Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இனசுத்திகரிப்பையிட்டு வெட்கி தலை குனிகிறேன் என்று சொன்னது ஏன், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன். நான் இப்படி சொன்னதற்கான காரணம் அது இனசுத்திகரிப்பு. விசேடமாக தமிழ் மக்கள் மீது நடந்தது இனப்படுகொலை என்று நாங்கள் சொல்கிறோம்.

இனப்படுகொலையை சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும் என பல தடவைகள் நான் சொல்லியிருக்கிறேன். அதையும் திரிபுபடுத்தி இனப்படுகொலை நடக்கவில்லையென நான் சொல்வதாக தெரிவிக்கிறார்கள்.

அப்படியல்ல இனப்படுகொலை நடந்தது. ஆனால் அது நிரூபிப்பதற்கு மிகவும் கடினமான சர்வதேச குற்றம்.

இனப்படுகொலை நடந்ததென சொல்லி சர்வதேசத்தை ஏற்றுக் கொள்ள வைக்க முனைகின்ற நாங்கள் இனசுத்திகரிப்பு நடந்தது என்பதை மறுத்தால் சர்வதேசம் ஒருபோதும் எங்களை ஏற்றுக் கொள்ளாது.

இனசுத்திகரிப்பு நடந்தது என்பது வெளிப்படையாக தெரிகின்ற ஒரு விடயம். நான் இன்னொரு உதாரணத்தையும் கூறுகிறேன்.

2007ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போது திடீரென ஒரு நாள் அதிகாலையில் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கின்ற தமிழர்களை வெளியேற்றுமாறு ஒரு பணிப்புரையை வழங்கி பேருந்துகளிலே எல்லாரும் ஏற்றப்பட்டு வடக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கே நாங்கள் உடனடியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அன்று காலையிலேயே பத்து மணிக்கு அதை தடுத்து நிறுத்துகின்ற ஒரு உத்தரவை நான் பெற்றிருந்தேன். வவுனியாவிற்கு பேருந்துகள் போய் சேருவதற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு திரும்பவும் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

அது குறித்து சர்வதேசத்திலே மிக மோசமான விமர்சனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த காரணத்தினாலே அப்போது பிரதமராக இருந்த ரட்ண சிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்திலே மன்னிப்பு கோரினார்.

இலங்கையிலேயே ஒரு பிரதம மந்திரி மக்களிடம் மன்னிப்பு கோரியது அது ஒரு தடவை. ஏன் அவ்வாறு மன்னிப்பு கோரினார் என்றால் அது ஒரு இனசுத்திகரிப்பிற்கான நடவடிக்கை என்று நாங்கள் நீதிமன்றத்திலே சொல்லியிருந்தோம்.

உலக நாடுகள் அதனை ஏற்றிருந்தன. அங்கே நடந்தது என்ன? கொழும்பிலே வாழ்ந்த அத்தனை தமிழர்களையும் வெளியேற்றவில்லை. குறித்த சிறிய எண்ணிக்கையான விடுதிகளிலே இருந்தவர்களை வெளியேற்றியதையே இனசுத்திகரிப்பு என்று சர்வதேசம் சொல்லியிருக்கிறது.

அது தான் இனசுத்திகரிப்பிற்கான வரைவிலக்கணமாக இருந்தது. ஆனால் இலங்கையிலே வடக்கிலே நடந்தது முற்றுமுழுதாக, பரம்பரையாக வாழ்ந்துவந்த ஒருவரையும் விடாமல் அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றியது இனசுத்திகரிப்பு.

அது இல்லையென்று சொன்னால் ஒன்று சட்டம் தெரியாதவராக இருக்க வேண்டும். அதற்கு பிறகு என்னை சட்டத்தரணியென்று அழைக்க முடியாது. சர்வதேச குற்றங்களிலே இன்னொரு மோசமான குற்றம் இனசுத்திகரிப்பு.

ஆகவே அந்த குற்றம் தமிழ் மக்களின் பெயரினாலே நடத்தப்பட்டது. இதனாலேயே நான் வெட்கித்தலை குனிகிறேன் என பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். அதையே திரும்பவும் சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/sumanthiran-interview-1630327520

  • Replies 118
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இவர் என்ன செய்ய சொல்லுரார்? அதுதான் சமாதானகாலத்தில் முஸ்லீம்காங்கிரஸ் தலைவரை வன்னிக்கு அழைத்து  விடுதலைப்புலிகளே அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டனரே…. முஸ்லீம்களை மீள்குடியமர்த்த தேவையான அனைத்தையும் செய்வதாக தலைவர் உறுதியும் அளித்திருந்தார்… பிறகு சண்டை வந்து புலிகளும் அழிந்துபோயினர்.. அதனால அந்த முயற்சி நடைபெறவில்லை.. வெளிநாட்டுக்கு வந்த சில நம்ம ஆட்கள் வெள்ளைக்காரருக்கு நடிப்பதுபோல புலிகளை தாங்கள் மட்டும் குத்தகைக்கு எடுத்தமாரி ஓவர் தமிழ்தேசிய அக்டிங் கோஸ்ட்டிகள் எழுதுவதற்கு எல்லாம் நாம் என்ன செய்ய..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சம்பவம் நடந்த காலப் பகுதியில் சுமந்திரன் எங்கு இருந்தார்.. அரசியலிலா.. இல்லை தூக்கத்திலா..??!

ஏனெனில்.. கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் குறிப்பாக மூதூர்..நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட திருமலை மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லிம் ஊர்காவல் படையாலும்.. சொறீலங்கா இராணுவத்தாலும் அடித்து விரட்டப்பட்ட போது.. அந்த மக்களை வடக்கே அகதிகளாக ஏற்றுக் கொண்டது.

பிரேமதாச அரசின் தமிழ் - முஸ்லீம் மக்களைப் பிரித்தாலும் தந்திரத்தின் கீழ் வடக்கிலும் கிழக்கு போல் ஒரு சூழலை உருவாக்கும் செயற்திட்டம் இருந்ததும்.. மசூதிகளில் இருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்ட நிலையில்.. முஸ்லீம் மக்களின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு.. பிரேமதாச அரசின் சூழ்ச்சி வலைக்குள் சிக்காமல் இருக்கவும்.. முஸ்லிம்களை வடக்கில் இருந்து சம்பந்தப்பட்ட இனங்களின் பாதுகாப்பின் நிமித்தம்.. பாதுகாப்பான சூழல் திரும்பியதும்.. முஸ்லிம்கள் மீளத் திரும்பி வரலாம் என்ற அடிப்படையில் தான் பாதுகாப்பு வெளியேற்றம் செய்யப்பட்டார்கள்.

இது எந்த வகையிலும் இனச்சுத்திகரிப்பாகாது. இனச்சுத்திகரிப்பென்பது..  ஒரு இனக்கூட்டம் மக்களை நிரந்தரமாக இடம்பெயர வைப்பது தான்..! முஸ்லிம்கள் வடக்கு வெளியேற்றமென்பது.. பாதுகாப்பான மீள் அமர்வுக்குரிய வெளியேற்றமானதாகவே இருந்தது.

ஆனால் அஷ்ரப் கொம்பனி.. இதனை தமது அரசியல் ஆதாயத்திற்காக சிங்களவர்களோடு சேர்ந்து நின்று கொண்டு திரித்ததை.. இவர் இப்பவும் காவித் திரிகிறார்.

அப்படி என்றால்.. சந்திரிக்கா அம்மையார் காலத்தில்.. அனுரத்த ரத்வத்தையால்.. முஸ்லிம்கள் மாவனல்லையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதை இனச்சுத்திகரிப்பு என்பாரா..??!

தமிழ் மக்கள் 1983 இல் கொழும்பிலும் தெற்கிலும் இருந்து இன ரீதியாக படுகொலை செய்யப்பட்டும்..துரத்தி அடிக்கப்பட்டதும்.. இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் என்று சொல்வாரா.. ஏன் அதைச் சொல்ல மட்டும்.. பெரிய ஆதாரம் தேடுகிறார்..???!

தமிழ் மக்கள் மீது என்று திட்டமிட்டு செய்யப்பட்ட இராணுவ அட்டூழியங்களும்.. படுகொலைகளும்..  திட்டமிட்ட இனப்படுகொலை தான். இதனை எத்தனையோ உலக உதாரணங்கள் உலகிற்கு இனங்காட்டி உள்ள நிலையில்.. இவர்.. இனச்சுத்திகரிப்பு.. என்று திரிபு வசனம்.. பேசி.. சொந்த இனம் கடந்த 70 ஆண்டுகளாக சந்தித்த,, சந்தித்த வரும்... இனப்படுகொலைக்கு ஆதாரம் தேடிக்கிட்டு இருப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

சிங்களவர்களோட வாழக் கிடைத்தது ஒரு பாக்கியம் என்று சொல்லும் ஆளுக்கு எப்படி சொந்த இனப்படுகொலை கண்ணுக்குத் தெரியும்.  பாதுகாப்பான.. மீள்வருகை உறுதிப்படுத்தப்பட்ட வெளியேற்றத்தை தன் இஸ்டத்துக்கு.. இனச்சுத்திகரிப்பு என்று கொண்டு திரிகிறார். எதனை எதற்கு சமப்படுத்த முனைகிறார் இவர்..???! 

எங்களில் (தமிழர்) கவனித்துப் பார்த்தால் அநேகமான படித்தவர்கள் வேறு இனத்தவருக்கு என்றால் நியாயத்தைக் கதைப்பதும் இதுவே தம்மினத்துக்கு நடந்ததால் அதற்கு பல காரணங்களையும் சொல்வார்கள். இதுவும் ஒரு அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்றே சொல்லலாம் ஓர் பயம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு தன் வேலை பகுப்பு என்ன என்பதில் ஆரம்பம் முதலே தடுமாற்றம்.

நீங்கள் நீதிபதி அல்ல சுமந்திரன்.

நாம் தேர்வு செய்து அனுப்பிய எம்பி. அதாவது நம் தரப்பு வக்கீல்.

எமது வக்கீலாக நீங்கள் எங்கள் தரப்பு நியாத்தை மட்டும்தான் கதைக்க வேண்டும்.

முஸ்லீம்கள், சிங்களவர் தரப்பு நியாயத்தை அவர்கள் தரப்பு வக்கீல்கள் போதிய அளவு கதைப்பார்கள்.

இல்லை நான் எல்லா தரப்பு நியாயத்தையும் கதைப்பேன் என்றால் - நீங்கள் தமிழர் தரப்பின் வக்கீல்/பிரதிநிதி என்ற பதவிநிலைய (எம்பி) துறந்து விட்டு, ஒரு சட்ட வல்லுனராக கருத்து சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

2 minutes ago, goshan_che said:

நம் தரப்பு என்றால் யார் தரப்பு? தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பா? இதற்கு நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமார் உள்ளார் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைக் கூற ஒரு தரப்பு அரசியல் வாதியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை! இது அவருடைய நீதியுணர்வு சார்ந்த கருத்து - அவ்வளவு தான்! உடன்பட வேண்டுமென்றில்லை!

ஆனால், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக "பௌத்திரமாகப் போயிற்று திரும்பி வாங்கோ!" என்று அனுப்பி வைத்ததாக ஜோக் வேறு அடிக்கிறார்கள்!😂

 2007 இல் கோத்தாவும் இப்படித் தான் "கொழும்பில் தமிழருக்கு பாதுகாப்பில்லை" என்று பவுத்திரமாக வடக்கிற்கு அனுப்பி வைக்க முயன்றிருப்பார் போல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

என்னை தார் பேணியுடன் வருவது என்று  தாங்குதல் நடத்தி உள்ளீர்கள் வேறு திரியில்  உங்களை வெள்ளையடிப்பு பேணி இங்கு வந்திடடார்  என்று சொன்னால் நிர்வாகம் விடுமா ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இந்தச் சம்பவம் நடந்த காலப் பகுதியில் சுமந்திரன் எங்கு இருந்தார்.. அரசியலிலா.. இல்லை தூக்கத்திலா..??!

ஏனெனில்.. கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் குறிப்பாக மூதூர்..நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட திருமலை மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லிம் ஊர்காவல் படையாலும்.. சொறீலங்கா இராணுவத்தாலும் அடித்து விரட்டப்பட்ட போது.. அந்த மக்களை வடக்கே அகதிகளாக ஏற்றுக் கொண்டது.

பிரேமதாச அரசின் தமிழ் - முஸ்லீம் மக்களைப் பிரித்தாலும் தந்திரத்தின் கீழ் வடக்கிலும் கிழக்கு போல் ஒரு சூழலை உருவாக்கும் செயற்திட்டம் இருந்ததும்.. மசூதிகளில் இருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்ட நிலையில்.. முஸ்லீம் மக்களின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு.. பிரேமதாச அரசின் சூழ்ச்சி வலைக்குள் சிக்காமல் இருக்கவும்.. முஸ்லிம்களை வடக்கில் இருந்து சம்பந்தப்பட்ட இனங்களின் பாதுகாப்பின் நிமித்தம்.. பாதுகாப்பான சூழல் திரும்பியதும்.. முஸ்லிம்கள் மீளத் திரும்பி வரலாம் என்ற அடிப்படையில் தான் பாதுகாப்பு வெளியேற்றம் செய்யப்பட்டார்கள்.

இது எந்த வகையிலும் இனச்சுத்திகரிப்பாகாது. இனச்சுத்திகரிப்பென்பது..  ஒரு இனக்கூட்டம் மக்களை நிரந்தரமாக இடம்பெயர வைப்பது தான்..! முஸ்லிம்கள் வடக்கு வெளியேற்றமென்பது.. பாதுகாப்பான மீள் அமர்வுக்குரிய வெளியேற்றமானதாகவே இருந்தது.

ஆனால் அஷ்ரப் கொம்பனி.. இதனை தமது அரசியல் ஆதாயத்திற்காக சிங்களவர்களோடு சேர்ந்து நின்று கொண்டு திரித்ததை.. இவர் இப்பவும் காவித் திரிகிறார்.

அப்படி என்றால்.. சந்திரிக்கா அம்மையார் காலத்தில்.. அனுரத்த ரத்வத்தையால்.. முஸ்லிம்கள் மாவனல்லையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதை இனச்சுத்திகரிப்பு என்பாரா..??!

 பாதுகாப்பான.. மீள்வருகை உறுதிப்படுத்தப்பட்ட வெளியேற்றத்தை தன் இஸ்டத்துக்கு.. இனச்சுத்திகரிப்பு என்று கொண்டு திரிகிறார். 

இந்தா வந்துட்டானுக நான் சொன்ன ஓவர் அக்டிங் கோஸ்டி… இவனுங்களாலதான் இந்தமாரி விசர்க்கதையளாலதான் இயக்கத்துக்கு கெட்டபெயர்.. இயக்கத்தை மட்டம்தட்ட இதுகளை எடுத்துபோட்டு எழுத,பேச சுமந்திரன், புலிஎதிர்ப்பு இலக்கியவாதிகள் மாதிரி பல கோஷ்ட்டி வெளீல வெயிட் பண்ணிட்டு இருக்கு

(இதை நான் நெடுக்கைதனிமனித தாக்க எழுதவில்லை.. வெளிய சமூகத்தில் இருக்கும் அந்த கோஸ்டியின் விம்பமாக கருதி எழுதுகிறேன்)

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தா வந்துட்டானுக நான் சொன்ன ஓவர் அக்டிங் கோஸ்டி… இவனுங்களாலதான் இயக்கத்துக்கு கெட்டபெயர்..

தனிப்பட்ட தாக்குதல் வேண்டாமே என்ன பிழையாக நெடுக்கு எழுதி விட்டார் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பெருமாள் said:

முஸ்லிம் மக்களை வடக்கிலே இருந்து வெளியேற்றியது இனசுத்திகரிப்பு என்றே நான் கருதுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மிஸ்டர் சுமந்திரனை சிலோன் தொடக்கம் சிறிலங்கா ஈறாக முள்ளிவாய்க்கால் அழிவுகள் வரை உள்ள வரலாறுகளை படித்துவிட்டு அறிக்கை விடச்சொல்லுங்கள்.
காட்டிக்கொடுப்போர் வெளியேற்றத்திற்கும் இன சுத்திகரிப்பிற்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கின்றார்.

சிங்களத்திற்கு வெள்ளை அடிப்பவர்கள் இந்த படத்தை கவனிக்கவும்.
சிங்களச்சிறிலங்காவின் இனவாத வரலாறுகளில் இதுவும் ஒன்று.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

தனிப்பட்ட தாக்குதல் வேண்டாமே என்ன பிழையாக நெடுக்கு எழுதி விட்டார் ?

பின்ன என்ன அண்ணை புலிகளே மன்னிப்பு கேட்ட ஒரு விடயத்துக்கு மொக்குதனமா முட்டுகுடுத்தா..?

ஆனா இதை நான் அவரை நினைத்து எழுதவில்லை.. வெளிய முகநூலில் நிறையபேர் இப்படி இருக்கினம்.. அவைய மனசில வச்சு எழுதினது..

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தா வந்துட்டானுக நான் சொன்ன ஓவர் அக்டிங் கோஸ்டி… இவனுங்களாலதான் இயக்கத்துக்கு கெட்டபெயர்..

(இதை நான் நெடுக்கைதனிமனித தாக்க எழுதவில்லை.. வெளிய சமூகத்தில் இருக்கும் அந்த கோஸ்டியின் விம்பமக கருதி எழுதுகிறேன்)

வரலாற்றை அறிய விரும்பினால்.. சம்பந்தப்பட்டவர்களே பதிந்திருப்பதைப் படியுங்கள்.

உங்களின் விருப்பு வெறுப்புக்கு.. அல்லது தேவைக்கு ஏற்ப சம்பவங்களை நாங்கள் எழுத முடியாது. 

https://tamileelamarchive.com/wp-content/uploads/2020/01/V_P_18.pdf

5 minutes ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

ஆமாம் ஆமாம். தலிபானும் ஆப்கானிஸ்தானும்.. மட்டும்.. சுத்தம். 

நீங்கள் எல்லாம்.. எழுதி என்ன பயன். வெட்டிக்கருத்துக்கள். அவனவன் தன் தேவைக்கு செய்வதை.. எல்லாம்.. இப்போ சீனாவை இறக்கிவிட்டது தான் கண்ட மிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

உண்மையைத்தான் கூறி உள்ளார். இதை இடைக்கிடை நினைவுபடுத்த வேண்டியது தேவையான விடயமும் கூட.

நம் தரப்பு என்றால் யார் தரப்பு? தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பா? இதற்கு நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமார் உள்ளார் இல்லையா?

15 minutes ago, Justin said:

உண்மையைக் கூற ஒரு தரப்பு அரசியல் வாதியாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை! இது அவருடைய நீதியுணர்வு சார்ந்த கருத்து - அவ்வளவு தான்! உடன்பட வேண்டுமென்றில்லை!

ஆனால், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக "பௌத்திரமாகப் போயிற்று திரும்பி வாங்கோ!" என்று அனுப்பி வைத்ததாக ஜோக் வேறு அடிக்கிறார்கள்!😂

 2007 இல் கோத்தாவும் இப்படித் தான் "கொழும்பில் தமிழருக்கு பாதுகாப்பில்லை" என்று பவுத்திரமாக வடக்கிற்கு அனுப்பி வைக்க முயன்றிருப்பார் போல!

நான் முன்பும் ஒருதரம் எழுதியுள்ளேன். சுமந்திரன் ஒரு நல்ல வக்கீலா என்பதில்  எனக்கு டவுட் உண்டு, ஆனால் அவர் ஒரு கெட்டிகார அரசியல்வாதி இல்லை. 

எதையும் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் உண்டு.

அமெரிக்கா செய்த மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த அமெரிக்க ஜனாதிபதியாவது, மனம் திறந்து on the record ஆக உண்மையை பேசுவார்களா? இல்லை. 

இதுதான் அரசியல். ஒரு அரசியல்வாதிக்கு இந்த பண்பு அவசியம். சுமந்திரன் ஒரு loose cannon. 

அவர் பெட்டி வாங்கினார், சிங்கள ஏஜெண்ட் இவை எல்லாம் பொய்யாகவே இருக்கட்டும், ஆனால் ஒரு அரசியல்வாதியாக he is not fit for purpose. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

 நீங்கள் சொல்லும் ஈழத்தமிழன் பயங்கரவாதியாக எந்த நாட்டில் குண்டு வைத்து பொதுமக்களை சாகடித்தான்? உலகையே அதிரவைத்த பலஸ்தீனர் கூட இன்று பயங்கரவாதிகள் இல்லையாம். ஆனால் இஞ்சை ஒண்டு கூட்டிக்குடுக்குது

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nedukkalapoovan said:

வரலாற்றை அறிய விரும்பினால்.. சம்பந்தப்பட்டவர்களே பதிந்திருப்பதைப் படியுங்கள்.

உங்களின் விருப்பு வெறுப்புக்கு.. அல்லது தேவைக்கு ஏற்ப சம்பவங்களை நாங்கள் எழுத முடியாது. 

https://tamileelamarchive.com/wp-content/uploads/2020/01/V_P_18.pdf

சம்பந்தப்பட்டவர்கள்தான் பின்னர் சர்வதேச ஊடகவியளாளர் மாநாட்டில் மன்னிப்பும் கேட்டிருந்தனர்.. முயலுக்கு மூண்டுகால் எண்டு நிறுவ உங்கட வசதிக்கு புதுச மறச்சுட்டு பழச தூக்கிவராதைங்கோ.. 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

வரலாற்றை அறிய விரும்பினால்.. சம்பந்தப்பட்டவர்களே பதிந்திருப்பதைப் படியுங்கள்.

உங்களின் விருப்பு வெறுப்புக்கு.. அல்லது தேவைக்கு ஏற்ப சம்பவங்களை நாங்கள் எழுத முடியாது. 

https://tamileelamarchive.com/wp-content/uploads/2020/01/V_P_18.pdf

சம்பந்தப்பட்டவர்கள்தான் பின்னர் சர்வதேச ஊடகவியளாளர் மாநாட்டில் மன்னிப்பும் கேட்டிருந்தனர்.. முஸ்லிம் மக்களை வெளியேற்றியதையிட்டுத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வருந்துவதாக ஏற்கனவே 1994ஆம் ஆண்டு பி.பி.சி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தலைவர் அவர்கள் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இச்சம்பவத்திற்குத் தலைவர் அவர்கள் மன்னிப்புக் கோரியதோடு வடக்கில் மீளவும் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் அறிவித்திருந்தார்.

முயலுக்கு மூண்டுகால் எண்டு நிறுவ உங்கட வசதிக்கு புதுச மறச்சுட்டு பழச தூக்கிவராதைங்கோ.. 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் ஊர்காவல் படையினர் தமிழருக்கு செய்த அநியாயங்களை சொல்வதன் மூலம் எமது தவறுகளை சரிப்படுத்திவிட முடியாது.. அவர்கள் செய்தது அது பெரும் கொடுமை..

//“கல்முனையில் இராணுவப் பயங்கரவாதத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த 14 வயதுத் தமிழ் யுவதி ஒருத்தி சிங்களப் படைகளிடம் சிக்கிப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாள். பின்னர் இவள் முஸ்லிம் ஊர்காவற் படையிடம் கொடுக்கப்பட்டாள். ஒரு கல்லை நட்டு, நிர்வாணமாக அதை மூன்று முறை சுற்றும்படி பணிக்கப்பட்டாள். அவ்விதமே சுற்றி வந்ததும், ‘இஸ்லாமிய மார்க்கத்தில் விபச்சாரிக்குரிய தண்டனை இதுதான்’ எனக் கூறிக்கொண்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட அந்தத் தமிழ் யுவதியைக் கல்லால் எறிந்து கொன்றார்கள். மட்டக்களப்புப் பிராந்திய அரசியல் பொறுப்பாளர் கரிகாலனின் கூற்றுப்படி என்றுமில்லாதவாறு இன்று தென்தமிழீழத்தில் தமிழ் இனப்படுகொலை நடைபெறுகின்றது. இம்முறை சிங்களப் பேரினவாதிகளுடன் முஸ்லிம் வெறியர்களும் இணைந்து விட்டார்கள்…”//

//“கடந்த ஆனி மாதம் 11ஆம் திகதி (11.06.1990) தொடங்கிய தமிழீழ – சிறீலங்காப் போரைத் தொடர்ந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் கும்பல்களினால் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மிருகத்தனமான முறையில் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் காடையர்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பேதமில்லாது காட்டுமிராண்டித்தனமாக வெட்டியும், குத்தியும் கொல்லப்படுகின்றார்கள். கொல்லப்படும் தமிழர்களின் தலைகள் கொய்யப்பட்டுச் சாக்கினுள் கட்டிக் கடலினுள் வீசப்படுகின்றன. படுகொலை செய்யப்படும் இளைஞர்களினதும், இளம் பெண்களினதும் சடலங்கள் சோடி சோடியாகக் கட்டி, ஆற்றில் எறிந்து மிலேச்சத்தனமாக இரசனைகளை முஸ்லிம் காடையர்கள் வெளிப்படுத்துகின்றனர். பாண்டிருப்பு கல்முனை, வீரமுனை, சொறிகல்முனை, இவைபோன்று அம்பாறை மாவட்டத்திலிருக்கும் பல தமிழர் கிராமங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு அங்கே முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கி மண்ணை அபகரிக்கும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.”//

மறக்கவோ மன்னிக்கவோ முடியாத கொடுஞ்செயல்கள் இந்த கயவர்கள் எம் இனத்திற்கு செய்தது.. அதுவும் தென் தமிழ் ஈழம் இவர்களால் அடைந்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.. யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் கொலைசெய்வதில் ஈபிடீபியை சைட் எடுத்திருப்பார்கள் முஸ்லிம் ஊர்காவட்படை காடையர்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்கள் தமது வாழ்விடங்களை விட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டது பற்றி அந்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் வெளிநாடுகளில் வாழ்ந்தவர்கள், இந்த பூமியிலேயே  பிறக்காதவர்கள், குழந்தைகள், சிறுவர் பராயத்தில் நின்றவர்கள், மற்றும் கூகிழ் துணையுடன் ஒரு தரப்பு வாதத்தை மட்டும் வாசித்துவிட்டு கருத்திடுபவர்கள் நடந்த விடயங்களை நேர்மையுடன் கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

மேற்கண்ட காலத்தில் அமைப்பில் இயங்கிய இஸ்லாமியர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பொறுப்பாளர்களினால் பாதுகாப்பு காரணங்களை கூறி வெளியேற்றப்பட்டார்கள்.

இஸ்லாமியர்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தும் விடுதலைப்புலிகளினால் கைவசப்படுத்தப்பட்டன. அள்ளப்பட்ட தங்க நகைகள் உட்பட இவற்றின் மொத்த பெறுமதி எத்தனை கோடிகள் எவருக்குமே தெரியாது.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட உடமைகளுடன் இரவோடு இரவாக உடுத்த உடுப்புக்களுடனும் அநாதைகளாக வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் கடும் உடல் பரிசோதனைகளுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகளினால் உட்படுத்தப்பட்டார்கள். மார்பு கச்சையினுள், உள் ஆடைகளினுள் மறைத்து வைத்த இஸ்லாமிய பெண்களின் தங்க ஆபரணங்களை அவர்கள் கதறி அழவும் பெண் போராளிகள் பலவந்தமாக பறித்து எடுத்துக்கொண்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் நடைபெற்ற இந்த சம்பவம் மனச்சாட்சி உள்ள எந்த ஒரு தமிழனையும் உலுக்கி எடுத்து இருக்கும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அழிவுக்கு பாதை சமைத்தவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல. அமைப்பை காட்டி கொடுத்ததும், சின்னாபின்னம் செய்ததும் பிரதானமாக அமைப்பினுள் உள்ளே செயற்பட்டவர்களும், தலைவர் பிரபாகரனின் நம்பிக்கை பாத்திரமானவர்களும், உறவினர்களும், மற்றும் தம்மை அமைப்பின் விசுவாசிகளாக காட்டிக்கொண்டவர்களுமே என்பது பலர் அறிந்த உண்மை. இஸ்லாமியர்கள் தமது தோல்விக்கு காரணம் என்பது நகைப்புக்கு உரியது.

இவ்வளவும் நடந்தும்..

அந்த நேரம் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட எனது ஒரு இஸ்லாமிய நண்பருடன் இன்றும் நல்ல தொடர்பு உள்ளது. அவர் இப்போதும் பெருந்தன்மையுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீது அபிமானமே வைத்து உள்ளார்.

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் நடைபெற்ற இந்த சம்பவம் மனச்சாட்சி உள்ள எந்த ஒரு தமிழனையும் உலுக்கி எடுத்து இருக்கும்.

சம்பந்தப்பட்டவர்களால் மன்னிப்பு கேட்டு முடித்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு உங்களைப்போன்றோர் எண்ணை ஊற்றி எரிய வைப்பதன் நோக்கம் புரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் எம்பஸீஸ் சந்திப்பு சும்முக்கு வேலைசெயுது..பொட்டி பெருசா வரணும் என்றால்...இப்படித்தான் அத்திவாரம் போடவேணும்...தமிழ் சனம் செத்த்தது இன அழிப்பு இல்லை....சோனிகளை வெளியேற்றினது இன அழிப்பு....தவராசாவி வழ்க்கு எல்லாம் அவையிடமிருந்து வரவேணும்...அப்ப இந்தமுறை அய்.நாவில் சுமந்து கொண்டுபோற   வெடிதான் ஆப்புப் போலை..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் நடைபெற்ற இந்த சம்பவம் மனச்சாட்சி உள்ள எந்த ஒரு தமிழனையும் உலுக்கி எடுத்து இருக்கும்.

கிழக்கில் தமிழை பேசி கொண்டு தமிழருடன் அயலவராய் வாழ்ந்துகொண்டு முஸ்லீம் ஊர்காவல்படை என்ற பெயரில் அஷ்ரப் எனும் மனித தன்மையே அற்ற கொடூரனின் ஆசீர்வாததுடன் சிங்கள படைகளுடன் இணைந்து அம்பாறை-மட்டக்களப்பு பகுதிகளில்  தமிழர்களை கொத்து கொத்தாய் முஸ்லிம்காடையர்கள் படுகொலை செய்தபோது,தமிழர் விவசாய நிலங்களிலிருந்து  வாழ்விடங்களிலிருந்து   விரட்டி அவர்கள் பகுதிகளை முஸ்லீம்கள் சிங்களவருடன் சேர்ந்து அபகரித்தபோது அங்குள்ள மனசாட்சியுள்ள முஸ்லீம்கள் யாரையாவது அது உலுக்கியிருக்கிறதா அண்ண?

யாழில் தமிழர்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டு சிங்கள விமானபடைக்கு தகவல் சொல்லி விமானகுண்டுவீச்சில் பல தமிழர்கள் கொல்லப்பட காரணமாயிருந்தவர்களில் பலர் முஸ்லீம்கள், கையும் மெய்யுமாய் வேறு பிடிபட்டார்கள், அது தவறென்று உங்கள் மனதை உலுக்கியதுண்டா?

அப்படி உலுக்கி முஸ்லீம் பயங்கரவாதிகள்  தமிழர்களுக்கு பண்ணுவது தவறென்று சொன்னதுண்டா பெரியவரே? மனசாட்சி என்ற ஒன்று இருந்தால்தானே உலுக்க.’

இதுவெல்லாம் யாழ்நகரிலிருந்து முஸ்லீம்கள் புலிகளால் வெளியேற்றபடமுன்னர், தமிழர் பகுதிகளில் மனசாட்சியே இல்லாத முஸ்லீம்கள் தமிழருக்கு பண்ணிய அநியாயங்கள். பொறுத்து பொறுத்து பார்த்த புலிகள் மேற்கொண்ட ஒரு தற்கால நடவடிக்கையே முஸ்லீம்கள் வெளியேற்றம்.

ஆனால் புலிகள் முஸ்லிம் காடையர்கள்போல் தங்கள் நிலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களை படுகொலை செய்யவில்லை தற்காலிகமாக இடம்பெயரதான் சொன்னார்கள்.

தமிழருக்கு நீங்கள் பண்ணிய படுபாதகங்கள் சரியன்றால் இதுவும் சரி,  தவறென்றால் அதுவும் தவறு. ஆனால் நீங்கள் பண்ணிய தவறுகளை உள்ளூரிலும் சரி, உலக அளவிலும் சரி ஏற்றுக்கொண்டதாய் சரித்திரமேயில்லை, ஆனால் நீங்கள் கொடூரமான செயல்களை எமது இனத்துக்கு புரிந்திருந்தும் முஸ்லீம்களை வெளியேற்றியது தவறுதான் என்று புலிகள் ஒரு கட்டத்தில் ஒத்துக்கொண்டார்கள், ஏனெனில் புலிகள் நாகரிக இனத்திலிருந்து உருவான ஒரு போராட்ட இயக்கம்.

நம்மை பயங்கரவாதிகள் என்று பிறர் அழைத்தால் நாம் எம்மைவிட கொடிய பயங்கரவாதிகளுக்கெதிராக போர் புரிந்தோம் அதனால் அவர்களை அந்த வழியிலேயே எதிர்கொண்டோம், உலக அரசுகள் அரசுகளுக்கே ஆதரவு வழங்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் அரச பயங்கரவாதத்தை உலகம் கண்டுகொள்ளவில்லை,

ஆனால் அரசு செய்வது பயங்கரவாதம் என்று உலகநாடுகள் அனைத்துக்குமே தெரியும் அதனால்தால் பல லட்சக்கணக்கில் உலகமெங்கும் எம்மை அகதியாய் ஏற்றுக்கொண்டார்கள், சிங்களவனையும் முஸ்லீம்களையும்  ஒப்பீட்டளவில் எம்மைப்போல் லட்சக்கணக்கில் அகதியாய் அங்கீகரிக்கவில்லை.

அதிலிருந்தே தெரியவில்லையா உலகத்துக்கு  உங்கள் மனசாட்சியின் லட்சணம் எப்போதோ தெரிந்துவிட்டது என்று?

2 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல்

சிங்கள நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுடன் எதற்கு தாய்லாந்து ஜெனீவா நோர்வே வரை சென்று சிங்கள அரசுகள் பேசியது ஐயா? பயங்கரவாதிகளுடன் எதற்கு சர்வதேச மத்தியஸ்தம் வன்னி கொழும்பு யாழ்வரை சென்று பேச்சு எல்லாம் சிங்களம் நாடியது பெரியவரே?

சரி இவ்வளவுபேசுகிறீர்களே, நீங்கள் தமிழரா முஸ்லீமா? ஏனெனில் தமிழராக இருந்தால் நீங்களும் நீங்கள் சொன்ன பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்ந்துவிடுவீர்களே அந்த கவலையில் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நான் முன்பும் ஒருதரம் எழுதியுள்ளேன். சுமந்திரன் ஒரு நல்ல வக்கீலா என்பதில்  எனக்கு டவுட் உண்டு, ஆனால் அவர் ஒரு கெட்டிகார அரசியல்வாதி இல்லை. 

எதையும் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் உண்டு.

அமெரிக்கா செய்த மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த அமெரிக்க ஜனாதிபதியாவது, மனம் திறந்து on the record ஆக உண்மையை பேசுவார்களா? இல்லை. 

இதுதான் அரசியல். ஒரு அரசியல்வாதிக்கு இந்த பண்பு அவசியம். சுமந்திரன் ஒரு loose cannon. 

அவர் பெட்டி வாங்கினார், சிங்கள ஏஜெண்ட் இவை எல்லாம் பொய்யாகவே இருக்கட்டும், ஆனால் ஒரு அரசியல்வாதியாக he is not fit for purpose. 

உண்மை, ஆனால் ஒரு திருத்தம் - சுமந்திரன் எங்கள் தீவிர தேசியர்களுக்கு உரிய அரசியல் வாதியல்ல என்று வர வேண்டும்!

 ஆனால் அவர் சொல்வதில் உள்ள நியாயங்கள், உண்மைகள் சுட்டாலும் , புரிந்து கொண்டு நகரும் மக்களே பெரும்பான்மையான தமிழர்கள் என்பது என் கணிப்பு!

ஒரு அரசியல்வாதி தன் வாக்காளர்கள் கேட்க விரும்புவதை மட்டும் பேசி, சில இடங்களில் கள்ள மௌனம் காத்து தேர்தலில் வென்று பென்சன் வாங்கி விட்டுப் போவதால் யாருக்கு என்ன பயன்? அவருக்கென்று இருக்கும் moral compass ஐயும் பயன்படுத்த வேண்டும்! இல்லையேல், ட்ரம்ப் செய்த எந்தச் செயலையும் கள்ள மௌனம் மூலம் ஆதரிக்கும் குடியரசுக் கட்சி கள்ள அரசியல் வாதிகளுக்கும் சுமந்திரனுக்கும் என்ன வேறு பாடு? 

இப்படி சுமந்திரன் பேசுவதை  விரும்பா விட்டால் வாக்களர்கள் அவரைத் தேர்வு செய்யாமல் விடலாம் - இப்படி அவரே கடந்த தேர்தல் நேரத்தில் சொல்லியிருந்தார்! 

3 hours ago, பெருமாள் said:

என்னை தார் பேணியுடன் வருவது என்று  தாங்குதல் நடத்தி உள்ளீர்கள் வேறு திரியில்  உங்களை வெள்ளையடிப்பு பேணி இங்கு வந்திடடார்  என்று சொன்னால் நிர்வாகம் விடுமா ?

அதை நிர்வாகத்திடம் தான் கேட்க வேணும்😂
 
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் நடந்தவை இனப்படுகொலை என சுமந்திரனால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?? 
முஸ்லிம்களை புலிகள் விரட்டியது இனச்சுத்திகரிப்பு என ஏன் எண்ணையை ஊற்றுகிறார். இரட்னாயக்கா மன்னிப்பு கேட்டது போல புலிகளும் மன்னிப்பு கேட்டார்கள் தானே. இவரால் கோத்தபாய செய்தது இனச்சுத்திகரிப்பு என இப்போ சொல்ல துணிவு உள்ளதா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.