Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர்களை விமர்சித்த சுமந்திரனுக்கு செருப்படி கொடுத்தார் ஆய்வாளர் நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் மீது வைக்கப்படும் பெரும்பாலான கருத்துக்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக வைக்கப்படுபவை. இவ்வாறான கருத்துக்களால் தேசியக் காவலர்களால் கொண்டாடப்படும் சில தேசியத் தூண்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றனர். அட் த சேம் டைம் தேசியக் காவலர்களினால் வசை பாடப்படும் தேசியத் துரோகிகள் சிலர் அங்கீகாரம் பெறுகின்றனர்.

எடுத்துக்காட்டு: பின்கதவு

கஜே2 மற்றும் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் பின்கதவால் பாராளுமன்றம் சென்றவர்கள், இன்னும் பலர் பின்கதவால் செல்லத் துடிக்கின்றனர்.

டக்க்ளஸ் அங்கிள், அங்கயன் பிரோ, முன்னாள் கிழக்குமாகாண முதல்வர் சின்ன வயதிலேயே போராளியாகிய பிள்ளையான் போன்றோர் மக்களால் விரும்பி தெரிவுசெய்யப்பட்டவர்கள்.

அதுசரி கஜே1, கஜே2, விக்கி மூண்டுபேரும் இலங்கை சனநாயக சேசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில என்ன செய்ய்யினம்?👀

  • Replies 54
  • Views 3k
  • Created
  • Last Reply

Zuma  இங்கு இணைந்த இரு காணொளிகளையும் இப்போது தான் கேட்டேன். இரு காணொளிகளிலும் சுமந்திரன்,நிலாந்தன் இருவரினதும் விரிவான உரையை கேட்ட பின்னர் தான் தெரிந்தது இந்த, “திரிக்கும் திரி”,  வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு ஊடக வம்பு என்பதை. 

இருவரினதும் உரையும் அவரவர் பார்வையில் மிக சிறப்பாக உள்ளது. தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள்  இருவரது உரையிலும் உள்ளது.

இதற்கு, “நிலாந்தனின் செருப்படி”, என்று தலையங்கத்தை கொடுத்தவர் யார் என்று தெரியவில்லை.  இவ்வாறாக தமிழ் ஊடகப்பரப்பில் உள்ள  விஷமத்தனமான செயல்கள் தமிழ் அரசியலில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும். 
இரு காணொளிகளையும் இணைத்து இந்த திரியின் நேர்மையின்மையை அம்பலப்படுத்திய உறவு  @zuma  அவர்களுக்கு நன்றி. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வாலி said:

சுமந்திரன் மீது வைக்கப்படும் பெரும்பாலான கருத்துக்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக வைக்கப்படுபவை. இவ்வாறான கருத்துக்களால் தேசியக் காவலர்களால் கொண்டாடப்படும் சில தேசியத் தூண்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றனர். அட் த சேம் டைம் தேசியக் காவலர்களினால் வசை பாடப்படும் தேசியத் துரோகிகள் சிலர் அங்கீகாரம் பெறுகின்றனர்.

எடுத்துக்காட்டு: பின்கதவு

கஜே2 மற்றும் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் பின்கதவால் பாராளுமன்றம் சென்றவர்கள், இன்னும் பலர் பின்கதவால் செல்லத் துடிக்கின்றனர்.

டக்க்ளஸ் அங்கிள், அங்கயன் பிரோ, முன்னாள் கிழக்குமாகாண முதல்வர் சின்ன வயதிலேயே போராளியாகிய பிள்ளையான் போன்றோர் மக்களால் விரும்பி தெரிவுசெய்யப்பட்டவர்கள்.

அதுசரி கஜே1, கஜே2, விக்கி மூண்டுபேரும் இலங்கை சனநாயக சேசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில என்ன செய்ய்யினம்?👀

பின்பக்க கதவால் உள்ளே வருவது பிழையல்ல  அப்படி வந்துவிட்டு சிங்களவனுக்கு ஆதரவாய் அறிக்கைகள் விட்டுக்கொண்டு அவர்களுடன் வாழ்வதுதான் சந்தோசம் என்பவர் முடிந்தால் அங்கு சிங்களவர் பகுதியில் அரசியல் செய்து வயித்தை வளர்த்துக்கொள்ளட்டுமே ஏனப்பா அரசியல் அனாதைகளான எங்களுக்குள் வந்து எங்களின் அரசியல் வெற்றியை உங்கள் வெற்றி போல் ஆண்டு அனுபவித்துக்கொண்டு சிங்களவரையும் முஸ்லிமையும் தூக்கி பிடிக்கிறீர்கள் முடிந்தால் முஸ்லீமின்  ஏரியாவில் போய் அரசியல் செய்து அங்கு வெற்றி பெற்று அவர்களின் பிரச்சனையை பற்றி கதையுங்கோ இங்கு யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை .மேலும் ஏன் சிங்கள முஸ்லீம் சமூகத்தை புகழ்ந்து கொள்ளுங்க தமிழனுக்கு டக்ளஸ் செய்த நாலு நல்லவிடயத்தில் ஒன்றாவது செய்ய மனம் வரவில்லையே ஏன் ?

இவ்வாறு கேள்வி கேட்பதுக்கு  உங்கள் பக்கத்தில் காழ்ப்புணர்ச்சி என்கிறீர்க்ள் காழ்ப்புணர்ச்சி என்றால் என்ன என்று தயவு பண்ணி கேட்டு தெரிந்துகொள்ளுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வாலி said:

அதுசரி கஜே1, கஜே2, விக்கி மூண்டுபேரும் இலங்கை சனநாயக சேசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில என்ன செய்ய்யினம்?👀

ஏதோ சிங்கள அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் தெரியாது என்பது போல் பாராளுமன்றில் நீட்டி முழக்குகிறனர் 🤣.

17 hours ago, வாலி said:

கஜே2 மற்றும் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் பின்கதவால் பாராளுமன்றம் சென்றவர்கள், இன்னும் பலர் பின்கதவால் செல்லத் துடிக்கின்றனர்

கஜே2 அம்பாறைக்கு நேந்து விட்ட எம்பி🤣. தேர்தலுக்கு பிறகு ஒரே ஒரு முறை அந்த மாவட்டத்துக்கு போய் சேவை செய்தவர்🤣.

அடுத்த தேர்தலில் மான, ரோசம், சூடு, சுரணை இல்லாத கிழக்கு தமிழர்கள்தான் சைக்கிளுக்கு வோட் போடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வாலி said:

எடுத்துக்காட்டு: பின்கதவு

கஜே2 மற்றும் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் பின்கதவால் பாராளுமன்றம் சென்றவர்கள், இன்னும் பலர் பின்கதவால் செல்லத் துடிக்கின்றனர்.

இதே கருத்தை ஜஸ்டினும் வைத்தவர் உங்களுக்கு  கொஞ்சம் யோசிச்சு பாருங்க அவர்களும் பின்கதவால் போனார்கள் அவர்களை விட்டு உங்கள் சுமத்திரனை  மட்டும் கூவி கூவி அடிக்கிறாங்களே என்ன  காரணம் தமிழர் என்று போர்வையில் உள்ளெ வந்து அரை முஸ்லிமாகவும் அரை சிங்களவனாகவும் தமிழருக்கே பாடம் எடுப்பது சரி தமிழருக்கு ஏதாவது கடந்த 12 வருட காலத்தில் செய்தது என்ன ? ஒன்றுமில்லை  என்றாலும் பரவாயில்லை கண்ணுக்கு முன்னே லட்சக்கணக்கான மக்களை போரில் இழந்து காணாமல் ஆக்கப்பட்டு இருக்கினம் அவ்வளவு பாரிய குற்றம்களில் இருந்தும் இலங்கை இராணுவத்தை சிங்கள இனவெறி அரசியல்வாதிகளை தமிழனால் பெற்ற  பின்கதவு பதவியை வைத்து வெளிநாட்டு தலைவர்கள் மனிதஉரிமை அமைப்பாளர்களிடம் தனியே போய் பறந்து  பறந்து  சிங்கள இனவாத குற்றவாளிகளை தப்பிக்க பண்ணியதுதான் அவரின் ஒரே சாதனை இந்த 12 வருடகாலத்தில் தமிழருக்கு ஒன்றுமே செய்யாமல் இருந்தவர் இனியும் செய்வார் என்று படித்து பட்டம் பெற்ற நீங்கள்  எப்படி நம்புகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

பின்பக்க கதவால் உள்ளே வருவது பிழையல்ல  அப்படி வந்துவிட்டு சிங்களவனுக்கு ஆதரவாய் அறிக்கைகள் விட்டுக்கொண்டு அவர்களுடன் வாழ்வதுதான் சந்தோசம் என்பவர் முடிந்தால் அங்கு சிங்களவர் பகுதியில் அரசியல் செய்து வயித்தை வளர்த்துக்கொள்ளட்டுமே ஏனப்பா அரசியல் அனாதைகளான எங்களுக்குள் வந்து எங்களின் அரசியல் வெற்றியை உங்கள் வெற்றி போல் ஆண்டு அனுபவித்துக்கொண்டு சிங்களவரையும் முஸ்லிமையும் தூக்கி பிடிக்கிறீர்கள் முடிந்தால் முஸ்லீமின்  ஏரியாவில் போய் அரசியல் செய்து அங்கு வெற்றி பெற்று அவர்களின் பிரச்சனையை பற்றி கதையுங்கோ இங்கு யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை .மேலும் ஏன் சிங்கள முஸ்லீம் சமூகத்தை புகழ்ந்து கொள்ளுங்க தமிழனுக்கு டக்ளஸ் செய்த நாலு நல்லவிடயத்தில் ஒன்றாவது செய்ய மனம் வரவில்லையே ஏன் ?

இவ்வாறு கேள்வி கேட்பதுக்கு  உங்கள் பக்கத்தில் காழ்ப்புணர்ச்சி என்கிறீர்க்ள் காழ்ப்புணர்ச்சி என்றால் என்ன என்று தயவு பண்ணி கேட்டு தெரிந்துகொள்ளுங்க .

இதெல்லாம் காழ்புணர்ச்சி இல்லை பெருமாள். இது உங்கள் அரசியல் கருத்து.

ஆனால் இங்கே சுமந்திரன் மீது நியாயமான விமர்சனம் என்பதையும் தாண்டி, “வேண்டா பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்” என எழுதப்படுவதுதான் காழ்புணர்ச்சி என்ற தோற்றத்தை தருகிறது.

ஒரு உதாரணம்: 

துறைசார் நிபுணர்களை உள்ளீர்த்து அவர்கள் திறமையை அரசியலுக்கு இழுத்து வரவே தேசிய பட்டியல் சிஸ்டம் உள்ளது. ஆனால் அதை கொச்சை படுத்தி பின் கதவு என எழுதுவோம்.

அப்போ அவர் என்ன செய்ய முடியும்?

சரி முன்கதவால் வந்து காட்டுகிறேன், என தேர்தலில் நிற்பார். அப்படி நிக்கும் போது வோட்டு அரசியலுக்கான குப்பாளி வேலையை எந்த அரசியல்வாதி போல அவரும் செய்கிறார்.

அப்படி தேர்தலில் வென்றால்?

கள்ளவோட்டில் வந்தார் என இன்னொரு சீனை போடுவோம்.

உண்மையில் பலர் சுமந்திரனை அவரின் குறைபாடுகளையும் தாண்டி ஆதரிப்பது அதை விட ஒரு நல்ல மாற்று இல்லை என்பதாலேயேதான்.

இப்படியான “சுமந்திரன் என்ன செய்தாலும் கரிச்சு கொட்டுவோம்” என்ற ரீதியிலான அரசியல் பலரை அவர் பக்கம் மேலும் தள்ளும் என்பதே உண்மை.

18 minutes ago, goshan_che said:

துறைசார் நிபுணர்களை உள்ளீர்த்து அவர்கள் திறமையை அரசியலுக்கு இழுத்து வரவே தேசிய பட்டியல் சிஸ்டம் உள்ளது.

கஜேந்திரன் என்ன துறை சார் நிபுணர் என்பது எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரியுமா கோஷான்? 😂

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

அகற்றினாலும் மற்றவரின் ஓட்டை சுத்து மாத்து  பண்ணி உள்ளே வரும் வித்தை தெரிந்தவர் .ஜனநாயகம் எங்களுக்கு புதிதில்லை இங்கிலாந்து சர்வாதிகார ஆட்சியிலா இருக்கிறது ?

ஆனால் ஜனநாயக நாடுகளுக்கு  விளக்கம் தருகிறோம் என்று ஓடிவரும் சுமத்திரனின் கும்பல் தான் பீற்றர் இளம் செழியனின் தாடை உடைத்தது பற்றி ஒரு திரியில் சொல்ல இன்னும் மோசமாக தாக்கி இருக்கனும் என்று நக்கல் அடித்தது நீங்கள் தான் .

சுத்து மாத்தாக நடந்த அந்தத் தேர்தலில் விக்கி ஐயா, கஜேந்திரன், கஜேந்திரகுமார் எல்லாரும் வென்றார்கள் என்கிறீர்கள்! 😂

👆அந்த பீற்றர் தாக்கப் பட்ட விடயத்தில் இன்னும் தாக்கியிருக்க வேணுமெண்டு நான் எழுதியதை ஒருக்கா மேற்கோள் காட்டினால், பெருமாளின் omnipresent  "நம்பகத் தன்மையை" யாழ் வாசகர்கள் அறிய உதவியாய் இருக்குமே? செய்வீர்களா? 

39 minutes ago, பெருமாள் said:

இதே கருத்தை ஜஸ்டினும் வைத்தவர் உங்களுக்கு  கொஞ்சம் யோசிச்சு பாருங்க அவர்களும் பின்கதவால் போனார்கள் அவர்களை விட்டு உங்கள் சுமத்திரனை  மட்டும் கூவி கூவி அடிக்கிறாங்களே என்ன  காரணம் தமிழர் என்று போர்வையில் உள்ளெ வந்து அரை முஸ்லிமாகவும் அரை சிங்களவனாகவும் தமிழருக்கே பாடம் எடுப்பது சரி தமிழருக்கு ஏதாவது கடந்த 12 வருட காலத்தில் செய்தது என்ன ? ஒன்றுமில்லை  என்றாலும் பரவாயில்லை கண்ணுக்கு முன்னே லட்சக்கணக்கான மக்களை போரில் இழந்து காணாமல் ஆக்கப்பட்டு இருக்கினம் அவ்வளவு பாரிய குற்றம்களில் இருந்தும் இலங்கை இராணுவத்தை சிங்கள இனவெறி அரசியல்வாதிகளை தமிழனால் பெற்ற  பின்கதவு பதவியை வைத்து வெளிநாட்டு தலைவர்கள் மனிதஉரிமை அமைப்பாளர்களிடம் தனியே போய் பறந்து  பறந்து  சிங்கள இனவாத குற்றவாளிகளை தப்பிக்க பண்ணியதுதான் அவரின் ஒரே சாதனை இந்த 12 வருடகாலத்தில் தமிழருக்கு ஒன்றுமே செய்யாமல் இருந்தவர் இனியும் செய்வார் என்று படித்து பட்டம் பெற்ற நீங்கள்  எப்படி நம்புகிறீர்கள் ?

கூவி கூவி உங்களைப் போன்ற சுமந்திரன் "லவ்வு" அதீதமாகக் கொண்ட புலம்பெயர் தமிழர்கள் மட்டும் தான் அடிக்கிறார்கள் - அவர்களுள் சிலர் றௌடிகள் என்பதும் பல சம்பவங்களில் தெரிய வந்த விடயம். தாயக மக்கள் வாக்குகளைப் போட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். 

கோழி தினமும் கூவுவது அதன் கடமை, ஆனால் விடிவது அதனால் என நினைப்பது சுத்த மடமை!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

அந்த பீற்றர் தாக்கப் பட்ட விடயத்தில் இன்னும் தாக்கியிருக்க வேணுமெண்டு நான் எழுதியதை ஒருக்கா மேற்கோள் காட்டினால், பெருமாளின் omnipresent  "நம்பகத் தன்மையை" யாழ் வாசகர்கள் அறிய உதவியாய் இருக்குமே? செய்வீர்களா? 

No photo description available.

நக்கலா தும்மினது என்று நக்கலா எழுதியது உங்கள் ஆவியா ?

பின் கீழே மேல் எழுதிய நக்கல் கருத்தை பலன்ஸ்  பண்ணி கருத்துகள்  இடுவது வெட்டு வேண்டாமல் இருக்கனும் அல்லவா .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

No photo description available.

நக்கலா தும்மினது என்று நக்கலா எழுதியது உங்கள் ஆவியா ?

ஓ..இது வழமையான பெருமாள் பிரச்சினை😂 - தமிழ் கிரகிப்பின் சவால்:

நான் "என்னை நினைச்சீங்களா தும்மினது" என்றதை " பீற்றருக்கு இன்னும் கூட அடிச்சிருக்க வேண்டுமென்று!" விளங்கியிருக்கிறார்!

இதுக்கு என்னிடம் தீர்வில்லை! 😎 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஓ..இது வழமையான பெருமாள் பிரச்சினை😂 - தமிழ் கிரகிப்பின் சவால்:

நான் "என்னை நினைச்சீங்களா தும்மினது" என்றதை " பீற்றருக்கு இன்னும் கூட அடிச்சிருக்க வேண்டுமென்று!" விளங்கியிருக்கிறார்!

இதுக்கு என்னிடம் தீர்வில்லை! 😎 

இனி எப்படியும் மடைமாற்றலாம் என்பதும் எங்களுங்கு தெரியும் 

அர்த்தங்கள் பலகொடுக்கும்  எழுத்து வித்தை .கிரகிப்பின் அளவு குறைவென்று தனிப்பட்ட தாக்குதல் வேண்டாமே .

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

கஜேந்திரன் என்ன துறை சார் நிபுணர் என்பது எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரியுமா கோஷான்? 😂

🏇 எண்டு கேள்வி ( பகிடிதான் - ஆதாரம் கேட்க வேண்டாம் அழுதுடுவேன்).

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

கூவி கூவி உங்களைப் போன்ற சுமந்திரன் "லவ்வு" அதீதமாகக் கொண்ட புலம்பெயர் தமிழர்கள் மட்டும் தான் அடிக்கிறார்கள் - அவர்களுள் சிலர் றௌடிகள் என்பதும் பல சம்பவங்களில் தெரிய வந்த விடயம். தாயக மக்கள் வாக்குகளைப் போட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். 

கோழி தினமும் கூவுவது அதன் கடமை, ஆனால் விடிவது அதனால் என நினைப்பது சுத்த மடமை!

கேள்வி கேட்பவர்களை ரவுடிகள் என்று சொல்லி பின் கால் பிடரியில் பட ஓடுவது உங்கள் சுமத்திரன்  உண்மையான நெஞ்சுரம் மிக்க அரசியல்வாதி என்றால் என்ன செய்து இருக்கனும் உங்கள் ஆட்களை விட்டு அவர்களின் கேள்விகளை தாளில் எழுதி அந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்கணும் அந்த மேடையிலேயே அது ஜனநாயகம் ஆனால்  வரதே இந்தப்பக்கம் என்றவரை ஒண்டிக்கு ஒண்டி வா என்பது போல் அந்த மேடையில் பார்வை பார்க்கிறார் பக்கத்தில் இருப்பவர்கள் வாங்க வாங்க என்று இழுத்துக்கொண்டு போக்கினமாம் இழுத்துக்கொண்டு போக இடமில்லாத இடத்தில் அவுஸில் கால்கள் நடுங்க இருக்கிறார் ஏனய்யா  இப்படி ஒரு பிழைப்பு ?

9 minutes ago, tulpen said:

ஒவர் தமிழ் தேசியவாதிகளுக்கு பொதுவாகவே தமிழ் மொழியை வாசித்து கிரகிக்கும் ஆற்றல் இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா ஜஸ்ரின். 😂

இரண்டு மூன்று திரி உங்களின் பதிலுக்கு காத்திருக்குது நினைவுபடுத்துகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உண்மையில் பலர் சுமந்திரனை அவரின் குறைபாடுகளையும் தாண்டி ஆதரிப்பது அதை விட ஒரு நல்ல மாற்று இல்லை என்பதாலேயேதான்.

சரியாகச் சொன்னீர்கள். 

நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை ஆரம்பத்திலிருந்து, புதிதாகவும் எதிர்க்கத் தொடங்கியவர்களுக்கும், அவர்களின் போராட்டத்தை ஆரம்பத்திலிருந்தும், புதிதாகவும் விமர்சிப்பவர்களுக்கும் சுமந்திரன் தொடர்ச்சியாகச் செய்துவரும் புலியெதிர்ப்பு அரசியலும், தமிழரின் பிரச்சினைகளுக்கு புலிகள் எதிர்பார்த்த தீர்வுகளிலிருந்து சுமந்திரனின் விலகலும் நிச்சயம் உவப்பானதாகவும், சாத்தியமானதாகவும் இருக்குமென்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே சுமந்திரன் சொல்லும், செய்துவரும் இன்றைய அரசியலினை அவர்கள் வேதவாக்காக எடுத்துக்கொள்வதிலும் அவர்களுக்குப் பிரச்சினையேதும் இருக்கப்போவதில்லை.

ஆனால், புலிகளின் போராட்டத்தை இன்றுவரை ஆதரித்து வருபவர்களுக்கும், அவர்களால் முன்மொழியப்பட்ட தமிழர்களுக்கான தீர்வுகளை ஆதரித்து வருபவர்களுக்கும் சுமந்திரன் இன்று செய்துவரும் அரசியலும், தமிழர் அரசியலிலிருந்து புலிநீக்கம் செய்யும் அவரது செயற்பாடுகளும் நிச்சயம் உவப்பானதாக இருக்கப்போவதில்லை. இதற்கு சுமந்திரனின் அரசியல் சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே செய்யப்பட்டுவரும் புலிகளுக்கெதிரான காட்டமான விமர்சனங்களும், தமிழருக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வழிகளிலிருந்தும் (2015 இலிருந்து 2019 வரையான காலப்பகுதியில்) வேண்டுமென்றே தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களும், சொந்த அரசியல் இலாபத்திற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கும் சகலரையும் இன்றுவரை ஒன்றுசேர்க்கும் சந்தர்ப்பங்களை தவிர்த்து வருவதும் சுமந்திரன் மீதான இவர்களின் அதிருப்தியை அதிகரித்தே வருகின்றன.

இதே களத்தில் சுமந்திரனை ஆதரிக்கும் தரப்பில் ஒருவருக்கு அவர் புலிகளை விமர்சிப்பதே அவரை ஆதரிப்பதற்குப் போதுமானதாகவும், இன்னும் சிலருக்கு அவர் புலிகளின் தீவிரவாத அரசியலிலிருந்து ஜனநாயக அரசியலில் செயற்படுவது போதுமானதாகவும், மீதிச் சிலருக்கு புலம்பெயர் நாடுகளில் இன்னமும் இயங்கிவரும் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களுக்கெதிரான அவரின் நிலைப்பாட்டிற்காகவும் ஆதரிப்பது அவசியம் போலத் தெரிகிறது. 

ஆனால், இந்த சுமந்திரன் ஆதரவாளர்களிடம் அவர்கள் உண்மையாகவே சுமந்திரன் செய்யும் அரசியல் மூலம் தமிழருக்கான சரியான தீர்வு கிடைக்குமா என்று நம்புகிறீர்களா என்று வினவினால், நிச்சயம் அதற்கான பதில் இருக்கப்போவதில்லை. அவர்களில் சிலருக்கு அதற்கான  தேவையும் இருக்கப்போவதில்லை.

தமிழரின் அரசியல் விடுதலைப் போராட்டங்கள் ஜனநாயக வழிகளில் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை வலம்வந்த அரசியல்வாதிகளில் சுமந்திரனே உண்மையான நோக்கோடு செயற்படுவதாக நம்பும் ஒரு சிலர் இங்கே இருக்கிறார்கள். தந்தை செல்வா அவர்களைவிட தமிழர் நலன் தொடர்பான அதீத சிரத்தையுடையவராக சுமந்திரனை வரிந்துகொண்டு இருப்பதில் இவர்களுக்குப் பெருமை. இதை இன்னொருவகையில் சொல்வதானால், தமிழர் பிரச்சினை குறித்து சுமந்திரனே சரியான பார்வையினைக் கொண்டிருக்கிறார் என்றும், செல்வா உட்பட அனைவருமே வாக்குகளுக்காக தமிழ்த் தேசிய அரசியலை கையிலெடுத்தார்கள் என்றும் இவர்கள் நினைக்கிறார்கள். ஆக, தமிழர் அரசியல் விடுதலை தொடர்பாக இவர்கள் கொண்டிருக்கும் பார்வை இதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2021 at 14:53, goshan_che said:

உண்மையில் பலர் சுமந்திரனை அவரின் குறைபாடுகளையும் தாண்டி ஆதரிப்பது அதை விட ஒரு நல்ல மாற்று இல்லை என்பதாலேயேதான்.

முதலில் அவர் ஒதுங்கினால்தானே அவரை விட திறமையானவர்கள் இருக்கிறார்கள் சுமத்திரன்  இருக்கும் மட்டும் அவர்களால் வெளிவரமுடியாது சுமத்திரன் அவர்களை சும்மா விமரிசித்த   பீற்றர் இளம் செழியனை 24 மணிநேரத்துக்குள் அவரின்   தாடை உடைகினம்  இப்படி இருக்கையில் திறமை உள்ளவனும் தான் உண்டு தனது  சோழி  உண்டு என்று போயிடுவான் சுமத்திரன் இருக்கும் மட்டும் திறமையானவர்கள் முன்னுக்கு வர விடமாட்டார் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரஞ்சித் said:

தமிழர் அரசியல் விடுதலை தொடர்பாக இவர்கள் கொண்டிருக்கும் பார்வை இதுதான். 

சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

புலிகளை ஆரம்பத்திலிருந்து, புதிதாகவும் எதிர்க்கத் தொடங்கியவர்களுக்கும், அவர்களின் போராட்டத்தை ஆரம்பத்திலிருந்தும், புதிதாகவும் விமர்சிப்பவர்களுக்கும் சுமந்திரன் தொடர்ச்சியாகச் செய்துவரும் புலியெதிர்ப்பு அரசியலும், தமிழரின் பிரச்சினைகளுக்கு புலிகள் எதிர்பார்த்த தீர்வுகளிலிருந்து சுமந்திரனின் விலகலும் நிச்சயம் உவப்பானதாகவும், சாத்தியமானதாகவும் இருக்குமென்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே சுமந்திரன் சொல்லும், செய்துவரும் இன்றைய அரசியலினை அவர்கள் வேதவாக்காக எடுத்துக்கொள்வதிலும் அவர்களுக்குப் பிரச்சினையேதும் இருக்கப்போவதில்லை.

ஆனால், புலிகளின் போராட்டத்தை இன்றுவரை ஆதரித்து வருபவர்களுக்கும், அவர்களால் முன்மொழியப்பட்ட தமிழர்களுக்கான தீர்வுகளை ஆதரித்து வருபவர்களுக்கும் சுமந்திரன் இன்று செய்துவரும் அரசியலும், தமிழர் அரசியலிலிருந்து புலிநீக்கம் செய்யும் அவரது செயற்பாடுகளும் நிச்சயம் உவப்பானதாக இருக்கப்போவதில்லை. இதற்கு சுமந்திரனின் அரசியல் சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே செய்யப்பட்டுவரும் புலிகளுக்கெதிரான காட்டமான விமர்சனங்களும், தமிழருக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வழிகளிலிருந்தும் (2015 இலிருந்து 2019 வரையான காலப்பகுதியில்) வேண்டுமென்றே தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களும், சொந்த அரசியல் இலாபத்திற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இருக்கும் சகலரையும் இன்றுவரை ஒன்றுசேர்க்கும் சந்தர்ப்பங்களை தவிர்த்து வருவதும் சுமந்திரன் மீதான இவர்களின் அதிருப்தியை அதிகரித்தே வருகின்றன.

இதே களத்தில் சுமந்திரனை ஆதரிக்கும் தரப்பில் ஒருவருக்கு அவர் புலிகளை விமர்சிப்பதே அவரை ஆதரிப்பதற்குப் போதுமானதாகவும், இன்னும் சிலருக்கு அவர் புலிகளின் தீவிரவாத அரசியலிலிருந்து ஜனநாயக அரசியலில் செயற்படுவது போதுமானதாகவும், மீதிச் சிலருக்கு புலம்பெயர் நாடுகளில் இன்னமும் இயங்கிவரும் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களுக்கெதிரான அவரின் நிலைப்பாட்டிற்காகவும் ஆதரிப்பது அவசியம் போலத் தெரிகிறது. 

ஆனால், இந்த சுமந்திரன் ஆதரவாளர்களிடம் அவர்கள் உண்மையாகவே சுமந்திரன் செய்யும் அரசியல் மூலம் தமிழருக்கான சரியான தீர்வு கிடைக்குமா என்று நம்புகிறீர்களா என்று வினவினால், நிச்சயம் அதற்கான பதில் இருக்கப்போவதில்லை. அவர்களில் சிலருக்கு அதற்கான  தேவையும் இருக்கப்போவதில்லை.

தமிழரின் அரசியல் விடுதலைப் போராட்டங்கள் ஜனநாயக வழிகளில் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை வலம்வந்த அரசியல்வாதிகளில் சுமந்திரனே உண்மையான நோக்கோடு செயற்படுவதாக நம்பும் ஒரு சிலர் இங்கே இருக்கிறார்கள். தந்தை செல்வா அவர்களைவிட தமிழர் நலன் தொடர்பான அதீத சிரத்தையுடையவராக சுமந்திரனை வரிந்துகொண்டு இருப்பதில் இவர்களுக்குப் பெருமை. இதை இன்னொருவகையில் சொல்வதானால், தமிழர் பிரச்சினை குறித்து சுமந்திரனே சரியான பார்வையினைக் கொண்டிருக்கிறார் என்றும், செல்வா உட்பட அனைவருமே வாக்குகளுக்காக தமிழ்த் தேசிய அரசியலை கையிலெடுத்தார்கள் என்றும் இவர்கள் நினைக்கிறார்கள். ஆக, தமிழர் அரசியல் விடுதலை தொடர்பாக இவர்கள் கொண்டிருக்கும் பார்வை இதுதான். 

நீங்கள் கூறும்படியான பார்வையைக் கொண்டிருப்பவர்கள் ஒருசிலரை இங்கே பெயர் கூறிச் சுட்ட முடியுமானால் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

முதலில் அவர் ஒதுங்கினால்தானே அவரை விட திறமையானவர்கள் இருக்கிறார்கள் சுமத்திரன்  இருக்கும் மட்டும் அவர்களால் வெளிவரமுடியாது சுமத்திரன் அவர்களை சும்மா விமரிசித்த   பீற்றர் இளம் செழியனை 24 மணிநேரத்துக்குள் அவரின்   தாடை உடைகினம்  இப்படி இருக்கையில் திறமை உள்ளவனும் தான் உண்டு தனது  சோழி  உண்டு என்று போயிடுவான் சுமத்திரன் இருக்கும் மட்டும் திறமையானவர்கள் முன்னுக்கு வர விடமாட்டார் .

யார் நமது மறவன்புலவு சச்சியரைக் கூறுகிறீர்களா..😂

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2021 at 02:52, பெருமாள் said:

கேள்வி கேட்பவர்களை ரவுடிகள்

ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரியாத நாட்டில் வாழ்ந்தவர்களுக்கு, ஜனநாயகத்தில் உள்ள பண்புகள் ஜனநாயக மீறலாகவும், தவறாகவும் தோன்றும். அது குற்றமாகவே தெரியும். அது அவர்களின் தவறல்ல. பழகிய, படித்த, ஒழுகிய முறைகள் அவை. குற்றம் என்பார்கள்.

6 hours ago, பெருமாள் said:

சுமத்திரன் அவர்களை சும்மா விமரிசித்த   பீற்றர் இளம் செழியனை 24 மணிநேரத்துக்குள் அவரின்   தாடை உடைகினம்  இப்படி இருக்கையில் திறமை உள்ளவனும் தான் உண்டு தனது  சோழி  உண்டு என்று போயிடுவான் சுமத்திரன் இருக்கும் மட்டும் திறமையானவர்கள் முன்னுக்கு வர விடமாட்டார் .

பேச்சாற்றல், மொழியாற்றல் மூலம் தனக்கு சவாலானவர்களை திட்டம் போட்டு தாக்கும் திறமை, சூழ்ச்சியால் பொருத்தமானவர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் ஓரங்கட்டுவது, முடக்குவது மற்றவர்கள் அவரை தொடர்வதை தடுப்பது, தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும் தமிழ் அரசியல்வாதி யார் சொல்லுங்கள் பார்க்கலாம்!

On 21/12/2021 at 12:26, ரஞ்சித் said:

தமிழர்களுக்கு எவ்வகையான அரசியல் இன்று தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது தமிழக அரசியல்வாதிகளோ செய்யும் அரசியல் போன்றதொரு அரசியல் போதுமானதென்று நீங்கள் கருதுகிறீர்களா? அதாவது, மக்கள் சுதந்திரமாக, பிற அழுத்தங்களின்றி, தமது பிரதேசத்தில் தமது உரிமைகளை தங்கு தடையின்றி பாவிக்கக் கூடிய சூழ்நிலையின் அடிப்படையில் அமைந்த வாழ்வின் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தமக்குத் தரும் சாதாரண அரசியல்வாதிகள் தமிழர்களுக்குப் போதுமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? 

நீங்கள் கூறும் சுமந்திரனின் ஆரம்பகால யதார்த்தமான, தந்திரோபாயமான அரசியல் என்பது இன்று சிங்களவர்களாலும், தமிழகத்தவர்களாலும் நடத்தப்படும் அன்றாட சிக்கல்களுக்கான அரசியல்தான் என்பது எனது எண்ணம்.

ஆனால், தமிழர்கள் தேடும் அரசியல் என்பது, சுமந்திரனாலும் (உங்களின் பார்வையில் போலியான தேசியவாதமற்ற), சிங்களவர்களாலும் தமிழகத்தார்களாலும் செய்யப்படும் அரசியலிலிருந்து வேறுபட்டது. ஒரு மிகவும் திட்டமிட்ட, அரசியல் மயப்படுத்தப்பட்ட இனவழிப்பிற்கு முகம்கொடுத்துக்கொண்டு, தமது அன்றாட வாழ்வை தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் நடத்திவரும் இவர்கள் எதிர்பார்ப்பது சுமந்திரன் கொடுக்கும் அரசியலினை அல்ல. 

எம்மக்களுக்கு தம்மீது இன்று பலவந்தமாக திணிக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு, தமது வாழ்வினை உலகின் ஏனைய சுதந்திர மக்கள் கூட்டங்கள் போன்று அனுபவிப்பதற்கான அவசியம் இருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ளாமல், சமரசம் என்றும், சாணக்கியம் என்று பேசும் அரசியல் அம்மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்காது. 

ஆகவேதான், நீங்கள் தேசிய அரசியலைக் கீழ்த்தரமாகச் சித்தரித்தாலும் கூட, மக்களுக்கு அந்த அரசியல் தேவைப்படுகிறது. தம்மை ஒருங்கிணைத்து, ஒரு அணியாகத் திரளச் செய்ய தமிழ்த் தேசியம் உதவும் என்று கருதுகிறார்கள். 

உங்களின் கூற்றுப்படி செல்வாவோ, அமீரோ, சிவசிதம்பரமோ தமது அரசியல் நலனுக்காகவே தமிழ்த் தேசியம் பேசினார்கள் என்று வைத்துக்கொண்டாலும்கூட மக்களுக்கு அதுவே தேவையாகவிருந்தது. தமது இனத்திற்காகவும், மொழிக்காகவும் தாம் இரண்டாம் பிரஜைகளாக நடத்தப்படுகிறோம் என்கிற ஆத்திரமே அவர்களை தேசிய அரசியலின்பால் ஈர்த்துவைத்திருக்கிறது. இதனை, சுமந்திரன் புரிந்துகொள்வது அவசியம்.

சுமந்திரன் தன்னையொரு தமிழ்த் தேசியவாத அரசியல்வாதியாக மாற்றிவருகிறார் என்றால், அது வரவேற்கப்படவேண்டியதே. அதை ஏன் பிழை என்கிறீர்கள்? ஆனால், பிரச்சினை என்னவென்றால், அவர் அவ்வாறு மாறிவருவது தனது அரசியல் ஆதாயத்துக்காகத்தானேயன்றி, மக்களின் உண்மையான விடிவிற்காக அல்ல என்பது.

அமீரோ, சம்பந்தனோ செய்தவை தேசிய அரசியல் எனும் போர்வையில் தமது இருப்பிற்கான அரசியல்தான். அதைத்தான் சுமந்திரனும் செய்கிறார் என்று நினைக்கிறேன். 

ஆனால், தமிழரிடையே ஒரு அரசியல்வாதியாக நிலைத்து நிற்கத்தான் அவர் இதனைச் செய்கிறார் என்றால், விரைவில் மக்கள் அவரையும் நிராகரித்துவிடுவார்கள். 

ரஞ்சித், நான்  சுருக்கமாவும் தெளிவாகவும் எனது கருத்தை வைத்த பின்னரும் இப்படி நீட்டி முழக்குவது தேவையற்றது. நான் என்றும் எந்த தனி நபர்களின் அரசியலையும் விமர்சிக்கவில்லை. கடந்த ஏழு தசாப்தமாக அரசியல்கட்சிகளும், ஆயுதப்போராட்ட இயக்கங்களும் முன்னெடுத்த தமிழ் தேசிய அரசியலால் எமக்கு தொடர்ச்சியான பின்னடைவு ஏற்படுகின்றவே தவிர எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது சுதந்திரமாக சிந்திக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரிந்த உண்மை. நீங்கள் உங்களுக்கு பிடிக்காத ஒரு சிலரை  குற்றவாளியாக்கி பிடித்த சிலருக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் கருத்துகளையே தொடர்ச்சியாக இங்கு வைக்கின்றீர்கள்.  அதற்கு சிறந்த உதாரணமாக அமி், சிவசிதம்பரம் இருவரும் தமது சொந்த அரசியல் நலனுக்காக அரசியல் நடத்தியதாக நான் கூறியதாக, நான் கூறாத கருத்தைக் கூறியுள்ளீர்கள். சிந்தித்து பாருங்கள் யுத்தத்திற்கு முன்பு முடிவெடுக்கும் ஆற்றலுடன் எமது தமிழ் தேசிய அரசியலை நீண்ட காலம் நடத்தியவர்  எஸ். ஜே. வி செல்வநாயகமே ஆகும். 1949 ல் இருந்து   1977 ல் அவர் இறக்கும் வரை ஏறத்தாள 35 ஆண்டுகளாக அரசியல் நடத்தியவரை தந்திரமாக தவிர்த்து விட்டு வெறும் ஆறே ஆண்டுகள் (1977 - 1983 )  தலைமைவகித்த (அதுவும் ஆயுதப்போராட்ட ஆரம்பத்தின் பின்னர் முழுமையாக முடிவுகளை எடுக்கும் நிலைமை இல்லை)  அமிர்தலிங்கத்தையும் சிவசிதம்பரத்தையும்  சுயநல அரசியல்வாதிகள் என்று கூறியுள்ளீர்கள். 

நீங்களே கூறுங்கள் யுத்தத்திற்கு முற்பட்ட அரசியல் தவறு என்றால் அதில் மாபெரும் தவறு இழைத்தவர் தந்தை செல்வாவே. மூன்று தசாப்தத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாமல் மக்களை உசுப்பேற்றும் தேர்தல் அரசிலலை நடத்திய தமிழரசுக்கட்சியில் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் செல்வநாயகம்.  அவரை தவிர்த்து அமிரை நீங்கள் குற்றவாளியாக காட்டியதற்கு  காரணம் அமிரை கோழைத்தனமாக கொலைசெய்த குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கவே. 

ஆனால் நான் இங்கு கூறியது அதுவல்ல இப்படியே உங்களைப் போல் அதி தீவிர தமிழ் தேசியம் பேசி பேசி  எல்லாவற்றையும் நிராகரித்து நிராகரித்து சென்றால் இறுதியில் நிராகரிக்க வேண்டிய தேவையே  இருக்காது.   இப்போதைய நிலையில் நடைமுறை சாத்தியமற்ற அதி தீவிர தமிழ் தேசியத்தை பேசுபவர்களே தமிழ் தேசியத்தின் முதல் எதிரிகள். 

எமது பழைய அரசியல் தலைவர்களும் புலிகளும் கடைப்பிடித்த பயன்ற  அரசியல் அணுகுமுறைகள் எந்த பலனை தராதத்துடன் எம்மை மேலும் பலவீனப்படுத்திய நிலையில், எதிர்காலத்தில் புதிய அணுகுமுறைகளை இளைய அரசியல் வாதிகள் கடைப்பிடித்தால் மட்டுமே இனி ஒரளவுக்காவது இலங்கை தீவில் தமிழ் தேசியம் பலம் பெறும். சுமந்திரன் போன்றவர்கள் பழைய அரசியல் தந்திரோபாயங்களுடனான தமிழ் தேசிய  அரசியலை கைக்கொண்டால் அது தவறானது என்பதே எனது கருத்தாகும்.  ஆயுதப் போராட்டம் உருவாக்கிய பேரழிவினால்  பாரிய பின்னடைவை சந்தித்த தமிழ்மக்களின் வாழ்வு மீண்டும் சிறக்க புதிய இளைஞர்கள் பழைய குப்பைகளை தூக்கி எறிந்து விட்டு புதிய அரசியல் கலாச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும். நிச்சயமாக ரஞ்சித் அது உங்களாலும் என்னாலும் முடியாது.  நீங்கள் பழைய குப்பை அரசியலுக்கு வக்காலத்து வாங்க நான் அதை எதிர்த்து எழுத இப்படியே பொழுது போக்க தான்  எம்மால் முடியும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

யார் நமது மறவன்புலவு சச்சியரைக் கூறுகிறீர்களா..😂

உங்களுக்கு அவர் பொருத்தமானவர் போல் தெரிகிறதாக்கும் . 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2021 at 17:25, Justin said:

கோழி தினமும் கூவுவது அதன் கடமை, ஆனால் விடிவது அதனால் என நினைப்பது சுத்த மடமை!

இதை நீங்கள் சுமந்திரனிடமும் சம்பந்தரிடமும் அல்லவா கூறவேண்டும்??

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2021 at 21:50, tulpen said:

ஐந்து தசாப்தமாக இருந்த தமிழ் அரசியல்வாதிகளை போல் உசுப்பேற்றும் அரசியலை செய்யாமல்

அண்ணை,  நீங்கள் இப்படி எழுதியதால்  தந்தை செல்வாவையும் சேர்த்துத்தான் சொல்கிறீர்கள் என்று எடுத்துக்கொண்டேன். என்னைப்பொறுத்தவரை தமிழர்களுக்கிருந்த உண்மையனான ஒரு அரசியல்த்தலைவர் தந்தை செல்வாதான், அவரின்பின் இருந்த எல்லோருமே அரசியல்வாதிகள் மட்டுமே, எவருமே தலைவர்கள் இல்லை என்பதே எனது எண்ணம்.

மற்றும்படி, அமிரோ யோகேஸ்வரனோ கொல்லப்பட்டதை நான் நியாயப்படுத்தப்போவதில்லை. அவர்களின் அரசியலை நான் ஆதரிக்கவில்லையென்றாலும்கூட, அவர்கள்கொல்லப்பட்டிருக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். "புலிகள் தமிழ் தலைவர்களையே கொன்றார்கள்" என்னும் அழியா அவப்பெயரினை ஏற்படுத்திக்கொடுத்த படுகொலைகள் இவை. 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தீவிர தமிழ்த் தேசிய அரசியல் என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. ஒருவேளை இன்னொரு வன்முறை மிகுந்த ஆயுதப்போராட்டத்தினையோ அல்லது அதன் முன்னோடியான போராட்டத்தினையோதான் குறிப்பிடுகிறீர்களென்றால், நான் பேசுவது இது தொடர்பாக அல்ல.

எனது நிலைப்பாடு சுலபமானது.

1. அழிக்கப்பட்ட எமது மக்களுக்கான நீதி வேண்டும்.
2. எமது தாயகத்தில் எமது மக்கள் சுதந்திரமாக, அந்நிய அடக்குமுறைகள் இன்றி நிம்மதியாக வாழவேண்டும். முற்றான ஆக்கிரமிப்பினுள் வாழும் அவர்களுக்கு விடுதலை வேண்டும்.
3. அன்றாடம் காவுகொள்ளப்படும் எமது நிலமும், கலாசாரமும், மொழியும் காக்கப்படுதல் வேண்டும்.
4. இதனை சர்வதேசத்திலும், உள்நாட்டிலும் வெளிப்படையாகவும், உண்மையாகவும், முழுமையாகவும், மக்களின் உணர்வுகளை அறிந்து பேசவும், முன்னெடுக்கவும், பிரதிநிதித்துவம் செய்யவும் நேர்மையான தலைமை வேண்டும். நிச்சயமாக சுமந்திரன் இதற்குப் பொறுத்தமானவர் இல்லை என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. 

முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கு சாட்சிகள் போதாதென்றோ அல்லது இதனை இனக்கொலையென்று அழைக்கக்கூடாதென்றோ கூறும் ஒரு தலைமை தமிழர்களுக்குத் தேவையானதுதானா? சுதந்திரத்திற்குப் பின் தமிழர்களின் உணர்வுகளை அறிந்து உண்மையான தலைமைத்துவத்தை வழங்கிய செல்வா எங்கே, உலகறிந்த முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கு தமிழரிடத்திலேயே சாட்சிகளைத் தேடும் சுமந்திரன் எங்கே? 

சரி, அவரை விடுங்கள். உங்களிடம் ஒரு கேள்வி அண்ணை,

நான் மேலே கூறிய 4 விடயங்களில் ஏதாவது உங்களுக்குத் தீவிரத் தமிழ்த் தேசியமாகத் தெரிகிறதா? எமது மக்களின் அடிப்படையான வாழ்வுரிமைக்கான கோரிக்கைகளே தீவிர தமிழ்த் தேசியம் என்று நீங்கள் கருதினால், நாங்கள் எதைத்தான் கேட்கவேண்டும் என்கிறீர்கள்? 

அண்ணை, உப்புச் சப்பில்லாத ஒரு தீர்வுக்கு இப்போது உடன்பட்டு விட்டு, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று என்று சொல்வது சரியானதா? 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஒத்துக்கொண்டு இன்று எதுவுமேயில்லாத வெற்றுக்கோதான மாகாணசபையில் வந்து நிற்கிறோம். தான் ஒத்துக்கொள்ளும் எந்தத் தீர்வையும் சிங்களம் ஒருபோதுமே கொடுக்கப்போவதில்லையென்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே. 

Edited by ரஞ்சித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.