Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்படி இருக்கிறது ஜகமே தந்திரம்.?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருக்கிறது ஜகமே தந்திரம்.?

maxresdefault.jpg

நடிகர்கள்:

தனுஷ்
ஐஸ்வர்யா லட்சுமி
ஜோஜு ஜார்ஜ்
கலையரசன்
ஜேம்ஸ் காஸ்மோஸ்
வடிவுக்கரசி
Advertisement

இயக்கம்- கார்த்திக் சுப்பராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்

பத்த வச்ச நெருப்பு பரபரன்னு பற்றி எரிவது போல படம் ஓடுகிறது.. தொடக்கத்திலிருந்து இறுதி வரை..

வழக்கமான ஒரு டான் கதைதான் போல என்று ஆரம்பக் காட்சிகளில் தோன்றினாலும்.. அதைத் தாண்டி சில ஏரியாக்களை டச் செய்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.. அது இந்தப் படத்தை வித்தியாசப்படுத்த கை கொடுத்துள்ளது. அதை விலக்கி விட்டுப் பார்த்தால் இதுவும் ஒரு சாதாரண டான் கதையாக மாறிப் போயிருக்கும்.

2 டான்கள்.. ஒருவன் நல்ல டான்.. இன்னொருவன் மோசமான டான். பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறும் மக்களை காப்பாற்றி, அவர்களுக்கு அகதி அந்தஸ்து பெற்றுத் தருவது, தொழில் அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட நல்லது செய்யும் டானாக வருகிறார் சிவதாஸ். அதற்கு நேர் எதிராக, அகதிகள் என்றாலே அருவறுப்பாக உணரும் இனவெறியனாக நிற்கும் பீட்டர் இன்னொரு டான்.

சிவதாஸின் செயல்கள் சட்டவிரோத குடியேறிகள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற்றுள்ளதாலும், அவரால் பலருக்கு நல்லது நடப்பதாலும், எரிச்சலடையும் பீட்டர்.. சிவதாஸை தீர்த்துக் கட்ட ஒரு ஆளை களம் இறக்குகிறான். அவன்தான் சுருளி. இவன் ஒரு குட்டி டான்.. மதுரையில். அங்கு ஏற்படும் ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாகும் சுருளிக்கு, லண்டனுக்கு வரும் வாய்ப்பு அமையவே கிளம்பி வருகிறான்.

வந்த இடத்தில் சிவதாஸுடன் நெருக்கமாகிறான்.. ஆனால் பீட்டரிடம் வாங்கிய பணத்துக்காக புத்தியைக் காட்டுகிறான்.. அதாவது துரோகம் செய்கிறான்.. அவனை நம்பிய சிவதாஸ் அவன் உதவியால் கொல்லப்படுகிறார்.. அதற்குப் பிறகு நடக்கும் பல திருப்பங்கள் சுருளியை மாற்றுகின்றன. அதன் பிறகு அவன் என்ன செய்கிறான், கடைசியில் என்ன நடக்கிறது.. இது மீதிக் கதை.. இதை நெட்பிளிக்ஸ் தளத்திற்குப் போய்ப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க.

தனுஷ்.. லட்டு கணக்கான ரோல்.. நன்கு அனுபவித்து பாய்ந்து கதகளி ஆடியுள்ளார். மதுரைக் காட்சிகள் அசத்துகின்றன. சண்டைக் காட்சிகளில் அனல் காட்டுகிறார். ஆனால் பல இடங்களில் ரஜினியை இமிடேட் செய்துள்ளார். அது ஏன் என்று தெரியவில்லை. சிலது ரசிக்க வைக்கிறது.. சிலதை ரசிக்க முடியவில்லை.. காரணம் ரஜினிக்கே உரியவை அவை.. அவரைத் தவிர வேறு யார் செய்தாலும் அது செயற்கையாகவே இருக்கும். ல காட்சிகளில் தனுஷை ரசிக்க முடிகிறது. சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் பல்லைக் காட்டினாலும் அதைத் தாண்டி காட்சியமைப்பில் அதை நிவர்த்தி செய்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.

ஜோஜு ஜார்ஜ்.. .மலையாளத்தில் முக்கிய நடிகராக உருவெடுத்து கலக்கிக் கொண்டிருக்கும் ஜார்ஜ் இப்படத்தில் சிவதாஸாக வருகிறார். அலட்டிக் கொள்ளாத கதாபாத்திரம்.. ஆனால் சீக்கிரமே அவரது கேரக்டருக்கு முடிவு கட்டியிருப்பது ஏமாற்றமாக இருக்கிறது. இன்னும் நிறைய நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால் வந்தவரை அசத்தலாக செய்திருக்கிறார். சாகும்போது அவர் உதிர்க்கும்.. துரோகம்.. நம் இனத்தின் சாபம் என்ற வசனம் உலகத் தமிழர்களின் தலையில் சுத்தியால் அடிப்பது போல இருக்கும்..

ஈழத்தை "டச்" செய்துள்ளனர். ஈழப் போரின் காட்சிகளையும் சித்தரித்துள்ளனர். பெரிய ஆழமில்லை என்ற போதிலும் டச்சிங்காக அந்த காட்சிகள் அமைந்துள்ளன. சிவதாஸ் கொலைக்குப் பிறகு படத்தில் சற்று ஆழம் குறைந்தது போல தெரிகிறது. காட்சிகளை வலிய இழுத்துக் கொண்டு போவது போல தெரிகிறது. சிவதாஸ் இருந்தவரை பீட்டர் - சிவதாஸ் மோதல்.. இதில் நடுவே உதவிக்கு வரும் சுருளி என்ற அளவில் படத்தில் ஒரு பிடிப்பு இருந்தது.

ஆனால் சிவதாஸுக்குப் பிறகு தனது காதலிக்காக வேட்டையைத் தொடங்குகிறான் சுருளி. அதேசமயம், சிவதாஸ் இடத்திலும் அவன் அமர்கிறான். இதில் ஆழம் அதிகமாக இல்லை. காட்சிகள் பல இடங்களில் ஜவ்வாக இழுக்கிறது. இப்போது சுருளிக்கும், பீட்டருக்கும் இடையிலான போராக இது மாறுகிறது. ஒரு படம் முடிந்து, இன்னொரு படம் ஆரம்பிப்பது போல ஒரு பிரமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

பீட்டர் ரோலில் நடித்துள்ள நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ பற்றி கொஞ்சம் பேச வேண்டும்.. லண்டன் தாதா போல செயல்பட்டிருக்க வேண்டிய அவரை தமிழ் தாதா ரேஞ்சுக்கு உலவ விட்டுள்ளனர். அவர் பேசும் வசனமும் கூட அப்படித்தான் இருக்கிறது. என்ன சொல்றேனோ அதை மட்டும் பண்ணனும்.. அதை விட்டுட்டு ஹீரோவாக ஆசைப்பட்டா அவ்வளவுதான் என்று அவர் ஆங்கிலத்தில் சொல்லும்போது அவ் என்று கொட்டாவி விடத் தோன்றுகிறது. வேற மாதிரி அவரை பேச வச்சு அலப்பறையைக் கூட்டியிருக்கலாம். அதை விட அவரை கடைசிக் காட்சியில் லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து எங்கேயோ இறக்கி விட்டு இப்படியே கிட என்று சொல்வது சற்றே பெரிய காமெடி.. தவிர்த்திருக்கலாம்!

சினிமாத்தனம், லாஜிக் ஓட்டைகள்.. இப்படி சில சில தொய்வுகள் இருந்தாலும்.. தனுஷ் என்ற ஒற்றை மனிதனின் சர்வாதிகாரமாக இந்த ஜகமே தந்திரம் உருவாகியுள்ளது. நல்ல பொழுது போக்கு ஆக்ஷன் படம் என்பதில் சந்தேகமில்லை.. ஜாலியாக ரசிக்கலாம்.. தியேட்டரில் வந்திருந்தால் திரையில் தெறித்த ஆக்ஷன் அதிரடியை சீட்டுகளின் நுனியில் இருந்து ரசித்திருக்கலாம்.. அது மட்டும்தான் மிஸ்ஸிங்.

ஜகமே தந்திரம்.. தனுஷ் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

https://tamil.filmibeat.com/reviews/jaத்

டிஸ்கி

ஈழத்தை றச் செய்திருப்பதால் இணைக்கபட்டுள்ளது.👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

`ஜகமே தந்திரம்': ஈழ அரசியல்தான் புரியாது... கார்த்திக் சுப்புராஜுக்கு கேங்ஸ்டர் கதையுமா தெரியாது?!

தியேட்டரில்தான் ரிலீஸாக வேண்டும் எனப் பலரும் போர்க்கொடி தூக்கிய படம். நெட்ஃப்ளிக்ஸில் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகியிருக்கிறது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறதா கார்த்திக் சுப்பராஜ் மற்றும் தனுஷின் 'ஜகமே தந்திரம்'?

நம் உள்ளூர் தாதா சர்வதேச அளவில் இறங்கி அலப்பறை செய்தால் எப்படியிருக்கும் என 'ரகிட ரகிட' சொல்லும் ரகளையான ஒன்லைன் பிடித்தவர்கள், அந்த ஒன்லைன் மட்டுமே போதும் என நினைத்ததுதான் ஆசம் என சொல்லவேண்டியதை ஆயாசமாக மாற்றிவிட்டது. மொத்த பாரத்தையும் தனுஷின் நடிப்பின் மீதும், டெக்னிக்கல் விஷயங்களின் மீதும் இறக்கி வைத்துவிட்டு லாஜிக்கே இல்லாமல் ஓரம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். டாரன்டினோ ஸ்டைலில் முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இன்ட்ரோ வைத்துத் தொடங்கும் படம், இடையில் ஒரு சில இடங்களில் மட்டுமே நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

ஜகமே தந்திரம்
 
ஜகமே தந்திரம்

இந்த ஆண்டு, 'கர்ணன்' படம் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தனுஷ் மீண்டும் 'மாரி' டைப் படத்துடன் வந்திருக்கிறார். சுருளியாக 'கேங்ஸ்டர்' மோடில் சரவெடியாக வெடித்திருக்கிறார். அது ஒரு சில இடங்களில் சற்றே ஓவர் ஆக்டிங்காக தெரிந்தாலும், படம் முழுவதையும் தாங்குவது என்னவோ அவரின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மட்டும்தான். பரோட்டா கடை சண்டை, முதன் முதலாக இங்கிலாந்து வந்ததும் லண்டன் தாதா பீட்டருடன் நடக்கும் உரையாடல், ஜோஜூ ஜார்ஜின் கோட்டையிலேயே அவருடன் டீல் பேசும் காட்சி எனப் பல காட்சிகளைக் குறிப்பிட்டுச் சொல்லும்படி சிறப்பாகவே செய்திருக்கிறார். அதிலும் அந்த டீல் பேசும் காட்சி கட்டே இல்லாமல் நீண்டுகொண்டே போவதில் தனுஷின் நடிப்பும், வசன உச்சரிப்பும்... செம மாஸ் ப்ரோ!

கேரள தேசத்திலிருந்து ஜோஜூ ஜார்ஜ்ஜையும், ஐஸ்வர்யா லக்ஷ்மியையும் இறக்கியிருக்கிறார்கள். ஐஸ்வர்யாவுக்கு தமிழில் விஷாலின் 'ஆக்ஷன்'தான் முதல் படம் என்றாலும் இதில்தான் சற்றே நடிப்பதற்கான வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. ஈழத்து தமிழில் கதைத்துக்கொண்டு ஒரு நெடிய பின்கதை கொண்டிருக்கும் அவரின் கதாபாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்.

ஜோஜூ ஜார்ஜுக்கு 'வடசென்னை' ராஜன் போன்றதொரு ஸ்கோப் கொண்டிருக்கும் கதாபாத்திரம். ஆனால், தேவையான அளவு ஸ்க்ரீன் பிரசன்ஸும் இல்லாமல், அவரின் அரசியலையும் தெளிவாகப் பேசாமல் ஒரு சாதாரண குணச்சித்திர பாத்திரமளவிற்கு மட்டுமே அதை சுருக்கியிருப்பதால், பிற்பாதி படத்தின் ஓட்டத்தில் காணாமல் போகிறார். முக்கியமானதொரு அரசியலை முன்னெடுக்கும் அவரின் செயல்களைப் பிற்பாதியில் வெறும் வசனங்களால் மட்டுமே கடந்துபோக வைத்திருப்பது பெரும் சறுக்கல்.

ஜகமே தந்திரம்
 
ஜகமே தந்திரம்

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ பீட்டராக டெரர் காட்டியிருக்கிறார். கலையரசன், வடிவுக்கரசி, ஷரத் ரவி தங்களின் பாத்திரங்களை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். சௌந்தரராஜா, பாபா பாஸ்கர் படத்தில் வந்துபோயிருக்கிறார்கள்.

இரண்டு ஹிட்டான பாடல்கள் இடம்பெறவில்லை என்றாலும் பின்னணி இசையில் ரகளை செய்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். தனுஷுக்குப் பிறகு படத்தின் ஹீரோ என்றால் அது ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாதான். பெரும்பாலும் திரையை நிறைக்கும் சிவப்பு, மஞ்சள் ஒளிக்கோர்வைகள், கட்டாகாத நெடிய ஷாட்கள், ஒரே கோணத்தில் பலமுறை ட்ராவலாகும் ஷாட்கள் என ரூம்போட்டு யோசித்துக் கலக்கியிருக்கிறார்கள்.

''தமிழ் பேசறவங்க தமிழ்நாடு மட்டும்தானா?'', ''போரைத் தொடங்கத்தான் முடியும், ஆனால் முடிக்க முடியாது'' போன்ற ஒரு சில வசனங்கள் ஈர்க்கின்றன.

முதல்பாதியில், ஈழத்து அரசியல் சூழலும், போரின் தாக்கமும் புரியாமல் நகரும் காட்சிகள் சர்ச்சையைக் கிளப்பினாலும், பிற்பாதியில் அதை அப்படியே மாற்றியமைக்க முயன்றிருக்கிறார்கள். ஈழத்து வலியைச் சொல்லும் காட்சி அமைப்புகள், 'தேய்பிறை' பாடல் போன்றவைதான் படத்தின் மைலேஜைக் கூட்டியிருக்கின்றன. ஆனால், ஈழம் குறித்த பதிவுகள், தமிழ் சினிமாவின் அடுத்த 'விவசாய' டெம்ப்ளேட் ஆகிவிடுமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை. போர் வரலாற்றை, அம்மண்ணின் அரசியலை, இயக்குநர்கள் வெறும் சென்டிமென்ட் கோணத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், தெளிவான சித்தாந்தங்களுடன் அதை அணுகுவது உலகத் தமிழர்களுக்கு நன்மை பயக்கும்.

ஜகமே தந்திரம்
 
ஜகமே தந்திரம்

அரசியலை ஒரம்வைத்துவிட்டு ஒரு கேங்ஸ்டர் சினிமாவாக இதை அணுகினாலும் ஆயிரம் லாஜிக் ஓட்டைகள். தமிழ்நாட்டு கேங்ஸ்டர் படங்களில்தான் போலீஸ் வரவே வராது என்றால், இங்கிலாந்திலுமே அப்படித்தானா?!

ஹீரோ எத்தனை பேரை வேண்டுமானாலும் சுடுவார், ஒரே ஷாட்டில் அவர்கள் இறந்துவிடுவார்கள். ஆனால், ஹீரோவை மட்டும் சுடவே முடியாது. சுட்டாலும் அவர் சாக மாட்டார். காலங்காலமாக நம் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் இதுதான். ஆனால், சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்திய கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளம் இயக்குநர்களே இந்த கோதாவில் குதிப்பது வருத்தமளிக்கும் ஒன்றாகவே இருக்கிறது. மாஸுனாலும் பார்த்து பண்ணுங்க பாஸு!

`ஜகமே தந்திரம்': ஈழ அரசியல்தான் புரியாது... கார்த்திக் சுப்புராஜுக்கு கேங்ஸ்டர் கதையுமா தெரியாது?! | Dhanush starrer Netflix release Jagame Thandhiram movie review (vikatan.com)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழன் டான்னாக ஒரு மலையாளி🤭🤭🤐

இத நம்ம சொன்னா பிச்சு மேஞ்சிடுவாங்க😷

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜோஜு ஜார்ஜ்

நான் படம் பார்க்கவில்லை. பார்ப்பதில்லை.

ஆனால் படம் எங்கள் வலிகளை நியாயமாக பதிவு செய்திருப்பதாக படுகிறது.

 படம் பார்த்த கள உறவுகள் கருத்தை அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஈழ தமிழன் டான்னாக ஒரு மலையாளி🤭🤭🤐

இத நம்ம சொன்னா பிச்சு மேஞ்சிடுவாங்க😷

நான் படம் பார்க்கவில்லை. பார்ப்பதில்லை.

ஆனால் படம் எங்கள் வலிகளை நியாயமாக பதிவு செய்திருப்பதாக படுகிறது.

 படம் பார்த்த கள உறவுகள் கருத்தை அறிய ஆவல்.

சில ஈழத்தமிழர்களுக்கு நடந்த விடயங்களை பொறுக்கி எடுத்து அதை தனது வியாபார படமாக தாயரித்துள்ளார் ....பல படங்களில் வந்த ஈழத்தமிழர்களின் சோகங்களை இந்த படத்திலும் காட்சிபடுத்தியுள்ளார்....ஈழதமிழரின் அரசியல் இங்குநேரடியாக‌ பேசப்படவில்லை தயாரிப்பாளருக்கு அது தேவையற்ற விடயம்,
ஈழப்போராட்டத்தை கொச்சை படுத்தி விட்டார்கள்,மலையாளியை அண்ணாவாக காட்டிவிட்டார்கள்,என புலம்பத்தேவையில்லை....😁😁

வந்தேறு குடிகள் நாங்கள் நினைத்தால் வெள்ளைகளை தண்ணியில்லா பாலைவனத்தில் விட்டுவிடுவோம் என்றமாதிரி காட்சியை முடித்துள்ளார்கள் ,ஆபிரிக்கா ,ஆசியா கெங்க் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்ம டமிழ் கெங்க் லீடருக்கு உதவிசெய்யினம் இந்த விடயத்தில்  ..... 

அண்ணா (பிரபாகரன் ) 
லண்டன் (வடக்கு கிழக்கு தாயகம்) 
ஜேம்ஸ் காஸ்மோஸ்(சிங்களம் (இனவாதா அரசியல் தலைவர்)
தணுஸ் (இந்தியா)
அண்ணா ஈழதமிழர்களை சிங்கள இனவாத செயல்களிருந்து காப்பாற்றி நல்லது செய்கிறார்.இதனால் சிங்கள தனித்து அண்ணாவை முறியடிக்க  முடியவில்லை ...சிங்களம் தனது கட்சியை அழைத்து ஆலோசனை கேட்கிறது .சிங்களதிடம் கூலிக்கு வேலை செய்யும் ஒருத்தன் சொல்லுறான் அண்ணையை விழுத்த இந்தியாவுடன் உறவுகொள்ள வேண்டும் இந்தியா தான் திறம் என்று கூலி சொல்லுறான் ,சரி இந்தியாவை அழைத்துவா (இந்தியாவுடன் எங்களுக்கு ஜன்மத்து பகை இருக்கு ஆனாலும் அண்ணையை விழுத்த அவன்கள் தான் சரி என சிங்களம் நினைத்து)
இந்தியா சிங்களத்துடன் டீல் பேசுகிறது இந்தியா எதிர்பார்த்ததை விட அதிகம் சிங்களம் கொடுக்க முன்வருகின்றது .இந்தியா களம் இறங்கிறது.வழமை போல துரோக சாணக்கியத்தை கையில் எடுத்து உள் புகுந்து அண்ணையை போட்டு தள்ளுகிறது இந்தியா. சிங்களம் மகிழ்ச்சியில் பல டில்கள் போடுகிறது சிங்களம் தன்னுடைய சில பகுதிகளை இந்தியாவுக்கு கொடுத்து (லிட்டில் மதுரை...திருகோணமலை துறைமுகம்)இந்தியாவை குசிப்படுத்துகிறது....
இந்தியாவுக்கு அண்ணையை போட்டு தள்ளின பிறகு ஈழத்தமிழர் மீது காதல் வருகிறது இது சிங்களத்துக்கு தெரிய வருகிறது..சிங்களம் இந்தியாவிடம் ரவுடிதனம் பண்ணி கொடுத்த சலுகைகளை திருப்பி எடுக்கிறது .

இந்தியாவின் இருப்புக்கே வேட்டு வைக்கிறது சிங்களம் (தனுஸின் கடை வீடு எல்லாம் வில்லனின் சுற்றிவளைப்பில் தனுஸ் தப்பி ஓட முடியவில்லை வில்லனிடன் சரணடர் ஆகிவிடுகிறார்)
ஈழத்தமிழர் மீது காதல் பொங்கி கொண்டு வருகிறது இந்தியாவுக்கு ஆனால் ஈழதமிழர்  அண்ணையை போட்டு தள்ளிய இந்தியாவுக்கு பாடம் புகட்ட துடியாக துடிக்கின்றனர் பல முயற்சியும் எடுக்கின்றனர் .இறுதியாக காதலி
ஊசி மூலமாக போட்டு தள்ளும் முயற்சியில் ஈடுபடும் பொழுது இந்தியா விழித்துக்கொள்கிறது .இந்தியாவுக்கு ஒன்றும் தெரியாத மாதிரி கேட்கின்றது ஏன் என்னை போட்டு தள்ள நினைத்தாய் என ஈழத்தமிழரிடம் ....ஈழத்தமிழர் ஆரம்பத்திலிருந்து முழுவதையும் சொல்ல இந்தியாவுக்கு ஈழத்தமிழர் மீது கொள்ளை காதல் வந்து விட்டதாம்....
(பாரத மாதா (தார்மீக மாதா வடிவுக்கரசி ...இந்தியாவுக்கு பாடம் எடுக்கிறா)  நீ செய்த சின்ன குரங்கு சேட்டைகளை பார்த்து கொண்டு சகித்து கொண்டேன் நீ விளையாட்டு பிள்ளை என்ற காரணத்தால் ஆனால் நீ செய்த துரோகத்தை என்னால் பொறுத்து கொள்ள முடியாது அதை துடைத்து கழிவிட்டு வா  .......)
என்னிடம் இந்த பிரச்சனையை விடுங்கள் நான் உங்களுக்கு தீர்வை தருகிறேன் .இதை நம்பாத ஈழதமிழ் பெடியள் இந்தியா மீது வன்முறையை பயன்படுத்த இந்தியா தமிழ்பெடியளை அடிச்சு துவசம் பண்ணி  என்னிடம் விடுங்கள் நான் தனிக்காட்டு ராஜா உங்களுக்கு செய்த துரோகத்துக்கு பரிகாரம் தேடி தருவேன் நிச்சயம் ,

 இந்தியா சிங்களத்தை ஏனைய நாடுகளுடன் சேர்ந்து ஒதுக்கி வைத்து ஒரு பாலைவனத்தில் தண்ணியில்லா காட்டில் விட்டு ஈழத்தமிழரை காதலித்து கலியாணம் கட்டி முதலிரவு நடத்தினமாம்

எப்படி யிருக்கு நம்ம விமர்சனம்🤣😆😄😀

  • கருத்துக்கள உறவுகள்

ஜகமே தந்திரம் என்ற தனுஷ் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படத்தை சற்று முன்னர்தான் பார்த்து முடித்தேன், படம் பார்ப்பதற்கு முன்னதாகவே ஈழத்தமிழர்களைப் பற்றிய ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்பதற்கான ஒரு திரைப்படத்தை தான் எடுத்துக் கொண்டதில் பெருமைப்படுவதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், ஆனால் படம் என்னவோ ஈழத்தமிழர்களை கையாலாகாதவர்கள் ஆகாதவர்கள் ஆக காட்டும் சித்தரிப்பு இடம்பெற்றிருக்கிறது, ஒரு நாட்டுக்கான அத்தனை கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி முப்படைகளையும் கொண்டு சாதித்துக் காட்டி துரோகத்தால் விழுந்த ஒரு இனத்தை, புலம்பெயர் நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட நிதியில், பலர் கண்களில் மண்ணை தூவி கடல்வழியாக ஆயுதங்களைக் கொண்டுவந்து சேர்த்த வல்லமையுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை, அந்த நாட்டுக்கு அகதியாக வருபவர்களை அரவணைத்துஅவர்களுக்கான சட்ட உதவிகளை செய்து வந்த ஒரு குழுவை கையாலாகாதவர்கள் என்றும் மதுரையில் பிறந்து வந்த ஒருவர் லண்டனுக்கு வந்து, வியூகம் அமைத்து இனவாத வெள்ளையர்களுடன் சேர்ந்து அக்குழுவின் தலைவரை உட்பட பலரை கொன்று குவித்து  பின்னர் தன் தவறை உணர்ந்து தானே அந்த இனவாத வெள்ளையர் குழுவை அளிப்பது அல்லது இல்லாதொழிப்பது என்பதனை நிறைவேற்றியுள்ளார்.

படம் போன போக்கில் ஏதோ தனுஷ் வந்து ஈழத்திலும் தனி நாட்டை பெற்றுக் கொடுத்து விடுவாரோ என்பது போல ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது (நகைச்சுவை)

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் இன்றைய நிலையில் உங்கள் இந்திய தமிழ் சினிமாவை தாங்கி தூக்கி நிறுத்தி நிற்பவர் ஒரு ஈழத்தமிழர் என்பதையும் மறந்துவிடாதீர்கள் ( LYCA)

எனக்கு எழுந்த பல கேள்விகள்

1.     புலம்பெயர்ந்த நாடுகளில் இனவாத வெள்ளையர்கள்தான் எங்கள்முதல் எதிரிகளா?

2.     லண்டன் தெரு வீதிகள் சட்ட ஒழுங்கு அற்ற ஆபிரிக்க நாடுகள் போன்றவையா? எங்கேயும் எப்பொழுதும் ஆயுதங்களுடன் ரவுடிக் கும்பல்கள் திரியக்கூடிய இடமா?

3.     காதலிப்பது போன்று நடித்து பழி வாங்கும் குணம் உடையவர்களா ஈழத்து தமிழ் பெண்கள்

4.     ஈழத்தமிழர்கள் கையாலாகாதவர்கள் என்றும் மதுரையிலிருந்து வந்த ஒரு தனி மனிதன் அவர்களின் நீண்ட கால சாம்ராஜ்ஜியத்தை அழித்து பின்னர் தன் தவறை உணர்ந்து அவர்களின் இலக்கை நிறைவேற்றி கொடுத்தார் என்பது நடக்கக் கூடியதா? சாத்தியமானதா  ?நடந்திருக்கிறதா?

5.       நீங்கள் உண்மையில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை சொல்வதற்காக படம் எடுக் க முயல் கிறீர்களா அல்லது அதை சொல்வதன் மூலம் உலகளாவிய ரீதியில் உங்கள் வியாபார இலக்கை அடைய முயல் கிறீர்களா?

6.       இவ்வளவு பெரிய பணச்செலவில் 17 மொழிகளில் வெளியிடப்படும் ஒரு திரைப்படத்துக்கு முறையான உள்ள ஈழதமிழ் பேச்சு முறையை ஏன் உள்வாங்க முடியவில்லை?

7.       படத்தின் நாயகனே தனது சொந்த ஊரில் வந்தேறிகள் ஆக உள்ளவர்களை எதிர்ப்பதாக காட்டிவிட்டு வெள்ளை இனத்தவரின் நாடுகளில் மட்டும் அவர்களிடம் இவ்வாறான ஒரு பண்பு இருக்கக்கூடிய கூடி யற்கான தான நியாயத்தை ஏன் கூற மறந்து விட்டீர்கள் ( தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய உள்ள ஈழதமிழ் அகதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, putthan said:

சில ஈழத்தமிழர்களுக்கு நடந்த விடயங்களை பொறுக்கி எடுத்து அதை தனது வியாபார படமாக தாயரித்துள்ளார் ....பல படங்களில் வந்த ஈழத்தமிழர்களின் சோகங்களை இந்த படத்திலும் காட்சிபடுத்தியுள்ளார்....ஈழதமிழரின் அரசியல் இங்குநேரடியாக‌ பேசப்படவில்லை தயாரிப்பாளருக்கு அது தேவையற்ற விடயம்,
ஈழப்போராட்டத்தை கொச்சை படுத்தி விட்டார்கள்,மலையாளியை அண்ணாவாக காட்டிவிட்டார்கள்,என புலம்பத்தேவையில்லை....😁😁

வந்தேறு குடிகள் நாங்கள் நினைத்தால் வெள்ளைகளை தண்ணியில்லா பாலைவனத்தில் விட்டுவிடுவோம் என்றமாதிரி காட்சியை முடித்துள்ளார்கள் ,ஆபிரிக்கா ,ஆசியா கெங்க் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்ம டமிழ் கெங்க் லீடருக்கு உதவிசெய்யினம் இந்த விடயத்தில்  ..... 

அண்ணா (பிரபாகரன் ) 
லண்டன் (வடக்கு கிழக்கு தாயகம்) 
ஜேம்ஸ் காஸ்மோஸ்(சிங்களம் (இனவாதா அரசியல் தலைவர்)
தணுஸ் (இந்தியா)
அண்ணா ஈழதமிழர்களை சிங்கள இனவாத செயல்களிருந்து காப்பாற்றி நல்லது செய்கிறார்.இதனால் சிங்கள தனித்து அண்ணாவை முறியடிக்க  முடியவில்லை ...சிங்களம் தனது கட்சியை அழைத்து ஆலோசனை கேட்கிறது .சிங்களதிடம் கூலிக்கு வேலை செய்யும் ஒருத்தன் சொல்லுறான் அண்ணையை விழுத்த இந்தியாவுடன் உறவுகொள்ள வேண்டும் இந்தியா தான் திறம் என்று கூலி சொல்லுறான் ,சரி இந்தியாவை அழைத்துவா (இந்தியாவுடன் எங்களுக்கு ஜன்மத்து பகை இருக்கு ஆனாலும் அண்ணையை விழுத்த அவன்கள் தான் சரி என சிங்களம் நினைத்து)
இந்தியா சிங்களத்துடன் டீல் பேசுகிறது இந்தியா எதிர்பார்த்ததை விட அதிகம் சிங்களம் கொடுக்க முன்வருகின்றது .இந்தியா களம் இறங்கிறது.வழமை போல துரோக சாணக்கியத்தை கையில் எடுத்து உள் புகுந்து அண்ணையை போட்டு தள்ளுகிறது இந்தியா. சிங்களம் மகிழ்ச்சியில் பல டில்கள் போடுகிறது சிங்களம் தன்னுடைய சில பகுதிகளை இந்தியாவுக்கு கொடுத்து (லிட்டில் மதுரை...திருகோணமலை துறைமுகம்)இந்தியாவை குசிப்படுத்துகிறது....
இந்தியாவுக்கு அண்ணையை போட்டு தள்ளின பிறகு ஈழத்தமிழர் மீது காதல் வருகிறது இது சிங்களத்துக்கு தெரிய வருகிறது..சிங்களம் இந்தியாவிடம் ரவுடிதனம் பண்ணி கொடுத்த சலுகைகளை திருப்பி எடுக்கிறது .

இந்தியாவின் இருப்புக்கே வேட்டு வைக்கிறது சிங்களம் (தனுஸின் கடை வீடு எல்லாம் வில்லனின் சுற்றிவளைப்பில் தனுஸ் தப்பி ஓட முடியவில்லை வில்லனிடன் சரணடர் ஆகிவிடுகிறார்)
ஈழத்தமிழர் மீது காதல் பொங்கி கொண்டு வருகிறது இந்தியாவுக்கு ஆனால் ஈழதமிழர்  அண்ணையை போட்டு தள்ளிய இந்தியாவுக்கு பாடம் புகட்ட துடியாக துடிக்கின்றனர் பல முயற்சியும் எடுக்கின்றனர் .இறுதியாக காதலி
ஊசி மூலமாக போட்டு தள்ளும் முயற்சியில் ஈடுபடும் பொழுது இந்தியா விழித்துக்கொள்கிறது .இந்தியாவுக்கு ஒன்றும் தெரியாத மாதிரி கேட்கின்றது ஏன் என்னை போட்டு தள்ள நினைத்தாய் என ஈழத்தமிழரிடம் ....ஈழத்தமிழர் ஆரம்பத்திலிருந்து முழுவதையும் சொல்ல இந்தியாவுக்கு ஈழத்தமிழர் மீது கொள்ளை காதல் வந்து விட்டதாம்....
(பாரத மாதா (தார்மீக மாதா வடிவுக்கரசி ...இந்தியாவுக்கு பாடம் எடுக்கிறா)  நீ செய்த சின்ன குரங்கு சேட்டைகளை பார்த்து கொண்டு சகித்து கொண்டேன் நீ விளையாட்டு பிள்ளை என்ற காரணத்தால் ஆனால் நீ செய்த துரோகத்தை என்னால் பொறுத்து கொள்ள முடியாது அதை துடைத்து கழிவிட்டு வா  .......)
என்னிடம் இந்த பிரச்சனையை விடுங்கள் நான் உங்களுக்கு தீர்வை தருகிறேன் .இதை நம்பாத ஈழதமிழ் பெடியள் இந்தியா மீது வன்முறையை பயன்படுத்த இந்தியா தமிழ்பெடியளை அடிச்சு துவசம் பண்ணி  என்னிடம் விடுங்கள் நான் தனிக்காட்டு ராஜா உங்களுக்கு செய்த துரோகத்துக்கு பரிகாரம் தேடி தருவேன் நிச்சயம் ,

 இந்தியா சிங்களத்தை ஏனைய நாடுகளுடன் சேர்ந்து ஒதுக்கி வைத்து ஒரு பாலைவனத்தில் தண்ணியில்லா காட்டில் விட்டு ஈழத்தமிழரை காதலித்து கலியாணம் கட்டி முதலிரவு நடத்தினமாம்

எப்படி யிருக்கு நம்ம விமர்சனம்🤣😆😄😀

அடேங்கப்பா…. படத்தை விட விமர்சனம் நல்லா இருக்கும் போல இருக்கு 👏🏾👏🏾👏🏾.

படம் எடுத்தவங்கள் எங்கட படத்தில இப்படி ஒரு கதையா எண்டு தலை சுத்தாட்டில் சரி😆.

விமர்சனத்துக்கு நன்றி. கதைய பார்த்தா படம் ஓடும் போல கிடக்கு. பாட்டுகளும் நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ooravan said:

நீங்கள் உண்மையில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை சொல்வதற்காக படம் எடுக் க முயல் கிறீர்களா அல்லது அதை சொல்வதன் மூலம் உலகளாவிய ரீதியில் உங்கள் வியாபார இலக்கை அடைய முயல் கிறீர்களா?

இன்று ஈழத்தமிழரும் புலிகளும் சினிமா,மற்றும் நாடக தயாரிப்பாளர்களின் பிரான்ட் ....இந்த பிரான்டை வைத்து சிறுது பணம் சம்பாதிக்கலாம் என நம்புகிறார்கள்.

இதில  போய் ஏன்  நாங்கள் ஈழத்தமிழரை கொச்சை படுத்திவிட்டார்கள் என புலம்ப வேண்டும் ...
கவனமாக ஈழத்தமிழர் விடயத்தை தயாரிப்பாளர் கையாண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் ....

உலகமே தந்திரம்

  • கருத்துக்கள உறவுகள்
‘த பேமிலி மேன்’ எடுத்துக் கொள்ளும் அரசியல் கருத்தாக்கங்ளையும் காட்சி அமைப்புகளையும், ‘ஜகமே தந்திரம்’ எடுத்துக் கொள்ளும் அரசியல் கருத்தாக்கங்களையும் காட்சி அமைப்புகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
'ஜகமே தந்திரம்' படத்தில் காலனியம், நிற-இனவாதம், கன்சர்வேடிவ்-கார்ப்பரேட்-மாபியா டிடன்ஷன் கேம்புகள், விடுதலைப் போராளிகள் நிதி திரட்டுவது-அதன் நோக்குநிலை, ஈழப் புலம்பெயர்வு, குடியேற்றம் என எத்தனையோ அரசியல் கருத்தாக்கங்கள் உண்டு.
இயக்குனர் ஒன்றில் கூட கதையை-கதை மாந்தரை அதிகாரத்தின் பக்கம் நகர்த்தவில்லை.
இரண்டு படங்களும் கற்பனைகள், புனைவுகள் தான். ஜனரஞ்ஜக சினிமாவின் இயல்பான நிறைய தர்க்க மீறல்கள்(உடலில் பல குண்டுகள் பாய்ந்து, மரணத்திலிருந்து தப்பி, உடல் தேறும் வரை காத்திருந்து - ஒரு ஆறுமாத காலமாவது பிடித்திருக்கும் அல்லவா? - குளுகோசில் விஷ ஊசி செலுத்தும் காட்சி) உண்டு. இந்தக் கற்பனைகளிலும் தர்க்க மீறல்களிலும் கூட நீதியின் பக்கம் ஒரு இயக்குனர் நிற்க முடியும் என்பதற்கு ஜகமே தந்திரம் ஒரு சான்று.
இந்தப் படத்தில் டூயட் இல்லை என்பது பெரும் ஆறுதல். இடம் பெறும் பிற பாடல் காட்சிகளையும் பொறுத்துக் கொள்ளலாம். ஜனரஞ்ஜக சினிமா சீரியஸ் என எதைக் கருதுமோ அந்த சீரியஸ்நஸ்சுடன் படம் இருக்கிறது.
படத்தின் கடைசிக் காட்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
முக புத்தகத்திலிருந்து பதிவு செய்தது நன்றி ஜமுனா ராஜேந்திரன்
முக புத்தகத்திலிருந்து பதிவு செய்தது நன்றி ஜமுனா ராஜேந்திரன்
  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

... என்னிடம் இந்த பிரச்சனையை விடுங்கள் நான் உங்களுக்கு தீர்வை தருகிறேன் .இதை நம்பாத ஈழதமிழ் பெடியள் இந்தியா மீது வன்முறையை பயன்படுத்த இந்தியா தமிழ்பெடியளை அடிச்சு துவசம் பண்ணி  என்னிடம் விடுங்கள் நான் தனிக்காட்டு ராஜா உங்களுக்கு செய்த துரோகத்துக்கு பரிகாரம் தேடி தருவேன் நிச்சயம் ,

 இந்தியா சிங்களத்தை ஏனைய நாடுகளுடன் சேர்ந்து ஒதுக்கி வைத்து ஒரு பாலைவனத்தில் தண்ணியில்லா காட்டில் விட்டு ஈழத்தமிழரை காதலித்து கலியாணம் கட்டி முதலிரவு நடத்தினமாம்

எப்படி யிருக்கு நம்ம விமர்சனம்🤣😆😄😀

பிறகென்ன, அடுத்த பாகத்தில் (வெர்சன்.2) ஈழம் பிறந்துவிடும். 😜

அவனவனுக்கு ஈழம் சார்ந்த கருத்துரு, நல்லா கல்லா கட்டும் வியாபாரமா போச்சுது. 🤔

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு எதிரான படமா ஜெகமே தந்திரம் ?

spacer.png

பாலிவுட் நடிகர்களான மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ் நடிப்பில் பிரைம் வீடியோவில் வெளியான வெப் சீரிஸ் ஃபேமிலி மேன். இந்த வெப் சீரிஸை ராஜ் & டி.கே. இயக்கியுள்ளனர். இந்த வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, சமீபத்தில் இரண்டாவது சீசன் வெளியானது. இந்தியாவின் பாதுகாப்பை சிதைக்கும் விதமாக வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகளை கண்டறியும் உளவுத்துறை அதிகாரியின் கதையே களம். முதல் சீசனில் முஸ்லீம்களை தீவிரவாதியாக காட்சிப்படுத்தியிருந்தனர். அப்படியே, இரண்டாவது சீசனில் தமிழ் ஈழ போராளிகளை தீவிரவாதியுடன் கூட்டணி வைத்திருப்பது போல படத்தில் காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழீழப் போராளியாக சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸூக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலைகள் கிளம்பியது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இன்னொரு சம்பவமாக ‘ஜெகமே தந்திரம்’ ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜோஜூ ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், வடிவுக்கரசி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘ஜெகமே தந்திரம்’. மதுரை ரவுடி லண்டன் கேங்ஸ்டர்களுடன் சேர்ந்து செய்யும் வில்லத்தனங்களே படத்தின் களம். இதற்குள் தமிழீழப் பிரச்னை, அகதிகளின் சிக்கல்களை படம் பேசியிருக்கிறது.

தமிழீழ மக்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு, அவர்களை தவறாகக் காட்சிப்படுத்தியிருப்பதாக இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் இலங்கைத் தமிழர்கள் மாஃபியா வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை படம் உருவாக்குகிறது. நாட்டு வெடி வைத்து லண்டன் மக்களை கொலை செய்வது போலவும், தங்க கடத்தல், துப்பாக்கி கடத்தல்களைச் செய்வது போலவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

தனுஷ் உள்ளிட்ட அனைவருமே அசால்டாக துப்பாக்கியை எல்லா இடங்களில் பயன்படுத்துகிறார்கள். லண்டன் மாதிரியான வளர்ந்த நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரத்தை இலங்கைத் தமிழர்கள் கொண்டுவருவது போன்ற தவறான சித்தரிப்பு படத்தில் இடம்பெறுவதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

யாருக்கு சாதகமான படம் இது என்கிற கேள்வியும் எழுகிறது. 190 நாடுகளில் 17 மொழிகளில் டப் செய்து உலகம் முழுவதும் படம் வெளியாகியிருக்கிறது. உலக மக்கள் பார்வைக்குச் செல்லும் இப்படத்தில் இலங்கைத் தமிழர்களை தவறாக சித்தரிக்கும் விதமாக காட்சிகள் அமையலாமா? கனடா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இந்நிலையில், அவர்களை வன்முறையில் ஈடுபடுபவர்களாக காட்டினால் நாட்டை விட்டு வெளியேற்றும் எண்ணம் பிற நாட்டு மக்களுக்கு எளிதில் தோன்றவும் வாய்ப்பு அதிகம்.

இலங்கைப் பிரச்னை குறித்தோ, அகதிகள் படும் பாடு குறித்தோ எந்த விதமான அடிப்படை அறிவும் இல்லாமல், யாருக்கு சாதகமாக படம் எடுத்திருக்கிறோம் என்றும் தெரியாமல் உருவாகியிருக்கிறது ஜெகமே தந்திரம்.

தமிழில் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான படத்தில் கர்ணனாக அவதாரம் எடுத்தவர், தந்திரக் கார இயக்குநரிடம் சிக்கி தரித்திரமாகிவிட்டதாகவே தனுஷை இணையத்தில் வசைபாடுகின்றனர்.

திருநங்கைகளை பாடல்காட்சிகளில் நடனமாடவும், இரட்டை அர்த்த வசனக் காட்சிகளில் நடிக்க வைப்பதும் , முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகளாகவும், ஸ்லீப்பர் செல்களாக நம்முடன் ஊடுறுவியிருப்பார்கள் என்றும், ஈழத்தமிழர்கள் என்றாலே ஆபத்தானவர்கள் என்றும் படங்களில் காட்சிப்படுத்தும் அபத்தங்களை இயக்குநர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். வசூலுக்காகவும், வியாபாரத்துக்காகவும் மற்றவர்களை ஊறுகாயாக தொட்டுக் கொள்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

விவசாயப் பிரச்னையை படத்தில் பேசுவது மாதிரி தமிழீழப் பிரச்னை படத்தின் வியாபாரத்துக்காக இந்திய சினிமா கையில் எடுத்துவிட்டதோ எனும் அச்சம் தோன்றுகிறது. எந்த சமூகத்தையும், இனத்தையும் புண்படுத்தாத கதையம்சம் கொண்டதாக கமர்ஷியல் படங்கள் இருக்க வேண்டும். ஜாலியான படமென்று சொல்லிவிட்டு, அதற்குள் தவறான சித்தரிப்புகளைப் படத்தில் வைக்கக் கூடாது என்பதே விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

https://minnambalam.com/entertainment/2021/06/19/39/jagame-thanthiram-movie-update

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

என்னிடம் விடுங்கள் நான் தனிக்காட்டு ராஜா

@putthan 

நானும் என்னைத்தான் என நினச்சுவிட்டன் 

உங்கள் விமர்சனம் ஒரு போத்தலை திறக்க சொன்னால் ( சாராயம் )  ஒரே ஒரு குலுக்கு கீழே இரண்டு தட்டு போத்தல்  மூடியை திருகினால் திறந்துவிடும் அது போல இருக்கு

திறப்பான் எல்லாம் தேவைஇல்லை போல இருக்கு 

வாழ்த்துக்கள் புத்தார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள் ......போராட்டத்தை போராட்டமாக பாருங்கள் மக்காள்......இராமன் எப்படி பட்டவன் .....இராவணன் எப்படி பட்டவன் என்று நாம் அறிந்து கொள்ளவேணும் ....இராவணனை அரக்கனாக சித்தரிக்க பல ஆண்டுகள் முயற்சி செய்கின்றனர் ஆனால் இன்றும் இராவணன் சிறந்த சிவபக்தன் என்ற  சிறப்பை எதிரிகளாலும் அழிக்க முடியவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இதைத்தான் நானும் ஊகித்துக் கொண்டேன் இதற்குத்தான் கதை அமைப்பும் நன்றாக பொருந்துகிறது

On 19/6/2021 at 09:42, putthan said:

சில ஈழத்தமிழர்களுக்கு நடந்த விடயங்களை பொறுக்கி எடுத்து அதை தனது வியாபார படமாக தாயரித்துள்ளார் ....பல படங்களில் வந்த ஈழத்தமிழர்களின் சோகங்களை இந்த படத்திலும் காட்சிபடுத்தியுள்ளார்....ஈழதமிழரின் அரசியல் இங்குநேரடியாக‌ பேசப்படவில்லை தயாரிப்பாளருக்கு அது தேவையற்ற விடயம்,
ஈழப்போராட்டத்தை கொச்சை படுத்தி விட்டார்கள்,மலையாளியை அண்ணாவாக காட்டிவிட்டார்கள்,என புலம்பத்தேவையில்லை....😁😁

வந்தேறு குடிகள் நாங்கள் நினைத்தால் வெள்ளைகளை தண்ணியில்லா பாலைவனத்தில் விட்டுவிடுவோம் என்றமாதிரி காட்சியை முடித்துள்ளார்கள் ,ஆபிரிக்கா ,ஆசியா கெங்க் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்ம டமிழ் கெங்க் லீடருக்கு உதவிசெய்யினம் இந்த விடயத்தில்  ..... 

அண்ணா (பிரபாகரன் ) 
லண்டன் (வடக்கு கிழக்கு தாயகம்) 
ஜேம்ஸ் காஸ்மோஸ்(சிங்களம் (இனவாதா அரசியல் தலைவர்)
தணுஸ் (இந்தியா)
அண்ணா ஈழதமிழர்களை சிங்கள இனவாத செயல்களிருந்து காப்பாற்றி நல்லது செய்கிறார்.இதனால் சிங்கள தனித்து அண்ணாவை முறியடிக்க  முடியவில்லை ...சிங்களம் தனது கட்சியை அழைத்து ஆலோசனை கேட்கிறது .சிங்களதிடம் கூலிக்கு வேலை செய்யும் ஒருத்தன் சொல்லுறான் அண்ணையை விழுத்த இந்தியாவுடன் உறவுகொள்ள வேண்டும் இந்தியா தான் திறம் என்று கூலி சொல்லுறான் ,சரி இந்தியாவை அழைத்துவா (இந்தியாவுடன் எங்களுக்கு ஜன்மத்து பகை இருக்கு ஆனாலும் அண்ணையை விழுத்த அவன்கள் தான் சரி என சிங்களம் நினைத்து)
இந்தியா சிங்களத்துடன் டீல் பேசுகிறது இந்தியா எதிர்பார்த்ததை விட அதிகம் சிங்களம் கொடுக்க முன்வருகின்றது .இந்தியா களம் இறங்கிறது.வழமை போல துரோக சாணக்கியத்தை கையில் எடுத்து உள் புகுந்து அண்ணையை போட்டு தள்ளுகிறது இந்தியா. சிங்களம் மகிழ்ச்சியில் பல டில்கள் போடுகிறது சிங்களம் தன்னுடைய சில பகுதிகளை இந்தியாவுக்கு கொடுத்து (லிட்டில் மதுரை...திருகோணமலை துறைமுகம்)இந்தியாவை குசிப்படுத்துகிறது....
இந்தியாவுக்கு அண்ணையை போட்டு தள்ளின பிறகு ஈழத்தமிழர் மீது காதல் வருகிறது இது சிங்களத்துக்கு தெரிய வருகிறது..சிங்களம் இந்தியாவிடம் ரவுடிதனம் பண்ணி கொடுத்த சலுகைகளை திருப்பி எடுக்கிறது .

இந்தியாவின் இருப்புக்கே வேட்டு வைக்கிறது சிங்களம் (தனுஸின் கடை வீடு எல்லாம் வில்லனின் சுற்றிவளைப்பில் தனுஸ் தப்பி ஓட முடியவில்லை வில்லனிடன் சரணடர் ஆகிவிடுகிறார்)
ஈழத்தமிழர் மீது காதல் பொங்கி கொண்டு வருகிறது இந்தியாவுக்கு ஆனால் ஈழதமிழர்  அண்ணையை போட்டு தள்ளிய இந்தியாவுக்கு பாடம் புகட்ட துடியாக துடிக்கின்றனர் பல முயற்சியும் எடுக்கின்றனர் .இறுதியாக காதலி
ஊசி மூலமாக போட்டு தள்ளும் முயற்சியில் ஈடுபடும் பொழுது இந்தியா விழித்துக்கொள்கிறது .இந்தியாவுக்கு ஒன்றும் தெரியாத மாதிரி கேட்கின்றது ஏன் என்னை போட்டு தள்ள நினைத்தாய் என ஈழத்தமிழரிடம் ....ஈழத்தமிழர் ஆரம்பத்திலிருந்து முழுவதையும் சொல்ல இந்தியாவுக்கு ஈழத்தமிழர் மீது கொள்ளை காதல் வந்து விட்டதாம்....
(பாரத மாதா (தார்மீக மாதா வடிவுக்கரசி ...இந்தியாவுக்கு பாடம் எடுக்கிறா)  நீ செய்த சின்ன குரங்கு சேட்டைகளை பார்த்து கொண்டு சகித்து கொண்டேன் நீ விளையாட்டு பிள்ளை என்ற காரணத்தால் ஆனால் நீ செய்த துரோகத்தை என்னால் பொறுத்து கொள்ள முடியாது அதை துடைத்து கழிவிட்டு வா  .......)
என்னிடம் இந்த பிரச்சனையை விடுங்கள் நான் உங்களுக்கு தீர்வை தருகிறேன் .இதை நம்பாத ஈழதமிழ் பெடியள் இந்தியா மீது வன்முறையை பயன்படுத்த இந்தியா தமிழ்பெடியளை அடிச்சு துவசம் பண்ணி  என்னிடம் விடுங்கள் நான் தனிக்காட்டு ராஜா உங்களுக்கு செய்த துரோகத்துக்கு பரிகாரம் தேடி தருவேன் நிச்சயம் ,

 இந்தியா சிங்களத்தை ஏனைய நாடுகளுடன் சேர்ந்து ஒதுக்கி வைத்து ஒரு பாலைவனத்தில் தண்ணியில்லா காட்டில் விட்டு ஈழத்தமிழரை காதலித்து கலியாணம் கட்டி முதலிரவு நடத்தினமாம்

எப்படி யிருக்கு நம்ம விமர்சனம்🤣😆😄😀

அண்ணா (பிரபாகரன் ) 
லண்டன் (வடக்கு கிழக்கு தாயகம்) 
ஜேம்ஸ் காஸ்மோஸ்(சிங்களம் (இனவாதா அரசியல் தலைவர்)
தணுஸ் (இந்தியா)
அண்ணா ஈழதமிழர்களை சிங்கள இனவாத செயல்களிருந்து காப்பாற்றி நல்லது செய்கிறார்.இதனால் சிங்கள தனித்து அண்ணாவை முறியடிக்க  முடியவில்லை ...சிங்களம் தனது கட்சியை அழைத்து ஆலோசனை கேட்கிறது .சிங்களதிடம் கூலிக்கு வேலை செய்யும் ஒருத்தன் சொல்லுறான் அண்ணையை விழுத்த இந்தியாவுடன் உறவுகொள்ள வேண்டும் இந்தியா தான் திறம் என்று கூலி சொல்லுறான் ,சரி இந்தியாவை அழைத்துவா (இந்தியாவுடன் எங்களுக்கு ஜன்மத்து பகை இருக்கு ஆனாலும் அண்ணையை விழுத்த அவன்கள் தான் சரி என சிங்களம் நினைத்து)
இந்தியா சிங்களத்துடன் டீல் பேசுகிறது இந்தியா எதிர்பார்த்ததை விட அதிகம் சிங்களம் கொடுக்க முன்வருகின்றது .இந்தியா களம் இறங்கிறது.வழமை போல துரோக சாணக்கியத்தை கையில் எடுத்து உள் புகுந்து அண்ணையை போட்டு தள்ளுகிறது இந்தியா. சிங்களம் மகிழ்ச்சியில் பல டில்கள் போடுகிறது சிங்களம் தன்னுடைய சில பகுதிகளை இந்தியாவுக்கு கொடுத்து (லிட்டில் மதுரை...திருகோணமலை துறைமுகம்)இந்தியாவை குசிப்படுத்துகிறது....
இந்தியாவுக்கு அண்ணையை போட்டு தள்ளின பிறகு ஈழத்தமிழர் மீது காதல் வருகிறது இது சிங்களத்துக்கு தெரிய வருகிறது..சிங்களம் இந்தியாவிடம் ரவுடிதனம் பண்ணி கொடுத்த சலுகைகளை திருப்பி எடுக்கிறது .

இந்தியாவின் இருப்புக்கே வேட்டு வைக்கிறது சிங்களம் (தனுஸின் கடை வீடு எல்லாம் வில்லனின் சுற்றிவளைப்பில் தனுஸ் தப்பி ஓட முடியவில்லை வில்லனிடன் சரணடர் ஆகிவிடுகிறார்)
ஈழத்தமிழர் மீது காதல் பொங்கி கொண்டு வருகிறது இந்தியாவுக்கு ஆனால் ஈழதமிழர்  அண்ணையை போட்டு தள்ளிய இந்தியாவுக்கு பாடம் புகட்ட துடியாக துடிக்கின்றனர் பல முயற்சியும் எடுக்கின்றனர் .இறுதியாக காதலி
ஊசி மூலமாக போட்டு தள்ளும் முயற்சியில் ஈடுபடும் பொழுது இந்தியா விழித்துக்கொள்கிறது .இந்தியாவுக்கு ஒன்றும் தெரியாத மாதிரி கேட்கின்றது ஏன் என்னை போட்டு தள்ள நினைத்தாய் என ஈழத்தமிழரிடம் ....ஈழத்தமிழர் ஆரம்பத்திலிருந்து முழுவதையும் சொல்ல இந்தியாவுக்கு ஈழத்தமிழர் மீது கொள்ளை காதல் வந்து விட்டதாம்....
(பாரத மாதா (தார்மீக மாதா வடிவுக்கரசி ...இந்தியாவுக்கு பாடம் எடுக்கிறா)  நீ செய்த சின்ன குரங்கு சேட்டைகளை பார்த்து கொண்டு சகித்து கொண்டேன் நீ விளையாட்டு பிள்ளை என்ற காரணத்தால் ஆனால் நீ செய்த துரோகத்தை என்னால் பொறுத்து கொள்ள முடியாது அதை துடைத்து கழிவிட்டு வா  .......)
என்னிடம் இந்த பிரச்சனையை விடுங்கள் நான் உங்களுக்கு தீர்வை தருகிறேன் .இதை நம்பாத ஈழதமிழ் பெடியள் இந்தியா மீது வன்முறையை பயன்படுத்த இந்தியா தமிழ்பெடியளை அடிச்சு துவசம் பண்ணி  என்னிடம் விடுங்கள் நான் தனிக்காட்டு ராஜா உங்களுக்கு செய்த துரோகத்துக்கு பரிகாரம் தேடி தருவேன் நிச்சயம் ,

 இந்தியா சிங்களத்தை ஏனைய நாடுகளுடன் சேர்ந்து ஒதுக்கி வைத்து ஒரு பாலைவனத்தில் தண்ணியில்லா காட்டில் விட்டு ஈழத்தமிழரை காதலித்து கலியாணம் கட்டி முதலிரவு நடத்தினமாம்

எப்படி யிருக்கு நம்ம விமர்சனம்

வெற்றுப் பிம்பங்களும் அரசியல் தத்துவ விளங்களும்

ஜகமே தந்திரம் படம் பற்றிய ஒரு விமர்சனம்

அ.சி. விஜிதரன்

இயக்குனர் கார்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். படம் வெளியான அன்றே அதைப் பார்த்துவிட்டேன். ஆனால் அதுபற்றி எழுதுவதற்கு ஒன்றும் இருப்பதாக உணராததால் எதுவும் எழுதவில்லை. பலவீனமான திரைக்கதை, லாஜிக் ஓட்டைகள், ஒழுங்கில்லாத கதை, அதிகபட்சமாக கதாநாயகப் பாத்திரத்தின் நடிப்பும், ஒளிப்பதிவும், இசையும் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி இருக்கும் ஒரு சராசரி மசாலாப் படத்தைப் பற்றி என்ன எழுதுவது என்று எழுதாமல் இருந்தேன். இப்போதும் அதே நிலைப்பாடே. இருந்தாலும் கடந்த ஜூன் 20 திகதி ஏதிலிகள் நாள் வரை  ஈழப் பிரச்சனை பற்றிய  படமாக, அகதிகளுக்கான அடையாளமாக, அகதிப்பிரச்சனையை பேசிய முக்கிய திரைப்படமாகத் திரும்பத் திரும்ப இந்தப் படம் பேசப்படுகிறது.  நல்ல படத்தை நான்தான் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டேனோ என்று கூட நினைக்கும் அளவுக்கு படத்திற்கு ஆதரவு வட்டம் இருந்தது. எனவே அந்தத் திரைப்படம் தொடர்பில் சில கேள்விகள் கேட்டு அதற்கு பதில்கள் தேடலாம் என்று நினைக்கிறேன். அது சில புரிதல்களை உருவாக்கும் என நம்புகிறேன்.

ஜகமே தந்திரத்தின் சிக்கல் என்ன?

ஈழ மக்கள் பிரச்சனையா? அகதிப் பிரச்சனையா?

கமர்சியல் சினிமாவால்தான் மக்களைச் சென்றடைய முடியுமா?

வசனங்களும், குறியீடுகளும் திரைப்படத்திற்கு போதுமா?

புலி வியாபாரம்?

முதல் கேள்விக்குச் செல்லலாம். ஜகமே தந்திரத்தின் சிக்கல்கள் என்னவென்றால் மேலே சொன்னதுபோல ஒழுங்கில்லாத கதை, பலவீனமான திரைக்கதை, பலவீனமான பாத்திர படைப்புகள், லாஜிக் ஓட்டைகள் எனச் சொல்லிக் கொண்டே செல்லலாம். சரி இவை என்ன சிக்கல் என்றால், ஈழம், அகதிகள் போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளை மையமாகக் கொண்டு திரைப்படம் எடுக்கும்போது அது பார்வையாளரிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தப் படத்தில் இருக்கும் குறைகள் பார்வையாளர்களிடம் ஈழ மக்களின் கதையை, அவர்களின் வலியை கொண்டு சேர்க்கவில்லை. ஜகமே தந்திரம் ஈழ அரசியலை பேசியது என்றே சொல்லலாமே தவிர அது தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்ல முடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த கதைகளைத் தொடும் போது பெரும் உழைப்பும், பொறுப்புணர்வும் சேர்ந்தே இருக்க வேண்டும். அப்போதுதான் அதனால் தாக்கத்தை உருவாக்க முடியும். படத்தில் அது மருத்துக்கும் இல்லை.

ஈழ மக்கள் பிரச்சனையா? அகதிப் பிரச்சனையா? என்ற இரண்டு கேள்விகளும் முக்கியமான கேள்விகளாகப்படுகிறது. படம் இரண்டைப் பற்றியதும் இல்லை.    இரண்டையும் தொட்டு இருக்கின்றது.  சரி ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், முதலில் ஈழ காட்சிகளுக்கு வருவோம். ஈழத்தின் இறுதிப் போர் காலத்தில் புதுமத்தலன் ஊர்க் காட்சிகளில் இருந்து, முள்வேலி முகாம் வரை காட்டப்படும் காட்சி அமைப்புகள் அத்தனையும் மேம்போக்காக இருக்கின்றது. இறுதிப் போரின் கொடுரம், முள்வேலி முகாம்களின் கொடுமை எதுவுமே சரியாகக் காட்சியாக்கப்படவில்லை. அத்தனை அலட்சியம். இறுதிப் போரின் கொடுரமும், முள்ளிவாய்க்காலின் வலிகளும் சும்மா ஏதோ எடுக்க வேண்டும் என்று எடுத்து இருக்கிறார்கள். சுமார் 40 – 45 கோடியில் எடுக்கப்பட்ட படத்தில் மக்களின் வலியை காட்டுவதற்கான காட்சிகளுக்கு செலவு செய்ய, மனது வரவில்லை போலும்.

சரி மக்களின் வலிகளைக் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் கதையின் மையக்காட்சிகளாக, திருப்புமுனை ஏற்படுத்த வேண்டிய  காட்சிகளாக இருக்கும் ஈழப் போர்க் காட்சிகளை, முள்ளிவாய்க்கால் கொடுரங்களை,   அந்த விதத்திலாவது சரியாக எடுத்து இருக்கலாம். ஆனால் படத்தில் அப்படிக் கூட இல்லை.

படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு ஹாலிவுட் நடிகர் அல்பச்சினோ வேண்டும், ஜேம்ஸ் காஸ்மோ வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து என்று தேடித்திரிந்த இயக்குனர் (அந்த கதாப்பாத்திரத்தில் ஜேம்ஸ் காஸ்மோவுக்கு பதிலாக எந்த வெள்ளைக்கார கிழவன் நடித்திருந்தாலும் பெரிதான வித்தியாசம் தெரிந்திருக்காது) கதையின் திருப்ப புள்ளிக்கு, ஈழ மக்களின் வலிகளைச் சொல்லும் காட்சிகளுக்கு எந்த அளவுக்கு அக்கறை செலுத்தி இருக்க வேண்டும்? அப்படிச் செய்யாதது அவர்கள் நோக்கம் எதை நோக்கியது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

அடுத்ததாக அகதிப் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். அகதிகளாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் பயணம் என்பது எத்தனை கொடுரமானது. இலங்கைக்கு அருகில் இருக்கும் இந்தியாவிற்கு வரும் பயணமே அத்தனை கொடுரமானது. ஐரோப்பிய பயணங்கள் இன்னும் வலி மிகுந்தவை. ஆனால் இரண்டு மணிநேரம் முப்பத்தி எட்டு நிமிடம் ஓடும் படத்தில் அந்த வலிகளுக்கு எல்லாம் இடம் இல்லை. ஏதோ கொஞ்ச தூர நடை, ஒரு லாரி பயணம், ஒரு தங்குமிடம், ஒரு இரயில் பயணம் என முடித்திருக்கிறார்கள்.

அகதிகள் பிரச்சனையை, நிறவெறியை, வெள்ளை இனத்தவர்களின் ஆதிக்கத்தை எந்த இடத்திலும் காட்சியாக உணரும்படி காட்டவில்லை. எதுவுமே தாக்கத்தைக் கொடுக்கவில்லை.

மேற்குலக நாடுகளில் அகதிகளை கேங்ஸ்டர்களாக முத்திரை குத்தி, அவர்களால்தான் அந்த நாடுகளில் வன்முறை நடக்கின்றது என்ற வழக்கமான வெள்ளை இனப் பொதுப்புத்தியைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.  அந்தப் பொதுபுத்திக்கு இந்தத் திரைப்படம் தீனி போடுகிறது. எனக்குத் தெரிந்து இப்படி உதவிசெய்ய வெளிநாடுகளில் எந்த கேங்ஸ்டரும் இல்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை கூட இப்படிப்பட்ட பொதுப்புத்தி தன்மையில் இருப்பதாக பேசப்பட்டது. இத்தனைக்கும் அந்தப் படம் அந்த மக்களின் வாழ்வியலை, போராட்டத்தை மையமாகக் கொண்டது. அப்படி என்றால் ஜகமே தந்திரத்தை என்ன சொல்வது?.

p18013414_p_v10_aa-e1624539207304.jpg

புலம்பெயர்ந்து போதலைப் பற்றி தமிழில் எத்தனை நூல்கள் வந்துள்ளன. அதுவும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதைப் பற்றியெல்லாம் எத்தனை நூல்கள் வந்துள்ளன. அதில் ஏதாவது ஒன்றை எடுத்திருந்தால்கூட புலம்பெயர்தலின் எதார்த்தப் பிரச்சனைகளை மையம் கொண்டிருக்க முடியும். புலம்பெயர் படைப்புகள் பற்றி அவர்களுக்கு நிச்சயமாக தெரிந்து இருக்கும். அப்படி இருந்தும் அவற்றைக் கொண்டு ஏன் அகதிகள் பிரச்சனையைத் தெளிவாக சொல்லவில்லை?

மேற்கூறிய விடயங்களுக்கு ஒரு பதில் சொல்லமுடியும். அதாவது கமர்சியல் சினிமாவில் இவ்வளவே பேசமுடியும். அப்படி என்றால் மூன்றாவது கேள்வி அதுதான் அதாவது கமர்சியல் சினிமாவால்தான் மக்களை சென்றடைய முடியுமா? என்பதே. இந்தக் கேள்விக்கு பதில் தமிழ் சினிமாவின் சமீபத்திய போக்கே நாம் உதாரணமாகக் கொள்ளலாம். அரசியல் திரைப்படங்கள், மக்கள் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் தமிழில் எந்த அளவுக்கு வெற்றியை அடைகின்றன. அதுவும் தனுஷ் கதாநாயகனாக நடித்தே எத்தனை திரைப்படங்கள் நேரடி அரசியல் தன்மையோடு வந்துள்ளது. இன்னும் கமர்சியல் சினிமா வாதத்தைக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம். அழுத்தமான கதைகளை நடிக்கும் தனுஷ் போன்ற கதாநாயகனை வைத்து, ஈழப்பிரச்சனை, அகதிகள் பிரச்சனை போன்ற மிக முக்கிய பிரச்சனைகளைக் கொண்டு கமர்சியல் அல்லது கேங்ஸ்டர் படம் எடுப்பது என்பது எவ்வளவு மோசமானது. அந்த சிந்தனைப் போக்கே மிக மோசமானது. அது எவ்வளவு மோசம் என்பதற்கு ஜகமே தந்திரம் படமே சாட்சியாக உள்ளது.

இந்த இடத்தில் இன்னொரு வாதமும் வைப்பார்கள்,  ஈழம் பற்றி எடுத்தால் சென்சர் பிரச்சனை வரும் என்று, அப்படி என்றால் வெளிநாட்டு அகதிப் பிரச்சனையையாவது ஒழுங்காக எடுத்திருக்கலாம், ஆனால் எடுக்கவில்லை.

அவர்கள் எடுத்திருக்கும் ஜகமே தந்திரத்தின் மையக் கதை அல்லது அதன் அரசியல் அதிகபட்சமாக வெறும் வசனங்களும், குறியீடுகளுமாகவே திரைப்படத்தில் வருகின்றன. இவை மட்டுமே பார்வையாளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி விடுமா என்றால் அது நாம் சிலாகித்து பேச மட்டுமே பயன்படுமே தவிர, எந்த விதத்திலும் எடுத்துக் கொண்ட கதையின் நியாயத்தைப் பார்வையாளர்களிடம் உணர்த்தாது, உணர்த்தவில்லை.

இயக்குனர் எந்த வித அரசியல் நிலைப்பாட்டில் இருந்தாலும் சரி, திரைப்படம் என்பது, காட்சி படிமமாக எது கட்டமைக்கப்படுகின்றதோ, அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றதோ அதில் இருந்துதான் அதன் வெற்றி இருக்கின்றது. வசனங்களை எழுதுவதில் மட்டும் இல்லை.

கட்டுரையின் ஆரம்பத்தில் இருந்து வரும் கேள்வி படத்தில் ஈழப்பிரச்சனையை, அகதிகள் பிரச்சனையை ஏன் இவ்வளவு மோசமாக கையாண்டார்கள்  என்பதே. படத்தில் அவர்களுக்கு தேவைப்பட்டது கேங்ஸ்டர் கதைக்கு சுவாரஸ்யம், அல்லது அதற்கு வித்தியாசமான கதைக்களமே தவிர  அவர்களுக்கு ஈழ மக்களின், அகதிகளின் பிரச்சனை அல்ல. ஈழ மக்களின் பிரச்சனைகளின் அடிப்படையில் இருந்து இந்தக் கதை எழுதப் படவும் இல்லை. எடுக்கப்படவும் இல்லை. அதன் விளைவுதான் படம் இந்த அளவுக்கு ஈழ, அகதிப் பிரச்சனையை மோசமாகக் கையாண்டதற்கு காரணம்.

இன்னும் ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். இவை அனைத்திற்கு பின்னாலும்  ஒரு வியாபாரக் கணக்கும் உள்ளது. அது புலி உணர்வு வியாபாரம். புலி உணர்வு வியாபாரம். என்பது அரசியலில் நடைபெறும் மிக நல்ல வியாபாரம். அரசியலில் என்ன அய்யோக்கியத்தனம் செய்து இருந்தாலும், புலிகள் பெருமை பேசினால் நீங்கள் புனிதராக்கபப்படுவீர்கள்.  அதன் மூலம் உங்களுக்கு தேவையான பொருளாதார உதவிகள், அரசியல் பிரபல்யம் என எல்லாம் கிடைக்கும். இப்படி புலிகள் உணர்வு அரசியல் வியாபாரமாக சிறப்பாக இருக்கும் தமிழ்நாட்டில், இப்போது திரைப்படங்களிலும் புலிகள் உணர்வு வியாபாரம் நடக்க ஆரம்பிக்கின்றது. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அப்படி ஒரு வசூல் நடத்தியது. அதேபோல் கதை எப்படி இருந்தால் என்ன, அதில் பேசவேண்டிய மக்கள் பிரச்சனைகள் எப்படி பேசி இருந்தால் என்ன, புலிகள் பற்றி ஒரு நாலு வசனம் , அங்கும் இங்குமாய் நாலு குறியீடு இருந்தால், மக்களிடம் கட்டமைக்கப் பட்டிருக்கும் புலிகள்  உணர்வுகளைக் கொண்டு படத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்து இருக்கிறார்கள். அதுவே நடந்தும் இருக்கின்றது.

பேட்ட படத்தில் ரஜனிகாந்தின் பழைய ஸ்டைல்களைக் கொண்டு படத்தின் ஓட்டைகளை அடைத்து ஓட்டியது போல், இதில் புலிகள் உணர்வுகளைக் கொண்டு படத்தின் ஓட்டைகள் அடைத்து ஒட்டப்பட்டிருக்கின்றது. படம் ஓட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஈழ, அகதிப் பிரச்சனைகளுக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை.

நமது தோழர்கள் ஜகமே தந்திரம் மசலாப் படத்திற்குத் தத்துவ விளக்கங்களையும் நியாயங்களையும் எழுதுவதைவிட, காலையில் நடை பயிற்சி, யோகாசனம், காப்பி அருந்துவது, உலகத்தைப் பற்றி யோசனை செய்வது போன்ற வேறு ஏதாவது செய்யலாம் எனத் தோன்றுகிறது. 

பின் குறிப்பு – 1 : இதே நெட்பிளிக்ஸ்-ல் ஸ்டேஸ்லெஸ்(Stateless) என்ற தொடர் வந்துள்ளது. அகதிகள் பிரச்சனைகள், அவர்கள் புலம்பெயர் நாடுகளில் என்ன கஷ்டப்படுகிறார்கள். வளர்ந்த நாடுகளின் அரசுகள் அவர்கள் மீது எப்படிப் பட்ட கொடூரங்களை செய்கின்றது என எடுத்திருப்பார்கள். அதை கொஞ்சம் பார்ப்பது சாலச் சிறந்தது.

பின் குறிப்பு – 2 : இதே காலகட்டத்தில் அமேசான் தளத்தில் ஷெர்னி(Sherni) என்ற திரைப்படம் வந்துள்ளது. அதுவும் புலிகள் பற்றிய படமே. காட்டுப்புப் புலி, நாட்டில் இருக்கும் பெண் அதிகாரி செயல்பாடுகள் பற்றிய படம். அந்தப் படம் அரசால் காடும், புலிகளும், மக்களும் என்ன ஆகிறார்கள் என்பதைப் பேசுகிறது. படம் அது எடுத்துக் கொண்ட கதையை, அதன் களத்தை விட்டு எங்கும் போகவில்லை. கதைக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் வைத்து எடுத்து இருக்கிறார்கள். அதையும் கொஞ்சம் பார்ப்பது நன்று.

https://utattam.wordpress.com/2021/06/24/202105/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.