Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ பதவிக் காலத்தை அரசாங்கம் நிறைவு செய்வதற்குள் நாடு இருக்குமா ? ; மகாசங்கத்தினருடன் வீதிக்கிறங்கி போராடவும் அஞ்சப்போவதில்லை “

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

சுபீட்சமாக எதிர்கால கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி ஒருபோதும் நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். ஆகவே ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் ஆற்றும் உரை பயனற்றதாகவே கருதப்படும்.

தேசியத்திற்கு முரணாக அரசாங்கம் செயற்படுகிறது.  நாட்டை பிற  தரப்பினருக்கும் விற்கும் கொள்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. 

அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்குள் நாடு இருக்குமா  என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. 

பொறுப்பற்ற வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் மகாசங்கத்தினரை ஒன்றினைத்து வீதிக்கிறங்கி அரசாங்கத்திற்கு எதிராக போராடவும் அஞ்சபோவதில்லை என  அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

thero.jpg

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்கு முரணாக செயற்பட்டது. அக்காலக்கட்டத்தில் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் காரணமாகவே நாட்டு மக்கள்  2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஆட்சி மாற்றத்தினால்  அரச சுகபோகங்கள் கிடைக்கப் பெறும் என்று கருதி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை.

பலமான தலைமைத்துவத்தின் ஊடாக  நாடு முன்னெற்றமடையும் என எதிர்பார்த்தோம்.எமது எதிர்பார்ப்பு தவறு என்பதை  தற்போது உணர்ந்துக் கொண்டுள்ளோம்.

அரசாங்கம் மீதான நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்து விட்டது. ஆனால் நாட்டு மக்கள் அரசாங்கம் மீது கொண்ட நம்பிக்கை இல்லாமல் போவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

உர பற்றாக்குறையினால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகளுக்கு தேவையான உரத்தை இலவசமாக வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் உரத்தை அதிக விலைக்கு கூட பெற முடியாத நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது.

விவசாயிகளின் பிரச்சினைக்கு  அரசாங்கம்  உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். இல்லாவிடின்   அவர்களுடன் ஒன்றினைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டிய நிலை ஏற்படும். ஆளும் தரப்பினர் உறுப்பினர்கள். அடுத்த தேர்தலில் மக்கள் மத்தியில் வாக்கு கேட்டு செல்ல  தயாராக வேண்டாம்.

சுபீட்சமான எதிர்கால கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது.  பஷில் ராஜபக்ஷ  வந்தவுடன் எரிபொருள் விலை குறைவடையும் என்று ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

அவ்வாறின் எரிபொருள் விலையேற்றத்தை அரசியல் சூழ்ச்சி என்றே கருத வேண்டும். நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டை முன்னேற்ற முடியாது என்பதை ஜனாதிபதி புரிந்துக் கொள்ள வேண்டும்.

தேசியத்திற்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர்  வானில் தோன்றும் சூரியனையும், நிலவையும் கூட விட்டு வைக்கமா என்ற சந்தேகம்  எழுந்துள்ளது.

தேசிய வளங்கள் பிற நாட்டவர்களுக்கு விற்கப்படுவதை  அவதானிக்க முடிகிறது. தவறை திருத்திக் கொண்டு அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட வேண்டும். இல்லாவிடின்  மகா சந்கத்தினரை ஒன்றினைத்து அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்கி போராடுவோம்  என்றார்.

“ பதவிக் காலத்தை அரசாங்கம்  நிறைவு செய்வதற்குள் நாடு இருக்குமா ? ; மகாசங்கத்தினருடன் வீதிக்கிறங்கி போராடவும் அஞ்சப்போவதில்லை “ | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2021 at 13:14, பிழம்பு said:

அரசாங்கம் பதவி காலத்தை நிறைவு செய்வதற்குள் நாடு இருக்குமா  என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. 

எங்களை சிங்களவன் வாழவிட்டால் காணும் என்கிறம்  சிங்களவனோ நாடு இருக்குமா என்று புலம்ப தொடங்கிவிட்டான் .

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

எங்களை சிங்களவன் வாழவிட்டால் காணும் என்கிறம்  சிங்களவனோ நாடு இருக்குமா என்று புலம்ப தொடங்கிவிட்டான் .

நான் ஒரு பதிவில் போட்டு இருந்தேன்.

சுதந்திரத்தை நாம் முழுமையாக அனுபவிப்போம், தமிழர்களுக்கு பகிர மாட்டோம்.

ஆனால் அந்த சுதந்திரத்துக்கு சிக்கல் வந்தால், போராட ஏமாளி தமிழன் தேவை.

பிரிட்டிஷ் காரனுடன் போராட, சார் பொன் ராமநாதன். குதிரைகளை கழட்டி, அவர் வந்த வண்டியை தாமே இழுத்து போய், குலை அடித்தார்கள். 

இந்திய ராணுவத்துடன் போராட பிரபாகரன். இந்தியாவுடன்மோதி, எமது நாட்டின் சுதந்திரத்தினை பாதுகாத்து தந்த, ஒப்பிலா தைரியமிக்க இலங்கையர் என்று குலை அடித்தார் பிரேமதாச.

புலிகளை மடக்க, கதிர்காமர். சிறுவர்களை, பயிற்றுவித்து, யுத்த முனைக்கு அனுப்பினார் என்று பயங்கரவாதிகள் லேபிள் போட வைத்த, கதிர் தான் எமது அடுத்த பிரதமர் என்று குலை அடித்தார்கள். அதுக்கு முதலே மகிந்தா அவரை அனுப்பி வைத்தார்.

இனி சீனாவுடன் போராட, வாருங்கள் தமிழர்களே என்கிறார், ஒரு தேரர். குலையடிப்பு விரைவில் ஆரம்பமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு இங்கைதான் இருக்கும்.ஆனால் அரசுதான் மாறி இரக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நான் ஒரு பதிவில் போட்டு இருந்தேன்.

சுதந்திரத்தை நாம் முழுமையாக அனுபவிப்போம், தமிழர்களுக்கு பகிர மாட்டோம்.

ஆனால் அந்த சுதந்திரத்துக்கு சிக்கல் வந்தால், போராட ஏமாளி தமிழன் தேவை.

பிரிட்டிஷ் காரனுடன் போராட, சார் பொன் ராமநாதன். குதிரைகளை கழட்டி, அவர் வந்த வண்டியை தாமே இழுத்து போய், குலை அடித்தார்கள். 

இந்திய ராணுவத்துடன் போராட பிரபாகரன். இந்தியாவுடன்மோதி, எமது நாட்டின் சுதந்திரத்தினை பாதுகாத்து தந்த, ஒப்பிலா தைரியமிக்க இலங்கையர் என்று குலை அடித்தார் பிரேமதாச.

புலிகளை மடக்க, கதிர்காமர். சிறுவர்களை, பயிற்றுவித்து, யுத்த முனைக்கு அனுப்பினார் என்று பயங்கரவாதிகள் லேபிள் போட வைத்த, கதிர் தான் எமது அடுத்த பிரதமர் என்று குலை அடித்தார்கள். அதுக்கு முதலே மகிந்தா அவரை அனுப்பி வைத்தார்.

இனி சீனாவுடன் போராட, வாருங்கள் தமிழர்களே என்கிறார், ஒரு தேரர். குலையடிப்பு விரைவில் ஆரம்பமாகும்.

நம்ம நண்பர்  மொழிபெயர்ப்பு செய்பவர் நீண்ட நாட்களின் பின் சந்திப்பு "நம்ம ஆட்கள் இங்கு அசேலம் அடிக்கையில் புலிகளாலும்  பிரச்சனை என்று நம்ம தமிழ்ச்சனம் அசேலம்  அடித்தவையல்"  எனக்கு பத்தி கொண்டு வந்தது எத்தனைதரம் இதை எனக்கு சொல்லிவிட்டாய் ?  நண்பரோ பொறுடா சொல்லவந்ததை சொல்லவிடு இப்ப கடந்த பத்து வருடங்களில் சிங்களவர் முஸ்லீம்கள் இங்கு அசேலம் அடிக்கையில்  ஒருத்தர் பாக்கி இல்லாமல் சொல்லும் கதை என்று நிறுத்திவிட்டு என்னை பார்த்தான் பின் LTTE க்கு உதவி செய்தது இப்போ சமீபத்தில் இலங்கை உளவு அமைப்பு கண்டு பிடித்துவிட்டது அதனால் அங்கு இருக்க முடியாது உயிர் பாதுகாப்புக்கு இங்கு வந்துள்ளோம் தலைவர் எங்களுக்கும் மட்டும் அல்ல இங்கு வரும் சிங்களவர்  முஸ்லிம்களுக்கும் தலைவர் சிரித்துக்கொண்டு சொன்னான் கடைசியா ஒன்று சொன்னான் .

"புலியும் அடித்தது என்ற தமிழன் மாவீரர் நாள் ஹோலில் நிக்கிறான்.............புலிக்கு உதவியதால்  அங்கு இருக்க முடியாது என்று அசேலம் அடித்த சிங்களவன் இலங்கையரசுக்கு ஆதரவான கூட்டம்களில் இருந்து தமிழர்களுக்கு எதிராக குரல் எழுப்புகிறான் ."

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஊடகவியலாளரிடம் கூறுகின்றார்? நேரடியாக ஜனாதிபதியை சந்தித்து அல்லது தொலைபேசியில் அழைத்து எச்சரிக்கை கொடுக்கலாமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் வெற்றி மமதை நீண்ட காலத்திற்கு பயன் தராது.

  • கருத்துக்கள உறவுகள்

roflphotos-dot-com-photo-comments-201803

  • கருத்துக்கள உறவுகள்

நந்த சேனாவுக்கு தெரியும் குரைக்கிறது எதுவும் கடியாதென்று. இவர்களை வைத்து தம் காரியங்களை சாதித்தவர்களுக்கு தெரியாதா இவர்களை எப்படி மடக்குவதென்று? பொறுத்திருந்து பாப்போம் எது வெல்லுகிறது என்று. ஒரு வெடியை கொளுத்தி போட்டு பாத்தால் தெரியும் வாய் வீரம் எவ்வளவு என்று.

On 25/6/2021 at 22:14, பிழம்பு said:

வானில் தோன்றும் சூரியனையும், நிலவையும் கூட விட்டு வைக்கமா

அது இலங்கைக்கு சொந்தமாயிருந்தால், விக்க கூடியதாக இருந்தால் எப்பவோ விலை போயிருக்கும். அது யாராலும் முடியாதபடியால், கடவுளுக்கு சொந்தமான காரணத்தால்  இன்றுவரை ஏழைகளும், பணக்காரரும் அதன் பயனை வேறுபாடின்றி  அனுபவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

எங்களை சிங்களவன் வாழவிட்டால் காணும் என்கிறம்  சிங்களவனோ நாடு இருக்குமா என்று புலம்ப தொடங்கிவிட்டான் .

மிகவும் உண்மை. எனக்கு பல சிங்கள நண்பர்கள் உள்ளார்கள். 30 வருடங்களுக்கு மேலாக பலகும் இவர்களின் சமீப கால மாற்றம் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. 90களில் இவர்கள் தமிழர்களை இழிவாக பேசிய இவர்கள் இலங்கையின் தாங்கள் தான் மைந்தர்கள் என நினத்து, மிக கேவலாமாக பேசுவார்கள். இளவதில் அப்படியுருந்த இவர்கள். இப்பொழுது முற்றிலும் மாறி விட்டார்கள். 

எப்படா இலங்கையை விட்டு போவோம் என்கின்றார்கள். சிலர் ஏன் இந்த ஊத்தை நாட்டில் பிறந்தோம் என்கின்றார்கள். தற்போதுள்ள அரசையும் கடுமையாக விமர்சிக்கின்றார்கள். தேசிய தலைவர் செய்தது ஒருவகையில் சரியென்கிறார்கள். ஏன் இந்த மாற்றம் என புரியவில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்

அப்பு சும்மா கத்தாமல் போய் அரசாங்க உதவியிலை உடம்பை வளர்க்கிற வழியைப்பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

4 minutes ago, வாதவூரான் said:

அப்பு சும்மா கத்தாமல் போய் அரசாங்க உதவியிலை உடம்பை வளர்க்கிற வழியைப்பாருங்கோ

உடம்ப மட்டுமா???😢

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

மிகவும் உண்மை. எனக்கு பல சிங்கள நண்பர்கள் உள்ளார்கள். 30 வருடங்களுக்கு மேலாக பலகும் இவர்களின் சமீப கால மாற்றம் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. 90களில் இவர்கள் தமிழர்களை இழிவாக பேசிய இவர்கள் இலங்கையின் தாங்கள் தான் மைந்தர்கள் என நினத்து, மிக கேவலாமாக பேசுவார்கள். இளவதில் அப்படியுருந்த இவர்கள். இப்பொழுது முற்றிலும் மாறி விட்டார்கள். 

எப்படா இலங்கையை விட்டு போவோம் என்கின்றார்கள். சிலர் ஏன் இந்த ஊத்தை நாட்டில் பிறந்தோம் என்கின்றார்கள். தற்போதுள்ள அரசையும் கடுமையாக விமர்சிக்கின்றார்கள். தேசிய தலைவர் செய்தது ஒருவகையில் சரியென்கிறார்கள். ஏன் இந்த மாற்றம் என புரியவில்லை.
 
அவர்கள் நினைத்தாலும் திரும்பி போய்  தொட  முடியாத புள்ளியை விட்டு விலகிப்போகதொடங்கியதின் ஆரம்பமே மே  18  

பணத்துக்காக புலிக்கு உதவினான் இப்போ புனர்வாழ்வு முகாமில் இருந்த முன்னாள் புலி காட்டி கொடுத்துவிட்டார் அதனால் அங்கு இருக்க முடியாது என்று அசேலம் அடிக்கும் சிங்களவர் தொகை ஒரு பக்கம் என்றால் .. யாழில் பழக்கமான ஆமியே இங்கு அசேலம் அடிக்கும் தமிழர்களுக்கு தேவையான தரவுகளை அனுப்பி உதவி செய்கிறார் .இப்படி ஒருத்தர் மாறி ஒருத்தர் அந்த அழகான தீவை விட்டு இந்த கட்டிட  காடுகளுக்குள் காணாமல் போகிறோம் திறமையற்ற சிங்கள அரசியல்வாதிகளினால் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, colomban said:

எப்படா இலங்கையை விட்டு போவோம் என்கின்றார்கள். சிலர் ஏன் இந்த ஊத்தை நாட்டில் பிறந்தோம் என்கின்றார்கள். தற்போதுள்ள அரசையும் கடுமையாக விமர்சிக்கின்றார்கள். தேசிய தலைவர் செய்தது ஒருவகையில் சரியென்கிறார்கள். ஏன் இந்த மாற்றம் என புரியவில்லை.

எமது தேசிய தலைவர் தமிழின விரோதிகளுக்கு மட்டுமே எதிராக இருந்தார்.அது சிங்கள/தமிழ் எதிரிகள் உட்பட...

சிங்கள பொது மக்களை அழிக்க வேண்டும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார் என எண்ணுகின்றேன். இதை சிங்கள பொது மக்கள் நன்கே உணர்ந்திருப்பர்.

தமிழருக்கு சார்பாக சிங்கள மக்கள் போராட்டம் செய்யும் காலமும் வரலாம்.யார் கண்டார்?:)

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

தமிழருக்கு சார்பாக சிங்கள மக்கள் போராட்டம் செய்யும் காலமும் வரலாம்.யார் கண்டார்?:)

எல்லாம் ஒரு றாத்தல் பாண் செய்யும் வேலை .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சிங்கள பொது மக்களை அழிக்க வேண்டும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார் என எண்ணுகின்றேன்

இனவாத சிங்கள அரசே நம் எதிரி, சிங்கள மக்களல்ல இதை அவர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். புலிகளிடம் போரில் பிடிபட்டு விடுதலை செய்யப்பட்ட இராணுவத்தினரைக் கேட்டால் சொல்வார்கள். ஆனால் அவர்களை பத்திரிகைகள் பேட்டி எடுக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை, அவர்களில் சிலர் மீண்டும் களத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களோடு உண்மையும் மரணித்துவிட்டது. சிலர் பேசினால் காணாமற் போய்விடுவோம் என்கிற பயத்தில் அமைதியாகி விட்டார்கள். எங்களில் சிலருக்கே போர் ஏன்? எப்படி? யாரால்  ஏற்பட்டது என்று புரியவில்லை. சிங்கள அரசியல் வாதிகள், இனவாதிகள் தவிர ஏனைய  சிங்கள மக்களுக்கு உண்மை தெரியவில்லை. இது ஒரு மீட்ப்புப் போராக காட்டப்படிருந்தது. உண்மை வெளிவர காலந்தாழ்த்தினாலும் வெளிவராமற் போகாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

அவர்கள் நினைத்தாலும் திரும்பி போய்  தொட  முடியாத புள்ளியை விட்டு விலகிப்போகதொடங்கியதின் ஆரம்பமே மே  18  

பணத்துக்காக புலிக்கு உதவினான் இப்போ புனர்வாழ்வு முகாமில் இருந்த முன்னாள் புலி காட்டி கொடுத்துவிட்டார் அதனால் அங்கு இருக்க முடியாது என்று அசேலம் அடிக்கும் சிங்களவர் தொகை ஒரு பக்கம் என்றால் .. யாழில் பழக்கமான ஆமியே இங்கு அசேலம் அடிக்கும் தமிழர்களுக்கு தேவையான தரவுகளை அனுப்பி உதவி செய்கிறார் .இப்படி ஒருத்தர் மாறி ஒருத்தர் அந்த அழகான தீவை விட்டு இந்த கட்டிட  காடுகளுக்குள் காணாமல் போகிறோம் திறமையற்ற சிங்கள அரசியல்வாதிகளினால் .

எனக்கு இவர்களை பார்க்க இப்பொழுது பாவமாகவும் இருக்கின்றது. இவர்களிடம் எப்பொழுது insecurity மனதளாவில் ஓர் காணபடுகின்றது. உலகின் சிறிய இனமான தாங்களை சக இனத்தவர் அடித்து பிடித்து அழித்து விடுவார்களே என தேவையற்ற அச்சமே காரணம். 

இப்பொழுது சீனர்களை கண்டு பயப்படுகின்றார்கள் இன்னும் சில காலத்தில் சீனர்கள் தாங்களை அழித்து விடுவார்களோ என ஓர் அச்சம்.  
தமிழர்களிடம் இப்படியில்லை, ஒற்றுமையில்லவிடினும் மன‌தளவில் உறுதியானவர்கள்
வரலாறு முழுக்க இப்படித்தானே பிரச்சிசினகள் வரும்போது அதை தீர்க்க வீர/புத்தியுள்ள தமிழர்களின் உதவி தேவை பின்பு தூக்கி எறிவர்கள்.

ராஜபக்சர்களின் பலம் சரிந்து வருகின்றது. யுத்த வெற்றி மூலம் தாங்களை சிங்கள மக்கள் மத்தியில் கதாநாயகர்களாக சித்தரித்த்து வந்த இவர்கள், வெகு விரைவில் தூக்கி எறியப்படுவார்கள்.

On 30/6/2021 at 15:33, Nathamuni said:

நான் ஒரு பதிவில் போட்டு இருந்தேன்.

சுதந்திரத்தை நாம் முழுமையாக அனுபவிப்போம், தமிழர்களுக்கு பகிர மாட்டோம்.

ஆனால் அந்த சுதந்திரத்துக்கு சிக்கல் வந்தால், போராட ஏமாளி தமிழன் தேவை.

பிரிட்டிஷ் காரனுடன் போராட, சார் பொன் ராமநாதன். குதிரைகளை கழட்டி, அவர் வந்த வண்டியை தாமே இழுத்து போய், குலை அடித்தார்கள். 

இந்திய ராணுவத்துடன் போராட பிரபாகரன். இந்தியாவுடன்மோதி, எமது நாட்டின் சுதந்திரத்தினை பாதுகாத்து தந்த, ஒப்பிலா தைரியமிக்க இலங்கையர் என்று குலை அடித்தார் பிரேமதாச.

புலிகளை மடக்க, கதிர்காமர். சிறுவர்களை, பயிற்றுவித்து, யுத்த முனைக்கு அனுப்பினார் என்று பயங்கரவாதிகள் லேபிள் போட வைத்த, கதிர் தான் எமது அடுத்த பிரதமர் என்று குலை அடித்தார்கள். அதுக்கு முதலே மகிந்தா அவரை அனுப்பி வைத்தார்.

இனி சீனாவுடன் போராட, வாருங்கள் தமிழர்களே என்கிறார், ஒரு தேரர். குலையடிப்பு விரைவில் ஆரம்பமாகும்.

மிகவும் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குமாருக்கு கோத்தாவின் எண்ணவோட்டமும், மறுபக்கமும் தெரியவில்லை.

கொத்தவும் , மகிந்தவும் வாழ்நாள் அதிபரும், பிரதமரும். இது முதல் காப்புறுதி யுத்த  குற்றம் மற்றும் இனப்படுகொலை என்பதில் குற்றசாட்டு வைக்கப்பட்டாலும் விலத்தி இருபதற்கு. 2 ஆவது காப்புறுதி சீனா.  

மியான்மாரின் பிக்குமார் அரசியல் கதைக்க வெளிக்கிட்டு வாங்கின ஆப்புகளை, சிங்கள பௌத்த பிக்குமார்  மீது பார்ப்பது நல்லது.

சிங்கல பௌத்த பிக்குகள் தம்மை முப்படைகளும் ஒன்றும் செய்யாது என்று கனவு காண்கிறார்கள்.

அனால், கோத்த அதை செய்யத்தேவை இல்லை. விகாரைக்குள் நடக்கும் கூத்துகளை வைத்தே இந்த பிக்குமாரின் பலரின் வாயை மூடலாம், தேவைப்பட்டால் நாயை பட்டியில் இழுத்து வந்து கட்டுவது  போல சிறைக்குள் போடலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.