Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டி, சுட்ட... ஒரு வடைக்கு, அப்புவும், சுப்புவும் சண்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி,  சுட்ட... ஒரு வடைக்கு,  அப்புவும், சுப்புவும்  சண்டை

இதில் இருக்கும் அரசியல் விளங்குதா ?
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரில் ஒரு காணி இருந்திச்சு 
அதில் பாட்டி ஒண்டு வடையைச் சுட்டு 
தனிய திண்டிச்சு 
ஒரு ஊரில் ஒரு காணி இருக்குது 
அதில் பாட்டி ஒண்டு வடையைச் சுட்டு 
தனிய தனிய தின்னுது 
அந்தக் காணிக்குள்ள ரெண்டு 
குடிசை வீடு 
ரெண்டு குடிசை வீட்டுக்குள்ளயும் 
ஒவ்வொரு பெடியள்
ஒருத்தன் பெரியவன் 
ஒருத்தன் சிறியவன் 
பெரியவன் பலசாலி 
சிறியவன் புத்தி சாலி 
பெரியவன்ர பெயர் அப்பு 
சிறியவன்ர பெயர் சுப்பு 
பெரியவன்ர பெயர் அப்பு 
சிறியவன்ர பெயர் சுப்பு 
அப்பு சுப்பு 
அப்பு சுப்பு அப்பு 
சுப்பு அப்பு
அப்புச் சுப்பு 

பாட்டி இங்க வந்த வேலை 
முடிஞ்சுபோச்சுதெண்டு 
கடைசி வடையை சுடுறதுக்கு 
ரெடி ஆகுனா
அந்த வடையை உங்களுக்கே தாறன் 
எண்டு சொல்லி 
அப்பு சுப்பு ரெண்டு பேர்க்கும் 
ஆசை காட்டுறா 
அப்பு அடுப்பை எரிக்க 
சுப்பு சுள்ளி பொறுக்க 
எண்ணைச் சட்டிக்குள்ள பாட்டி 
வடையைப் போடுறா 
வடையைப் போட்டுப் பொரிக்க 
அப்பு சுப்பு சிரிக்க 
பொரிஞ்ச வடையைப் பாட்டி 
கரண்டியாலை தூக்கிறா 
அது ஒரு சின்ன வடை 
ஆனா பெரிய ஓட்டை 
அது ஒரு சின்ன வடை 
ஆனா பெரிய ஓட்டை 
அத ரெண்டு பேர்க்கும் 
குடுத்துப் போட்டு 
பாட்டி நடையக் கட்டுனா
பாட்டி நடையக் கட்டுனா

அப்பு வடைய கடிக்க பார்க்க 
சுப்பு தன்ர துண்டைக் கேக்க 
அப்புவுக்கும் சுப்புவுக்கும் 
சண்டை வந்தது 
சண்டையில அந்த வடை 
பிஞ்சு போனது 
சுப்பு வடையைப் பிரிச்செடுத்து 
தன்ர துண்டை தின்ன போக 
அப்பு தன்ர பிரெண்டை சேர்த்து 
சண்டை போடுறார் 
சுப்புவிண்ட துண்டை பிரெண்டை 
வச்சு புடுங்கிறார்
ஒத்தை வடை 
இப்ப ரெண்டு துண்டு 
அந்த ஓட்டை வடை 
இப்ப ரெண்டு துண்டு 
அப்புவோட சேர்ந்து நிண்டு 
சுப்புவுக்கு அடிச்சதால 
அப்புவுண்ட நண்பன் கொஞ்சம் 
கூலி கேக்குறான் 
அப்புவிண்ட கையில் வடையை தவிர 
வேறை ஒண்டுமில்லை
அப்புவிண்ட வடையை 
நண்பன் பிச்சு தின்னுறான்
ஒத்தை வடை 
இப்ப மூண்டு  துண்டு 
அந்த ஓட்டை வடை 
இப்ப மூண்டு  துண்டு 

ஒரு ஊரில் ஒரு காணி இருக்குது 
அதில பாட்டி முந்தி சுட்ட வடை 
சிதஞ்சு கிடக்குது 
ஒரு ஊரில் ஒரு காணி இருக்குது 
அதில பாட்டி முந்தி சுட்ட வடை 
சிதைஞ்சு கிடக்குது 
அப்பு அந்த வடையை வச்சு 
முழுசி முழுசி பார்க்க பார்க்க 
சுப்பு தன்ர துண்டுக்காக 
காத்திருக்கிறான் 
அப்பு அந்த வடையை வச்சு 
முழுசி முழுசி பார்க்க பார்க்க 
சுப்பு தன்ர துண்டுக்காக 
காத்திருக்கிறான் 
அந்தப் பாட்டி இப்ப லண்டனிலை 
இதை எல்லாம் பார்த்து கண்டுக்காம 
அப்பு சுப்பு காணிக்குள்ள 
பொறுக்கி வந்த சுள்ளி வச்சு 
வடைகள் சுடுகிறா 
அத தானே தின்னுறா 
பாட்டி வடைகள் சுடுகிறா 
அத தானே தின்னுறா 
அப்புவிண்ட கையில் உள்ள தன்ர துண்டுக்காக 
சுப்பு காத்திருக்கிறான்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Poovan Matheesan said:

நன்றிகள்.

பூவன் அறிமுகம் செய்த இந்த பாடல் அருமையான நுண்ணரசியல் பேசுகிறது.

@ரதி அக்கா தலைப்பை இன்னும் கொஞ்சம் eye catching ஆக மாத்த முடியுமா?

இது எல்லாரும் பார்க்க வேண்டிய பாடல் - ஏதோ சமயல் குறிப்பு என கடந்து போகக்கூடும்🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்குள் இருக்கும் அரசியல்தான் அப்பட்டமாகத் தெரிகிறதே......உண்மையாகவே எல்லோரும் கவனிக்க வேண்டிய பாடல்......நன்றி சகோதரி.....!  👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு வடை எண்டவுடனை எங்கடை தமிழ் அரசியல்வாதிகள் தான் ஞாபகத்துக்கு வருகினம்.
இது எனக்கு மட்டும் தானா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

எனக்கு வடை எண்டவுடனை எங்கடை தமிழ் அரசியல்வாதிகள் தான் ஞாபகத்துக்கு வருகினம்.
இது எனக்கு மட்டும் தானா? 😁

வடை என்றவுடன் உங்களுக்கு இந்திய பிரதமர் மோடியல்லவோ நினைவுக்கு வரவேண்டும்??😜

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2021 at 12:29, ரதி said:

இதில் இருக்கும் அரசியல் விளங்குதா ?

இலங்கைத் தீவின் அரசியலை நல்லதொரு பாட்டாக தந்திருக்கிறார்கள்.

இணைப்புக்கு நன்றி ரதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பூவன் அறிமுகம் செய்த இந்த பாடல் அருமையான நுண்ணரசியல் பேசுகிறது.

@ரதி அக்கா தலைப்பை இன்னும் கொஞ்சம் eye catching ஆக மாத்த முடியுமா?

இது எல்லாரும் பார்க்க வேண்டிய பாடல் - ஏதோ சமயல் குறிப்பு என கடந்து போகக்கூடும்🙏🏾.

நான் இனி மாத்த முடியாது ...நிர்வாகம் விரும்பினால் மாத்தட்டும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனக்கு வடை எண்டவுடனை எங்கடை தமிழ் அரசியல்வாதிகள் தான் ஞாபகத்துக்கு வருகினம்.
இது எனக்கு மட்டும் தானா? 😁

அதில என்ன சந்தேகம் என்றால் பப்பு சீ பருப்பு வடையா ? அல்லது உளுந்து வடையா சாமியார்

  • கருத்துக்கள உறவுகள்+

ஒரு பாட்டுக்குள்ளே ஒட்டு மொத்த கதையும் வரலாறாய்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலை...  பூவன் மதீசன், கடந்த 16´ம் திகதி  எனக்கு, மடலில்  அனுப்பியிருந்தார். 
அவர் அன்றுதான்... யாழ்.களத்திலும், இணைந்து இருந்ததை அவதானித்தேன்.

நல்ல பாடலாக இருக்கே... 
இதனை... யாழ்.களத்தில், பலரும் பார்க்கும் படியாக இணைக்கப் போகின்றேன். ஓகேயா...
என்று, அதே நாளிலேயே... கேட்டிருந்தேன். 

அதற்கு,  அவர்... இன்றுதான், இணையுங்கள்  என்று பதில் அனுப்பியிருந்தார்.

"பாட்டி,  சுட்ட... ஒரு வடைக்கு,  அப்புவும், சுப்புவும்  சண்டை."
என்ற தலைப்பை பதியலாம்.. என்று   வந்தபோது....
ரதியால்.. அந்தத் தலைப்பு,  ஏற்கெனவே  கடந்த 11´ம் திகதியே  பதியப் பட்டுள்ளதை பார்த்தேன். 

###########    ##############    ###########

7 hours ago, goshan_che said:

பூவன் அறிமுகம் செய்த இந்த பாடல் அருமையான நுண்ணரசியல் பேசுகிறது.

@ரதி அக்கா தலைப்பை இன்னும் கொஞ்சம் eye catching ஆக மாத்த முடியுமா?

இது எல்லாரும் பார்க்க வேண்டிய பாடல் - ஏதோ சமயல் குறிப்பு என கடந்து போகக்கூடும்🙏🏾.

கோசான் கூறியது போல்.... தலைப்பை, பலரும் கவரும் படி இருந்தால் தான்,
இந்த அருமையான பாடல்... பலரையும் சென்றடையும்.

இப்போது உள்ள தலைப்புப் போல்...
"வடை"  என்று, இருந்தால்... நாங்கள், காணாத வடையா... என்று, 
ஒருவரும், எட்டியும் பார்க்க மாட்டார்கள். 😎

##############    ############   ##############

1 hour ago, ரதி said:

நான் இனி மாத்த முடியாது ...நிர்வாகம் விரும்பினால் மாத்தட்டும் 

ரதி.... 
தலைப்பை, பதிந்தவர் சொன்னால்தான்....
நிர்வாகத்தினர் மாற்றுவார்கள். 

நீங்கள், உங்கள் தலைப்பில், "ரிப்போட்"  பொத்தானை அழுத்தி,
நிர்வாகத்தினருக்கு... தலைப்பை மாற்றும் படி,  சொல்லுங்கள்.
15 நிமிடத்தில்... தலைப்பு மாறி இருக்கும், அதிசயத்தை காணுவீர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

இந்தப் பாடலை...  பூவன் மதீசன், கடந்த 16´ம் திகதி  எனக்கு, மடலில்  அனுப்பியிருந்தார். 
அவர் அன்றுதான்... யாழ்.களத்திலும், இணைந்து இருந்ததை அவதானித்தேன்.

நல்ல பாடலாக இருக்கே... 
இதனை... யாழ்.களத்தில், பலரும் பார்க்கும் படியாக இணைக்கப் போகின்றேன். ஓகேயா...
என்று, அதே நாளிலேயே... கேட்டிருந்தேன். 

அதற்கு,  அவர்... இன்றுதான், இணையுங்கள்  என்று பதில் அனுப்பியிருந்தார்.

"பாட்டி,  சுட்ட... ஒரு வடைக்கு,  அப்புவும், சுப்புவும்  சண்டை."
என்ற தலைப்பை பதியலாம்.. என்று   வந்தபோது....
ரதியால்.. அந்தத் தலைப்பு,  ஏற்கெனவே  கடந்த 11´ம் திகதியே  பதியப் பட்டுள்ளதை பார்த்தேன். 

###########    ##############    ###########

கோசான் கூறியது போல்.... தலைப்பை, பலரும் கவரும் படி இருந்தால் தான்,
இந்த அருமையான பாடல்... பலரையும் சென்றடையும்.

இப்போது உள்ள தலைப்புப் போல்...
"வடை"  என்று, இருந்தால்... நாங்கள், காணாத வடையா... என்று, 
ஒருவரும், எட்டியும் பார்க்க மாட்டார்கள். 😎

##############    ############   ##############

ரதி.... 
தலைப்பை, பதிந்தவர் சொன்னால்தான்....
நிர்வாகத்தினர் மாற்றுவார்கள். 

நீங்கள், உங்கள் தலைப்பில், "ரிப்போட்"  பொத்தானை அழுத்தி,
நிர்வாகத்தினருக்கு... தலைப்பை மாற்றும் படி,  சொல்லுங்கள்.
15 நிமிடத்தில்... தலைப்பு மாறி இருக்கும், அதிசயத்தை காணுவீர்கள். :)

எனக்கும் இதேதான் நடந்தது. பூவன் அனுப்பிய அன்று நீங்கள் இதை யாழில் பதியலாமே என கேட்டிருந்தேன். இன்றுதான் பதில் போட்டார். பதியலாம் என்று வந்தால் அக்கா முந்தீட்டா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

இந்தப் பாடலை...  பூவன் மதீசன், கடந்த 16´ம் திகதி  எனக்கு, மடலில்  அனுப்பியிருந்தார். 
அவர் அன்றுதான்... யாழ்.களத்திலும், இணைந்து இருந்ததை அவதானித்தேன்.

நல்ல பாடலாக இருக்கே... 
இதனை... யாழ்.களத்தில், பலரும் பார்க்கும் படியாக இணைக்கப் போகின்றேன். ஓகேயா...
என்று, அதே நாளிலேயே... கேட்டிருந்தேன். 

அதற்கு,  அவர்... இன்றுதான், இணையுங்கள்  என்று பதில் அனுப்பியிருந்தார்.

"பாட்டி,  சுட்ட... ஒரு வடைக்கு,  அப்புவும், சுப்புவும்  சண்டை."
என்ற தலைப்பை பதியலாம்.. என்று   வந்தபோது....
ரதியால்.. அந்தத் தலைப்பு,  ஏற்கெனவே  கடந்த 11´ம் திகதியே  பதியப் பட்டுள்ளதை பார்த்தேன். 

###########    ##############    ###########

கோசான் கூறியது போல்.... தலைப்பை, பலரும் கவரும் படி இருந்தால் தான்,
இந்த அருமையான பாடல்... பலரையும் சென்றடையும்.

இப்போது உள்ள தலைப்புப் போல்...
"வடை"  என்று, இருந்தால்... நாங்கள், காணாத வடையா... என்று, 
ஒருவரும், எட்டியும் பார்க்க மாட்டார்கள். 😎

##############    ############   ##############

ரதி.... 
தலைப்பை, பதிந்தவர் சொன்னால்தான்....
நிர்வாகத்தினர் மாற்றுவார்கள். 

நீங்கள், உங்கள் தலைப்பில், "ரிப்போட்"  பொத்தானை அழுத்தி,
நிர்வாகத்தினருக்கு... தலைப்பை மாற்றும் படி,  சொல்லுங்கள்.
15 நிமிடத்தில்... தலைப்பு மாறி இருக்கும், அதிசயத்தை காணுவீர்கள். :)

தமிழ்சிறி கோசான் நீங்கள் சொன்ன மாதிரி தலைப்பை மாத்த சொல்லி நிர்வாகத்தினரிடம் சொல்லி இருக்குது ...பார்ப்போம் 
 
  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா இந்த திரி எனக்கு கனதரம் இண்டைக்கு கண்ணில தட்டுப்பட்டது நான் ஏதோ ரெசிப்பி வீடியோ போல எண்டு பாக்கேல்ல… கோசான் உட்பட பலர் இதுக்க எழுதினாப்பிறவுதான் ஏதோ விசயம் இருக்கு போல எண்டு வந்து பாத்தால் சா என்ன அருமையான ஒண்ட மிஸ் பண்ணபாத்தன் ஒரு விசர் தலைப்பால… பூவன் தம்பி வேற லெவல்.. ஆனா தம்பி கொஞ்சம் சாதி சமய வெறியள உன்ன சுத்தி வச்சிருக்காத அந்த வட்டத்த விட்டு வெளிய வா உனக்கு வேற லெவல் எதிர்காலம் இருக்கு.. சினிமா இந்தியாவிலையும் சுறா ஜனா வெளவால்னு ஒரு வெற்று சினிமாவும் ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றிமாறன் etcந்னு கனதியான படைப்புகளை தரும் ஆற்றல் மிகு படைப்பாளிகள் இருப்பது போல ஈழத்திலும் கட் அவுட்டுக்கு பால் ஊத்துவார்கள் என்று எதிர்பார்த்து படம் எடுப்பவர்களும் கனதியான படைப்புகளை தரும் படைப்பாளிகள் என்று இரு வர்க்கம் சினிமா படைப்பில் ஈடுபடுகிறது.. இதில் கனதியான படைப்புகளை தரும் வர்க்கத்தை சேர்ந்தவனாக நீ வருவாய் என்பதை உன் ஆரம்ப படைப்புகளிலேயே இனம் கண்டிருந்தேன்.. மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி..

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரதி said:

தமிழ்சிறி கோசான் நீங்கள் சொன்ன மாதிரி தலைப்பை மாத்த சொல்லி நிர்வாகத்தினரிடம் சொல்லி இருக்குது ...பார்ப்போம் 

ரதி... நீங்கள் தான், என்ன தலைப்பு... வைக்க வேண்டும் என்று  சொல்ல வேண்டும்.
அப்படி என்றால்தான், உடனே மாற்றுவார்கள்.

அவர்கள்... நாலு பேரும் சேர்ந்து, முடிவு எடுக்க... 😂
நாலு,  நாள் ஆகும். அது.. சரி வராது. 🤣

டக்கென்று... நீங்களே ஒரு தலைப்பை சொல்லி.
மாற்றச் சொன்னால்... 15 நிமிடம்  போதும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

ரதி... நீங்கள் தான், என்ன தலைப்பு... வைக்க வேண்டும் என்று  சொல்ல வேண்டும்.
அப்படி என்றால்தான், உடனே மாற்றுவார்கள்.

அவர்கள்... நாலு பேரும் சேர்ந்து, முடிவு எடுக்க... 😂
நாலு,  நாள் ஆகும். அது.. சரி வராது. 🤣

டக்கென்று... நீங்களே ஒரு தலைப்பை சொல்லி.
மாற்றச் சொன்னால்... 15 நிமிடம்  போதும். :)

என்ன தலைப்பு வைக்கிறது நீங்களே யோசித்து சொல்லுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

என்ன தலைப்பு வைக்கிறது நீங்களே யோசித்து சொல்லுங்கோ 

வடை,  சுட்ட பாட்டி, லண்டனில்... அப்புவும், சுப்புவும் கவலையில்.

பாட்டி,  சுட்ட... ஒரு வடைக்கு,  அப்புவும், சுப்புவும்  சண்டை.

மேலே...  இரண்டு தலைப்புகள் உள்ளது.  உங்களுக்கு, பிடித்திருக்குதா? :) 🤣

  • nunavilan changed the title to பாட்டி, சுட்ட... ஒரு வடைக்கு, அப்புவும், சுப்புவும் சண்டை
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதில என்ன சந்தேகம் என்றால் பப்பு சீ பருப்பு வடையா ? அல்லது உளுந்து வடையா சாமியார்

பருத்தித்துறை வடை 🙃

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை மாற்றித் தந்த, நிர்வாக உறுப்பினர்..... நுணாவிலான் அவர்களுக்கு, 
ரதியின் சார்பில்... நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Eppothum Thamizhan said:

வடை என்றவுடன் உங்களுக்கு இந்திய பிரதமர் மோடியல்லவோ நினைவுக்கு வரவேண்டும்??😜

வாயால வடை சுடுற விசயத்திலை நாங்கள் தன்னிறைவு அடைஞ்சிட்டம் எல்லோ....பிறகேன் அங்காலை போவான்?  😁

  • கருத்துக்கள உறவுகள்

வடை... சுட்ட  பாட்டி யார்?  (லண்டனில்.)
ஆழம் பொருந்திய... கவிதை வரிகள்.
எமது.... இனப் பிரச்சினையே, அங்கிருந்துதான் ஆரம்பமாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

UK QUEEN FAVOURITE DRINKS || ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது  அருந்தும் அளவு தெரியுமா...?

Sting, Kylie Minogue to grace Queen Elizabeth II's 92nd birthday party

Mum's the word: Queen Elizabeth is hiring a party planner

ஹார்வே சூறாவளி: பேரிடருக்கு ஆழ்ந்த கவலை தெரிவித்தார் எலிசபெத் மகாராணி - BBC  News தமிழ்

இவராகவும்.... இருக்கலாம்(ஸ்)

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக வரும் காகங்கள் சூப்பர் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.