Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன தூதருடனான சந்திப்பிற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு: தடுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நீங்கள் சொல்லும் தீர்வு என்ன....?அதை தமிழ் மக்கள் எப்படி அடைய முடியும்   ?

நான் ஒன்றும் தவறுதலாக சொல்லவில்லை. நடைமுறையைச் சொன்னேன். நமது பொருளாதாரம் சீரழிக்கப்பட்டு கேள்விக்குறியாக இருக்கும்போது இந்த யோசனை சரிவருமா? உடனே சட்டம் இயற்றுவார்கள், சிங்கள பவுத்தம் சார்ந்த ஒருவரே ஜனாதியாதியாகலாம். நாங்கள் பெரும்பான்மையாகக் கூடாதே என பெரும் பிரயத்தனம் செய்கிறான். நம் இளைஞர்களை ஒட்டுக்குழுக்கள்  மூலம் கொலை செய்ததும், காணாமல் செய்ததும், சிறையில் அடைத்ததும் இதன்  ஒரு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

நாங்கள் பெரும்பான்மையாகக் கூடாதே என பெரும் பிரயத்தனம் செய்கிறான்.

12 வீதம் தமிழர்கள் 78 வீதமான சிங்களவர்களை காட்டிலும் பெரும்பான்மையாக நான்கு வழிகள் உள்ளன.

1. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியை தனி நாடாக்கினால் இங்கு தமிழர்களே பெரும்பான்மை - இது முயன்று தோற்ற அணுகுமுறை.

2. மிகப்பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் ஆட்சி பிரதேசத்துடன் நாட்டை இணைத்தல் - தமிழ்நாட்டுடன் இலங்கையை இணைக்க முயன்ற இந்திய அமைதிப்படை அணுகுமுறை - பிரேமதசவுடன் இணைந்து விடுதலைப்புலிகள் இதனை தோற்கடித்தார்கள்.

3. சிங்களவர்களை பெருமளவில் அழியவிட்டு தமிழர் பெரும்பான்மையாகும் வழி - ராஜபக்ச குடும்பத்தின் உதவியுடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று செயற்படுத்தும் முறை.

4. திருமணம் செய்தோர், செய்யாதோர் என்றெல்லாம் பாராமல் அனைத்து தமிழ் பெண்களையும் தொடர்ச்சியாக கர்ப்பமாக்கி பிள்ளை பெற வைக்கும் முயற்சி - இது கிட்டத்தட்ட இசுலாமிய அணுகுமுறை. போரினால் ஆண்கள் அழிந்து போக பலதார குடும்பங்களை உருவாக்கி அரேபிய உலகு பலுகிப்பெருக இந்த முறை உதவியது.

கள உறவுகளே, உங்களுக்கு பிடித்தமான முறைகள் எவை?😇

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

கள உறவுகளே, உங்களுக்கு பிடித்தமான முறைகள் எவை?😇

தமிழர்கள் எல்லோரும் நித்தியானந்தாவின் “கைலாசா”வுக்கு குடிபெயரலாம்.😃

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

கள உறவுகளே, உங்களுக்கு பிடித்தமான முறைகள் எவை?😇

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் எல்லாரும் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் தாயகம் திரும்புவது.இந்த முறை அடி மடியில் கை வைப்பதாகும்.😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டுக்கு நாடு,கண்டத்திற்கு கண்டம் மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர்ந்த வண்ணமே உள்ளனர்.
ஆனால் ஈழத்தமிழர் மட்டுமே இந்த செயலை செய்தது போல் இங்கே புனையப்படுகின்றது. ஈழத்தமிழர் புலம்பெயர்ந்ததும் ஒரு வழிக்கு நன்மைதான்.

On 17/11/2021 at 03:07, அக்னியஷ்த்ரா said:

உதையெல்லாம் வாசிக்கும்போது சிரித்து சிரித்து  புரையேறி மேலேயே போய்விடுவோம் போல கிடக்கு. O/L பாஸ் பண்ணவே வக்கில்லாதவனை Harvard fullbright scholar ஆக்க முக்குவது போல் முக்குறினம் நமது உறவுகள். முதலில் பானையில் இருக்கவேண்டும் அகப்பையில் வருவதற்கு, வாத்தியார் பய மக்கு என்பதை போல இன்டர்நஷனல் பாலிடிக்ஸ் அடிநாதம் வரை துருவிப்போய் தூர் வாரி அலசோ அலசு என்று அலசுவதாலோ என்னவோ சொந்த அரசியல்வாதிகள் பூரா மக்குபிளாஸ்திரிகளும் proxy போக்கிரிகளுமாக வாய்த்திருக்கிறது ஈழ தமிழர்களுக்கு    

எல, எல வாப்பா.

ஒத்துகிறேன் நம்ம அரசியல்வாதிகள் இப்படி எல்லாம் நகர்வார்கள் என நம்பிய நான் மக்கு பிளாஸ்திரிகளில் ஒண்டுதான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

சீன தரப்பு கூட்டமைப்புடன் பேச எண்ணும் போது அந்த செய்தியை பகிரங்க படுத்த வேண்டிய தேவை சீனத்தரப்புக்கு இருந்தால்   அச்செய்தி ஏற்படுத்தும் அதிர்வலைகளால் அறுவடைசெய்ய அவர்களுக்கு பல நன்மைகள் உண்டு என்பது மட்டுமன்றி செய்தியின்படி பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய தேவை சீனாவுக்கு இல்லை என்பதும் வெளிப்படை.

இதில் சீனா இதயசுத்தியுடன் நடந்திருந்தால்  தமிழ் தரப்பை அணுக மூன்றாம்தரப்பை நாடியிருக்காது. இலங்கையையும் இந்தியாவையும் சீண்டுவதற்கு கூட்டமைப்புடன் தொடர்பு ஏற்படுத்தும் செய்தியை பரப்பவேண்டிய தேவை சீனாவுக்கு இருந்திருக்கிறது என்றுதான் கொள்ளவேண்டும்.

இந்த பொறியில் இருந்து விவேகமாகவும் இராஜதந்திரமாகவும் தமிழ்தரப்பு வெளிவராவிட்டால் தமிழ்தரப்புக்கு பின்னடைவுகளைத்தான் ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2021 at 21:48, கற்பகதரு said:

நீங்க பிரம்பு தந்தால் நான் சட்டாம்பி வேலை செய்யத்தயார் 😇

பிரம்பு உங்களிடம் தரப்படாது, அதனை நீங்களாகவே எடுக்க வேண்டும்.

😉

5 hours ago, கற்பகதரு said:

12 வீதம் தமிழர்கள் 78 வீதமான சிங்களவர்களை காட்டிலும் பெரும்பான்மையாக நான்கு வழிகள் உள்ளன.

1. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியை தனி நாடாக்கினால் இங்கு தமிழர்களே பெரும்பான்மை - இது முயன்று தோற்ற அணுகுமுறை.

2. மிகப்பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் ஆட்சி பிரதேசத்துடன் நாட்டை இணைத்தல் - தமிழ்நாட்டுடன் இலங்கையை இணைக்க முயன்ற இந்திய அமைதிப்படை அணுகுமுறை - பிரேமதசவுடன் இணைந்து விடுதலைப்புலிகள் இதனை தோற்கடித்தார்கள்.

3. சிங்களவர்களை பெருமளவில் அழியவிட்டு தமிழர் பெரும்பான்மையாகும் வழி - ராஜபக்ச குடும்பத்தின் உதவியுடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று செயற்படுத்தும் முறை.

4. திருமணம் செய்தோர், செய்யாதோர் என்றெல்லாம் பாராமல் அனைத்து தமிழ் பெண்களையும் தொடர்ச்சியாக கர்ப்பமாக்கி பிள்ளை பெற வைக்கும் முயற்சி - இது கிட்டத்தட்ட இசுலாமிய அணுகுமுறை. போரினால் ஆண்கள் அழிந்து போக பலதார குடும்பங்களை உருவாக்கி அரேபிய உலகு பலுகிப்பெருக இந்த முறை உதவியது.

கள உறவுகளே, உங்களுக்கு பிடித்தமான முறைகள் எவை?😇

1) மீண்டும் முயற்சிக்கப்படும். முயற்சிக்கப்படுகிறது.

2) 😔

3)

4)😇

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

தமிழர்கள் எல்லோரும் நித்தியானந்தாவின் “கைலாசா”வுக்கு குடிபெயரலாம்.😃

அல்லது நித்தியானந்தாவை முல்லைத்தீவில்/ கொக்கிளாயில் குடியேற்றலாம். 

4 hours ago, vanangaamudi said:

சீன தரப்பு கூட்டமைப்புடன் பேச எண்ணும் போது அந்த செய்தியை பகிரங்க படுத்த வேண்டிய தேவை சீனத்தரப்புக்கு இருந்தால்   அச்செய்தி ஏற்படுத்தும் அதிர்வலைகளால் அறுவடைசெய்ய அவர்களுக்கு பல நன்மைகள் உண்டு என்பது மட்டுமன்றி செய்தியின்படி பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய தேவை சீனாவுக்கு இல்லை என்பதும் வெளிப்படை.

இதில் சீனா இதயசுத்தியுடன் நடந்திருந்தால்  தமிழ் தரப்பை அணுக மூன்றாம்தரப்பை நாடியிருக்காது. இலங்கையையும் இந்தியாவையும் சீண்டுவதற்கு கூட்டமைப்புடன் தொடர்பு ஏற்படுத்தும் செய்தியை பரப்பவேண்டிய தேவை சீனாவுக்கு இருந்திருக்கிறது என்றுதான் கொள்ளவேண்டும்.

இந்த பொறியில் இருந்து விவேகமாகவும் இராஜதந்திரமாகவும் தமிழ்தரப்பு வெளிவராவிட்டால் தமிழ்தரப்புக்கு பின்னடைவுகளைத்தான் ஏற்படுத்தும்.

இந்தச் செய்தியின் அடிப்படை உண்மை. 

ஆனால் இதனை முன்வைத்தது அரசியல்வாதிகளோ தமிழ்த் தேசிய அமைப்புக்களோ அல்ல. UKயில் உள்ள சில வியாபாரக் காந்தங்கள். அவர்கள் ஏற்கனவே சீனாவுடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் என்று கேள்வி. 

இது தென்னிலங்கையில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா பேச்சுக்கு அழைத்தால் அதை தமிழர்தரப்பு நிராகரிக்கக் கூடாது . அந்த அழைப்பை எற்று பேச்சு நடத்த வேண்டும்.ஒன்றிரண்டு கட்டப் பேச்சுக்களிலேயே எல்லாம் முடிந்து விட்டதென்று அர்த்தமல்ல.அப்பொழுதுதான் இந்தியாவும் மேற்குலகும் விழித்துக் கொள்வார்கள் அவர்களும் பேச்சுக்குக் கூப்பிடுவார்கள். சரியான பேரத்தை அப்போது வைக்க வேண்டும்.இது புலிகள் காலத்தில் நடை பெற்றிருந்தால் அமன் பெறுமதியே வேறு இருப்பினும் இந்த வழியைப் பரிட்சிப்பது பொருத்தமானது. இந்தியாஇஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பலமுறை சந்தர்பங்களை தமிழர்தரப்பு கொடுத்த போதெல்லாம் அவர்கள் பல முறைதமிழரகளைப்பாவித்து  தங்கள் நலன்களை மட்டும் முன்னிறுத்தினார்கள்.ஆகவே நாம் சீனாவுடன் பேசும் போது அவர்களுக்கு இயல்பாகவே கலக்கம் வரும். சீனா இந்தியா போல் அல்ல அமெரிக்காவுக்கே சவால் விடும் வல்லரசு. ஆகவே அவர்கள் தமிழர்தேசம் தங்கள் கைகளை  விட்டு நழுவுச் செல்வதை  விரும்ப மாட்டார்கள். அதற்கு என்ன விலையும் கொடுக்கத்தயாராகுவார்கள்.இந்தக்கருத்தை இந்த களத்தில் நீண்ட காலமாகவே நான் முன்வைத்து வருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கோஷானின் ஆவி said:

எல, எல வாப்பா.

ஒத்துகிறேன் நம்ம அரசியல்வாதிகள் இப்படி எல்லாம் நகர்வார்கள் என நம்பிய நான் மக்கு பிளாஸ்திரிகளில் ஒண்டுதான்🤣.

அமெரிக்கா போய் ஈழத்தமிழர்களை Minority Groups (சிறுபான்மை குழுக்கள்) வேறு ஆக்கியிருக்கிருக்கிறார்கள் என்றால் பாருங்க வா...செம பசந்தா இருக்கும்  கூத்தமைப்பிற்கும் கூத்தமைப்பு வால்களுக்கும் எலுவா ...?  

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

நாட்டுக்கு நாடு,கண்டத்திற்கு கண்டம் மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர்ந்த வண்ணமே உள்ளனர்.
ஆனால் ஈழத்தமிழர் மட்டுமே இந்த செயலை செய்தது போல் இங்கே புனையப்படுகின்றது. ஈழத்தமிழர் புலம்பெயர்ந்ததும் ஒரு வழிக்கு நன்மைதான்.

அண்ணை, இது எங்கேயிருந்து வரூதெண்டால், “ஊர்ச்சனத்தின்ர அரசியலில புலம்பெயர் தமிழர் தலையிடக் கூடாது, அதை அவர்களே பாத்தூகொள்வார்கள்” அல்லது “நீங்கள் இங்கே வந்து போராடுங்கோ” என்று ஊர்ச்சனத்தின்ர நலனில “உண்மையாகவே” அக்கறையிருக்கிற ஆட்களிட்டை இருந்து வரூது. ஊரில இருக்கிற சனமும் பேசக்கூடாது, வெளியில இருந்தும் தலையிடக்கூடாது என்கிற கோஷ்ட்டி. இவையின்ர பின்புலம் எங்கேயெண்டு பாத்தால் ஒண்டில் ஆக்கிரமிப்பாளனுக்கு நேரடியான ஆதரவான அல்லது ஆக்கிரமிப்பாளனுக்குச் சோரம் போனவர்களை தங்கட அரசியல்த் தலைமகளாக வரிஞ்சவர்களாக இருக்கும். 

உதைப் பலமுறை கேட்டாச்சுது, கடந்து போங்கோ அண்ணை.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2021 at 18:44, புலவர் said:

சீனா பேச்சுக்கு அழைத்தால் அதை தமிழர்தரப்பு நிராகரிக்கக் கூடாது . அந்த அழைப்பை எற்று பேச்சு நடத்த வேண்டும்.

தமிழ் தரப்பு எந்தெந்த நாடுகளுடன் பேச்சு நடத்தவேண்டும் என்பதை மதி நுட்ப்பத்துடனும் இராஜதந்திரத்துடனும் எமது அரசியல் தலைமை தீர்மானிக்கட்டும். சீனாவுடன் பேசும் கால கட்டம் சரியா என்பதுதான் இப்போது சர்ச்சைக்கிடமானது. என்றுமே சிங்களத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமான சீனாவுக்காக நாங்கள் இந்தியாவையும் அமெரிக்கா உட்பட மேற்குலையும் ஒரே நேரத்தில் சீண்டும் இதுபோன்ற செயல் ஆரோக்கியமான காய் நகர்தலாக அமையுமா  அப்படி செய்தாலும் அதன் விளைவுகளை எதிர்கொள்ளுமளவுக்கு சீனாவை தமிழினம் நம்பமுடியுமா என்பதும் இன்றைய நிலையில் கேள்விக்குறிதான்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

தமிழ் தரப்பு எந்தெந்த நாடுகளுடன் பேச்சு நடத்தவேண்டும் என்பதை மதி நுட்ப்பத்துடனும் இராஜதந்திரத்துடனும் எமது அரசியல் தலைமை தீர்மானிக்கட்டும். சீனாவுடன் பேசும் கால கட்டம் சரியா என்பதுதான் இப்போது சர்ச்சைக்கிடமானது. என்றுமே சிங்களத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமான சீனாவுக்காக நாங்கள் இந்தியாவையும் அமெரிக்கா உட்பட மேற்குலையும் ஒரே நேரத்தில் சீண்டும் இதுபோன்ற செயல் ஆரோக்கியமான காய் நகர்தலாக அமையுமா  அப்படி செய்தாலும் அதன் விளைவுகளை எதிர்கொள்ளுமளவுக்கு சீனாவை தமிழினம் நம்பமுடியுமா என்பதும் இன்றைய நிலையில் கேள்விக்குறிதான்.

தமிழரின் பிரச்சனையை வைத்து மேற்குலகம் சிங்களத்தை மிரட்டி தன்னை வெளியேற்றபோகிறது என்பதால். சீனா தன்னை பாதுகாக்க தமிழரை அழைக்கக்கூடும். ஆனால் தமிழர் பிரச்சனை பற்றி ஐ. நா. வில் கதைத்தபோது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையிடக்கூடாது என ஆட்சேபித்திருந்தது சீனா. தனது வீட்டொ அதிகாரத்தை பயன்படுத்தி ஐ. நா. வில்  இலங்கைக்கெதிரான நடவடிக்கையை தடுக்கும் என இலங்கையும் நம்பியிருந்தது. ஆகவே தமிழரை அழைத்து மேற்குலகின் தனக்கெதிரான நடவடிக்கையை தடுப்பதற்கும், மேற்குலகின் இலங்கை மீது நுழையும் நோக்கை இல்லாமல் செய்வதற்கும்  எடுக்கும் தந்திரமாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.