Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நானும் ஒன்று எடுக்கவேணும் என்று பலநாளா முயற்சிக்கிறன். ஒருத்தரும் ஐடியாவை தருகிறார்கள் இல்லை. டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெயலலிதா மாதிரி இல்லாமல் என்னுடைய பெயரில் குறைஞ்சது 4 peer reviewed papers உடன் ஒரு thesis உம் வேணும். டீல் இருந்தால் சொல்லுங்கள். 😀

இலங்கையில் அமெரிக்கன் யூனி எண்டு ஒன்று அண்மையில் பெரிய நட்சத்திர ஓட்டலில் விழா எல்லாம் செய்தார்கள். எனக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தருக்கு அவர் எழுதிய 10 பக்க கட்டுரையின் அடிப்படையில் அங்கே நிற்கும் போதே பட்டத்தை கொடுத்து விட்டார்கள். 

ஆராய்சி கட்டுரையில் எனக்கு அடியும் நுனியும் விளங்கவில்லை. சரி நம்ம அறிவுக்கு பி எச் டி ஆராய்சி  எல்லாம் விளங்காதுதானே. யூனியை தேடி பாப்பம் எண்டு கூகிள் ஸ்டிரீட் வியூ போனால் - அது ஒரு கார் கராஜில போய் நிக்குது!

இவனை அவங்கள் ஏமாற்றுறாங்களா? இவன் எல்லாரையும் ஏமாற்றுறானா? நமக்கு ஏன் வம்பு எண்டு “வாழ்துக்கள்” சொல்லி ஒதுங்கி விட்டேன்.

உங்களுக்கு தேவை எண்டால் விபரம் எடுத்து தரலாம். டாக்டர் கிருபன் பி எச் டி என்று போட்டு கொள்ளலாம்🤣.

இங்கே ஒன்றும் உதவாத யூனியில போய் கேட்டாலே, வருடம் 8 ஆயிரம் கட்ட வேண்டும், முழு நேரம் 3 வருடம், பகுதி என்றால் 6 வருடம். முதன்மை ஆராய்சி செய்ய வேண்டும் ஆகவே முழு நேர வேலை ஆராய்சி துறை தவிர்ந்து செய்ய முடியாது. ஒரு வருடமாவது பீல்டில் நிக்க வேணும். முதல் வருடத்தில் எம் பில் தான் தருவோம் ஆராய்சி திறமெண்டால்தான் மிச்சம். எப்படியும் ஆறு வருடத்துக்குள் பேப்பர் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டில் எல்லாம் அவுட் என்று ஏகபட்ட கண்டிசன் போடுவார்கள். 

இந்த டென்சன் ஏதும் இல்லாமல் மிக இலகுவாக பி எச் டி எடுக்கலாம் நான் மேலே சொன்ன வழியில்.

பிகு

என்னை இப்போதே பலர் பி எச் டி என்றே அழைப்பார்கள்.

(P)பனியன் of the highest degree 🤣

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

உங்களுக்கு தேவை எண்டால் விபரம் எடுத்து தரலாம். டாக்டர் கிருபன் பி எச் டி என்று போட்டு கொள்ளலாம்

அப்படி எல்லாம் சுத்துமாத்தாக எடுக்காமல் நாலு வருஷம் மினக்கெட்டே எப்போதே எடுத்திருக்கலாம்😀. புரபஸருக்கு ஒரு வருஷம் வேலை அனுபவம் எடுத்துக்கொண்டு வருகின்றேன் என்று சொல்லியதுதான் அதற்குப் பிறகு அவரை நான் காணப்போகவேயில்லை. ஆனால் இப்பவும் லிங்ட்இன்னில் அன்பாகத்தான் இருக்கின்றார்😊  வேலைக்குப் போனால் பிறகு டாக்டர்களுடன் வேலை செய்த அனுபவமே போதும் என்று இருந்துவிட்டேன்.

என்றாலும் யாழில்  அறிவு, மதிநுட்பம், புத்திக்கூர்மை, புத்திசாலித்தனம் உள்ளவர்களுடனும், உள்ளதாக நினைப்பவர்களுடனும் மெனக்கட்டதே இரண்டு பிஹெச்டிக்கு சமன்😂

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தாரின் அறிவுஜீவித்தனம் என்பது அடுத்தவருக்கு தம் திறமைகளால் சேவகம் செய்து வாலாட்டிக் கொண்டு தம் சொந்த இனத்தை பார்த்து தாமே குரைத்துக் கொள்ளும் நாய் குணம். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

🤣. சீரியசாக - மூன்று நாலு வருடம் மினக்கெடாமல் தரமான யூனியில் இருந்து எடுக்கும் professional doctorate உங்கள் துறையில் உண்டல்லவா? EngD போல? பி எச் டி இல்லாவிட்டால் என்ன? வாயாற டாக்டர் கிருபன் என்று கூப்பிடலாம்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாணத்தாரின் அறிவுஜீவித்தனம் என்பது அடுத்தவருக்கு தம் திறமைகளால் சேவகம் செய்து வாலாட்டிக் கொண்டு தம் சொந்த இனத்தை பார்த்து தாமே குரைத்துக் கொள்ளும் நாய் குணம். 

இண்டைக்கு எப்படியும் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.. வவ், வவ், வூ…😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:
அறிவு என்பது வேறு மதிநுட்பம் அல்லது புத்திக்கூர்மை அல்லது புத்திசாலித்தனம் என்பது வேறு என்பதே எனது புரிதல்.
இங்கு நான் அறிவு எனக் கருதுவது கல்வி மூலம் பெறப்பட்ட அறிவாகும்.
அறிவுஜீவிகள் எல்லோரும் மதிநுட்பம் உள்வர்களாக இருக்க வேண்டியதில்லை.
அதே போல் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் எல்லோரும் கல்வியறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை.
அறிவு மட்டம் அதிகரிக்க அதிகரிக்க மதிநுட்பம் குறைந்து செல்லும் என்றொரு விதி இல்லை. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

கல்வி அறிவு என்பது உயிருள்ளவரை தொடரும்.
மற்றவையெல்லாம் இடையிடையே காணாமல் போய்விடும்
நமது ஈழப்போராட்டம் மாதிரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

கல்வி அறிவு என்பது உயிருள்ளவரை தொடரும்.
மற்றவையெல்லாம் இடையிடையே காணாமல் போய்விடும்
நமது ஈழப்போராட்டம் மாதிரி

அப்போ எந்த அறிவு ஈழப் போராட்டம் போன்று இடையிடையே காணாமல் போகாமல் தோல்வியே தழுவாமல் வெற்றியை மட்டுமே அடையும்???

திரட்சைப்பழம் எட்டாவிட்டால் நரி சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று பழத்தை திட்டிக்கொண்டு ஓடிவிடும். அது போல் காலத்தே பயிர் செய் என்ற கூற்றுக்கமைய போல் தகுந்த காலத்தில் கல்வியை கற்று அறிவை வளர்தது கொள்ளாவிட்டால் அந்த ஆற்றாமையில்  இப்படி அறிவு ஜீவிகளை மொட்டையாக திட்டிக்கொண்டு மிகுதி காலத்தை கழிப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

🤣. சீரியசாக - மூன்று நாலு வருடம் மினக்கெடாமல் தரமான யூனியில் இருந்து எடுக்கும் professional doctorate உங்கள் துறையில் உண்டல்லவா? EngD போல? பி எச் டி இல்லாவிட்டால் என்ன? வாயாற டாக்டர் கிருபன் என்று கூப்பிடலாம்தானே.

பிறர் “டாக்டர்” என்று அழைப்பதற்காக பிஹெச்டி செய்வது, தாய், தந்தையரின் விருப்பத்திற்காக டாக்டர் (மருத்துவத்தில்) ஆவது எல்லாம் சரியாகப்படுவதில்லை. 
அதனால் பெரிதாக ஆர்வம் இல்லாததால் அதிகம் தேடல் செய்யவில்லை. எனது தற்போதைய துறை (அது இராத்திரி இரகசியம்!) இல்  EngD இருப்பது மாதிரியும் தெரியவில்லை. 

எனினும் வேலையில் முதல் ஐந்து வருடங்களில் நீண்டகால நோக்கம் என்ன என்பதற்கு “டாக்டர்” ஆவது என்றே குறிப்பிட்டு வந்தேன். அதன் பின்னர் cool products இல் வேலை செய்ய ஆரம்பித்த பின்னர் “டாக்டர்” இல் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது!

இன்னும் சொல்லப்போனால் “பச்சைப் புளுகன்” என்று யாழில் நிறுவிவிடுவார்கள் மதிநுட்பமான புத்திசாலிகள்😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

அப்போ எந்த அறிவு ஈழப் போராட்டம் போன்று இடையிடையே காணாமல் போகாமல் தோல்வியே தழுவாமல் வெற்றியை மட்டுமே அடையும்???

7 hours ago, விசுகு said:

ஒரு 5 வயதுக் குழந்தையைவிட வளர்ந்த ஒரு அறிவுஜீவியின் மதிநுட்பம் குறைவாகவே உள்ளது என்பது யதார்த்தம்.

நிறைய 5 வயது குழந்தைகள் அக்கம் பக்கத்தில் இருப்பார்களே? கேட்டுப்பார்த்தால் சொல்ஙிவிட்டு போகிறார்கள் - யாழ் களத்தில் எங்கே 5 வயது குழந்தைகள்?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

அப்போ எந்த அறிவு ஈழப் போராட்டம் போன்று இடையிடையே காணாமல் போகாமல் தோல்வியே தழுவாமல் வெற்றியை மட்டுமே அடையும்???

அறிவில் இரண்டு வகை உண்டு.

ஒன்று படிப்பறிவு. இன்னொன்று பட்டறிவு.
இரண்டும் சமாந்திரமாகவோ  அல்லது ஒன்றாகவோ மக்கள் மத்தியில் சேர்ந்து கொள்ளும்போது வெற்றியடைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

பிறர் “டாக்டர்” என்று அழைப்பதற்காக பிஹெச்டி செய்வது, தாய், தந்தையரின் விருப்பத்திற்காக டாக்டர் (மருத்துவத்தில்) ஆவது எல்லாம் சரியாகப்படுவதில்லை. 
அதனால் பெரிதாக ஆர்வம் இல்லாததால் அதிகம் தேடல் செய்யவில்லை. எனது தற்போதைய துறை (அது இராத்திரி இரகசியம்!) இல்  EngD இருப்பது மாதிரியும் தெரியவில்லை. 

எனினும் வேலையில் முதல் ஐந்து வருடங்களில் நீண்டகால நோக்கம் என்ன என்பதற்கு “டாக்டர்” ஆவது என்றே குறிப்பிட்டு வந்தேன். அதன் பின்னர் cool products இல் வேலை செய்ய ஆரம்பித்த பின்னர் “டாக்டர்” இல் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது!

இன்னும் சொல்லப்போனால் “பச்சைப் புளுகன்” என்று யாழில் நிறுவிவிடுவார்கள் மதிநுட்பமான புத்திசாலிகள்😂

பிறர் அழைப்பதற்காக மட்டும் அல்ல - நம்மை நாமே அடுத்தடுத்த கட்டங்களுக்கு போக கூடியவர்கள்தானா என்று மீள எமக்கே நிறுவவும் இது உதவும். 

இப்போ அல்சைமர்ஸ் போன்ற நோய்களை நடுத்தரவயதில் படிப்பது குறைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

ஆற்றல் இருக்கும் போது அதை ஒரு பட்டம் ஆக்கி கொள்வது நல்லதுதான்.  வேலை பிசியாகும், இதர வாழ்க்கை சுமைகள் ஏறும் போது ஆர்வம் குறைகிறது என்பது உண்மைதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

அறிவில் இரண்டு வகை உண்டு.

ஒன்று படிப்பறிவு. இன்னொன்று பட்டறிவு.
இரண்டும் சமாந்திரமாகவோ  அல்லது ஒன்றாகவோ மக்கள் மத்தியில் சேர்ந்து கொள்ளும்போது வெற்றியடைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது

தமிழரிடம் இல்லாத படிப்பறிவா?? பட்டறிவா??? 

பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாணத்தாரின் அறிவுஜீவித்தனம் என்பது அடுத்தவருக்கு தம் திறமைகளால் சேவகம் செய்து வாலாட்டிக் கொண்டு தம் சொந்த இனத்தை பார்த்து தாமே குரைத்துக் கொள்ளும் நாய் குணம். 

அதெண்டால்.... உண்மை தான் நெடுக்ஸ். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரை எழுதியவர்

5 hours ago, goshan_che said:

சகட்டு மேனிக்கு அடித்து விடுகிறார்🤣. அவரை படித்தவனோ-போபியா எனும் ஒரு வகை நோய் தாக்கியுள்ளது போல் தெரிகிறது. 

அவர் மேலே குறிப்பிட்ட விடயங்கள் தனியே படித்த யாழ்பாணத்தவரிடம் மட்டும் அல்ல - பெரும்பாலான எல்லா மட்ட யாழ்பாணத்தவரிலும் இருக்கும் குறைபாடுகள்தான்.

உண்மையை சொன்னால் - தனியே படித்தவர்கள் மீது இந்த பழியை தூக்கி போடுவது ஏனையோரை வெள்ளையடிக்கும் போக்கும் கூட.

சரியாகச் சொன்னீர்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

பிறர் அழைப்பதற்காக மட்டும் அல்ல - நம்மை நாமே அடுத்தடுத்த கட்டங்களுக்கு போக கூடியவர்கள்தானா என்று மீள எமக்கே நிறுவவும் இது உதவும். 

இப்போ அல்சைமர்ஸ் போன்ற நோய்களை நடுத்தரவயதில் படிப்பது குறைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

ஆற்றல் இருக்கும் போது அதை ஒரு பட்டம் ஆக்கி கொள்வது நல்லதுதான்.  வேலை பிசியாகும், இதர வாழ்க்கை சுமைகள் ஏறும் போது ஆர்வம் குறைகிறது என்பது உண்மைதான். 

உண்மைதான் கோஷான்
பல்கலைக்கழக்கத்தை விட்டு வெளியேறும் பொழுதே கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வுகளை முடிக்க வேண்டும் என்பதே நான் எனது பிள்ளைகளுக்கு கூறியது
அது ஒரு அழுத்தமாக இருக்கக் கூடாது என்பதற்காக வற்புறுத்தவில்லை
ஒருவர் வைத்தியத் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுவிட்டார். அடுத்தவர் பல்வைத்தியர்  செய்முறையில் ஆராய்ச்சி செய்வதால் சில சுணக்கம் இருந்தாலும் கட்டாயம் பெற்றுவிடுவார்.
காலத்தே பயிர்  செய்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

சந்தோசம் அண்ணா. அடுத்த சந்ததிகள் எம்மை போல் அன்றி அவர்கள் கல்வி ஒன்று மட்டுமே கருத்தாக இருக்கும் வாய்புள்ளவர்கள். பெற்றாரின் வழிகாட்டல் மட்டும் இருந்தால் சிகரங்களை அடைவார்கள் என்பதற்கு நீங்களும் யாழில் ஏனைய உறவுகளுமே சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நடந்தது;

எனக்குத் தெரிந்த ஒருவர், எனக்குத் தெரிந்த இன்னொருவருக்கு தனது கடையை விற்றிருந்தார். அதற்குரிய Mortgage ஐயும் விற்றவரே வழங்கியிருந்தார் (VTB-Vender Take Back). வேண்டிய, விற்ற இருவரும் நன்கு அறிமுகமானவர்கள்.

கடையை வேண்டிய குடும்பம் மிகவும் கடுமையாக உழைப்பாளிகள். 

இந்தக் கொறோனா பிரச்சனையில் கடையை நடத்த இயலாமல் பூட்ட வேண்டியதாகிவிட்டது.  இப்போது விற்றவருக்கு கடையுமில்லை, காசுமில்லை. ஆனால் கடையை அவர் திரும்பவும் தனதாக்குவதற்கு முழுமையான வாய்ப்பு இருந்தது. 

நான் விற்றவரிடம் நீங்கள் கடையைத் திரும்ப எடுக்கலாம்தானே எனக் கேட்டேன்.  அதற்கு அவர் "இல்ல இப்ப திரும்ப எடுக்கிறதாய் இல்ல" என்றார்.

நான் திரும்பவும் "நீங்கள் எடுத்தீங்களென்றால் அவர் கொஞ்சம் பிழைச்சுக் கொள்ளுவாரெல்லோ" என்று கூற,

அதற்கு அவர் " கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். அழிஞ்சாத்தான் அவங்களுக்குப் புத்தி வரும்" என்றார்.

பிறறின் வேதனையில் மகிழ்வுறும் கயமைத்தனம்... ☹️

***

Edited by நியானி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2021 at 22:45, goshan_che said:

இப்போ அல்சைமர்ஸ் போன்ற நோய்களை நடுத்தரவயதில் படிப்பது குறைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

மூளை, மனம் என்பன உடம்பு போன்றவை தான். உபயோகித்து கொண்டு இருந்தாலே இயங்கும் திறனில் இருக்கும்.

இதில் உணவு, உறக்கம் போன்ற பழக்கவழக்கமும், கட்டுப்பாடுகளும் பொருந்தும். 

யூடுபே இல் உள்ள வீடியோ களில் இதுவரையில் நான் கண்டதில் மிகவும் உபயோகமான வீடியோக்கள்.

இதில் பல வெளிப்டையானவை, அனால், விஞ்ஞான விளக்கத்துடன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.