Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலியில்... மக்களின் விவசாய காணிகளில், இராணுவம் விவசாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலாலியில் மக்களின் விவசாய காணிகளில் இராணுவம் விவசாயம்!

பலாலியில்... மக்களின் விவசாய காணிகளில், இராணுவம் விவசாயம்!

யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைய “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை இலக்காக கொண்டு விவசாய பண்ணையில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர்.

யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தை சூழவுள்ள பொதுமக்களின் பெருமளவான நிலப்பரப்பினை இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பபு வலயமாக அறிவித்துள்ளனர்.

அப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் சுமார் 32 வருட காலங்களுக்கு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்கள், உறவினர் வீடுகள், வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.

தம்மை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுமாறு கோரி கடந்த 11 வருடங்களுக்கு மேலாக போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களின் காணிகளை, தேசிய பாதுகாப்பு என கூறி, இராணுவத்தினர் கையகப்படுத்தி அதனை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வைத்துள்ளனர்.

குறித்த காணியில் இராணுவத்தினர் விவசாய பண்ணைகள், கால்நடை பண்ணைகள் என்பவற்றை அமைத்துள்ளனர்.

01.jpg

03.jpg

04.jpg

05.jpg

06.jpg

07.jpg

08.jpg

09.jpg

10.jpg

https://athavannews.com/2021/1226163

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இராணுவம் தோட்ட வேலை செய்து தன்னிறைவு அடைகிறார்கள் என இனி கருத்து சொல்லுவினம் நாங்கள் கேட்டிட்டு இருக்க வேண்டியான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு வேலையில்லை திண்டாட்டம், அவர்களுக்கு வேலை செய்ய விருப்பமில்லை. எத்தனை பூசி மெழுகுவினம். தமிழன் பாடுபட்ட நிலத்தில் அவர்கள் நோகாமல் பலன் எடுக்க. தமிழருக்கு வகுப்பெடுக்க வரிசையில் வரப்போகினம்

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2021 at 02:53, satan said:

தமிழருக்கு வேலையில்லை திண்டாட்டம், அவர்களுக்கு வேலை செய்ய விருப்பமில்லை. எத்தனை பூசி மெழுகுவினம். தமிழன் பாடுபட்ட நிலத்தில் அவர்கள் நோகாமல் பலன் எடுக்க. தமிழருக்கு வகுப்பெடுக்க வரிசையில் வரப்போகினம்

நீங்கள் ஆயிரம்தான் சொன்னாலும் யாழ்ப்பாணத்தில் பல வேலைக்ளுக்கு ஆட்கள் பற்றாக்குறை என்பது நிதர்சனம். இது எனது சொந்த அனுபவம். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kapithan said:

நீங்கள் ஆயிரம்தான் சொன்னாலும் யாழ்ப்பாணத்தில் பல வேலைக்ளுக்கு ஆட்கள் பற்றாக்குறை என்பது நிதர்சனம். இது எனது சொந்த அனுபவம். 

☹️

வெளிநாட்டு மோகம் 😰

  • கருத்துக்கள உறவுகள்

அந்தந்த பிரதேசங்களில் வேலைக்கு ஆட்களை ஒழுங்குபடுத்தி தரும் அமைப்புக்களை உருவாக்கினால் என்ன? மணித்தியால சம்பளம், மேலதிக பணி நேரத்திற்கு கூடுதல் சம்பளம் என ஒரு பொறிமுறையை உருவாக்கினால் தொழிலாளர்கள் சுரண்டப்படாத அதேவேளை வேலை கொடுப்போருக்கும் மனநிறைவு ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக்கூடாது..மிளகாயும் அவையைப்போல அழகுதான்...கொடுத்துவச்ச யாழ்ப்பாணியள்..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களநோனாக்கள் ராணுவத்துக்கு போயும் மிள்காய் ஆயுற வேலை தான் பாக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2021 at 11:57, putthan said:

தமிழ் இராணுவம் தோட்ட வேலை செய்து தன்னிறைவு அடைகிறார்கள் என இனி கருத்து சொல்லுவினம் நாங்கள் கேட்டிட்டு இருக்க வேண்டியான்

நீங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் புணர்வாழ்வு பெற்ற பல முன்னாள் போராளிகள் சிவில்  பாதுகாப்பு படையில் சேர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இவர்கள் தமிழர்களாக கூட இருக்கலாம் .

இதே படத்திற்கு ஒரு முகநூலில் யாழ்ப்பாணத்திலிருந்து  ஒரு பதில் கிடைத்தது அப்படி ராணுவத்திடமாவது  இருக்கட்டும் அந்த காணீல்லாவிட்டால் பல் கோடி களுக்கு  வாங்கி பிளாட் போட்டு அதை இணைய வழியிலாக அல்லது ஒரு பெரிய வீடுகட்டிக்கொண்டு வெளிநாட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார்களாம் என  

19 hours ago, Kapithan said:

நீங்கள் ஆயிரம்தான் சொன்னாலும் யாழ்ப்பாணத்தில் பல வேலைக்ளுக்கு ஆட்கள் பற்றாக்குறை என்பது நிதர்சனம். இது எனது சொந்த அனுபவம். 

☹️

இதை சொன்னால் ஏற்றுக்கொள்ளவா போறாங்க இங்க கன மேசன், தட்சு தொழில் செய்ய சிங்களவர்கள், நம்ம ஆட் கள்  வுடுப்பு பார்த்து வேலை இல்லை என்பார்கள் 

1 hour ago, வாதவூரான் said:

சிங்களநோனாக்கள் ராணுவத்துக்கு போயும் மிள்காய் ஆயுற வேலை தான் பாக்கினம்

இந்த நிலைதான் மாறணும் நம்மிடமிருந்து இதற்கு விசுகர்  சிரிப்பு வேற பிறகு எப்படி நம்மவர்கள் சீமேந்து வேலையும் , ஓடாவி வேலையும் , ஏன் விவசாயமும் செய்ய முன்வருவார்கள் இணையத்தில் இருந்து கருத்து எழுதலாம் ஆனால் கறிக்கு அவர்கள் செய்த மிளகாயே சுவை சேர்க்கும் ......................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் புணர்வாழ்வு பெற்ற பல முன்னாள் போராளிகள் சிவில்  பாதுகாப்பு படையில் சேர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இவர்கள் தமிழர்களாக கூட இருக்கலாம் .

இதே படத்திற்கு ஒரு முகநூலில் யாழ்ப்பாணத்திலிருந்து  ஒரு பதில் கிடைத்தது அப்படி ராணுவத்திடமாவது  இருக்கட்டும் அந்த காணீல்லாவிட்டால் பல் கோடி களுக்கு  வாங்கி பிளாட் போட்டு அதை இணைய வழியிலாக அல்லது ஒரு பெரிய வீடுகட்டிக்கொண்டு வெளிநாட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார்களாம் என  

இதை சொன்னால் ஏற்றுக்கொள்ளவா போறாங்க இங்க கன மேசன், தட்சு தொழில் செய்ய சிங்களவர்கள், நம்ம ஆட் கள்  வுடுப்பு பார்த்து வேலை இல்லை என்பார்கள் 

இந்த நிலைதான் மாறணும் நம்மிடமிருந்து இதற்கு விசுகர்  சிரிப்பு வேற பிறகு எப்படி நம்மவர்கள் சீமேந்து வேலையும் , ஓடாவி வேலையும் , ஏன் விவசாயமும் செய்ய முன்வருவார்கள் இணையத்தில் இருந்து கருத்து எழுதலாம் ஆனால் கறிக்கு அவர்கள் செய்த மிளகாயே சுவை சேர்க்கும் ......................

தனி,
நீங்கள் எப்பவும் இப்பிடித்தானோ,மிளகாய் ஆயுறதுக்கு என்னத்துக்கு ராணுவத்துக்கு போகவேணும்?முதலாவது நாங்களும் மிளகாய் ஆய்ந்திட்டு தான் வந்தனாங்கள்.நீங்கள்நினைக்கிற மாதிரிநக்கலா சொல்லேலை

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கறிக்கு அவர்கள் செய்த மிளகாயே சுவை சேர்க்கும்

தங்கள் பிரதேசங்களில் செய்து சுவைக்கட்டும். எங்கள் காணிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றே நாங்கள் கேட்கிறோம். நாங்கள் தெருவில் அவர்கள் எங்கள் இடத்தில விவசாயம் செய்யினமாம், நாங்கள் மாற வேண்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த நிலைதான் மாறணும் நம்மிடமிருந்து இதற்கு விசுகர்  சிரிப்பு வேற பிறகு எப்படி நம்மவர்கள் சீமேந்து வேலையும் , ஓடாவி வேலையும் , ஏன் விவசாயமும் செய்ய முன்வருவார்கள் இணையத்தில் இருந்து கருத்து எழுதலாம் ஆனால் கறிக்கு அவர்கள் செய்த மிளகாயே சுவை சேர்க்கும் ......................

நான்  சிரிப்பு  போட்டதற்கு  வேறு காரணம்?

இராணுவத்துக்கு வேலைக்கு ஆட்களை  எடுக்கிறார்கள்

என்று  இங்கு எழுதப்பட்டபோதே நான் எழுதினேன் 

அதுக்கு  மட்டும் ஏன் ஆட்கள் என்று?

இன்று  தெரிகிறது

உண்மையில் இராணுவத்தில் அவர்களுக்கு வேலை  இல்லை

ஆனால் அந்த  வேலை  என்று  சொல்லி  எடுத்து?????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் புணர்வாழ்வு பெற்ற பல முன்னாள் போராளிகள் சிவில்  பாதுகாப்பு படையில் சேர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இவர்கள் தமிழர்களாக கூட இருக்கலாம் .

பத்து பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கி காட்டினாளாம்.

தோட்டம் துரவு வயல் வரம்பு காணி எண்டு திரிஞ்ச ஈழத்தமிழனுக்கு ராணுவத்துக்கு போய்த்தான் விவசாயம் செய்யோணும்  எண்டு சொல்ல வாறியளோ????

அதிலும் யாழ்ப்பாணத்து விவசாய பெண்களின் வலிமை எங்களைப்போன்றவர்களுக்குத்தான் தெரியும்.

அதிலும் பெண்கள் மண்வெட்டி தூக்கினால்......  💪💪💪 :cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாதவூரான் said:

தனி,
நீங்கள் எப்பவும் இப்பிடித்தானோ,மிளகாய் ஆயுறதுக்கு என்னத்துக்கு ராணுவத்துக்கு போகவேணும்?முதலாவது நாங்களும் மிளகாய் ஆய்ந்திட்டு தான் வந்தனாங்கள்.நீங்கள்நினைக்கிற மாதிரிநக்கலா சொல்லேலை

இங்கே மிளகாய் ஆய்பவர்கள் ராணுவத்தில் இருக்கும் சிவில் பாதுகாப்பு படையினர் இவர்கள் யார் என நீங்கள் ஆராயுங்கள் அதன் பின் உங்களுக்கு விளங்கும் சிங்களவன் மோடனென் சொல்லி சொல்லி மோடனாகிய கூட்டமல்லவா நாம்  நான் நக்கலாக சொல்லவில்லை சொன்னது நீங்கள் உங்கள் கருத்தை வாசியுங்கள் நீங்கள் மிளகாய் ஆய்ந்தவராக இருக்கலாம் நானும் விவசாய குடும்பம்தான்  வேளாண்மை , பயிர் செய்கையெல்லாம் பார்த்த ஆள் தான் பாஸ் இப்பவரைக்கும் செய்கிறன் 

5 hours ago, satan said:

தங்கள் பிரதேசங்களில் செய்து சுவைக்கட்டும். எங்கள் காணிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றே நாங்கள் கேட்கிறோம். நாங்கள் தெருவில் அவர்கள் எங்கள் இடத்தில விவசாயம் செய்யினமாம், நாங்கள் மாற வேண்டுமாம்.

சாட்டான் யாழில் பிடிக்கப்பட்ட காணிகளை விட தரிசாகவும் காடுகளாகவும்  இருக்கும் நிலம் அதிகம் அதை கணக்கெடுங்கள்  சிங்களவர்கள் எங்கு குடியேறுகிறார்களோ அங்கே அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களாகவே உற்பத்தி செய்துகொள்வார்கள் அதுமட்டும் அல்லாமல் அழகாக்கவும் அழகாகவும் வைத்துக்கொள்வார்கள்  ( நமது இடங்களில் இருக்கும் பொது கழிப்பிடங்களை எடுத்துக்கொள்ளுங்கள் ) சிங்களவர் பகுதிகளில் உள்ள கழிப்பிடங்களை எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே ஒருவர் துப்பரவு செய்வார் ஒரு மேசையை போட்டு நம்ம பக்கம் எட்டிபார்க்க முடியாது குடல் வந்திடும் அப்படி செய்தால் அவனுக்கு ஒரு சாதி பெயரை சொல்லி தூர வைப்பம் இதை நீங்கள் மறுக்க முடியுமா 

இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ளுங்கள் உங்கள் உறவுகளிடம் சொல்லி வடக்கில் 

2 hours ago, குமாரசாமி said:

பத்து பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கி காட்டினாளாம்.

தோட்டம் துரவு வயல் வரம்பு காணி எண்டு திரிஞ்ச ஈழத்தமிழனுக்கு ராணுவத்துக்கு போய்த்தான் விவசாயம் செய்யோணும்  எண்டு சொல்ல வாறியளோ????

அதிலும் யாழ்ப்பாணத்து விவசாய பெண்களின் வலிமை எங்களைப்போன்றவர்களுக்குத்தான் தெரியும்.

அதிலும் பெண்கள் மண்வெட்டி தூக்கினால்......  💪💪💪 :cool:

பல முன்னாள் போராளிகள் வெளியேறிய போது அவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஒரு தொழிலை ஏற்படுத்திக்கொடுத்தால் அவர்கள் ஏன் போய் சேர போகிறார்கள் . இங்கே பணமும் வேண்டும் தொழிலும் வேண்டும் வாழ்க்கைக்கு  யாழ் பெண்கள் விவசாயத்தில் கெட்டித்தனமானவர்கள் அவர்கள் இனங்கண்டுள்ளார்கள் அவ்வலவுதான் குமாரசாமி அண்ணை நான் குற்றம் சொல்லல அவன் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள நினைக்கிறான் 

நாம் தூற்றிக்கொண்டு காற்றில் விடுகிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 சிங்களவர்கள் எங்கு குடியேறுகிறார்களோ அங்கே அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களாகவே உற்பத்தி செய்துகொள்வார்கள் அதுமட்டும் அல்லாமல் அழகாக்கவும் அழகாகவும் வைத்துக்கொள்வார்கள்

அது அவர்கள் விருப்பம். அப்படி அழகாக வைத்திருப்பவர்கள் ஏன் நாங்கள் வாழ்ந்த மண்ணில் மிளகாய் ஆய்கினம்?

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாழில் பிடிக்கப்பட்ட காணிகளை விட தரிசாகவும் காடுகளாகவும்  இருக்கும் நிலம் அதிகம் அதை கணக்கெடுங்கள்

அப்போ எங்கள் வாழ்விடங்களை சிங்களவனுக்கு விவசாயம் செய்ய விட்டிட்டு நாங்கள் தரிசு நிலத்துக்கு போய் வளமாக்கிய  பின் அங்கும் வருவார்கள். சிங்கள குடியயேற்றம் என்கிற பெயரில். மின்சாரம், நீர் வசதியெல்லாம் செய்தே சிங்களவர்களை அரசாங்கம் குடியேற்றுகிறது. வன்னிக்கு நாம் இடம்பெயர்ந்த போது பல தசாப்தங்களாக மின்சார, போக்குவரத்து, பாடசாலை போன்ற வசதிகளற்ற நிலையிலும் கஸ்ரப்பட்டு நாட்டுக்கு சோறு, பால், முட்டை என எம்மை வளர்த்த இடமெல்லாம் சிங்களவர்  சொந்தமாக்கி இருக்கிறார்கள். எங்கள் மீனவர் தொழில் செய்யத்தடை, தென்பகுதி மீனவர் இராணுவ உதவியுடன் அடாத்தாக தொழில் புரிகிறார்கள். இதை சொன்னா கழிப்பிட வசதி போதனை. நமக்கு அகதிமுகாம்.  கரையான் புற்றெடுக்க கருநாகம்  பூந்த கதையாய் இருக்கு இது. அவர்கள் தங்கள் பிரதேசத்தில் குடியேறட்டும். எங்கள் பிரதேசத்தில் நாங்கள் வாழ ஆசைப்படுகிறோம் எங்கள் இடத்தை பிடித்துக்கொண்டு காட்டுக்கு போ, தரிசுக்கு போ என்று கூறுவது நல்ல நிஞாயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.