Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people

ஈழத்தில் நடந்தது இனபடுகொலை மட்டுமல்ல 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து உலகின் தலை சிறந்த இரானுவத்தோடு போரிட்ட உலக போர் என்பது இந்த உக்ரைனின் புலம்பலில் இருந்து அறியமுடிகிறது

இரு நாள் போருக்கே இப்படி முகாரி இசைத்து கண்ணீர் செரித்து உலகம் எங்களை கைவிட்டுவிட்டது என்று இறைஞ்சும் உக்ரைன் அதிபருக்கு ஒரு கேள்வி தான்

30 ஆண்டுகள் போர், மூன்றில் ஒரு பங்கு நிலமும் மக்களும் என அதில் வீரத்தோடும் தீரத்தோடும் முளைத்த எமது தலைவரும் ஐம்பதாயிரம் புலிகளும் எமது இனம் காத்து நின்றபோது சிங்களன் அழைக்கிறான் என்று 20 நாடுகளோடு நீங்களும் விமானம் செலுத்தி ஈழ நிலமெங்கும் தீயை வைத்தபோது தித்தித்ததா? இப்போது அதே தீ உங்களை சுடும்போது மட்டும் எரிகிறதா?

ஆனால் ஒன்று தமிழர் நாங்கள் மார்தட்டி கொள்வோம் உலகமே திரண்டு குண்டு மழை பொழிந்தபோதும் இறுதி மாவீரன் கண்மூடும் வரையிலும் எவரும் கண் கசக்கவில்லை ஒப்பாரி வைக்கவில்லை உங்களை போல...

நாங்கள் தமிழர்கள்.

தற்போது
பொதுமக்கள் பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைவரின் கைகளிலும் ஆயுதத்தை திணித்திருக்கிறது உக்ரைன்...

புலிகள் சிறார்களை ராணுவத்தில் சேர்க்கிறார்கள், பொதுமக்களை பிடித்து கேடயமாக நிறுத்துகிறார்கள் என்றெல்லாம் பேசி அன்று எமது மாவீரர்களை மட்டம் தட்டிய குற்றம் சுமத்திய உலகத்தீரே

அன்றைய ஈழம்போல் இன்றைய உக்ரைன் போல் நாளை உயிரச்சம் உங்களுக்கும் வரும் அப்போது கருவிலிருக்கும் சிசுவுக்கும் ஆயுதம் கொடுக்க உங்கள் கைகள் முயற்சிக்கும் காலம் வலியதல்லவா?

எமக்கு தெரியும் எமது புலிகள் உலகின் வேறு எவராலும் சமன் செய்ய முடியாத மாவீரர்கள் மட்டுமல்ல மகா புனிதர்கள் என்பதும்.

கணேசன் முத்துநகரம்

Riyaz Deen

  • Replies 477
  • Views 30.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது உக்ரேன் அல்ல ....முள்ளிவாய்க்கால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2022 at 00:05, குமாரசாமி said:

இது உக்ரேன் அல்ல ....முள்ளிவாய்க்கால்

இதனை யாருக்காக இங்கே இணைத்தீர்கள் அண்ணை? உங்களைத்தவிர, இங்கிருக்கும் எவருக்கும் முள்ளீவாய்க்கால் என்றால் என்னவென்று தெரியாதென்று நினைக்கிறீர்களா? இதே படங்களையும், செய்திகளையும் உங்களுடன் சேர்ந்து நாங்களும் பார்த்தோமே அண்ணை? அதனால்த்தானே எங்களுக்கு நடந்ததைப்போன்று இன்னொரு இனத்திற்கு நடந்துவிடக் கூடாதென்று குரல் கொடுக்கிறோம்? ஒரு இனவழிப்பென்பது எவ்வளவு கொடூரமானதென்பதை எங்களை விட அதிகம் உணராதோர் இருக்கமுடியுமா? 

சிங்கள மக்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல, சிங்களப் பேரினவாத இயந்திரமே எங்களின் எதிரியென்று தலைவர் கூறியது உங்களுக்கு நினைவிலிருக்கலாம். எம்மீது குண்டுவீசிய உக்ரேனிய விமானமோட்டியைப் பழிவாங்கத்தான் உக்ரேன் மீதான இனக்கொலை யுத்தத்திற்கு நாம் ஆதரவளிக்கிறோம் என்றால், நாம் முதலில் முற்றாக அழித்திருக்கவேண்டியது ஒட்டுமொத்த சிங்களவர்களையும் தான்.  ஏனென்றால், அவன்  தான் எமது எதிரி, உக்ரேனியன் கூலிக்கு மாரடித்தவன். 

நாம் செய்யவேண்டியது உக்ரேனில் இன்னொரு முள்ளிவாய்க்காலை உருவாக்குவதை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா? 

பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரஞ்சித் said:

இதனை யாருக்காக இங்கே இணைத்தீர்கள் அண்ணை? உங்களைத்தவிர, இங்கிருக்கும் எவருக்கும் முள்ளீவாய்க்கால் என்றால் என்னவென்று தெரியாதென்று நினைக்கிறீர்களா? இதே படங்களையும், செய்திகளையும் உங்களுடன் சேர்ந்து நாங்களும் பார்த்தோமே அண்ணை? அதனால்த்தானே எங்களுக்கு நடந்ததைப்போன்று இன்னொரு இனத்திற்கு நடந்துவிடக் கூடாதென்று குரல் கொடுக்கிறோம்? ஒரு இனவழிப்பென்பது எவ்வளவு கொடூரமானதென்பதை எங்களை விட அதிகம் உணராதோர் இருக்கமுடியுமா? 

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு பின் எத்தனையோ நாடுகளில் இது போன்ற அழிவுகள் நடந்தேறியதே? அப்போதெல்லாம் தனித்திறந்து விவாத்தீர்களா? அல்லது இரங்கல்,மனிதாபிமானம் பற்றி கருத்து சொன்னீர்களா?

6 hours ago, ரஞ்சித் said:

சிங்கள மக்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல, சிங்களப் பேரினவாத இயந்திரமே எங்களின் எதிரியென்று தலைவர் கூறியது உங்களுக்கு நினைவிலிருக்கலாம்.

நினைவிருக்கின்றது.
இருந்தாலும் எம்மவர்களால் இணயங்களில் தரவேற்றப்படும் தமிழின அழிவுக்காட்சிகள் அனைத்தும் அகற்றப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தில் உக்ரேன் அவல/அழிவுக்காட்சிகள் மட்டும்  முதல் பக்கங்களிலேயே மிளிர்கின்றனவே. உக்ரேன் அழிவும் மட்டும் தான் அழிவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரஞ்சித் said:

இதனை யாருக்காக இங்கே இணைத்தீர்கள் அண்ணை? உங்களைத்தவிர, இங்கிருக்கும் எவருக்கும் முள்ளீவாய்க்கால் என்றால் என்னவென்று தெரியாதென்று நினைக்கிறீர்களா?

பலருக்கு மறதிக்குணம் அதிகம் என்பதற்காக........ஒரு சிலதை தொடர்ந்து நினைவு படுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

கிரொசிமா-நாசசாக்கி அணுகுண்டு அழிவை நினைவு கூர்வது போல்.....

6 hours ago, ரஞ்சித் said:

உக்ரேனியன் கூலிக்கு மாரடித்தவன். 

இதே போல் தான் தமிழர்பகுதிக்குள் புகுந்த கிந்திய அட்டூழிய படைகளும் கூலிக்கு மாரடித்தவர்கள். மன்னித்து விடலாமா?

6 hours ago, ரஞ்சித் said:

நாம் செய்யவேண்டியது உக்ரேனில் இன்னொரு முள்ளிவாய்க்காலை உருவாக்குவதை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா? 

பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

இரண்டு பகுதியும் அழிந்து நாசமாக போகட்டும். எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன படுத்தே விட்டான் காமெடியன் செலன்ஸ்கி.. இதை முதலே செய்திருந்தால் இவ்வளவு அழிவும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டிருக்காது.. தன்னுடைய பதவி ஆசைக்கும் மேற்குலக நாடுகளின் பொருளாதார சுயநலத்துக்கும் உக்ரைன் நாட்டையும் உக்ரைன்மக்களையும் பலிகொடுத்துவிட்டான் சுயநலவாதி செலன்ஸ்கி.. இப்பொழுதே அதே தன் சுயநலத்துக்காக இருவாரமாக மேற்குலக ஊடகங்களால் ஏதோ சுதந்திரப்போராளிபோல் திட்டமிட்டு ஊதிப்பெருப்பித்து காட்டப்பட்ட செல்ன்ஸ்கி இதோ ரஸ்யகாலில் விழதயாராகிவிட்டான்.. பிரபாகரன் போன்ற சுதந்திர போராளித்தலைவர்களின் கால் தூசிக்கும் கிட்டவரமாட்டார்கள் இவன்போன்ற மேற்குலக கோமாளிகள்.. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன படுத்தே விட்டான் காமெடியன் செலன்ஸ்கி.. இதை முதலே செய்திருந்தால் இவ்வளவு அழிவும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டிருக்காது.. தன்னுடைய பதவி ஆசைக்கும் மேற்குலக நாடுகளின் பொருளாதார சுயநலத்துக்கும் உக்ரைன் நாட்டையும் உக்ரைன்மக்களையும் பலிகொடுத்துவிட்டான் சுயநலவாதி செலன்ஸ்கி.. இப்பொழுதே அதே தன் சுயநலத்துக்காக இருவாரமாக மேற்குலக ஊடகங்களால் ஏதோ சுதந்திரப்போராளிபோல் திட்டமிட்டு ஊதிப்பெருப்பித்து காட்டப்பட்ட செல்ன்ஸ்கி இதோ ரஸ்யகாலில் விழதயாராகிவிட்டான்.

இப்பவும் பிந்தேல்லை. நாங்கள் உக்ரேனை எம்முடன் சேர்க்க மாட்டோம் என ஐரோப்பியயூனியன் சொல்லட்டும்  பாப்பம்.
சண்டை பக்கெண்டு நிக்கும்.😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இப்பவும் பிந்தேல்லை. நாங்கள் உக்ரேனை எம்முடன் சேர்க்க மாட்டோம் என ஐரோப்பியயூனியன் சொல்லட்டும்  பாப்பம்.
சண்டை பக்கெண்டு நிக்கும்.😁

நேட்டோவா? ஐரோப்பிய யூனியனா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ஏராளன் said:

நேட்டோவா? ஐரோப்பிய யூனியனா?

இரண்டும் தான் 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இப்பவும் பிந்தேல்லை. நாங்கள் உக்ரேனை எம்முடன் சேர்க்க மாட்டோம் என ஐரோப்பியயூனியன் சொல்லட்டும்  பாப்பம்.
சண்டை பக்கெண்டு நிக்கும்.😁

அண்ணை,

கோவிக்கக் கூடாது. உங்களிட்டை ஒரு கேள்வி.

இப்ப, நேட்டோட்டைப் போகமாட்டேன், ஐரோப்பிய யூனியனோட சேரமாட்டேன் எண்டு உக்ரேன் வாக்குறுதிகுடுத்தால், ரஸ்ஸிய சண்டையை நிப்பாட்டும் எண்டது நல்ல விஷயம் தான். அதேபோல ரஸ்ஸியாவும் தன்ர படைகளை வாபஸ் வாங்கிடும் எண்டு நினைக்கிறன். இதை இன்னொரு வழியில சொல்லப்போனால் ரஸ்ஸியாவின்ர விருப்பத்துக்கு கட்டுப்பட்டு, அவர்களைக் கோபப்படுத்தாமல் உக்ரேன் நடந்துகொண்டால், எல்லாம் சுபம், அப்படித்தானே?

அப்பிடியெண்டால், நாங்களும் (நாங்கள் எண்டால் ஈழத்தமிழர்கள், என்னைப்போல கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்காவின்ர பின்னால் சுத்துற ஆக்கள் இல்லை), சிங்களவனைக் கோபப்படுத்தாமல், அவனின்ர விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு, எங்களுக்குத் தனிநாடும் வேண்டாம், பூர்வீக தாயகமும் வேண்டாம், நாங்கள் ஒருமித்த இலங்கைக்குள்ள ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு வாழப்போறம் எண்டு சொன்னால் சரிதானே அண்ணை? அவனும் எங்களை நிம்மதியாய் இருக்க விட்டுடுட்டு போயிடுவான் தானே அண்ணை? இண்டைக்கு உக்ரேனுக்கு பாடம் எடுக்கிற நாங்கள் ஏன், எங்கட விஷயத்தில இதைச் செய்யக் கூடாது? இப்படிச் செய்தால் உலகத்தில இருக்கிற ஆக்கிரமிப்புக்கள சந்திக்கிற சனமெல்லாத்துக்கும் ஒரு நல்ல உதாரணமா நாங்கள் இருப்போமெல்லோ? அதனால கேட்கிறன். 

பிழையெண்டால் மன்னிச்சுடுங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரஞ்சித் said:

நீங்கள் கோபிக்கவில்லை என்றால் நானும் ஒரு உண்மையை சொல்கிறேன்

இப்ப ஈழத்தில் அதை தானே செய்து கொண்டு இருக்கிறார்கள்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, விசுகு said:

நீங்கள் கோபிக்கவில்லை என்றால் நானும் ஒரு உண்மையை சொல்கிறேன்

இப்ப ஈழத்தில் அதை தானே செய்து கொண்டு இருக்கிறார்கள்???

அப்பாடா ஒரு வேலை சுலபமாய் முடிஞ்சுது....🤣
நன்றி விசுகர் 👏🙏

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பஞ்சாயத்து இன்னும் முடியவில்லையா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நீங்கள் கோபிக்கவில்லை என்றால் நானும் ஒரு உண்மையை சொல்கிறேன்

இப்ப ஈழத்தில் அதை தானே செய்து கொண்டு இருக்கிறார்கள்???

ஈழத்தில சிங்களவர்கள் அடாத்தாக செய்வதற்கும், நாம் அவனது ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப் போவதற்கும் இடையில் நிறையவே வேறுபாடு  இருக்கிறதண்ணை.

உதாரணத்திற்கு, அவனின்ர ஆக்கிரமிப்புக்குள்ளுக்குள் இருந்து கொண்டு எமது தேசியம், எமது பூர்வீக தாயகம், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய போராட்டம், எமது நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு எதிரான போராட்டம், எமது அரசியல் உரிமைகளைத் தர மறுப்பதற்கெதிரான போராட்டம் என்று 1948 இலிருந்து இன்றுவரைக்கும் கூட்டணியோ, தலைவரோ, கூட்டமைப்போ, கஜேந்திரன் அணியோ அல்லது புலம்பெயர் தேசத்து நாட்டில் வசிக்கும் நாங்கள் எல்லோருமோ செய்வது அவன் எம்மை ஆக்கிரமித்து நின்றாலும், எமது உரிமைகளுக்காக நாம் தொடர்ச்சியாகச் செய்துவரும் போராட்டம். அதாவது அவன் எம்மை அழித்து ஆக்கிரமித்து நின்றாலும், நாம் எமது இலட்சியத்தை விட்டு நகரப்போவதில்லை எனும் உறுதியுடன் செய்துவரும் போராட்டம்.

ஆனால், நீங்கள் கூறுவது என்னவென்றால், சிங்களவனின் இன - மத மேலாணமையினை நாங்கள் ஏற்றுக்கொண்டு, எமது தாயகக் கோட்பாட்டை விட்டுக்கொடுத்து, எமது அரசியல் அபிலாஷையான சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, சிங்களவனை கோபப்படுத்தாமல், அவன் விரும்புகின்ற ஒரு தீர்வினை நாம் ஏற்றுக்கொண்டு வாழப் பழகுவது.  

இதில், இரண்டாவதுதான் ஈழத்தில் நடக்கிறதென்று நீங்கள் நினைத்தால், இந்தளவு போராட்டமும், உயிரிழப்பும், சொத்திழப்பும், இடப்பெயர்வும், ஒரு முற்றான சந்ததியின் அழிவும் இருந்திருக்காதே அண்ணை?  

அப்ப என்ன சொல்ல வாறியள் எண்டால், ரஸ்ஸியனைக் கோபப்படுத்தாமல் உக்ரேனியன் அவனின்ர காலில விழுந்து அனுசரிச்சுப் போனால் ரஸ்ஸியன் சண்டையை நிப்பாட்டுற மாதிரி, நாங்களும் சிங்களவனை அனுசரிச்சு, அவனின்ர விருப்பத்துக்கு மாறாக எதுவுமே செய்யாமல் தாயகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறம் எண்டு சொல்லுறியள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

அண்ணை,

கோவிக்கக் கூடாது. உங்களிட்டை ஒரு கேள்வி.

இப்ப, நேட்டோட்டைப் போகமாட்டேன், ஐரோப்பிய யூனியனோட சேரமாட்டேன் எண்டு உக்ரேன் வாக்குறுதிகுடுத்தால், ரஸ்ஸிய சண்டையை நிப்பாட்டும் எண்டது நல்ல விஷயம் தான். அதேபோல ரஸ்ஸியாவும் தன்ர படைகளை வாபஸ் வாங்கிடும் எண்டு நினைக்கிறன். இதை இன்னொரு வழியில சொல்லப்போனால் ரஸ்ஸியாவின்ர விருப்பத்துக்கு கட்டுப்பட்டு, அவர்களைக் கோபப்படுத்தாமல் உக்ரேன் நடந்துகொண்டால், எல்லாம் சுபம், அப்படித்தானே?

அப்பிடியெண்டால், நாங்களும் (நாங்கள் எண்டால் ஈழத்தமிழர்கள், என்னைப்போல கண்ணை மூடிக்கொண்டு அமெரிக்காவின்ர பின்னால் சுத்துற ஆக்கள் இல்லை), சிங்களவனைக் கோபப்படுத்தாமல், அவனின்ர விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு, எங்களுக்குத் தனிநாடும் வேண்டாம், பூர்வீக தாயகமும் வேண்டாம், நாங்கள் ஒருமித்த இலங்கைக்குள்ள ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு வாழப்போறம் எண்டு சொன்னால் சரிதானே அண்ணை? அவனும் எங்களை நிம்மதியாய் இருக்க விட்டுடுட்டு போயிடுவான் தானே அண்ணை? இண்டைக்கு உக்ரேனுக்கு பாடம் எடுக்கிற நாங்கள் ஏன், எங்கட விஷயத்தில இதைச் செய்யக் கூடாது? இப்படிச் செய்தால் உலகத்தில இருக்கிற ஆக்கிரமிப்புக்கள சந்திக்கிற சனமெல்லாத்துக்கும் ஒரு நல்ல உதாரணமா நாங்கள் இருப்போமெல்லோ? அதனால கேட்கிறன். 

பிழையெண்டால் மன்னிச்சுடுங்கோ. 

உக்ரேன் திண்டிட்டு தினவெடுக்க நேட்டோவோட சேர மல்லுக்கட்டுரது வேற நிம்மதியா திண்டுகுடிச்சு வாழ மலுக்கட்ட்டுறது வேறு.. புத்திசாலித்தனமா கதைச்சு மடக்குரன் எண்டு நினைச்சுக்கொண்டு சின்னப்புள்ளையள் மாதிரி லூசுத்தனமா ஆட்டுக்க மாட்டை ஓட்டக்குடாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உக்ரேன் திண்டிட்டு தினவெடுக்க நேட்டோவோட சேர மல்லுக்கட்டுரது வேற நிம்மதியா திண்டுகுடிச்சு வாழ மலுக்கட்ட்டுறது வேறு.. புத்திசாலித்தனமா கதைச்சு மடக்குரன் எண்டு நினைச்சுக்கொண்டு சின்னப்புள்ளையள் மாதிரி லூசுத்தனமா ஆட்டுக்க மாட்டை ஓட்டக்குடாது..

உங்களுக்கு பதில் எழுதி எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

அப்ப என்ன சொல்ல வாறியள் எண்டால், ரஸ்ஸியனைக் கோபப்படுத்தாமல் உக்ரேனியன் அவனின்ர காலில விழுந்து அனுசரிச்சுப் போனால் ரஸ்ஸியன் சண்டையை நிப்பாட்டுற மாதிரி, நாங்களும் சிங்களவனை அனுசரிச்சு, அவனின்ர விருப்பத்துக்கு மாறாக எதுவுமே செய்யாமல் தாயகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறம் எண்டு சொல்லுறியள்.

ரஷ்யாவுக்கு இப்ப விளங்கிவிட்டது உக்கிரேனுக்குள் போனது பலத்த இராணுவ அழிவையும் பொருளாதார அடியையும் தரும் என்று. அதேபோல உக்கிரேனுக்கும் விளங்கிவிட்டது ரஷ்யாவை முழுமையாக விரட்டமுடியாது என்று. 

ரஷ்யா  chemical/biological weapons இன்னும் பல நாசகார ஆயுதங்களையும் சோதித்துப் பார்த்துவிட்டு டொன்பாஸில் இருந்து கிரைமியாவுக்கு தரைவழியாக மரியப்போல் ஊடாக போகமளவிற்கு இடங்களைப் பிடித்து அவற்றை ரஷ்யாவோடு இணைத்த பின்னர் சமரசரத்திற்கு வரும். உக்கிரேனின் அழிவை தடுக்க உக்கிரேன் இந்த இடங்களை விட்டுக்கொடுப்பதோடு, நேட்டோவில் சேரமாட்டோம் என்று அரசியல் அமைப்பை மாற்றும். ஐரோப்பிய யூனியனிலும் சேராமல் இருக்கும். ஆக, ரஷ்யப் பேரரசின் கீழ் திறை செலுத்தும் இன்னோர் அரசாக இருக்கும்.

இறைமை, சுயநிர்ணய உரிமை என்று வளைந்துகொடுக்காமல் மொக்கன்கள் மாதிரி மாண்டுபோன இனங்களின் சரித்திரம் (தமிழர்கள் அடங்கலாக) அவர்களுக்குத் தெரியும்தானே.

ஆனால் இறைமைக்காகவும், உரிமைக்காகவும் போராடி மாண்ட புலிகளை ஆதரித்துக்கொண்டு, உக்கிரேன் அடங்கிவாழவேண்டும் என்று சொல்லும் விலாங்குத் தமிழர்களையும் இந்தப் போர் அடையாளம் காட்டியுள்ளது😃

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2022 at 16:20, குமாரசாமி said:

இங்கே யாரும் புட்டினை நியாயப்படுத்தவில்லை. மேற்குலகின் இரட்டை வேடத்தையும் ஊடக நிலைப்பாட்டினையுமே வெளியே சொல்ல விரும்புகின்றோம்.

நேட்டோ கும்பலை  பற்றி ஒரு அரசியல் வித்தகர்களும் வாய் திறக்கவில்லை. ஒரு வேளை மனக்கஸ்டமாக இருக்கோ தெரியவில்ல அண்ணை.😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, nunavilan said:

நேட்டோ கும்பலை  பற்றி ஒரு அரசியல் வித்தகர்களும் வாய் திறக்கவில்லை. ஒரு வேளை மனக்கஸ்டமாக இருக்கோ தெரியவில்ல அண்ணை.😁

நேட்டோ என்பது பொதுமக்கள் மீது பன்னீர் தெளித்து ரோஜாப்பூக்கள் தூவும் ஒரு உன்னத மனிதாபிமானம் உள்ள படை....😁

1 hour ago, கிருபன் said:

ஆனால் இறைமைக்காகவும், உரிமைக்காகவும் போராடி மாண்ட புலிகளை ஆதரித்துக்கொண்டு, உக்கிரேன் அடங்கிவாழவேண்டும் என்று சொல்லும் விலாங்குத் தமிழர்களையும் இந்தப் போர் அடையாளம் காட்டியுள்ளது😃

கருத்தாடல் ஒன்றில் புலிகளை கொண்டு வந்து இழுத்து கட்டிவிட்டால் பிறகு எதிர்த்து கருத்தாடுகின்றவர்கள் மேலும் கருத்தாடலை தொடர்வதற்கு கடினமான நிலையை ஏற்படுத்தி விடலாம் என்று நினைப்பவர்களின் வரிசையில் நீங்களும் இணைந்து விட்டீர்கள் கிருபன்.

தம் இனத்தின் சுய இருப்புக்காக, சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கடும் அழித்தொழிப்பாலும் அடக்குமுறையாலும் வேறு எந்த வழியும் இன்றி போராட நிர்பந்திக்கப்பட்ட தமிழர்களின் விடுதலைப் போராட்டமும், முற்றிலும் மேற்கின் பக்கம் சாய்ந்து அருகிலிருக்கும் ரஷ்யாவின் கழுத்தை நெரிக்க முயன்று அதன் குரல்வளையையும் கருங்கடல் எனும் உயிர் நாடியையும் பிடுங்க முயன்ற கொழுப்பெடுத்த உக்ரேனையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதே அடிப்படையில் தவறு.

வடக்கு கிழக்கு தாயக நிலத் தொடர்பை சிங்கள குடியேற்றம் என்ற போர்வையில் அபகரித்துக் கொண்டு வந்து தாயகத்தின் இருப்பையே நிராகரித்து அதன் குரல்வளையை நெரித்த இலங்கை அரசைப் போன்று தான் உக்ரேனும் நடந்து கொண்டது என்பது தான் நிதர்சனம் இங்கு.

என் வீட்டைக் கொளுத்தி என் குடும்பத்தை நாசமாக்க முயல்கின்றவர்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்து அனைத்து உதவிகளையும் என் பக்கத்து வீட்டுக்காரர் செய்வாராயின் நான் அதைத் தடுக்க வேண்டிய அனைத்து விடயங்களையும் செய்வதற்கு எனக்கு உரிமையும் தார்மீகக் கடமையும் உள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஜவலின் போன்ற அதிநவீன ஆயுதங்களை போர் தொடங்கி 2 கிழமையிலேயே யூக்ரேன்  அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக்கொண்டது. மிகுதி ஆயுதங்களை கனடா, ஏனைய நேட்டோ நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்டது. போதாதற்கு 66 ஆயிரம் பேர் வெளியில் இருந்து யூக்ரேனிற்கு உதவிக்கு(சண்டைக்கு ) என சென்றுள்ளார்கள். இவற்றில் ஏதாவது தமிழர் போராட்டத்துக்கு சமாந்தரமாக உள்ளதா ?

3 hours ago, குமாரசாமி said:

நேட்டோ என்பது பொதுமக்கள் மீது பன்னீர் தெளித்து ரோஜாப்பூக்கள் தூவும் ஒரு உன்னத மனிதாபிமானம் உள்ள படை....😁

ஓம். உலகம் முழுக்க பன்னீரும், றோஜாவும் கொடுத்து அவற்றுக்கு தட்டுபாடு வரப்போகின்றது😀

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரஞ்சித் said:

ஈழத்தில சிங்களவர்கள் அடாத்தாக செய்வதற்கும், நாம் அவனது ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டு, அனுசரித்துப் போவதற்கும் இடையில் நிறையவே வேறுபாடு  இருக்கிறதண்ணை.

உதாரணத்திற்கு, அவனின்ர ஆக்கிரமிப்புக்குள்ளுக்குள் இருந்து கொண்டு எமது தேசியம், எமது பூர்வீக தாயகம், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய போராட்டம், எமது நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு எதிரான போராட்டம், எமது அரசியல் உரிமைகளைத் தர மறுப்பதற்கெதிரான போராட்டம் என்று 1948 இலிருந்து இன்றுவரைக்கும் கூட்டணியோ, தலைவரோ, கூட்டமைப்போ, கஜேந்திரன் அணியோ அல்லது புலம்பெயர் தேசத்து நாட்டில் வசிக்கும் நாங்கள் எல்லோருமோ செய்வது அவன் எம்மை ஆக்கிரமித்து நின்றாலும், எமது உரிமைகளுக்காக நாம் தொடர்ச்சியாகச் செய்துவரும் போராட்டம். அதாவது அவன் எம்மை அழித்து ஆக்கிரமித்து நின்றாலும், நாம் எமது இலட்சியத்தை விட்டு நகரப்போவதில்லை எனும் உறுதியுடன் செய்துவரும் போராட்டம்.

ஆனால், நீங்கள் கூறுவது என்னவென்றால், சிங்களவனின் இன - மத மேலாணமையினை நாங்கள் ஏற்றுக்கொண்டு, எமது தாயகக் கோட்பாட்டை விட்டுக்கொடுத்து, எமது அரசியல் அபிலாஷையான சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, சிங்களவனை கோபப்படுத்தாமல், அவன் விரும்புகின்ற ஒரு தீர்வினை நாம் ஏற்றுக்கொண்டு வாழப் பழகுவது.  

இதில், இரண்டாவதுதான் ஈழத்தில் நடக்கிறதென்று நீங்கள் நினைத்தால், இந்தளவு போராட்டமும், உயிரிழப்பும், சொத்திழப்பும், இடப்பெயர்வும், ஒரு முற்றான சந்ததியின் அழிவும் இருந்திருக்காதே அண்ணை?  

அப்ப என்ன சொல்ல வாறியள் எண்டால், ரஸ்ஸியனைக் கோபப்படுத்தாமல் உக்ரேனியன் அவனின்ர காலில விழுந்து அனுசரிச்சுப் போனால் ரஸ்ஸியன் சண்டையை நிப்பாட்டுற மாதிரி, நாங்களும் சிங்களவனை அனுசரிச்சு, அவனின்ர விருப்பத்துக்கு மாறாக எதுவுமே செய்யாமல் தாயகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறம் எண்டு சொல்லுறியள்.

நான்   சொல்ல  வாறது  இருக்கட்டும் சகோ

நம் இருவருக்கும்  தாயகக்கொள்கையில்  முரண்பாடில்லை

ஆனால் நம்  இருவரது தொனியும் வலுவும்  தாயகத்திலும் குறைவடைந்து  கொண்டே  வருவதே  நிஐம்

அங்கே  நடக்கும் தேர்தல்களில் வெற்றியீட்டுபவர்களின்  வாக்குகளின் அடிப்படையில்  பார்த்தால்

தனி  ஈழம் காணாமல் போய்

தனி நிலமும்  காணாமல் போய்

தனி அலகும் காணாமல்  போய்

சமஸ்டியும்  காணாமல் போய்

வாழ விட்டால்  போதும்  என்று  நீங்கள் மேலே உதாரணத்திற்கு  இழுத்தநிலை  தான் உண்மையின் தரிசனம்.

தாயகத்திலிருந்து  யாழில் கருத்தாடுபவர்களின் நிலைப்பாடும் அதுதான்

சொன்னால்  கோபப்படக்கூடாது என்று  அதற்காகத்தான் சொன்னேன்

ஏனெனில் எனக்கும்  கோபம் வரும்  விடயமிது???

ஆட்டை சிங்கம் சாப்பிடுதல் இயற்கை.

இது தான் இப்ப அல்ல என்றும் தத்துவம்??😭😭😭

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ரஷ்யாவுக்கு இப்ப விளங்கிவிட்டது உக்கிரேனுக்குள் போனது பலத்த இராணுவ அழிவையும் பொருளாதார அடியையும் தரும் என்று. அதேபோல உக்கிரேனுக்கும் விளங்கிவிட்டது ரஷ்யாவை முழுமையாக விரட்டமுடியாது என்று. 

ரஷ்யா  chemical/biological weapons இன்னும் பல நாசகார ஆயுதங்களையும் சோதித்துப் பார்த்துவிட்டு டொன்பாஸில் இருந்து கிரைமியாவுக்கு தரைவழியாக மரியப்போல் ஊடாக போகமளவிற்கு இடங்களைப் பிடித்து அவற்றை ரஷ்யாவோடு இணைத்த பின்னர் சமரசரத்திற்கு வரும். உக்கிரேனின் அழிவை தடுக்க உக்கிரேன் இந்த இடங்களை விட்டுக்கொடுப்பதோடு, நேட்டோவில் சேரமாட்டோம் என்று அரசியல் அமைப்பை மாற்றும். ஐரோப்பிய யூனியனிலும் சேராமல் இருக்கும். ஆக, ரஷ்யப் பேரரசின் கீழ் திறை செலுத்தும் இன்னோர் அரசாக இருக்கும்.

இறைமை, சுயநிர்ணய உரிமை என்று வளைந்துகொடுக்காமல் மொக்கன்கள் மாதிரி மாண்டுபோன இனங்களின் சரித்திரம் (தமிழர்கள் அடங்கலாக) அவர்களுக்குத் தெரியும்தானே.

ஆனால் இறைமைக்காகவும், உரிமைக்காகவும் போராடி மாண்ட புலிகளை ஆதரித்துக்கொண்டு, உக்கிரேன் அடங்கிவாழவேண்டும் என்று சொல்லும் விலாங்குத் தமிழர்களையும் இந்தப் போர் அடையாளம் காட்டியுள்ளது😃

பாவம் நீங்கள்

தொடர்ந்து நடிக்க முடியாது தானே??☹️

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

பாவம் நீங்கள்

எல்லாம் தெரிந்தவர் என்று தொடர்ந்து நடிக்க முடியாது தானே??☹️

அது நீங்கள்😂

நான் எனக்குத் தெரிந்ததைத்தான் சொல்லமுடியும். 

நேட்டோ நாடுகள் என்ன எப்படி ஆயுதங்கள் கொடுக்கின்றன என்று தெரியாமல் இல்லை. 

உக்கிரேன் மீது ரஷ்யா வலிந்து தாக்குதல் செய்வதை சரியென்று நியாயப்படுத்தமுடியாது. 

உலகில் பாரிய யுத்தம் மூளாமல் இருப்பது ரஷ்யா, அமெரிக்கா, சீனா, போன்ற பெரிய நாடுகளிடம் அணு ஆயுதம் இருப்பதுதான். இந்த ஆயுதங்கள் வலிந்த படையெடுப்பை தடுக்கவே உள்ளன. அணு ஆயுதங்கள் இல்லாத பால்டிக் குடியரசுகள் சோவியத் உடைவுடன் நேட்டோவில் இணைந்தது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து தம்மைக் காப்பாற்றவே. உக்கிரேனிடம் அணு ஆயுதம் இல்லாததும், அவர்கள் நேட்டோவில் சேராததும் ரஷ்யாவுக்கு ஆக்கிரமிக்க வாய்ப்பாகியிருந்தது.

உக்கிரேன் ரஷ்யா மீது வலிந்து போர் தொடுக்கவில்லை. அவர்கள் தற்காப்பு யுத்தம் புரிகின்றார்கள். அவர்களுக்கு நேட்டோ தாராளமாக ஆயுதங்கள் வழங்கினாலும், உக்கிரேன் இப்போரில் வெல்லமுடியாது. 

போரினால் பாதிக்கப்படும் உக்கிரேனிய மக்கள் மீது போரினால் பாதிக்கப்பட்ட அனுபவம் உள்ள தமிழராகிய நாம் அனுதாபமும், ஆதரவும் காட்டவேண்டும். இனங்களின் சுதந்திரத்தை மதிக்கவேண்டும். ஆனால் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கும் சர்வாதிகாரி பூட்டினுக்கும் ஆதரவளிப்பது எந்த தார்மீக அடிப்படையில்?

முதலாளித்துவத்தை ஒழித்து சமதர்ம சோஷலிசம் நிலவும் உலகைக் கொண்டுவரவா?😂

4 hours ago, நிழலி said:

கருத்தாடல் ஒன்றில் புலிகளை கொண்டு வந்து இழுத்து கட்டிவிட்டால் பிறகு எதிர்த்து கருத்தாடுகின்றவர்கள் மேலும் கருத்தாடலை தொடர்வதற்கு கடினமான நிலையை ஏற்படுத்தி விடலாம் என்று நினைப்பவர்களின் வரிசையில் நீங்களும் இணைந்து விட்டீர்கள் கிருபன்.

இந்தத் திரியில் உக்கிரேனிய விமானிகளால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஆதாரமில்லாத கதைகளை ஒட்டி உக்கிரேனியர்களுக்கு எதிரான கருத்துகள் வந்தபோதே புலிகளையும் தமிழர்களையும் இழுத்தாயிற்று. 

ஒரு அடக்குமுறைக்கு உள்ளான இனத்தின் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் எப்படி அடக்குமுறையாளனான பூட்டினின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தமுடியும்? அதைச் சுட்டிக்காட்டவே, இரட்டைத்தன்மையை காட்டவே நான் கருத்து வைத்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.