Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு எதிராக விசாரணை: ’தமிழரசு கடிதம் அனுப்பவில்லை’

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, valavan said:

அரச தலைவர்கள் தளபதிகள் இன்றும் இருக்கிறார்கள், புலிகள் தரப்பில் ஐநா யாரை விசாரிக்கும்?

விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் சிவசேனதுரை சந்திரகாந்தன் ஆகியோரை விசாரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள். :cool:

  • Replies 56
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் சிவசேனதுரை சந்திரகாந்தன் ஆகியோரை விசாரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள். :cool:

முக்கியமாக முரளிதரன்  எவ்வாறு குறிப்பிட்ட  காலப்பகுதிக்குள்  இலங்கையில்  முக்கிய கோடீசுவரர்கள்  வரிசையில்  சேர்ந்தார்  என்பதனையும்  விசாரிக்கவேண்டும்

இது சுவிசிலிருந்து விடுக்கப்படும் வேண்டுகோள்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் சிவசேனதுரை சந்திரகாந்தன் ஆகியோரை விசாரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள். :cool:

அந்த நம்பிக்கை இருக்க வாய்ப்பிருக்கு,

அதேநேரம் அரந்தலாவ பிக்குகள் படுகொலை, கிழக்கு பள்ளிவாசல்கள் கொலை, ஜோசப் பரராஜசிங்கம் கொலைகளில் இந்த இருவரின் பங்கு இருக்கிறது என்று  இலங்கை பூராவுமே பேச்சிருக்கிறது. அது சிங்கள தலைவர்கள்  வாய் மூலமாகவே பலதடவை வெளிபட்டிருக்கிறது.

அதை ஐநா விசாரிக்கபோனால் யுத்தகுற்றம் புரிந்தவர்களை அரச உயர் பதவிகளில் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லி மீண்டும் சிறிலங்கா சிக்கிகொள்ளும்.

அந்த குற்றத்தை இவர்கள் ஒருபோதும் ஐநா முன் ஒப்புக்கொள்ள போவதில்லை, அதனால் இவர்கள் சொல்லும் எதையும் ஐநாவும் நம்ப போவதில்லை.

அதை இவர்களிருவரும் ஒப்புக்கொண்டால் இலங்கை அரசுக்கு நெருக்கடி, ஒப்புக்கொள்ளாமல் போனால் ஐநாவால் நெருக்கடி.

மேற்குலத்தில் ஒரு வரி நீங்கள் பொய்யுரைத்தாலும் ஓராண்டாய் நீங்கள் சொன்ன அத்தனையுமே பொய்யென்றே முடிவெடுப்பார்கள், அது அகதி தஞ்ச விசாரணையாக இருந்தாலும் சரி ஐநா விசாரணையானாலும் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இவை யுத்தக் குற்றச்சாட்டுக்கள் ஆகுமா??

1 - தடுத்தது குற்றமாகும் என்றால் அவர்களை கொன்றது??

2 - உலகம் பூராகவும் இது குற்றமாகுமே?? ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே?

தடுத்தது ஆயுத முனையில், சும்மா அல்வா கொடுத்தல்ல 😂- எனவே யுத்தக் குற்றம் தான்!. மக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப் பட்டமைக்கு நிகரானது இது.
 இது நடந்தது தெரியாத மாதிரி பாவ்லா காட்டுவோருக்கு (மேலே இருக்கும் ஆதார புருஷர் உட்பட!) புலிகளோடு உள்ளே நின்று பின்னே வெளியே வந்து பொதுவெளியில் பேசிய/எழுதிய புலிப் பிரமுகர்களைத் தெரியாது என்றால் நான் நம்பி விட்டேன்!😎

இரண்டாவதும் குற்றம் தான்! ஜனநாயக நாடுகள் செய்யும் conscription உம்  வீட்டுக்கு ஒருத்தர் கட்டாயம் வர வேணும் என்று முன்னிலையில் ஒரு வாரப் பயிற்சியோடு கொண்டு போய் அப்பாவிகளை சாக விட்டதையும் ஒப்பிடுகிறீர்கள்! ஏனெனில் வசிப்பது பிரான்ஸ் அல்லவா?  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

ஏறக்குறைய ஐம்பது வருடங்களிற்கு மேலாக ஒரு பேரினவாதம் தமிழர்கள்மீது கட்டவிழ்த்த பயங்கரவாதத்தை ஓரணியின் நின்று தட்டிகேட்காமல் பேரினவாத தலைமைகள் மட்டுமே தப்பு பண்ணவில்லையென்று எம்மவர்களில் ஒரு சிலர் சிங்களவருக்கு நெய் தடவுவது  எக்காலத்திலும் இந்த இனம் விமோசனமடைய போவதில்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறது.

ஓரணியில் நின்று அப்பாவி தமிழ் மக்கள் மீது இரு தரப்பும் - அது வெவ்வேறு அளவுகளில் இருந்தாலும் - செய்த குற்றங்களை உங்களால் தட்டிக் கேட்க இயலவில்லை அல்லவா?  அது பிரச்சினையாகத் தெரியவில்லையோ?

மற்றபடி "அவையள் இல்லை, இவையள் இருக்கீனம் - எனவே இவையள் மேல தான் விசாரணை" என்பது வெறும் சப்பைக் கட்டு வாதம்! இப்படி மக்களை கட்டாய ஆட்சேர்ப்பினால் முன்னரங்கிற்கு அனுப்பிய பலர் தப்பி வெளிநாடுகள், தென் கிழக்காசியா என்று வாழுகின்றனர். இவர்கள் முற்றாக இல்லாமல் போகவில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

என் மனதில் பட்டதை சொல்கிறேன்.

1. இன்னும் எவரையும் யாரும் விசாரிப்பதாக சொல்லவில்லை. ஆகவே இது கொஞ்சம் ஆடு அறுக்க முன்னம் செவி அறுக்கும் வேலையாக படுகிறது.

2. தமிழ் தேசிய தரப்பில் யாரும் புலிகள் மீதும் விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். மேலே செய்தியும் இதைதானே சொல்கிறது? 

3. ஆனால் இதை நிச்சயம் தம்மீதான விசாரணையை திசை திருப்பும் ஒரு தந்திரமாக அரசு பாவிக்க்கும். அதன் கூட்டாளிகளை வைத்து இந்த கோரிக்கையை முன் தள்ளவும் கூடும்.

4. இப்படி நடக்கும் போது - இதை லாவகமாக கையாண்டு - focus அரசு மீது இருக்குமாறு எப்படி பார்த்துகொள்வது?

5. இன்னொரு விடயம். இரு பகுதி மீதும் விசாரணை நடக்கலாம். புலிகள் இல்லை என்பதால் அவர்கள் செயலை விசாரிக்க முடியாது என்பதல்ல.  சாட்சியங்களை வைத்து அவர்கள் செயல்களை விசாரிக்கலாம். தம் தரப்பு நியாயத்தை சொல்ல அவர்கள் இல்லாவிடினும். சாராரண கிரிமினல் வழக்குகளில் கூட in absentia வழக்குகள் நடப்பதுண்டு. நடக்க இருக்கும் (நடந்தால்) விசாரணை எவ்வகையானது என தெரியாமல் இதை சொல்ல முடியாது.

ஆனால் விசாரணை நடந்தாலும் அவர்களை தண்டிக்க முடியாது (யாரும் இல்லை). ஆனால் இலங்கை அரசு அப்படி அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

சிங்களவர்கள் எவரும் சிறீலங்கா அரசையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லாதபோது தமிழர் மட்டும் எம்மையும் விசாரிக்கணும் என்று அதுக்கு முந்திய இது மாதிரி நாலு காலில் நிற்பதேன் சகோ??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சிங்களவர்கள் எவரும் சிறீலங்கா அரசையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லாதபோது தமிழர் மட்டும் எம்மையும் விசாரிக்கணும் என்று அதுக்கு முந்திய இது மாதிரி நாலு காலில் நிற்பதேன் சகோ??

அண்ணை,

1. இதில் கடிதம் அனுப்பாமலே - சுமந்திரன் கடிதம் அனுப்பி விட்டார் - என்ற கூச்சலை எழுப்பி - செய்தியாகவும் இதை ஆக்குகிறார்கள். இப்படியானவர்களுக்கு சுமந்திரனுக்கு சேறு அடித்தால் போதும். விசாரணை பற்றி துளியும் அககறையில்லை.

2. யாழில் எழுதிய தமிழர் யாரும் எம்மையும் விசாரிக்க வேண்டும் என அடம்பிடிப்பதாக நான் நினைக்கவில்லை. விசாரணை தவிர்க்க முடியாதது என்றே எழுதுகிறார்கள்.  விசாரணை என்றால் எப்போதும் இரு பகுதியையும் விசாரிப்பதே வழமை என்பதால் அவர்கள் சொல்வதில் ஒரு தர்க்க நியாயம் இருக்கிறது. 

எனது எதிர்வுகூறலும் (விருப்பம் அல்ல) - விசாரணை என வந்தால் இருபகுதி நடவடிக்கையிம் விசாரிக்கபடும் என்பதே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஓரணியில் நின்று அப்பாவி தமிழ் மக்கள் மீது இரு தரப்பும் - அது வெவ்வேறு அளவுகளில் இருந்தாலும் - செய்த குற்றங்களை உங்களால் தட்டிக் கேட்க இயலவில்லை அல்லவா?  அது பிரச்சினையாகத் தெரியவில்லையோ?

மற்றபடி "அவையள் இல்லை, இவையள் இருக்கீனம் - எனவே இவையள் மேல தான் விசாரணை" என்பது வெறும் சப்பைக் கட்டு வாதம்! இப்படி மக்களை கட்டாய ஆட்சேர்ப்பினால் முன்னரங்கிற்கு அனுப்பிய பலர் தப்பி வெளிநாடுகள், தென் கிழக்காசியா என்று வாழுகின்றனர். இவர்கள் முற்றாக இல்லாமல் போகவில்லை! 

அதுதான் தெளிவாக சொல்லிவிட்டேனே 58 லிருந்து ஆயுத போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் குதிக்கும் காலம்வரை, வெறும் கையுடன் நின்ற ஒரு இனத்தின்மீது ஆயுதங்கள், காடையர்களை ஏவிவிட்டு சிங்களம் என்று வீரவித்தை காண்பித்ததோ அன்றே இலங்கையில் பயங்கரவாதம் ஆரம்பித்துவிட்டது.

பின்னாளில் அது இனங்களுக்கிடையிலான போராக விரிந்தது,  ஆயுதங்களை கொண்டு ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும்போது கண்டிப்பாக அங்கே போர் குற்றங்கள் இருந்தே ஆகும், ஆனால் அந்த நிலையை ஒரு இனத்தின்மீது திணித்தது யார்?  ஆரம்பித்தது யார்?

வெளிநாட்டில் இருவர் மோதலில் இறங்கி காவல்துறையை அழைத்தால் முதலில் இந்த தகராறை ஆரம்பித்தவர் யார் என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கும்,

புலிகள் சும்மா இருந்தவனை அடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கமல்ல, அடித்தவனை திருப்பி அடிக்கவே இயங்கிய இயக்கம், கண்டிப்பாக அவர்கள் பக்கமும் போர் குற்றங்கள் ஒரு சில இருந்தே ஆகும். ஏனெனில் அவர்கள் மோதியது தலையணையால் எம்மை தாக்கியவர்கள்கூட அல்ல.

ஒருநாட்டுக்குள் பேசாமல் ஒன்றாய் வாழ்ந்த ஒரு இனத்தை என்னமோ அந்நியநாட்டுக்காரனை அடித்து விரட்டுவதுபோல் தெற்கிலிருந்து வடகிழக்கிற்கு  கொன்றும் ரத்தம் சொட்ட சொட்டவும் காலம் காலமாக அனுப்பி வன்முறையை தமிழர்கள் கையில் எடுக்க வைத்துவிட்டு இன்று தமிழர்கள் போர் குற்றம் புரிந்தார்கள் என்று சொன்னால், எம் புத்திக்கு சரி பிழை தெரிந்தாலும் கண்டிப்பாக வலிபட்ட மனசு அதை ஏற்காது.

முன்னாளில் கையறு நிலையில் நின்ற ஒரு இனத்தை கலவரம் என்ற பெயரில் கொன்று குவித்துவிட்டு

பின்னாளில் பள்ளிகள் தேவாலயங்கள் கோவில்கள் அங்காடிகள் குடிமனைகள் என்று எங்கு பார்த்தாலும் முப்படைகள் கொண்டு ஒரு இனத்தை கொத்து கொத்தாக கொன்றுவிட்டு அவர்கள் உறவுகள் தலையில் அடித்து கதறிக்கொண்டிருக்கும்போதே ,  100, 200 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று வானொலி தொலைக்காட்சியில் அறிவித்து போர் வெறியை தூண்டிவிட்டு...

இந்த பரந்த உலகிலிருந்து எமது சின்னஞ்சிறு பிரதேசத்தை தனிமைபடுத்தி அதன் கழுத்தை இறுக்கி பொருளாதாரதடை மருத்துவதடை அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாடு என்று எம் மூச்சு திணற திணற சாகடித்த ஒரு அரச பயங்கரவாததுக்கு எதிராக  வேறுவழியின்றி எதிர் போர் செய்ய புறப்பட்டுபோன எம்மினத்தின் பிரதிநிதிகளை போர் குற்றவாளிகள் என்று கூற நான் ஒருபோதும் தயாராக இல்லை, ஏனென்றால் அந்த போரை ஆரம்பித்தது அவர்கள் இல்லை.

அவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் இல்லையென்பதன் அர்த்தம் சப்பைகட்டு அல்ல, அவர்கள் இல்லையென்று சொன்னது நான் அல்ல, 

தமிழர்பகுதியில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்காய் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்வதற்கு அழுவதற்கு  தடை செய்துவிட்டு,அதே தினத்தில்  தெற்கே பிரமாண்டமாய் ஒவ்வொரு வருடமும் சிரித்துக்கொண்டு  யுத்தவெற்றி கொண்டாடும் சிங்கள பயங்கரவாதமே சொல்லிகொள்வது. மேடைகளில் முழங்கி கொள்வது.

ஒரு சர்வதேச விசாரணையின்போது அரச தரப்பினால் போரில் முற்றுமுழுதாய் ஒரு அமைப்பை அதன் தலைமைபீடத்தை அதனை வழிநடத்தியவர்களை அழித்துவிட்டோம் என்று கூறப்படும் , அந்த அமைப்பின் பக்கத்து சாட்சியத்தை ஐநா எங்கிருந்து பெறும் என எதிர் பார்க்கிறார்கள்?

ஒருவர் இல்லாதவிடத்து அவர்கள்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு ஒருபக்க சார்பானதாகவே அமையும்.இதனால்தான் இறந்தவர்கள்பற்றி பேசகூடாது எங்கிறார்கள் ஏனில் அவர்கள் எழுந்துவந்து தம் பக்க நியாயத்தை கூற முடியாது என்பதால்தான், அதற்காக அவர்கள் பக்கம் தவறே இருக்க வாய்ப்பில்லை என்று அர்த்தமல்ல.

இதனை புரிந்துகொள்ள சப்பை அறிவோ, அல்லது அதி புத்திசாலிதனமான கணித விஞ்ஞான புவிசாஸ்திர ஞானமோ பாண்டித்தியமோ தேவையில்லை,

ஆயுதபோர்களின் முன்னர்சொத்துக்கள் சூறையாடப்பட்டும்,  கொதிக்கும் தார்பீப்பாய்க்குள் தூக்கி போடப்பட்டும் பெட்ரோல் ஊற்றப்பட்டும் கண்டதுண்டமாக வெட்டிகொல்லப்பட்டும்  படமாய் தொங்கும் எம் கடந்த தலைமுறையின் வலிகள் போர் குற்றம் எங்கிருந்து ஆரம்பித்தது என்று சொல்ல போதும்.

யாரையா நீங்கள் ?????

யாருக்கும் எதிராகவோ சார்பாகவோ எழுதினாலும் ஒரு நியாத்துடன் பேசுகின்றீர்களே !!!!!!!

உங்கள் எழுத்து திறமைக்கும், ஆதாரபூர்வ கருத்துக்களுக்கும் ஒரு பலத்த கைதட்டல்.👍🏽

வாழ்க வளமுடன். 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

யாரையா நீங்கள் ?????

யாருக்கும் எதிராகவோ சார்பாகவோ எழுதினாலும் ஒரு நியாத்துடன் பேசுகின்றீர்களே !!!!!!!

உங்கள் எழுத்து திறமைக்கும், ஆதாரபூர்வ கருத்துக்களுக்கும் ஒரு பலத்த கைதட்டல்.👍🏽

வாழ்க வளமுடன். 🙏🏽

அப்படி எதுவுமில்லை குமாரசாமியண்ணை,

எமதும் எமக்கு முந்திய தலைமுறையினதும் கண்முன்னே எமக்கு நடந்த அநியாயங்களை பேசும்போது தானாகவே அது நியாயமாகிவிடுகிறது.

சிலர் அதை மறைக்கபார்க்கிறார்கள், நான் எதையும் மறக்க நினைக்கவில்லை அதுதான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

அதுதான் தெளிவாக சொல்லிவிட்டேனே 58 லிருந்து ஆயுத போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் குதிக்கும் காலம்வரை, வெறும் கையுடன் நின்ற ஒரு இனத்தின்மீது ஆயுதங்கள், காடையர்களை ஏவிவிட்டு சிங்களம் என்று வீரவித்தை காண்பித்ததோ அன்றே இலங்கையில் பயங்கரவாதம் ஆரம்பித்துவிட்டது.

பின்னாளில் அது இனங்களுக்கிடையிலான போராக விரிந்தது,  ஆயுதங்களை கொண்டு ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும்போது கண்டிப்பாக அங்கே போர் குற்றங்கள் இருந்தே ஆகும், ஆனால் அந்த நிலையை ஒரு இனத்தின்மீது திணித்தது யார்?  ஆரம்பித்தது யார்?

வெளிநாட்டில் இருவர் மோதலில் இறங்கி காவல்துறையை அழைத்தால் முதலில் இந்த தகராறை ஆரம்பித்தவர் யார் என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கும்,

புலிகள் சும்மா இருந்தவனை அடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கமல்ல, அடித்தவனை திருப்பி அடிக்கவே இயங்கிய இயக்கம், கண்டிப்பாக அவர்கள் பக்கமும் போர் குற்றங்கள் ஒரு சில இருந்தே ஆகும். ஏனெனில் அவர்கள் மோதியது தலையணையால் எம்மை தாக்கியவர்கள்கூட அல்ல.

ஒருநாட்டுக்குள் பேசாமல் ஒன்றாய் வாழ்ந்த ஒரு இனத்தை என்னமோ அந்நியநாட்டுக்காரனை அடித்து விரட்டுவதுபோல் தெற்கிலிருந்து வடகிழக்கிற்கு  கொன்றும் ரத்தம் சொட்ட சொட்டவும் காலம் காலமாக அனுப்பி வன்முறையை தமிழர்கள் கையில் எடுக்க வைத்துவிட்டு இன்று தமிழர்கள் போர் குற்றம் புரிந்தார்கள் என்று சொன்னால், எம் புத்திக்கு சரி பிழை தெரிந்தாலும் கண்டிப்பாக வலிபட்ட மனசு அதை ஏற்காது.

முன்னாளில் கையறு நிலையில் நின்ற ஒரு இனத்தை கலவரம் என்ற பெயரில் கொன்று குவித்துவிட்டு

பின்னாளில் பள்ளிகள் தேவாலயங்கள் கோவில்கள் அங்காடிகள் குடிமனைகள் என்று எங்கு பார்த்தாலும் முப்படைகள் கொண்டு ஒரு இனத்தை கொத்து கொத்தாக கொன்றுவிட்டு அவர்கள் உறவுகள் தலையில் அடித்து கதறிக்கொண்டிருக்கும்போதே ,  100, 200 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று வானொலி தொலைக்காட்சியில் அறிவித்து போர் வெறியை தூண்டிவிட்டு...

இந்த பரந்த உலகிலிருந்து எமது சின்னஞ்சிறு பிரதேசத்தை தனிமைபடுத்தி அதன் கழுத்தை இறுக்கி பொருளாதாரதடை மருத்துவதடை அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாடு என்று எம் மூச்சு திணற திணற சாகடித்த ஒரு அரச பயங்கரவாததுக்கு எதிராக  வேறுவழியின்றி எதிர் போர் செய்ய புறப்பட்டுபோன எம்மினத்தின் பிரதிநிதிகளை போர் குற்றவாளிகள் என்று கூற நான் ஒருபோதும் தயாராக இல்லை, ஏனென்றால் அந்த போரை ஆரம்பித்தது அவர்கள் இல்லை.

அவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் இல்லையென்பதன் அர்த்தம் சப்பைகட்டு அல்ல, அவர்கள் இல்லையென்று சொன்னது நான் அல்ல, 

தமிழர்பகுதியில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்காய் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்வதற்கு அழுவதற்கு  தடை செய்துவிட்டு,அதே தினத்தில்  தெற்கே பிரமாண்டமாய் ஒவ்வொரு வருடமும் சிரித்துக்கொண்டு  யுத்தவெற்றி கொண்டாடும் சிங்கள பயங்கரவாதமே சொல்லிகொள்வது. மேடைகளில் முழங்கி கொள்வது.

ஒரு சர்வதேச விசாரணையின்போது அரச தரப்பினால் போரில் முற்றுமுழுதாய் ஒரு அமைப்பை அதன் தலைமைபீடத்தை அதனை வழிநடத்தியவர்களை அழித்துவிட்டோம் என்று கூறப்படும் , அந்த அமைப்பின் பக்கத்து சாட்சியத்தை ஐநா எங்கிருந்து பெறும் என எதிர் பார்க்கிறார்கள்?

ஒருவர் இல்லாதவிடத்து அவர்கள்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு ஒருபக்க சார்பானதாகவே அமையும்.இதனால்தான் இறந்தவர்கள்பற்றி பேசகூடாது எங்கிறார்கள் ஏனில் அவர்கள் எழுந்துவந்து தம் பக்க நியாயத்தை கூற முடியாது என்பதால்தான், அதற்காக அவர்கள் பக்கம் தவறே இருக்க வாய்ப்பில்லை என்று அர்த்தமல்ல.

இதனை புரிந்துகொள்ள சப்பை அறிவோ, அல்லது அதி புத்திசாலிதனமான கணித விஞ்ஞான புவிசாஸ்திர ஞானமோ பாண்டித்தியமோ தேவையில்லை,

ஆயுதபோர்களின் முன்னர்சொத்துக்கள் சூறையாடப்பட்டும்,  கொதிக்கும் தார்பீப்பாய்க்குள் தூக்கி போடப்பட்டும் பெட்ரோல் ஊற்றப்பட்டும் கண்டதுண்டமாக வெட்டிகொல்லப்பட்டும்  படமாய் தொங்கும் எம் கடந்த தலைமுறையின் வலிகள் போர் குற்றம் எங்கிருந்து ஆரம்பித்தது என்று சொல்ல போதும்.

வளவன், அருமையாக சொன்னீர்கள். 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, goshan_che said:

ஆனால் விசாரணை நடந்தாலும் அவர்களை தண்டிக்க முடியாது (யாரும் இல்லை).

சிறையில இருக்கிற 11 ஆயிரத்துச் சொச்சம் பேரில ஆரையேனும் தெரிந்தெடுத்து போர்க்குற்றவாளிகள் என்று நிப்பட்டினான் என்டால் என்ன செய்ய?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

சிறையில இருக்கிற 11 ஆயிரத்துச் சொச்சம் பேரில ஆரையேனும் தெரிந்தெடுத்து போர்க்குற்றவாளிகள் என்று நிப்பட்டினான் என்டால் என்ன செய்ய?

ஐ. நா. என்ன இலங்கை நீதிமன்றம் போல் என்றா நினைக்கிறீர்கள்? அப்படியென்றால்; அதை எப்பவோ செய்து தன்னை புனிதனாக்கியிருக்கும் சிங்களம்! 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

ஓரணியில் நின்று அப்பாவி தமிழ் மக்கள் மீது இரு தரப்பும் - அது வெவ்வேறு அளவுகளில் இருந்தாலும் - செய்த குற்றங்களை உங்களால் தட்டிக் கேட்க இயலவில்லை அல்லவா?  அது பிரச்சினையாகத் தெரியவில்லையோ?

மற்றபடி "அவையள் இல்லை, இவையள் இருக்கீனம் - எனவே இவையள் மேல தான் விசாரணை" என்பது வெறும் சப்பைக் கட்டு வாதம்! இப்படி மக்களை கட்டாய ஆட்சேர்ப்பினால் முன்னரங்கிற்கு அனுப்பிய பலர் தப்பி வெளிநாடுகள், தென் கிழக்காசியா என்று வாழுகின்றனர். இவர்கள் முற்றாக இல்லாமல் போகவில்லை! 

மக்களுக்கு மேல் கொத்தணி குண்டு போட்டதும் மக்களை முன்னரங்குக்கு நகர்த்தியதும் ஒரே தராசில்  வைக்க உங்களை தவிர யாராலும் முடியாது. 
அப்போ சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் கட்டாய இராணுவப்பயிற்சி எடுப்பதால் ஐ.நாவின் விசாரணைக்கு செல்ல வேண்டுமா??( ஒரு ஒப்பீட்டுக்காக)
அரசுக்கும், போரை நடாத்திய நாடுகளுக்கும் தெரியும் புலிகளின் மேல் பழியை போட்டு தண்டிக்க  அவர்கள் இல்லை. தண்டிக்க வேண்டுமெனில் கருணாவையும், பத்மநாதனையும், பிள்ளையானையும் தான் தண்டிக்க வேண்டும். கோத்தபாய தொடக்கம் போரை வன்னியில் நடாத்தியவர்கள் தண்டனை பெற வேண்டும்.
மக்களை பலோத்காரமாக பிடித்து இராணுவ பயிற்சி கொடுத்ததில் இருந்து பங்கர் வெட்டியது வரை ஈடுபட்ட வரதராஜபெருமாள், சுரேஸ்  பிறேமச்சந்திரனும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்களா??
செம்மணி புதை குழி ,கிரிசாந்தி கொலை என்பவற்றுக்கு பொறுப்பான சந்திரிக்கா விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா? போன்ற கேள்விகளுக்கு உங்களின் பதிலென்ன?

On 10/9/2021 at 11:16, Justin said:

இதை முதலில் இருந்து விளக்க நேரமில்லை, நீங்கள் வேறு "புது பல்பாக" இருக்கிறீர்கள்!😂

எனவே, பெருமாளுக்கு பொய்செய்திகள் போதும் போது விதிகளை மீறாமல் போடச் சொல்லி விடுங்கள்! அவருக்கு ஏனென்று விளங்கும்! :grin:

ஓ நீங்கள் பழைய பல்போ??😂

ஏன் பெருமாளுக்கு இந்த பயம் பயப்பிடுகிறீர்கள்??🤪

  • கருத்துக்கள உறவுகள்+
15 minutes ago, satan said:

ஐ. நா. என்ன இலங்கை நீதிமன்றம் போல் என்றா நினைக்கிறீர்கள்? அப்படியென்றால்; அதை எப்பவோ செய்து தன்னை புனிதனாக்கியிருக்கும் சிங்களம்! 

நான் அப்படி சொல்லேல. ஆய்தம் மௌனித்து சரணடைந்த அண்ணாவையள் & அக்காவையளில் ஆயிரத்தி எழுநூற்றிச் சொச்சம் பேர் ஏ1 தர குற்றவாளிகள் (ஏ2 பதினோராயிரத்துச் சொச்சம்) என்று சிங்களம் வெளியிட்டதாக ஒரு செய்திக் குறிப்பு 2015 ஆம் ஆண்டு தமிழ்வின்னில் வாசித்தனான். இந்த ஏ1 ஆக்கள் ஆரெண்டால் எமது கட்டளையாளர்கள். 

இவர்களில் சிலபேர் சிறீலங்காவிற்கான புலனாய்வுப் பொறுப்பாளர்மார். அங்க நடந்த கரும்புலித் தாக்குதல்களின் போது தவிர்க்க முடியாத சமயங்களில் அருந்தப்பாக சில பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அப்படியான தாக்குதல்களுக்கு தலைமைதாங்கியோர் அல்லது கரும்புலிகளுக்கு சேமர்களாக(Escorts) சென்றோர் அல்லது வன்னியில் இருந்த புலனாய்வு உறுப்பினர்கள் போன்ற அண்ணாக்களை சிங்களவர் பிடிச்சு வைத்திருக்கிறாங்கள் (மொரிஸ் அண்ணா(2009 ஓகஸ்ற்) - இவரை உயிரோட வைத்திருக்கிறானா என்று தெரியவில்லை. ஆனால் இவர் போன்றோர் சில பேர் அவனிடம் உள்ளனர்). இவர்களை நிறுத்தினால் நாம் என்ன செய்ய? 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

சிறையில இருக்கிற 11 ஆயிரத்துச் சொச்சம் பேரில ஆரையேனும் தெரிந்தெடுத்து போர்க்குற்றவாளிகள் என்று நிப்பட்டினான் என்டால் என்ன செய்ய?

செய்யலாம். ஆனால் கட்டளையிடும்  உச்ச பதவியில் இருந்தவர்கள்தான் பொதுவாக குற்றம்சாட்டபடுவார்கள். ஏனையோர் சாட்சிகளாகவே கருதப்படுவர், உள்நாட்டு சட்ட பொறிமுறையின் கீழ் கிரிமினல் வழக்குகளுக்கு தண்டிக்கப்படுவர்.

ஆனால் இவர்கள் சாட்சிகளக விசாரிக்கபடுவர் என்றே நினைக்கிறேன். 

ஒரு விசாரணை அமையும் போது அதன் எல்லைகளை பார்த்துதான் முடிவாக சொல்ல முடியும், ஆனால் என் அறிவுக்கு எட்டியவரை ஒரு விசாரணை நடந்தால், இரு தரப்பின் மீதான குற்றங்களும் விசாரிக்கப்படு, தீர்ப்பு வழங்கப்படும் என்றே நினைக்கிறேன். ஆனால் ஒரு தரப்பில் குற்றங்களை ஆணையிட்டு வழிநடத்திய யாரும் இல்லை என்பதால், 2ம், 3’ம் கட்ட தளபதிகள் உள்நாட்டு பொறிமுறையில் தண்டிக்கபடவே (ஏலவே தண்டிக்கபடவாவிட்டால்) வாய்ப்பு அதிகம்.

எல்லாம் ஊகம்தான் - இப்படி ஒரு விசாரணையே நடவாது என்பதே நான் நினைப்பது.  

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளையும், அரசையும் எவ்வாறு ஒரு கோட்டில் வைக்கலாம்? ஒரு இறைமையுள்ள (சொல்லிக்கொள்கிறார்கள்) அரசு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும், எப்படி பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் அந்நிய நாட்டோடு போர் செய்வதுபோல் செய்து சொந்தமக்களை கொன்று நாட்டையும் அந்நியனிடம் அடகு வைத்ததுதான் கண்ட மிச்சம். 

அண்மையில் ஓர் செய்தி வாசிச்சேன். வெளிநாடொன்றில் ஒருவர் தன் நண்பனை கொலை செய்துவிட்டார். கொலைகாரனை போலீசார் தேடும் பொழுது, அவர் தானாகவே சென்று சரணடைந்ததோடு தான் கொலை செய்ததற்கான காரணத்தையும் சொன்னார். அதாவது தானும் நண்பனும் மது அருந்தி விட்டு இருவரும் தூங்கி விட்டோம். நான் இடையில் விழித்தெழுந்தேன். நண்பனின் தொலைபேசி அருகில் இருந்ததால் அதை எடுத்து பார்த்தபோது, அதில் என் நண்பன் என் மகளை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான், என்மகள் அவனிடம் இருந்து தப்பியோடுவதும், இன்னும் பல பெண்களை அவன் அவ்வாறு செய்த படங்களும் இருந்தபடியால் கோபங்கொண்டு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அந்த நாட்டு மக்களோ, அவர் நல்லதுதான் செய்திருக்கிறார், அவரை தண்டிக்கக்கூடாது என்று வாதிடுகின்றனர். நாம் மட்டும் ஏன் இப்படி?

இங்கு புலிகளை விசாரிக்க வேண்டும் என்று எவரும் கூறவில்லை. ஆனால் விசாரணை என்று வந்தால் இரு பகுதியும் விசாரிக்கப்படுவது  இயல்பு என்ற உண்மையைக் கூறினால் எல்லோருக்கும் ஏன் கோபம் வருகிறதோ தெரியவில்லை. யுத்தக் குற்றங்களை அதிகம் இழைத்தவர்கள் ஶ்ரீலங்கா அரச படையினரே. ஆகவே யுத்த குற்றங்கள் சர்வதேச விசாரணை என று வந்து இரு பகுதியினரும் விசாரிக்கப்பட்டு இரு பகுதியினரிலும் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டாலோ அல்லது  யுத்தக்குற்றங்கள் இளைத்தவர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டலோ அதன் மூலம் நன்மை  அடையப்போவது  தமிழ் மக்களே. 

கருணா, பிள்ளையான் போன்றோர் புலிகளில் இருந்த காலத்தில்(1987) நடந்த அரந்தலாவ பிக்குகள் உட்பட 33 பேரின் கொலைக்கு கருணாவை தண்டிக்க வேண்டும் என்று இங்கு கூறுபவர்கள் கருணா பிள்ளையான் தொடந்து புலிகளில் இருந்திருந்தால் அவ்வாறு கூறி இருக்க மாட்டார்கள்.

சரணடைந்த போராளிகளை சுட்டுக்கொன்றது கோத்தபாயவின் ஈனச்செயல் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் 1990 ல் ஆயுதமின்றி சரணடைந்த 600 பொலிசாரை சுட்டு கொலை செய்த (கோட்டபாயவின்  செயலையொட்டிய) செயல்  தமிழரின்  விடுதலைப் போராட்டத்திற்கு செய்த நன்மையை விட தீமையே அதிகம் என்பதை தற்போதைய தமிழ் தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கும் கருணாவை மட்டும் பலிக்கடா ஆக்கி விட்டு  நகருவதே தமிழ் தேசியம் என்றால் அத்தைகைய தமிழ் தேசிய கொள்கைகள் தான் தமிழ் மக்களின் இன்றைய துன்ப நிலைக்கும் தோல்விக்குமான காரணங்களில் ஒன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, tulpen said:

ஆயுதமின்றி சரணடைந்த 600 பொலிசாரை சுட்டு கொலை செய்த

ஒரே நேரத்தில் 600  போலீசார் சரணடைந்தனரா? எங்கே?  எவ்வாறு போலீசாரிடம் ஆயுதம் இல்லாமற் போனது? 

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, goshan_che said:

ஒரு தரப்பில் குற்றங்களை ஆணையிட்டு வழிநடத்திய யாரும் இல்லை என்பதால், 2ம், 3’ம் கட்ட தளபதிகள் உள்நாட்டு பொறிமுறையில் தண்டிக்கபடவே (ஏலவே தண்டிக்கபடவாவிட்டால்) வாய்ப்பு அதிகம்.

எல்லாம் ஊகம்தான் - இப்படி ஒரு விசாரணையே நடவாது என்பதே நான் நினைப்பது.  

தண்டனை என்று சிங்கள நீதிமன்றுகள் எம்மவர்கு தீர்ப்பு வழங்கினால் 200, 300 ஆண்டுகள் சிறை தண்டனை என்று சட்டத்தில் இல்லாத ஆண்டுகள் அல்லவா வழங்கப்படும். இப்போது செய்து கொண்டிருக்கும் சித்திரவதையினை அவர்களின் ஆயுட்காலம் வரை தொடர்வான், சிங்களவன். ஈவிரக்கம் அற்றவன்!

அந்த ஐநா உசாவல் நடக்கும் என்பது என்னுடைய 50-50 நம்பிக்கை. எப்படியெனில் காலமுனியின் அந்த புத்தகம்... 

12 minutes ago, satan said:

ஒரே நேரத்தில் 600  போலீசார் சரணடைந்தனரா? எங்கே?  எவ்வாறு போலீசாரிடம் ஆயுதம் இல்லாமற் போனது? 

மட்டக்களப்பில் 90ஆம் ஆண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

ஒரே நேரத்தில் 600  போலீசார் சரணடைந்தனரா? எங்கே?  எவ்வாறு போலீசாரிடம் ஆயுதம் இல்லாமற் போனது? 

இதன் உண்மைதன்மை தெரியவில்லை ஆனால் 90ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் முடிந்தது கிழக்கில். அங்கேதான் முதல் முறுகல் உருவாகி அது பின் வடக்குக்கு பரவியது.

இந்த நாட்களில் ஏ சி எஸ் ஹமீட் பலாலிக்கு வந்து, பேச்சுக்கு வரும் வழியில் துப்பாக்கி சூடு நடந்து அவர் அரும்பொட்டில் தப்பினார்.

முறுகல் ஆரம்பித்த பின், யுத்தம் வெடிக்க முன்னான சில நாட்களில் பல பொலீஸ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்ட போது, யுத்தம் வராது என கருதிய பொலீசார் சரணடந்தனர் என அப்போது கேள்விப்பட்டேன். 

17 minutes ago, நன்னிச் சோழன் said:

தண்டனை என்று சிங்கள நீதிமன்றுகள் எம்மவர்கு தீர்ப்பு வழங்கினால் 200, 300 ஆண்டுகள் சிறை தண்டனை என்று சட்டத்தில் இல்லாத ஆண்டுகள் அல்லவா வழங்கப்படும். இப்போது செய்து கொண்டிருக்கும் சித்திரவதையினை அவர்களின் ஆயுட்காலம் வரை தொடர்வான், சிங்களவன். ஈவிரக்கம் அற்றவன்!

அந்த ஐநா உசாவல் நடக்கும் என்பது என்னுடைய 50-50 நம்பிக்கை. எப்படியெனில் காலமுனியின் அந்த புத்தகம்... 

மட்டக்களப்பில் 90ஆம் ஆண்டு.

எனக்கு 10% கூட நம்பிக்கை இல்லை.

4 hours ago, satan said:

ஒரே நேரத்தில் 600  போலீசார் சரணடைந்தனரா? எங்கே?  எவ்வாறு போலீசாரிடம் ஆயுதம் இல்லாமற் போனது? 

இது நடந்தது 1990 ம் ஆண்டு. இது நடந்த போது பேச்சுவார்ததை முழுமையாக முறிவடையவில்லை. ஹமீட் பலாலி சென்று பேச்சுவார்த்தைகள் முறிவடையாமல் இருப்பதற்கான விசேட பேச்சுவார்ததையில் ஈடுபட்டார்.  இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள்  பிரேமதாசவின்  பணிப்புக்கமையவே ( பேச்சுகள் தொடரும் என்ற நம்பிக்கையில்)   ஆயுதங்களை புலிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர்.

இந்த சம்பவமும்  தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு அரசியல் ரீதியான பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக் கொள்வதென்பது ஶ்ரீலங்கா அரசின் இனப்படுகொலையை மறுப்பதாகாது. 

Edited by tulpen
இலக்கணப் பிழை திருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளில்  விசாரிப்பதற்கு ஒருத்தரும்  இல்லையா...ஒருத்தரும் இல்லாத நிலையில்  புலிகளுக்கு தடை போட்டு விட்டார்கள் என்று ஏன் கதறுகிறீர்கள் ...புலிகள் தான் மக்கள் . மக்கள் தான் புலிகள் என்றால்  புலிகளுக்கான தண்டனையை நீங்கள் ஏற்க தயாரா?
மகிந்தா சகோதரர்கள் இறந்த பின் சர்தேச நீதிமன்றம் அவர்களை குற்றவாளி என்று சொன்னால் எப்படி நன்றி சொல்லி ஏற்றுக் கொள்வோமோ அதை மாதிரி புலிகள் இல்லாதவிடத்து அவர்கள் குற்றவாளி என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நன்னிச் சோழன் said:

சிறையில இருக்கிற 11 ஆயிரத்துச் சொச்சம் பேரில ஆரையேனும் தெரிந்தெடுத்து போர்க்குற்றவாளிகள் என்று நிப்பட்டினான் என்டால் என்ன செய்ய?

சர்வதேச விசாரணை என்று வந்தால் இவர்கள் தான் முதல் விசாரிக்கப்படுவார்கள் ...தலைவர் சொல்லி செய்தேன், தளபதி சொல்லி செய்தேன் என்று சப்பை கட்டு கட்ட முடியாது ....ஏன் உனக்கு  சொந்த புத்தி இல்லையா  என்று கேட்பார்கள் ...எங்கள் மக்களுக்காய் தான் இதெல்லாம் என்றால், ஏன் அந்த மக்களுக்கே  துன்பம் விளைவித்தீர்கள் என்று கேட்பார்கள்...தலைமைக்கு பயத்தில் தான் செய்தனான் என்று சொன்னாலோ அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள தலைமை பலவந்தமாய் பிடித்து போய் பயிற்சி கொடுத்தது என்று சொன்னால் யாருக்கு நட்டம் 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.