Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பனம்பழஞ் சூப்பி - ஜூட் பிரகாஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது பச்சை சொதி சாப்பிட்டு இருக்கிறீர்களா.மற்றது இந்த பனம் பழம் எந்த செடியில் காய்க்கும்.😄

  • Replies 66
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

யாராவது பச்சை சொதி சாப்பிட்டு இருக்கிறீர்களா.மற்றது இந்த பனம் பழம் எந்த செடியில் காய்க்கும்.😄

காலங் காத்தால, இதென்ன... கோதாரியாய், கிடக்குது.  🤔 😡  🙃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

யாராவது பச்சை சொதி சாப்பிட்டு இருக்கிறீர்களா.மற்றது இந்த பனம் பழம் எந்த செடியில் காய்க்கும்.😄

அது செடியல்ல சுவை .......கரணை கிழங்குபோல மண்ணுக்குள் காய்க்கும்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நீங்கள் வீட்டிலை என்ன மாதிரி?
சொதியா ஆணமா? 😎

நேரத்துக்கு ஏற்றமாதிரி சொதியாகவும் ஆணமாகவும் கலந்துகொள்ள வேண்டியதுதான் வீட்டில் 

8 hours ago, satan said:

ம்.... ம் .....  பத்துப்பிள்ளை பெத்தவவுக்கு, ஒரு பிள்ளை பெத்தவ முக்கிக் காட்டினாவாம், ஊரில உள்ள பழமொழி. கொரோனாவும் அதுவுமா  அனுப்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிற உங்களை  நான்  ஏன் தடுக்க போகிறேன்?

பழம் வேண்டுமா வேண்டாமா அத சொல்லுங்கள் பத்து பதினைந்து பிள்ளை கதையெல்லாம் பிறகு கதைப்பம் 😝

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

இது ஆணம் ......அப்படியே இதை பார்த்து மொக்கங் கடையை நினைத்துக் கொண்டு மூக்கால் உறிஞ்சினால் சுவை சிரசில் அடிக்கும்........!   😇

நானும் மொக்கன்கடையில் பலமுறை சாப்பிட்டுள்ளேன், அதனால்தான் ஏராளனின்  கேள்விக்கு மொக்குத்தனமாகப் பதில் கூறிவிட்டேனா.....????🤔  மன்னித்துக் கொள்ளுங்கள் ஏராளன் அவர்களே.!!🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, satan said:

வெங்காய சாக்கு என்று வருவதற்கு முன் வெங்காய  கூடையே பயன்படுத்தினார்களாம். குழல் வடிவில் பெரிய ஓட்டை உடையதாய் இருக்குமாம். 

பனை ஓலையில் இழைத்த வெங்காயக் கூடைகள் இவைதானா? ஆனால் ஓட்டைகளைக் காணவில்லையே.??🤔

olaikal-virpanaikku.jpg

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Paanch said:

பனை ஓலையில் இழைத்த வெங்காயக் கூடைகள் இவைதானா? ஆனால் ஓட்டைகளைக் காணவில்லையே.??🤔

olaikal-virpanaikku.jpg

உதுக்குள்ள வெங்காயம் போட்டு அனுப்பினால் குப்பையிலதான் கொட்டவேண்டும். உவ்வளவு அகலம் இருக்காது, யு வடிவில் மருத்துவ சோதனைக்குழாய் போல, வெங்காயம் வெளியில் கொட்டா வண்ணம் சிறிய ஓட்டைகள்  இருக்கும்.

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நேரத்துக்கு ஏற்றமாதிரி சொதியாகவும் ஆணமாகவும் கலந்துகொள்ள வேண்டியதுதான் வீட்டில் 

பழம் வேண்டுமா வேண்டாமா அத சொல்லுங்கள் பத்து பதினைந்து பிள்ளை கதையெல்லாம் பிறகு கதைப்பம் 😝

 பதிலும் அதிலே தந்துவிட்டேன்,  அவ்வளவு அவசரம் பதிலை மீண்டும் வாசியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

உதுக்குள்ள வெங்காயம் போட்டு அனுப்பினால் குப்பையிலதான் கொட்டவேண்டும். உவ்வளவு அகலம் இருக்காது, யு வடிவில் மருத்துவ சோதனைக்குழாய் போல, வெங்காயம் வெளியில் கொட்டா வண்ணம் சிறிய ஓட்டைகள்  இருக்கும்.

நானும் சிறுவயதில் பனை ஓலைப்பாய், கடகம், நீற்றுப்பெட்டி, போன்றவற்றை இழைத்த அனுபவம் உண்டு. ஆனால், யு வடிவில் மருத்துவ சோதனைக்குழாய் போல இழைக்கப்பட்ட வெங்காயப் பையைக் கண்டதில்லை. யாரிடமாவது அதன் படம் இருந்தால் தயைசெய்து போட்டுவிடுங்களேன்.🙏  

  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பளை மாவிட்டபுரம் சுற்றுவடடாரத்தில் உள்ளவர்கள் வெங்காயக்கூடை பின்னிக் கொண்டுபோய் பளை (இது கொடிகாமம் பளை அல்ல....வீமன்காமத்துக்கு அருகில் உள்ளது) யூனியன் சங்கத்தில் குடுத்தால் பணம் தருவார்கள்......இது அங்குள்ள பெண்களுக்கு ஒரு சிறிய ஆனால் பெரிய வருமானம்.....எங்கள் வீட்டிலும் அயலட்டைப் பொம்பிளைகள் வந்து முற்றத்தில் இருந்து அரட்டை அடித்துக் கொண்டு வேலை செய்வார்கள்......ஆச்சியெல்லாம் 90 வயதுக்குமேல் நோய் நொடி இல்லாமல்  வாழ்ந்ததுக்கு (அவ பரியாரியாரிடம் போனதாய் எனக்கு நினைவு இல்லை) இது போன்ற பொழுதுபோக்குகளும் வேலைகளும்தான் காரணம் போலும்......!  

வெங்காயக்கூடை: நீளம் ஒன்றரை முழம் அளவில் இருக்கும். சராசரியான தொடையளவு உள்சுற்று இருக்கும்  ஆறு பட்டமளவில் சின்னவெங்காயம் கொட்டுண்டாத அளவுக்கு துவாரங்கள் இருக்கும்......!

அந்தப்படம் பார்க்கிறேன் கிடைக்கவில்லை.......!

பனையோலை ஈர்க்கில்தான் பின்னுவது....!

Native Things - பழவேற்காடு பனையோலை இடியாப்ப தட்டு - Pulicat... | فيسبوك

இந்த இடியப்பத்தட்டை பாருங்கள்.இதே பின்னலில் உயரம் 1 1/2 முழம்  இருக்கும்......!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

அதே.......! அதை இழைத்தவர்களும் உயிரோடு இல்லை இன்று. என்தாயார் வைத்திருந்தார் ஆனால் நாங்கள் எத்தனை இடம் பெயர்ந்தோம். அதில் மீட்க முடியாத, உணர்வோடு சேர்ந்தவைகளையும், உறவுகளையும் சேர்த்து தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கிறோம்,  கிடைக்காது என்று தெரிந்தும்.  

  • கருத்துக்கள உறவுகள்

பனை மரத்தோட சம்மந்தப்பட்ட இவ்வளவு விசயங்கள் இருப்பதை பார்க்க வியப்பாக உள்ளது ...நான் ஒரு நாள் கூட பனம்பழத்தை பச்சையாகவோ ,சுட்டோ சாப்பிட்டதில்லை ...பாத்தி கட்டி பனங்கிழங்கும் ,காய வைத்து புளுக் கொடியலும் , பனங்காய் பணியாரமும் தான் சாப்பிட்டு இருக்கிறேன்...பனாட்டு ஓர் ,ஈர் தடவை சுவைத்திருக்கிறேன் ஆனால் பிடிக்கவில்லை ...சீனிகளை பாவிப்பதை ஐடா இது எவ்வளவோ மேல்  என்று நினைக்கிறேன் 
 
22 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா... பனம் பழத்துடன், பனை மரத்தை பற்றிய அனைவரின் கருத்தும் அருமை. 👍

இலங்கையில்... வடக்கு, கிழக்கு பகுதிகளில் மட்டும் தான்.. 
அதிக பனை மரங்கள் உள்ளது என நினைக்கின்றேன்.

அதே... போல், தமிழ் நாட்டிலும்... திருச்சி, தஞ்சாவூர் போன்ற... 
சில குறிப்பிட்ட மாவட்டங்களில் தான்.. பனை மரங்களை அதிகம் கண்டுள்ளேன்.
இதற்கு ஏதாவது, விசேட காரணங்கள் உண்டா... என தெரியவில்லை.

யாழ். மாவட்டத்தை சேர்ந்த, தமிழர்களை...  "பனங் கொட்டைகள்" என்று,
மற்றைய மாவட்டத்தினர், சொல்லும் போது... எனக்கு கோபம் வருவதில்லை. :)
மாறாக... அதனை கேட்க,  எனக்கு  மகிழ்ச்சியாக இருக்கும். 🥰

மற்றவர்களுக்கு... என்ன உணர்வு ஏற்படுகின்றது என்பதை அறிய ஆவலாக உள்ளது. 

எனக்கு கேட்க கோபமாவும் ,விசராவும் இருந்தது ...நான் மட்டுவுக்கு போன கொஞ்ச என்னை அப்படி கூப்பிட்டவை .

பாண்டிச்சேரியில் எங்கள் ஊர் குழம்பை ஆணம் என்று சொல்வார்கள்.

ஒரு தடவை அவர்கள் விருந்திற்குப் போயிருந்தேன். பிரியாணிச் சோறு பரிமாறப்பட்டது. குழம்பு ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டது. நான் பிரியாணியுடன் குழமபி ஊற்றி ஒரு வெட்டு வெட்டிக் களைத்துப் போனேன். அருகில் இருந்தவர்கள் 'ஆணம்' எடுக்காமல் அமைதியாக பிரியாணி சாப்பிட்டார்கள். பின்னர் வெள்ளைச் சோறு கொண்டு வந்தார்கள். ஏனையவர்கள் வெள்ளைச் சோறுடன் தனியே ஆணம் விட்டுத் தாராளமாகச் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போதுதான் புரிந்தது பிரியாணி முதல் ஆட்டம் என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய கூடை யாழ்ப்பாணம் .  இப்படியா இருக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2021 at 16:12, ரதி said:

எனக்கு கேட்க கோபமாவும் ,விசராவும் இருந்தது ...நான் மட்டுவுக்கு போன கொஞ்ச என்னை அப்படி கூப்பிட்டவை .

இப்ப ஒரு வருடத்துக்கு முதலும் கூட யாழ்களத்தில் மட்டகளப்பில பாயோட ஒட்டுற கதை வந்தது. அவங்களுக்கும் அதை வாசிக்க கடுப்பாகும் போல🤣.

யாழ்பாண ஆக்களுக்கு பனங்காய் சூப்பி, சூப்பி முன் மேல் பல்லு மிதப்பு எண்டும் சொல்வினம்🤣. உங்களுக்கு எப்படி🤣

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிலாமதி said:

வெங்காய கூடை யாழ்ப்பாணம் .  இப்படியா இருக்கும் ?

வெங்காய கூடை என்பது… நீங்கள் நினைக்கிற மாதிரி, Shopping Basket அல்ல.

அது தோட்டத்தில் விளைந்த வெங்காயத்துடன் உள்ள காய்ந்த தாள்களை இணைத்து… ஒரு  பெரிய  பூசனிக்காய் அளவிற்க்கு கட்டி வீட்டுக்குள்  தொங்க விட்டிருப்பார்கள். 

நீண்ட நாட்களுக்கு, பழுதாகாமல் இருக்கும். அவ்வப் போது.. சமையலுக்கு தேவையான வெங்காயத்தை.. அதிலிருந்து புடுங்கி எடுப்பார்கள்.

வெளி நாடுகளில்…. உள்ளியை, அதன் தாளுடன் சேர்த்து… நீண்ட பின்னல் போல் பின்னி வைத்திருப்பார்கள்.

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2021 at 01:11, நிழலி said:

கூளில் தேடும் போது இரண்டு மூலங்கள் இதற்கு வருகின்றது.

படங்கள் இல்லாமல் 
http://johan-paris.blogspot.com/2006/08/blog-post_18.html

படங்களுடன்

https://ourjaffna.com/tradition/கற்பகதரு

இரண்டுமே ஜோகனால் எழுதப்பட்டது:

நான் எதிர்பார்த்தது போலவே Copy right பிரச்சனை காரணமாக தனித்து இணையத்தள முகவரியை மட்டுமே இணைக்கமுடியும் என தெரிவித்துள்ளார்கள். அவர்களின் பதில்👇🏼

Vanakkam!

Thanks for sharing this resource with us, we believe this is a valuable resource too!

Unfortunately, we couldn't upload the PDF due to copyright issues. However, thank you for specifying the links to the websites where you found the article from. 

We have uploaded the links to the article onto the Open Languages portal, and you should be able to see this publicly next week.

Thanks again and please do share more resources with us! 

Kind regards, 

Project Officers (Tamil Curriculum) 

Sydney Institute for Community Languages Education (SICLE) 

Sydney School of Education and Social Work 

THE UNIVERSITY OF SYDNEY”

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.