Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஆனால் விரும்பி ஒரு பெண்ணுடன் பூஜை அறையில் இருந்து போனில் சல்லாபிப்பது அப்படி ஒரு குற்றம் இல்லை. (விரும்பாமல் செய்தால் பாலியல் துன்புறுத்தல்). 

போனில் சல்லாபிப்பதை பெண் வெளியிட்டு இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா??
அல்லது ராகவனுக்கு பொழுது போகவில்லை என்பதற்காக வெளியிட்டு இருப்பார் என நினைக்கிறீர்களா?

  • Replies 161
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, goshan_che said:

இரெண்டுக்கும் வித்தியாசமில்லை என்பது என் நிலைப்பாடு.

சீமானின் தேர்தல் அறிக்கையில் பல நல்ல விடயங்கள் உள்ளன என்பது நானும் முன்பே ஏற்றதுதான். அதில் நல்லதை எடுத்து அமல்படுத்துவது ஸ்டாலினின் கெட்டித்தனம் என நான் நினக்கிறேன்.

ஆட்சி கதிரையில் அமர்ந்து விட்டால் எல்லாமே கெட்டித்தனமும் சுலபமாகவே இருக்கும். அதுவும் திமுகவின் தேர்தல் விளம்பரத்தில் இல்லாததை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு அலாதி பிரியம். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை திமுக முன்னெடுப்பதின் மர்மம் என்ன? ஒரு வேளை சீமான் xy  டீமாய் இருக்குமோ? 🤣

சீமான் ஆட்சிக்கதிரையில் இருந்தால் ஸ்டாலினை விட இன்னும் திறம்பட நல்ல திட்டங்களை அமுல்படுத்துவார். ஒன்றுமே இல்லாத திரவிய திராவிடத்திற்கு சாவு மணி அடிக்க வேண்டும்.

ஏனெனில் நான் தமிழன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nunavilan said:

போனில் சல்லாபிப்பதை பெண் வெளியிட்டு இருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்களா??
அல்லது ராகவனுக்கு பொழுது போகவில்லை என்பதற்காக வெளியிட்டு இருப்பார் என நினைக்கிறீர்களா?

இவர்கள் இருவரும் விரும்பாமல் கூட ஒரு மூன்றாம் நபர் போன்களை, கிளவுட் ஸ்டோர்ரெஜை ஹேக் செய்யலாம்.

அல்லது அந்த பெண்ணே தெரிந்து கொண்டு ஒரு honey trap ஐ இராகவனுக்கு செட் பண்ணி இருக்கலாம்.

அந்த பெண்ணின் குரலை வெளியிட்டால் அவரை அடையாளம் கண்டு விடாலம் என்றால்- குறைந்த பட்சம் இராகவன் பேசியதையாவது வெளியிட்டால் - சம்பாசனையின் போக்கை வைத்து, இது இருவரும் விரும்பி செய்ததா, அல்லது பாலியல் துன்புறுத்தலா என்பதை ஊகிக்கவாவது செய்யலாம்.

இங்கே வீடியோ லீக் பண்ணும் மதனும் ஒரு நாலம்தர யுடியூபர் என்பது கவனிக்க வேண்டியது. திமுக விடம் காசை வாங்கி கொண்டு செயல்படவும் கூடும்.

என்னை பொறுத்தவரை - அரசியலில் அண்ணாமலை, மதன், இராகவன் இப்படி மூவரும் ஆளை ஆள் அடித்து கொண்டு, அதனால் தமிழ்நாட்டில் பாஜக அடிவாங்குவது எனக்கு பெரும் சந்தோசமே.

ஆனால் என் அரசியல் என்ன நடக்கிறது என்ற என் பார்வையை மறைக்ககூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

ஆட்சி கதிரையில் அமர்ந்து விட்டால் எல்லாமே கெட்டித்தனமும் சுலபமாகவே இருக்கும். அதுவும் திமுகவின் தேர்தல் விளம்பரத்தில் இல்லாததை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு அலாதி பிரியம். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை திமுக முன்னெடுப்பதின் மர்மம் என்ன? ஒரு வேளை சீமான் xy  டீமாய் இருக்குமோ? 🤣

சீமான் ஆட்சிக்கதிரையில் இருந்தால் ஸ்டாலினை விட இன்னும் திறம்பட நல்ல திட்டங்களை அமுல்படுத்துவார். ஒன்றுமே இல்லாத திரவிய திராவிடத்திற்கு சாவு மணி அடிக்க வேண்டும்.

ஏனெனில் நான் தமிழன்.😎

1. திருட்டு திமுக - நாம் தமிழரை கையாளும் பல யுக்திகளில் இது ஒன்று. கடைசியாக நடந்து முடிந்த யூகே தேர்தலில் கூட கொன்சேர்வேடிவ் பார்ட்டி, லேபர் பார்ட்டியின் கொள்கையை சுட்டு விட்டதாக புகார் கிளம்பியது. 

2. அதற்கு ஆட்சி கதிரையில் அமர வேண்டும். அதற்கு நம்பகதன்மை வேண்டும். இனத்தின் எதிரி, இவர்களை கருவறுப்பதே எங்கள் முதல் கடமை என கூறிவிட்டு, தேர்தல் முடிவு வந்த கையோடு (வேறு எந்த எதிர்கட்சி தலைவரும் சந்திக்க முதல்) அதிமுக ஜெயகுமார் கூட முதல்வர் அலுவலகத்தில் கொரோனா நிதி கொடுத்த நிலையில், தான் மட்டும் நேரில் போய் நிதி கொடுத்து, ஆட்சிக்கு பாராட்டு பத்திரமும் வாசித்தால், நம்பகதன்மை வருவது கஸ்டம்தான்.

சீமானின் கூற்றுபடி நடப்பது சாதாரண அரசியல் அல்ல. 

தமிழன் v திராவிடன் போர்.

போரின் இடையில் இம்சை அரசன் வடிவேலு போல வல்லவராயனுக்கு முன்னாள் போய் டான்ஸ் ஆடினால் - நம்பகதன்மையும் டான்ஸ் ஆடிவிடும்.

அதே போல் அக்யூஸ்ட் நம்பர் டுவுக்கும், தூத்துக்குடி படுகொலையாளி எடப்பாடிக்கும் ஒற்றுமை ஏற்படுத்த தூது போகவா என கேட்ட போதும் - தூத்துகுடி போராட்டதில் இவர் மேல் இருந்த   நம்பகத்தன்மை சுக்கலாகி போனது.

ஆற்றொணா துயரத்தில் ஆழ்ந்துள்ள புலம் பெயர் உறவுகள் சிலர், தமது கடைசி நம்பிக்கையாக சீமானை பிடித்திருப்பதால் - அவர் என்ன செய்தாலும் அவரின் பக்தியில் இருந்து விடு படப்போவதில்லை.

ஆனால் தமிழக மக்கள் இப்படி ஒரு மனோநிலையில் இல்லை. ஆகவே அங்கே ஆட்சியை பிடிப்பது…..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கள்ளர்களிலும் எமக்கு தேவையானவர்கள் உண்டு. அவர்களை கால நேரத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். நேர்மையாக இருந்து அனைத்தையும் பறிகொடுத்தது தான் வரலாறு.

டொனால்ட் ரம்ப் இருந்திருந்தால் நல்லாய் இருந்திருக்கும் என உலகத்தில் இருக்கும் பலர் ஆதங்கப்படுகின்றனர்.

எனவே...... இன்றைய காலகட்டத்திற்கு யார் தேவையோ அவர்களை அரவணைப்பதே ஈழத்தமிழர்களுக்கு சாலச்சிறதது. 😎

முஸ்லிம்களை வெறுப்போர், கறுப்பின மக்களை இன்னும் அடிமையாக வைத்திருக்க யாசிப்போர், பெண்கள் பிள்ளை பெற்று விட்டு வீட்டில் இருக்க விரும்புவோர் - இவர்களெல்லாம் ட்ரம்ப் வந்திருக்க வேன்டுமென்று ஏங்குவோர் தான்! - புரிகிறது உங்கள் ஏக்கம்!😎

ஆனால், அமெரிக்கர்களுக்கு அப்படியெதுவும் ஏக்கம் இல்லாமல் கோவிட் செய்து விட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஆட்சி கதிரையில் அமர்ந்து விட்டால் எல்லாமே கெட்டித்தனமும் சுலபமாகவே இருக்கும். அதுவும் திமுகவின் தேர்தல் விளம்பரத்தில் இல்லாததை நிறைவேற்றுவதில் அவர்களுக்கு அலாதி பிரியம். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை திமுக முன்னெடுப்பதின் மர்மம் என்ன? ஒரு வேளை சீமான் xy  டீமாய் இருக்குமோ? 🤣

சீமான் ஆட்சிக்கதிரையில் இருந்தால் ஸ்டாலினை விட இன்னும் திறம்பட நல்ல திட்டங்களை அமுல்படுத்துவார். ஒன்றுமே இல்லாத திரவிய திராவிடத்திற்கு சாவு மணி அடிக்க வேண்டும்.

ஏனெனில் நான் தமிழன்.😎

இல்ல‌த்த‌ர‌சிய‌ளுக்கு 1000ரூபாய் மாத‌ம் கொடுப்போம் என்று தேர்த‌ல் நேர‌ம் சொல்லிச்சின‌ம் இன்னும் கொடுக்க‌ வில்லையாம்...........இப்ப‌டி ப‌ல‌த‌ சொல்லிட்டு கொண்டே போக‌லாம் தாத்தா

திமுக்கா க‌ட்சியை ப‌ற்றி தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் அவ‌ர்க‌ளின் க‌ள்ள‌ நாட‌க‌ங்க‌ள் 😁😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

தமிழன் v திராவிடன் போர்.

போரின் இடையில் இம்சை அரசன் வடிவேலு போல வல்லவராயனுக்கு முன்னாள் போய் டான்ஸ் ஆடினால் - நம்பகதன்மையும் டான்ஸ் ஆடிவிடும்

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் திராவிடனா தமிழனா? 😁

நான் மனிதன் என்ற மொட்டைப்பதில் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.🤣

1 hour ago, பையன்26 said:

இல்ல‌த்த‌ர‌சிய‌ளுக்கு 1000ரூபாய் மாத‌ம் கொடுப்போம் என்று தேர்த‌ல் நேர‌ம் சொல்லிச்சின‌ம் இன்னும் கொடுக்க‌ வில்லையாம்...........இப்ப‌டி ப‌ல‌த‌ சொல்லிட்டு கொண்டே போக‌லாம் தாத்தா

திமுக்கா க‌ட்சியை ப‌ற்றி தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் அவ‌ர்க‌ளின் க‌ள்ள‌ நாட‌க‌ங்க‌ள் 😁😀

இந்தா வந்தவுடனை சாரயக்கடையளை மூடுறம் பண்ணுறம் எண்டுச்சினம்....மறந்து போச்சினம் போலை.....சாராயக்கடையளை  மூடுவம் எண்டு கன்னிமொழி அக்காதான் பெரிசாய் சவுண்டு விட்டவ 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் திராவிடனா தமிழனா? 😁

நான் மனிதன் என்ற மொட்டைப்பதில் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.🤣

இந்தா வந்தவுடனை சாரயக்கடையளை மூடுறம் பண்ணுறம் எண்டுச்சினம்....மறந்து போச்சினம் போலை.....சாராயக்கடையளை  மூடுவம் எண்டு கன்னிமொழி அக்காதான் பெரிசாய் சவுண்டு விட்டவ 😂

தேப்ப‌னும்  ம‌க‌னும் வீட்டு வாச‌லில் இருந்து சாராய‌ க‌டையை மூட‌னும் என்று போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ நேர்மையாள‌ர்க‌ள் 😁😀

கொக்கா க‌னிமொழிய‌ நான் க‌ண்டு கொள்வ‌தில்லை தாத்தா........திமுக்கா 2006மீண்டும் ஆட்சியை பிடிச்ச‌ப்போ கொக்கா க‌னிமொழி சொன்னா ஈழ‌த்தில் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு த‌மிழ‌ர்க‌ளின் நிக‌ங்க‌ளை வெட்டி கொடுமை ப‌டுத்தி த‌மிழ‌ர்க‌ளை வைச்சிக்கின‌ம் அது இது என்று கொலைஞ‌ரின் ம‌க‌ள் கொக்கா க‌னிமொழி சொன்னா

அதே இன‌வாத‌ ராஜ‌ப‌க்ஸ்சாவுக்கு ப‌ரிசு பொருல் கொடுத்து புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுத்த‌வா தான் இந்த‌ கொக்கா க‌னிமொழி தாத்தா 😁😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Justin said:

முஸ்லிம்களை வெறுப்போர், கறுப்பின மக்களை இன்னும் அடிமையாக வைத்திருக்க யாசிப்போர், பெண்கள் பிள்ளை பெற்று விட்டு வீட்டில் இருக்க விரும்புவோர் - இவர்களெல்லாம் ட்ரம்ப் வந்திருக்க வேன்டுமென்று ஏங்குவோர் தான்! - புரிகிறது உங்கள் ஏக்கம்!😎

ஆனால், அமெரிக்கர்களுக்கு அப்படியெதுவும் ஏக்கம் இல்லாமல் கோவிட் செய்து விட்டது!

முன்னைய ஆட்சியாளர் காலத்திலும் இனக்கலவரம் நடந்தனவே அவையெல்லாம் கணக்கில் இல்லையா சார்? 🙃டொனால்ட் ரம்ப் காலத்தில் சண்டைகள் இல்லை. வெடிச்சத்தமும் இல்லை.😷

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

முன்னைய ஆட்சியாளர் காலத்திலும் இனக்கலவரம் நடந்தனவே அவையெல்லாம் கணக்கில் இல்லையா சார்? 🙃டொனால்ட் ரம்ப் காலத்தில் சண்டைகள் இல்லை. வெடிச்சத்தமும் இல்லை.😷

உங்களுக்கு வெடிச்சத்தம் குறைவாகக் கேட்க வேண்டுமென்பதற்காக மக்களின் காங்கிரசை முற்றுகையிடும் காட்டு தர்பார் பாணி தலைவர்களை அமெரிக்கா தெரிவு செய்ய முடியாது!😂

நான் மேலே சொன்னது போல, வெறுப்பரசியல் செய்யும் குழுக்களுக்கு ட்ரம்ப் ஹீரோ தான். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒன்டு எரியுது.😄

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் திராவிடனா தமிழனா? 😁

நான் மனிதன் என்ற மொட்டைப்பதில் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.🤣

நான் எப்போதும் தமிழன். 

தமிழனாக உணர்ந்து, தமிழ் பேசி, 600 ஆண்டுகள் தமிழ் மண்ணில் வாழ்ந்தவரும் தமிழரே என்ற அகண்ட சிந்தனை கொண்ட தமிழன்.

ஈழத்தில் இருப்பது போன்ற இனப்பகுப்பு தமிழகத்தில் இல்லை என்பதை தமிழகத்தில் வாழ்ந்து புரிந்து கொண்ட தமிழன்.

தமிழ் பேசும் முஸ்லீம்கள் ஈழத்தில் வேறு இனமாகவும், தமிழகத்தில் தமிழர்களாகவும் கருதப்படும் நுணுக்கம் உணர்ந்த தமிழன்.

மொழிவழி மாநில பிரிப்புக்கு பின், திராவிட இனம் என்ற சிந்தனை காலாவதியாகி விட்டதொன்று என நம்பும் தமிழன்.

சாதியின் பெயரால் ஒருவரை தமிழரா இல்லையா என இனம் காண விளையும் ஈனத்தனத்தை வெறுக்கும் தமிழன்.

2 hours ago, goshan_che said:

சிறப்பான பதில் கோசான். உண்மையில் தமிழ் நாட்டில் தமிழன், தமிழன் அல்லாதவன் போன்ற பிரிவினை வெற்று கோசங்கள்  பதவி ஆசையால் ஒரு சில நயவஞ்சகர்களால் விதைக்கப்பட்டாலும் தமிழக மக்கள் அதை நிராகரித்தனர்.  தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக எல்லாமே தமிழ் கட்சிகளே. தமிழகத்தில் முதல்வராக பதவி வகித்த கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லோருமே தமிழர்களே. அவர்களின் ஆட்சியில் உள்ள தவறுகளை நேர்மையுடன் சுட்டிக்காட்டி தான் பதவிக்கு வர முடியாது என்று உணர்ந்த சீமான் ஈழப்பிரச்சனை வைத்து  இனவெறியை கையிலெடுத்து தனது ஆசையை தீர்கலாம் என்ற நப்பாசையுடன் புறப்பட்டு தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டார்.  

நீர்கொழும்பு பகுதியில்   வாழ்ந்த தமிழர்கள் சிங்களவரக மாறிய போது அவர்களை சிங்களவராக ஏற்று தமது தேசியத்துக்குள் உள்வாங்கியதலே சிங்கள தேசியம் பலம் பெறுகிறது. பல நூற்றாண்டுகளாக தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் மக்களை  தனது அரசியல் இலாபத்திற்காக தமிழன் அல்லாதவன் என்று கூறி  இனவெறி நச்சு விதையை விதைக்கும் சீமான் போன்ற தீயசக்திகளை நிராகரித்த தமிழ் நாட்டு மக்களை நினைத்து பெருமை கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீர்கொழும்பு பகுதியில்   வாழ்ந்த தமிழர்கள் சிங்களவரக மாறிய போது அவர்களை சிங்களவராக ஏற்று தமது தேசியத்துக்குள் உள்வாங்கியதலே சிங்கள தேசியம் பலம் பெறுகிறது. 

அந்த மக்கள் சிங்கள மக்களாக சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ள பட்டார்கள் என்று யார் உங்களுக்கு சொன்னது???

(நான் நீர்கொழும்பில் சில காலம் வாழ்ந்து இருக்கிறேன்)

Edited by விசுகு
சில வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

அந்த மக்கள் சிங்கள மக்களாக சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ள பட்டார்கள் என்று யார் உங்களுக்கு சொன்னது???

(நான் நீர்கொழும்பில் சில காலம் வாழ்ந்து இருக்கிறேன்)

தமிழ்நாட்டில் தமிழர்களாக  மாறி தமிழ் பேசினாலும் கன்னட தெலுங்கர்கள் உகாதி கொண்டாட தடையில்லை அதே போல் மலையாள தமிழர்களுக்கும் ஓணம் கொண்டாட தடையில்லை .உகாதிக்கும் .ஓணத்துக்கும் தமிழ்நாட்டில் விடுமுறையுண்டு தமிழர் திருநாள்  தைப்பொங்கலுக்கு இல்லை அதுவும் கடந்த சில வருடங்களுக்கு முன் அடிபட்டு விடுமுறை வாங்கினார்கள் தமிழ்நாட்டில் திராவிடம் எனும் சுத்துமாத்துக்கு அங்குள்ள தமிழர்கள் பலியாகிவிட்டனர் நீர்கொழும்பு சிங்களத்துக்கு மாறிய தமிழர்களினால் தைப்பொங்கல் கொண்டாட முடியுமா ?

தங்களின் மனம் போன போக்கில் கருத்துக்களை அள்ளி விடுகினம் .

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விசுகு said:

அந்த மக்கள் சிங்கள மக்களாக சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ள பட்டார்கள் என்று யார் உங்களுக்கு சொன்னது???

(நான் நீர்கொழும்பில் சில காலம் வாழ்ந்து இருக்கிறேன்)

அண்ணை,

நீங்கள் நீர்கொழும்பில் வசித்தபடியால் கட்டாயம் தெரிந்திருக்கும். அங்கே இப்போ இருக்கும் சில்வாக்களும், பெர்ணாந்துக்களும் 3 தலைமுறைக்கு முன்னம் தமிழ்தான்.

ஆனால் கலவரத்தில் முன்னுக்கு நிண்டு தமிழனை அடிப்பவர்களும் இவர்கள்தான் - அந்தளவுக்கு அவர்களை தம் வய/மய படுத்தி தன்னை வளர்த்து கொண்டது சிங்கள தேசியவாதம்.

பலரை கத்தோலிக்காராய் இருந்து பெளத்தராயும் ஆக்கி விட்டனர்.

அண்மைய திரி ஒன்றில் பலர் சுதர்சினி, ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ள பற்றியும் சிலாகித்து இருந்தீர்கள். இருவரும் நீர்கொழும்பு மாவட்டத்தின் முதன்மை அரசியல்வாதிகள்.

இவர்கள் தமிழ் அடி என்பதே பலருக்கு தெரியாது. அந்தளவுக்கு இவர்களை கொண்டாடுகிறது சிங்கள தேசியம்.

இவர்கள் மட்டும் அல்ல தமிழ்-சிங்கள கலப்பு பிள்ளைகள் கூட முற்று முழுதாக சிங்கள இனத்துள் உள்வாங்க பட்டு, சிங்களமாக மாற்றி விடுவார்கள். இலங்கை துடுப்பாட்ட கேப்படன் மத்யூஸ் இப்படி ஒருவர்தான்.

எல்லாரையும் உள்வாங்கி சிங்களம் ஆக்கும் வெல்லும் உத்தி அவர்களது. வட்டத்தை பெருபித்து கொண்டே போவார்கள். 

எல்லாரையும், அவன் அரை தமிழன், இவன் பாதி மலையாளி, இவன் தெலுங்கன், அவன் கிழக்கான், இவன் தீவு, இன்ன சாதி, என கூறி வட்டத்தை குறுக்கிகொண்டே போகும், தோற்கும் உத்தி, ஈனப்புத்தி, தமிழர்களது. குறிப்பாக ஈழத்தமிழர்களது. 

புலிகள் மட்டுமே இந்த ஈனத்தனத்தில் இருந்து விலகி, அகண்ட தமிழன் என்ற பெருபிக்கும் அடையாளத்தை கைகொண்டார்கள். அதனால் அவர்களால் வீரமணி தொடக்கம் கெளத்தூர் மணிவரை பலரை தமிழர்களாக ஏற்க முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் வெல்லப்படவேணும் என்பதுக்காய் கண்ட பொய்யையும் அடித்துவிடக்கூடாது கீழே திமுகாவின் கன்னட தெலுங்கு பக்தியை பாருங்கள் .

தி.மு.க. ஆட்சியில் யுகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு அதை ரத்து செய்தது. 2006-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற தலைவர் கருணாநிதி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு மகுடம் சூட்டும் வகையில் யுகாதி புத்தாண்டுக்கு மீண்டும் விடுமுறை அளித்தார். அவர் ஆட்சியில் இருந்த போதெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு.

https://www.maalaimalar.com/news/district/2019/04/06024430/1235865/Tamilnadu-political-leaders-like-ugadi-greet-speaking.vpf 

1 minute ago, goshan_che said:

அண்ணே கடிவாளம் சிங்களத்திடம் இருக்கு அவன் இலகுவாக பெருப்பிப்பான் .

தமிழ்நாட்டில் கடிவாளமே தெலுங்கு கன்னடர்களிடம் இருக்கு .........................................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

தமிழ் நாட்டில் கடிவாளம் பிடித்திருக்கும் கன்னடர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

தமிழ் நாட்டில் கடிவாளம் பிடித்திருக்கும் கன்னடர் யார்?

தெலுங்கர் உங்களுக்கு தெரியாதா ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

தெலுங்கர் உங்களுக்கு தெரியாதா ?

அது தெரியும். அதை பற்றி அடுத்து எழுதுகிறேன். 

தமிழ் நாட்டில் கடிவாளத்தை பிடித்திருக்கும் கன்னடர்கள் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அது தெரியும். அதை பற்றி அடுத்து எழுதுகிறேன். 

முதலில் உங்களுக்கு தெரிந்த கதையை சொல்லுங்க 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

முதலில் உங்களுக்கு தெரிந்த கதையை சொல்லுங்க 

இல்லை நீங்கள்தான், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் கையில் தமிழ்நாட்டின் கடிவாளம் இருப்பதாக கூறினீர்கள்.

எனக்கு தெலுங்கர் பற்றி தெரியும்.

அந்த கன்னடர் யார்?

அதுதான் கேட்கிறேன்.

தமிழ்நாட்டு பிரஜைகளாக தமிழ் நாட்டில் தலைமுறை தலை முறையக வாழும் அனைத்து இன மக்களுக்கும அங்கு எல்லா உரிமைகளும் உண்டு. தாம் இனவெறியால் பாதிக்கப்பட்டோம் என்று தினமும் இங்கு ஒப்பாரி வைக்கும் புலம்பித் திரியும் கூட்டத்துக்குள் கடைந்தெடுத்த இனவெறியர்களும் உள்ளது விந்தையிலும் விந்தை.  சிங்கள் இனவெறியர்களுக்கும் இந்த இனவெறியர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

சரி நானே சொல்லி விடுகிறேன்.

இந்த தெலுங்கர்-கன்னடர் என்றபதம் பெரியாரை குறிக்க பயன்படுவது. காரணம் பெரியார் ஒரு இனத்-தெலுங்கர். ஆனால் அவர் ஊர் கர்நாடகா.

தவிர இனக்-கன்னடர்கள் தமிழ்நாட்டின் கடிவாளத்தை பிடிக்கும் நிலையில் இல்லை. ஆனால் கணிசமான செல்வாக்கோடு உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கு வம்சாவளி வந்த நபர்கள் நிச்சயம் கடிவாளம் பிடிக்கும் நிலையில் உள்ளார்கள்தான். 

அடுத்து மலையாளிகள் அரசியலில் அன்றி அதிகார, பதவி நிலைகளில் செல்வாக்கோடு உள்ளார்கள்.

ஆனால் நான் முன்னரே எழுதியது போல், இதை 600 வருடங்கள் பின்பு போய் வரலாற்றை மாற்றி அமைக்க முடியாது.

தெலுங்கு வம்சாவழியினர் பலர் அடிதட்டு வேலையாட்களாக உள்ளார்கள் என்பதும் உண்மை. 

அடுத்து 600 வருடம் முன் வந்தவர்களுக்கும், இப்போ ஆந்திராவில் இருந்து வருபவர்களுக்கும் வேறுபாடு உண்டு. 

ஆனால் யாழில் பலர் ஸ்டாலின் தெலுங்கில் எழுதி தமிழில் பேசுகிறார் என நம்பும் நிலையில், ஏதோ அவர் நேற்று ஓன்கோலில் இருந்து கிளம்பி வந்ததாக நம்பி கொண்டு இருக்கிறார்கள். எழுதுகிறார்கள்.

அடுத்து இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் freedom of movement உண்டு. சில மாநிலங்களை தவிர. ஆகவே யாரும் வரலாம். தமிழ் படிக்கலாம். ரங்கராஜ் பாண்டே மாதிரி தூய தமிழில் விவாத நிக்ழசியும் நடத்தலாம்.

ஆகவேதான் மொழி வழி பிரிப்புக்கு அன்று தமிழ்நாட்டில் இருந்தவர்கள் எல்லாரையும் தமிழர் என பொதுமை படுத்த வேண்டும் என ஒரு கோரிக்கை உள்ளது. இது நான் மேலே சொன்ன வட்டத்தை பெரிதாக்கும் உத்தி.

ஆனால் நிச்சயம் ஒரு குறிப்பிட்ட மக்களை இன அடிப்படையில் நிந்தித்து அரசியல் செய்யாமலும் தமிழ் நாட்டில் தமிழ் தேசிய அரசியல் செய்யலாம். 

எம் ஜி ஆர் ஒரு மலையாளி என சீமானே சொல்லி உள்ளார்.

ஜெயா சீரங்கத்தில் பிறந்து, கர்னாடகாவில் வளர்ந்த பிராமண பெண்.

ஆனால் இவர்களின் பின் ஒரு தமிழர் எடப்பாடி வர முடிந்ததுதானே?

திமுகவில் என்ன பிரச்சனை என்றால் அது குடும்ப கட்சியாக இருப்பதால் - ஒரே சாதியினர் கையில் தொடர்ந்தும் இருப்பதுதான்.

ஆகவே வட்டத்தை பெரிதாக்கி, எல்லாரையும் தமிழ் தேசியம் பக்கம் திருப்பி, கடிவாளத்தை கையில் எடுத்து, வீட்டில் தெலுங்கு பேசுபவர்களையும், காலகிரமத்தில் தமிழர்கள் ஆக்குவதே வட்டத்தை பெரிதாக்கும் ஆக்கபூர்வ அரசியல்.

இதை விடுத்து சாதி அடிப்படையில் இனத்தை தீர்மானிக்க வெளிகிட்டால் - அது முடிவில் இன்னும் பலரை தமிழர் இல்லை என்றாக்கும். 

முடிந்தால் எத்தனை மாநிலங்களில் எத்தனை வகையினர் வெள்ளாளர் என்ற சாதி பெயருடன் உள்ளார்கள் என தேடிப்பாருங்கள். அப்படி பார்த்தால் வெள்ளாளர் தமிழ் சாதி இல்லை என்றும் வாதாடலாம்.

அதேபோல்தான் பிள்ளைகளும். 

இவ்வளவு ஏன். நாடார்கள்? தமிழ்நாட்டிலும் உள்ளார்கள். கேரளாவிலும் உள்ளார்கள்.

சீமான் கூட கேரள நாடார் என்று ஒரு பேச்சுள்ளது.

ஆகவே இந்த சாதி அடிப்படையில் தமிழன் என தீர்மானிக்க வெளிகிடுவது - சுத்த பைத்தியகாரத்தனம்.

தமிழ் நாட்டில் இப்போ தேவைபடுவது, அகண்ட தமிழின அடையாளத்தில் நிறுவப்படும் தமிழ் தேசிய அரசியலே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.