு.. ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு என்பது தமிழகத்தில் 1980 களில் இருந்ததை விட அதிக அளவில் இருக்கென்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

தி மு க காடைகள் சில.. இணையத்தில் செய்யும் கூத்துக்கள் அல்ல.. ஒட்டுமொத்த தமிழகத்தின் குரல். பட்டிதொட்டி எங்கும்.. தேசிய தலைவரை இனங்காட்டும் தமிழக மக்கள்.. ஹிந்திய தலைவர்கள் பலரை இனங்காண முடியாமல் இருப்பதை காண்கிறோம். இப்படியான காணொளிகள் பல உள்ளன.

எனவே.. உங்களுக்கு வசதியாக கற்பனை வாதங்களை வைக்கக் கூடாது. தமிழகத்தில் தலைவரை சீமான் மட்டுமல்ல.. இன்னும் பல கட்சிகளும் முன்னுறுத்தி செயற்படுவதோடு.. ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பில் நாம் தமிழர் மட்டுமல்ல.. இன்னும் பல கட்சிகளும் அமைப்புக்களும் தொடர்ந்து குரல்கொடுத்துத்தான் வருகின்றன.

சீமான் ஏன் இவர்களில் மாறுபட்டிருக்கிறார் என்றால்.. அவர் யாருக்கும் அடிபணியாமல்.. இதுவரை கொள்கைப் பற்றோடு பயணிப்பதால் தான். இதே காரணத்தால் தான் புலிகளையும் ஹிந்திய உளவு அமைப்புக்களும் கொள்கை வகுப்பாளர்களும் வெறுக்க ஆரம்பித்தனர். ஏனெனில்.. புலிகள் தாங்கள் ஆட்டுவிக்க ஆடும் சக்திகள் அல்ல. மாறாக தம்மை பயன்படுத்திக் கொண்டு கொள்கையை உறுதியாக வென்றுவிடுவார்களோ என்ற அச்சம்.

நிச்சம் புலிகளின் ஆயுத பலம் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்.. புலிகள் தமிழ் மக்களுக்காக வரிந்த இலட்சியம் என்றும் அழிக்கப்பட முடியாது. ஏனெனில்.. அதற்கான காரணிகள் இன்னும் பல்கிப் பெருகி வருகின்றனவே தவிர தீர்க்கப்படவில்லை. இதனை இலகுவாக மறந்துவிட்டு.. ஹிந்திய உளவு அமைப்புக்களும்.. கொள்கை வகுப்பாளர்களும் சிங்கள ஆதரவு நிலைப்பாடு எடுக்கப் போய் இன்று ஹிந்தியா சீன ரகனால் சுற்றிவழைக்கப்பட்ட தேசமாகி விட்டது. சுற்றயலில் யாருமே நண்பனல்ல.. என்ற நிலைக்கு ஹிந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஹிந்தியாவின் கொள்கை வகுப்புக்கு கிடைத்த படுதோல்வியாகும். புலிகளை அழித்தது இந்த நிலையை விரைவுபடுத்தி விட்டுள்ளது. 

தி மு க சில்லறைகள் செய்யும் காரியங்கள்.. எனி நிச்சயம்.. மக்களின் கட்டணத்தை உள்வாங்கும். மீண்டும் தி மு க ஈழ ஆதரவு நிலை எடுத்தால் கூட எனி ஆச்சரியப்படத் தேவையில்லை. காரணம்.. ஈழத்து இனப்படுகொலை தொடர்பில் நாம் தமிழர் கட்சி நிறைய விடயங்களை தமிழகத்துக்கு கொண்டு போய் சேர்த்துள்ளது. அந்த வகையில் அந்தக் கட்சிக்கு  என்றும் ஈழத்தமிழர்கள் நாம் நன்றியிடையவர்களே ஆவோம். அதற்காக அவர்கள் கொடுத்த விலையும் அடைந்த துன்பங்களும் அதிகம். 

அண்ணன் முத்துக்குமார் தொடங்கி தங்கை செங்கொடி ஈறாக பலரும் செய்த தியாகங்கள் நிச்சயம் தமிழகத்தில் ஈழத்தமிழரின் உண்மை நிலையை அங்கும் உலகும் அறியச் செய்திருக்கிறது. இன்னும் செய்ய நிறைய உள்ளது.

தமிழ் தேசிய உணர்வூட்டல் மூலமே உலகத்தமிழினத்தை ஒன்றிணைக்க முடியும். அதுவே உலகத் தமிழினத்துக்குப் பலம். அதனை செய்யும் ஒரு சக்தியாக நாம் தமிழரும் சீமானும் தொடர்ந்து கொள்கைப் பற்றோடு செயற்படுவார்கள் என்று நம்புவோம்.

தமிழ் தேசிய உணர்வூட்டல் முலமூம்.. நாம் தமிழர் என்ற உணர்வெழுச்சியின் மூலமுமே.. தமிழர்கள் தமக்கான பலத்தை உலகுணரச் செய்ய முடியும். அதுவே ஈழத்தில் தமிழர்கள் மீட்சிக்கு உள்ள ஒரு சிறிய ஒளிரும் விளக்காக உள்ளது. இத்தனை சிங்கள அந்நிய ஆக்கிரமிப்புக்கள் மத்தியிலும்.

அதையும் எம்மில் சிலர் சிதைக்க நினைப்பது அவர்களின் அறியாமை அல்ல. திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சிக்கு தொடர்ந்து தெரிந்தோ.. கூலிக்கோ.. தெரியாமல் வெற்றுப் புகழ்ச்சிக்கோ உதவுவதாகத்தான் கொள்ளப்பட வேண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

அண்ணன் முத்துக்குமார் தொடங்கி தங்கை செங்கொடி ஈறாக பலரும் செய்த தியாகங்கள் நிச்சயம் தமிழகத்தில் ஈழத்தமிழரின் உண்மை நிலையை அங்கும் உலகும் அறியச் செய்திருக்கிறது. இன்னும் செய்ய நிறைய உள்ளது.

வுவதாகத்தான் கொள்ளப்பட வேண்டும். 

கற்பனை எதுவுமே  இல்லை..

உங்களுக்கு மனசில் பட்டதை சொல்கிறீர்கள்...நானும் அப்படித்தான் என்று எடுத்து கொள்வோம்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

தமிழ் தேசிய உணர்வூட்டல் மூலமே உலகத்தமிழினத்தை ஒன்றிணைக்க முடியும். அதுவே உலகத் தமிழினத்துக்குப் பலம். அதனை செய்யும் ஒரு சக்தியாக நாம் தமிழரும் சீமானும் தொடர்ந்து கொள்கைப் பற்றோடு செயற்படுவார்கள் என்று நம்புவோம்.

உலகத்தமிழனம். அன்றும்.  இன்றும்.  என்றும். தமிழ்ஈழம் என்ற இலக்கில். ஓன்றிணைத்தே இருக்கிறார்கள்.  இருப்பார்கள்   ஆனால்  இதன் மூலம் இலங்கையில். இலங்கைத் தமிழருக்கு  தனிநாடே...அல்லது நிரத்தரத்தீர்வு  கிடைக்கப்போவதில்லை.  மாறாக. சிங்களவன்.  தமிழனைப்பார்த்து  சொல்லவேண்டும். உங்களுடன்  சேர்த்து வாழ முடியாது. பிரிந்து போங்களென்று. 

அப்படியான. நிலையில். எமக்கு. தீர்வு கிடைக்கும்.  உலகநாடுகளிலுள்ள  தமிழர்கள். இலங்கையில்  வாழ விரும்பும். தமிழர்கள்  இலங்கையில் ஒன்று சேரவேண்டும்.  இலங்கைச்சனத்தொகையில். மூன்றில் ஒருபகுதி. தமிழராகவேண்டும்.  பாராளுமன்றிலும்.  நாம் பலம் பெற முடியும். அதே. நேரம். பௌத்தபிக்குகளுக்கான கொடுப்பனவு.   மற்றும் அரசியல். தலையீடு. நிறுத்தப்படவேண்டும். தீர்வு. சாத்தியப்படலாம்.   உலகநாடுகளை நம்பிப்பிரயோசனமில்லை. 

6 hours ago, valavan said:

ஒரு பேச்சுக்கு இன்று எமது போராட்ட அமைப்பும் அதன் தலைமையும் இருந்து இருந்தால் தமிழகத்தில் புலிகளுக்கும் அதன் தலைவருக்கும்  எதிராய் கருத்து சொல்பவர்களை மிரட்ட அடிக்க உதைக்க அச்சுறுத்தல் விடுக்க அனுமதி வழங்கியிருக்குமா? 

நீங்கள் பார்த்தீர்களா அடித்து உதைத்து அச்சுறுத்தல் விடுத்ததை? (சும்மா அளந்து விடுவது எல்லாம் தெரிந்த மாதிரி) 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, appan said:

நீங்கள் பார்த்தீர்களா அடித்து உதைத்து அச்சுறுத்தல் விடுத்ததை? (சும்மா அளந்து விடுவது எல்லாம் தெரிந்த மாதிரி) 

பார்க்கவில்லை.   ஆனாலும். செய்தியும்...படங்களும்....சீமானின். அறிக்கையும்.  உறுதிப்படுத்துகிறது...

35 minutes ago, Kandiah57 said:

பார்க்கவில்லை.   ஆனாலும். செய்தியும்...படங்களும்....சீமானின். அறிக்கையும்.  உறுதிப்படுத்துகிறது...

தயவு செய்து அதை இணைக்க முடியுமா. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, appan said:

தயவு செய்து அதை இணைக்க முடியுமா. 

நான்  விரும்பவில்லை.  இந்தத்திரியை. முதலிருந்து வாசித்து. பார்க்கவும். நன்றி  வணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, valavan said:

ராஜீவ் மறைவின் பின்னர் நமக்கு சார்பாயிருந்த அத்தனை தமிழக எழுச்சியும் மொத்தமாய் படுத்துக்கொண்டது.

அதனை மீள கட்டமைக்க புலிகளும் தமிழக எம் போராட்ட ஆதரவாளர்களும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல,  ஒரு 50% கூட கடைசிவரை மீட்க முடியாமல் போன நிலையிலேயே எம் போராட்ட சக்தியும் எமது உரிமை போரும் முற்று பெற்றது.

தமிழ்நாட்டில் காவல்துறையோடு சம்பந்தப்பட்டவர்களை தவிர்த்து பலர் ராஜீவ்காந்தியின் கொலை  விடுதலைப்புலிகளால் நடத்தப்படவில்லை எனவும் அதற்கு முக்கிய காரணிகள் இந்தியாவிலையே இருக்கின்றார்கள் எனவும் அவர்கள் இன்னும் விசாரிக்கப்படவேயில்லை எனவும் அன்று தொடக்கம் கூறிக்கொண்டே இருக்கின்றார்களே இது பற்றி உங்கள் கருத்து என்ன?

அல்லது விடுதலைப்புலிகள் தான் ராஜீவை கொன்றனர் என சான்றிதழ் கொடுக்கின்றீர்களா?

21 minutes ago, Kandiah57 said:

நான்  விரும்பவில்லை.  இந்தத்திரியை. முதலிருந்து வாசித்து. பார்க்கவும். நன்றி  வணக்கம்

எழுதும் முன் நீங்கள் சரியாக வாசிக்கவும். 

இவர்களை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு.

குற்றம்

இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல். சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, appan said:

இவர்களை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு.

இது. ஒரு. பிழையான செயல்பாடு. அவரைத் தேடிச்சென்றது. பிழை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.