Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு

யாழ்.பண்ணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டிருந்தது.

யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வழிகாட்டுதலின் கீழ் யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலில் பொலிஸாரினால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

https://athavannews.com/2022/1263141

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல செயல் .....தொடரட்டும்.......!  👏

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

மிகவும் நல்ல செயல் .....தொடரட்டும்.......!  👏

யாழ் பொது நூலகம் எரித்தமை
யாழ் பொது சந்தை எரித்தமை
யாழ் பொலிசாரின் சிரமதானப் பணிகளின் ஒன்று
யாழ்ப்பாணிகளே கேளீர் 😅

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

யாழ் பொது நூலகம் எரித்தமை
யாழ் பொது சந்தை எரித்தமை
யாழ் பொலிசாரின் சிரமதானப் பணிகளின் ஒன்று
யாழ்ப்பாணிகளே கேளீர் 😅

சாகும் வரைக்கும் இதையே சொல்லிக் கொண்டு இருங்கோ🙂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

சாகும் வரைக்கும் இதையே சொல்லிக் கொண்டு இருங்கோ🙂

உண்மையை தானே..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

உண்மையை தானே..

உண்மை தான் ...ஆனால் அதையே சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பிரயோசனம்?
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் பிரதேசவாதம் என்று அதையே சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பிரயோசனம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சாகும் வரைக்கும் இதையே சொல்லிக் கொண்டு இருங்கோ🙂

மன்னிக்கவும்! சாகும்வரை அல்ல எங்கள் பிரச்சனை தீர்க்கும்வரை, எங்கள் காயங்களுக்கு மருந்திடும்வரை, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கும் வரை. அது ஏது அவர்களை சொன்னால் உங்களுக்கு வலிக்குது? பாதிக்கப்படும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிறீர்கள், அதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்து இல்லை.  எங்களுக்கென்றால் என்றால் மட்டும் கேள்விமேல் கேள்வி கேட்க்கிறீர்கள்? அது ஏன் உங்களுக்கு எங்கள் மட்டில் அப்பிடி ஒரு வெறுப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

யாழ்.பண்ணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டிருந்தது.

அடுத்து, எங்கள் பெண்களுக்கு எப்படி சமைப்பது என்று பயிற்சி எடுக்க போகினமாம். வடக்கில் பயிர் செய்தும்,  மீன் பிடித்தும்  தெற்கிற்கு அனுப்பிய ஒரு காலம் இருந்தது. இப்போ இங்கு வந்து எங்களுக்கு பாடம் எடுக்கும் காலமிது ......  சத்தமாய் சொல்லவும் முடியல, சிலருக்கு வலிக்கும் அவர்கள்  காதில விழுந்தா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்பு துறைக்கு ஆக்கள் கூடிப்போச்சுத்து.இனி ரோட்டு கூட்ட விடுவினம் போலை...

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இளைஞர் சுயமாக சிந்திக்க கூடாது, சமூக உணர்வு வரக்கூடாது, அவர்கள் கையில் வாள், போதைப்பொருள். இவர்கள் நீதியை நிலைநாட்டும் பணியில் கை லஞ்சம், வீதி பெருக்குதல், விவசாய பாடம், தலைமைத்துவ பயிற்சி சிரிப்பாய் இருக்கு. அது சரி என்று வாதாட ஒரு ஏமாந்த கூட்டம் விலை போகாதவர்களை பார்த்து கேள்வி கேட்குது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

யாழ் பொது நூலகம் எரித்தமை
யாழ் பொது சந்தை எரித்தமை
யாழ் பொலிசாரின் சிரமதானப் பணிகளின் ஒன்று
யாழ்ப்பாணிகளே கேளீர் 😅

உங்களின் அதிதீவிர, தமிழ்ப் பயங்கரவாதச் சிந்தனையினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  உங்கள் போன்றவர்களாலேயே தமிழர்கள் சிங்களப் பெரும்பான்மையினத்தவருடன் சமரசம் செய்யவோ அல்லது பழையனவற்றை மறந்து சமாதானமாக வாழவோ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

எதற்கெடுத்தாலும் பழையனவற்றை நினைவுபடுத்த ஒரு பட்டியலினைத் தூக்கிக்கொண்டு வருவதே உங்கள் போன்ற தமிழ் இனவாதிகளின் வாடிக்கையாகிவிட்டது.

1956 தனிச்சிங்களச் சட்டம்
1956 இனவன்முறை
1956 இலிருந்து இன்றுவரை தொடரும் தமிழர் தாயகம் மீதான சிங்கள ஆக்கிரமிப்புக் குடியேற்றங்கள்
1974 தமிழ்மொழி மாநாட்டுப் படுகொலை
1977 இனவன்முறை
1981 யாழ் நூலக எரிப்பு
1983 கறுப்பு யூலை இனப்படுகொலை
1983 இலிருந்து 2009 வரையான கூட்டுப்படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள்
2009 இன் திட்டமிட்ட இனக்கொலை
2009 இன் பின்னரான தமிழர் தாயகம் மீதான சிங்களப் பயங்கரவாதத்தின் (மன்னிக்க வேண்டும், எனது எசமானர்களின் என்று எழுதினாலும் எனது தட்டச்சு சிங்களப் பயங்கரவாதியென்றுதான் எழுதுகிறது) திட்டமிட்ட ஆக்கிரமிப்பும், மத - கலாசாரத் திணிப்பு

என்று நீங்கள் இன்றுவரை தொடர்ச்சியாக எழுதிவருவது எனது எசமானர்களைக் கோபப்படுத்திவருகிறது. இது எனதும், எனது தலைவர்களினதும் சமரச அரசியலினை வெகுவாகப் பாதிக்கிறது.

ஆகவே, இந்த பழையன மீட்டல் எனும் அதிதீவிர தமிழ்த் தேசியவாதக் கனவிலிருந்து நீங்கள் விடுபட்டு என்போன்று சமரச, சிங்கள மேலாதிக்கவாதத்தினையும், அவர்களின் மத கலாசார திணிப்பினை ஏற்றுக்கொண்டும் வாழப்பழக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
🦴

1 hour ago, satan said:

எங்கள் இளைஞர் சுயமாக சிந்திக்க கூடாது, சமூக உணர்வு வரக்கூடாது, அவர்கள் கையில் வாள், போதைப்பொருள். இவர்கள் நீதியை நிலைநாட்டும் பணியில் கை லஞ்சம், வீதி பெருக்குதல், விவசாய பாடம், தலைமைத்துவ பயிற்சி சிரிப்பாய் இருக்கு. அது சரி என்று வாதாட ஒரு ஏமாந்த கூட்டம் விலை போகாதவர்களை பார்த்து கேள்வி கேட்குது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கமச்செய்கையில் சிங்கள ராணுவக் காட்டேறிகளை இனிமேல் ஈடுபடுத்தப்போகிறாராம் அரசாங்க அதிபர். உள்ளூர் விவசாயிகளுடன் சேர்ந்து இனி ராணுவமும் கமச்செய்கையில் ஈடுபடும் என்று நேற்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். அவர் என்ன செய்யமுடியும், அவரின் அருகில் இருக்கும் மட்டக்களப்பு மாவட்ட ஆக்கிரமிப்புப் பேய்களின் (இப்படிச் சொல்வதால் சமரச நாயகர்களுக்குக் கோபம் வரப்போகிறது) தளபதி அவருக்குச் சொன்னதை அவர் தனது பெயருடன் அறிக்கையாக அறிவிக்கவேண்டிய நிலை. 

ஆனால் ஒன்று, நாம் பழையனவற்றைக் கிளறாதவை எமது எசமானர்கள் கோபப்படப்போவதில்லை. அவர்கள் எடுப்பதை எடுத்துக்கொள்ளட்டும், நாங்கள் அவர்களது அடிமைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரஞ்சித் said:

உள்ளூர் விவசாயிகளுடன் சேர்ந்து இனி ராணுவமும் கமச்செய்கையில் ஈடுபடும் என்று நேற்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

முடிவில் பட்டியில் ஆடுகள் இருக்காது, ஓநாய்கள் கொழுத்து ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும்.             

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, satan said:

முடிவில் பட்டியில் ஆடுகள் இருக்காது, ஓநாய்கள் கொழுத்து ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும்.             

அந்த ஓநாய்களுக்காக அந்த ஆடுகளில் சில இப்போது அழ ஆரம்பித்திருப்பதுதான் வேடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

அந்த ஓநாய்களுக்காக அந்த ஆடுகளில் சில இப்போது அழ ஆரம்பித்திருப்பதுதான் வேடிக்கை.

அவை ஆட்டுத்தோல் போர்த்த ஓநாய்களாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

சாகும் வரைக்கும் இதையே சொல்லிக் கொண்டு இருங்கோ🙂

மன்னிக்கலாம் மறக்கமுடியாது ரதி அவர்களே....எப்படி புலிகளின் செயல்களை  நீங்கள் சாகும் வரை  மறக்க மாட்டியளோ அது போல நானும் மறக்க மாட்டேன் சிங்கள அரசபயங்கரவாதிகளின் வீர தீர செயல்களை 

5 hours ago, MEERA said:

நீங்கள் பிரதேசவாதம் என்று அதையே சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பிரயோசனம்?

குருக்கள் எதையும் சொல்லலாம் பக்தர்கள் "சட்டாப்"😅

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

உங்களின் அதிதீவிர, தமிழ்ப் பயங்கரவாதச் சிந்தனையினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.  உங்கள் போன்றவர்களாலேயே தமிழர்கள் சிங்களப் பெரும்பான்மையினத்தவருடன் சமரசம் செய்யவோ அல்லது பழையனவற்றை மறந்து சமாதானமாக வாழவோ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

எதற்கெடுத்தாலும் பழையனவற்றை நினைவுபடுத்த ஒரு பட்டியலினைத் தூக்கிக்கொண்டு வருவதே உங்கள் போன்ற தமிழ் இனவாதிகளின் வாடிக்கையாகிவிட்டது.

1956 தனிச்சிங்களச் சட்டம்
1956 இனவன்முறை
1956 இலிருந்து இன்றுவரை தொடரும் தமிழர் தாயகம் மீதான சிங்கள ஆக்கிரமிப்புக் குடியேற்றங்கள்
1974 தமிழ்மொழி மாநாட்டுப் படுகொலை
1977 இனவன்முறை
1981 யாழ் நூலக எரிப்பு
1983 கறுப்பு யூலை இனப்படுகொலை
1983 இலிருந்து 2009 வரையான கூட்டுப்படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள்
2009 இன் திட்டமிட்ட இனக்கொலை
2009 இன் பின்னரான தமிழர் தாயகம் மீதான சிங்களப் பயங்கரவாதத்தின் (மன்னிக்க வேண்டும், எனது எசமானர்களின் என்று எழுதினாலும் எனது தட்டச்சு சிங்களப் பயங்கரவாதியென்றுதான் எழுதுகிறது) திட்டமிட்ட ஆக்கிரமிப்பும், மத - கலாசாரத் திணிப்பு

என்று நீங்கள் இன்றுவரை தொடர்ச்சியாக எழுதிவருவது எனது எசமானர்களைக் கோபப்படுத்திவருகிறது. இது எனதும், எனது தலைவர்களினதும் சமரச அரசியலினை வெகுவாகப் பாதிக்கிறது.

ஆகவே, இந்த பழையன மீட்டல் எனும் அதிதீவிர தமிழ்த் தேசியவாதக் கனவிலிருந்து நீங்கள் விடுபட்டு என்போன்று சமரச, சிங்கள மேலாதிக்கவாதத்தினையும், அவர்களின் மத கலாசார திணிப்பினை ஏற்றுக்கொண்டும் வாழப்பழக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
🦴

மட்டக்களப்பு மாவட்டத்தில் கமச்செய்கையில் சிங்கள ராணுவக் காட்டேறிகளை இனிமேல் ஈடுபடுத்தப்போகிறாராம் அரசாங்க அதிபர். உள்ளூர் விவசாயிகளுடன் சேர்ந்து இனி ராணுவமும் கமச்செய்கையில் ஈடுபடும் என்று நேற்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். அவர் என்ன செய்யமுடியும், அவரின் அருகில் இருக்கும் மட்டக்களப்பு மாவட்ட ஆக்கிரமிப்புப் பேய்களின் (இப்படிச் சொல்வதால் சமரச நாயகர்களுக்குக் கோபம் வரப்போகிறது) தளபதி அவருக்குச் சொன்னதை அவர் தனது பெயருடன் அறிக்கையாக அறிவிக்கவேண்டிய நிலை. 

ஆனால் ஒன்று, நாம் பழையனவற்றைக் கிளறாதவை எமது எசமானர்கள் கோபப்படப்போவதில்லை. அவர்கள் எடுப்பதை எடுத்துக்கொள்ளட்டும், நாங்கள் அவர்களது அடிமைகள்.

மன்னிக்கவும் ரஞ்சித் ..இனிவரும் காலங்களில் நானும் எஜாமானர்களுக்காக குரல் கொடுக்கிறேன் ஆனால் அவர்கள் எனக்கு சம்திங் சம்திங் .....தந்தால்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாவது லஞ்சம் வாங்கி திண்ட இந்த தொப்பையை குறைக்கிறது..??!

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

நீங்கள் பிரதேசவாதம் என்று அதையே சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பிரயோசனம்?

உங்களை போல் உள்ளோர் உண்மையை உணர்ந்தால் நாம் ஏன் திரும்ப ,திரும்ப கதைக்க போறோம் 
 
22 hours ago, satan said:

மன்னிக்கவும்! சாகும்வரை அல்ல எங்கள் பிரச்சனை தீர்க்கும்வரை, எங்கள் காயங்களுக்கு மருந்திடும்வரை, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கும் வரை. அது ஏது அவர்களை சொன்னால் உங்களுக்கு வலிக்குது? பாதிக்கப்படும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிறீர்கள், அதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்து இல்லை.  எங்களுக்கென்றால் என்றால் மட்டும் கேள்விமேல் கேள்வி கேட்க்கிறீர்கள்? அது ஏன் உங்களுக்கு எங்கள் மட்டில் அப்பிடி ஒரு வெறுப்பு?

பிரச்சனை என்றால் அதை தீர்க்க பாருங்கோ ...அதை விடுத்து சிங்களவன் அடிச்சிட்டான் என்று புலம்பிறது என்றால் ஒரு மூலையில் போய் இருந்து சாகும் வரைக்கும் புலம்பிட்டு இருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

மன்னிக்கலாம் மறக்கமுடியாது ரதி அவர்களே....எப்படி புலிகளின் செயல்களை  நீங்கள் சாகும் வரை  மறக்க மாட்டியளோ அது போல நானும் மறக்க மாட்டேன் சிங்கள அரசபயங்கரவாதிகளின் வீர தீர செயல்களை 

குருக்கள் எதையும் சொல்லலாம் பக்தர்கள் "சட்டாப்"😅

நான் மறக்கவும் சொல்லவில்லை . மன்னிக்கவும் சொல்லவில்லை ....அவர்கள் நூலகத்தை எரித்தார்கள் என்றால் எல்லோரும்  சேர்ந்து  இன்னொரு நூலகத்தை அதை விட பெரிதாய் கட்ட முயற்சி செய்யுங்கள் 
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழக - அமெரிக்க தமிழ் இளைஞருக்குள்ள துணிவு கூட இஞ்ச பலரிடம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

இந்த தமிழக - அமெரிக்க தமிழ் இளைஞருக்குள்ள துணிவு கூட இஞ்ச பலரிடம் இல்லை. 

ஏன் நீங்கள் போய் தலைவரின்ட காணிக்கு முன்னால் இருந்து போட்டோ போடுங்கோ பார்ப்பம் 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

நான் மறக்கவும் சொல்லவில்லை . மன்னிக்கவும் சொல்லவில்லை ....அவர்கள் நூலகத்தை எரித்தார்கள் என்றால் எல்லோரும்  சேர்ந்து  இன்னொரு நூலகத்தை அதை விட பெரிதாய் கட்ட முயற்சி செய்யுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சிங்களவன் அடிச்சிட்டான் என்று புலம்பிறது என்றால் ஒரு மூலையில் போய் இருந்து சாகும் வரைக்கும் புலம்பிட்டு இருங்கோ

எங்களின் வலி, இழப்பு, துயரம் உங்களுக்கு புலம்பலாய்த் தெரியுது. ம்..... உங்களை சொல்லி குற்றமில்லை. எல்லாம் காலம் சிலரை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் இப்படியான கோடரிக்காம்புகள் போதும் என வரலாறு நிரூபித்துள்ளது. வேதனையும் வலியும் தனக்கு தனக்கு வந்தாற்தான் புரியும். கடைசியாக ஒன்று எங்கள் துயரத்தை கேலி செய்யும் நீங்கள்,  எப்போ எங்கிருந்து நாங்கள் புலம்ப வேண்டும் என்று சொல்லித்தரவோ, கட்டளையிடவோ வேண்டியதில்லை. எங்களுக்கு தெரியும் என்னசெய்ய வேண்டுமென்று.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உங்களை போல் உள்ளோர் உண்மையை உணர்ந்தால் நாம் ஏன் திரும்ப ,திரும்ப கதைக்க போறோம் 
 
பிரச்சனை என்றால் அதை தீர்க்க பாருங்கோ ...அதை விடுத்து சிங்களவன் அடிச்சிட்டான் என்று புலம்பிறது என்றால் ஒரு மூலையில் போய் இருந்து சாகும் வரைக்கும் புலம்பிட்டு இருங்கோ

மேலே நீங்கள் எழுதியது தான், பிரச்சனை என்றால் தீர்க்க பாருங்கள் பிரதேசவாதம் என்ற முகமூடி அணியாது 🤪

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.