Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

எல்லாரையும், அவன் அரை தமிழன், இவன் பாதி மலையாளி, இவன் தெலுங்கன், அவன் கிழக்கான், இவன் தீவு, இன்ன சாதி, என கூறி வட்டத்தை குறுக்கிகொண்டே போகும், தோற்கும் உத்தி, ஈனப்புத்தி, தமிழர்களது. குறிப்பாக ஈழத்தமிழர்களது. 

புலிகள் மட்டுமே இந்த ஈனத்தனத்தில் இருந்து விலகி, அகண்ட தமிழன் என்ற பெருபிக்கும் அடையாளத்தை கைகொண்டார்கள். அதனால் அவர்களால் வீரமணி தொடக்கம் கெளத்தூர் மணிவரை பலரை தமிழர்களாக ஏற்க முடிந்தது.

சரியான நல்ல கருத்து.

  • Replies 161
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணை,

நீங்கள் நீர்கொழும்பில் வசித்தபடியால் கட்டாயம் தெரிந்திருக்கும். அங்கே இப்போ இருக்கும் சில்வாக்களும், பெர்ணாந்துக்களும் 3 தலைமுறைக்கு முன்னம் தமிழ்தான்.

ஆனால் கலவரத்தில் முன்னுக்கு நிண்டு தமிழனை அடிப்பவர்களும் இவர்கள்தான் - அந்தளவுக்கு அவர்களை தம் வய/மய படுத்தி தன்னை வளர்த்து கொண்டது சிங்கள தேசியவாதம்.

பலரை கத்தோலிக்காராய் இருந்து பெளத்தராயும் ஆக்கி விட்டனர்.

அண்மைய திரி ஒன்றில் பலர் சுதர்சினி, ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ள பற்றியும் சிலாகித்து இருந்தீர்கள். இருவரும் நீர்கொழும்பு மாவட்டத்தின் முதன்மை அரசியல்வாதிகள்.

இவர்கள் தமிழ் அடி என்பதே பலருக்கு தெரியாது. அந்தளவுக்கு இவர்களை கொண்டாடுகிறது சிங்கள தேசியம்.

இவர்கள் மட்டும் அல்ல தமிழ்-சிங்கள கலப்பு பிள்ளைகள் கூட முற்று முழுதாக சிங்கள இனத்துள் உள்வாங்க பட்டு, சிங்களமாக மாற்றி விடுவார்கள். இலங்கை துடுப்பாட்ட கேப்படன் மத்யூஸ் இப்படி ஒருவர்தான்.

எல்லாரையும் உள்வாங்கி சிங்களம் ஆக்கும் வெல்லும் உத்தி அவர்களது. வட்டத்தை பெருபித்து கொண்டே போவார்கள். 

எல்லாரையும், அவன் அரை தமிழன், இவன் பாதி மலையாளி, இவன் தெலுங்கன், அவன் கிழக்கான், இவன் தீவு, இன்ன சாதி, என கூறி வட்டத்தை குறுக்கிகொண்டே போகும், தோற்கும் உத்தி, ஈனப்புத்தி, தமிழர்களது. குறிப்பாக ஈழத்தமிழர்களது. 

புலிகள் மட்டுமே இந்த ஈனத்தனத்தில் இருந்து விலகி, அகண்ட தமிழன் என்ற பெருபிக்கும் அடையாளத்தை கைகொண்டார்கள். அதனால் அவர்களால் வீரமணி தொடக்கம் கெளத்தூர் மணிவரை பலரை தமிழர்களாக ஏற்க முடிந்தது.

நீங்கள் சொல்வதில் மாற்றுக் கருத்து இல்லை

ஆனால் தற்போது தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு முன்னரே நீர் கொழும்பில் ஆரம்பித்து விட்டது 

பிள்ளையானும் முரளிதரனும் டக்ளசும் ரங்கநாதனும் 50 வருடங்களுக்கு முன்னரே அங்கே களமிறக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனால் இன்றும் கலவரம் என்று வந்தால் தமிழர்கள் தேடித்தேடி வேட்டை ஆடப்படுவதும் அரசால் வளர்க்கப்பட்ட மேற்குறிப்பிட்டோரால் காட்டிக்கொடுக்கப்படுவதும்  மட்டும் தொடர்கிறது.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

மகளிரணி வானதி சீனிவாசன் வாய்திறக்காதது ஏன்.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Justin said:

உங்களுக்கு வெடிச்சத்தம் குறைவாகக் கேட்க வேண்டுமென்பதற்காக மக்களின் காங்கிரசை முற்றுகையிடும் காட்டு தர்பார் பாணி தலைவர்களை அமெரிக்கா தெரிவு செய்ய முடியாது!😂

நான் மேலே சொன்னது போல, வெறுப்பரசியல் செய்யும் குழுக்களுக்கு ட்ரம்ப் ஹீரோ தான். 

அட காங்கிரஸ் முற்றுகையிடப்பட்டதா?அது  ஒரு புனித ஸ்தலமா?

அமெரிக்கா எத்தனை நாட்டு அரசுகளை சீரழித்தது என்று தெரியாமலா கதைக்கின்றீர்கள்?
வியட்நாம்,ஈராக்,லிபியா என சிவனே என இருந்த நாடுகளை அந்த அரசுகளை அழித்து இன்று அந்த நாடுகளில் ஸ்திரமில்லாத அரசையும் பொருளாதாரத்தையும் உருவாக்கியது யார்?

தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும். 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

அப்பாடா ஒன்டு எரியுது.😄

பெற்றோல் செட் முதலாளி மண்ணெண்ணை தகரத்தோடை ரெடி போல...😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தெலுங்கு வம்சாவளி வந்த நபர்கள் நிச்சயம் கடிவாளம் பிடிக்கும் நிலையில் உள்ளார்கள்தான். 

அடுத்து மலையாளிகள் அரசியலில் அன்றி அதிகார, பதவி நிலைகளில் செல்வாக்கோடு உள்ளார்கள்.

ஆனால் நான் முன்னரே எழுதியது போல், இதை 600 வருடங்கள் பின்பு போய் வரலாற்றை மாற்றி அமைக்க முடியாது.

தெலுங்கு வம்சாவழியினர் பலர் அடிதட்டு வேலையாட்களாக உள்ளார்கள் என்பதும் உண்மை. 

அடுத்து 600 வருடம் முன் வந்தவர்களுக்கும், இப்போ ஆந்திராவில் இருந்து வருபவர்களுக்கும் வேறுபாடு உண்டு. 

ஆனால் யாழில் பலர் ஸ்டாலின் தெலுங்கில் எழுதி தமிழில் பேசுகிறார் என நம்பும் நிலையில், ஏதோ அவர் நேற்று ஓன்கோலில் இருந்து கிளம்பி வந்ததாக நம்பி கொண்டு இருக்கிறார்கள். எழுதுகிறார்கள்.

அடுத்து இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் freedom of movement உண்டு. சில மாநிலங்களை தவிர. ஆகவே யாரும் வரலாம். தமிழ் படிக்கலாம். ரங்கராஜ் பாண்டே மாதிரி தூய தமிழில் விவாத நிக்ழசியும் நடத்தலாம்.

ஆகவேதான் மொழி வழி பிரிப்புக்கு அன்று தமிழ்நாட்டில் இருந்தவர்கள் எல்லாரையும் தமிழர் என பொதுமை படுத்த வேண்டும் என ஒரு கோரிக்கை உள்ளது. இது நான் மேலே சொன்ன வட்டத்தை பெரிதாக்கும் உத்தி.

ஆனால் நிச்சயம் ஒரு குறிப்பிட்ட மக்களை இன அடிப்படையில் நிந்தித்து அரசியல் செய்யாமலும் தமிழ் நாட்டில் தமிழ் தேசிய அரசியல் செய்யலாம். 

எம் ஜி ஆர் ஒரு மலையாளி என சீமானே சொல்லி உள்ளார்.

ஜெயா சீரங்கத்தில் பிறந்து, கர்னாடகாவில் வளர்ந்த பிராமண பெண்.

ஆனால் இவர்களின் பின் ஒரு தமிழர் எடப்பாடி வர முடிந்ததுதானே?

திமுகவில் என்ன பிரச்சனை என்றால் அது குடும்ப கட்சியாக இருப்பதால் - ஒரே சாதியினர் கையில் தொடர்ந்தும் இருப்பதுதான்.

ஆகவே வட்டத்தை பெரிதாக்கி, எல்லாரையும் தமிழ் தேசியம் பக்கம் திருப்பி, கடிவாளத்தை கையில் எடுத்து, வீட்டில் தெலுங்கு பேசுபவர்களையும், காலகிரமத்தில் தமிழர்கள் ஆக்குவதே வட்டத்தை பெரிதாக்கும் ஆக்கபூர்வ அரசியல்.

இதை விடுத்து சாதி அடிப்படையில் இனத்தை தீர்மானிக்க வெளிகிட்டால் - அது முடிவில் இன்னும் பலரை தமிழர் இல்லை என்றாக்கும். 

முடிந்தால் எத்தனை மாநிலங்களில் எத்தனை வகையினர் வெள்ளாளர் என்ற சாதி பெயருடன் உள்ளார்கள் என தேடிப்பாருங்கள். அப்படி பார்த்தால் வெள்ளாளர் தமிழ் சாதி இல்லை என்றும் வாதாடலாம்.

அதேபோல்தான் பிள்ளைகளும். 

இவ்வளவு ஏன். நாடார்கள்? தமிழ்நாட்டிலும் உள்ளார்கள். கேரளாவிலும் உள்ளார்கள்.

சீமான் கூட கேரள நாடார் என்று ஒரு பேச்சுள்ளது.

ஆகவே இந்த சாதி அடிப்படையில் தமிழன் என தீர்மானிக்க வெளிகிடுவது - சுத்த பைத்தியகாரத்தனம்.

தமிழ் நாட்டில் இப்போ தேவைபடுவது, அகண்ட தமிழின அடையாளத்தில் நிறுவப்படும் தமிழ் தேசிய அரசியலே.

உங்களால் கொடுக்கும் விளக்கம் அளவுக்கு என்னால் கொடுக்க முடியாது இங்கு நூற்றுக்ணக்கானோர்  கருத்துக்களை வாசிப்பவர்கள் உண்டு  அவர்களுக்கு விளங்கும்வகையிலும் குறுக்கியதாகவும் இருந்தால் நல்லது ஒரே ஒரு கேள்வி ஆகக்கூடியது 7 வரிக்கு மேல் பதிலை  இழுக்க வேண்டாம். 

தமிழ்நாட்டில் தெலுங்கருக்கும் கன்னடருக்கும் மலையாளிக்கும் அவர்களின் முக்கிய தினம்கள் போது அதாவது உகாதி ஓணம் போன்ற பண்டிகைகளின் போது விடுமுறை அளிக்கப்டுவது  போல்  கேரளாவிலும் கன்னடாவிலும் தெலுங்கனவிலும் ஏன் தமிழர் பண்டிகைக்கு விடுமுறை கொடுப்பதில்லை ?

திராவிடர் தமிழர் இல்லையா ?

மேல் உள்ளவற்றை படித்து விட்டு துல்பன் பெரியவர் இனத்துவேசம் கூடி போயிற்று என்று கவலைப்படவேண்டாம்  கேள்வி உங்களுக்குத்தான் பெரியவரே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

மகளிரணி வானதி சீனிவாசன் வாய்திறக்காதது ஏன்.?

மகளிர் அணி தலைவர் அரசியலுக்கு வந்த நோக்கமே வேற எல்லோ....:grin:

Vaanathi.jpg?w=1024

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

மொழிவழி மாநில பிரிப்புக்கு பின், திராவிட இனம் என்ற சிந்தனை காலாவதியாகி விட்டதொன்று என நம்பும் தமிழன்.

திராவிட முன்னேற்றக் கழகம் தான் இப்போது ஆட்சியில் இருக்கின்றது என்பதை மறந்து பேசுகின்றீர்கள் கோஷான்

7 hours ago, goshan_che said:

ஈழத்தில் இருப்பது போன்ற இனப்பகுப்பு தமிழகத்தில் இல்லை என்பதை தமிழகத்தில் வாழ்ந்து புரிந்து கொண்ட தமிழன்.

இன பகுப்பு என்றால் என்ன?

7 hours ago, goshan_che said:

தமிழ் பேசும் முஸ்லீம்கள் ஈழத்தில் வேறு இனமாகவும், தமிழகத்தில் தமிழர்களாகவும் கருதப்படும் நுணுக்கம் உணர்ந்த தமிழன்.

இலங்கையில் முஸ்லீம்கள் தாம் ஒரு இனம் என 70களிலையே ஆரம்பித்து விட்டார்கள். அரசியல் ரீதியாக தமக்கென ஒரு அலகினை தயாரித்தவர்கள். மற்றும் படி எந்த தமிழ் கட்சிகளும் அவர்களை பிரிக்க முயற்சிக்கவில்லை. நாட்டு நலன்களையும் மீறி  மொழி என்ன  என்பதுமில்லாமல் தனியாக பிரிந்து நிற்க நினைப்பவர்கள்

7 hours ago, goshan_che said:

சாதியின் பெயரால் ஒருவரை தமிழரா இல்லையா என இனம் காண விளையும் ஈனத்தனத்தை வெறுக்கும் தமிழன்.

கூல் டவுண் கோசான். இங்குதான் நீங்கள் தடுக்கி வீழ்ந்து விட்டீர்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

7 வரிக்கு மேல் பதிலை  இழுக்க வேண்டாம். 

ஏது ஏழு வரியா? நான் என்ன வள்ளுவரா🤣 “ஹலோ எப்படி சுகம்” என்று கேட்டாலே 2 பக்கம் எழுதுற ஆளைய்யா நான்🤣.

சரி டிரை பண்ணுறன். எனது விளக்கம் இது. தவறு இருந்தால் யாரும் திருத்தலாம்.

2 hours ago, பெருமாள் said:

கேரளாவிலும் கன்னடாவிலும் தெலுங்கனவிலும் ஏன் தமிழர் பண்டிகைக்கு விடுமுறை கொடுப்பதில்லை ?

1. தமிழ் நாடு அரசின் விடுமுறைகளை கீழே தந்துள்ளேன். இவற்றை பார்தீர்களானால் அது அந்த மாநிலத்தில் வாழும் கணிசமான மக்கள் கூட்டங்களின், மதங்களின் விசேட தினங்களை முடிந்தளவு பலன்ஸ் பண்ணும் விதமாகவே அமைகிறது. அனைவரும் ஒத்து கொள்ளும் விடயம், தமிழ்நாட்டில் கணிசமான தெலுங்கு வம்சாவழியினர் உள்ளார்கள். ஆகவே அவர்களுக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல், மஹவீர் ஜெயந்தி ஜெயின் மதத்துக்கும், முகரம் ஷியா முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்ட விடுமுறைகளே.
 
முஸ்லீம்களுக்கும், கிறீஸ்தவருக்கும் எண்ணிக்கைக்கும் அதிகமான விடுமுறைகள் இருப்பதையும் காண்க. ஆனால் இதை பாஜக தவிர வேறு யாரும் நோண்டுவதில்லை.

அதேபோல் தெலுங்கு புதுவருடத்துக்கு ஒருநாள் கொடுப்பதை நாம் தமிழர் தவிர யாரும் நோண்டுவதில்லை (RSS = NTK, ஒரு நாணயத்தின் எதிரெதிர் பக்கங்கள்). 

ஜெயின் மதத்தவரை நோண்டுவதால் வாக்கு அரசியல் லாபம் இல்லை. ஆகவே யாரும் மஹவீர் ஜெயந்தியை நோண்டுவதில்லை.

 இப்படி இன, மத சிறுபான்மைகளை அரவணைத்து போகும் பாங்கு தமிழக்கத்தின் தனிச்சிறப்பு. உண்மையில் ஒரு பல்லின சமூகத்துக்கு ஒரு நல்ல முன்மாதிரியும் கூட. 

2. ஓனம் - கோயம்புத்தூர் போன்ற மலையாளிகள் அதிகம் வசிக்கும் இடங்களில் மட்டும் local holidays அறிவிக்கப்படும். நான் மேலே சொன்ன அதே காரணம்.

3. தமிழ்நாடு அளவுக்கு ஏனைய மாநிலங்கள் சகிப்பு தன்மை, பல்லினதுவ ஈர்ப்பு அற்றவைதான். ஈழத்தமிழர்கள் போல, குரோதம் மிக்கவர்கள் கன்னடர்களும், மலையாளிகளும். ஆகவே கர்நாடாகவில், கேரளாவில் கணிசமான தமிழர்கள் இருந்தும் அவர்கள் லோக்கல் கோலிடே கூட அறிவிப்பதில்லை. ஆந்திராவில் அப்படி சொல்லி கொள்ளும்படி தமிழர்கள் இல்லை ( எல்லை கிராமங்கள், தமிழ்/தெலுங்கு கலந்து ஒருவித கலவன் கலாசாரமாக இருக்கும் - தாஜ்மகால் படத்தில் பாரதிராஜா தொட்டிருப்பார்). எனவே அவர்களும் விடுமுறை விடுவது இல்லை.

https://www.tn.gov.in/holiday/2021

2 hours ago, பெருமாள் said:

திராவிடர் தமிழர் இல்லையா ?

முன்பே சொல்லி உள்ளேன். உங்களுக்கு திராவிடர் என்ற சொல்தான் அலர்ஜி என்றால், பழந்தமிழர் என மாற்றீடு செய்து கொள்ளுங்கள்.

நான் இந்த பதிவில் மிச்சத்துக்கு திராவிடம் என்ற சொல்லை X என்ற எழுத்தால் பிரதியீடு செய்கிறேன். 

 மீதி நான்கு தென்னிந்திய மொழிகளும், X இருந்து வந்தவையே. ஆகவே எல்லா X இனரும் தமிழரே. எல்லா தமிழரும் X இனரே.

ஆனால் மீதி 4 X இனருக்கும் தாம் தமிழின் பிள்ளைகள் என்பதை ஏற்றால் தமது பெருமை கெட்டுவிடும் என்ற தயக்கம் (சிங்களத்துக்கு இருக்கும் அதே தயக்கம்).

ஆனால் தமிழுக்கு அப்படி ஒரு தயக்கம் வர காரணம் இல்லை. காரணம் தமிழ் தாய். அவர்கள் பிள்ளைகள். எனவே தான் தான் தொடக்கம் என்பதில் தமிழுக்கும், தமிழருக்கும் தெளிவு உண்டு. 

ஏனைய 3 மொழி பேசுவோருக்கும் தமிழை பார்த்து ஒரு தாழ்வு சிக்கல் உண்டு. அதுதான், தெலுங்கும் செம்மொழி என அறிவிக்க வைக்க படாத பாடு படுத்தியது.

இந்த தாழ்வு சிக்கல்தான் கன்னடர்கள், மலையாளிகள் தமிழர் மீது காட்டும் குரோதமாக வெளி வருகிறது.

ஆனால் தமிழுக்கு தாழ்வு சிக்கலும் இல்லை. உயர்வு சிக்கலும் இல்லை.

தான் X இன மொழிகளின் தாய் என்ற தெளிவும், தாய்மை உணர்வும் மட்டுமே உண்டு.

அதனால்தால் எதிர்வினையாக கூட கன்னடர், மலையாளிகள் அங்கே தாக்கப்படுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

திராவிட முன்னேற்றக் கழகம் தான் இப்போது ஆட்சியில் இருக்கின்றது என்பதை மறந்து பேசுகின்றீர்கள் கோஷான்

இலங்கையில் ஆல் சிலோன் தமிழ் காங்கிராஸ் யாருக்கு அரசியல் செய்கிறது? இல்லாத சிலொனில் வாழும் தமிழர்களுக்கா?

இப்போதும் Order of the British Empire எண்டு பட்டம் கொடுக்கப்படுகிறது. இவை எல்லாம் கடந்த கால வரலாற்றை அடியொற்றி வருபவை.

திராவிடர் கழகம் என்பது மேலே சொன்னது போல் - “வட்டத்தை பெரிதாக்கி”  மதராஸ் பிரசிடென்சியில் வாழ்ந்த தென்னிந்தியர்களை ஒரே குடையில் கொண்டுவர பெரியார் எடுத்த முயற்சியின் விளைவு. அதன் பிள்ளைதான் தி.மு.க.

2 hours ago, குமாரசாமி said:

இன பகுப்பு என்றால் என்ன?

9 hours ago, goshan_che said:

இலங்கையில் தமிழ் சிங்களம் சோனகர் என்ற பகுப்பு வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக இருப்பது போல் தமிழ் நாட்டில் இல்லை.

ஒரே குடும்பத்தில் பெரியப்பா மகன் வீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ் பேச, சித்தப்பா மகன் வீட்டிலும், வெளியிலும் தமிழ் மட்டுமே பேசும் குடும்பங்கள் உள்ளன. 

ஆனால் இரெண்டு குடும்பமுமே நாயக்கர்.

இலங்கை போல வீட்டில் பேசும் மொழியை வைத்து இனத்தை தீர்மானித்தால், பெரியப்பா மகன் தெலுங்கன், சித்தப்பா மகன் தமிழன் என்ற அபத்தமான முடிவுக்கு வரும்படியாகும்.

2 hours ago, குமாரசாமி said:

திராவிட முன்னேற்றக் கழகம் தான் இப்போது ஆட்சியில் இருக்கின்றது என்பதை மறந்து பேசுகின்றீர்கள் கோஷான்

இன பகுப்பு என்றால் என்ன?

இலங்கையில் முஸ்லீம்கள் தாம் ஒரு இனம் என 70களிலையே ஆரம்பித்து விட்டார்கள். அரசியல் ரீதியாக தமக்கென ஒரு அலகினை தயாரித்தவர்கள். மற்றும் படி எந்த தமிழ் கட்சிகளும் அவர்களை பிரிக்க முயற்சிக்கவில்லை. நாட்டு நலன்களையும் மீறி  மொழி என்ன  என்பதுமில்லாமல் தனியாக பிரிந்து நிற்க நினைப்பவர்கள்

கூல் டவுண் கோசான். இங்குதான் நீங்கள் தடுக்கி வீழ்ந்து விட்டீர்கள் 🤣

எத்தனை தரம் விழுந்தாலும், நேரடி, மறைமுக சாதிய கருத்துக்களை சாடாமல், சாவதாக இல்லை😎.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

அண்ணை,

நீங்கள் நீர்கொழும்பில் வசித்தபடியால் கட்டாயம் தெரிந்திருக்கும். அங்கே இப்போ இருக்கும் சில்வாக்களும், பெர்ணாந்துக்களும் 3 தலைமுறைக்கு முன்னம் தமிழ்தான்.

ஆனால் கலவரத்தில் முன்னுக்கு நிண்டு தமிழனை அடிப்பவர்களும் இவர்கள்தான் - அந்தளவுக்கு அவர்களை தம் வய/மய படுத்தி தன்னை வளர்த்து கொண்டது சிங்கள தேசியவாதம்.

பலரை கத்தோலிக்காராய் இருந்து பெளத்தராயும் ஆக்கி விட்டனர்.

அண்மைய திரி ஒன்றில் பலர் சுதர்சினி, ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ள பற்றியும் சிலாகித்து இருந்தீர்கள். இருவரும் நீர்கொழும்பு மாவட்டத்தின் முதன்மை அரசியல்வாதிகள்.

இவர்கள் தமிழ் அடி என்பதே பலருக்கு தெரியாது. அந்தளவுக்கு இவர்களை கொண்டாடுகிறது சிங்கள தேசியம்.

இவர்கள் மட்டும் அல்ல தமிழ்-சிங்கள கலப்பு பிள்ளைகள் கூட முற்று முழுதாக சிங்கள இனத்துள் உள்வாங்க பட்டு, சிங்களமாக மாற்றி விடுவார்கள். இலங்கை துடுப்பாட்ட கேப்படன் மத்யூஸ் இப்படி ஒருவர்தான்.

எல்லாரையும் உள்வாங்கி சிங்களம் ஆக்கும் வெல்லும் உத்தி அவர்களது. வட்டத்தை பெருபித்து கொண்டே போவார்கள். 

எல்லாரையும், அவன் அரை தமிழன், இவன் பாதி மலையாளி, இவன் தெலுங்கன், அவன் கிழக்கான், இவன் தீவு, இன்ன சாதி, என கூறி வட்டத்தை குறுக்கிகொண்டே போகும், தோற்கும் உத்தி, ஈனப்புத்தி, தமிழர்களது. குறிப்பாக ஈழத்தமிழர்களது. 

புலிகள் மட்டுமே இந்த ஈனத்தனத்தில் இருந்து விலகி, அகண்ட தமிழன் என்ற பெருபிக்கும் அடையாளத்தை கைகொண்டார்கள். அதனால் அவர்களால் வீரமணி தொடக்கம் கெளத்தூர் மணிவரை பலரை தமிழர்களாக ஏற்க முடிந்தது.

தர்க்கரீதியாக ஒரு விடயத்தை தவறவிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்! இலங்கையில் மொழிப்பெரும்பான்மையினர்(ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள்) மொழிச்சிறுபான்மையினரை உள்வாங்கி பெருப்பித்துக்கொண்டு செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் மொழிச்சிறுபான்மையினர்(ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்) மொழிப்பெரும்பான்மையினருக்கு ஆட்சி அதிகாரம் செல்லாதவாறு பார்த்துக்கொள்வதோடு, நாட்டின் வளங்களை கொள்ளையடித்து பல்லாயிரம் கோடிகளை சேர்த்துள்ளனர். இப்போதுள்ள அமைச்சரவையில் கூட வெளிப்படையாக தெரிந்த மொழிச்சிறுபான்மையினர் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர்.

2009 தமிழ்நாட்டு அதிகாரத்தரப்பின் சுயரூபம் வெளிப்பட்டது, கார்ட்டூனிஸ்ட் பாலா குறிப்பிட்டது போல காலம் அவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தபோது உலகத் தமிழினத்தலைவராக அவர் செயற்படவில்லை. அவர் தானாகவே தன்னை அம்பலப்படுத்திக்கொண்டார்.

Edited by ஏராளன்
எழுத்து பிழை திருத்தப்பட்டது

12 hours ago, goshan_che said:

புலிகள் மட்டுமே இந்த ஈனத்தனத்தில் இருந்து விலகி, அகண்ட தமிழன் என்ற பெருபிக்கும் அடையாளத்தை கைகொண்டார்கள். அதனால் அவர்களால் வீரமணி தொடக்கம் கெளத்தூர் மணிவரை பலரை தமிழர்களாக ஏற்க முடிந்தது.

புலித் தலைமையிடம் இருந்த இந்த நீள்பார்வை அரசியலை புரிந்துகொள்ளும் பக்குவம் ஈழத்தமிழருக்கு இருக்கவில்லை. 

ஈழத்தமிழர் தங்களுக்குள்ள பிரச்சணைகளுக்கெல்லாம் வெளியார்தான் காரணம் என்று சொல்லி தமது வளர்ச்சியை குறுக்கிக் கொண்டனர்.

இங்கு யாழில்கூட பல புலி தீவிரஆதரவாளர்கள் புலிகளின் ஆத்மார்ந்த வழிகளை, கொள்கைகளை புரிந்தவர்களாக அவர்களது எழுத்துக்களில் வெளிப்படாதது கவலைக்குரியது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தர்க்கரீதியாக ஒரு விடயத்தை தவறவிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்! இலங்கையில் மொழிப்பெரும்பான்மையினர்(ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள்) மொழிச்சிறுபான்மையினரை உள்வாங்கி பெருப்பித்துக்கொண்டு செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் மொழிச்சிறுபான்மையினர்(ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்) மொழிப்பெரும்பான்மையினருக்கு ஆட்சி அதிகாரம் செல்லாதவாறு பார்த்துக்கொள்வதோடு, நாட்டின் வளங்களை கொள்ளையடித்து பல்லாயிரம் கோடிகளை சேர்த்துள்ளனர். இப்போதுள்ள அமைச்சரவையில் கூட வெளிப்படையாக தெரிந்த மொழிச்சிறுபான்மையினர் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர்.

2009 தமிழ்நாட்டு அதிகாரத்தரப்பின் சுயரூபம் வெளிப்பட்டது, கார்ட்டூனிஸ்ட் பாலா குறிப்பிட்டது போல காலம் அவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தபோது உலகத் தமிழனத்தலைவராக அவர் செயற்படவில்லை. அவர் தானாகவே தன்னை அம்பலப்படுத்திக்கொண்டார்.

இல்லை உங்கள் தர்க நியாயத்தை நான் விளங்கி கொள்கிறேன்.

நீங்கள் மேலே சொன்னதை முற்றிலுமாக ஏற்றும் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இந்த மொழி சிறுபான்மையினர் என்பது உண்மையிலேயே சாதி மட்டும்தான்.

அதனால்தால் இலங்கை போன்ற இனப்பகுப்பு அங்கே இல்லை என்றேன்.

பலநூறு வருட வரலாற்றின் தாக்கம், புவிவியல் அமைவு, தமிழ்நாட்டில் தூய இன அரசியலுக்கு வாய்ப்பாக இல்லை. 

இதில் உள்ள நியாய, அநியாயங்களை விட்டு விட்டு பார்த்தால் கூட, சாதி அடிப்படையில் இனத்தூய்மை அரசியலை முன்னெடுப்பது, தமிழ் நாட்டில் மேலும் பல பிளவுகளை உருவாக்கி அங்கே ஒரு பொஸ்னியாவை (ஆயுதமற்ற) உருவாக்குமே ஒழிய ஒரு ஒன்றிணைந்த சக்தியாக தமிழ் தேசியத்தை வளர விடாது.

ஆனால் நிச்சயமாக திமுக வை தெலுங்கு வம்சாவழியினர் கட்டுப்படுத்துகிறார்கள். இதை மாற்ற வேண்டும். ஒன்றில் திமுகவின் தலைமையை நாம் அடைய வேண்டும் - இது சாத்தியமில்லை.

ஆகவே மாற்றாக - மொழி வாரி பிரிப்புக்கு பின் திராவிட கொள்கையின் தொடர்சியாக தமிழ்தேசியமே அதன் இயற்கையான தொடர்சி என்று ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் தேசிய அரசியல் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைபற்ற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஒரு குறித்த வம்சாவழியினரின்  75 வருட அதிகார பிடிப்பு தளர வேண்டும் என்பதிலும் முழு உடன்பாடே.

ஆனால் அதை செய்யும் முறை என்று உள்ளது.

முன்பே எழுதி உள்ளேன், சீமான், சாதி சார் அடிப்படையில் இனதூய்மைவாதம் பேசாமல், கண்மூடித்தனமாக, தேர்தல் அரசியலோ ஆட்சி அதிகாரத்தையோ ஒரு போதும் கேட்காத, நான் தெலுங்கன், தமிழ்நாட்டை தமிழந்தான் ஆளவேண்டும் என்று சொன்ன பெரியாரை விமர்சிக்காமல், மொழிவழி பிரிப்புக்கு பின் திராவிட நாடு அரசியல் காலாவதியாகி விட்டது, அதன் இயற்கையான பிள்ளைதான் தமிழ் தேசிய அரசியல் என்பதை முந்தள்ளி, கருணாநிதி அவர் பின்னானன திமுக தலைமையை கடுமையாக தாக்கி (தெலுங்கு வம்சாவழி என்று அல்ல, அவர்களை தாக்க அதை விட எத்தனையோ வேறு விடயங்கள் உள்ளன)   “வட்டத்தை பெருப்பிக்கும்” அரசியலை முன்னெடுத்தால் நான்தான் அவரின் 1ம் விசிறி.

சுருங்க சொல்லின், அவர் அதிபர் ஆன பின் நெல்சன் மண்டேலா கைக்கொண்ட பாணி - ஒரு வரலாற்று பிழையால் சிறுபான்மை குழு ஒன்று ஆட்சி அதிகாரத்தை பெற்றுவிட, அதை இருபகுதிக்கும் அதிக சேதாரம் இன்றி மீண்டும் பெரும்பான்மை வசமாக்குவது எப்படி என்பதற்கு, அப்பாதயிட் பின்னான மண்டேலாவின் ஆட்சி ஒரு வாழும் உதாரணம்.

எப்படி செய்யகூடாது என்பதற்கு முகாபே ஆட்சி வாழும் உதாரணம்.

சீமான் முகாபே வழிநடப்பதுதான் சோகம்.

7 hours ago, goshan_che said:

இலங்கையில் ஆல் சிலோன் தமிழ் காங்கிராஸ் யாருக்கு அரசியல் செய்கிறது? இல்லாத சிலொனில் வாழும் தமிழர்களுக்கா?

அந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சிங்களத்தில் “சமஸ்த லங்கா திராவிட சங்கமய” என்றும் தமிழர்  ஐக்கிய விடுதலை கூட்டணி “திராவிட எக்ஸத் விமுக்தி பெரமுன” என்றே 1970 களில் கூட அழைக்கப்பட்டது. ஆகவே திராவிட என்பது தமிழுக்கு அந்நியமானது அல்ல. தமிழோடு இரண்டற கலந்ததே. ஆகவே தமிழ்தாட்டில் வாழும் மக்களிடையே இனவெறுப்பை தூவி பலனடையலாம் என்று நப்பாசை கொள்ளும் சுயநல அரசியல்வாதிகளின் பிரச்சாரம் ஒரு குறிப்பிட்ட அளவு விசிலடிச்சான் குஞ்சுகளை ஈர்ததாலும் பெரும்பான்மை தமிழ் நாட்டு மக்களால் ஏறெடுத்தும் பார்ககப்பட மாட்டாது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஏது ஏழு வரியா? நான் என்ன வள்ளுவரா🤣 “ஹலோ எப்படி சுகம்” என்று கேட்டாலே 2 பக்கம் எழுதுற ஆளைய்யா நான்🤣.

சரி டிரை பண்ணுறன். எனது விளக்கம் இது. தவறு இருந்தால் யாரும் திருத்தலாம்.

1. தமிழ் நாடு அரசின் விடுமுறைகளை கீழே தந்துள்ளேன். இவற்றை பார்தீர்களானால் அது அந்த மாநிலத்தில் வாழும் கணிசமான மக்கள் கூட்டங்களின், மதங்களின் விசேட தினங்களை முடிந்தளவு பலன்ஸ் பண்ணும் விதமாகவே அமைகிறது. அனைவரும் ஒத்து கொள்ளும் விடயம், தமிழ்நாட்டில் கணிசமான தெலுங்கு வம்சாவழியினர் உள்ளார்கள். ஆகவே அவர்களுக்கு ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல், மஹவீர் ஜெயந்தி ஜெயின் மதத்துக்கும், முகரம் ஷியா முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்ட விடுமுறைகளே.
 
முஸ்லீம்களுக்கும், கிறீஸ்தவருக்கும் எண்ணிக்கைக்கும் அதிகமான விடுமுறைகள் இருப்பதையும் காண்க. ஆனால் இதை பாஜக தவிர வேறு யாரும் நோண்டுவதில்லை.

அதேபோல் தெலுங்கு புதுவருடத்துக்கு ஒருநாள் கொடுப்பதை நாம் தமிழர் தவிர யாரும் நோண்டுவதில்லை (RSS = NTK, ஒரு நாணயத்தின் எதிரெதிர் பக்கங்கள்). 

ஜெயின் மதத்தவரை நோண்டுவதால் வாக்கு அரசியல் லாபம் இல்லை. ஆகவே யாரும் மஹவீர் ஜெயந்தியை நோண்டுவதில்லை.

 இப்படி இன, மத சிறுபான்மைகளை அரவணைத்து போகும் பாங்கு தமிழக்கத்தின் தனிச்சிறப்பு. உண்மையில் ஒரு பல்லின சமூகத்துக்கு ஒரு நல்ல முன்மாதிரியும் கூட. 

2. ஓனம் - கோயம்புத்தூர் போன்ற மலையாளிகள் அதிகம் வசிக்கும் இடங்களில் மட்டும் local holidays அறிவிக்கப்படும். நான் மேலே சொன்ன அதே காரணம்.

3. தமிழ்நாடு அளவுக்கு ஏனைய மாநிலங்கள் சகிப்பு தன்மை, பல்லினதுவ ஈர்ப்பு அற்றவைதான். ஈழத்தமிழர்கள் போல, குரோதம் மிக்கவர்கள் கன்னடர்களும், மலையாளிகளும். ஆகவே கர்நாடாகவில், கேரளாவில் கணிசமான தமிழர்கள் இருந்தும் அவர்கள் லோக்கல் கோலிடே கூட அறிவிப்பதில்லை. ஆந்திராவில் அப்படி சொல்லி கொள்ளும்படி தமிழர்கள் இல்லை ( எல்லை கிராமங்கள், தமிழ்/தெலுங்கு கலந்து ஒருவித கலவன் கலாசாரமாக இருக்கும் - தாஜ்மகால் படத்தில் பாரதிராஜா தொட்டிருப்பார்). எனவே அவர்களும் விடுமுறை விடுவது இல்லை.

https://www.tn.gov.in/holiday/2021

முன்பே சொல்லி உள்ளேன். உங்களுக்கு திராவிடர் என்ற சொல்தான் அலர்ஜி என்றால், பழந்தமிழர் என மாற்றீடு செய்து கொள்ளுங்கள்.

நான் இந்த பதிவில் மிச்சத்துக்கு திராவிடம் என்ற சொல்லை X என்ற எழுத்தால் பிரதியீடு செய்கிறேன். 

 மீதி நான்கு தென்னிந்திய மொழிகளும், X இருந்து வந்தவையே. ஆகவே எல்லா X இனரும் தமிழரே. எல்லா தமிழரும் X இனரே.

ஆனால் மீதி 4 X இனருக்கும் தாம் தமிழின் பிள்ளைகள் என்பதை ஏற்றால் தமது பெருமை கெட்டுவிடும் என்ற தயக்கம் (சிங்களத்துக்கு இருக்கும் அதே தயக்கம்).

ஆனால் தமிழுக்கு அப்படி ஒரு தயக்கம் வர காரணம் இல்லை. காரணம் தமிழ் தாய். அவர்கள் பிள்ளைகள். எனவே தான் தான் தொடக்கம் என்பதில் தமிழுக்கும், தமிழருக்கும் தெளிவு உண்டு. 

ஏனைய 3 மொழி பேசுவோருக்கும் தமிழை பார்த்து ஒரு தாழ்வு சிக்கல் உண்டு. அதுதான், தெலுங்கும் செம்மொழி என அறிவிக்க வைக்க படாத பாடு படுத்தியது.

இந்த தாழ்வு சிக்கல்தான் கன்னடர்கள், மலையாளிகள் தமிழர் மீது காட்டும் குரோதமாக வெளி வருகிறது.

ஆனால் தமிழுக்கு தாழ்வு சிக்கலும் இல்லை. உயர்வு சிக்கலும் இல்லை.

தான் X இன மொழிகளின் தாய் என்ற தெளிவும், தாய்மை உணர்வும் மட்டுமே உண்டு.

அதனால்தால் எதிர்வினையாக கூட கன்னடர், மலையாளிகள் அங்கே தாக்கப்படுவதில்லை.

எனக்கு தெரியும் உங்களாலோ அல்லது துல்பன் பெரியவராலோ கேட்ட கேள்விக்கு குறுகிய பதிலை தர முடியாது அப்படி தந்தால் உண்மை வெளியில் வந்துவிடும் .

 ரிலாக்ஸா இந்த பகிடியை பாருங்கள் நன்றாய் இருக்கும் 

அன்னிக்கு காலைல ஆறுமணி ...........

40 minutes ago, பெருமாள் said:

எனக்கு தெரியும் உங்களாலோ அல்லது துல்பன் பெரியவராலோ கேட்ட கேள்விக்கு குறுகிய பதிலை தர முடியாது அப்படி தந்தால் உண்மை வெளியில் வந்துவிடும் .

சொந்த நாட்டிலேயே  உரிமைகளுக்காக போரட புறப்பட்டு தவறான போராட்ட  முறையின் காரணமாக ஏற்கனவே இருந்த உரிமைகளையும்  இழந்து அர்த்தமற்ற பேரழிவை சந்தித்து பரிதாபத்துக்குரவர்களாக உள்ள நாம் அடுத்தவன் நாட்டில் மூக்கை நுளைத்து  அவர்களுக்கு புத்தி சொல்லும் யோக்கிதை இல்லை.  அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அங்குள்ள மக்களே தீர்தது கொள்வார்கள். அது அடுத்தவன் நாடு என்ற புரிந்துணர்வு எனக்கு இருப்பதால் எம்முடன் தொடர்பற்ற தேவையற்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கில்லை.

அழிவு போராட்ட பாதையை முற்றாக ஏற்றுக்கொண்ட உங்களை போன்றவர்களது பேச்சை கேட்டு நாசமாபோக அந்த மக்கள் விரும்பமாட்டார்கள் 😂

மூஞ்சூறு தான் போக வழியில்லை விளக்குமாற்றையும் காவ புறப்பதாம்.😂 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, tulpen said:

உங்களால் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது போன நேரம்களில்  திரிக்கு திரி  மேலே உள்ளவாறு திட்டி துளைப்பது உங்கள் வழமையான நடவடிக்கை .

அதுசரி பதில் சொல்லமுடியாது அடுத்தவன் நாடு ஆனால் பொழுது போவணுமென்றால் அடுத்தவன் நாட்டில் உள்ள சீமானின் மீது கல்லெறி போடுவது எந்த வகை நியாயம் பெரியவரே ?

உண்மையான பதில் வந்தால் சீமானிசத்தை எங்கே தவறி ஆதரித்துவிடுவமோ என்ற பயத்தில் பதிலை  தொடாமல் எங்களை திட்டி கொள்வது சிறந்த கருத்தாடல் அல்ல பெரியவரே .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எனக்கு தெரியும் உங்களாலோ அல்லது துல்பன் பெரியவராலோ கேட்ட கேள்விக்கு குறுகிய பதிலை தர முடியாது அப்படி தந்தால் உண்மை வெளியில் வந்துவிடும் .

 ரிலாக்ஸா இந்த பகிடியை பாருங்கள் நன்றாய் இருக்கும் 

அன்னிக்கு காலைல ஆறுமணி ...........

எனக்கு தெரியும்,

பெருமாளாளுக்கு நீண்ட பதில்களை வாசித்து கிரகிக்கும் ஆற்றல் இல்லை,

இவ்வாறு என்னாலும் பதில் எழுத முடியும் பெருமாள். ஆனால் சபை நாகரிகம் கருதி அவ்வாறு எழுதவில்லை.

மிக சிக்கலான, வரலாறு, அரசியல் சித்தாந்தம் சார் விடயங்களை SMS போல ஒரிரு வரிகளில் என்னால் விளக்க முடியாது.

மன்னிக்கவும். முன்பே சொன்னது போல் நான் திருவள்ளுவரோ, நாலடியாரை எழுதியவரோ அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இல்லை உங்கள் தர்க நியாயத்தை நான் விளங்கி கொள்கிறேன்.

நீங்கள் மேலே சொன்னதை முற்றிலுமாக ஏற்றும் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இந்த மொழி சிறுபான்மையினர் என்பது உண்மையிலேயே சாதி மட்டும்தான்.

அதனால்தால் இலங்கை போன்ற இனப்பகுப்பு அங்கே இல்லை என்றேன்.

பலநூறு வருட வரலாற்றின் தாக்கம், புவிவியல் அமைவு, தமிழ்நாட்டில் தூய இன அரசியலுக்கு வாய்ப்பாக இல்லை. 

இதில் உள்ள நியாய, அநியாயங்களை விட்டு விட்டு பார்த்தால் கூட, சாதி அடிப்படையில் இனத்தூய்மை அரசியலை முன்னெடுப்பது, தமிழ் நாட்டில் மேலும் பல பிளவுகளை உருவாக்கி அங்கே ஒரு பொஸ்னியாவை (ஆயுதமற்ற) உருவாக்குமே ஒழிய ஒரு ஒன்றிணைந்த சக்தியாக தமிழ் தேசியத்தை வளர விடாது.

ஆனால் நிச்சயமாக திமுக வை தெலுங்கு வம்சாவழியினர் கட்டுப்படுத்துகிறார்கள். இதை மாற்ற வேண்டும். ஒன்றில் திமுகவின் தலைமையை நாம் அடைய வேண்டும் - இது சாத்தியமில்லை.

ஆகவே மாற்றாக - மொழி வாரி பிரிப்புக்கு பின் திராவிட கொள்கையின் தொடர்சியாக தமிழ்தேசியமே அதன் இயற்கையான தொடர்சி என்று ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் தேசிய அரசியல் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைபற்ற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஒரு குறித்த வம்சாவழியினரின்  75 வருட அதிகார பிடிப்பு தளர வேண்டும் என்பதிலும் முழு உடன்பாடே.

ஆனால் அதை செய்யும் முறை என்று உள்ளது.

முன்பே எழுதி உள்ளேன், சீமான், சாதி சார் அடிப்படையில் இனதூய்மைவாதம் பேசாமல், கண்மூடித்தனமாக, தேர்தல் அரசியலோ ஆட்சி அதிகாரத்தையோ ஒரு போதும் கேட்காத, நான் தெலுங்கன், தமிழ்நாட்டை தமிழந்தான் ஆளவேண்டும் என்று சொன்ன பெரியாரை விமர்சிக்காமல், மொழிவழி பிரிப்புக்கு பின் திராவிட நாடு அரசியல் காலாவதியாகி விட்டது, அதன் இயற்கையான பிள்ளைதான் தமிழ் தேசிய அரசியல் என்பதை முந்தள்ளி, கருணாநிதி அவர் பின்னானன திமுக தலைமையை கடுமையாக தாக்கி (தெலுங்கு வம்சாவழி என்று அல்ல, அவர்களை தாக்க அதை விட எத்தனையோ வேறு விடயங்கள் உள்ளன)   “வட்டத்தை பெருப்பிக்கும்” அரசியலை முன்னெடுத்தால் நான்தான் அவரின் 1ம் விசிறி.

சுருங்க சொல்லின், அவர் அதிபர் ஆன பின் நெல்சன் மண்டேலா கைக்கொண்ட பாணி - ஒரு வரலாற்று பிழையால் சிறுபான்மை குழு ஒன்று ஆட்சி அதிகாரத்தை பெற்றுவிட, அதை இருபகுதிக்கும் அதிக சேதாரம் இன்றி மீண்டும் பெரும்பான்மை வசமாக்குவது எப்படி என்பதற்கு, அப்பாதயிட் பின்னான மண்டேலாவின் ஆட்சி ஒரு வாழும் உதாரணம்.

எப்படி செய்யகூடாது என்பதற்கு முகாபே ஆட்சி வாழும் உதாரணம்.

சீமான் முகாபே வழிநடப்பதுதான் சோகம்.

சீமானிடமும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கு, பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த தலைமைக்கு உதயநிதியை தயார்படுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எனக்கு தெரியும்,

பெருமாளாளுக்கு நீண்ட பதில்களை வாசித்து கிரகிக்கும் ஆற்றல் இல்லை,

இவ்வாறு என்னாலும் பதில் எழுத முடியும் பெருமாள். ஆனால் சபை நாகரிகம் கருதி அவ்வாறு எழுதவில்லை.

மிக சிக்கலான, வரலாறு, அரசியல் சித்தாந்தம் சார் விடயங்களை SMS போல ஒரிரு வரிகளில் என்னால் விளக்க முடியாது.

மன்னிக்கவும். முன்பே சொன்னது போல் நான் திருவள்ளுவரோ, நாலடியாரை எழுதியவரோ அல்ல.

உண்மையான பதில் வந்தால் சீமானிசத்தை எங்கே தவறி ஆதரித்துவிடுவமோ என்ற பயத்தில் பதிலை  தொடாமல் பக்கம் பக்கமாய் விளக்கம் எழுதுவது மேல் உள்ள பகிடிபோல் இனி இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் ஏனென்றால் அந்த பதில் சுருக்கமாய் வந்தால் சீமான் ஆதரவுத்தளத்தினில் நீங்களும் ஒருவர் அவ்வளவுதான் கதை .

14 minutes ago, பெருமாள் said:

அதுசரி பதில் சொல்லமுடியாது அடுத்தவன் நாடு ஆனால் பொழுது போவணுமென்றால் அடுத்தவன் நாட்டில் உள்ள சீமானின் மீது கல்லெறி போடுவது எந்த வகை நியாயம் பெரியவரே

சீமான் மீது கல்லெறியவில்லை. அடொல்வ் ஹிட்லர் என்ற நபரைப் பற்றி உலகம் முழுவதும் உள்ள மக்கள் கருத்து தெரிவிப்பதை போல் சீமான் என ற நபரை பற்றி கருத்து தெரிவித்தேன். அவ்வளவு தான்.  அதை விட அங்குள்ள மக்களின் பிரச்சனைகளில் அவர்கள் எவ்வாறு நடக்கவேண்டும் என்று அவர்களுக்கு புத்தி கூற எனக்கு ஜோக்கிதை இல்லை. அந்த மக்கள் எம்மை விட திறமைசாலிகள் என்பது எனது பட்டறிவு. 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, tulpen said:

கருத்துக்கு பதில் எழுதுவது நடைமுறை உங்களின் குழந்தைத்தனமான கதைகள் சிரிப்பாக இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உண்மையான பதில் வந்தால் சீமானிசத்தை எங்கே தவறி ஆதரித்துவிடுவமோ என்ற பயத்தில் பதிலை  தொடாமல் பக்கம் பக்கமாய் விளக்கம் எழுதுவது மேல் உள்ள பகிடிபோல் இனி இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் ஏனென்றால் அந்த பதில் சுருக்கமாய் வந்தால் சீமான் ஆதரவுத்தளத்தினில் நீங்களும் ஒருவர் அவ்வளவுதான் கதை .

சும்மா காமெடி பண்ணாதீங்க பெரும்ஸ். 

இலங்கையில் இன செளஜன்யம் வேணுமா? ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லவும் என கேட்டு விட்டு, ஆம் என சொன்னால், பார்தீர்களா மகிந்தவும் இப்படிதான் சொல்கிறார், ஆகவே கோஷான் மகிந்த சிந்தனைக்கு ஆதரவாய் இருக்கிறார் என்பது போல் இருக்கிறது உங்கள் தர்க்கம்.

இரெண்டு வரியில் பதில் வேணும் எண்டால், யாரவது விளம்பர பலகையில், “ஸ்வீட் எடு கொண்டாடு” “கண்ணா லட்டு வேணுமா” என்று எழுதுபவர்களிடம் கேளுங்கள்🤣.

தயவு செய்து உங்களுக்கு ஏன் நேரம் மினகெட்டு பதில் எழுதினேன் என நினைக்க வைக்க வேண்டாம்🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒன்றும் அந்த மக்கள் எப்படி நடக்க வேணும் என்று பாடம் எடுக்கவில்லை கேள்வியை திரும்பவும் படித்துவிட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள் அநேகமாக  சீமான் எதிர்ப்பாளர்கள் யாராலும் 7 வரிக்குள் பதில் எழுதமுடியாது எழுதினால் சீமானின் வட்டத்துக்குள் போய்தான் ஆகணும் அதனால்த்தான் இருவரும் அங்கும் இங்கும் பாய்ந்து போக்கு காட்டிக்கொண்டு இருக்கிறியள் இப்படியான கேள்விகளை ஆங்கிலத்தில் அழைக்கும் விதம் பற்றி மறந்துவிட்டது உங்களுக்கு தெரிந்தால் அதையாவது சொல்லிவிடுங்கள் .🤣

3 minutes ago, goshan_che said:

தயவு செய்து உங்களுக்கு ஏன் நேரம் மினகெட்டு பதில் எழுதினேன் என நினைக்க வைக்க வேண்டாம்🙏🏾.

அப்படி எழுதியதுக்கு நன்றி. ஆனால் கேள்விக்கு உரிய பதில் அது அல்ல 

இத்துடன் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அழிவு போராட்ட பாதையை முற்றாக ஏற்றுக்கொண்ட உங்களை போன்றவர்களது பேச்சை கேட்டு நாசமாபோக அந்த மக்கள் விரும்பமாட்டார்கள் 😂

மூஞ்சூறு தான் போக வழியில்லை விளக்குமாற்றையும் காவ புறப்பதாம்.😂 

ஈழத்தமிழர் வரலாறு வேறு சொல்கிறது

உங்களுக்கு அதில் எந்த அளவுக்கு புரிதல் இருக்கு என்பதை ஒரே திரியில் இரு மாறுபட்ட கருத்துகளை வைக்கும் போதே புரியலையா?? வரலாற்றோடோ அல்லது அந்த மக்களோடோ நீங்கள் இல்லை என்பது??

1 hour ago, tulpen said:

அந்த மக்கள் எம்மை விட திறமைசாலிகள் என்பது எனது பட்டறிவு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.