Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்நாள் பாடலைப் பாடிய வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வைக்கு

Sunday, 10 Oct 2021 6:00 PM - 9:00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு

Monday, 11 Oct 2021 8:00 AM - 8:30 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

Monday, 11 Oct 2021 8:30 AM - 10:00 AM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

Monday, 11 Oct 2021 10:30 AM - 11:00 AM

Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

 

https://ripbook.com/rameswaran-varnakulasingam-61521567a4910/notice/obituary-6152163183d32

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்  

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தழிழீழ இசைமகன் வர்ணராமேஸ்வரனுக்கு விடுதலைப்புலிகள் இரங்கல்.

C9BBE31E-A7CF-4DFF-9418-D8DB2E963D60.jpe

தழிழீழ இசைமகன் வர்ணராமேஸ்வரனுக்கு விடுதலைப்புலிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ இசைமகன் வர்ணராமேஸ்வரன் அமரர் இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் இரங்கல் அறிக்கை . தமிழீழ இசைமகன் கலைமாமணி அமரர் வர்ணராமேஸ்வரன் மறைவு எம் நெஞ்சை அழுத்துகிறது . சிறந்த சமூக அக்கறையாளர் , தேசபக்தர் , இனப்பற்றாளர் , கலைக்காவலன் முக்கியமாகத் தமிழீழத்தின் தலையான இசைக் கலைஞர்களில் ஒருவரும் , எல்லோராலும் வர்ணராமேஸ்வரன் என அறியப்பட்டவர் . இவரின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் , வேதனையும் அடைகிறோம் . மிக அற்புதமான குரல் வளத்தால் எம்மை ஆட்கொண்ட ஓர் இசைமகனைத் தமிழர் தேசம் இன்று இழந்து தவிக்கிறது . இவரது இழப்பு தமிழீழ இசைப் பரப்பில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர் . இவர் சிறந்த பாடகர் கவிஞர் , மிருதங்க கலாவித்தகர் , இசையமைப்பாளர் , குரல் வள நிபுணர் என இசைத்துறையில் பாண்டித்தியம் பெற்றவர் . இசைத்துறைசார் பாண்டித்தியம் பெற்ற பெரும் எம்மவர் தம் சுயத்துக்காக உழைத்துக் கொண்டிருக்க , இவர் போன்ற ஒரு சிலரே தமிழீழ விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்கும் ஆயுதமாகத் தம்குரலையும் , தாம் பயின்ற கலையையும் அர்ப்பணித்தார் கள் . பல தாயக விடுதலைப் பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரராகிய இவரின் இனிமையான குரல் எம்மவர்கள் பலரின் உள்ளத்தை உருக்கி , தாயக விடுதலைப் போரில் பங்கெடுக்க உந்தியதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள் .

பாலான குறிப்பாக மாவீரர் நாளில் ஒலிக்கும் துயிலுமில்லப் பாடலாகிய தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே ” என்ற பாடல் எங்கள் நெஞ்சத்தை நெகிழ்ந்துருக வைத்துக் கண்ணீர் மழை பொழிய வைக்கும் அளவிற்கு அவரது குரல் வசீகரமானது . முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின் தானே எழுதி இசையமைத்துப் பாடிய ” எப்படித் தங்குவதோ இறைவா எத்தனை கொடுமைகள் ஈழத்தில் தொடர்கையில் எப்படித் தூங்குவதோ தமிழர் நாம் எப்படித் தூங்குவதோ ? ” , அதன்பின் கனடாவில் வெளிவந்த ” மறந்து போகுமோ மண்ணின் வாசனை தொலைந்து போகுமோ தூர தேசத்தில் ” போன்ற பாடல்களிலிருந்து இவர் இனம்மீது கொண்ட அக்கறையின் அளவை நாம் உணர்ந்து கொள்கிறோம் . மேலும் தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றி , இவர் பாடிய பக்திப் பாடல்கள் எமது வாழ்க்கையில் நாம் கேட்டிருக்காத வித்தியாசமானதோர் பரிமாணம் கொண்டவை .

கலை புலம் பெயர்ந்து கனடா வந்தபின் , சமூக அக்கறையோடு பயணிக்கும் அனைவருக்கும் தோள்கொடுத்ததோடு , தான் கற்றறிந்த எமது பண்பாடுகளை , அடுத்த தலைமுறைக்குப் பழுதின்றி கையளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு கனடாவில் ” வர்ணம் இசைத் தொழில்நுட்பப் பாடசாலைகள் நிறுவி ” தமது எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்தார் . இப்படியாக ஈழத் தமிழர் இதயங்களில் இசையால் புரட்சி செய்து வந்த தமிழீழ இசைமகன் , எம் இனத்திற்கு ஆற்றவேண்டிய பணிகள் பல இருக்க , இடைநடுவே எமைவிட்டு நெருங்க முடியாத்தூரம் சென்றுவிட்டார் .

தேசியத் தலைவரையும் , தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் , அதன் இலட்சியத்தையும் முழுமையாக ஏற்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தாம் கற்றுத் தேர்ந்த இசைத் துறையூடாக பெரும் பங்களிப்பை வழங்கி வந்த இவர் போன்ற உத்தம மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை . கலைமாமணி அமரர் . வர்ணராமேஸ்வரன் போன்ற தமிழ்த் தேசிய இனப்பற்றாளர்கள் சரித்திர மனிதர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் என்றும் வாழ்வார்கள் .

உங்கள் உடல் மறைந்தாலும் , நீங்கள் மாவீரரை வணங்கிப் பாடிய துயிலுமில்லப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் உங்கள் குரலை நாம் கேட்டுக்கொண்டே இருப்போம் . இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் , உறவினர் எல்லோரது துயரிலும் , ” தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறை ” தமிழீழ மக்களின் சார்பாக பங்கெடுத்துக் கொள்கிறது . இவர் போன்று தமிழினத்தை நேசித்த ஆயிரம் ஆயிரம் இனப்பற்றாளர்களின் இலட்சியம் நிறைவேறத் தொடர்ந்து போராடுவோம் என உறுதியேற்போம் .

நன்றி .

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ”

பா . தயாமோகன்
அரசியற்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள் .
arasiyalthurailtte@gmail.com

08B4F6D4-63B1-4CC7-8E52-749ED6A49911.jpe

0DBFF643-0D79-4D3B-8DE8-BB357E928672.jpe

 

 

 

https://www.meenagam.com/தழிழீழ-இசைமகன்-வர்ணராமேஸ/

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகவை ஒன்று நினைவு வணக்கங்கள்! 🙏🙏🙏

 

https://ripbook.com/rameswaran-varnakulasingam-61521567a4910/notice/remembrance-63087179666b3

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு  ஓராண்டு நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

நினைவுப் பகீர்வு சங்கீத இசைக் கலைஞரும் ஈழத்துப் பாடகருமான அமரர் வர்ண ராமேஸ்வரன்

 

ஈழத்து கலைஞர்களில் இவரும் ஒருவர் வர்ண இராமேஸ்வரன் கனடாவில் கொரோனாவால் மறைந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது

இவரது குரலில் விடுதலை கானங்கள் நல்லூர் முருகன் பாடல்களை அந்தநாள்களில் விரும்பி கேட்பேன் இன்றும் காதில் ஒலிக்கும் அந்த வசீகர குரலின் மறைவு எமக்கு ஒரு இழப்பு

உதாரணத்துக்கு ஒரு பாடல்

பன்ரனிரண்டு கண்ணிருந்தும் பார்க்கவில்லையே நாம் பகலிரவாய் வாடி நின்றோம்.

பல்வேறு துயரச் செய்திகளுக்கு மத்தியில், சங்கீத இசைக் கலைஞரும் ஈழத்துப் பாடகருமான வர்ண ராமேஸ்வரன் அவர்களின் மறைவுச் செய்தியினையும் அறிய நேர்ந்திருக்கிறது. நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர், அண்மையில் அவரோடு நீண்ட நேரம் உரையாடியவற்றை நினைத்துப் பார்க்கிறேன். ஈழத்துக் கலைஞருக்கு அஞ்சலி…

‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய…’ என்ற பாடலை, முதல் முறை ஒலிப்பதிவிற்காக அவர் பாடிய போது அருகில் இருந்து பார்த்த நினைவு சுடர்கிறது. அப்போது ஒலிப்பதிவு செய்தவர் இன்றில்லை. அந்தப் பாடல் வரிகளை எழுதியவரும் இன்றில்லை. அப்போது அணி இசை வழங்கிய வேல்மாறன் அவர்கள், மிக அண்மையில் மறைந்துவிட்டார்.

ஈழத்துப் புகைப்படக் கலைஞர்.

இசை அத்தியாயம் சரிந்ததுவே!!

இவர் குரலில் அமைந்த பாடல்கள் – அது சாஸ்திரிய சங்கீதப் பாடலாக இருக்கட்டும், மெல்லிசைப் பாடல்களாக இருக்கட்டும், ஏன் இவர் குரலில் வந்த தாயகப் பாடல்களாக இருக்கட்டும் கேட்பவரைத் தம் வசப்படுத்தும் வல்லமை இவர் குரலுக்கு உண்டு.

ஈழத்து இசையில் இசைக் குடும்பப் பின்னணியுடன் உள் நுழைந்திருந்தாலும், தன் தனித்துவமான குரலால் அனைவரையும் கட்டிப் போட்டவர்.

யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் கலைமாமணி பட்டத்தைப் பெற்றவர். இவர் தந்தையார் சங்கீத வித்துவான் வர்ணகுலசிங்கம். இவர் தந்தையார் மறைந்த இசை மாமேதைகள் மகாராஜபுரம் சந்தானம் மற்றும் மகாராஜபுரம் விஸ்வநாதையா அவர்களின் பிரதம சீடர்.

தெல்லிப்பளை வரதராஜசர்மாவிடம் மிருதங்கம் பயின்றவர். மிருதங்கம், தவில், ஆர்மோனியம் நன்கு அறிந்த – பரிச்சயமான பல்துறைக் கலைஞனாக விளங்கினார் வர்ண ராமேஸ்வரன்.

இளமையிலே இசைப் பரிச்சயம் உடைய வர்ண ராமேஸ்வரன் அவர்கள் மிருதங்க வித்துவான் சிவபாதம், பாடகி பார்வதி சிவபாதத்தின் உறவினரும் கூட.

தெல்லிப்பளை மகாஜானக் கல்லூரியல் கல்வி கற்ற வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கு அளவையூர் விநாசித்தம்பிப் புலவரின் கதாப் பிரசங்கத்திற்கு மிருதங்கம் வாசிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

அளவையூர் விநாசித்தம்பிப் புலவர் தான் தந்தையாரின் பெயரின் முற்பகுதியையும் இணைத்து வர்ண ராமேஸ்வரன் எனப் பெயர் சூட்டினார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் வரிகளில் உருவான நல்லை முருகன் பாடல்கள், மற்றும் திசையெங்கும் இசை வெள்ளம், ஊர் போகும் மேகங்கள் என தாயக மண் வாசம் கமழும் இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார்.

உலகத் தமிழர் மத்தியில் “எங்கே எங்கே ஒரு தரம் உங்கள் விழிகளைத் திறவுங்கள்’ எனக் கேட்கின்ற போதே கண்ணீரை வர வைக்கின்ற துயிலுமில்லப் பாடலான “தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” பாடல் ஊடாக நன்கு பரிச்சயமானவர்.

பல்வேறு வித்துவான்களையும், கலைஞர்களையும் தந்த யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்துள்ள அளவெட்டி எனும் கிராமத்திற்கு அருகே உள்ள சிறுவிளான் எனும் சிற்றூர் தான் இக் கலைஞன் பிறந்த மண், பின் யாழ்ப்பாணம் , வன்னி , கொழும்பு என வாழ்ந்து கால ஓட்ட மாற்றத்தில் புலம்பெயர்ந்து அவர் இறக்கும் வரை கனடாவில் வசித்து வந்தார்.

பல்துறைக் கலைஞரான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் , யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இசை விரிவுரையாளராக இருந்திருக்கிறார், தென் இந்தியாவில் சென்னையிலும் இசை பயின்றுள்ளார்.
வர்ணம் எனும் இசைப் பள்ளியினையும் கனடாவில் நடாத்தி வந்துள்ளார்.

நிதர்சனப் பொறுப்பாளராக பரதன் அவர்கள் இருந்த காலத்தில் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் அழைக்கப்படுகிறார், பூபாளம் பாடும் நேரம் , பூ மலர்ந்தது கொடியினில் என இவ் இரு பாடல்களையும் பாடுவதற்கு பயிற்சி எடுத்துவருமாறு அனுப்பப்படுகின்றார். தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த ஒலிப்பதிவு தடைப்பட்டு பாடல்கள் இரண்டும் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்திர்ற்கு வழங்கப்படுகின்றது.

பின்னர் புதுவை இரத்தினதுரையின் அழைப்பின் பேரில் விழித்தெழுவோம் (1992) ஒலி நாடாவில் புறமொன்று தினம் பாடும் பெண் புலிகள்,
கரும்புலிகள் ஒலி நாடாவில் தாயக மண்ணின் காற்றே,
எதிரியின் குருதியில் குளிப்போம், பூநகரி வெற்றிச் சமர் ஒலி நாடாவில் அப்புகாமி பெற்றெடுத்த லொகு பண்டா மல்லி,
முன்னேறிப் பாய்ச்சலின் போது வெளியான அவரும் அவர் நண்பர் சடகோபனும் எழுதிப் பாடிய வேப்பமரக் காற்றே நில்லு, வீதியோரப் பூவே சொல்லு”
போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு அவருக்கு ஏற்படுகின்றது. இதன் பின்னர் புதுவையர் வர்ண ராமேஸ்வரன் கூட்டணியில் நல்லை முருகன் பாடல்கள் ஒலிநாடா வெளியாகின்றது.

1992ம் ஆண்டு கிளாலி கடல் நீரேரிப் பாதையில் இடம் பெற்ற மோதல் காரணமாக பாடகர் சாந்தன் அவர்கள் வன்னிக்குள் சிக்கிக் கொள்ள, அவர் யாழிற்கு வர வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த புதுவை இரத்தினதுரை அவர்களிற்கு ஏமாற்றமே எஞ்சுகிறது.

உடனடியாக புதுவையர் வர்ண ராமேஸ்வரனை தன் இல்லத்திற்கு அழைக்கிறார். முக்கியமான ஓர் பாடல், நீதான் இதனைப் பாட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றார்.

”எங்கே எங்கே ஒருதரம் உங்கள் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”
அவர் இந்த வரிகளைப் பாடும் போதே புல்லரித்துப் போனதாய் வெளிச்சத்திற்கான ஓர் செவ்வியில் பகிர்ந்திருந்தார்.

புதுவையர் சாய்மனைக் கட்டிலில் அமர்ந்தவாறு இன்னுமொருக்காப் பாடும் ஐசி எனக் கேட்டுக் கேட்டுக் கொண்டாராம். இப்படி 3 தடவைகள் கேட்ட பின் 10 நிமிடங்கள் மௌனமாய் புதுவையர் இருந்தாராம், இறுதியில் ஒரு பெரு மூச்சுடன் எழுந்து மறுநாள் மாலை ஐந்தரை மணிக்கு ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டார்.

இசைவாணர் கண்ணன் ஆர்மோனியம், சதா வேல்மாறன் தபேலாவுடனும், ஜெயராமன் வயலினுடனும் இசையமைக்க பாடல் ஒலிப்பதிவு ஆரம்பமாகின்றது. அருகே நின்றிருந்த மேஜர் சிட்டு, ராதிகா, மணிமொழி போன்ற கலைஞர்களும் இப்பாடலை முணு முணுக்க ஆரம்பிக்க ”எங்கே எங்கே” என்ற வரிகளை எல்லோரும் சேர்ந்தே பாடுங்கள் என புதுவை இரத்தினதுரை அவர்கள் கூறுகிறார்.

ஒலிப்பதிவ் முடியும் போது காலை 03 மணி, ஆனால் பாடகர் சாந்தன் அவர்கள் தவற விட்ட, இந்த ஓர் பாடல் , வர்ண ராமேஸ்வரனின் குரலால் உயிர் பெற்று ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடலாக அமையப் போகின்றது என்பதை அப்போது அங்கிருந்த எந்த ஓர் கலைஞர்களும் அறிந்திருக்கவில்லை.

1992ம் ஆண்டு மாவீரர் நாளின் இறுதி நாள், புதுவையரைச் சந்திக்க வந்திருந்த வர்ண இராமேஸ்வரன் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.

புதுவையர் ராமேஸ்வரனை கட்டித் தழுவிப் பாராட்டினார், சிறிது நேரத்தில் காக்கா அண்ணை வந்து தலைவரே பாடல் கேட்டு வியந்திருப்பது பற்றி பகிர்ந்து கொண்டார். பின்னர் 11.30 மணியளவில் சு.ப தமிழ்ச் செல்வனும் வந்து பாராட்டினார்,

இவர்கள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு வாகனம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தை நோக்கி விரைந்தது. 12 மணியானதும் கோவில்களில் மணி ஒலிக்க , புலிகளின் குரலில் துயிலுமில்லப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது. அந்தப் பாடலிற்கான மகிமை – மகத்துவம் அப்போது உணரப்படுகின்றது. நெய் விளக்கு ஏற்றப்படும் அதே சமயத்தில் வர்ண ராமேஸ்வரனையும் பாடலைச் சேர்ந்தே பாடுமாறு புதுவையர் கேட்டுக் கொண்டார். அந்தக் குரலும், குரலினால் வெளிப்பட்ட பாவங்களும் கேட்போர் அனைவரையும் – ஏன் கல் நெஞ்சங்களையும் கரைக்கும் வல்லமை கொண்டவையாக விளங்கியது என்றால் மிகையல்ல.

இது தவிர மெல்லிசைப் பாடல்களால் நம் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள்,

”மறந்து போகுமோ மண்ணின் வாசனை”,
”வாசலிலே அந்த ஒற்றைப் பனை மரம்”,
ஊருக்கு மீளும் கனவு உனக்கில்லையா தமிழா? ”
இப்படிச் சில பாடல்களைக் குறிப்பிடலாம்,

இசைத் தமிழ் உலகிற்கு வர்ண ராமேஸ்வரனின் இழப்பு – பேரிழப்பு

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

தேடல் , எழுத்துருவாக்கம்,
கமலேஷ்

 

https://www.vvtuk.com/archives/339063

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.