Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆனால் பலருக்கு இன்று உண்மை விளங்கி இருக்கும் என்ற திருப்தி எனக்கு😎.

அதே திருப்தி தானே எனக்கும்....😁

  • Replies 186
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

Kebab எப்படி, நல்லமா?

உருண்டு, பிரண்டு உருட்டினாலும்...... இன்று முறையாக சிக்குண்டு போனியள் என்பதில் மாற்று கருத்து இல்லை.... 😁

அடுத்த விடயத்துக்கு, ஆதாரம் வரும் போது... முழசப்போகிறீர்கள்....😜

நீங்கள் உருட்டாத உருட்டா - ஆனால் என்ன முந்தி நம்பின ஆக்களுக்கு கூட உண்மை முகம் நல்லா வெளிச்சிருக்கும். 

இண்டையோட இன்னும் ரெண்டு விக்கெட் காலி.

ஆதாரம்? நீங்கள்? அதுக்கு சான்சே இல்லை. அவ்வளவு நம்பிக்கை நீங்கள் சொன்னாலே அது அடித்து விடுதல்தான் என்பதில்🤣.

கெபாப் அந்த மாரி.

இண்டைகு 4.30 பின்னேரம்தான் எழும்பினது. இரவு நேரம் எப்படி போகுமோ எண்டு நினைச்சன்.

நல்ல கெபாப் ஒண்டு மாட்டிச்சு - வச்சி செஞ்ச்சாச்சு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நீங்கள் உருட்டாத உருட்டா - ஆனால் என்ன முந்தி நம்பின ஆக்களுக்கு கூட உண்மை முகம் நல்லா வெளிச்சிருக்கும். 

இண்டையோட இன்னும் ரெண்டு விக்கெட் காலி.

ஆதாரம்? நீங்கள்? அதுக்கு சான்சே இல்லை. அவ்வளவு நம்பிக்கை நீங்கள் சொன்னாலே அது அடித்து விடுதல்தான் என்பதில்🤣.

கெபாப் அந்த மாரி.

தலைவர் குடு்ம்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது என்று புலனாய்வாளர் பொய்யை விதைக்கிறார்கள் என்று அடித்து விட்டு, எல்லாம்தெரிந்த பிஸ்தா என்று நிணைக்க வைத்து விட்டு..... மீரா வந்து கதையை குளோஸ் பண்ணும் போதே சொன்னேன்....இன்று இவருக்கு உருட்டல் சிவராத்திரி என்று....:grin:

தெரியாமல் உளறுவது ஆபத்தானது..... தவிர்ப்பது நல்லது. 😁

படுக்கப்போறன் ...... நாளை திரி பூட்டாமல் இருந்தால்..... உருட்டுங்கள்.... நேரம் இருந்தால் எட்டிப் பார்க்கிறேன். 👍

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தலைவர் குடு்ம்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது என்று புலனாய்வாளர் பொய்யை விதைக்கிறார்கள் என்று அடித்து விட்டு, எல்லாம்தெரிந்த பிஸ்தா என்று நிணைக்க வைத்து விட்டு..... மீரா வந்து கதையை குளோஸ் பண்ணும் போதே சொன்னேன்....இன்று இவருக்கு உருட்டல் சிவராத்திரி என்று....:grin:

தலைவர் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது என்பது சின்ன பிள்ளைக்கும் தெரியும் 🤦‍♂️.

அவரின் திருமணம், சார்லஸ் அன்ரனி பிறந்தது கூட சென்னையில்தான். அப்போ அவர்களை பாத்த வைத்தியரை கூட நேரில் கண்டு பேசி இருக்கிறேன். தவிரவும் மீரா போட்ட படத்தின் ஒரு பகுதி ஏலவே இதே யாழில் நன்னி போட்டதுதான். 

உங்களுக்கு வேணும் எண்டால் இது வியப்பூட்டும் செய்தியாக இருக்கலாம். யாழில் எழுதும் வேறு யாருக்கும் அப்படி அல்ல.

7 minutes ago, Nathamuni said:

தெரியாமல் உளறுவது ஆபத்தானது..... தவிர்ப்பது நல்லது. 😁

கண்கெட்ட பின்னாவது சூரியநமஸ்காரம் செய்கிறீகள். சந்தோசம்.

7 minutes ago, Nathamuni said:

படுக்கப்போறன்

சந்திப்பம். விசர் ஆஸ்பத்திரி போற அளவுக்கு டென்சன் ஆயிட்டியள், சாப்பாடு வேற 2 ஆகீட்டு🤣

நான் இங்கதான் நிப்பன். நாளைக்கு தெம்பிருந்தா வாங்கோ.

துவாரகாவிற்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பதும் வெளிநாடு சென்று மருத்துவபடிப்பை கற்றார் என்பது சிங்கள புலனாய்வாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளே. அதன் மூலம் மக்களுக்கு புலிகளின் தலைமைமீது ஒரு அதிருப்தியை தோற்றுவிக்கும் எண்ணமே அவர்களுக்கு இருந்தது.

துவாரகா உயர்தரத்தின் பின்னர் விவசாயபீடத்துக்கு தெரிவாகி இருந்தார். இருப்பினும் அவர் அதன் பின்னர் வன்னி தொழினுட்ப நிறுவனத்தில் (வன்னி ரெக்) தகவல் தொழினுட்பம் கற்றார். கூடவே அவரது தோழியான அரசியல்துறைப்பொறுப்பாளரான நடேசன் அண்ணையின் மகளான பிரியதர்ஷினியும் கல்விகற்றார். 

இவர்களின் பாதுகாப்புக்காக வன்னி ரெக் ஆனது ரெக் நிறுவனத்திடமிருந்து கணிணிப்பிரிவு பொறுப்பெடுத்துக்கொண்டது. அப்போது அங்கிருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த புலிகள் சாராத பொறியியல் ஆசான்கள் வெளியேற்றப்பாடார்கள். (இது விமர்சனத்துக்குள்ளானது) 

அப்போது  கணிணிப்பிரிவால் நியமிக்கப்பட்ட இயக்குனரான பேராதனை  பொறியியளார் தயாபரராஜ், தனிப்பட்ட நன்னடத்தை காரணமாக விலக்கப்பட்டார். (2009 ஏப்பரலில் புலிகளின் காவலில் இருந்து தப்பி ஓடி சிங்கள இராணுவத்திடம் சரணடைந்து   இப்போது இந்தியாவில் முகாமில் இருப்பதாக செய்தி)

துவாரகா மற்றும் பிரியதர்சினி உருவாக்கிய தொலை மருத்துவ மென்பொருளும், ஆவணக்காப்பக தேடுபொறி மென்பொருளும் கணிணிப்பிரிவு நடாத்திய கண்காட்சியில் வெற்றிபெற்றன. 

மேலே கிருபன் மீரா கோசான் சொன்னதுபோல துவாரகாவுக்கு படிப்பிப்பதற்கு வன்னியிலேயே போதுமான ஆசான்கள் இருந்தார்கள், அவர் அதில் கற்று தேர்ந்தும் இருந்தார். (மருத்துவ துறை அல்ல தகவல் தொழினுட்பதுறை)

வன்னியில் துறை சார் மென்பொருட்களை உருவாக கணினுட்பம் எனும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் 55ம் கட்டை அருகில் கட்டப்பட்டு வைப்பகம், நிதி மேலாண்மை, மோட்டர் படையணிகள், வரைபட பிரிவு, ஆவணக்காப்பகம், மருத்துவத்துறைக்கு தேவையான் மென்பொருட்கள் அந்த நிறுவனத்தால் உருவாக்கப்படிருந்தது. அங்குதான் துவாரகாவும், பிரியதர்ஷினியும் இளநிலை மென்பொறியியளாளர்களாக வேலை செய்தார்கள்.

மாதாந்த கணிணி சஞ்சிகையாக கணினுட்பம் எனும் சஞ்சிகை 2008 சண்டை பெரிதாகும் வரை வன்னியில் வெளிவந்துகொண்டிருந்தது. 

துவாரகா இறுதிவரை களத்தில் இருந்து, காயத்துடனும் போராடி மதிமகள் என்ற பெயருடன் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பகலவன் said:

நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

நன்றி ஜி.

இயக்கம்/ தலைவர் மீதான விசுவாசிகள் என காட்டி கொண்டு யாழில் உலாவரும் பலர் மதில் மேல் பூனைகளாக இருக்கும் இடத்தில் எல்லாம் உங்கள் குரல் ஒலிப்பதை காண்கிறேன். அண்மையில் ரதி அக்காவிற்கு எழுதிய பதிலையும் சேர்த்துதான் சொல்கிறேன். 🙏🏾.

இலங்கை பத்திரிகையில் ஒரு எல்லை கிராமத்தையே கொன்றொழித்து விட்டு “30 பயங்கரவாதிகள் சுட்டு கொலை” என எழுதுவார்கள் - அதையும் சுய அறிவின்றி காவி வந்து உண்மை என்பீர்களா?

இலங்கை பாஸ்போர்ட்டுக்கு தன் மகள் விண்ணபித்தால் (துவாரகா பிரபாகரன் என்ற பெயரில்) அதை எப்படி பாவிப்பார்கள் என்பதை அறியாதவரல்ல தலைவர்.

அதேபோல் வெளிநாடு அனுப்ப விரும்பினால், இலங்கை பாஸ்போர்ட் எடுத்துத்தான் அனுப்ப வேண்டும் என்ற நிலையிலும் அவர் இருக்கவில்லை. 

ஆகவே இந்த செய்தி முழுக்க முழுக்க இலங்கை புலனாய்வாளரின் உளவியல் யுத்த பிரசாரம் என்பது தெளிவு.

இந்த அவதூறை பலதடவை சுட்டி காட்டிய பின்னும் நீங்கள் காவி திரிவது நீங்கள் யாரென்று தெளிவாக காட்டுகிறது.

நினைவூட்டல் - விக்கியின் மகன் பற்றிய அவதூறுக்கு இன்னும் ஒரு சிறு ஆதாரமும் தரப்படவில்லை.

இதோ பார்றா ...ஏன் நீங்கள் வந்து எழுத வேண்டியது தானே !.
மீரா இதில் வந்து எழுதும் வரைக்கும் நீங்கள் தலைவரின் மனிசி ,பிள்ளைகள் வெளிநாட்டுக்கு வரவே இல்லை என்று கதை விட பார்த்தீர்கள்....அதற்காக நாதம் சொல்வது சரி என்று சொல்லவில்லை அவர் போராட்டத்தை செய்திகளில் படித்தவராய் இருப்பார்.
சந்திரிக்கா ,துர்க்காவுக்கு வாழ்த்து மடல் அனுப்பிய செய்தி பத்திரிகைகளில் வந்திருந்தது அது அவர் ஓ /எல்  அல்லது ஏ /எல்லில் நல்ல பெறுபேறுகளை பெற்றார் என்பதற்காக ...ஆதாரம் கேட்க வேண்டாம் ...விரும்பினால் போய்த் தேடி பாருங்கள் 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை தொடங்கியவன் எந்த ரீதியில், பல அறியாத அரிய தகவல்கள் எல்லாம் அறியக் கூடியதாக இருக்கின்றது.இத் திரி தர்க்க ரீதியாக தொடரவேண்டும் என்பதே எனது அவா, எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2021 at 06:07, colomban said:

எனக்கு சோதி பர்ர்சலில் "பொத்தல்" போட்டு கட்டித்தாருங்கள்

கொழும்பான் இந்த பெயரில் எங்கடை ஆட்களுக்கு பிரியம் போகாது  குரைடனில் Colombo Express,Colombo Restaurant,Ceylon Express இப்படி குறுகிய இடத்தில் அருகருகே இந்தப்பெயர்களில் சாப்பாட்டு  கடைகளை திறந்து வைத்து கொண்டு ஈ  ஒட்டிக்கொண்டு இருக்கினம் நம்மவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகலவன் said:

துவாரகாவிற்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பதும் வெளிநாடு சென்று மருத்துவபடிப்பை கற்றார் என்பது சிங்கள புலனாய்வாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளே. அதன் மூலம் மக்களுக்கு புலிகளின் தலைமைமீது ஒரு அதிருப்தியை தோற்றுவிக்கும் எண்ணமே அவர்களுக்கு இருந்தது.

நன்றி பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதோ பார்றா ...ஏன் நீங்கள் வந்து எழுத வேண்டியது தானே !.
மீரா இதில் வந்து எழுதும் வரைக்கும் நீங்கள் தலைவரின் மனிசி ,பிள்ளைகள் வெளிநாட்டுக்கு வரவே இல்லை என்று கதை விட பார்த்தீர்கள்....அதற்காக நாதம் சொல்வது சரி என்று சொல்லவில்லை அவர் போராட்டத்தை செய்திகளில் படித்தவராய் இருப்பார்.
சந்திரிக்கா ,துர்க்காவுக்கு வாழ்த்து மடல் அனுப்பிய செய்தி பத்திரிகைகளில் வந்திருந்தது அது அவர் ஓ /எல்  அல்லது ஏ /எல்லில் நல்ல பெறுபேறுகளை பெற்றார் என்பதற்காக ...ஆதாரம் கேட்க வேண்டாம் ...விரும்பினால் போய்த் தேடி பாருங்கள் 
 
மீண்டும் ஒரு தடவை உங்களுக்காக சொல்கிறேன்.

1. நான் ஒரு போதும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் ஒரு காலத்திலும் இருக்கவில்லை என எழுதவில்லை.  அவர்கள் 89/90 இல் ஐரோப்பா வந்ததை இந்த கருத்தாடலில் நான் ஒரு அங்கமாக கருதவில்லை. ஏனென்றால் இங்கே அலசபட்ட விடயம் 2000 களின் துவாரகா பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தாரா இல்லையா என்பதுதான்.

தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு வரவே இல்லை என நான் கதை விட நான் ஒன்றும் அவரை hero worship செய்து பூசிப்பவர் அல்ல. அவரின் பல தவறுகள் என நான் நினைப்பதை இதே யாழில் எழுதியுள்ளவன். 

தவிரவும் அவர்கள் 87 க்கு முன் பலகாலம் இந்தியாவில் இருந்தவர்கள்தானே? அதையும் எனக்கு தெரியாது என்றா சொல்ல போகிறீர்கள்?

ஆகவே நான் நீங்கள் மேலே சுட்டி உள்ள கருத்தில் கூறியது இந்த பாஸ்போர்ட் எடுத்த கதை வந்த காலப்பகுதி, அதற்கு பின்னரான பகுதியையே.

89/90 பாஸ் நடைமுறை இல்லை. இயக்கம் வீட்டுக்கு ஒருவரை கேட்கவில்லை. கட்டாய ஆட்சேர்ப்பும் இல்லை. 18(16?) வயதுக்கு பின் தான் இயக்கத்தில் சேரலாம். ஆனால் 90 யூன்னுக்கு பின் இந்த கட்டுபாடுகள் வரத்தொடங்கி விட்டது. ஆகவேதான் தன்பிள்ளைகளை வெளியே அனுப்பி விட்டு உங்கள் பிள்ளைகளை சாக கொடுக்கிறார் என்ற தொனியில் இந்த பொய் செய்தியும், அதை தொடர்ந்து அவரின் குடும்பம் வெளிநாடு போய்விட்டது என்ற பிரசாரமும் முன்னெடுக்கபட்டது.

மேலே நீங்கள் quote பண்ணிய கருத்தில் நான் இதைதான் சொன்னேன்.

மனைவியும் பிள்ளைகளும் 87க்கு முன் இந்தியாவில், பின் 90 வரை ஐரோப்பாவில் வாழ்ந்ததை எல்லாரும் அறிந்திருப்பார்கள் என நினைத்தேன் ஆகவே அதை பற்றி எதுவும் எழுதவில்லை.

இதுதான் நடந்தது - இல்லை கோசானுக்கு இது தெரியாது இப்போ பொய் சொல்கிறார் என நீங்கள் நினைத்தாலும் காரியமில்லை - நான் அறியாமையில்தான் இருந்தேன் என்றா ஒரு பேச்சுக்கு வைத்தாலும் பாஸ்போர்ட் செய்தி பற்றி நான் சொல்லியது உண்மைதானே?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

சந்திரிகா கடவுச்சீட்டு கொடுத்து தலைவரின் பிள்ளைகள் வெளிநாடு வரவில்லை என்பதும் அவர்கள் வெளிநாட்டிற்கு வந்து 90 இல் பிரேமதாசாவின் பேச்சுவார்த்தையின் போது நாடு திரும்பியதுமே உண்மை

ஓம். அவர்கள் ஸ்வீடனில் இருந்தபோது (சரியென்றுதான் நினைக்கின்றேன்) போய்ப் பார்த்து வந்த ராமாசர் (அன்ரன் ராஜா - அவர்தான் TR-Tech இல் கணணியை எனக்கு முதன்முதல் அறிமுகப்படுத்தியவர்!) எனக்கு நேரடியாகவே சொல்லியிருந்தார்.

அதனால்தான் எனது பதிவு இப்படி இருந்தது.

👇🏾👇🏾👇🏾

15 hours ago, கிருபன் said:

ஆனால் தலைவரின் பிள்ளைகள் படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு வரவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சந்திரிக்கா ,துர்க்காவுக்கு வாழ்த்து மடல் அனுப்பிய செய்தி பத்திரிகைகளில் வந்திருந்தது அது அவர் ஓ /எல்  அல்லது ஏ /எல்லில் நல்ல பெறுபேறுகளை பெற்றார் என்பதற்காக ...ஆதாரம் கேட்க வேண்டாம் ...

2. இந்த செய்தி வந்த இணைப்பை நாதம் ஏற்கனவே தந்து விட்டார். இந்த திரியில் அல்ல. முந்திய திரி ஒன்றில் நாதம் இந்த கதையை சொன்னபோது - ஆதாரம் கேட்டு அதை அவர் தந்தும் விட்டார்.

ஆகவே இந்த திரியில் நான் எழுதியதை வாசித்தால் - நான் எங்கும் இப்படி ஒரு செய்தி பிரசுரமாகவில்லை என எழுதவில்லை என்பது புரியும்.

இந்த செய்தி புலனாய்வாளர்கள், சிங்கள, இந்திய கூட்டு தயாரிப்பில் வந்த ஒரு பொய் செய்தி என்பதே நான் கூறுவது (இதே விளக்கத்தை முன்னைய திரியிலும் நாதத்திடம் கொடுத்தேன்).

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா அனுப்பியிருந்தால் அது க.பொ.த சாதாரண பரீட்சைக்கானதாகவே இருக்கும்.மேலும் துவாரகா உண்மையான பெயரில் அரச பரீட்சைகளுக்கு தோற்றியிருந்தால்  மட்டுமே சாத்தியம்.

22 minutes ago, கிருபன் said:

ஓம். அவர்கள் ஸ்வீடனில் இருந்தபோது (சரியென்றுதான் நினைக்கின்றேன்) போய்ப் பார்த்து வந்த ராமாசர் (அன்ரன் ராஜா - அவர்தான் TR-Tech இல் கணணியை எனக்கு முதன்முதல் அறிமுகப்படுத்தியவர்!) எனக்கு நேரடியாகவே சொல்லியிருந்தார்.

அதனால்தான் எனது பதிவு இப்படி இருந்தது.

👇🏾👇🏾👇🏾

நன்றி ஜீ 

*ராமா சேர்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

சந்திரிக்கா அனுப்பியிருந்தால் அது க.பொ.த சாதாரண பரீட்சைக்கானதாகவே இருக்கும்.மேலும் துவாரகா உண்மையான பெயரில் அரச பரீட்சைகளுக்கு தோற்றியிருந்தால்  மட்டுமே சாத்தியம்.

நன்றி ஜீ 

*ராமா சேர்

அப்போது வன்னியில் நடந்த புலிகள் நடத்திய பரிட்சையிலும், இலங்கை பரிட்சையிலும் நல்ல பெறுபேறுகளை எடுத்தார் என பேசிகொண்டார்கள்.

ஆனால் இது நிச்சயமா 2000 க்கு முதல். 

👆🏼மன்னிக்க வேண்டும் இது சார்ல்ஸ் அன்ரனியை பற்றிய நினைவு. துவாரகா பற்றியது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

மீண்டும் ஒரு தடவை உங்களுக்காக சொல்கிறேன்.

1. நான் ஒரு போதும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் ஒரு காலத்திலும் இருக்கவில்லை என எழுதவில்லை.  அவர்கள் 89/90 இல் ஐரோப்பா வந்ததை இந்த கருத்தாடலில் நான் ஒரு அங்கமாக கருதவில்லை. ஏனென்றால் இங்கே அலசபட்ட விடயம் 2000 களின் துவாரகா பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தாரா இல்லையா என்பதுதான்.

தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு வரவே இல்லை என நான் கதை விட நான் ஒன்றும் அவரை hero worship செய்து பூசிப்பவர் அல்ல. அவரின் பல தவறுகள் என நான் நினைப்பதை இதே யாழில் எழுதியுள்ளவன். 

தவிரவும் அவர்கள் 87 க்கு முன் பலகாலம் இந்தியாவில் இருந்தவர்கள்தானே? அதையும் எனக்கு தெரியாது என்றா சொல்ல போகிறீர்கள்?

ஆகவே நான் நீங்கள் மேலே சுட்டி உள்ள கருத்தில் கூறியது இந்த பாஸ்போர்ட் எடுத்த கதை வந்த காலப்பகுதி, அதற்கு பின்னரான பகுதியையே.

89/90 பாஸ் நடைமுறை இல்லை. இயக்கம் வீட்டுக்கு ஒருவரை கேட்கவில்லை. கட்டாய ஆட்சேர்ப்பும் இல்லை. 18(16?) வயதுக்கு பின் தான் இயக்கத்தில் சேரலாம். ஆனால் 90 யூன்னுக்கு பின் இந்த கட்டுபாடுகள் வரத்தொடங்கி விட்டது. ஆகவேதான் தன்பிள்ளைகளை வெளியே அனுப்பி விட்டு உங்கள் பிள்ளைகளை சாக கொடுக்கிறார் என்ற தொனியில் இந்த பொய் செய்தியும், அதை தொடர்ந்து அவரின் குடும்பம் வெளிநாடு போய்விட்டது என்ற பிரசாரமும் முன்னெடுக்கபட்டது.

மேலே நீங்கள் quote பண்ணிய கருத்தில் நான் இதைதான் சொன்னேன்.

மனைவியும் பிள்ளைகளும் 87க்கு முன் இந்தியாவில், பின் 90 வரை ஐரோப்பாவில் வாழ்ந்ததை எல்லாரும் அறிந்திருப்பார்கள் என நினைத்தேன் ஆகவே அதை பற்றி எதுவும் எழுதவில்லை.

இதுதான் நடந்தது - இல்லை கோசானுக்கு இது தெரியாது இப்போ பொய் சொல்கிறார் என நீங்கள் நினைத்தாலும் காரியமில்லை - நான் அறியாமையில்தான் இருந்தேன் என்றா ஒரு பேச்சுக்கு வைத்தாலும் பாஸ்போர்ட் செய்தி பற்றி நான் சொல்லியது உண்மைதானே?

தலைவா,

சிவராத்திரியே தானா..... தங்கள் விடாமுயற்சிக்கு பாராட்டு. அதே வேளை, மூன்றாவது தடவையாக கேட்கிறேன் என்று ஒரு கேள்வி கேட்டீர்களே, நினைவிருக்கிறதா?

தலைவர் பிள்ளைகளுக்கு பாஸ்போட் விண்ணப்பம் செய்தாரா இல்லையா என்று....

மீரா சொன்ன நெத்தியடிப்பதிலை பார்த்தும்.... அதே கேள்வியை இப்பவும் கேக்கிறயள்....

தலைவர் குடும்பம், நாடு திரும்பிய போது, இலங்கை கடவுச்சீட்டு அல்லது எமர்ஜன்சி சேர்ரிபிக்கேற் உடன் தானே வந்து இருப்பார்கள்.

மேலும் தலைவர் அப்பா, அம்மா தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பிய போதும் இலங்கை கடவுச்சீட்டு தானே

பதில் கிடைத்ததா?

பகலவன் தந்த தகவல்களுக்கு நன்றி. இது எனக்கு தெரியாது என்றேன். நான் பத்திரிகையில் வாசித்தேன் என்ற செய்தியை மட்டுமே முன்னர் சொல்லி இருந்தேன்.

அபபோதே அப்படி செய்தியே வரவில்லை என்று பரிகாசம் செய்தீர்கள். லிங்கை கொடுத்த பின்னர் வேறு பக்கம் தாவுனீர்கள்.

முதலில் நீஙகள் மட்டுமே பெரும் நாட்டுப் பற்று மிக்கவன், அடுத்தவர்கள் ஏஜன்ட் புரவோக்டர்கள் என்ற அலம்பறை கூச்சல்களை நிறுத்தி..... இங்கே அடுத்தவர்கள் பொய் சொல்வதாக கதை விடாமல் கருத்தாடுவோம்.

Edited by Nathamuni
Addition

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

தலைவர் குடும்பம், நாடு திரும்பிய போது, இலங்கை கடவுச்சீட்டு அல்லது எமர்ஜன்சி சேர்ரிபிக்கேற் உடன் தானே வந்து இருப்பார்கள்.

பதில் கிடைத்ததா?

இல்லையே? நீங்கள் வழமையாக செய்யும் கேள்வி விளங்காதது போல நடிக்கும் வேலையை செய்கிறீர்கள்.

நான் தலைவர் பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தாரா இல்லையா? என கேட்டது 2000 இல் நீங்கள் தந்த புனையபட்ட செய்தியில் சொல்லபட்டவாறு விண்ணபித்தார் என நீங்கள் நம்புகிறீகளா? அல்லது அது பொய் செய்தியா?

அதற்கு எனக்கு தெரியாது என பதில் சொல்லியும் விட்டீர்கள். 

90 களில் எந்த டொகுமெண்ட் அடிப்படையில் நாடு திரும்பினர் என்பது மீரா உட்பட யாருக்கும் தெரியாது.

15 hours ago, goshan_che said:

இந்த பாஸ்போர்ட் விண்ணப்பம் தலைவர் உண்மையில் போட்டதா? அல்லது இலங்கை புலனாய்வினர் பொய்யாக சோடிச்ச தகவலா?

மீண்டும் ஒரு தடவை நான் கேட்ட கேள்வி என்ன என்பதை நினைவூட்டுகிறேன்.

29 minutes ago, Nathamuni said:

அபபோதே அப்படி செய்தியே வரவில்லை என்று பரிகாசம் செய்தீர்கள். லிங்கை கொடுத்த பின்னர் வேறு பக்கம் தாவுனீர்கள்.

பரிகாசம் செய்யவில்லை நாதம். அப்படி ஒரு பத்திரிகை செய்தி வந்த ஆதாரத்தை கேட்டேன். நீங்கள் தந்தீர்கள். அதன் பின் அந்த செய்தியின் உண்மைதன்மை பற்றி விளக்கினேன். 

நீங்கள் அப்படி ஒரு செய்தி வந்ததாக பொய் சொல்லுகிறீகள் என நான் சொன்னேனா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அப்போது வன்னியில் நடந்த புலிகள் நடத்திய பரிட்சையிலும், இலங்கை பரிட்சையிலும் நல்ல பெறுபேறுகளை எடுத்தார் என பேசிகொண்டார்கள்.

ஆனால் இது நிச்சயமா 2000 க்கு முதல். 

👆🏼மன்னிக்க வேண்டும் இது சார்ல்ஸ் அன்ரனியை பற்றிய நினைவு. துவாரகா பற்றியது அல்ல.

தலைவர் திருமணம் 01/10/1984

சார்ள்ஸ் பிறப்பு 1985

துவாரகா 1986

பாலச்சந்திரன் 1996

யாருடைய பரீட்சைப் பெறுபேறு வெளிவந்திருக்கும் என்பது இரகசியம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

முதலில் நீஙகள் மட்டுமே பெரும் நாட்டுப் பற்று மிக்கவன், அடுத்தவர்கள் ஏஜன்ட் புரவோக்டர்கள் என்ற அலம்பறை கூச்சல்களை நிறுத்தி..... இங்கே அடுத்தவர்கள் பொய் சொல்வதாக கதை விடாமல் கருத்தாடுவோம்.

நிச்சயமாக நல்ல கருத்தாடலுக்கு நான் எப்போதும் தயார்தான் - ஆனால் தொடர்சியாக நடக்கும் வாழைப்பழ ஊசிகளை வெளிச்சம் போட்டு காட்டுவது - காலத்தின் கட்டாயம் ஆகிறது. 

இப்படி புட்டு புட்டு வைப்பது  உங்களுக்கு அசெளகரியமாகவே இருக்கும். தவிர்கவியலாதது.

வாழைபழ ஊசிகள், அவதூறுகள் நின்றால் - அதை அம்பலபடுத்துவதும் நின்று விடும்.

5 minutes ago, MEERA said:

தலைவர் திருமணம் 01/10/1984

சார்ள்ஸ் பிறப்பு 1985

துவாரகா 1986

பாலச்சந்திரன் 1996

யாருடைய பரீட்சைப் பெறுபேறு வெளிவந்திருக்கும் என்பது இரகசியம் அல்ல.

உண்மைதான்.

ஆனால் நான் கேள்விபட்டது நிச்சயமாக 1995-99 இடையான காலத்தில். இதை நான் எங்கே அப்போ வாழ்ந்தேன் என்பதை வைத்தே நினைவுகூறுகிறேன் .

ஆனால் வயதை வைத்து பார்த்தால் இருவரும் அந்த காலத்தில் பரிட்சை எடுத்திருக்க வாய்ப்பில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

நிச்சயமாக நல்ல கருத்தாடலுக்கு நான் எப்போதும் தயார்தான் - ஆனால் தொடர்சியாக நடக்கும் வாழைப்பழ ஊசிகளை வெளிச்சம் போட்டு காட்டுவது - காலத்தின் கட்டாயம் ஆகிறது. 

இப்படி புட்டு புட்டு வைப்பது  உங்களுக்கு அசெளகரியமாகவே இருக்கும். தவிர்கவியலாதது.

வாழைபழ ஊசிகள், அவதூறுகள் நின்றால் - அதை அம்பலபடுத்துவதும் நின்று விடும்.

தெரிந்ததை பகிரவும், தெரியாததை அறியவுமே கருத்தாடுகிறோம்..

வாழைபழ ஊசி, ஏஜன்ட் புரவோகேற்றர்..... பட்டங்களை அடுத்தவர்களுக்கு வாரி வழங்க, நிர்வாகம் உங்களை, அப்படி ஒரு பதவியில் அமர்த்தி சம்பளமும் தரவில்லை.

சகலரும் சமயங்களில் தவறு செய்வோம்..... அதனை சுட்டிக் காட்டிக் கொண்டு கருத்தாட வேண்டுமே அன்றி, படு பொய்யர்கள், பச்சைப்பொய்கள் என்று சொல்லும் தகுதி தமக்கு இருப்பதாக நிணைப்பவர்கள், சில சமயங்களில் மட்டுகளை மட்டம் தட்ட முனைவோர், தாம் சொல்வதில் அவதானமாக இருக்க வேண்டும்.

அதனை நான் வலியுறுத்தி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 😁

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

தவறு ஏதும் விடவில்லை, உங்கள் கிரகிப்பு குறைபாட்டுக்கும் சொல்லாததை சொன்னதாக கற்பனை செய்யும் குறைபாட்டுக்கும் ஏனையோர் பொறுப்பல்ல.

சு(கு)ட்டல் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

தவறு ஏதும் விடவில்லை, உங்கள் கிரகிப்பு குறைபாட்டுக்கும் சொல்லாததை சொன்னதாக கற்பனை செய்யும் குறைபாட்டுக்கும் ஏனையோர் பொறுப்பல்ல.

சு(கு)ட்டல் தொடரும்.

இப்படியே அலம்பறை பண்ணிக்கொண்டிருந்தால், ஜிகிர்தாண்டா பட கதைபோல, எப்படி இருந்த மனிசன் இப்படி ஆகிட்டாரு, கதை ஆயிரும்....

வேணாம் பங்கு.... அப்புறம்....நானே தாங்க மாட்டேன்..... 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதத்தின் உருட்டலை சில இடங்களில் கோசான் போலவே நானும் சுட்டிக் காட்டிய அனுபவம் இருப்பதால் ஒன்றைச் சொல்ல முடியும்: நாதத்திடம் இருப்பது ஒரு அபூர்வ திறமை. இந்த திரியில் அந்த inflection point ஐக் கவனியுங்கள் - மீரா வந்து ஐரோப்பாவில் வசித்திருக்கின்றனர் என்று சொன்னதும் அது அவருக்கு news flash ஆக இருந்தது தெளிவாகத் தெரிகிறது. பின்னர் உடனே சுதாரித்துக் கொண்டு "இது தான் எனக்கு முதலே தெரியுமே?" என்ற நிலை எடுத்து 90 ஐயும் 2000 யும் ஒன்றாக்கி - கோசானின் தமிழ் விளங்காத மாதிரி ஒரு செவாலியர் நடிப்பும் வெளிப்படுத்தி....

இந்தாள் ஒரு rare breed! இதனால் களத்தில் பலருக்குப் பயன்படுகிறார் என நினைக்கிறேன். அதனாலேயே சும்மா நோகாமல் தட்டி விட்டு நகர்ந்து விடுகிறார்கள் என ஊகிக்கிறேன்.

ஒரு பேச்சுக்கு மட்டும் (இது நடக்கவே வாய்ப்பில்லை!), நாதம் செய்யும் உருட்டலில் 1% இனை ருல்பென் போன்ற ஒரு உறவு செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்! இப்ப நாற்சந்தியில் திரி திறந்து அவருக்குத் தடை கோரியிருப்பர் சில உறவுகள்.

எனவே, நாதம் செய்யும் இந்த உருட்டல், புரட்டல் போலிச் செய்திகள் இவையெல்லாவற்றிற்கும் அவர் மட்டும் பொறுப்பல்ல! இதற்கு கூட்டுப் பொறுப்பு பலருக்கு இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

வந்திட்டாரையா, வந்திட்டாரு....

சும்மா இருக்கிற நம்ம பங்கை, உசுப்பேத்தி விட்டு.... ஓடுவதும்..... பிறகு சோரும் போது வந்து உசுப்பேத்துவதுமே உங்கள் அபூர்வ திறமை.

ஓயில் விடயத்தில் தந்த லிங்கை வாசிக்காமலே.... பொய் என்று அடித்து விட்ட மகாபிரபு.

அந்த போக்கிலித்தனத்தின் பின்பே.... கருத்தாடுவதில்லை உங்களுடன் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

ஆகவே.... வந்து சொறிய வேண்டாமே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

வந்திட்டாரையா, வந்திட்டாரு....

சும்மா இருக்கிற நம்ம பங்கை, உசுப்பேத்தி விட்டு.... ஓடுவதும்..... பிறகு சோரும் போது வந்து உசுப்பேத்துவதுமே உங்கள் அபூர்வ திறமை.

தந்த லிங்கை வாசிக்காமலே.... பொய் என்று அடி்து விட்ட மகாபிரபு

இல்லை- உங்களுக்கு எதையும் சொல்ல வரவில்லை. ஆனால், கோசான் இந்த திரியில் யாழ் வாசகர்களுக்குச் செய்திருப்பது ஒரு பெரிய உதவி என்று சுட்டிக்காட்டுவதே நோக்கம்!

மேலும், அந்த வேலை செய்யாத FT இணைப்பு ஒன்று மட்டும்தான் என்பதை அங்கேயே பல தடவை சொல்லியும் கடந்து போய் உருட்டியதும் இங்கே போலத்தான். அது மட்டுமல்ல, சிங்களவர்-தெலுங்கர் ஹப்லோரைப் சுட்டிக் காட்டியதற்கும் பதில் உருட்டல் தான்.

எனவே, உங்களை வாசகர்கள் அடையாளம் கண்டிருக்கின்றனர். அதுவே, எங்களுக்கு முக்கியம்!👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.