Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுக்ரேன் vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 
யுக்ரேனின் இன்னோர் அண்டை நாடான பெலாரூஸில் ரஷ்ய படைகள் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் காட்சி.

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

யுக்ரேனின் அண்டை நாடான பெலாரூஸில் ரஷ்ய படைகள் கூட்டு ராணுவப் பயிற்சி செய்யும் காட்சி.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

யுக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு யுக்ரேன் பகுதிகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்த இரண்டு பகுதிகளையும் சுதந்திர தனி நாடுகளாகவும் அங்கீகரித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தால் யுக்ரேனின் ஓர் அங்கமாகவே பார்க்கப்படும் இந்தப் பிரிவினைவாதப் பகுதிகளுக்குள் ரஷ்யா தனது படைகளை அனுப்பியுள்ளதே ஒரு படையெடுப்புதான் என்று மேற்குலக நாடுகள் கருதுகின்றன.

தங்கள் நாட்டுப் படையினர் டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் என்று ரஷ்ய அரசு கூறினாலும், அதை ''அறிவற்ற'' (நான்-சென்ஸ்) செயல் என அமெரிக்கா கூறுகிறது.

யுக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இரண்டு பகுதிகளுக்கும் எதிராக பல பொருளாதார மற்றும் பயணத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அங்கு அமெரிக்க குடிமக்கள் முதலீடு செய்யவும், அங்கு இருப்பவர்களுடன வர்த்தகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று கூறும் பிரிட்டன் அரசு ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு உதவும் பொருளாதார நலன்களை பிரிட்டனின் தடைகள் பாதிக்கும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

படையெடுப்பு தொடங்கி விட்டதாக மேற்கத்திய நாடுகள் கூறும் நிலையில் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ வல்லமை என்ன?

உலக நாடுகளின் ராணுவ வல்லமையை மதிப்பிடும் 'குளோபல் ஃபயர் பவர்' எனும் இணையதளம் மற்றும் உலக நாடுகள் இடையிலான போர், பதற்றம், புவிசார் அரசியல் நெருக்கடி உள்ளிட்டவை குறித்து ஆராயும் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ரேட்டஜிக் ஸ்டடீஸ் எனும் ஆய்வு நிறுவனத்தின் வருடாந்திரப் பதிப்பான 'தி மிலிட்டரி பேலன்ஸ்' ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் பிபிசி இந்த விவரங்களை உங்களுக்கு வழங்குகிறது.

  • யுக்ரேன் பாதுகாப்பு படைகளில் இருக்கும் மொத்த துருப்புகளின் எண்ணிக்கை 11 லட்சம் பேர்; ரஷ்யாவில் பாதுகாப்பு படைகளில் இருக்கும் துருப்புகளின் எண்ணிக்கை 29 லட்சம் பேர். இவர்கள் அனைவருமே இப்போது பணியில் இருப்போர் அல்ல.
  • யுக்ரேனில் தற்பொழுது களத்தில் பணியாற்றுவோர் எண்ணிக்கை இரண்டு லட்சம் பாதுகாப்பு படையினர். ஆனால் இதே எண்ணிக்கை ரஷ்யாவில் ஒன்பது லட்சமாக உள்ளது.
  • யுக்ரேனில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் துருப்புகளின் எண்ணிக்கை ஒன்பது லட்சம் பேர். ரஷ்யாவில் இதே எண்ணிக்கை 20 லட்சம் பேர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு நாடுகளின் பாதுகாப்பு படைகளில் இருந்தும் பணி ஓய்வு பெற்றவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.
 
யுக்ரேனில் பிரிவினைவாதப் பகுதியாக இருந்த க்ரைமியாவுக்கு 2014இல் படைகளை அனுப்பி ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

படக்குறிப்பு,

யுக்ரேனில் பிரிவினைவாதப் பகுதியாக இருந்த க்ரைமியாவுக்கு 2014இல் படைகளை அனுப்பி ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

  • தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய விமானங்கள் யுக்ரேனிடம் 98 மட்டுமே உள்ளன. ரஷ்யாவிடம் 1511 விமானங்கள் உள்ளன.
  • தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய ஹெலிகாப்டர்கள் யுக்ரேனிடம் 34 உள்ளன. ஆனால் ரஷ்யாவிடம் 544 ஹெலிகாப்டர்கள் உள்ளன.
  • யுக்ரேன் ராணுவத்திடம் 2596 டாங்கிகளும், ரஷ்யாவிடம் 12,240 டாங்கிகளும் உள்ளன.
  • யுக்ரேன் பாதுகாப்புப் படைகளின் வசமிருக்கும் கவச வாகனங்களின் எண்ணிக்கை 12,303. இதுவே ரஷ்யாவின் பாதுகாப்புப் படைகள் இடமிருக்கும் கவச வாகனங்களின் எண்ணிக்கை 30,122.
  • நிலத்தில் வாகனங்கள் மூலம் கட்டி இழுத்துச் செல்லக்கூடிய சேணேவிகள் (towed artillery) யுக்ரேன் படைகளிடம் 2,040 உள்ளன; இவை ரஷ்யாவிடம் 7,571 உள்ளன.

https://www.bbc.com/tamil/global-60475857

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளின் ஆயுதங்கள் , படைகள் யூக்ரேனை சுற்றி உள்ள நேட்டோ நாடுகளிலும் யூக்ரேனிலும் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து இராணுவ சமநிலை பற்றி பேச வேண்டும்.

சுதந்திர பிரகடனம் செய்யப்பட்ட இரு இடங்களிலும் 35000 ரஸ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் படைகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மேற்கு நாடுகளின் ஆயுதங்கள் , படைகள் யூக்ரேனை சுற்றி உள்ள நேட்டோ நாடுகளிலும் யூக்ரேனிலும் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து இராணுவ சமநிலை பற்றி பேச வேண்டும்.

சுதந்திர பிரகடனம் செய்யப்பட்ட இரு இடங்களிலும் 35000 ரஸ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் படைகள் உள்ளன.

மேற்கால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் இலகு ரகத்திற்குள் வரும். இது உக்ரேனின் தாக்குதல் வலுவை அதிகரிக்கலாம். ஆனால் யுத்தத்தின் போக்கை தீர்மானிக்க சந்தர்ப்பங்கள் குறைவு.

மேற்கின் படைகள் நேராக யுத்தத்தில் இரஸ்ய படைகளை எதிர்கொள்ளாது. இறங்கினால் அது மூன்றாவது உலக மகா யுத்தத்திற்கு இட்டுச் செல்லும் அபாயம் உள்ளது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

மேற்கால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் இலகு ரகத்திற்குள் வரும். இது உக்ரேனின் தாக்குதல் வலுவை அதிகரிக்கலாம். ஆனால் யுத்தத்தின் போக்கை தீர்மானிக்க சந்தர்ப்பங்கள் குறைவு.

மேற்கின் படைகள் நேராக யுத்தத்தில் இரஸ்ய படைகளை எதிர்கொள்ளாது. இறங்கினால் அது மூன்றாவது உலக மகா யுத்தத்திற்கு இட்டுச் செல்லும் அபாயம் உள்ளது. 

பைடன் ஆட்சிக்கு வந்தவுடனை புடின்னை கொலையாளி எண்டு சொறிஞ்சு ஆரம்பிச்சு வைச்ச அமெரிக்காவுக்கு நல்ல பாடம் கிடைக்கும் கண்டியளோ.

பைடன் எண்டைக்கு ஆட்சிக்கு வந்தானோ அண்டைக்கு வந்த நசல்....

அடுத்த ஆட்சி டொனால்ட் ரம்ப் தான்......ஆச்சரியமே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

போர் தொடங்கி ஆச்சு.. இன்னும் நேட்டோ விசுகோத்து தின்று கொண்டுருந்தால் வேலைக்கு ஆகாது . நம்பி வந்தவனை நட்டாற்றுக்குள் தள்ளி விடல் ஆகாது.

9.jpg

அப்புறம் நம்பக தன்மை கேள்வி குள்ளாகும் .. ஆரும் நம்ப மாட்டீனம் ; சட்டு புட்டுன்னு ஆரம்பிங்கப்பா..👌

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போர் நடந்த போது... உக்ரேன் விமானிகள் 
எமது தமிழ் மண்ணில் குண்டு வீசி, பொது மக்களை கொன்றவர்கள். 
உக்ரேனின் விமானங்களையும்... ரஷ்யா சுட்டு விழுத்த வேண்டும்.

ஆர் செத்தாலும், எத்தனை விமானம் விழுந்தாலும் எனக்கு சந்தோசம். 
இரு பக்க அழிவு  எண்ணிக்கையை மட்டும், தவறாமல் பதிந்து விடுங்கள். 🙂 😎

என்னுடைய இனத்தை அழித்தவர்கள்.... நாசமாக போக வேண்டும். 😡

  • கருத்துக்கள உறவுகள்

Garment workers accuse Sri Lankan army | Materials & Production News | News

Sri Lankan army says it is ready to face any investigation on war crime

Tension over army 'seizure' of Sri Lanka Jaffna land - BBC News  Sri Lanka's military aren't ready to be peacekeepers | The Star 

ஸ்ரீலங்கா... இந்த நேரம் தனது இராணுவத்தை... 
உக்ரேனுக்கும், ரஷ்யாவுக்கும் அனுப்பி, போரிட வேண்டும்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு."

ஐயன் வள்ளுவன் சொன்னது போல் செய்த நன்றியை மறப்பது அழகல்ல. 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நன்றி ஐயா
நான்  எழுத  வந்ததெல்லாம் இங்கே  ஏற்கனவே  பதியப்பட்டிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஈழப் போர் நடந்த போது... உக்ரேன் விமானிகள் 
எமது தமிழ் மண்ணில் குண்டு வீசி, பொது மக்களை கொன்றவர்கள். 
உக்ரேனின் விமானங்களையும்... ரஷ்யா சுட்டு விழுத்த வேண்டும்.

ஆர் செத்தாலும், எத்தனை விமானம் விழுந்தாலும் எனக்கு சந்தோசம். 
இரு பக்க அழிவு  எண்ணிக்கையை மட்டும், தவறாமல் பதிந்து விடுங்கள். 🙂 😎

என்னுடைய இனத்தை அழித்தவர்கள்.... நாசமாக போக வேண்டும். 😡

போர் வெற்றி என்பது கல்லறைகளையும் கண்ணீரையும்  விட்டுச்செல்லும் சிறியர் 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

போர் வெற்றி என்பது கல்லறைகளையும் கண்ணீரையும்  விட்டுச்செல்லும் சிறியர் 

தனிக்காட்டு ராஜா..... 
நாங்கள், பட்ட துன்பத்தை... மற்றவனும் அனுபவிக்க வேண்டும்.
எங்களை அழிக்க... இந்த இரண்டு நாடும் ஓடி வந்த போது,
கல்லறைகளும்,  கண்ணீரும்.. எங்களுக்கும் வரும் 
என்று அவர்கள் யோசித்து இருக்க வேண்டும்.  

இந்த இரண்டு நாட்டுடனும் தமிழருக்கு முன்பு என்ன பகை இருந்தது.
பகை இல்லாமல் இருக்க, இவர்கள் என்ன திமிருக்கு எங்கள் மீது,
குண்டு போட்டவர்கள். 

தமிழன் அநியாயத்துக்கு... நல்லவனாக நடக்கப் போய்த்தான்,
இன்று அவ்வளவு, அவலங்களையும்... தலையில் சுமந்து கொண்டு இருக்கின்றோம்.

இனி.... எவனுக்கும், பாவம் பார்ப்பதில்லை.
அத்தனை பேரும்... அழிந்து சாக வேண்டும். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

உலக நாடுகள் அண்ணன்  தம்பிகள்தான் இன்று அமெரிக்கா ஏன் சறுக்கிறது  போர் தொடுக்க  காரணம் பலம்  ரஷ்யாவிடம்  உள்ளது .
இலங்கைக்கு உதவியது உக்ரேனை விட இந்தியா எம்மால் ஏதாவது செய்ய முடிந்தததா இல்லை ?  யுத்தம் வடுக்களை தந்துவிட்டு நகரும்  ............. நாடும் நகர்களும் மட்டுமே வசமாகும்  இழப்புக்களை கொடுத்து

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Garment workers accuse Sri Lankan army | Materials & Production News | News

Sri Lankan army says it is ready to face any investigation on war crime

Tension over army 'seizure' of Sri Lanka Jaffna land - BBC News  Sri Lanka's military aren't ready to be peacekeepers | The Star 

ஸ்ரீலங்கா... இந்த நேரம் தனது இராணுவத்தை... 
உக்ரேனுக்கும், ரஷ்யாவுக்கும் அனுப்பி, போரிட வேண்டும்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு."

ஐயன் வள்ளுவன் சொன்னது போல் செய்த நன்றியை மறப்பது அழகல்ல. 😁

ஸ்ரீலங்கா என்ன முட்டாளா அவர்கள் தந்திரம் மிகுந்தவர்கள். எங்காவது அமைதியாக இருக்கும் நாடுகளுக்கு ஐ.நா படைகளோடு அனுப்பி அங்குள்ள பெண்களையும் சிறுவர்களையும் காபந்து செய்வார்கள்.....இங்கு போருக்கு அனுப்பி அவர்களை சாகடிப்பார்களா.......!

இந்தப் பிரச்சினைக்குள் எந்தெந்த நாடுகளிடம் இருந்து எவ்வளவு வறுகலாம் என்றுதான் கணக்கு போட்டுக்கொண்டிருப்பார்கள்......!

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உலக நாடுகள் அண்ணன்  தம்பிகள்தான் இன்று அமெரிக்கா ஏன் சறுக்கிறது  போர் தொடுக்க  காரணம் பலம்  ரஷ்யாவிடம்  உள்ளது .
இலங்கைக்கு உதவியது உக்ரேனை விட இந்தியா எம்மால் ஏதாவது செய்ய முடிந்தததா இல்லை ?  யுத்தம் வடுக்களை தந்துவிட்டு நகரும்  ............. நாடும் நகர்களும் மட்டுமே வசமாகும்  இழப்புக்களை கொடுத்து

அழிவைத்தந்தவனுக்கு  அதையே  கொடு

இந்த  முறை  இப்போர்  உங்களை  ஒன்றும் செய்யாது

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  இதை வாசித்தபின் யார் யாரை சொறிகின்றாகள் என்பது விளங்கும்...😁

உக்ரைன் - ரஷ்யா போருக்கான காரணம் என்ன?...
 
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் சரணடைந்த பிறகு, உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
 
1945 வாக்கில் அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் வல்லரசு நாடுகளாகின.
இதையடுத்து சோவியத் ஒன்றியம், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக 1949-ல் அமெரிக்கா, நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பை (North Atlantic Treaty Organization -NATO) உருவாக்கியது. இதில், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்தன. இதன் தலைநகரம் பெல்ஜியத்தில் அமைக்கப்பட்டது.
 
இந்த நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள நாடுகளின்மீது பிற அந்நிய நாடுகள் படையெடுத்தால், சக உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு உறுதுணையாகப் படையெடுப்பை மேற்கொள்ளும். இந்த பாதுகாப்பு அம்சத்தால், நேட்டோ உருவாக்கப்பட்டபோது 12 ஆக இருந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 30 உறுப்பு நாடுகளாக உள்ளது.
 
இதில், கடைசியாக தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வட மாசிடோனியா இணைந்தது. மேலும் போஸ்னியா, ஹெர்ஸ்கோவினா, ஜார்ஜியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இதில் இணைய ஆர்வமாக இருந்தன. இதற்கு நேட்டோவும் இசைந்தது.
 
இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்தது. இதற்கான காரணத்தை அறிய முதலில், சோவியத் ஒன்றிய வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
1917-ல் ஏற்பட்ட அக்டோபர் புரட்சி, சோவியத் ஒன்றியத்துக்கான முதல் புள்ளியாக இருந்தது. 1922 முதல் பெரும் வல்லரசாக, 10க்கும் மேற்பட்ட குடியரசுகளை சோவியத் ஒன்றியம் கட்டியாண்டது. இந்த அரசின் அதிகாரம் பரவலாக்கப்படாமல், ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட்டதாக இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை, பின்னாளில் பெரிதாக வெடித்தது.
 
சோவியத் ஒன்றியத்தில் இருந்த நாடுகள் 1990களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதற்குக் கீழ் இருந்த 10-க்கும் மேற்பட்ட பகுதிகள் பிரிந்து சென்று, சுதந்திரம் பெற்றதாக அறிவித்துக்கொண்டு தனித்தனி நாடுகளாகின. இதில் இரண்டாவது சக்திவாய்ந்த நாடாக இருந்த உக்ரைனும் அடக்கம். வாக்கெடுப்பில் 92.3% பெற்று, சுதந்திரம் பெற்றதாக அறிவித்துக்கொண்டது உக்ரைன். ரஷ்யாவும் பலம்மிக்க தனி நாடானது.
 
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், அதன் வெளிநாட்டுக் கடன்களைத் தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட ரஷ்யா, இருந்த சர்வதேச சொத்துகளையும் தனதாக அறிவித்தது. இதற்கு உக்ரைன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. 1991 சட்டத்தின்படி, வெளிநாட்டு சொத்துகளில் தங்களுக்கும் பங்கிருப்பதாக சர்வதேச நீதிமன்றங்களில் அறிவித்தது உக்ரைன். இந்த மோதல் 1991-ல் இருந்தே தொடர்ந்து வருகிறது.
 
1990 வரை இருந்த சோவியத் ஒன்றியத்தின் பலம், ரஷ்யாவுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்று அமெரிக்கா நினைத்தது. இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் அதையே விரும்பின. இதனால் ரஷ்யாவின் ஆளுமையைக் குறைக்கத் திட்டமிட்டன.
சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி, ரஷ்யாவைச் சுற்றிலும் உள்ள சிறிய நாடுகளை நேட்டோவில் இணைக்க ஆரம்பித்தன. இந்த சூழலில் ஆரம்பத்தில் இருந்தே முரண்பட்ட ரஷ்யாவை எதிர்த்து, நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் அதிக ஆர்வம் காட்டியது. இந்தப் போக்கு ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. தன்னைச் சுற்றிலுமுள்ள பிற நாடுகள் இணைவதையே வெறுப்புடன், கையறு நிலையில் வேடிக்கை பார்த்த ரஷ்யா, உக்ரைன் கண்டிப்பாக நேட்டோவுடன் இணையக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
 
கலாச்சார, மொழி ரீதியில் ரஷ்யாவை ஒத்திருக்கும், தன் எல்லையில் இருக்கும் நாடு, அமெரிக்கா உடன் கைகோப்பதும், அமெரிக்கப் படைகள் தங்கள் எல்லையிலும் நிற்பதும் ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. எனினும் உக்ரைன் மக்கள் ரஷ்யக் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதை வெறுத்தனர். ரஷ்ய எதிர்ப்பையும் மீறி, அந்நாட்டு ஆதரவில் அமைந்திருந்த அரசை 2014-ல் போராட்டம் மூலம் பெருமக்கள் திரள் கீழே இறக்கியது. இதனால் வெகுண்டெழுந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது.
 
அந்தப் போரில் சுமார் 14 ஆயிரம் பேர் இறந்ததாகத் தகவல் வெளியானது. முடிவில் உக்ரைனின் தென்பகுதியில் உள்ள க்ரீமியா தீபகற்பத்தை (Crimean Peninsula) ரஷ்யா கைப்பற்றியது. வர்த்தகக் காரணங்களுக்கு இந்தப் பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டே க்ரீமியாவைப் பிடித்தது. இதனால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. எனினும் ரஷ்யா தனது முடிவில் பின்வாங்கவில்லை.
 
இதற்கிடையே அதேநேரத்தில் கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் தொடர்ந்து உக்ரைன் அரசுக்கு எதிராகப் போராடினர். உக்ரைனில் தேர்தல் வந்தது. தொலைக்காட்சியில் அதிபராக நடித்த காமெடி நடிகர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெற்றி பெற்று நிஜ அதிபரானார். முன்பு தேர்தல் வாக்குறுதியாக, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் ரஷ்ய- உக்ரைன் பிரச்சினை தீர்க்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
 
2015-ல் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரஷென்கோ - ரஷ்யாவின் விளாடிமிர் புதின் இடையில் மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆதரவோடு இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மின்ஸ்க் ஒப்பந்தத்தை மீண்டும் தற்போது கொண்டுவர வேண்டும் என்றும் மேலும் சில நிபந்தனைகளையும் ரஷ்யா விதித்தது. எனினும் இதற்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ளவில்லை.
 
மின்ஸ்க் ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு ரஷ்யா அழுத்தம் கொடுக்க, மேற்கத்திய நாடுகளிடம் உதவி கோரினார் ஜெலன்ஸ்கி. வெளிப்படையாகவே நேட்டோவில் சேர விரும்புவதாகவும் பேச ஆரம்பித்தார்.
 
இதனால் வெகுண்டெழுந்த ரஷ்யா, தன்னுடைய படைகளைக் கொண்டு வந்து, உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில் நிறுத்தியது. சுமார் 1,50,000 பேர் அங்கே குவிக்கப்பட்டனர். கூடவே மருத்துவ உபகரணங்கள், அதிநவீன பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றையும் ரஷ்யா வைத்துள்ளதால் அங்கே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தாண்டி அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது. போர் எதையும் நடத்தவில்லை என்று தொடர்ந்து புடின் கூறிவருகிறார்.
உக்ரைன் இன்னமும் நேட்டோவில் இணையவில்லை என்பதால், அங்கு நேட்டோ படைகளை அனுப்பமுடியாது. அதனால், நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் உக்ரைனுக்கு அண்டை நாடுகளான எஸ்தோனியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஆதரவுப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
 
இதுதொடர்பாக 8 அம்சக் கோரிக்கைகளையும் புடின் முன்வைத்தார். அதன்படி,
1997-க்குப் பிறகு நேட்டோவில் இணைந்த நாடுகள் அனைத்தில் இருந்தும் நேட்டோ படைகள் வெளியேற வேண்டும். ஆயுதங்களைத் திரும்பப் பெற வேண்டும். (இதன்மூலம் பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய நாடுகளும், நேட்டோவில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும். )
 
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு சட்டரீதியான உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் அளிக்க வேண்டும். உக்ரைனில் அமெரிக்காவில் போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. நேட்டோவில் உக்ரைன், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
 
இதன்மூலம், கிழக்கு ஐரோப்பாவை முழுமையாகத் தன் வசப்படுத்தத் திட்டமிட்டார் புடின். எனினும் இதற்கு நேட்டோ அமைப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் நிலைமை இன்னும் மோசமானது. இதனால் கிழக்கு உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது.
 
அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்தது சர்ச்சைக்கு உள்ளானது. உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பின் அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளதாகவும், மாஸ்கோ எல்லையில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்குவதாகக் கூறினாலும், விரைவில் தாக்குதல் உறுதி என்றும் அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து, ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறுவதாக செய்தி வெளியானது. ஆனால் சில மணி நேரத்திலேயே உக்ரைன் எல்லையில் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்தான் தற்போது ரஷ்யா உக்ரைன் மீது போர்தொடுத்துள்ளது.
Ist möglicherweise ein Bild von 2 Personen
 
முகநூலில் இருந்தது.
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

ஸ்ரீலங்கா என்ன முட்டாளா அவர்கள் தந்திரம் மிகுந்தவர்கள். எங்காவது அமைதியாக இருக்கும் நாடுகளுக்கு ஐ.நா படைகளோடு அனுப்பி அங்குள்ள பெண்களையும் சிறுவர்களையும் காபந்து செய்வார்கள்.....இங்கு போருக்கு அனுப்பி அவர்களை சாகடிப்பார்களா.......!

இந்தப் பிரச்சினைக்குள் எந்தெந்த நாடுகளிடம் இருந்து எவ்வளவு வறுகலாம் என்றுதான் கணக்கு போட்டுக்கொண்டிருப்பார்கள்......!

போருக்கு முன் டிவிசன்களை அதிகரிக்க அப்போ வீணாக பொருளாதார ரீதியாக அழியப்போகிறார்கள் என்று தமிழர் தரப்பில் எச்சரிக்க சிங்களதளபதி மட்டும் அல்ல இங்கு யாழிலும் ஒரு ஊது குழல்   போர் இறுதி முடிவு எட்டிய பின் ஐநா படைகளுக்கு அதிகரித்த படைகளை அனுப்பி அந்நிய செலவாணியை அதிகரித்து குறுகிய காலத்துக்குள் இலங்கையை வல்லரசாக்குவம் என்று அறிக்கை விட்டவர்களை இப்ப தேடுகிறேன் ?😄

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

  இதை வாசித்தபின் யார் யாரை சொறிகின்றாகள் என்பது விளங்கும்...😁

உக்ரைன் - ரஷ்யா போருக்கான காரணம் என்ன?...
 
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் சரணடைந்த பிறகு, உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
 
1945 வாக்கில் அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் வல்லரசு நாடுகளாகின.
இதையடுத்து சோவியத் ஒன்றியம், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றத் தொடங்கியது. இதற்கு பதிலடியாக 1949-ல் அமெரிக்கா, நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பை (North Atlantic Treaty Organization -NATO) உருவாக்கியது. இதில், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்தன. இதன் தலைநகரம் பெல்ஜியத்தில் அமைக்கப்பட்டது.
 
இந்த நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள நாடுகளின்மீது பிற அந்நிய நாடுகள் படையெடுத்தால், சக உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு உறுதுணையாகப் படையெடுப்பை மேற்கொள்ளும். இந்த பாதுகாப்பு அம்சத்தால், நேட்டோ உருவாக்கப்பட்டபோது 12 ஆக இருந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 30 உறுப்பு நாடுகளாக உள்ளது.
 
இதில், கடைசியாக தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வட மாசிடோனியா இணைந்தது. மேலும் போஸ்னியா, ஹெர்ஸ்கோவினா, ஜார்ஜியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இதில் இணைய ஆர்வமாக இருந்தன. இதற்கு நேட்டோவும் இசைந்தது.
 
இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்தது. இதற்கான காரணத்தை அறிய முதலில், சோவியத் ஒன்றிய வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
1917-ல் ஏற்பட்ட அக்டோபர் புரட்சி, சோவியத் ஒன்றியத்துக்கான முதல் புள்ளியாக இருந்தது. 1922 முதல் பெரும் வல்லரசாக, 10க்கும் மேற்பட்ட குடியரசுகளை சோவியத் ஒன்றியம் கட்டியாண்டது. இந்த அரசின் அதிகாரம் பரவலாக்கப்படாமல், ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட்டதாக இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை, பின்னாளில் பெரிதாக வெடித்தது.
 
சோவியத் ஒன்றியத்தில் இருந்த நாடுகள் 1990களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதற்குக் கீழ் இருந்த 10-க்கும் மேற்பட்ட பகுதிகள் பிரிந்து சென்று, சுதந்திரம் பெற்றதாக அறிவித்துக்கொண்டு தனித்தனி நாடுகளாகின. இதில் இரண்டாவது சக்திவாய்ந்த நாடாக இருந்த உக்ரைனும் அடக்கம். வாக்கெடுப்பில் 92.3% பெற்று, சுதந்திரம் பெற்றதாக அறிவித்துக்கொண்டது உக்ரைன். ரஷ்யாவும் பலம்மிக்க தனி நாடானது.
 
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், அதன் வெளிநாட்டுக் கடன்களைத் தானே முன்வந்து ஏற்றுக்கொண்ட ரஷ்யா, இருந்த சர்வதேச சொத்துகளையும் தனதாக அறிவித்தது. இதற்கு உக்ரைன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. 1991 சட்டத்தின்படி, வெளிநாட்டு சொத்துகளில் தங்களுக்கும் பங்கிருப்பதாக சர்வதேச நீதிமன்றங்களில் அறிவித்தது உக்ரைன். இந்த மோதல் 1991-ல் இருந்தே தொடர்ந்து வருகிறது.
 
1990 வரை இருந்த சோவியத் ஒன்றியத்தின் பலம், ரஷ்யாவுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்று அமெரிக்கா நினைத்தது. இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் அதையே விரும்பின. இதனால் ரஷ்யாவின் ஆளுமையைக் குறைக்கத் திட்டமிட்டன.
சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி, ரஷ்யாவைச் சுற்றிலும் உள்ள சிறிய நாடுகளை நேட்டோவில் இணைக்க ஆரம்பித்தன. இந்த சூழலில் ஆரம்பத்தில் இருந்தே முரண்பட்ட ரஷ்யாவை எதிர்த்து, நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் அதிக ஆர்வம் காட்டியது. இந்தப் போக்கு ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. தன்னைச் சுற்றிலுமுள்ள பிற நாடுகள் இணைவதையே வெறுப்புடன், கையறு நிலையில் வேடிக்கை பார்த்த ரஷ்யா, உக்ரைன் கண்டிப்பாக நேட்டோவுடன் இணையக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
 
கலாச்சார, மொழி ரீதியில் ரஷ்யாவை ஒத்திருக்கும், தன் எல்லையில் இருக்கும் நாடு, அமெரிக்கா உடன் கைகோப்பதும், அமெரிக்கப் படைகள் தங்கள் எல்லையிலும் நிற்பதும் ரஷ்யாவுக்குப் பிடிக்கவில்லை. எனினும் உக்ரைன் மக்கள் ரஷ்யக் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதை வெறுத்தனர். ரஷ்ய எதிர்ப்பையும் மீறி, அந்நாட்டு ஆதரவில் அமைந்திருந்த அரசை 2014-ல் போராட்டம் மூலம் பெருமக்கள் திரள் கீழே இறக்கியது. இதனால் வெகுண்டெழுந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது.
 
அந்தப் போரில் சுமார் 14 ஆயிரம் பேர் இறந்ததாகத் தகவல் வெளியானது. முடிவில் உக்ரைனின் தென்பகுதியில் உள்ள க்ரீமியா தீபகற்பத்தை (Crimean Peninsula) ரஷ்யா கைப்பற்றியது. வர்த்தகக் காரணங்களுக்கு இந்தப் பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டே க்ரீமியாவைப் பிடித்தது. இதனால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. எனினும் ரஷ்யா தனது முடிவில் பின்வாங்கவில்லை.
 
இதற்கிடையே அதேநேரத்தில் கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் தொடர்ந்து உக்ரைன் அரசுக்கு எதிராகப் போராடினர். உக்ரைனில் தேர்தல் வந்தது. தொலைக்காட்சியில் அதிபராக நடித்த காமெடி நடிகர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெற்றி பெற்று நிஜ அதிபரானார். முன்பு தேர்தல் வாக்குறுதியாக, அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் ரஷ்ய- உக்ரைன் பிரச்சினை தீர்க்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
 
2015-ல் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரஷென்கோ - ரஷ்யாவின் விளாடிமிர் புதின் இடையில் மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆதரவோடு இருக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கு இடையிலான பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மின்ஸ்க் ஒப்பந்தத்தை மீண்டும் தற்போது கொண்டுவர வேண்டும் என்றும் மேலும் சில நிபந்தனைகளையும் ரஷ்யா விதித்தது. எனினும் இதற்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ளவில்லை.
 
மின்ஸ்க் ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு ரஷ்யா அழுத்தம் கொடுக்க, மேற்கத்திய நாடுகளிடம் உதவி கோரினார் ஜெலன்ஸ்கி. வெளிப்படையாகவே நேட்டோவில் சேர விரும்புவதாகவும் பேச ஆரம்பித்தார்.
 
இதனால் வெகுண்டெழுந்த ரஷ்யா, தன்னுடைய படைகளைக் கொண்டு வந்து, உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதியில் நிறுத்தியது. சுமார் 1,50,000 பேர் அங்கே குவிக்கப்பட்டனர். கூடவே மருத்துவ உபகரணங்கள், அதிநவீன பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஆகியவற்றையும் ரஷ்யா வைத்துள்ளதால் அங்கே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தாண்டி அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது. போர் எதையும் நடத்தவில்லை என்று தொடர்ந்து புடின் கூறிவருகிறார்.
உக்ரைன் இன்னமும் நேட்டோவில் இணையவில்லை என்பதால், அங்கு நேட்டோ படைகளை அனுப்பமுடியாது. அதனால், நேட்டோ உறுப்பினர்களாக இருக்கும் உக்ரைனுக்கு அண்டை நாடுகளான எஸ்தோனியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஆதரவுப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
 
இதுதொடர்பாக 8 அம்சக் கோரிக்கைகளையும் புடின் முன்வைத்தார். அதன்படி,
1997-க்குப் பிறகு நேட்டோவில் இணைந்த நாடுகள் அனைத்தில் இருந்தும் நேட்டோ படைகள் வெளியேற வேண்டும். ஆயுதங்களைத் திரும்பப் பெற வேண்டும். (இதன்மூலம் பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய நாடுகளும், நேட்டோவில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும். )
 
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு சட்டரீதியான உத்தரவாதத்தை மேற்கு நாடுகள் அளிக்க வேண்டும். உக்ரைனில் அமெரிக்காவில் போர்ப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. நேட்டோவில் உக்ரைன், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
 
இதன்மூலம், கிழக்கு ஐரோப்பாவை முழுமையாகத் தன் வசப்படுத்தத் திட்டமிட்டார் புடின். எனினும் இதற்கு நேட்டோ அமைப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் நிலைமை இன்னும் மோசமானது. இதனால் கிழக்கு உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்கா, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறது.
 
அடுத்த சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்தது சர்ச்சைக்கு உள்ளானது. உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பின் அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளதாகவும், மாஸ்கோ எல்லையில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்குவதாகக் கூறினாலும், விரைவில் தாக்குதல் உறுதி என்றும் அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து, ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறுவதாக செய்தி வெளியானது. ஆனால் சில மணி நேரத்திலேயே உக்ரைன் எல்லையில் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்தான் தற்போது ரஷ்யா உக்ரைன் மீது போர்தொடுத்துள்ளது.
Ist möglicherweise ein Bild von 2 Personen
 
முகநூலில் இருந்தது.

இதனை அனுமதித்தால்  அல்லது கண்டும் காணாதிருந்தால்???

இதனை  அடுத்து சீனா தன்  பிரதேசத்தில்  சில  நாடுகளை  விழுங்கும்???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

இதனை அனுமதித்தால்  அல்லது கண்டும் காணாதிருந்தால்???

இதனை  அடுத்து சீனா தன்  பிரதேசத்தில்  சில  நாடுகளை  விழுங்கும்???

சீனா, முதலில் விழுங்குவது... அருணாசல பிரதேசமாக இருக்கும்.
அப்ப... வெடி கொழுத்தி  கொண்டாட வேணும்.  😛

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

இந்த  முறை  இப்போர்  உங்களை  ஒன்றும் செய்யாது

சனம் லைனில நிற்கிது பொருட் களுக்கு அதிலும் டீசல் ,,மண்ணெண்ணைக்கு பெற்றோலுக்கும் கியுல நிற்கிறார்கள் விலை வேற இன்னும் அதிகரிக்கும் போல் உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சனம் லைனில நிற்கிது பொருட் களுக்கு அதிலும் டீசல் ,,மண்ணெண்ணைக்கு பெற்றோலுக்கும் கியுல நிற்கிறார்கள் விலை வேற இன்னும் அதிகரிக்கும் போல் உள்ளது 

நான் சொன்னது  உயிர் ஆபத்தை.

எங்களுக்கு உயிர் ஆபத்துண்டு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விசுகு said:

இதனை அனுமதித்தால்  அல்லது கண்டும் காணாதிருந்தால்???

இதனை  அடுத்து சீனா தன்  பிரதேசத்தில்  சில  நாடுகளை  விழுங்கும்???

பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விழுங்காதையா இவர்கள் விழுங்கப்போகின்றார்கள்? 😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22/2/2022 at 18:24, ஏராளன் said:

யுக்ரேன் vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்?

latest tamil news

புள்ளிவிபரம் இப்படியிருக்க.....?

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறையா .?  ராஜதந்திர சொல்லாடலா.? ஜி கிட்ட  அதெல்லாம் சான்ஸ் இல்லையே.☺️

IMG-20220225-111507.jpg

ஒரு வேளை குஜராத் கலவர மூட்ல இருப்பினம்..😊

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா- உக்ரைன் போர்: முதல்நாள் முடிவில் பொதுமக்கள்- இராணுவ வீரர்கள் உட்பட 137பேர் உயிரிழப்பு!

ரஷ்ய படையெடுப்பின் முதல் நாளில் 137 பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், 316பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அவர் வெளியிட்ட காணொளி பதிவில், உயிரிழந்தவர்கள் ‘ஹீரோக்கள்’ என்று அழைத்தார்.

மேலும், ‘ரஷ்யா மக்களைக் கொன்று, அமைதியான நகரங்களை இராணுவ இலக்குகளாக மாற்றுகிறது . இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்கப்படாது’ என மேலும் கூறினார்.

இதேவேளை, கிய்வின் டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக உக்ரேனிய உட்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விமானம் பின்னர் 7ஏ கோஷிட்சியா வீதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அந்த விமானம் ஆட்களை ஏற்றிச் சென்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒன்பது மாடி குடியிருப்பு கட்டிடம் தீப்பிடித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

உறுதிப்படுத்தப்படாத கூற்று, உக்ரேனிய தலைநகரில் முன்னதாக இரண்டு வெடிப்புகள் பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வருகிறது.

https://athavannews.com/2022/1268966

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2022 at 00:22, விசுகு said:

நான் சொன்னது  உயிர் ஆபத்தை.

எங்களுக்கு உயிர் ஆபத்துண்டு?

பிரான்ஸ் தயாராகிறதாம் எதுக்கும் கவனமாக இருங்க தல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.