Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்டதால், பதவியை இழந்த இங்கிலாந்து அமைச்சர்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்டதால், பதவியை இழந்த இங்கிலாந்து அமைச்சர்..!

முழு உலகையுமே கொரோனா தொற்று ஆக்கிரமித்துள்ள நிலையில், சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டும், பின்பற்றப்பட்டுர் வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்திலும், சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இச்சூழலில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். 

குறித்த சம்பவம், அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுகாதார விதிமுறைகள் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், மாட் ஹான்க் தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கெமராவில் பதிவான நிலையில், அந்த நாட்டின் பிரபல தினசரி பத்திரிகை ஒன்று இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது.

________________________________________

இதனை தொடர்ந்து சுகாதார அமைச்சர் மாட் ஹான்க், தனது இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜோன்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரியிருந்தார்.

இதையடுத்து மாட் ஹான்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜோன்சன் அறிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சர் மாட் ஹான்க் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்ததமாக இந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலிற்கமைய சுகாதார அமைச்சர்  மாட் ஹான்க் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

https://www.virakesari.lk/article/108293

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-4.png

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு படத்திலும்… தலையை குனிந்து கொண்டு நிற்கிறார். நெடுகவும் அவர் அப்படியா?

அல்லது… முத்தம் கொடுத்து, பதவி பறிபோன பின்… இப்படியா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இரண்டு படத்திலும்… தலையை குனிந்து கொண்டு நிற்கிறார். நெடுகவும் அவர் அப்படியா?

அல்லது… முத்தம் கொடுத்து, பதவி பறிபோன பின்… இப்படியா? 🤣

முத்த சம்பவத்தின்போது இரண்டுபேரில் ஒருத்தர் பல்லு  மினுக்கேல்ல போல அதனால் வந்த பாதிப்பாகவும் இந்த தலை குனிவு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

முத்த சம்பவத்தின்போது இரண்டுபேரில் ஒருத்தர் பல்லு  மினுக்கேல்ல போல அதனால் வந்த பாதிப்பாகவும் இந்த தலை குனிவு இருக்கலாம்.

கன்னத்தில் முத்தமிட்டவர் என நினைத்தேன். 😜

💋“பிரெஞ்சு கிஸ்” 👄 அடிக்கும் போது, நாலு தரம் யோசிக்க வேணும் என்று அந்தாளுக்கு தெரியாமல் போச்சே… 🤣

  • கருத்துக்கள உறவுகள்

செல்பி எடுத்திருப்பாங்களோ?! இல்லை கூடவே படப்பிடிப்பாளரும் வைச்சிருந்தவங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

செல்பி எடுத்திருப்பாங்களோ?! இல்லை கூடவே படப்பிடிப்பாளரும் வைச்சிருந்தவங்களோ?

 CCTV இல் பிடிபட்டுப்போயினம். மிச்சம் உதுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் @Nathamuni க்குத்தான் தெரியும்🤭

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

 CCTV இல் பிடிபட்டுப்போயினம். மிச்சம் உதுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் @Nathamuni க்குத்தான் தெரியும்🤭

spacer.png

ஓ நிம்மதியா முத்தம் குடுக்க முடியுதா இந்த CCTV உலகத்தில!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 CCTV இல் பிடிபட்டுப்போயினம். மிச்சம் உதுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் @Nathamuni க்குத்தான் தெரியும்🤭

spacer.png

இந்த செய்தியை சன்னில் வாசித்து விட்டு, @Nathamuni ரசம் சொட்ட சொட்ட ஒரு ஆக்கம் போடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆளை காணம்🤣.

1 hour ago, ஏராளன் said:

ஓ நிம்மதியா முத்தம் குடுக்க முடியுதா இந்த CCTV உலகத்தில!

பழைய பல்கலைகழக தோஸ்துக்கு, அரசாங்க காசில வேலை கொடுத்து, முத்தம் கொடுத்தால் அதை ஒரு குத்தம் எண்டிடாங்க மை லார்ட்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

இந்த செய்தியை சன்னில் வாசித்து விட்டு, @Nathamuni ரசம் சொட்ட சொட்ட ஒரு ஆக்கம் போடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆளை காணம்🤣.

பழைய பல்கலைகழக தோஸ்துக்கு, அரசாங்க காசில வேலை கொடுத்து, முத்தம் கொடுத்தால் அதை ஒரு குத்தம் எண்டிடாங்க மை லார்ட்🤣.

நாதம் ஆக்கம் போடுவார் - செய்தி மூலமில்லாமல். அடுத்த நாள் யாராவது அதே செய்தியை இன்னொரு தமிழ் இணையத்தில் பார்த்து விட்டு "நாதத்தின் ஆக்கத்தை சுட்டுப் போட்டிருக்கீனம்" என்று கவலை கொள்வார்!

இதெல்லாம் பழகிப் போச்சு!😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த செய்தியை சன்னில் வாசித்து விட்டு, @Nathamuni ரசம் சொட்ட சொட்ட ஒரு ஆக்கம் போடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆளை காணம்🤣.

உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று ஆங்கிலத்தில் ஒரு பதிலை போட்டு படத்தை காட்ட வேண்டியது தானே 1f60e.png

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nunavilan said:

உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று ஆங்கிலத்தில் ஒரு பதிலை போட்டு படத்தை காட்ட வேண்டியது தானே 1f60e.png

அது படம் அல்ல பதில்-படம். 

நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை……

  • கருத்துக்கள உறவுகள்

நம்மை பற்றியும், நமது ஆக்கத்தை பற்றியும், யாரோ, ஆராச்சி கட்டுரை எழுதிகினம் போலை கிடக்குது....

சரி, சான்றிதழை வாங்கி சுவரில கொழுவிப்போட்டு, உங்கை வந்து, இந்த மாதிரி படிப்புக்கு சம்பந்தமில்லாமல், நம்மை போன்ற தற்குறிகளுடன், சேர்ந்து..... எழுதினா போச்சு..... :grin:

கிருபன் அய்யா, தல..... இளம் மனைவி, சிறு பிள்ளைகளுக்கு துரோகம் செய்த இந்த மாதிரி பண்ணாடைகள் குறித்து எழுதுவதே வீண் வேலை.

'மு' சரியா இருந்தால், கீழே இருப்பவர்கள் சரியாக இருப்பார்கள்.

போரிஸ்.... இந்த விசயங்களில்.... ஒரு ஒழுங்கில்லாத மனிதர். இரு வாரங்களுக்கு முன்னர் தான், கை குழந்தையுடன், காதலியை மூன்றுவதாக (4?) கட்டினார்....

அவரது ஆட்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும். 🤔

ஆனால் ஒன்று, வெள்ளை வெளியே போக, உள்ளே காக்கா (சாஜித் ஜாவிட்) வந்து விட்டார். 👍

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நாதம்,

ஆர் ஆரோடயும் தனிப்பட்ட வாழ்வில் போகட்டும். ஆனால் வரிப்பணத்தில் நண்பிக்கு வேலை கொடுத்தது பெரிய பிழை.

அவர் ஜில்மால் பண்ண நாங்களே படியளக்கிறது🤣.

பொரிஸ் sack பண்ணாமல் விட்டது அவருக்கும், கட்சிக்கும் பாதிப்பை தென்கிழக்கு, மேற்கு இங்கிலாந்தில் தரும் என நினகிறன்.

அமர்சம் தெரியும்தானே? முழு கன்சேவடிவ் ஏரியா, போன கிழமை இடைதேர்தலில் லிபரல் வெண்டுட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

ஓ இது தான் முத்தமா😝

இந்த செய்திய பார்க்கும் போது ஏச்சு வேண்டுறன் இந்த கோதாரிய எத்தன தடவை பார்ப்பியள் என்று 
நான் சுத்த சைவம் 😆

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

நாதம்,

ஆர் ஆரோடயும் தனிப்பட்ட வாழ்வில் போகட்டும். ஆனால் வரிப்பணத்தில் நண்பிக்கு வேலை கொடுத்தது பெரிய பிழை.

அவர் ஜில்மால் பண்ண நாங்களே படியளக்கிறது🤣.

பொரிஸ் sack பண்ணாமல் விட்டது அவருக்கும், கட்சிக்கும் பாதிப்பை தென்கிழக்கு, மேற்கு இங்கிலாந்தில் தரும் என நினகிறன்.

அமர்சம் தெரியும்தானே? முழு கன்சேவடிவ் ஏரியா, போன கிழமை இடைதேர்தலில் லிபரல் வெண்டுட்டு.

திறமை இருந்த யாருக்கும் வேலை கொடுக்கட்டும்... 

போரிஸ் மனைவியே அவரது தனிப்பட்ட செயலாளர். அதெப்படி மனிசிக்கு வேலை என்று சொல்ல ஏலாது.... அய்யாவின் கோவணத்தை யாரு வாஷிங் மெசின் உள்ள போட்டு எடுத்து மடித்து வைக்கிறதாம் எண்டால், பதில் சொல்ல ஏலாது. 

வெளியாட்கள் படம் பிடித்து, வித்து விடுவார்கள். அல்லது ஒரு கோவணத்தை, தோய்க்காமல் மூண்டு நாளாய் போட்டுகொண்டு திரியிது எண்டு சொல்லி விடுவார்கள் என்பதால்.

ஆனால், அரசாங்க அலுவலகத்தில், காமெரா இருப்பது கூட தெரியாமல், கூட வேலை செய்யும் பெண்ணுடன் கூத்து பண்ணினால், அவர் 'புத்திக் கூர்மை' குறித்து சந்தேகம் வருகிறது. அதனால் அவர் போக வேண்டியவர் தான்.

நம்ம, பழைய பிரதமர் ஜான் மேஜர், எட்வீனா கர்ரி உடன் அடித்த அதே கூத்து.... அப்ப கேமரா இல்லை. இந்த கூத்துக்கள் கான்செர்வ்டிவ் பார்ட்டிக்கு வழமையான பிரச்சனை தான் போல கிடக்குது.

 ***

லேபர் இப்போதைக்கு கரை சேராது போலை தான் தெரியுது. இதுனுள், லிபெரல் பழைய நிலைக்கு வரும் போல் தெரிகிறது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

திறமை இருந்த யாருக்கும் வேலை கொடுக்கட்டும்... 

போரிஸ் மனைவியே அவரது தனிப்பட்ட செயலாளர். அதெப்படி மனிசிக்கு வேலை என்று சொல்ல ஏலாது.... அய்யாவின் கோவணத்தை யாரு வாஷிங் மெசின் உள்ள போட்டு எடுத்து மடித்து வைக்கிறதாம் எண்டால், பதில் சொல்ல ஏலாது. 

வெளியாட்கள் படம் பிடித்து, வித்து விடுவார்கள். அல்லது ஒரு கோவணத்தை, தோய்க்காமல் மூண்டு நாளாய் போட்டுகொண்டு திரியிது எண்டு சொல்லி விடுவார்கள் என்பதால்.

ஆனால், அரசாங்க அலுவலகத்தில், காமெரா இருப்பது கூட தெரியாமல், கூட வேலை செய்யும் பெண்ணுடன் கூத்து பண்ணினால், அவர் 'புத்திக் கூர்மை' குறித்து சந்தேகம் வருகிறது. அதனால் அவர் போக வேண்டியவர் தான்.

 ***

லேபர் இப்போதைக்கு கரை சேராது போலை தான் தெரியுது. இதுனுள், லிபெரல் பழைய நிலைக்கு வரும் போல் தெரிகிறது.

தனிப்பட்ட காரியதரிசி வேறு. அதை எல்லாரும் நெருங்கிய ஒருவரிடம்தான் கொடுப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. 

தவிரவும் இவர் முன்னர் NHS க்கு பாதுகாப்பு சாதனம் வாங்கும் கொண்டிராக்டை தனது local pub ஓனரான நண்பருக்கு திருப்பி விட்ட கேசும் இருக்கு.

பச்சை கள்ளன். 

அமெர்சம் போன்ற இடங்களில் சனம் செத்தாலும் லேபருக்கு போடாது. நீங்கள் சொல்வது போல் லிபரலுக்கு வாய்ப்புத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த செய்திய பார்க்கும் போது ஏச்சு வேண்டுறன் இந்த கோதாரிய எத்தன தடவை பார்ப்பியள் என்று 
நான் சுத்த சைவம் 😆

நித்தியானந்தா சுவாமிகள்.... ரஞ்சிதாவுடன், தியானத்தில் இருந்த வீடியோ பார்தனியல் தானே, முனிவர். 😜

1 minute ago, goshan_che said:

பச்சை கள்ளன். 

அதுமட்டுமல்ல, இவர், நீங்கள் சொன்ன NHS காண்ட்ராக்ட்டுகளை தனது தங்கை நடாத்தும், இவரும் முதல் போட்ட நிறுவனத்துக்கே கொடுத்திருந்தார்.

conflict of interest 

இவர் போரிசினால், தூக்கப்பட்டிருக்க வேண்டும். தானாக போகும் வரை விட்டது பிழை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நித்தியானந்தா சுவாமிகள்.... ரஞ்சிதாவுடன், தியானத்தில் இருந்த வீடியோ பார்தனியல் தானே, முனிவர். 😜

ஏன்யா அவ்வளவு சத்தமா கத்தி சொல்லுறீங்கள் 😁

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் ஒரு பலவீனம், பெண்களின் பலமாகும் கதை 

இது குறித்து முன்னமும் சொல்லி இருக்கிறேன். பெரிய பார்ட்டிகள், சுஜ கருத்தடைகளில் கவனமாக இருக்க வேணும்.

பில் கேட்ஸ், போரிஸ் பெக்கர், போரிஸ் ஜான்சன் எல்லோரும், சும்மா, ஒரு நாள் இரவு மகிழ்வுக்கு போனவர்கள். இவர்களுடன் இருந்த பெண்கள், கருத்தடை மாத்திரைகளை எடுத்துள்ளதாக சொன்னதை நம்பி.... நம்பி.... உன் பிள்ளையை சுமக்கிறேன் என்று சொன்னதால், மாட்டிக்கொண்டவர்கள். 

ஆனால், இந்த பெரும் பார்ட்டிகள் குழந்தைகளுக்கு தாயாகும் பெண்களுக்கோ, வாழ்வு செட்டில்.

போரிஸ் ஜோன்சனின் இளவயது மனைவிக்கு, அவருக்கு பின்னர், பிரதம மந்திரியின் பென்ஷன்....

பில் கேட்ஸ் மனைவிக்கு, அரைவாசி சொத்து.

பெக்கர், தனது பிள்ளையினை வளர்க்க, அந்த பெண்ணுக்கு, பல மில்லியன் பணம் கொடுத்து, திவாலானார்.

  • கருத்துக்கள உறவுகள்

கோடீஸ்வரர்களைச் சுத்திய கேடீஸ்வரிகளை நினைக்கவே என்ன எழுதுவதென்று யோசினையாய் இருக்கு.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் தவறு செய்வது பலவீனத்தால் மட்டும் போல இருக்கு! ஆனால், பெண்கள் தவறு செய்வது "புத்தி குறைவாக" இருப்பதால் போல இருக்கு! (நான் அருளியதல்ல, எங்கேயோ ஒரு கல்சன்ரன்ற் உறுதியாகக் கூறியது!😜)

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

ஆண்களின் ஒரு பலவீனம், பெண்களின் பலமாகும் கதை 

இது குறித்து முன்னமும் சொல்லி இருக்கிறேன். பெரிய பார்ட்டிகள், சுஜ கருத்தடைகளில் கவனமாக இருக்க வேணும்.

பில் கேட்ஸ், போரிஸ் பெக்கர், போரிஸ் ஜான்சன் எல்லோரும், சும்மா, ஒரு நாள் இரவு மகிழ்வுக்கு போனவர்கள். இவர்களுடன் இருந்த பெண்கள், கருத்தடை மாத்திரைகளை எடுத்துள்ளதாக சொன்னதை நம்பி.... நம்பி.... உன் பிள்ளையை சுமக்கிறேன் என்று சொன்னதால், மாட்டிக்கொண்டவர்கள். 

ஆனால், இந்த பெரும் பார்ட்டிகள் குழந்தைகளுக்கு தாயாகும் பெண்களுக்கோ, வாழ்வு செட்டில்.

போரிஸ் ஜோன்சனின் இளவயது மனைவிக்கு, அவருக்கு பின்னர், பிரதம மந்திரியின் பென்ஷன்....

பில் கேட்ஸ் மனைவிக்கு, அரைவாசி சொத்து.

பெக்கர், தனது பிள்ளையினை வளர்க்க, அந்த பெண்ணுக்கு, பல மில்லியன் பணம் கொடுத்து, திவாலானார்.

ஏன் அஞ்செலா மேர்கலோ, நிகலாவோ, கிலரியோ, ஜெசிந்தாவோ கட்டுமஸ்தான ஆண்களிடம் இப்படி போய் மாட்டுவதில்லை?

பிழை ஆண்களிலும்தான். சிந்திப்பதற்கு மூளையை பாவிக்காமல் இனபெருக்க உறுப்பை பாவிப்பது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அது படம் அல்ல பதில்-படம். 

நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை……

யாழ் களத்திலை படம் காட்டும் முதல் ஆள் நீங்கள் தான்.

Quote

நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை……

எடுத்து கிழிச்சாலும்......🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.