Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு யுத்தத்தின் பின்னாலும் 
அமெரிக்கா இல்லாமல் இருக்காது. 
இதுதான் இந்த நூற்றாண்டின் யதார்த்தம். 

இதிலும் அப்படியே.

உலகின் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு உலகையே ஆட்டிப் படைக்கவேண்டும் என்கிற ரத்த ருசிக்கு என்ன பெயர் இடுவது? 

வெறும் 11 நாடுகளின் சொந்த பாதுகாப்புக்காக என்ற கட்டியத்துடன் தொடங்கப்பட்ட நேட்டோ நாடகம்இ இன்றைக்கு உக்ரெய்ன் வாசலில் வந்து 
காட்சி நடத்துகிறது.

ரஷ்யா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறதா?

ஆயினும் போர் என்பது இல்லாத உலகம் என்று விழைகின்ற  - எதையும் பேசித்தான் தீர்க்கவேண்டும் என்கிற மனப்பான்மை கொண்ட -  அஹிம்சை உள்ளங்களில்இ  ரஷ்யா போரில்இறங்கியிருக்கக்கூடாதென்றே படுகிறது. 

இது நல்ல விருப்பம் தான். இந்த விருப்பத்துக்கு சம்பந்தப்பட்ட  ரெண்டு தரப்பாரின் மனங்களும் ஒத்துழைக்கவேண்டும் இல்லையா?
 
ஆனால் யதார்த்தம் வேறு வேறு கேள்விகளை எழுப்புகிறது.

அமெரிக்க பிரிதானிய அவுஸ்த்திரேலியா ஜரோப்பா எல்லைகளில் வேறொரு நாடு  வந்து ராணுவ முகாம் அமைத்தால் அவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? 

நாட்டின் நாலுமூலையிலும் வேட்டு வைக்க 
நேட்டோ வந்தபிறகும் - ரஷ்யா சும்மா பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்  என்பது எந்த ஊர் நியாயம்?

லட்சம் பேர் ஊரைவிட்டு ஓடுவதைவிடஇ செலென்ஸ்கியின் ஆதரவாளர்கள் நூறு பேர் 
ஆயுதம் ஏந்தி தெருவில் நிற்பதை 'உக்ரெய்ன் மக்களின் எழுச்சி' என்று காட்டும் அமெரிக்க சார்பு ஊடகங்களும்-
  
‘சரணாகதி அடையமாட்டோம் என்று உக்ரெய்ன் அதிபர் போர்முழக்கம்!’ என்று - ரஷ்யாவை வில்லனாக்கி செலென்ஸ்கியை ஹீரோவாக்க முயற்சிக்கும்  அமெரிக்க ஜனநாயகத்தின் பிரதிநிதிகளும் இதற்கெல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் வாழும் ரஷ்ய இன மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்படுகையில் உரிமைகளை இழந்து கொடுமைகளுக்கு உள்ளாகையில் ரஷ்யா அவர்களைப் பாதுகாக்க செயல்படுவதில் தவறு இருப்பதாக நான் எண்ணவில்லை…

கடந்த மூன்று ஆண்டுகளில்ுக்ரெய்னில் கொல்லப்பட்ட பதினேழாயிரம் ரஷ்யர்களின் உயிருக்கு -  இவர்களின்  பஞ்சாயத்து  நியாயம் என்ன என்றும் விளக்க வேண்டும்.

பிறகு ரஷ்யாவை நோக்கி சுட்டுவிரல் நீட்டலாம்...

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • Replies 477
  • Views 30.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலைத்தேய நாடுகளுக்கு கொடி பிடிக்கும் ஆதரவாளன் அல்ல, நிச்சயமாக அவர்களின்  தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிபப்படட தலைவர்களை சனநாயக ரீதியாக நாம் அகற்ற முடியும், அகற்ற வேண்டும் . புட்டின் ஒரு அதிகார வெறிபிடுத்த manic, கடந்த 25 வருடங்களாக  ரஷ்யயாவை இரும்பு பிடியுக்குள் வைத்திருக்கின்றார், அவரை ஆதரிப்பவர்கள்  மண்டையை பரிசோதிக்கவேண்டும்,சனநாயக நாட்டில் இருந்து  டிரம்ப் போற வரையறைகள் அவரை ஆதரிப்பார்கள்.

https://www.theguardian.com/us-news/2022/feb/27/donald-trump-defends-calling-putin-smart-hints-at-2024-presidential-bid

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரெய்னை ஆக்கிரமிப்பதாக சொல்லி உக்ரெய்னை ஆக்கிரமிக்கும் நோக்கம் இல்லாத உக்ரெய்னில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு சுயாட்சி கொடுக்கவும் தன்னை நேட்டோவிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள நேட்டோவில் சேரமாட்டோம் எனும் உறுதிமொழியை மட்டும் எதிர்பார்க்கும் ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன அமெரிக்காவும் ஜரோப்பிய நாடுகளும்... 

நல்லதொரு முடிவென்றே இதை எடுத்துக் கொள்வோம்... ஏன் உங்களுடன் சேர்ந்து நாங்களும் கைதட்டுகிறோம்…

ஆனால் பாலஸ்தீனத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து காஸாவை இரத்த வெள்ளத்தில் மிதக்க வைக்கும் இஸ்ரேலை ஏன் தொட்டிலில் வைத்து ஆட்டுகிறீர்கள் நியாயவான்களே..?

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, zuma said:

நான் மேலைத்தேய நாடுகளுக்கு கொடி பிடிக்கும் ஆதரவாளன் அல்ல, நிச்சயமாக அவர்களின்  தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிபப்படட தலைவர்களை சனநாயக ரீதியாக நாம் அகற்ற முடியும், அகற்ற வேண்டும் . புட்டின் ஒரு அதிகார வெறிபிடுத்த manic, கடந்த 25 வருடங்களாக  ரஷ்யயாவை இரும்பு பிடியுக்குள் வைத்திருக்கின்றார், அவரை ஆதரிப்பவர்கள்  மண்டையை பரிசோதிக்கவேண்டும்,சனநாயக நாட்டில் இருந்து  டிரம்ப் போற வரையறைகள் அவரை ஆதரிப்பார்கள்.

https://www.theguardian.com/us-news/2022/feb/27/donald-trump-defends-calling-putin-smart-hints-at-2024-presidential-bid

புதினை ஆதரிப்பது வேறு… இப்பொழுது நடக்கும் போரின் சரி பிழைகளை மட்டும் ஆதரிப்பது வேறு… நீங்கள் இந்த போரைப்பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கும் எம்மை மொக் பண்ணி வாயை மூடப்பண்ண ரெண்டையும் சமப்படுத்தாதையுங்கோ…

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

மெய்யே இந்தப்படம் உண்மையே????

Bild

Bild

நான் நம்ப மாட்டன் 😎

இதெல்லாம் சிறுவர் படை கிடையாது. அமெரிக்க சார்பு மேற்குலகிற்கு இது உக்ரைனியர்களின் வீரமாகவே தான் தெரியும். இது தொடர்பில் யுனிசெப்புக்கு கடிதமெழுத உக்ரேனிய சங்கரிகள் இல்லை போலும். 

ஏன் மேற்கு ஊடகங்கள்.. ஒரு உக்ரைன் வீர தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டி.. ஒரு பாலத்தை தகர்த்தாராம்.. அவர் ஒரு பெரும் ஹீரோவாம்.. என்று முழங்குகிறார்கள்.

இதையே.. நமது போராளிகள் செய்தால்.. அது பயங்கரவாதமாகும். 

ஆக.. மேற்கத்தையானுக்கு பிடிக்காதவனுக்கு எதிராக எதை செய்தாலும்.. அது அவனுக்கு வீரம்.. நாம எமது தாய் நாட்டை காக்கச் செய்தால்.. பயங்கரவாதம். 

அவங்களும் அவங்கட நிலைப்பாடுகளும்.. கொள்கைகளும். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு எப்படி ஈராக், ஆப்கானிஸ்தான் அமைந்ததோ, அதே போல் ரஸ்யாவுக்கு இன்னுமொரு ஆப்கானிஸ்தான் ஆக அமைய வாழ்த்துக்கள்.90 களில்  ஆப்கானிஸ்தான் போருக்கு பின்னர் தான் சோவியற் யூனியன் உடைந்தது பல இனக்குழுமங்கள் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகனப்படுத்தியது, அதேபோல் இம்முறையும் எஞ்யுள்ள  இனக்குழுமங்களும் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகனப்படுத்த முன்கூட்டிய  வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

இப்படி நடந்தால் அடக்கி ஒடுக்கப்படும் ஒரு தேசிய இன்க்குழுமத்தை சேர்ந்த எம்மைப்போல் பலநூற்றுக்கணக்கான இனங்களுக்கு அதைவிட சந்தோசமான செய்தி வேறு கிடையாது.. உக்ரைன் உட்பட எங்கெல்லாம் சிறுபான்மை இனக்குழுக்கள் தம்மைத்தாமே ஆள நினைக்கிறார்களோ அங்கெல்லாம் தனிநாடுகள் உருவாகவேண்டும்.. அதற்கு இப்படி வல்லரசுகள் உதவி செய்யவேண்டும்.. 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people sitting, people standing and text that says "எந்த நாட்டுக்கு சப்போர்ட் பண்ணுகின்றது என்று கஸ்ட்மாக இருக்குது, தயவு செய்து யுத்தத்தை நிறுத்துங்கள். 000 MUpA UKRAINE 0000004ロロ 00000 RUSSIA RUSSIA"

  • கருத்துக்கள உறவுகள்

தாவீது கோலியாத் கதைபோல் சண்டை தொடங்கி இதுவரைக்கும் உக்கிரேன் தாக்குபிடிப்பது கண்டு உலக நாடுகள் முக்கியம் ஜெர்மனி கூட ஆயுத உதவி என்று விட்டினம் நாளை காலையில் இருந்து உதவிகள் சென்றடையவுள்ளன .

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

தாவீது கோலியாத் கதைபோல் சண்டை தொடங்கி இதுவரைக்கும் உக்கிரேன் தாக்குபிடிப்பது கண்டு உலக நாடுகள் முக்கியம் ஜெர்மனி கூட ஆயுத உதவி என்று விட்டினம் நாளை காலையில் இருந்து உதவிகள் சென்றடையவுள்ளன .

கோலியாத்தோடு சேர்ந்து பெலாரஸும் தாவீதை அடிக்கிறார்கள் பெருமாள்.   

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

அமெரிக்காவுக்கு எப்படி ஈராக், ஆப்கானிஸ்தான் அமைந்ததோ, அதே போல் ரஸ்யாவுக்கு இன்னுமொரு ஆப்கானிஸ்தான் ஆக அமைய வாழ்த்துக்கள்.90 களில்  ஆப்கானிஸ்தான் போருக்கு பின்னர் தான் சோவியற் யூனியன் உடைந்தது பல இனக்குழுமங்கள் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகனப்படுத்தியது, அதேபோல் இம்முறையும் எஞ்யுள்ள  இனக்குழுமங்களும் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகனப்படுத்த முன்கூட்டிய  வாழ்த்துக்கள்.

உண்மையில் இது மாறி நடக்க இருக்கிறது. 18ம் 19ம் நூற்றாண்டில் எவ்வாறு நாடுகள் இருந்தனவோ அந்த நிலைக்கு வரும் போலுள்ளது. எப்படி வந்தாலும் தமிழர்கள் பயன்பெறுவர். 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பெருமாள் said:

தாவீது கோலியாத் கதைபோல் சண்டை தொடங்கி இதுவரைக்கும் உக்கிரேன் தாக்குபிடிப்பது கண்டு உலக நாடுகள் முக்கியம் ஜெர்மனி கூட ஆயுத உதவி என்று விட்டினம் நாளை காலையில் இருந்து உதவிகள் சென்றடையவுள்ளன .

உக்கிரேனியர்கள் ரஸ்ய டாங்கியை,போர்வீரர்களை மறித்து தூசணத்தால் திட்டி விரட்டும் அளவுக்கு ரஷ்யா போரில் மென்போக்கு கடைப்பிடிக்கிறது.. பொதுமக்கள் இழப்பை இயன்றளவு இல்லாமல் செய்கிறது ரஷ்யா.. தேர்ந்தெடுத்த ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குகிறது.. காரணம் ரஷ்யாவின் நோக்கம் உக்ரைனை ஆக்கிரமிப்பதோ அழிப்பதோ தம்முடன் சேர்ப்பதோ அல்ல.. அதற்கு நேட்டோவில் சேராவிடாமல் தடுக்கவேண்டும்… அவ்வளவே...  மேற்கு உலகும் மேற்குலக ஊடகங்களும் ஒன்றும் உக்ரேனியர்களில் அக்கறையில் அழவில்லை.. எங்கையடா பெரும் எண்ணிக்கையில் உக்ரேனியர் பிணம் விழும் அதை படம் பிடித்து ரஷ்யாவை ஓரங்கட்டலாம் என்று பிணம்தின்னும் கழுகள்போல உக்ரைனியர்களின் பிணங்கள் விழுவதற்காக காத்திருப்பது மேற்குலகும் அதன் நீலிக்கண்ணீர் வடிக்கும் ஊடகங்களுமே.. ரஷ்யா அல்ல.. அமெரிக்காவும் மேற்குலகும் ஈராக் லிபியா ஆப்கானிஸ்தானில் செய்வதுபோல் உக்ரெய்னில் ரஷ்யா தாக்குதல் நடத்தி இருந்தால் கதை வேறு.. உக்ரைன் தலை நகரை சுற்றி பற்றி எரிவதாக ஊதிப்பெருப்பிக்கின்றன.. இது லைவ் சீசிரிவி கமெரா.. 👇

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:

கோலியாத்தோடு சேர்ந்து பெலாரஸும் தாவீதை அடிக்கிறார்கள் பெருமாள்.   

அவர்களும் ரஸ்யாவுக்கு ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு நிக்கினம் இம்முறை ரசிஸ்யாவில் இருந்துதான் சமாதானம் புறா பறந்து இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உக்கிரேனியர்கள் ரஸ்ய டாங்கியை,போர்வீரர்களை மறித்து தூசணத்தால் திட்டி விரட்டும் அளவுக்கு ரஷ்யா போரில் மென்போக்கு கடைப்பிடிக்கிறது.. பொதுமக்கள் இழப்பை இயன்றளவு இல்லாமல் செய்கிறது ரஷ்யா.

அதற்கு காரணம் மொழியால் பிரிந்து இருந்தாலும் வேலையிடங்களில்  சகோதரர்கள் போல் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்கள் பல இடங்களில் ஒரு வெடிச்சத்தம் கூட இல்லாமல் கனரக வாகனம்களை விட்டு விலகியுள்ளார்கள் ரஷ்யர்கள் .

புடின் நேட்டோ கிழக்கு ஐரோப்பாவில் விரிவாக்கம் செய்யப்படுகிறதே என்று கேட்க அது சோவியத் யூனியனுக்கு கொடுக்கப்பட்ட உறுதிப்பாடு ரஸ்யாவுக்கு அல்ல என்று ரஷ்யர்களை அவமானப்படுத்துவது போல் பதில் அளிப்பு ரஷ்யர்களை எதிர்காலத்தில் ஐரோப்பியர்களிடம் நம்பிக்கை வைக்க விடவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

,

இந்திய மாணவர்களை போட்டுத் தாக்கும் உக்ரேனியர்கள்.

ரசியாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்ததாலோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:
இந்திய மாணவர்களை போட்டுத் தாக்கும் உக்ரேனியர்கள்.

ரசியாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்ததாலோ?

இந்தியாவுடன்... எமக்கு ஆயிரம் பகை இருக்குது. ஆனால்...

இந்திய அரசியல்வாதிகள் எடுத்த நிலைப்பாட்டுக்கு,
பல்கலைக் கழகத்தில் படிக்க வந்த மாணவர்களை...
உக்ரேனிய பொலிஸார் ஏன்... அடிக்க வேண்டும்.

அவர்கள்... காசு கட்டித்தானே, உக்ரேனுக்கு படிக்க வந்தார்கள்.
இலவசமாக படிக்க  வந்திருந்தாலும், அடிப்பதில் ஒரு நியாயம் உள்ளது.
காசையும் சுளையாக வாங்கி விட்டு அடிப்பதில் என்ன நியாயம்?

உக்ரேனுக்கு... ரஷ்யா  அடிக்குது என்று அழுபவர்கள் கண்களில் இந்த காணொளி படவில்லையா?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேனிய பெண் ஆயுதம் ஏந்தினால் தேசபக்தியாம்....
ஈழத்து தமிழ்பெண் ஆயுதம் ஏந்தினால் பயங்கரவாதியாம்...

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டுக்காக போராட வேண்டும் என்கிற நிபந்தனையுடன், போரில் பங்குபெறும் தகுதியுள்ள சிறைக்கைதிகளை விடுதலை செய்கிறது உக்ரைன் அரசு. 

Bild

Bild

உக்ரைனுக்கு உதவும் நேட்டோ நாடுகள் 

Bild

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு யார் போரை ஆதரிக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உக்ரேன் மக்கள் கொல்லப்படும் போது ( ஆக 5  நாட் கள்) உலகமே போரை நிறுத்து என ஊர்வலம் செய்கிறார்கள். தமிழ் மக்கள் கொல்லப்படும் போது யாரும் ஊர்வலம் செய்த்தாக தெரியவில்லை  புலம் பெயர் தமிழர்களும், தமிழ்நாட்டையும் தவிர.  ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, குமாரசாமி said:

இங்கு யார் போரை ஆதரிக்கின்றார்கள்?

ஆனந்தபுரத்திலும் மே இறுதி நாட்களிலும் வரலாறான எம் விடுதலை வீரர்களின் வித்துடல்கள் கண்முன்னே நிழலாடுகிறது.😢

அன்று சிங்களவனுக்கு உருசியன் கொடுத்த வேதியல் ஆய்தங்களால் எமது புலிவீரர்களின் வித்துடல்களிலும் இதுபோன்று பெருங்கொப்பளங்கள், தோல் எரிவுக் காயங்கள் என பல இருந்தன. இன்று உருசிய வீரர்களின் சடலங்களில் அவை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இங்கு யார் போரை ஆதரிக்கின்றார்கள்?

இப்படியான தவறான கருத்தை எங்கோ ஒரு மூளையில் இருந்து உருவாக்கிய 
உன்னதர்களே...
எது? ... உக்ரைனுக்கும்  ரஷ்யாவுக்கும்  நிகழும் தற்போதைய போர்  அல்லாத ஒரு வீடியோவை,
அதாவது 2014 இல் நடந்த ஒரு ராணுவ சண்டை; அதில் இறந்துகிடக்கும் ராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டவர்;  தாக்குதல் நடத்தியது (உக்ரைன் கிழக்கு பிராந்தியத்தில் ) ரஷ்ய ஆதரவரோடு இயங்கும் பயங்கரவாதிகள்.  இந்த உண்மையை அப்படியே உல்டா பண்ணி, பிளேட்டை மாற்றி இது உக்ரைன் படைகளின் வன்மம் என செய்தி போடுவது.
இதை நான் சொல்லவில்லை உலக செய்தி நிறுவனங்கள் நிரூபித்து உள்ளன.

இப்போதைய யுத்தம் நடப்பது குளிர் காலத்தில், கொட்டும் பனியில் குறைந்த பட்சம் அதையாவது கவனித்து இந்த மாதிரியான அப்பட்டமான பொய் வீடியோக்களை இணைப்பதை தவிர்த்து இருக்கலாம்.

நம்மளுடைய கருத்தை மற்றவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படியான போலியான திரை கதை, டைரக்ஷன், முகநூல் கட்டுரை, பின்னூட்டங்களை தயாரிப்போர்  எமது சமுதாயத்துக்கே வில்லங்கமானவர்கள் என்பது எனது கருத்து.

https://www.altnews.in/video-from-2014-shared-as-slain-soldiers-in-the-russia-ukraine-conflict/

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Sasi_varnam said:

இது ஒரு கேடு கெட்ட. படிப்பறிவு இல்லாத.. சுத்த அயோக்கியத்தனம்!!!
எது? ... உக்ரைனுக்கும்  ரஷ்யாவுக்கும்  நிகழும் தற்போதைய போர்  அல்லாத ஒரு வீடியோவை,
அதாவது 2014 இல் நடந்த ஒரு ராணுவ சண்டை; அதில் இறந்துகிடக்கும் ராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டவர்;  தாக்குதல் நடத்தியது (உக்ரைன் கிழக்கு பிராந்தியத்தில் ) ரஷ்ய ஆதரவரோடு இயங்கும் பயங்கரவாதிகள்.  இந்த உண்மையை அப்படியே உல்டா பண்ணி, பிளேட்டை மாற்றி இது உக்ரைன் படைகளின் வன்மம் என செய்தி போடுவது.
இதை நான் சொல்லவில்லை உலக செய்தி நிறுவனங்கள் நிரூபித்து உள்ளன.

இப்போதைய யுத்தம் நடப்பது குளிர் காலத்தில், கொட்டும் பனியில் குறைந்த பட்சம் அதையாவது கவனித்து இந்த மாதிரியான அப்பட்டமான பொய் வீடியோக்களை இணைப்பதை தவிர்த்து இருக்கலாம்.

நம்மளுடைய கருத்தை மற்றவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படியான போலியான திரை கதை, டைரக்ஷன், முகநூல் கட்டுரை, பின்னூட்டங்களோடு வருவோர் எமது சமுதாயத்துக்கே வில்லங்கமானவர்கள் என்பது எனது கருத்து.

https://www.altnews.in/video-from-2014-shared-as-slain-soldiers-in-the-russia-ukraine-conflict/

 சமூக ஊடகங்களில் வெட்டி பயல்கள் பரப்புகின்றார்கள் என்று, இங்க கொண்டு வந்து ஒடாமல் இருப்பதற்கு சொந்த புத்தி தேவை அல்லவா.🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

இன்று உருசிய வீரர்களின் சடலங்களில் அவை.

தவறு !!!

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, Sasi_varnam said:

தவறு !!!

அப்ப உக்ரேனா அது?

ஓ, அது உக்ரேன். தவறாகப் போட்டுட்டன். வீடியோவை முழுசாப் பாக்கேல. சைக்.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

3 hours ago, நன்னிச் சோழன் said:

அன்று சிங்களவனுக்கு உருசியன் கொடுத்த வேதியல் ஆய்தங்களால் எமது புலிவீரர்களின் வித்துடல்களிலும் இதுபோன்று பெருங்கொப்பளங்கள், தோல் எரிவுக் காயங்கள் என பல இருந்தன. இன்று உருசிய வீரர்களின் சடலங்களில் அவை.

இது உக்ரேனிய வீரர்களின் சடலங்கள். 

சரியாகப் பார்க்காமல் பிழையாக எழுதியமைக்கு வருந்துகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.