Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிற்கு செல்கிறார் சீன தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஏராளன் said:

ஏதும் மாற்றம் நடக்கப்போகுதோ?

 தம்பி! விடாக்கண்டன்கள் விடமாட்டாங்கள்.

  • Replies 80
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீனத்தூதுவர் நல்லூர் ஆலயத்தில் வழிபாடு

December 16, 2021
 
spacer.png

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் தூதரக அதிகாரிகள் குழு நேற்றைய தினம் புதன்கிழமை   யாழ்ப்பாணத்துக்கு வருகை  தந்துள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டனர்.

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2021/170515

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கைப்பாத்தால் மன்டரின் விரைவாக படிக்கத்தான் வேணும் போல.😂

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு பக்கத்து வீட்டுஅண்ணாவும் எதையாவது தூக்கிக்கொண்டு ஓடியாந்து நிக்கப்போறார்.  இனி தமிழருக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது தைப்பொங்கலோடு. அதுசரி சப்பாத்து காலோடு நுழைஞ்சவை எல்லாம்  மேலாடை இல்லாமல் நிக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்

அரியாலை கடலட்டை பண்ணையை பார்வையிட்ட சீனத் தூதுவர்!

266170968_428446725585936_21094011240579

இலங்கைக்கான சீனத் தூதுவர் இன்று யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள கடலட்டை பண்ணைக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்றுள்ளார்.

இது ஒரு எளிய விஜயம் என்றும் உள்ளூர் சமூகத்திற்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கம் எனவும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

266021105_789041521983568_73019071943788

264408198_3021584118053176_6767580128018

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எவ்ளாதூரம்..? வினாவிய சீனத்தூதர்…

சீனாவ தீவில மின்நிலையங்களை அமைக்க விடாம இந்தியா இலங்கைக்கு அழுத்தம் குடுத்து மாலைதீவுக்கு மாத்தின கடுப்பில இந்தியாக்கு கடுப்பேத்த சீனா அனுப்பி இருக்கு போல.. மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கிறாங்க போல… அவனவனுக்கு அவனவன் நலன்... இதுக்குள்ள மாட்டுபட்டு மறுபடியும் நசிபட்டு சாவப்போரது நாங்கள்தான்…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களுக்கு உதவுவதன் ஊடாக ஏதும் சொல்ல வருதா சீனா?!

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 20 people, people standing and text that says "நேற்றையதினம் யாழ்ப்பாணம் வருகை தந்த சீன தூதுவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தை இந்து சமய ஆசாரப்படி தரிசித்தனர்"

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

May be an image of 20 people, people standing and text that says "நேற்றையதினம் யாழ்ப்பாணம் வருகை தந்த சீன தூதுவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தை இந்து சமய ஆசாரப்படி தரிசித்தனர்"

டெல்லிக்காரருக்கு..... கொதி வரப்போகுது.....

சபாஷ்..... சரியான போட்டி 😁

On 13/12/2021 at 16:52, goshan_che said:

கஜன் & கஜன் முயற்சிக்கலாமே?

அதைச் செய்யாம, மணிவண்ணனை கவிழ்க நிக்கிறார், கஜன்.... 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

நம்மடை ஒரு அரசியல் பூசாரிகளையும் காண முடியவில்லை நல்லூரில்  டக்லசும் கடலட்டையோடு படுத்துவிட்டார் மணிவண்ணனும் நூலகத்துடன் தேவையற்று யாழில் இந்தியன் எம்பஸி போல் சைனா எம்பசியும் இருந்தால் நல்லது போல் இருக்கு வேடிக்கையான நினைப்பு சிலவேளை உண்மையும் ஆகலாம் அதன்பின் நம்ம புலியெதிர்பு வாதிகளும் ரண்டு மூங்கில் குச்சியை பிடித்து சோறு சாப்பிடுவினம் .🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

டெல்லிக்காரருக்கு..... கொதி வரப்போகுது.....

சபாஷ்..... சரியான போட்டி 

அவர்கள் ஒருபோதும் தீர்வை தரப்போவதில்லை தருவது என்றால் யுத்தம் முடிந்து 12வருடகால பகுதியில் ஒரு அங்குலமாவது முன்னேற்றம் இருக்கனும் சும்மா இருந்தால் தீர்வு வரும் என்று இங்குள்ள அநேக சின்ராசுகளின் எண்ணம் சின்ராசுகளுக்கு புலிக்கொடி பிடிக்காது கேள்வி கேட்பது பிடிக்காது காணாமல் போனோர் தங்கள் பிள்ளைகளை தேடி போராடுவது பிடிக்காது சிங்களவனை கோபடுத்தக்கூடாது டெல்லியை கோபடுத்தக்கூடாது இந்த டிசைனுகளுடன் ஒரே பாட்டில் கோடிஸ்வரன் ஆவது போல் ஒரே பாட்டில் இலங்கை தீர்வை கொடுத்து இலங்கை சிங்கப்பூராகும் கற்பனையில் மிதப்பவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

அதைச் செய்யாம, மணிவண்ணனை கவிழ்க நிக்கிறார், கஜன்.... 🤦‍♂️

தனக்கு ஏலுமான அரசியலை செய்வம் எண்டு நினைக்கிறாராக்கும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

நாளைக்கு பக்கத்து வீட்டுஅண்ணாவும் எதையாவது தூக்கிக்கொண்டு ஓடியாந்து நிக்கப்போறார்.  இனி தமிழருக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது தைப்பொங்கலோடு. அதுசரி சப்பாத்து காலோடு நுழைஞ்சவை எல்லாம்  மேலாடை இல்லாமல் நிக்கினம். 

ஏற்கனவே யாழில் தெருநாய்களின் காப்பகம் மன்னிக்கவும் அவர்களின் எம்பஸி உண்டே .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அவர்கள் ஒருபோதும் தீர்வை தரப்போவதில்லை தருவது என்றால் யுத்தம் முடிந்து 12வருடகால பகுதியில் ஒரு அங்குலமாவது முன்னேற்றம் இருக்கனும் சும்மா இருந்தால் தீர்வு வரும் என்று இங்குள்ள அநேக சின்ராசுகளின் எண்ணம் சின்ராசுகளுக்கு புலிக்கொடி பிடிக்காது கேள்வி கேட்பது பிடிக்காது காணாமல் போனோர் தங்கள் பிள்ளைகளை தேடி போராடுவது பிடிக்காது சிங்களவனை கோபடுத்தக்கூடாது டெல்லியை கோபடுத்தக்கூடாது இந்த டிசைனுகளுடன் ஒரே பாட்டில் கோடிஸ்வரன் ஆவது போல் ஒரே பாட்டில் இலங்கை தீர்வை கொடுத்து இலங்கை சிங்கப்பூராகும் கற்பனையில் மிதப்பவர்கள். 

எனக்கு எக்காலத்திலும் இந்தியா மீது நம்பகத்தன்மை வரப்போவதில்லை.

அவர்கள், குதிரை ஓடியபின் லாயத்தை பூட்டுபவர்கள். பறவை பறந்த பின் வலை விரிப்பவர்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எனக்கு எக்காலத்திலும் இந்தியா மீது நம்பகத்தன்மை வரப்போவதில்லை.

அவர்கள், குதிரா ஓடியபின் லாயத்தை பூட்டுபவர்கள். பறவை பறந்த பின் வலை விரிப்பவர்கள்.

பறவைகள் பறந்துவிடும் போலத்தான் உள்ளது 45 பறவைகள் பறக்க ரெடியாகி விட்டது என்று கொழும்பு கிசு கிசு ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாம் இன்று நாளைக்குள் கோத்தாவுக்கு மாரடைப்பு வந்தாலும் வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

பறவைகள் பறந்துவிடும் போலத்தான் உள்ளது 45 பறவைகள் பறக்க ரெடியாகி விட்டது என்று கொழும்பு கிசு கிசு ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாம் இன்று நாளைக்குள் கோத்தாவுக்கு மாரடைப்பு வந்தாலும் வரும் .

சிங்கப்பூரில் இருந்து ஓடோடி வந்தது இதற்காகவோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தளவு தொலைவில் இந்தியா உள்ளது ? - பருத்தித்துறையில் சீன தூதுவர் கேள்வி

(லியோ நிரோஷ தர்ஷன்)

வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன தூதுவர் கி செங்ஹொங் தலைமையிலான குழு வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் மற்றும்  மன்னார்  உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளது. 

No description available.

வடக்கு மீன்பிடி துறையை ஊக்குவிக்கும் வகையிலான பல சந்திப்புகளை வடக்கில் முன்னெடுத்திருந்த சீன தூதுரகக் குழு நல்லூர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுப்பட்டது. அதே போன்று பல உதவித் திட்டங்களையும் முன்னெடுத்திருந்தது. 

இந்த விஜயத்தில் சீன தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் மற்றும்  பாதுகாப்பு இணைப்பு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டிருந்தனர்.

பருத்தித்துறைக்கு சென்ற சீன தூதுவர் எந்தளவு தொலைவில் இந்தியா உள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அங்கிருந்த இராணுவ அதிகாரி, 30 கிலோ மீற்றர் என குறிப்பிட்டார். 

இதன் பின்னர் ட்ரோன் ஒளிப்பதிவு கருவி பறக்க விடப்பட்டதாக அங்கிருந்த செய்தியாளர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. 

இவ்வாறானதொரு கேள்வியை  வெளிப்படையாகவே சீன தூதுவர் ஏன் எழுப்பினார் என்பது சர்ச்சைக்குறிய விடயமே.  

சீன இராஜதந்திரத்தின் கூர்மையான பக்கத்தை வெளிப்படுத்தும் செய்தியாகவா இது உள்ளது? என்றும் கருத தோன்றுகின்றது. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையில் சுமூகமான இராஜதந்திர உறவுகள்  இருப்பதாக வெளிப்புறத்தில்  காண்பித்தாலும் உண்மையில் அது அவ்வாறு இல்லை என்பதே யதார்த்தமான உண்மை.

சீனா யாழ். தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த மின்திட்டத்தை இரத்து செய்த பின் இடம்பெற்ற விஜயம் என்பதால் இதன் முக்கியத்துவம் குறித்து உணரப்பட்டது. 

வடக்கின் முக்கிய தீவுகளான நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலை தீவு என்பவற்றில் சீனா  சூரிய மின்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் மூன்றாம் தரப்பின் பாதுகாப்பு குறித்த கரிசனை காரணமாக திட்டத்தை மாலைத்தீவுக்கு  மாற்றுவதாக சீன தூதரகம் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பானது நிதியமைச்சர்  பசில் ராஜபக்ஷ இந்திய விஜயத்தில் ஈடுப்பட்டிருந்தபோது அறிவிக்கப்பட்டிருந்தமை முக்கியமாகின்றது. இதனை இலங்கையில் சீனா அடைந்த இராஜதந்திர பின்னடைவாகவும் கூறப்பட்டது. 

அவ்வாறானதொரு பின்னடைவாக இருக்குமாயின் நிச்சயமாக  வடக்கில் கரையோர பகுதிகளிலும் மன்னார் மற்றும் திருகோணமலை போன்ற முக்கிய இடங்களிலும் சீனா புதிய திட்டங்களை முன்னெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்புகள் கற்கை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஹசித கந்த உடஹேவா தெரிவித்திருந்தார்.

அதேபோன்று வடக்கு தீவுகளில் திட்டமிட்டிருந்த மின் திட்டத்தை மாலைத்தீவுக்கு மாற்றியமையின் ஊடாக இந்த பிராந்தியத்தில் இலங்கை எம்முடன் இல்லாதபோதிலும் வேறு நாடுகள் உள்ளது என்பதை சீனா வெளிப்படுத்துவதாகவே அமைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையானது இலங்கையை மையப்படுத்திய இந்திய – சீனா பணிப்போரின் பிரதிப்பளிப்புகளாகவே இவை அமைகின்றன. இந்திய எல்லைக்கு அண்மித்த பகுதியில் சீனாவின் செயற்பாடுகளை அனுமதித்து விடக்கூடாது என்பதில் டெல்லி எப்போதும் விட்டுக்கொடுத்து செயற்பட்டதில்லை. 

லடாக் உள்ளிட்ட இமாலய பகுதிகளில் இந்திய – சீன எல்லை பிரச்சினைகள் தீவிர போக்கிலேயே உள்ளன. மறுப்புறம் பாக்கிஸ்தான் - சீன உறவுகளினால் ஏற்பட்டுள்ள எல்லை அச்சுறுத்தல்களும் இந்தியாவிற்கு நெருக்கடியை கொடுப்பதாகவே உள்ளது. 

எனவே இலங்கை ஊடக சீனா நெருக்கடிகளை கொடுத்து விடுமா? என்ற சந்தேகம் எப்போதும் இந்தியாவிற்கு உள்ளது. அதனை வலுப்படுத்தும் வகையிலேயே சீனாவின் செயற்பாடுகளும் இங்குள்ளமை குறிப்பிடத்தக்கது.

எந்தளவு தொலைவில் இந்தியா உள்ளது ? - பருத்தித்துறையில் சீன தூதுவர் கேள்வி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பிழம்பு said:

எந்தளவு தொலைவில் இந்தியா உள்ளது ? - பருத்தித்துறையில் சீன தூதுவர் கேள்வி |

கூகிள் மப்பில் அளவீடு செய்யும் வசதி உள்ளது உண்மையிலே கேட்டு இருப்பாரா என்று சந்தேகமா உள்ளது .

அவர்கள் நல்லூர் வந்த கோலம் வேட்டியுடன் பின்பு  சென்ற இடங்கள் கரையோரப்பகுதிகள் இங்கு இந்திய மீனவர்களினால் தினமும் இழப்புக்களை சந்திக்கும் மக்கள் அந்த கோடிக்கணக்கான இழப்பீடுகளுக்கு இரண்டு அரசுகளும் பரிகாரம் செய்யவில்லை கூட்டி கழித்து பார்த்தால் எங்கோயோ உதைக்குதே ?

இங்கு எலி வேட்டிக்கட்டிக்கொண்டு ஓடுதே 🤣 இனிவரும் காலம் யாழ் கரையோரப்பகுதிகளுக்கு  அரசியல்வாதிகள் அடிக்கடி விசிட் பண்ணுவினம் .

50 minutes ago, பிழம்பு said:

பருத்தித்துறைக்கு சென்ற சீன தூதுவர் எந்தளவு தொலைவில் இந்தியா உள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அங்கிருந்த இராணுவ அதிகாரி, 30 கிலோ மீற்றர் என குறிப்பிட்டார். 

No photo description available.

May be an image of text that says "Measure distance Click on the map to add to your path x Total distance: 60.85 km (37.81 mi)"

டிராகன்  வந்துகொண்டு இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

நாளைக்கு பக்கத்து வீட்டுஅண்ணாவும் எதையாவது தூக்கிக்கொண்டு ஓடியாந்து நிக்கப்போறார்.  இனி தமிழருக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது தைப்பொங்கலோடு. அதுசரி சப்பாத்து காலோடு நுழைஞ்சவை எல்லாம்  மேலாடை இல்லாமல் நிக்கினம். 

அவரும் வந்து மேலாடையுடன் கோவிலுக்கு போக பெரும் முயற்சி செய்தார்.

6 minutes ago, பெருமாள் said:

கூகிள் மப்பில் அளவீடு செய்யும் வசதி உள்ளது உண்மையிலே கேட்டு இருப்பாரா என்று சந்தேகமா உள்ளது .

அவர்கள் எப்போதோ அளவீடு செய்திருப்பார்கள்.

ஆனாலும் இந்தியாவுக்கு செய்தி போகணுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பிழம்பு said:

எந்தளவு தொலைவில் இந்தியா உள்ளது ? - பருத்தித்துறையில் சீன தூதுவர் கேள்வி

குசும்பன் சீனன் தூரம் தெரியாத மாதிரி கேக்கிறான் பார் கேள்வியை....? 😂

Bild

இங்க பாருங்க மோடி சாரே! பட்டுவேட்டி வெறும் மேல்....அர்ச்சனைத்தட்டு...அவிங்க சொல்ல வாற விசயம் விளங்குதோ?🤣

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனத்தூதர் கந்தனைத் தரிசித்து என்ன நேர்த்திக்கடன் வைத்திருப்பார்?  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, பெருமாள் said:

டிராகன்  வந்துகொண்டு இருக்கிறது .

No photo description available.

அவங்கள் கேக்கிற கேள்வியை பாத்தால் பாலம் கட்டினாலும் கட்டுவாங்கள்.....அதுக்குப்பிறகு குன்றத்தில குமரனுக்கு கொண்டாட்டம்...😀

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

குசும்பன் சீனன் தூரம் தெரியாத மாதிரி கேக்கிறான் பார் கேள்வியை....? 😂

Bild

இங்க பாருங்க மோடி சாரே! பட்டுவேட்டி வெறும் மேல்....அர்ச்சனைத்தட்டு...அவிங்க சொல்ல வாற விசயம் விளங்குதோ?🤣

Bild

ஐயோ ஐயோ,

அட்லீஸ்ட் அந்த மாப்பாணரையாவது சீனனுடன் எமது அரசியல் பற்றி பேச சொல்லுங்கப்பா.

வழமையா எல்லாத்திலயும் குறுக்கால ஓடுற சிவாஜி கூட ஒண்டும் செய்யேல்லை.

சந்திக்க கூட வேண்டாம் சந்திக்க முயற்சி எண்டு  செய்தி வந்தாலே இந்தியாவுக்கு கலக்குமே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

வழமையா எல்லாத்திலயும் குறுக்கால ஓடுற சிவாஜி கூட ஒண்டும் செய்யேல்லை.

இன்னும் ஒருக்கா சிவாஜியின் ஒபிசுக்குள் பாம்பை விட்டால்தான் சிங்கன் கிளம்புவார் .🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

இன்னும் ஒருக்கா சிவாஜியின் ஒபிசுக்குள் பாம்பை விட்டால்தான் சிங்கன் கிளம்புவார் .🤣

தீருவில் தூபி விடயத்தில் டெலோவுக்கும் தூபி வைக்கணும் என்று அறளையாட்டம் ஆட அங்குள்ள சனமே பாம்பை பரிசா அனுப்பியது என்று கதை .🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.