Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரி­பொ­ருளை கட­னா­கத் தரு­வீர்­களா? பேச்சை ஆரம்­பித்­தது அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையை விட மோசமா லைன் நிற்குது

தேவையற்ற பீதி டொய்லெட் ரோல் வாங்கிய கதை போல் இங்கு 

  • Replies 253
  • Views 19.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

தேவையற்ற பீதி டொய்லெட் ரோல் வாங்கிய கதை போல் இங்கு 

கொரோனாவால்…  உலகம் முழுக்க, அடிபட்டு ரொய்லற் பேப்பர் வாங்கி, அடுக்கிய பகிடியை மறக்க முடியாது. 😜

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கொரோனாவால்…  உலகம் முழுக்க, அடிபட்டு ரொய்லற் பேப்பர் வாங்கி, அடுக்கிய பகிடியை மறக்க முடியாது. 😜

பெற்றோல் இருக்கு அதை விநியோக இடத்துக்கு கொண்டு செல்ல அதற்குரிய வாகன ஓட்டிகள் இல்லை என்கிறார்கள் அவர்கள் சொல்லும் காரணம்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை .

சுற்று சூழல் பாதுகாப்பு காரணமாக அநேக வாகனம்கள் பாதியாகவோ  அல்லது முழுமையாகவோ மின்சாரமாகி விட்டன அதனால் ஏற்பட்ட இழப்புக்கு BP போன்ற நிறுவனம் செய்யும் செயற்கையான பிரச்சனை என்பது பலரின் அனுமானம் .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

நேரத்தை  மினக்கெடுத்தாமல்

றைவர் வேலைக்கு  எழுதிப்போடுங்க  ராசா

நானோ அண்ண எனக்கு மோட்டார்சைக்கிளை தவிர வேறு வாகனங்கள் ஓட்ட தெரியாது .😒

12 hours ago, goshan_che said:

இது வேற பிரச்சனை தனி. எண்ணை உண்டு, ரைவர் இல்லை.

ஓகோ தகவலுக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

பெற்றோல் இருக்கு அதை விநியோக இடத்துக்கு கொண்டு செல்ல அதற்குரிய வாகன ஓட்டிகள் இல்லை என்கிறார்கள் அவர்கள் சொல்லும் காரணம்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை .

சுற்று சூழல் பாதுகாப்பு காரணமாக அநேக வாகனம்கள் பாதியாகவோ  அல்லது முழுமையாகவோ மின்சாரமாகி விட்டன அதனால் ஏற்பட்ட இழப்புக்கு BP போன்ற நிறுவனம் செய்யும் செயற்கையான பிரச்சனை என்பது பலரின் அனுமானம் .

அது தானே… இவ்வளவு நாளும், வாகனம் ஓடிய சாரதிகள் எல்லாம்… ஒரேயடியாய் வேலையை விட்டுவிட்டு போன மாதிரி கதை சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அது தானே… இவ்வளவு நாளும், வாகனம் ஓடிய சாரதிகள் எல்லாம்… ஒரேயடியாய் வேலையை விட்டுவிட்டு போன மாதிரி கதை சொல்கிறார்கள்.

அதை விட வெள்ளைகளின் கூத்து ஒருபக்கம் பாருங்கள் .வயது கட்டுப்பாடு இருப்பதால் 18 வயதுக்கு மேல் என்று உறுதிப்படுத்திய பின்பே காணொளியை பார்க்கலாம் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானிய அரசு மேற்கொண்ட IR35 என்ற வரி மாற்றம் காரணமாகவே பாரவூர்தி ஓட்டிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலைக்கும் ஐரோப்பிய வெளியேற்றத்திற்கும் தொடர்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானிய அரசு மேற்கொண்ட IR35 என்ற வரி மாற்றம் காரணமாகவே பாரவூர்தி ஓட்டிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலைக்கும் ஐரோப்பிய வெளியேற்றத்திற்கும் தொடர்பில்லை.

உண்மை அதுதான் இரண்டாவது பெர்லோ எனப்படும் அரச மானியம் பலரை சோம்பேறிகள் ஆக்கி உள்ளது. இந்த பெர்லோ வால்  அதிக பயனடைந்தது இங்குள்ள வட இந்திய முதலாளிகள்தான் பலருக்கு பெர்லோ போன்ற  திட்டம் வரப்போவது முன்பே தெரிந்து உள்ளது .மூன்றாவது பார ஊர்தி ஓடுவதில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள்  இங்கிலாந்தில் பார ஊர்தி லைசன்ஸ் எடுப்பது குதிரை கொம்பு போன்றது .

இங்கிலாந்து அரசால் IR 35 வந்தபின் பலர் பார ஊர்தி ஓடுவதை நிறுத்தி வேறு தொழில்களுக்கு மாறி விட்டனர் .தற்போது உள்ள பார ஊர்தி ஓட்டுநர்களில் மூன்றில் இரண்டு பங்கு 50 வயதை தாண்டியவர்கள் என்கிறார்கள் . மொத்தத்தில் அரசு தவறான நடவடிக்கை காரணமாக எழுந்துள்ள பிரச்சனை பெற்றோல் உடன் நிக்காது வாகன ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக வரும்  X மஸ் க்கு கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடு பாரியளவில் இருக்கும் என்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோல் பாவம்கள்..👍

கோபி- சுதாகர் அலப்புகள்..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

பைப் தண்ணியை குடிச்சாலும் உந்த பிரிட்டிஷ்காரங்கள் விட்டுக்குடுக்காங்கள்....றோயல் பைமிலி ரத்தம் எல்லாரிலையும் ஓடுது ...🤣

நீங்கள் போத்தல் தண்ணீர் தான் குடிக்கிறீங்களோ😊

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2021 at 17:11, தனிக்காட்டு ராஜா said:

லண்டனிலையும் லைன்ல நிற்கிறாங்களே அங்கும் தட்டுப்பாடா?? 

இங்கிலாந்தில் Brexit பிறகு கனரக வாகன ஓட்டுநர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.100000 கனரக சாரதிகள் தேவை.  தற்காலிக அவசர விசா கொடப்பதற்கும் தீர்மானித்துள்ளது. எற்கட அட்கள் Brexit வாக்களிச்வை. கன பெர் எரிபொருள் நிலையத்தில் வேலை செய்கின்றனர். 3 மதாங்களுக்குள்ளெயே ஆட்டம் கண்ட விட்டது. பெற்றொல்நிலையத்திற்கு பெற்றோல் வழங்கல் இல்லாமையால் பல நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. யானை தன் தலையில் தானே மண் அள்ளித் தூற்றுமாம். அறிவு பூர்வமாகச் சிந்திக்னாமல் உணர்வுபூர்வமாக வாக்க்களித்து விட்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக்கிடந்தால் கிழக்க ஐரோப்பியர்கள் கடின உழைப்பாளிகள். அவர்களைப் போகச் சொல்லி விட்டு இப்ப   நாறுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Hauliers' reasons for driver shortage Percentage selecting each reason in survey multiple answers allowed Drivers retiring UK leaving EU IR35* Drivers going to another industry Pay rates Covid-19 Other 0% 20% 40% *Recent changes have been made to off-payroll working rules, known as IR35 Source: Road Haulage Association survey, 615 responses 60%'

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அறிவு பூர்வமாகச் சிந்திக்னாமல் உணர்வுபூர்வமாக வாக்க்களித்து விட்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக்கிடந்தால் கிழக்க ஐரோப்பியர்கள் கடின உழைப்பாளிகள். அவர்களைப் போகச் சொல்லி விட்டு இப்ப   நாறுகினம்.

கிழக்கு ஐரோப்பிய வாகன ஓட்டுநர் விலகல் 14 ஆயிரம் மட்டுமே ஆனால் மொத்த தேவை 90ஆயிரம் டிரைவர் வெளியில் இந்த 90 ல் கிழக்கு ஐரோப்பியர் 14 ஆயிரம் புரிந்து கொள்ளுங்க  பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

E5,E10 எண்டு மாத்தினது தான் பிரச்சனை  , பெயர் ராசியில்லை😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நந்தன் said:

E5,E10 எண்டு மாத்தினது தான் பிரச்சனை  , பெயர் ராசியில்லை😁

மாத்தின கதை இருங்கட்டும் ஏதும் வேலை எடுக்கலாமா அத சொல்லுங்க  செய்திட்டு ஊருல வந்து செட்டிலாகிறமாதிரி🧐🧐🧐

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, பெருமாள் said:

கிழக்கு ஐரோப்பிய வாகன ஓட்டுநர் விலகல் 14 ஆயிரம் மட்டுமே ஆனால் மொத்த தேவை 90ஆயிரம் டிரைவர் வெளியில் இந்த 90 ல் கிழக்கு ஐரோப்பியர் 14 ஆயிரம் புரிந்து கொள்ளுங்க  பாஸ் .

ஐரோப்பிய யூனியன் விலகலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் விசா சட்டங்களுமே இந்த பிரச்சனைக்கு காரணமென இன்று ஜேர்மனிய வானொலி செய்தி ஒன்றில் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

ஐரோப்பிய யூனியன் விலகலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் விசா சட்டங்களுமே இந்த பிரச்சனைக்கு காரணமென இன்று ஜேர்மனிய வானொலி செய்தி ஒன்றில் சொன்னார்கள்.

பிரான்சிலும்  இதையே தொலைக்காட்சி செய்திகளில்  சொல்கிறார்கள்

தூரப்பார்வையற்ற அரசியலின்  அறுவடை

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

(ஜேர்மனியிலும் பிரான்சிலும்) ஊடகங்களில் இப்படி சொல்லி ஆறுதல் அடைய வேண்டியது தான்.

ஏதோ ஐரோப்பியவிலிருந்து வந்து திரும்பியவர்கள் எல்லாரும் fuel tanker ஓடியது போல் அல்லவா உள்ளது.

உண்மையான பிரச்சனை IR 35.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

(ஜேர்மனியிலும் பிரான்சிலும்) ஊடகங்களில் இப்படி சொல்லி ஆறுதல் அடைய வேண்டியது தான்.

ஏதோ ஐரோப்பியவிலிருந்து வந்து திரும்பியவர்கள் எல்லாரும் fuel tanker ஓடியது போல் அல்லவா உள்ளது.

உண்மையான பிரச்சனை IR 35.

பிரச்சனை IR 35.

கொஞ்சம் புரியும்படியாக  சொல்லலாமே ....???

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, MEERA said:

(ஜேர்மனியிலும் பிரான்சிலும்) ஊடகங்களில் இப்படி சொல்லி ஆறுதல் அடைய வேண்டியது தான்.

ஏதோ ஐரோப்பியவிலிருந்து வந்து திரும்பியவர்கள் எல்லாரும் fuel tanker ஓடியது போல் அல்லவா உள்ளது.

உண்மையான பிரச்சனை IR 35.

90ஆயிரம் வெற்றிடம் ஐரோப்பா பிரிந்ததால் 14 ஆயிரம் கிழக்கு ஐரோப்பியரே வெளியேற்றம் மிகுதி 76 ஆயிரம் ஏன் வேலையில்  இருந்து காணாமல் போனார்கள் என்ற கேள்வியின் விடையை தேடினால் யதார்த்தம் புரியும் .

இங்கு அரசுக்கு கணக்கு காட்டி  வேலை செய்பவர்களுக்கு மரியாதை கிடையாது.சாதாரண காய்ச்சலுக்கு குடும்ப வைத்தியரிடம் போனால் பனடோல் போன்ற குளுசை எழுத வேண்டாம் நாங்களே வாங்கி கொள்கிரம் என்று கெஞ்ச வேண்டி உள்ளது காரணம் வைத்தியரின் துண்டு மூலம் பெறப்படும் குளுசை சாதாரண பெறுமதி  இரண்டு பவுன் அதையே வைத்தியரின் துண்டு மூலம்  வாங்கினால்  9.0 பவுன் கொடுக்கும் அவலம் ஆனால் வேலை வெட்டிக்கு போகாமல் சோம்பேறி கூட்டத்துக்கு எல்லாமே இலவசம்   இன்னும் வேலை சொந்த தொழில் செய்பவர்களிடம்  பிடுங்கவே நிக்கிறார்கள் அதை விட டாக்ஸ் கிரெடிட் மானியம் லண்டன் நகருக்குள் இருப்பவர்களுக்கு இல்லை என்றால் பாதி லண்டன் சனம்  அவுட் ஒப்  லண்டனுக்கு ஓடிவிடும் அப்படி நிலைமை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

பிரச்சனை IR 35.

கொஞ்சம் புரியும்படியாக  சொல்லலாமே ....???

இங்கு£50,200 க்கு மேல் வருமானம் வந்தால் குடும்பத்துக்கு 40 வீத வரி அதனால் சாதாரண கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உழைத்தால் பார ஊர்தி அடிப்படை சம்பளமே 40 ஆயிரம் வருடத்துக்கு +மனைவியின்  சம்பளம் 30 என்றால் வருடத்துக்கு 70 ஆகிடும் இதில் 50 க்கு மேல் வரும் வருவாய்க்கு 40 வீத வரி அடிப்பார்கள் அதனால் கொன்ராக்ட்  சொந்த தொழில் என்று காட்டி விட்டு போக்குவரத்து க்கு ஏற்படும் சிலவுகள் வாகன எரிபொருள் பிள்ளைகளின் தனியார் பள்ளிக்கூட சிலவுகள் போன்றவற்றை காட்டி சரிப்படுத்தி அதிக வரி விதிப்பில் இருந்து விடுபடுதல் இது உலகம் முழுக்க உள்ள சாதாரண முறை இவர்கள் IR 35 மூலம் கொன்ராக்ட் மூலம் வேலைசெய்பவர்கள் சாதராண நடைமுறை வேலை செய்பவர் போல் கருதப்பட்டு வரி விதிக்கப்படும்  என்றவுடன்  பலர் வேலைக்கு டாட்டா காட்டி விட்டார்கள் இது வாகன பார ஊர்தி ஓட்டிகள்தான் முதல் பலிகடா இன்னும் பிரச்சனை வேறு பலதுறைகளில் இருக்கு பூதம் எப்ப கிளம்பும் என்று தெரியாது .

(இலகுவாக விளங்கப்படுத்த இப்படி எழுதுகிறேன் not selfemployment அவர்கள் குழம்ப தேவையில்லை ) இந்த @Nathamuni எங்குபோனாரென்று  தெரியவில்லை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

90ஆயிரம் வெற்றிடம் ஐரோப்பா பிரிந்ததால் 14 ஆயிரம் கிழக்கு ஐரோப்பியரே வெளியேற்றம் மிகுதி 76 ஆயிரம் ஏன் வேலையில்  இருந்து காணாமல் போனார்கள் என்ற கேள்வியின் விடையை தேடினால் யதார்த்தம் புரியும் .

இங்கு அரசுக்கு கணக்கு காட்டி  வேலை செய்பவர்களுக்கு மரியாதை கிடையாது.சாதாரண காய்ச்சலுக்கு குடும்ப வைத்தியரிடம் போனால் பனடோல் போன்ற குளுசை எழுத வேண்டாம் நாங்களே வாங்கி கொள்கிரம் என்று கெஞ்ச வேண்டி உள்ளது காரணம் வைத்தியரின் துண்டு மூலம் பெறப்படும் குளுசை சாதாரண பெறுமதி  இரண்டு பவுன் அதையே வைத்தியரின் துண்டு மூலம்  வாங்கினால்  9.0 பவுன் கொடுக்கும் அவலம் ஆனால் வேலை வெட்டிக்கு போகாமல் சோம்பேறி கூட்டத்துக்கு எல்லாமே இலவசம்   இன்னும் வேலை சொந்த தொழில் செய்பவர்களிடம்  பிடுங்கவே நிக்கிறார்கள் அதை விட டாக்ஸ் கிரெடிட் மானியம் லண்டன் நகருக்குள் இருப்பவர்களுக்கு இல்லை என்றால் பாதி லண்டன் சனம்  அவுட் ஒப்  லண்டனுக்கு ஓடிவிடும் அப்படி நிலைமை .

இது  இங்கும் உள்ள பிரச்சினை  தானே??
திருடனாக  பார்த்து  திருந்தாவிட்டால்????

  • கருத்துக்கள உறவுகள்

காய்ந்து போயிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் எரிநெய் விற்பனைத் தலங்களுக்கு உதவ 10,500 சாரதி விசாக்கள். விசாக்கள்.

கடந்த வாரம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் உலவிவந்த முக்கிய செய்திகளிலொன்றாக விளங்கியது ஐக்கிய ராச்சியத்தில் எழுந்திருக்கும் பாரவண்டிச் சாரதிகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு. எரிபொருட்களைக் காவிச்செல்லும் கொள்கல வண்டிச் சாரதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு நாடெங்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை உண்டாக்கிப் பெருமளவில் வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது.

அதன் பின்னணிக்கு முக்கிய காரணமாக பிரெக்ஸிட் கட்டுப்பாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஐரோப்பாவின் தொழிலாளிகள் முன்பு போல ஐக்கிய ராச்சியத்தில் தொழில் விசாவின்றி வேலை செய்ய முடியாது. ஐக்கிய ராச்சித்தின் கொவிட் 19 கட்டுப்பாடுகள், வயதாகிவரும் தொழிலாளர்கள் ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கின்றன.

திங்களன்று காலையிலும் ஐக்கிய ராச்சியத்தின் பல பகுதிகளிலும் எரிநெய் போட்டுக்கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அத்தட்டுப்பாடானது பக்க விளைவுகளாக உணவுகளைக் காவிச்செல்லும் பாரவண்டிகளையும் முடக்கியதால் நாட்டில் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாட்டை உண்டாக்கியிருக்கிறது.

ஐக்கிய ராச்சியத்தில் எரிநெய் விற்பனை நிலையங்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் பலவும் ஞாயிறன்றே தமது நிலையங்களில் மூன்றிரண்டு பங்கு முதல் 90 விகிதமானவை வெறுமையாகிவிட்டதாகக் குறிப்பிடுகின்றன.

ஐக்கிய ராச்சியத்தின் அரசு தனது கணிப்பீடுகளுக்கு உள்ளாகாத இந்த அவசர நிலைமையைக் கையாளப் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதாகியிருக்கின்றது. அவைகளிலொன்றாக குடிவரவுக் காரியாலயம் மூலமாக பாரவண்டிச் சாரதிகள் உட்பட்ட அவசிய தொழிலாளர்களை ஈர்க்க 10,500 விசாக்களைக் கொடுக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. தவிர நாட்டில் வேலையின்றி வேறு துறையில் இருப்பவர்களுக்கு பயிற்சியளித்துத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சேவைகளில் வேலைகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்களும் அறிமுகப்படவிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

https://vetrinadai.com/

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இங்கு£50,200 க்கு மேல் வருமானம் வந்தால் குடும்பத்துக்கு 40 வீத வரி அதனால் சாதாரண கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உழைத்தால் பார ஊர்தி அடிப்படை சம்பளமே 40 ஆயிரம் வருடத்துக்கு +மனைவியின்  சம்பளம் 30 என்றால் வருடத்துக்கு 70 ஆகிடும் இதில் 50 க்கு மேல் வரும் வருவாய்க்கு 40 வீத வரி அடிப்பார்கள் அதனால் கொன்ராக்ட்  சொந்த தொழில் என்று காட்டி விட்டு போக்குவரத்து க்கு ஏற்படும் சிலவுகள் வாகன எரிபொருள் பிள்ளைகளின் தனியார் பள்ளிக்கூட சிலவுகள் போன்றவற்றை காட்டி சரிப்படுத்தி அதிக வரி விதிப்பில் இருந்து விடுபடுதல் இது உலகம் முழுக்க உள்ள சாதாரண முறை இவர்கள் IR 35 மூலம் கொன்ராக்ட் மூலம் வேலைசெய்பவர்கள் சாதராண நடைமுறை வேலை செய்பவர் போல் கருதப்பட்டு வரி விதிக்கப்படும்  என்றவுடன்  பலர் வேலைக்கு டாட்டா காட்டி விட்டார்கள் இது வாகன பார ஊர்தி ஓட்டிகள்தான் முதல் பலிகடா இன்னும் பிரச்சனை வேறு பலதுறைகளில் இருக்கு பூதம் எப்ப கிளம்பும் என்று தெரியாது .

(இலகுவாக விளங்கப்படுத்த இப்படி எழுதுகிறேன் )

இது உலகம்  முழுக்க நடப்பது  தானே??

எமத  அடுத்த  தலைமுறையினர்  இதற்குள்  வந்து  விட்டார்கள்

அதற்காக  வேலையை விடுவது??

வேலை நிறுத்தம்  செய்வது??  தான் புரிந்த  கொள்ளமுடியாதுள்ளது?

மேலும் இந்த வேலை  நிறுத்தத்துக்கு ஐரோப்பியர்கள் வெளிறேியதும்

இனி  அவர்கள்  வரமாட்டார்கள்  என்ற நம்பிக்கையும்  ஒரு  உந்துதுல் தானே????

நன்றி சகோ  தகவலுக்கும்  நேரத்துக்கும்...

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இது உலகம்  முழுக்க நடப்பது  தானே??

எமத  அடுத்த  தலைமுறையினர்  இதற்குள்  வந்து  விட்டார்கள்

அதற்காக  வேலையை விடுவது??

வேலை நிறுத்தம்  செய்வது??  தான் புரிந்த  கொள்ளமுடியாதுள்ளது?

நன்றி சகோ  தகவலுக்கும்  நேரத்துக்கும்

வேலை நிறுத்தம் அல்ல வேறு வேலைகளுக்கு மாறி விட்டார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.