Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புல தமிழ்பாடசலைகள்!!

Featured Replies

அன்றைக்கு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் அங்கே பிள்ளைகள் தமிழ் பாடசாலைக்கு செல்வது பற்றி பேசி கொண்டிருந்தபோது அந்த உறவினர் கூறினார் தமிழ் பாடசாலைகளிற்கு தன்ட பிள்ளைகள் இப்ப போக விருப்பம் இல்லாம இருக்கீனம் என்று கவலைபட்டார்,உடனே நான் உங்கள் பிள்ளைகள் நன்றாக தமிழ் கதைப்பார்களே கலை நிகழ்ச்சிகளிளும் பங்கு கொள்வார்களே இப்ப என்ன பிரச்சினை என்று கேட்க அவர் சொன்ன பதில் வியப்பாக இருந்தது,அதாவது புலத்தில் தமிழ் வகுப்பில் கல்வி கற்கும் ஆசிரியர்கள் நாட்டில் எப்படி கல்வி கற்பித்தார்களோ அவ்வாறே இருகிறார்கள் என்று,நானும் அந்த கதையை மேலும் தொடர்ந்த வண்ணம் இருக்கையில் இன்னொரு உறவினர் அங்கே வந்துவிட்டார்,,தொடர்ந்து அதே சம்பாசனை தான் நடந்தது,நான் அவரிடம் வினாவினேன் நீங்கள் நாட்டில் கற்பித்த விதம் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று அதற்கு அவர் சில உதாரணங்கள் தந்தார்...........

1)புலத்தில் உள்ள ஆங்கில பாடசாலைகளிள் விளையாட்டுகள் மற்றும் குழு நடவடிக்கை மூலம் பாடசாலைகளிள் கற்பித்தார்கள்,ஆனால் புலத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளிள் சில ஆசிரியர்கள் அவ்வாறு கற்பித்தாலும் பலர் அதை கடைபிடிக்காமை.

2)மாணவர்களிடம் இவன் கெட்டிகாரன் என்று சிலரை தேர்தெடுத்து வைத்திருத்தல்.

3)மாணவர்களை ஏசுதல் இது புலத்தில் பிறந்த சிறுவர்களிற்கு பிடிகாத விசயம்.

போன்ற விடயங்களை அவர் பிரதானமாக குறிபிட்டார் உடனே வருகை தந்த மற்ற உறவு இதில் என்ன பிழை இருக்கு நாங்கள் எல்லாம் அப்படி தானே படிதனாங்கள் என்று தன்ட பழைய பல்லவியை பாட தொடங்கிட்டார்,இதை எல்லாம் பார்த்தா எனக்கு முதலாவது உறவின் உதாரணங்கள் பிடித்திருந்தது,புலத்தில் பிறந்து வளர்ந்த சிறுவர்களிற்கு அவர்களின் வழியில் கற்பித்தல் நடவடிக்கை மேற்கொண்டால் அவர்களும் விரும்பி தமிழை படிப்பார்கள் இல்லை எனில் சலிப்புதன்மை தான் ஏற்படும் ஆகவே அந்தந்த ஆசிரியர்கள் சிறுவர்களின் மனநிலையை அறிந்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டால் நல்லது என்ற எண்ணம் தான் தோன்றினது.

இதற்காக நான் தமிழ் கற்றுகொடுக்கும் ஆசிரியர்களை குறை சொல்லவரவில்லை அவர்களும் சேவைநோக்கில் மட்டும் தான் கற்றல் நடவடிக்கைகளிள் ஈடுபடுகிறார்கள் அவர்களின் சேவையை பாராட்டதக்க வேண்டிய விடயம்,ஆனால் இதையும் அவர்கள் கவனத்தில் கொண்டால் சிறந்த சேவையை அவர்கள் வழங்கமுடியும் எம்மாணவர்களிற்கு.

புலத்தில் பிறந்த சிறுவர்களும் பெற்றோர் வற்புறுத்தலிற்காக மட்டும் தமிழை படிக்காம ஆசையா சென்று தமிழை கற்பார்கள் என்று நம்புகிறேன்,மேலெ குறிபிட்ட விடயங்கள் அனைத்தும் அவுஸ்ரெலியாவை மையமாக வைத்தே எழுதபட்டது,இதே போல் உங்கள் நாடுகளிள் தமிழ் பாடசாலைகளிள் எவ்வாறு கற்பிகிறார்கள் என்பதை வந்து சொல்லுங்கள்.

நன்றி

ஜம்முவின் தேடலில்

20050914loresxlh1cb1.jpg

Edited by Jamuna

அப்பா இலண்டன் தமிழ் பாடசாலைகளை போய் பார்த்தீர்கள் என்ன்றால் நாட்டை விட கேவலம்.

எடேய்,, மொக்கா மடையா என்றெல்லாம் சாதாரணமாக பிள்ளைகளை வகுப்பறையில் தமிழ் ஆசிரியர்கள் பேசுவார்கள்.

எனது நண்பனின் மகன் தமிழ் பள்ளிக்கு போவதை நிறுத்தி விட்டான் ஒரு தமிழ் ஆசிரியர் காதை முறுக்கி குட்டி போட்டா .அவ்வளவு தான் தமிழ் பாடம் அம்போ. பெடியன் தமிழை மூடி வைத்து விட்டான்.

பாராட்டுக்கள் ஜமுனா.

இதுபோன்ற நல்ல ஆக்கங்கங்களைத் தொடர்ந்து வழங்குங்கள்.

ஒரு தடவை சுவிஸ் சென்றிருந்தபோது ஒரு 6 வயதுச் சிறுமி கட்டுரை ஒன்றை ஆசிரியரின் கட்டாயத்தால் போட்டி ஒன்றிற்காக தாயின் உதவியுடன் மனப்பாடம் செய்துகொண்டிருந்தார். அக் கட்டுரையை வாங்கிப் படித்ததேன். அது தமிழ் தேசியத்தைப் பற்றியது. அதில் நாம் ஏன் தமிழ்த் தாயகத்திற்காக போராட வேண்டும் என்பதை பற்றி கடினமான சொற்பதங்களுடன் அமைந்திருந்தது.

இதில் ஒரு வசனமாவது அச் சிறுமிக்குப் புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்படிப் புரியாத விடயத்தை கட்டாயமாகத் திணிப்பதால் யாரும் பயனடையப் போவதில்லை.

Edited by இணையவன்

நல்லதொரு விடயம் யமுனா

ஓரு சில பாடசாலைகளில் இவ்வாறான தவறுகள் நடைபெறுகின்றன இல்லை என்று கூறமுடியாது. புலம்பெயர் பாடசாலைகளில் கற்பிப்பது போன்ற கற்பித்தலிற்கு தற்சமயம்தான் நாம் வந்துகொண்டிருக்கின்றோம். விரைவில் அதனை முழு அளவில் நடைமுறைப்படுத்தலாம் என நினைக்கின்றேன். இங்கு 8ம் வகுப்பில் கற்கும் பிள்ளைக்கும் ஊரில் 2ம் வகுப்பில் கற்கும் பிள்ளைக்கும் ஒரே அளவான அறிவே காணப்படுகின்றுது. காரணம் தமிழ் இரண்டாம் மொழி. நாம் எப்படி ஊரில் ஆங்கிலம் கற்றோமோ அப்படித்தான் இங்கு தமிழில்

நோர்வேயைப்பொறுத்தவரையில் ஒரு சில ஆசிரியர்கள் கடுமையாக நடைபெறுகின்றார்கள் என்று அறிந்தேன். கவலைதான். அவர்களை தனிப்ட்ட முறையில் சில ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் திருத்திக்கொள்ளலாம். நானும் ஓர் ஆசிரியன் என்ற முறையில்

நல்லதொரு பதிப்பு. வாழ்த்துக்கள் யமுனா.

நாட்டில்உள்ள கற்பித்தல் முறையில் மாணவர்களின் மனவளம் பாதிக்கப்படும் நிறைய சம்பவங்கள் நிகழ்வதுண்டு. உதாரணமாக கற்றலில் பின்தங்கிய மாணவர்களை சரமாரியாக வசைபாடுவார்கள். மாடு மேய்க்கப்போ என்பார்கள் சாணி பொறுக்க போ தோட்டம் கொத்தப்போ என்பார்கள். கற்றலில் பின்தங்கிய வர்களை பின்வரிசையில் தொடர்ந்து இருத்துவது போன்ற பல உதாரணங்களை சொல்ல முடியும்.

இவ்வாறான அணுகு முறையால் தங்களுக்கு கற்கும் திறன் இல்லை என்ற பரிதாபமான சூழ்நிலைக்கு மாணவர்கள் வந்து விடுவதுண்டு. ஆசிரியர்கள் இவ்வாறு திட்டினால் மாணவர்கள் படிப்பார்கள் என்று எதிர்பார்ப்பார்கள் ஆனால் அது எதிர்மறையான உளவியல் தாக்கங்களுக்கே வழி கோலி விடுவதுண்டு. புலத்தில் கற்றல் அணுகு முறையில் மனவளப்பாதிப்புக்கு இடமளிப்பதில்லை. மாணவர்களின் ஆழுமை வளர்ச்சியிலும் தலைமைத்துவ பண்பை வளர்ப்பதிலும் கவனமாக உள்ளனர். எமது நாட்டில் உள்ள அணுகு முறையால் கற்றலில் நூறு புள்ளி வாங்கி மேற்கண்ட விடயங்களில் கோட்டை விடும் நிறைய மாணவர்கள் உண்டு.

தற்போது நாட்டில் கற்றல் அணுகு முறை மிகவும் மாறிவிட்டது ஆனால் இந்த மாற்றத்தை சந்திக்காது புலம் பெயர்ந்து விட்ட சில ஆசிரியர்கள் அவர்கள் படித்த காலத்தின் அணுகுமுறையை வைத்துள்ளனர். இதில் மாற்றம் வர வேண்டும்.

யம்முவிடம் இருந்து நான் எதிர்பார்த்த படைப்புக்கள் <_< வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்..

புலத்தின் இப்படி எத்தனையோ விடயங்கள்..நானும் இதை பற்றி எழுதுகின்றேன்..

லண்டன் தமிழ் பாடசாலைகளுக்கும் தழிழ் கலாச்சார பண்புக்கும் சம்பந்தம் இல்லை.

3கிழமைக்கு முதல் தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலையின் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.

பிள்ளைகளின் விளையாட்டு, ஊக்குவிப்பு , பிள்ளைகளை சந்தோசப் படுத்தல் என்பவற்றை விட

மதுபானம் குடித்தல் தான் முன்னிலையில் நின்றது.

பாடசாலை சிற்றுண்டி சாலையில் மதுபானம் விற்றார்கள்., விளையாட்டு மத்தியஸ்தர்கள், நிர்வாகத்தினர் என பலரும் மதுப்போத்தலுடன் நின்றார்கள்.

நடுவர்களில் சிலபேர் போத்தலை வைத்து விட்டுத் தான் ஓடிச்சென்று பிள்ளைகளை யார் 1,2,3 என பிடித்தார்கள். இப்படி லண்டன் தமிழ் பாடசாலைகளின் நிலமை இருக்கிறது.

அதிலும் அன்றைய பாடசாலை விளையாட்டுப்போட்டியில் முன்னர் நிர்வாகத்தில் இருந்தவர், அவரும் அவரது மகளும் ஒன்றாக நின்று பியர் குடித்துகொண்டு நின்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

இதில் இன்னும் ஒன்று அந்த பாடசாலை நிர்வாகத்தில் லண்டன் தமிழருக்கு புத்திமதி சொல்லும் ஒருபேப்பர் குழுவில் அல்லது அந்த பத்திரிகை யில் பங்கேற்பவரும் ஒருவர் இருக்கிறார். அவர் தமிழ் பாடசாலை நிர்வாகத்தில் இருந்து கொண்டு தமிழ் கலாச்சாரத்தை , வருங்கால தமிழ் இளையோரை சீரழிக்கும் விதங்களில் தமிழ் பாடசாலையை வழி நடத்துவதை ஒரு பேப்பர் கண்டு கொள்வதில்லை. ஆனால் மற்றவையின் விசயங்களை பற்றி விமர்சனங்களை ஒரு பேப்பர் விளாசித்தள்ளும்.

தமிழ் பாடசாலை நிகழ்வுகளில் மதுபானம் விற்பது பற்றி மற்றைய பள்ளிகளின் நிலைமைகளையும் அறியத்தாருங்கள்

வணக்கம் யம்மு,

அழகான படைப்பு...

நானும் இங்கு புலத்தில் தான் தமிழ் பாடசலைக்கு சென்றேன்,

எங்கள் படசாலையில் அன்றும் ,இன்றும் அனைவரும் அன்பாகவும்,பன்பாகவும் மாணவர்களேடு பலகுகின்றனர்!!!

இப்படியும் நடக்கின்றது என்று அறியவைத்த யம்முக்கு எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜமுனா இப்போது நீங்க ஒரு முக்கிய இடத்திற்கு வந்துள்ளீர்கள்..

பாராட்டுக்கள். .இந்த முறைப்பாட்டில் , ஆசிரியர்கள் பக்கத்தில் இருந்தும் சில விடயங்களை நோக்கவேண்டிய கட்டாயம் உள்ளது..

இங்குள்ள அதாவது புலம்பெயர்ந்த நாடுகளில் பெரும்பாலும் தொண்டர் அடிப்படையில் தான் எமது ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள்.

அவர்கள் சிலநேரத்தில் தவிர்க்கமுடியாமல் உணர்ச்சி வசப்பட்டிருக்ககூடும். இப்படி ஒரு சிலர் விடும் தப்பை வைத்து தாமாகவே மனமுவர்ந்து கற்பிக்கவரும் ஆசிரியர்களின் மனதைப் புண்படுத்தும்படியான கருத்துக்களை முன்வைப்பது அவ்வளவு சிறந்ததல்ல என்பது தான் எனது கருத்து.

அவர்களின் பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா?

பெற்றோர்கள் இதை பெரிசு படுத்தினால் குழைந்தைகளை மேலும் உசார் படுத்துவதாக தான் இருக்குமே ஒழிய வேறொன்றையும் நாம் சாதிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில றோட்டில சந்தில நின்றதுகள் எல்லாம்.. புலம்பெயர்ந்த உடன ஆசிரியர் பணியாற்றினால் இதுதான் கதி..!

பிரித்தானியாவில ஆசிரிய பணியாற்ற குறைந்தது PGCE முடிச்சிருக்கனும்.

பெரிய மனிசர்களையே சரிவர அணுக முடியாதவங்க எல்லாம்.. குழந்தைகளை அணுகி கல்வி அறிவூட்டல் என்பது...??!

தமிழ் பாடசாலைகளின் அணுகுமுறைகள் குறித்து உங்களின் எண்ணங்களை குறித்த நாடுகளின் கல்வி அமைச்சுகளுக்கு அனுப்பி வையுங்கள். அவை சட்ட ரீதியான அணுகுமுறைகள் மூலம் ஒரு ஸ்ராண்டட்டை ஆசிரியர்கள் மத்தியில் பிரயோகிக்க வாய்ப்பு ஏற்படும்..!

கண்டவன் போனவன் எல்லாம் ஆசிரியரானால்.. பிள்ளைகள் நிலை..! எல்லாம் செல்வாக்கு.. இருந்தா தமிழர்கள் சமூகத்தில.. பொன்னாடை போர்த்தி பொற்கிளியும் வழங்கி அடைமொழியும் கொடுத்திடுவாங்க...! பாவம்.. எதிர்கால சமூகம்.. தமிழை வெறுப்போடு நோக்கும் நிலையையே இது சம்பாதித்துத் தரும்..! :unsure:

Edited by nedukkalapoovan

ஜமுனாவின் அரட்டைகளைப் பார்த்து வெறுத்துப் போயிருந்த என்னுடைய மனதில் ஜமுனாவின் புலப்பாடசாலைகள் குறித்த கருத்து பாலை வார்த்துள்ளது.

தொடர்ந்து இப்படியான கருத்தக்களை தரவும்!

இலங்கையில் கல்வி கற்கின்ற முறை கூட மிகவும் மோசமானது. அதே முறையை புலம்பெயர் நாடுகளிலும் தொடர்வது என்பது முட்டாள்தனமான ஒரு விடயம்.

தமிழை புலம்பெயர் நாடுகளில் உள்ள சிறுவர்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென்றால், கற்பிக்கும் முறையில் பெரும் மாற்றம் அவசியம்.

புலம்பெயர் நாடுகளில் கல்வி கற்று தமிழிலும் திறமை உள்ளவர்கள் ஆசிரியப் பணி செய்ய முன் வரவேண்டும்.

ஆனால் அவர்கள் முன்வந்தாலும் சில கிழட்டு நந்திகள் விட மாட்டார்கள்.

சில பத்து ஆண்டுகள் கழித்து "புலம்பெயர் நாடுகளில் தமிழ் அழிந்து விட்டது" என்று கூக்குரல் இட்டுவிட்டு பேசாமல் இருக்க வேண்டியதுதான்.

புலத்தில் தமிழ் ஆசிரியர்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினை

வாழ்த்துக்கள் பேபி.

கடைசியில் பேபி குருவுக்கே பாடம் எடுக்குது.

அதாண்டா இதாண்டா

பேபின்னா பேபி தாண்டா!

:unsure::):huh:

ஆசிரியர்களில் பிழை இல்லை பாடசாலையை நடாத்தும் நிர்வாகம் தான்முதல் காரணம்.

பாடசாலையை ஆரம்பித்தவர் அந்த பதவியை விட்டு போவதில்லை, அப்படி போனாலும் தனக்கு சார்ப்பான ஒருவரை விட்டு விட்டு பின்னால் நின்று இயக்குவது. ஆசிரியர்களுக்கு எந்த அறிவுரைகளையும் பயிற்சிப்பட்டறைகளையும் வைப்பதில்லை.

லண்டனை பொறுத்த வரை தமிழ் பாடசாலை ஆக இருந்தாலும் ஆங்கிலத்திலேயே கூட்டங்கள், பிள்ளைகளுடன் உரையாடல் என்பன நடக்கும். ஆக தமிழ் வகுப்பறையில் மூலஸ்தானத்தில் சம்ஸ்கிருத மந்திரம் ஜயர் சொல்வது போல் தான் தமிழை சொல்லிக்கொடுப்பார்கள்.

தகவல்கள் விளம்பரம் எல்லாம் சுத்த ஆங்கிலோ தான்.

கேட்டா பிள்ளைகளுக்கு விளங்காது இதுதான் லண்டன் தமிழ் பாடசாலைகளின் நிலமை இதில் எப்படிதமிழ் வளரும்?

திருத்தங்கள் நிறைய வேண்டி உள்ளது

ஒருத்தரை சூ பண்ணினால் எல்லொரும் திருந்துவார்கள்! :unsure:

அத்துடன் அடுத்த கோடை விடுமுறைக்கு புதிய கரவானில் போகலாம்! :ph34r:

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா இதை நான் இன்பத்தமிழ் ஒலி வாணொலியினுடைய கருத்து களத்திலும் வாசித்து இருந்தேன்.................நல்ல கருத்து பாராட்டுக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் ஆக்கம்..

புலத்தில் பிறக்கின்ற குழந்தைகள் தமிழில் முதல் பேசினாலும், அவர்கள் வளரும்போது தமிழ் முதல் மொழியாக இருக்காது. அவர்கள் வசிக்கும் நாடுகளில் உள்ள மொழிகளிலேயே (உ.ம்.ஆங்கிலம், பிரஞ், டொச்) சிந்திக்கவும் பேசவும் செய்கின்றார்கள். எனவே தமிழை இரண்டாம் மொழி போன்றே கற்பிக்கவேண்டும். தமிழாசிரியர்கள் தமிழை முதலாவது மொழி போன்று கற்பிக்க வெளிக்கிடுவதும், இங்குள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்குள்ள தகமைகள் அற்றிருப்பதும் புலத்துக் குழந்தைகள் தமிழை வெறுக்கக் காரணமாகின்றன.

  • தொடங்கியவர்

கருத்துகள் மற்றும் வாழ்த்துகள் தெரிவித்த அனைத்து உறவுகளிற்கு நன்றிகள் தொடர்ந்து இவ்வாறான பதிவுகளை தருகிறேன்........... :D

வணக்கம் கள உறவுகளே இத்தனை விடயங்களையும் கேட்டறிந்து விட்டு மட்டும் நிற்கவில்லை..நானே நேரடியாக தமிழ் பாடசாலைக்கு சென்று பார்போம் என்று நண்பர்களுடன் சென்றேன் "ஜம்முவின் தேடலிற்காக"..................

பாடசலை வளாகத்தினுள் வந்த பார்த்த போது முதலில் நாம் கண்டது அதாவது வாகனங்களிற்கு தரிபிடம் வைத்திருகிறார்கள் ஆனால் பெற்றோர்கள் தரிபிடத்தில் நிற்பாட்டாமல்,அப்படியே வந்து நடுரோட்டில வாகனத்தை நிற்பாட்டி குழந்தைகளை போகும்படி சொல்லுகிறார்கள்,இதனால் வாகன் நெருக்கடி மற்றும் இடைஞ்சல்கள் வருகிறது அத்துடன் வேறு இனத்தவர்கள் குறிப்பாக அவுஸ்ரெலியர்கள் சினம் கொள்வதை நேரடியாக காண கூடியதாக இருந்தது.............

*பெற்றோர்களே உங்கள் வாகனங்களை நிறுத்த வாகனதரிபிட வசதிகள் இருகின்றன அங்கே உங்கள் வாகனங்களை நிறுத்துவதன் மூலம் மற்றவர்களிற்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் செய்யலாம்,ஆகவே பெற்றோர்களே முதலில் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவும்.................

தொடர்ந்து நான் பாடசாலைகுள் சென்ற போது சில பெற்றோர்கள் இருந்தனர் மாணவர்கள் அங்குமிங்கும் ஓடிவிளையாடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது,அதில் ஒரு சுட்டி பெடியனை கூப்பிட்டு நான் தமிழில் ஒரு கேள்வியை கேட்க அவன் ஆங்கிலத்தில் பதில் அளித்தான்,ஆனா நான் அவனுடன் தமிழில் தான் உரையாடினேன் அவன் விளங்கி தான் ஆங்கிலத்தில் அதற்கு பதில் அளித்தான்,அத்தோடு பாடசாலை வளாகத்தில் பெற்றோர்களும்,பிள்ளைகளும் ஆங்கிலத்தில் தான் கதைத்து கொண்டிருந்தார்கள்,தமிழ் பள்ளி கூடத்திலையாவது தமிழில் கதைக்கலாமே.........பிள்ளைகள் தமிழில் கதைத்தாலும் பெற்றோர்கள் தமிழில் பதில் அளிக்களாமே அப்படி செய்தால் அவர்களும் கால போக்கில் தமிழில் உங்களுடன் கதைப்பார்கள் ஒரளவிற்காவது தமிழை வளர்கலாம் என்று நினைகிறேன்,நான் பெற்றோரை பார்த்து கொண்டிருக்கும் போது,அந்த நேரத்தில் ஒரு பெண்மணி வந்தா வந்து மாணவர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்தா..........எல்லா மாணவர்களும் அவாவை சூழ்ந்து நின்று கதைத்தார்கள் நானும் பக்கத்தில் உள்ள ஒரு மாணவனிடம் இந்த அக்கா யார் என்று வினாவினேன்.......அவன் உடனே சொன்னான் இது தான் தமிழாசிரியர் என்று சொல்ல எங்களாள் சிரிப்பை அடக்கமுடியவில்லை பின்னே தமிழ படிபிக்க வந்த தமிழாசிரியரே ஆங்கிலத்தில் கதைத்தா எப்படி இருக்கும்,பிள்ளைகளிற்கு ஆங்கிலம் தான் முதல் மொழி என்று தெரியும் ஆனாலும் தமிழாசிரியர் தமிழில் கதைப்பது தானே சிறந்தது என்பது ஜம்முவின் இரண்டாவது தேடல்...........

இவ்வாறிருக்கும் போது சில மாணவர்களிடம் தமிழ் பாடசாலை பற்றியும் தமிழை பற்றியும் கேட்டேன்.........

1)மாணவன் (1) (ஆண்டு 3) -தமிழ் ஸ்கூல் சரியான போரிங் அப்பா ஸ்கூலிற்கு போனா மக்டோனால்சிற்கு கூட்டி கொண்டு போவதா சொன்னவர் அது தான் வந்தனான்.......

2)மாணவன் (2) (ஆண்டு 4) -ஏன் அழுறீங்க என்று கேட்டதிற்கு டீச்சர் சரியான ரூட் என்று

(அழுதபடி இருந்தான்) சொன்னான்.....

*தமிழ் ஆசிரியறிற்கு பயந்து பிள்ளை அழுகிறது என்றா,அவர்கள் மீது உள்ள பயம் தெரிந்தது.

3)மாணவன் (3) (ஆண்டு 4) -என்ட டீச்சர் வெறி நைஸ் எனக்கு தமிழ் படிக்க சரியான விருப்பம்.

*இதில் இருந்து நான் புரிந்து கொண்டது புலபிள்ளைகள் சரி எந்த பிள்ளைகளாயினும் சரி ஆசிரியரிடம் இருந்து எதிர்பார்பது இதுவே என்று!!!!

4)மாணவி (4) (ஆண்டு 3) -டீச்சர் நொட் நைஸ் அவா எழும்பு இரு,எழும்பு,இரு என்று பலதடவைகள் சொல்லுகிறா எனக்கு விருப்பமே இல்லை என்று சொன்னார்.

*நாட்டில் பிள்ளைகளை செய்வதை போல இங்கும் செய்ய முற்படுவது எனக்கு தெளிவாக தெரிந்தது.

5)மாணவி (5) (ஆண்டு 4) -ஜ லைக் தமிழ் சம் டைம் மை டீச்சர் வெறி நைஸ்,சம் டைம் சீ இஸ் வெறி ரூட் என்று சொன்னா........

6)மாணவி (6) (ஆண்டு 3) -ஜ கேட் தமிழ் கிளாஸ் அன்ட் டமிழ் டீச்சர்ஸ் என்று கூறீனா.

மற்றும் வேறு மாணவர்கள் அதாவது வளர்ந்த மாணவர்களுடன் உரையாடின போது அவர்கள் கூறியது...................

*தமிழ் சரியான கஷ்டமான பாடமாக இருக்கு வீட்டை ஏசினம் அது தான் படிகிறோம்......

*தமிழ் முந்தி விருப்பமா இருந்துச்சு இப்ப விருப்பமே இல்லை,கனக்கா சொல்லி தாறீனம் ஒன்றும் விளங்கவில்லை

*ஆசிரியர்கள் எங்களுடன் பரவாயில்லை ஆனா ஆங்கில பாடசாலைக்கும் இதற்கும் பல வித்தியாசம் தமிழ் பாடசாலை வெரி போரிங் என்று.........

இவ்வாறு அங்குள்ள மாணவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை சுட்டி காட்டியது ஜம்முவின் தேடல்.......

*இவ்வாறிருக்கும் போது "அசம்பிலி" என்று மணி அடித்தது மாணவர்கள் எல்லாரும் ஒன்று கூடினார்கள் எனக்கு விளங்கவில்லை பக்கத்தில் இருந்த பெற்றோரிடம் கேட்ட போது,ஒவ்வொரு வகுப்பு அதாவது ஆண்டு 1 தொடக்கம் பெரிய மாணவர்கள் மட்டும் ஒரு கிழமையில் ஒரு வகுப்பு தமிழில் நற்சிந்தனை,திருகுறள் எல்லோருக்கும் முன்னும் சொல்ல வேண்டும் என்று,மிகவும் நல்ல விசயம் பாராட்டதக்க வேண்டிய ஒரு விசயம் என்று நான் அந்த பெற்றோருக்கு சொல்ல.....அதை ஏன் பிள்ளை கேட்கீறீங்க ஒவ்வொரு கிழமையும் அந்தந்த வகுப்பில் உள்ள ஒரே பிள்ளையின் கைக்கு தான் "மைக்" செல்கிறது என்று சலிப்பாக கூறினார்.................

1)ஜம்முவின் தேடல் இதையும் பெற்று கொண்டது அதாவது ஒரு சில பிள்ளைகளிற்கு பாராபட்சம் காட்டுமிடத்தில் மற்ற பிள்ளைகளிற்கு சரி பெற்றோர்களிற்கும் சரி வெறுப்பு உண்டாகிறது ஆகவே இதனை குறிபிட்டவர்கள் கவனத்தில் கொண்டால் நல்லது..............

இப்படி அசம்பிலி முடிய மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்,நான் பெற்றோர்கள் சிலரிடம் கேள்வி கேட்கலாம் என்று கேட்க நினைத்த போது அவர்கள் சாக்குபோக்கு சொல்லி மறுத்துவிட்டார்கள்............

*ஜம்முவின் தேடல் இதையும் கவனத்தில் கொண்டது அதாவது நடக்கிறதை சொல்ல வேண்டும் நாங்கள் இருப்பது புலத்தில் கருத்து சுகந்திரம் இருக்கு ஆகவே பயப்பிடாம உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்,இதனால் அவரை எப்படி பார்பது அல்லது கூச்சம் கரணமாக உங்கள் உரிமைகளை இழக்கிறீர்கள்..........

இப்படி இருக்க ஒரு பெற்றோர் சம்மதித்தார் அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அந்த பெற்றோரிடம் நான் பெற்ற தகவல்களை தருகிறேன்.............

பெற்றோர் -தமிழ் பாடசலையை புலத்தில் நடத்துபவர்களிற்கு முதலி நன்றி சொல்ல வேண்டும் மிகுந்த சிரமங்களிற்கு மத்தியில் தங்களது நேரத்தை ஒதுக்கி சேவை மனபான்மையுடன் செய்யும் செயல் பாராட்டதக்கது..........

பெற்றோர்-இருந்தும் சில குறைகள் இருக்க தான் செய்கின்றன அந்த குறைகளை சுட்டி காட்டுவதன் மூலம் தமிழ் பாடசாலை சேவையை மேம்படுத்தலாம் என்று நினைகிறென்........

பெற்றோர் -ஒரு சில ஆசிரியர்கள் சிறிது கடினமான போக்கை தான் கடைபிடிகிறார்கள் அவர்கள் சிறிலங்காவில் பயிற்றுவிக்கபட்ட ஆசிரியர்களாக இருப்பதால் தான் அவர்கள் இவ்வாறான கடுமையான போக்கை கடைபிடிக்கின்றார்களோ தெரியவில்லை...........

பெற்றோர்-புலத்தில் பொறுத்தவரை தமிழ் மொழியை கட்டாயமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை இருந்தும் நமது சமூகம் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் தான் செய்கிறோம் ஆகவே தமிழை எவ்வளவு இலகுவாகவும் புரிய கூடிய விதத்திலும் கற்று கொடுத்தால் மிக்க நல்லது.போட்டிகள் மற்றும் பரிட்சை நோக்கதிற்காக மட்டும் தமிழை பயிற்றுவிப்பதை போல் பயிற்றுவிக்காமல் குறைந்தளவு தமிழை பேசகூடியதாகவும்,விளங்ககூடித?கவும் கற்பித்தாலே மிக நல்லது.........

பெற்றோர்-தமிழ் பாடசாலைகளிள் பாலர் பிரிவில் மாணவர்களினது எண்ணிக்கை அதிகமாக இருக்கும் 2,3 பிரிவுகள் கூட இருக்கும் ஆனால் 5,6 வகுப்பில் பார்த்தா ஒரு வகுப்பில் 10 பேரை காண்பதே பெரிய விசயமாக இருகிறது.......

பெற்றோர்-அண்மையில் நடந்த பேச்சு போட்டியில் ஒரு வகுப்பில் 20 பேர் கலந்து கொண்டணர் அதில் 90 புள்ளி எடுத்த மாணவருக்கே,2 ம் பிரிவில் தான் பரிசு கிடைத்தது,அதற்கு விளக்கம் கொடுத்தார்கள் எல்லாருக்கும் முதல் பரிசு கொடுப்பது எப்படி என்று.........தரபடுத்தி தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்............90 புள்ளிகள் எடுத்தா பிள்ளைக்கு ஊக்குவிக்க முதல் பரிசு கொடுத்தால் தானேதொடர்ந்து அந்த பிள்ளை தமிழை விரும்பி படிக்கும்,அதாவது புலத்தில் பிறந்து 90 புள்ளிகளை பேச்சு போட்டிக்கு எடுப்பது என்றா லேசுபட்ட விடயம் இல்லை தானே............இது பாரிய குறையாகவே நான் கருதுகிறேன் என்றார்.........

பெற்றோர் - சில போட்டிகள் நடைபெறும் போது போட்டியில் பங்குபற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்கும் நடுவர்களிற்கு சேவை செய்வது போல் தேநீர் எல்லாம் கொடுத்து போட்டியின் போது சில பெற்றோர்களும் அங்கேயே நிற்பார்கள் இது அழகல்ல இது மஸ்தியம் வகிக்கும் அவர்களை சங்கட நிலைக்கு இட்டு செல்லும் என்று கூறிவிட்டு சிரிகிறார்.........

(அந்த சிரிப்பின் அர்த்தம் ஓரளவிற்கு என்னால் புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது)

பெற்றோர் -இவ்வாறாப சில குறைகள் இருந்தாலும் பல நிறைகள் இருகின்றன இந்த குறைகளையும் நிவர்த்தி செய்தால் அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் தமிழில் பேசவும்,தமிழை கற்கவும் ஆவலுடன் வருவார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறி எங்களிடம் இருந்து விடைபெற்றார்..............

ஜம்முவின் தேடல் அந்த பெற்றோருக்கு நன்றியை தெரிவித்து விட்டு அவரிடம் இருந்து விடை பெற்று சென்றது...........

ஜம்முவின் பார்வை

தமிழ் ஆசிரியர்களின் சேவை பாராட்டதக்க வேண்டிய விடயம் ஆனாலும் அதை சிறந்த முறையிலும் நடைமுறைக்கு ஏற்ற வண்ணம் மாறி சிறந்த சிறந்த கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு சிறந்த தமிழ் சமூகத்தை உருவாக்கலாம் என்பதே சிந்தனை...........

"செய்வன திருந்த செய்"

"ஆகாவே புலத்தில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களே மற்றும் பெற்றோர்களே இது உங்களின் கவனதிற்கு.......!!!" :lol:

"கூறுவது ஜம்மு தீர்மானிப்பது நீங்கள்"

தொடர்ந்து ஜம்முவின் தேடல் இதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கும்................. :lol:

20050914loresxlh1cb1.jpg

நன்றி........... :)

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ்சைப் பொறுத்தவரை அதிகமான பிள்ளைகள் வீட்டில் பெற்றோர்களுடன் தமிழிலேயே கதைக்கிறார்கள். எழுதுதல், வாசித்தல்தான் பெரும்பாலும் பிரச்சனையாகவுள்ளது. (தமிழ் பாடசாலைகளில் படிப்பவர்கள் தவிர) இதைக் கொஞ்சம் கவனித்து பெற்றோர்கள் சரிப்படுத்தினார்களெனில் அந்தப் பிள்ளைகள் லிசீ (LYCEE) முடித்து பாக் (BAC) எடுக்கும்போது அரசாங்கத்தாலேயே தமிழில் சோதனையொன்று வைப்பார்கள். அப்போது இவர்கள் தமிழில் எடுக்கும் புள்ளிகள் பாக் புள்ளிகளுடன் சேர்த்துக் கொள்ளப்படும். ஏனைய பாடங்களில் கொஞ்சம் புள்ளிகள் குறைந்திருந்தாலும் அதை இது நிவர்த்தி செய்யும். தமிழுக்குத் தமிழுமாச்சு, எதிர் காலத்துக்கு பிரயோசனமுமாச்சு. :D:D

ஜம்முவின் தேடல் அருமை

புலம் பெயர்ந்த தேசத்தில் பலர் சேவைமனப்பான்மையுடன்தான் தமிழ் ஆசரியராக பணிபுரிகின்றார்கள்

தமிழ் ஆசிரியராக பணிபுரியவருபவர்கள் முறையான பயிற்சியை பெற்றுக்கொண்டர்களானால் சிறப்பாக பணியாற்றமுடியும்

தமிழ் படிக்கவரும் மாணவர்களும் ஆர்வவமாக கல்வி கற்பார்கள்

  • தொடங்கியவர்

கருத்துகள் கூறிய சுவிபெரியப்பா,சிவா அண்ணா ஆகியோருக்கு நன்றிகள்...................... ;)

சுண்டு நேற்று தான் சிலபேர் சொன்னார்கள் இந்த ஆக்காம் இன்பதமிழ்வானொலியில் வாசிக்கபட்டதாக.............நல்லா இருந்தது என்று சொன்னார்கள்........ஆனால் அன்றி சில பிரச்சினைகளாள் அந்த தலைப்பு தொடர்ந்து போவதில் சிக்கல் ஏற்பட்டதாக என்றும்..............ஆனால் இந்த கருத்தோட அன்றைக்கு நிகழ்ச்சி செய்த அறிவிப்பாளருக்கு உடன்பாடு இருக்காது என்று நன்கு தெரியும்.................அவர் சொல்லும் கருத்துகள் ஏற்ககூடியதாக இருந்தாலும்..............பிழைகளை திருந்த்துவதன் ஊடாக நல்ல சேவையை ஆசிரியர்கள் வழங்கமுடியும்.........அந்த வகையில் யாழ்மூலம் எழுதபட்ட இந்த தேடல் வானொலி மூலமும் குறிபிட்ட ஆட்களிற்கு கொண்டு செல்லபட்டது யாழின் வெற்றி என்றே சொல்லலாம்..........பலர் சொன்னார்கள் நல்ல ஒரு ஆக்கம் என்று.........எழுதவே தெரியாம இருந்த என்னை எழுத பண்ணிய யாழிற்கு தான் எல்லா வெற்றியும்............... :o

பி.கு- தொடர்ந்து இந்த தேடல் மூலம் பல நல்ல விசயங்களை நடக்க திட்டமிட்டு இருகிறோம் ஆகவே அழுஸ்ரெலிய உறவுகள் ஒன்று சேருவதன் மூலம் நல்ல ஒரு சேவையை யாழ்மூலம் வழங்கலாம்.............. :(

நன்றி.......... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ஜமுனா அவருக்கும் எனக்கும் இது தொடர்பாக கடும் வாக்குவாதம் நடைபெற்றது வானலைகளில்..இருக்க சம்மந்தப்பட்ட நிகழ்வை நாங்கள் வானொலியின் ஊடாக வரும் சனிக்கிழமை சம்மந்தப்படவர்களை அழைத்து உரையாட இருக்கனிறோம் உங்கள்அனுமதியுடன்...கிடைக்கு

  • தொடங்கியவர்

தாராளமாக வானலையில் வரலாம் வந்து உரையாடலாம் சுண்டு ஆனா அன்று உங்களுக்கும் அவருக்கு நடந்த ஆரோக்கியமான வாக்குவாதம் போல கொஞ்சம் ஓவரா கூட நிகழலாம்,இதை பார்த்து சிலர் இவைக்குள்ள கோபம் வந்திருச்சு என்று சந்தோசபடுவீனம்.......ஆனாலும் வர முயற்சிகிறேன்.......... :o

  • கருத்துக்கள உறவுகள்
:o என்ன ஜம்மு தேடல்களாகவும்,படைப்புகளாகவு
  • தொடங்கியவர்

புத்துமாமா வாழ்த்தி இருகிறாரோ ரொம்ப சந்தோசம்.............எல்லாம் உங்களிட்ட இருந்து கற்றது தானுங்கோ.............தொடர்ந்து தேடுகிறேன்...............யாரை என்று சொல்லவில்லை :P ...........ஆமாம் நாமளும் என்னாவது செய்து பார்போம் என்று தொடங்கினேன் ஆனா இந்தளவு சிட்னியில பேசபடும் என்று நான் நினைக்கவே இல்லை எல்லாம் சுன்டுவின் மகிமை தானுங்கோ............எல்லா வெற்றியும் யாழிற்கு தான்...... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.