Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சனை முடிந்துவிட்டது -பிரித்தானியாவில் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குணா, உங்களுக்கும் யூ ரியூபிலும் யாழிலும் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய அவசரத்தில் திரித்தல் செய்ய வேண்டிய தேவை வந்திருப்பது துரதிர்ஷடம் தான்!

 post-conflict accountability என்றால் "மோதல் முடிந்த பின்னரான பொறுப்புக் கூறல்" என்ற அர்த்தத்தை பல்வேறு முன்னைய உதாரணங்களில் தந்திருக்கும் போது war என்று ஒரு சொல்லை (தும்பை) ப் பிடித்துக் கொண்டு மக்களுக்கு ஏன் தவறான தகவலைக் கொடுக்கிறீர்கள்? 

நீங்கள் சொல்லும்  post-conflict vs post-war  பாவிக்கப் பட்ட முன்னைய உதாரணங்களை குறிப்பிட முடியுமா?

Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து வடிவத்தில் transcript இணைத்தால் காணொலி பற்றிய நமது பொன்னான கருத்தையும் பகரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சுத்துமாத்து ஆள் தான் அதில் இருவேறு கருத்தில்லை.

ஆனால்.. குறிப்பிட்ட ரிவிட்டர்.. மோதலுக்குப் பின்னான.. என்று தான் சொல்லி இருக்கே தவிர.. post - ethnic conflict என்று பாவிக்கப்படவில்லை. 

இவர் குணா என்றவர் பல இடங்களில் தனது அரைகுறை விளக்கத்தை மக்களிடம் திணிக்க முயல்வது கண்கூடு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

குணா, உங்களுக்கும் யூ ரியூபிலும் யாழிலும் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய அவசரத்தில் திரித்தல் செய்ய வேண்டிய தேவை வந்திருப்பது துரதிர்ஷடம் தான்!

 post-conflict accountability என்றால் "மோதல் முடிந்த பின்னரான பொறுப்புக் கூறல்" என்ற அர்த்தத்தை பல்வேறு முன்னைய உதாரணங்களில் தந்திருக்கும் போது war என்று ஒரு சொல்லை (தும்பை) ப் பிடித்துக் கொண்டு மக்களுக்கு ஏன் தவறான தகவலைக் கொடுக்கிறீர்கள்? 

நீங்கள் சொல்லும்  post-conflict vs post-war  பாவிக்கப் பட்ட முன்னைய உதாரணங்களை குறிப்பிட முடியுமா?

26 minutes ago, nedukkalapoovan said:

சுமந்திரன் சுத்துமாத்து ஆள் தான் அதில் இருவேறு கருத்தில்லை.

ஆனால்.. குறிப்பிட்ட ரிவிட்டர்.. மோதலுக்குப் பின்னான.. என்று தான் சொல்லி இருக்கே தவிர.. post - ethnic conflict என்று பாவிக்கப்படவில்லை. 

இவர் குணா என்றவர் பல இடங்களில் தனது அரைகுறை விளக்கத்தை மக்களிடம் திணிக்க முயல்வது கண்கூடு. 

இரு வேறு கோணங்களில் எப்போதும் சிந்திக்கும் நெடுக்க்ஸினதும், ஜஸ்டினதும் மிக நியாயமான அவதானிப்புகள்.

குணா ஊரில் இருந்து நஞ்சுண்டகாடு எழுதியமைக்கும் அந்த நாவலில் சொல்லபட்ட விடயத்துக்கும் யாழில் எதிர்ப்பு எழுந்த போது அதை எதிர்த்தும் அவரினை ஆதரித்தும் எழுதியவன் நான்.

ஆனால் அப்போ இருந்த போரில் சம்பந்தபட்ட, கள யதார்த்தத்தை புரிந்து கொண்ட பார்வைக்கும் இப்போது வெளிநாடு வந்த பின் அவரின் நிலைப்பாட்டுக்கும் பாரிய வித்தியாசத்தை உணர்கிறேன்.

எவரினதும் agenda வுக்கு அமைய செயல்படுகிறாரா? அல்லது ஆர்வ கோளாறா? அல்லது YouTube லைக்ஸ்சை இப்படிதான் அள்ள முடியும் என்ற வியாபாரயுக்தியா? அல்லது இப்போதுதான் (வெளிநாட்டில்) சுதந்திரமாக கருத்து சொல்ல அவரால் முடிகிறதா?

தெரியவில்லை.

ஆனால் நிச்சயம் இவரின் வீடியோக்கள் மக்கள் மனதில் குழப்பத்தை, அரைகுறை புரிதலை ஏற்படுத்துவது உண்மை.

ஆனால் யாழ் போன்ற தளங்களில் கனகாலம் இந்த குதிரை ஓடாது.

நான் இப்போதெல்லாம் குணாவின் வீடியோக்களை பார்பதே இல்லை. அந்தளவுக்கு “அவித்து கொட்டல்”.

ஆனால் ஒன்று. 

பரபரப்பு ரிசி,

வேல்சில் இருந்து அரூஸ்,

நிலாந்தன்,

திருநாவுக்கரசர்.

என பல பத்தி ஆசிரியர்களையும், ஆரூட சோதிடர்களையும் யாழ் கண்டே வந்துள்ளது.

அடுத்த பேச்சுவார்த்தை எல்லை நிர்ணயம் பற்றித்தான் என்று ஏதோ தலைவருக்கு பக்கதில் நிற்பவர்கள் போல வாய்சவாடல் விட்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இன்னமும் எழுதுகிறார்கள்🤦‍♂️.

தனக்கு விடயங்கள் தெரியும் என்று நிறுவும் அந்தரிப்பில், தெரியாத விடயங்களை தெரிந்ததாக காட்டுவதில்,  குணா விரைவில் இந்த பட்டியலில் சேரக்கூடாது என்பதே என் கவலை.

@Kuna kaviyalahan

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

தனக்கு விடயங்கள் தெரியும் என்று நிறுவும் அந்தரிப்பில், தெரியாத விடயங்களை தெரிந்ததாக காட்டுவதில்,  குணா விரைவில் இந்த பட்டியலில் சேரக்கூடாது என்பதே என் கவலை

 நானும் உங்களுடன் மேற்குறிப்பிட்ட  கருத்துக்களை மனதார ஆமோதிக்கிறேன் ,👍

  • கருத்துக்கள உறவுகள்

குணாவின் அரசியல் அறிவிலும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான அக்கறையிலும் நான் பெரிதும் மதிப்பு வைத்திருக்கிறேன். அவரது காணொளிகளைத் தொடர்ச்சியாகத் தவறாது பார்த்து வருகிறேன். அவ்வப்போது அவரது காணொளிகளில் எனது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறேன். சிலவிடங்களில் குணா தவறுதலாக இட்ட சில கருத்து மற்றும் தகவற்  பிழைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஆனால், இன்று குணா வெளியிட்ட காணொளியில், இங்கிலாந்தின் தென்னாசியாவுக்கான வெளியுறவுச் செயலாளரின் கீச்சகப் பதிவில் வெளியான "Post conflict" எனும் பதத்தினைக் குணா எடுத்துக்கொண்ட அல்லது விளங்கிக்கொண்ட விதம் தவறென்பது அப்பட்டமாகத் தெரிந்தது. போரின் பின்னரான என்பதற்குப் பதிலாக, தமிழர்களின் பிரச்சினைகளுக்குப் பின்னரான எனும் தொனிப்பட அவர் அதனை எடுத்துக்கொண்டு விமர்சிப்பதாகவே எனக்குப் படுகிறது. இதனை அவர் விளங்கப்படுத்துவது அவசியமானது. 

அவரின் காணொளிகளின் கீழ் பலர் தொடர்ச்சியாக வந்து அவரைப் புகழ்வது நடப்பதென்பது உண்மை. அவர் என்ன சொல்லவருகிறார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், எழுந்தமானமாக அவரைப் புகழ்வதும் ஆரோக்கியமானதல்ல. அவரின் கருத்துக்களில் தவறிருப்பின் அதனைச் சுட்டிக்காட்டுவதும் அவசியமானது. அதனை விடுத்து, கண்மூடித்தனமாக அவர் முன்வைக்கும் தவறான புரிதல்களுடனான கருத்துக்களை ஆதரிப்பது ஆரோக்கியமானதல்ல.

சுமந்திரன் செய்யும் அரசியலில் பற்றிப் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. அவரின் அரசியல் நிலைப்பாடு தமிழரின் நியாயத்தை இன்னும் பலவீனப்படுத்திவருகிறது என்பதை நாம் நம்புகிறேன். ஆகவே குணா போன்றவர்கள்   சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை விமர்சிப்பதை, கேள்விகேட்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இது மிகவும் தேவையானதொன்று. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்துகொண்டு, அதே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை பலவீனப்படுத்தும் காரியங்களில் ஈடுபடுவோர் நிச்சயமாக  விமர்சிக்கப்பட்டு, ஆற்றுப்படுத்தப்பட வேண்டும், இதில் மாற்றுக்கருத்தில்லை. 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kuna kaviyalahan said:

காணொளியில் 1:00 நிமிடத்தில்  இல், சுமந்திரன் தான் சொல்லித்தான் சிறுபான்மை மக்கள் எனற பதத்தை  அமெரிக்கா அதிகாரிகள் மாற்றினார்கள் என குணா  சொல்லுகின்றார்.சுமந்திரன் அப்படி சொல்லவேயில்லை, கீழுள்ள காணொளியில் காண்க. மற்றவர்களை சேறடிக்க யாழ் களத்தை பாவிக்க கூடாது என்பது என்னுடைய அவா ஆகும்.

51 minutes ago, goshan_che said:

குணா ஊரில் இருந்து நஞ்சுண்டகாடு எழுதியமைக்கும் அந்த நாவலில் சொல்லபட்ட விடயத்துக்கும் யாழில் எதிர்ப்பு எழுந்த போது அதை எதிர்த்தும் அவரினை ஆதரித்தும் எழுதியவன் நான்.

ஆனால் அப்போ இருந்த போரில் சம்பந்தபட்ட, கள யதார்த்தத்தை புரிந்து கொண்ட பார்வைக்கும் இப்போது வெளிநாடு வந்த பின் அவரின் நிலைப்பாட்டுக்கும் பாரிய வித்தியாசத்தை உணர்கிறேன்.

எவரினதும் agenda வுக்கு அமைய செயல்படுகிறாரா? அல்லது ஆர்வ கோளாறா? அல்லது YouTube லைக்ஸ்சை இப்படிதான் அள்ள முடியும் என்ற வியாபாரயுக்தியா? அல்லது இப்போதுதான் (வெளிநாட்டில்) சுதந்திரமாக கருத்து சொல்ல அவரால் முடிகிறதா?

நானும் உதைத்தான் நினைச்சனான்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, zuma said:

காணொளியில் 1:00 நிமிடத்தில்  இல், சுமந்திரன் தான் சொல்லித்தான் சிறுபான்மை மக்கள் எனற பதத்தை  அமெரிக்கா அதிகாரிகள் மாற்றினார்கள் என குணா  சொல்லுகின்றார்.சுமந்திரன் அப்படி சொல்லவேயில்லை, கீழுள்ள காணொளியில் காண்க. மற்றவர்களை சேறடிக்க யாழ் களத்தை பாவிக்க கூடாது என்பது என்னுடைய அவா ஆகும்.

உண்மையை சொல்வதால் சுமத்திரனின் சுத்துமாத்து தனம் வெளிவந்துவிடும் என்பதுக்காக அட்வான்சா பெயில் எடுப்பது போல் மற்றவர்கள் சேறடிக்க கூடாது என்று சொல்லி உண்மையை மறைக்க கூடாது 1.40லிருந்து நன்றாக பார்க்கவும் சுமத்திரனின் பித்தலாட்டத்தை தோலுரிக்கிறார் .

52 minutes ago, ரஞ்சித் said:

சுமந்திரன் செய்யும் அரசியலில் பற்றிப் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. அவரின் அரசியல் நிலைப்பாடு தமிழரின் நியாயத்தை இன்னும் பலவீனப்படுத்திவருகிறது என்பதை நாம் நம்புகிறேன். ஆகவே குணா போன்றவர்கள்   சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை விமர்சிப்பதை, கேள்விகேட்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இது மிகவும் தேவையானதொன்று. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்துகொண்டு, அதே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை பலவீனப்படுத்தும் காரியங்களில் ஈடுபடுவோர் நிச்சயமாக  விமர்சிக்கப்பட்டு, ஆற்றுப்படுத்தப்பட வேண்டும், இதில் மாற்றுக்கருத்தில்லை. 

நன்றி ரஞ்சித் 

  • கருத்துக்கள உறவுகள்

இது சேறடிப்பு அல்ல 6.40 லிருந்து பார்க்கவும் அவரின் சிங்களவிசுவாசத்தை சிங்களத்துக்கு உள்ள விசுவாசத்தில் ஓட்டுப்போட்ட தமிழர்களுக்கு கொஞ்சமாவது பொசியுங்க என்றுதானே கேட்கிறம் ஒன்றுமே செய்யாமல் ரணிலின் ஆட்சியில் உங்களால் தமிழர்களுக்கு எவ்வளவோ செய்து இருக்கலாம் அப்போதெல்லாம் பெட்டியை நிரப்புவதிலே குறியாய் இருந்துவிட்டு இப்ப வெளிநாடு வந்து இப்படி திமிராக சொல்லிக்கொள்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

உண்மையை சொல்வதால் சுமத்திரனின் சுத்துமாத்து தனம் வெளிவந்துவிடும் என்பதுக்காக அட்வான்சா பெயில் எடுப்பது போல் மற்றவர்கள் சேறடிக்க கூடாது என்று சொல்லி உண்மையை மறைக்க கூடாது 1.40லிருந்து நன்றாக பார்க்கவும் சுமத்திரனின் பித்தலாட்டத்தை தோலுரிக்கிறார் .

நன்றி ரஞ்சித் 

குணா அவர்கள் மற்றவர்களை தோல் உரிக்கின்றது என்று, தனது முகத்தில் கரி பூசியுள்ளார்.🤪

27 minutes ago, பெருமாள் said:

இது சேறடிப்பு அல்ல 6.40 லிருந்து பார்க்கவும் அவரின் சிங்களவிசுவாசத்தை சிங்களத்துக்கு உள்ள விசுவாசத்தில் ஓட்டுப்போட்ட தமிழர்களுக்கு கொஞ்சமாவது பொசியுங்க என்றுதானே கேட்கிறம் ஒன்றுமே செய்யாமல் ரணிலின் ஆட்சியில் உங்களால் தமிழர்களுக்கு எவ்வளவோ செய்து இருக்கலாம் அப்போதெல்லாம் பெட்டியை நிரப்புவதிலே குறியாய் இருந்துவிட்டு இப்ப வெளிநாடு வந்து இப்படி திமிராக சொல்லிக்கொள்கிறார் .

சுமந்திரன் பெட்டி வாங்கும் போது நீங்களா torch light அடித்தீர்கள், சும்மா வாய்க்கு வந்தமாதிரி எடுத்து விடக்கூடாது.😋

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

பெருமாள், இந்த பெட்டி வாங்கினதுக்கு "உசாத்துணை" ஏதாவது இருக்கோ? ஐ மீன் வீடியோ ஏதாவது?😎 

  • கருத்துக்கள உறவுகள்

வியந்து போனேன் ,  நித்திரை கொண்டு எழும்பமுன் வித்தின் டொன்ட்டி பார் அவர்சில தீர்ற ஒரு விஷயத்திற்கா இந்த அலப்பறை எண்டு .....🤔

ஆனாலும் மீசைக்கார நண்பா உனக்கு குறும்பு கொஞ்சம் ஜாஸ்தி தான்..😜

பாத்து வாசியடா மேனே ..... 😡

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:
1 hour ago, Justin said:

பெருமாள், இந்த பெட்டி வாங்கினதுக்கு "உசாத்துணை" ஏதாவது இருக்கோ? ஐ மீன் வீடியோ ஏதாவது?😎 

🤪

சுமந்திரன் பெட்டி வாங்கும் போது நீங்களா torch light அடித்தீர்கள், சும்மா வாய்க்கு வந்தமாதிரி எடுத்து விடக்கூடாது.😋

ஒன்றல்ல இரண்டல்ல 4000 சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் இலவச காணி கொடுத்து இருக்கிறார் உங்கள் சுமத்திரன் சிங்களத்துக்கு உதவி செய்யுங்க ஆனால் உங்களுக்கு ஒட்டு போட்ட தமிழ் சனம் தங்களின் சொந்த காணிக்குள் போகமுடியாமல் மழையிலும் வெள்ளத்திலும் அனாதையாய் நிக்குதுகள் அப்ப  யாருக்கு சேவை செய்ய என்று தமிழ்மக்களிடம் பொய் சொல்லி வென்று (அதுவே ஒரு பித்தலாட்டம் )வந்தது ?

பெட்டி ஆதாரம் நேரடியாய் அவர்களிடம் கதைக்கப்போனால் அவர்களே சொல்லுவார்கள்  🤣

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திர மட்டத்தில் பயன்படுத்தப்படும் சொற்பதங்களின் நுணுக்கங்கள் பற்றிய அவதானமும் வார்த்தைப் பிரயோகங்க்கள் பற்றிய விழிப்புணர்வும் அனைத்து மக்களும் தேவை என்பதுடன் அதை தெரிந்துவைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை கோடிட்டு காட்டவே குணா முயற்சிப்பதாகவே நான் இந்த காணொளியை புரிந்துகொள்கிறேன். நீண்டகாலமாகவே இழுத்தடிக்கப்பட்டுவரும் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான முக்கியத்துவம் கால ஓட்டத்தில் தரமிறக்கப்படாமல் தீர்வு எட்டும்வரை அதை உயிர்ப்புடன் பேணவேண்டும் என்பதையும் அவர் இங்கு வலியுறுத்துகிறார்.

பேச்சுவார்த்தைகளின்போது முகத்துக்கு நேரே சொல்லமுடியாத தங்கள் தரப்புக்கு மட்டுமே அனுகூலமான ஒரு மறைமுக வாதப்பொருளை அறிக்கை வாயிலாக அல்லது செய்திகள் வழங்கும்போது உள்புகுத்திவிடுவது எதிர்தரப்பின் நாடிபிடித்துபார்க்கும் வழமையான உத்திதான். அதை கண்டுகொள்ளாமல் இருக்கும்பட்சத்தில் எதிர் தரப்பில் நாங்கள் ஏற்றுக்கொண்டதாக கருத சாத்தியம் உண்டு. எனவே இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தை நிகழ்ச்சிகள்  கூட்டங்கள் என்பனவற்றில் ஒவ்வாத கருத்துக்கள் முன்வைக்கப்படும் வேளைகளில் அதை உடனடியாக சுட்டிகாட்டவேண்டியது மிக அவசியம்.

இனப்பிரச்சினை என்பதை ethnic conflict என்றும் ஆயுதபோரட்டத்தை civil war என்றும் கொண்டால் இதில் முடிந்தது war முடியாமல் தொடர்வது conflict. எனவே முன்னர் பின்னர் என்று விமர்சிக்கும்போது நடந்து முடிந்த ஒன்றை சார்ந்து நிற்பதுதான் முறை. அதாவது post war என்று குறிப்பிடுவதுதான் மிகச்சரி என்பது எனது வாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

ஒன்றல்ல இரண்டல்ல 4000 சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் இலவச காணி கொடுத்து இருக்கிறார் உங்கள் சுமத்திரன் சிங்களத்துக்கு உதவி செய்யுங்க ஆனால் உங்களுக்கு ஒட்டு போட்ட தமிழ் சனம் தங்களின் சொந்த காணிக்குள் போகமுடியாமல் மழையிலும் வெள்ளத்திலும் அனாதையாய் நிக்குதுகள் அப்ப  யாருக்கு சேவை செய்ய என்று தமிழ்மக்களிடம் பொய் சொல்லி வென்று (அதுவே ஒரு பித்தலாட்டம் )வந்தது ?

பெட்டி ஆதாரம் நேரடியாய் அவர்களிடம் கதைக்கப்போனால் அவர்களே சொல்லுவார்கள்  🤣

இது உசாத்துணையா? அல்லது "உசாவின் துணையா?" 4000 பேருக்கு காணி ஒரு பெட்டிக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தாரா? 😂

(ஆதாரம் என்ற தமிழ் வார்த்தைக்கே அர்த்தம் புரியாமல்  எப்படி ஐயா எல்லாரையும் ஆதாரம் தா ஆதாரம் தா என்று தலையைச் சப்புகிறீர்கள்?)   

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

இது உசாத்துணையா? அல்லது "உசாவின் துணையா?" 4000 பேருக்கு காணி ஒரு பெட்டிக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தாரா? 😂

எப்படி கொடுத்தார் என்று நீங்கள் தான் சுமத்திரனை கேட்டு சொல்லணும் . அந்த செய்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் கூறியுள்ளார் என்று இலக்கு தளத்தில் வந்திருக்கிறது மேலும் பொதுவிவாதத்துக்கு அறைகூவல் சுமத்திரனை  நோக்கி விடப்பட்டுள்ளது சுமத்திரன்  நேர்மையான அரசியல்வாதி என்றால் பொதுவிவாதத்துக்கு போக சொல்லி விடுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

அப்ப உங்களுக்கு செய்தி உண்மையா என்பதும் தெரியாது - இன்னொருவர் சொல்லி, அதை ஒரு ராய்லெற் ஊடகம் போட இங்கே வந்து அது "உசா துணை"ஆதாரம்😎. இந்த லட்சணத்தில் ஆட்கள் வேலையையும் விட்டுப் போட்டு வெட்டியாய் இருக்கிறவரோட பொது விவாதம் வேற செய்ய வேணுமாம்!

சுமந்திரன் பெட்டியை வாங்கி, தனக்கு வைத்திருக்காமல் சிங்களவனுக்கு காணி வாங்கிக் கொடுக்கிறார் என்று ஒருவர் சொன்னால் அதை நம்பி ஏற்கிற அளவுக்கு இருக்கிறீர்கள்!

உங்களை ஏய்ப்பது மிகவும் கஷ்டமய்யா! சுமந்திரன் பாவம்! 😉

  • கருத்துக்கள உறவுகள்

யானைக்கும் அடி சறுக்கும், குணா தான் நிலையை விலக்கும் வரை இங்கு பலர் பெரித்து தள்ளுகின்றார்கள், இது அவர்களின் பொறமை / காழ்ப்புணர்வு🤔

. இப்பொழுது சிலர் பாவிக்கும் வாக்கியம் "இவர் யாரோ ஒருவருக்கு வேலை செய்கின்றார்", ஒருவரை தாக்கி புறந்தள்ள😂

. குணா இது தமிழினம், தொடருங்கள் உங்கள் ஆய்வுகளுடன்...

குணா விருப்பு வாக்குகளை அள்ளி குவித்து லண்டனில் பல சொத்துக்களை வாங்கி குவித்துவிட்டார், இன்னும் பல அவரின் திட்டதிலிருக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

அப்ப உங்களுக்கு செய்தி உண்மையா என்பதும் தெரியாது - இன்னொருவர் சொல்லி, அதை ஒரு ராய்லெற் ஊடகம் போட இங்கே வந்து அது "உசா துணை"ஆதாரம்😎. இந்த லட்சணத்தில் ஆட்கள் வேலையையும் விட்டுப் போட்டு வெட்டியாய் இருக்கிறவரோட பொது விவாதம் வேற செய்ய வேணுமாம்!

ரொய்லெட் ஊடகத்தையா @கிருபன்  இங்கு இணைக்கிறார் ? ஒரு ஊடகம் ரொய்லெட் ஊடகம் ஆக இருக்கா இல்லையா என்பதை நிர்வாகம் முடிவெடுத்து  அனுமதித்து இருக்கு  எனக்கும் வேலைவெட்டி உள்ளது தனிப்பட்ட தாக்குதல் வேண்டாமே உங்களுக்கு விருப்பம் என்றால் பதில் கருத்து இடவும் இல்லையென்றால் ஆறுதலாகத்தன்னும் வந்து பதில் போடலாமே ? விருப்பம் இல்லையென்றால் போடாமலும் விடலாம் நான் சொல்வது எப்பவும் கூல் பிரிட்ஜ் ஆக இருங்க உடம்புக்கு நல்லது .

16 minutes ago, Justin said:

சுமந்திரன் பெட்டியை வாங்கி, தனக்கு வைத்திருக்காமல் சிங்களவனுக்கு காணி வாங்கிக் கொடுக்கிறார் என்று ஒருவர் சொன்னால் அதை நம்பி ஏற்கிற அளவுக்கு இருக்கிறீர்கள்!

உங்களை ஏய்ப்பது மிகவும் கஷ்டமய்யா! சுமந்திரன் பாவம்! 

சுமத்திரனால் தமிழரை ஏய்க்க  முடியுதே  வலிந்து காணமால் ஆக்கப்பட்டோரை அலரிமளிகைக்கு கதைக்க  கூப்பிடுகினம் ஆனால் அங்கு அழையா  விருந்தாளியாக சுமத்திரன்  போய்  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுடன் கதைக்க வேண்டாம் தன்னுடன் மட்டுமே கதைக்கணும் என்று அடம்பிடிக்கிறார் ஏன் ? 

பதில் சிந்தாமல் சிதறாமல் பதில் இருந்தால் தரவும் இல்லையென்றாலும் பரவாயில்லை 😀

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை குணா பல அரசியல் காணொளிகளை இணைத்துவிட்டார்ர ஆனால் இதில்மட்டும் வந்து குத்திமுறிவது பலரின் இயலாமையை காட்டுகின்றது😂, எப்படா சந்தர்ப்பம் கிடைக்குமென்று காத்திருந்த இளவு காத்த கிளிகள் இவர்கள் குணா👍

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

இதுவரை குணா பல அரசியல் காணொளிகளை இணைத்துவிட்டார்ர ஆனால் இதில்மட்டும் வந்து குத்திமுறிவது பலரின் இயலாமையை காட்டுகின்றது😂, எப்படா சந்தர்ப்பம் கிடைக்குமென்று காத்திருந்த இளவு காத்த கிளிகள் இவர்கள் குணா👍

பொது வெளியில் தனது முகத்தை காட்டியே கருத்துக்களை வைப்பவர் மீது இவ்வளவு வன்மம் கூடாது அவரின் சுதந்திரமான கருத்துக்களை முனை மங்க செய்யலாகாது என்ன அவரின் நேர்மையான அரசியல் பார்வையில்  சுமத்திரனின் நடவடிக்கைகள் விமரிசனம் செய்வது தற்போது சுமத்திரனின் பக்கம் நிற்பவர்களால் (நாளை சுமத்திரனின் உண்மையான முகம் தெரிந்து விட்டு வந்துவிடுவார்கள் எனும் நம்பிக்கை உண்டு ) ஜீரணிக்க முடியாமல் கடுமையாக தாக்கப்படுகின்றார். மேலும் சாதராண தமிழ் மக்களுக்கு விளங்கும்வகையில் அரசியல் விளக்கம்கள் இருப்பதினால் தங்களுக்கு மட்டுமே அரசியல் அறிவென்பது இருக்கனும் என்று நினைக்கும் மாந்தர்களினாலும் வெறுக்கப்படும் ஆபத்தும் உண்டு அதே நேரம் விளக்கத்தை இலகுவாக்குகின்றேன் என்று சில எழுத்து  வித்தியாசம்களில் பிழைகள் ஏற்படவும் சாத்தியம் உண்டு .

மேலும் அவரின் subscribers வளர்ச்சி   மேலும் பார்வையாளர்களின் views எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இதைவிட மோசமான விமரிசனம்கள் காணவேண்டி ஏற்படும் .

  • கருத்துக்கள உறவுகள்

சில தவறுகள் இருக்கலாம்... இல்லை என்று சொல்லமுடியாது.

அதுக்காக..... முகத்தைக் காட்டி துணிவாக அரசியல் கருத்து சொல்பவர்களை, தட்டிக் கொடுத்து ஆதரவு தரவேண்டுமே அன்றி.... நிறுத்து போதும்..... நாம் இங்க... பெரும் மேதாவிகள்..... என்ற ரீதியில் மட்டம் தட்டுவது சரியும் அல்ல, அழகுமல்ல.

அவரது வீடியோக்களை, வேறு யாராவது போட்டாலாவது பரவாயில்லை.

தானே போடும் ஒரு களஉறவு. ஆகவே, அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பதுடன்..... தவறு இருந்தால், தோழமைச் சுட்டுதல் செய்வோம்.

குணா.... அடுத்த வீடியோ எப்ப வரும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வளமான சமூகத்தை கட்டி எழுப்பப்படவேண்டும் எனில் தர்க்க ரீதியாகவும், சனநாயக ரீதியாகவும் கேள்விகள் எழுப்பப்படல் வேண்டும். இதைத்தான் எமது முன்னோர்கள்   எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு  என்று சொல்லி உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

 அவரை குற்றம் சொல்லுவது நோக்கமில்லை என்பது தெளிவு,

நிறைய தகவல்கள் உலகம் பூராக சிதறிக் கிடக்கிறது.

37 minutes ago, zuma said:

தர்க்க ரீதியாகவும், சனநாயக ரீதியாகவும் கேள்விகள் எழுப்பப்படல் வேண்டும்

தகவல்களில் இருந்து ,முடிவுகள் எடுத்து ஒரு வளமான அரசியலை கொண்டுவர முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.