Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நான் சளாப்பிய போது கேட்ட கேள்வியை தவற விட்டு விட்டீர்கள் போல! ஏதாவது உதாரணம் அப்படி இருக்கிறதா உங்களிடம்?😎

புலிகள் இயக்கத்தினுள் தலைமைக்கு விரும்பியதைச் சொல்பவர்கள் மட்டுமே தலைமையின் செவிமடுத்தலுக்கு அருகில் இருக்கலாம்! இதை அறிய அங்கேயே வாழ்ந்து சில பத்திரிகைச் செய்திகளை வாசித்தாலே போதும்! ரமில்னெற்றும், ஈழநாதமும் வாசித்தால் எல்லாம் மேற்கத்தைய ஜனநாயகம் போலத் தான் தெரியும்.

இந்தக் காரணம் தான் தமிழினி பேசாமல் மக்களுக்காக தன் பணியைச் செய்து விட்டு பின்னர் பேசியதற்குக் காரணம். இப்படி பலர் இன்றும் இருக்கிறார்கள். கேட்கத் தான் ஆட்கள் இல்லை!

அப்படி யாரும் அங்கு இருந்ததாக நான் சொல்லவில்லையே! பாலசிங்கத்தார் பக்குவமாக ஒதுங்கியமாதிரி, தலைவரின் கொள்கைகள் பிடிக்காவிட்டால் தமிழினியும் ஒதுங்கியிருக்கலாம் என்றுதானே சொன்னேன்!!

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/11/2021 at 18:13, Kapithan said:

உங்கள் கண்முன் தனது வாழ்க்கையை போராட்டத்திற்கு ஒப்படைத்து ஆகுதியான ஒருவரது புத்தகத்தை சான்றாக  ஏற்க முடியாது என்றால் வேறு எதனை ஏற்றுக்கொள்வீர்கள்..? 

அவர் காலமாகிய பின்னர் அந்த புத்தகம் வெளிவந்தது. அதில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

அவர் காலமாகிய பின்னர் அந்த புத்தகம் வெளிவந்தது. அதில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

ஆனாலும் சாராம்சம் உண்மைதானே.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஆனாலும் சாராம்சம் உண்மைதானே.

எப்படி உண்மையாகும் சிங்கள அரசிடம் பிடிபட்டவர்கள் அவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏட்பவே கதை கட்டுரை எழுதலாம் எனும் நிலை இல்லை என்று நம்புகிறீர்களா ?

10 hours ago, Kapithan said:

ஆனாலும் சாராம்சம் உண்மைதானே.

போராட்டம் நடந்த காலத்தில் போராட்ட செய்திகளை வாசித்த அனைவருக்கும் தமிழினியின் அனுபவங்களை விபரிக்கும் நூலில் உள்ள உண்மைகள் புரியும். உண்மைகளை ஜீரணித்து கொள்ள முடியாதவர்ரகளுக்கு அதில் உள்ள உண்மைகள் கசப்பதால் அதை ஏற்றுக் கொள்ளாமல் உண்மையை எழுதுபவர்களுக்கெதிராக இவ்வாறான பித்தலாட்ட பொய்களை அவிழ்தது விட்டுக்கொண்டே இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

உங்கள் எதிரிகளாக இருந்தாலும்  ஒவ்வொரு இடங்களிலும் உங்களுக்கு சாதகமான வசனங்களை மட்டும் தேடியெடுத்து விவாதம் செய்பவர் நீங்கள். எதையும் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். அது உங்களிடம் அறவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

போராட்டம் நடந்த காலத்தில் போராட்ட செய்திகளை வாசித்த அனைவருக்கும் தமிழினியின் அனுபவங்களை விபரிக்கும் நூலில் உள்ள உண்மைகள் புரியும். உண்மைகளை ஜீரணித்து கொள்ள முடியாதவர்ரகளுக்கு அதில் உள்ள உண்மைகள் கசப்பதால் அதை ஏற்றுக் கொள்ளாமல் உண்மையை எழுதுபவர்களுக்கெதிராக இவ்வாறான பித்தலாட்ட பொய்களை அவிழ்தது விட்டுக்கொண்டே இருப்பார்கள். 

தமிழினி விடுதலை செய்யப்பட்டு வெளிநாடு போன்ற இடங்களில் இருந்து  சுதந்திரமான நிலையில் புத்தகம் எழுதியிருந்தால் பரவாயில்லை சிங்கள எதிரிகளிடம் பிடிபட்டு இருக்கும் நேரம் தமிழர்களுக்கு ஆதரவாய் எழுத்துக்கள் வராது என்று குழந்தைப்பிள்ளைக்கும் தெரிந்த விடயம் .ஆனா பாருங்க திரிக்கு திரி உண்மை உண்மை என்று எழுதுவதால் கண்டியில் கடல் கரை எப்படி வராதோ அதுபோல் உங்கள் கருத்துக்களும் இப்படி எழுதுவதால் மினக்கெட்டு பதில் கருத்து போடாமல் கடந்து செல்வது உண்டு காரணம் உங்கள் கருத்துக்கள் எப்போதும் தமிழர்க்கு நடந்த ஒட்டுமொத்த அழிவு பிழைகள் தவறுகள் அனைத்தும் கடைசியில் இருந்தவர்களிடம் பழி  போட்டு தப்பி கொள்ளும் வித்தை தெரிந்தவர் . தமிழ் தேசியத்தை எள்ளி நகையாடும் கருத்துக்களை மட்டும் வைப்போம் ஆக்க பூர்வமான கருத்துக்கள் அவர்களின் சிந்தனையில் வராது அவர்கள் சிந்தனை முழுக்க தேசியதமிழ் புலிகள் தலைமை போன்றவற்றை எதிர்ப்பது ஒன்றே முக்கிய பிறவிப்பயன் என்பது போல் எந்தவித பிறழ்வும் இன்றி பயணிப்பார்கள் இதில் பகிடி தமிழ் தேசியத்தை சேர்ந்தவர்கள்  ஒரு பேச்சுக்கு சைனாவை ஆதரித்தால் உடனே உலகின் அப்படி சொல்வது அபத்தம் பிரபஞ்சத்துள் இருக்கும் அனைத்து தமிழ் எதிர்பாளருக்கும் சைனா எதிரியாகி விடும் இப்படித்தான் எதிர்க்கருத்து வாத பெருமக்கள் அப்படியானவர்கள் பிளாக்குகள் முகநூல்கள் போன்றவற்றில்  கீச்சகம் பக்கம் போகமாட்டார்கள் காரணம் பொய்களை நாலுவரியில் எழுதமுடியாது அல்லவா... சிலவேளை எழுதினாலும் அதற்கான வினைத்திறன் குறைவாகவே இருக்கும் .தினமும் விடிகாலையில் காலைக்கடன் கழிப்பது போல் தமிழர்க்கு எதிராக வரும் கருத்துக்களை கண்டுகொள்ளாமல் போவதால் தங்களுக்கு உரிய அங்கீகாரம் அல்ல என்று எப்போதுதான் புரிந்து கொள்ளப்போகிறார்களோ என்ரை ஏசுவே .....................🥱

@பெருமாள் @குமாரசாமி மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ளது என்று உண்மைக்கு புறம்பாக பேசுவதால் அது உண்மை ஆகிவிடாது.  தமிழினியின் நூலில் எங்கும் தமிழ் மக்களின் உரிமை போருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட எழுதபட்டவில்லை.  இன்னும் தமிழ் மக்களுக்கு எதிராக அரச அடக்குமுறை அதற்கெதிராக தமிழ் மக்கள் போராடியதற்கான நியாயங்களை கூறியுள்ளார். ஆனால் அப்படியான போராட்டம் இறுதியில் எந்த மக்களுக்காக போராடினோமோ அந்த மக்களின் பேரழிவுக்கு காரணமாக எமது பிடிவாதமான ஜதார்த்தத்தை அனுசரிக்காத அரசியல் காரணமாக இருந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததால் அதை விபரமாக எழுதியுள்ளார். அவர் மட்டுமல்ல போராட்டத்திற்கு தனது மகன்களை கொடுத்த தமிழ் கவி அம்மாவும் தனது ஊழிக்கால்ம் என்ற நூலில் தமிழனி எழுதிய விடயங்களை தான் எழுதியுள்ளார்.  இங்கு கிருபன் இணைத்த "இரத்தத்தின் கதை" என்ற போர்க்கால அனுபவ குறிப்புகளும் அதையே கூறின. இவை ஒன்றும் இரகசியமல்ல.  அனைவருக்கும் தெரிந்த விடயமே. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. முழு பூசணிக்காயை எப்படி மறைத்தாலும் உண்மை தமிழ் மக்களுக்கு தெரியும்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

தமிழினியின் நூலில் எங்கும் தமிழ் மக்களின் உரிமை போருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட எழுதபட்டவில்லை.  இன்னும் தமிழ் மக்களுக்கு எதிராக அரச அடக்குமுறை அதற்கெதிராக தமிழ் மக்கள் போராடியதற்கான நியாயங்களை கூறியுள்ளார்.

டக்ளஸ் அண்ணனும் அதைத்தான் சொல்லுகின்றார்.தென்னகத்து அண்ணா கருணாவும் அதைத்தான் சொல்கின்றார்.நீங்களும் அதைத்தான் சொல்கின்றீர்கள்.

20 minutes ago, குமாரசாமி said:

டக்ளஸ் அண்ணனும் அதைத்தான் சொல்லுகின்றார்.தென்னகத்து அண்ணா கருணாவும் அதைத்தான் சொல்கின்றார்.நீங்களும் அதைத்தான் சொல்கின்றீர்கள்.

டக்லஸை விட கேவலமானவர்களே  இந்த புலம் பெயர் தீவிர தமிழ் தேசியம் பேசும்  சுயநல வேடதாரிகள்.  

கருணா 2004 வரை உண்மையாக போராடினார். பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார். 

இவர்கள் வாழ்ககை முழுவதும போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, tulpen said:

டக்லஸை விட கேவலமானவர்களே  இந்த புலம் பெயர் தீவிர தமிழ் தேசியம் பேசும்  சுயநல வேடதாரிகள்.  

கருணா 2004 வரை உண்மையாக போராடினார். பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார். 

இவர்கள் வாழ்ககை முழுவதும போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள். 

ஒருத்தனும் சரியில்லை எண்டால்....இப்ப என்னதான் சொல்ல வாறியள்? 😷

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

@பெருமாள் @குமாரசாமி மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ளது என்று உண்மைக்கு புறம்பாக பேசுவதால் அது உண்மை ஆகிவிடாது.  தமிழினியின் நூலில் எங்கும் தமிழ் மக்களின் உரிமை போருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட எழுதபட்டவில்லை.  இன்னும் தமிழ் மக்களுக்கு எதிராக அரச அடக்குமுறை அதற்கெதிராக தமிழ் மக்கள் போராடியதற்கான நியாயங்களை கூறியுள்ளார். ஆனால் அப்படியான போராட்டம் இறுதியில் எந்த மக்களுக்காக போராடினோமோ அந்த மக்களின் பேரழிவுக்கு காரணமாக எமது பிடிவாதமான ஜதார்த்தத்தை அனுசரிக்காத அரசியல் காரணமாக இருந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததால் அதை விபரமாக எழுதியுள்ளார். அவர் மட்டுமல்ல போராட்டத்திற்கு தனது மகன்களை கொடுத்த தமிழ் கவி அம்மாவும் தனது ஊழிக்கால்ம் என்ற நூலில் தமிழனி எழுதிய விடயங்களை தான் எழுதியுள்ளார்.  இங்கு கிருபன் இணைத்த "இரத்தத்தின் கதை" என்ற போர்க்கால அனுபவ குறிப்புகளும் அதையே கூறின. இவை ஒன்றும் இரகசியமல்ல.  அனைவருக்கும் தெரிந்த விடயமே. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. முழு பூசணிக்காயை எப்படி மறைத்தாலும் உண்மை தமிழ் மக்களுக்கு தெரியும்.  

என்னதான் குத்தி முறிந்தாலும்  நீங்களும் மாறப்போவதில்லை அனுராதபுரத்துக்கு கடற்கரை வரப்போவதும் இல்லை நடத்துங்கோ உங்கள் விளையாட்டை .

5 hours ago, பெருமாள் said:

என்னதான் குத்தி முறிந்தாலும்  நீங்களும் மாறப்போவதில்லை அனுராதபுரத்துக்கு கடற்கரை வரப்போவதும் இல்லை நடத்துங்கோ உங்கள் விளையாட்டை .

இந்த வார்ததைக்கு நன்றி. ஏனெனில் உங்களை போன்ற அரசியல் கருத்துக்களை கொண்டவர்களுக்கு தான்  இந்த வார்ததை கச்சிதமாக பொருந்துகிறது. . 

இனிமேலாவது நடைமுறை சாத்தியமற்றவற்றை அடைய நினைத்து இருந்ததையும் இழக்கும் அரசியல் வேண்டாம். அதை நீங்கள் உணர்ந்தது மிக்க மகிழ்சசி. நீங்கள கூறிய “ அநுராதபுரத்துக்கு கடலை கொண்டுவர முடியாது” என்ற வார்ததையை மறவாதீர்கள். 👍👍

இதை மனதில் கொண்டு அரசியல் செய்வது முன்னேற்றகரமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

இனிமேலாவது நடைமுறை சாத்தியமற்றவற்றை அடைய நினைத்து இருந்ததையும் இழக்கும் அரசியல் வேண்டாம்.

நடைமுறை சாத்தியமானது என்ன  ?அதை எப்படி அடைய முடியும்  ? சுமத்திரனால். அதனை செய்ய முடியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இந்த வார்ததைக்கு நன்றி. ஏனெனில் உங்களை போன்ற அரசியல் கருத்துக்களை கொண்டவர்களுக்கு தான்  இந்த வார்ததை கச்சிதமாக பொருந்துகிறது. . 

இனிமேலாவது நடைமுறை சாத்தியமற்றவற்றை அடைய நினைத்து இருந்ததையும் இழக்கும் அரசியல் வேண்டாம். அதை நீங்கள் உணர்ந்தது மிக்க மகிழ்சசி. நீங்கள கூறிய “ அநுராதபுரத்துக்கு கடலை கொண்டுவர முடியாது” என்ற வார்ததையை மறவாதீர்கள். 👍👍

இதை மனதில் கொண்டு அரசியல் செய்வது முன்னேற்றகரமானது. 

மேல் உள்ளவை வெளிநாடுகளில் சமூக ஊடகங்களில்  உட்க்கார்ந்து கொண்டு  உண்மைகளை பொய்க்களாகவும் பொய்கலை உண்மைகளாகவும்    மூளைச்சலவை செய்பவர்களுக்கு ஆனது .

1 hour ago, Kandiah57 said:

நடைமுறை சாத்தியமானது என்ன  ?அதை எப்படி அடைய முடியும்  ? சுமத்திரனால். அதனை செய்ய முடியுமா ?

உதுக்கு விடை வராது வெறும்  பானை அகப்பையில் பொங்கல் வராது  😀

1 hour ago, Kandiah57 said:

நடைமுறை சாத்தியமானது என்ன  ?அதை எப்படி அடைய முடியும்  ? சுமத்திரனால். அதனை செய்ய முடியுமா ?

நடைமுறைச்சாத்திமானது என்றால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகார பகிர்வு. ஆனால் அதை அடைய,  எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு குறிப்பிட்ட அளவிலாவது இணைந்து  தொடர்ச்சியான அரசியல் வேலை திட்டங்கள், சர்வதேச அனுசரணை/ அநுகூலம் ஆகியவற்றை பக்கபலமாக கொண்டு, உடனடி சாத்தியமானவற்றை புறக்கணிக்காமல் ஏற்றுக்கொள்ளுதல் என்று  தொடர்சியான Negotiation மூலமே அடையலாம்.  அதற்கு ஒரு liberal தன்மை கொண்ட அரசாங்கம் ஶ்ரீலங்காவில் இயல்பாக உருவாக வேண்டியதும் அவசியம். 

இதை அடைய சுமந்திரனால் மட்டுமல்ல எந்த ஒரு தனி மனிதனாலும்  முடியாது. அரசியல் தலைவர்கள் அனைவரும் ஈகோவை விட்டு இணைந்து பயணித்தாலே இழந்து போன உரிமைகளை படிப்படியாக பெற முடியும்

இது தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் நபர்களால் எதுவும் செய்ய முடியாது மட்டுமல்ல,  அவர்கள் உள்ளதையும் கெடுத்து குட்டி சுவராக்கி ஒரு பலவீனமான மக்கள் கூட்டத்தையே உருவாக்குவார்கள்,  என்பதை அனுபவ வாயிலாக அறிந்து கொண்டோம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

liberal தன்மை கொண்ட அரசாங்கம் ஶ்ரீலங்காவில் இயல்பாக உருவாக வேண்டியதும் அவசியம். 

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தராளவாத கொள்கையுடைய அரசு இன்றுவரை அமைந்ததா என்றால் இல்லை என்றுதான் பதில் உள்ளது அப்போ நடக்காத விடயத்தை நீங்கள்  தொட்டு கொள்வதன் காரணம் என்ன ?

1 hour ago, பெருமாள் said:

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தராளவாத கொள்கையுடைய அரசு இன்றுவரை அமைந்ததா என்றால் இல்லை என்றுதான் பதில் உள்ளது அப்போ நடக்காத விடயத்தை நீங்கள்  தொட்டு கொள்வதன் காரணம் என்ன ?

பிரேமதாச பதவியில் இருக்கும் போது புலிகள் தமது ஆயுதங்களுடன் கொழும்புக்கு பேச்சுவார்ததைக்கு வர அனுமதித்து தாராளம் இல்லையா? ( பின்பு ஆயுதத்துடன் அவரிடமே சென்றது வேறு விடயம்) 

2002 மாவீரர்ர தினத்தை ஐரோப்பாவுக்கு ரூபவாஹினி தொலைக்காட்சி மூலம் அஞ்சல் செய்ய அனுமதித்தது, புலிகளின் குரல் வானொஙிக்குதேவையான தொலைத்தொடர்பு சாதனங்களை நோர்வே அன்பளிப்பு செய்த போது அதை கொழுப்பு துறைமுகத்தில் இருந்து வன்னிக்கு எடுத்து செல்ல அனுமதித்தது, சந்திரிக்கா காலத்தில் பேச்சுவார்ததை மேசையில் இலங்கை தேசிய கொடிக்கு இணையாக புலிகளின் கொடியையும் அனுமதித்தது போன்றவை சமாதானத்துக்கான தாரளம் இல்லையா?  

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, tulpen said:

சிம்பிளா சொல்வது என்றால் எவருமே இதய சுத்தியுடன் நடந்து கொள்ளவில்லை பிரேமதாச புலிகளுக்கு ஆயுதங்களை ஒருபுறம் கொடுத்துகொன்டே மறுபுறம் நவீன ஆயுத கொள்முதல் செய்துகொண்டு இருந்தார் விளைவு ஆனையிறவு ஆகாயவெளி சமர் இழப்பு .சந்திரிகா மேசையில் கொடியை அனுமதித்த அளவுக்கு பெடரலில் அதிக விட்டுக்கொடுப்புகளுக்கு தராமல் இழுத்தடிக்கொண்டு குண்டு வீச்சு விமானம்களை வாங்கி குவிப்பதில் ஈடுபாடு காட்டினார்  இறுதி யுத்தத்தில் அதே நோர்வே விரும்பியிருந்தால் பொதுமக்கள் இழப்பை குறைத்து இருக்கலாம் நடந்தது என்ன ? கடைசியாக நின்ற ஐநா கூட தங்கள் உளவு வேலை முடிந்ததும் பெட்டி படுக்கையுடன் கொழும்புக்கு ஓடியவர்கள்தானே .

மேலும் விளக்கம் தேவையென்றால் .

29 minutes ago, பெருமாள் said:

சிங்களவர்கள் தீர்வு தர மாட்டார்கள் என்றால் யாரிடம் தீர்வை கேட்பது என்று அந்தக் கூட்டதிலேயே மக்கள் யோகியிடம் கேட்டிருக்கலாம்.😂

சும்மா பகடிக்கு பெருமாள். நானோ நீங்களோ அன்று அப்படி கேட்டிருந்தால் இப்போது இருவருமே இந்த யாழ் களத்தில் விவாதிக்கும் வாய்பபை இழந்திருப்போம். 😂

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

சிங்களவர்கள் தீர்வு தர மாட்டார்கள் என்றால் யாரிடம் தீர்வை கேட்பது என்று அந்தக் கூட்டதிலேயே மக்கள் யோகியிடம் கேட்டிருக்கலாம்.😂

சும்மா பகடிக்கு பெருமாள். நானோ நீங்களோ அன்று அப்படி கேட்டிருந்தால் இப்போது இருவருமே இந்த யாழ் களத்தில் விவாதிக்கும் வாய்பபை இழந்திருப்போம். 😂

ஓவர் கற்பனை உடம்புக்கு கேடு யோகியர் அப்படி செய்யும் ஆளும் அல்ல புலிகளின் 2003க்கு பிறகு வன்னிக்கு பாரிய புலி எதிர்ப்பாளர் கூட சென்றுவந்தனர் .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

இதை அடைய சுமந்திரனால் மட்டுமல்ல எந்த ஒரு தனி மனிதனாலும்  முடியாது.

இது மிகவும் சரியான பதில் 

13 hours ago, tulpen said:

அரசியல் தலைவர்கள் அனைவரும் ஈகோவை விட்டு இணைந்து பயணித்தாலே இழந்து போன உரிமைகளை படிப்படியாக பெற முடியும்

இணைத்து பயணித்தாலும் உரிமைகளைப் பெறமுடியாது காரணம் யாராவது தந்தார்கள் என்றால் தானே வேண்டமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நானோ நீங்களோ அன்று அப்படி கேட்டிருந்தால் இப்போது இருவருமே இந்த யாழ் களத்தில் விவாதிக்கும் வாய்பபை இழந்திருப்போம். 😂

இரண்டு மகா குருவின் கருத்துக்களை யாழ்களத்தில் காணும் வாய்ப்பை நாமும் இழந்திருப்போம். அல்லா காப்பாற்றிவிட்டார்.
அது தான் தமிழினி அக்காவும் மவுனம் காத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இது மிகவும் சரியான பதில் 

உலகத்தில் மிக மிக சுலபமான விடயம் இது தான். 

முடியாது அல்லது முயற்சி அற்றிருப்பது.

ஆனால் முடியும் அல்லது முயற்சி என்பதே கடினமானது அல்லது அடுத்த வழி ஒன்றை உருவாக்கி தரக்கூடியது.

ஒரு செயலுக்கு முன் கோடி முயலாமைகளும் முடியாமைகளும் பூச்சியம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.