Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நாட்டில்... அரபு வசந்தத்தை, உருவாக்குவோம்“ என கோசமிட்டு... போராட்டத்தை முன்னெடுத்ததாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்“ என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை!

“நாட்டில்... அரபு வசந்தத்தை, உருவாக்குவோம்“ என கோசமிட்டு... போராட்டத்தை முன்னெடுத்ததாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிக்கை!

நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளமை கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1274205

  • கருத்துக்கள உறவுகள்

இனி பழைய பல்லவி, கதையை திரித்து, மாற்றி சிறுபான்மை இனத்தின் மீது ஏவி விட்டு, தப்பி விடலாமென நினைக்கிறார்கள் போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இனி பழைய பல்லவி, கதையை திரித்து, மாற்றி சிறுபான்மை இனத்தின் மீது ஏவி விட்டு, தப்பி விடலாமென நினைக்கிறார்கள் போலுள்ளது. 

சிங்கள மக்கள் விழிப்புடன் செயல்பட வேணும் சகலத்துக்கும் சிறுபான்மையை குற்றம் சாட்டி தப்பி பிழைக்கும் அரசியவாதிகளை இனம் காணவேண்டும்...

இடதுசாரிகளுடன் கூட்டு சேர்ந்து அரசியல் செய்த எந்த அரசும் நிலைத்து நிற்கவில்லை சிறிமா முதல் கோத்தா வரை..

இன்னும் ஒன்று அண்மையில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிங்கள மக்கள் பதாதைகளில் 74 வருடமாக ஆட்சி செய்த அரசியல்வாதிகள் செய்த பிழையை சொன்னார்கள் ...

வழமையாக நாங்கள் தான் 74 வருட அரசியல் பற்றி பேசுவது .இன்று சிங்கள மக்களும் குற்றம்சாட்ட வெளிக்கிட்டுவிட்டனர்

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்ப  தேங்காய்ப்பூவுக்கு ..அடி ரெடி   என்று...அரச ரீதியாகச் சொல்லியாச்சு...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

சிங்கள மக்கள் விழிப்புடன் செயல்பட வேணும் சகலத்துக்கும் சிறுபான்மையை குற்றம் சாட்டி தப்பி பிழைக்கும் அரசியவாதிகளை இனம் காணவேண்டும்...

இடதுசாரிகளுடன் கூட்டு சேர்ந்து அரசியல் செய்த எந்த அரசும் நிலைத்து நிற்கவில்லை சிறிமா முதல் கோத்தா வரை..

இன்னும் ஒன்று அண்மையில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிங்கள மக்கள் பதாதைகளில் 74 வருடமாக ஆட்சி செய்த அரசியல்வாதிகள் செய்த பிழையை சொன்னார்கள் ...

வழமையாக நாங்கள் தான் 74 வருட அரசியல் பற்றி பேசுவது .இன்று சிங்கள மக்களும் குற்றம்சாட்ட வெளிக்கிட்டுவிட்டனர்

இந்த முறை இது பெரிதாக எடுபடாது. சிங்களவர்கள் கொதியில் இருக்கிறார்கள். இந்த செய்தி வந்த எல்லா இடங்களிலும்  பின்னூட்ட கருத்துக்கள், கோத்தாவுக்கு எதிராக கடுமையாக இருக்கிறது. அவங்களுக்கு சாப்பாடும் காசும் இருந்தால் சில வேளை  ஏதாவது நடக்கலாம், அவங்களை பட்டினி போட்டுவிட்டு இப்பிடி சொன்னால் எதிராகவே திரும்பும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இன்னும் ஒன்று அண்மையில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிங்கள மக்கள் பதாதைகளில் 74 வருடமாக ஆட்சி செய்த அரசியல்வாதிகள் செய்த பிழையை சொன்னார்கள்

சொன்னது ஒரு இளைஞன். இது ..... இது .... கேட்கத்தான்,  இந்த நன்னாளை காணத்தான் நான் ஆவலோடு காத்திருந்தேன். இது நாடு முழுவதும் தொடரவேண்டும். இந்தச் சந்தர்பபத்தை சாணக்கியன் சரியாக பயன்படுத்தவேண்டும். இனவாத அரசியலாளர்கள் தூக்கியெறியப்படவேண்டும். ஆரோக்கியமான இளைஞர் கையில் நாட்டை ஒப்படைக்க வேண்டும். அவர் சொன்னார் "நான் சஜீத்துக்காக போராட  இங்கு வரவில்லை, நாட்டில் நடந்த அக்கிரமங்களை முஸ்லிம்களையும், சிங்களவரையும் மோதவிட்டு சுகம் காணும் தந்திரத்தையும் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் தவறியும் தமிழருக்கு இழைத்த அனிஞாயங்களையோ, அதனாற்தான் நாடு இன்று வங்குரோத்து நிலையை அடைந்ததையோ குறிப்பிடவில்லை. ஆனால்  உண்மையை ஒத்துக்கொள்ளும்வரை இந்தப்போராட்டம் அணையாது!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கான முனைப்போ தெரியவில்லை....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

சிங்கள மக்கள் விழிப்புடன் செயல்பட வேணும் சகலத்துக்கும் சிறுபான்மையை குற்றம் சாட்டி தப்பி பிழைக்கும் அரசியவாதிகளை இனம் காணவேண்டும்...

இடதுசாரிகளுடன் கூட்டு சேர்ந்து அரசியல் செய்த எந்த அரசும் நிலைத்து நிற்கவில்லை சிறிமா முதல் கோத்தா வரை..

இன்னும் ஒன்று அண்மையில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிங்கள மக்கள் பதாதைகளில் 74 வருடமாக ஆட்சி செய்த அரசியல்வாதிகள் செய்த பிழையை சொன்னார்கள் ...

வழமையாக நாங்கள் தான் 74 வருட அரசியல் பற்றி பேசுவது .இன்று சிங்கள மக்களும் குற்றம்சாட்ட வெளிக்கிட்டுவிட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அங்கே நடந்தது நன்றாகவே தெரியும். ஆகவே, “அடிப்படைவாதிகள்” என்று முஸ்லீம்களை நோக்கி விரலை நீட்டும் கோத்தா - மகிந்த பருப்பு இனிமேல் வேகாது. குறிப்பாக, ஈஸ்ட்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது கோத்தாவே என்று சிங்களச் சனம் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கிற சந்தர்ப்பத்தில, உந்தப் பருப்பை இனி வேகவைக்க ஏலாது. அடி வேண்டிக்கொண்டுதான் போக வேணும்.

75 வருட அரசியல் ஏமாற்று என்று சொல்வதே பாரிய திருப்பம் தான். சிங்களசனம் அரசியல், மத அடிப்படையில் இருந்து விலகிச் சிந்திக்கத் தலைப்படுவது நல்ல சமிக்ஞையே!

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, putthan said:

இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கான முனைப்போ தெரியவில்லை....

அரச கட்டில்லேறும்பொழுதே அந்த திட்டத்துடனேயே ஏறினார். விரைவாக எல்லாத்துறையுள்ளும் இராணுவத்தை புகுத்தினார். ஆனால் சறுக்குகிறது. எந்த ஆட்சி வந்தாலும் ராஜபக்ஸசரக்கள் இனி தலைநிமிருவதோ, பொருளாதாரம் எழும்புவதோ  கொஞ்சம் கஸ்ரம். கூட்டத்தை பாருங்கள்! அன்று தமிழரை அடித்து கலைத்தபோது, இராணுவ கதாநாயகர்களை பவனியாக விழா மேடைக்கு அழைத்து வந்தபோது திரண்ட மாதிரி நாடு முழுவதும் திரண்டிருக்கு. நாட்டைத்தா வீட்டுக்கு போ என்கிறார்கள். ஒன்று இவர்கள் தப்பியோடவேண்டும், தற்கொலை செய்ய வேண்டும் அது முடியாது இவர்களால்.  இல்லை மூளை நரம்பு  வெடித்து படுத்த படுக்கையாகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அங்கே நடந்தது நன்றாகவே தெரியும். ஆகவே, “அடிப்படைவாதிகள்” என்று முஸ்லீம்களை நோக்கி விரலை நீட்டும் கோத்தா - மகிந்த பருப்பு இனிமேல் வேகாது. குறிப்பாக, ஈஸ்ட்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது கோத்தாவே என்று சிங்களச் சனம் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கிற சந்தர்ப்பத்தில, உந்தப் பருப்பை இனி வேகவைக்க ஏலாது. அடி வேண்டிக்கொண்டுதான் போக வேணும்.

75 வருட அரசியல் ஏமாற்று என்று சொல்வதே பாரிய திருப்பம் தான். சிங்களசனம் அரசியல், மத அடிப்படையில் இருந்து விலகிச் சிந்திக்கத் தலைப்படுவது நல்ல சமிக்ஞையே!

இடதுசாரிகள் மற்றும் சில கட்சிகள்,பிக்குமார்... இந்தியா எதிர்ப்பு,தமிழ்மக்கள் எதிர்ப்பு என்ற போர்வையில் ஆட்சியை கைப்பற்ற முயற்சி எடுப்பார்கள்...பொன்சேக்கா முக்கிய பங்கு வகிக்க வாய்புள்ளது இராணுவம் இவருக்கு கை கொடுக்க வாய்ப்பு உண்டு

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

இடதுசாரிகள் மற்றும் சில கட்சிகள்,பிக்குமார்... இந்தியா எதிர்ப்பு,தமிழ்மக்கள் எதிர்ப்பு என்ற போர்வையில் ஆட்சியை கைப்பற்ற முயற்சி எடுப்பார்கள்...பொன்சேக்கா முக்கிய பங்கு வகிக்க வாய்புள்ளது இராணுவம் இவருக்கு கை கொடுக்க வாய்ப்பு உண்டு

சிறிமாவுக்கு நடந்தது போல சிறிலங்கா  குடியுரிமையை இல்லாமல் இவர்களை நாடு கடத்த வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, putthan said:

சிறிலங்கா  குடியுரிமையை இல்லாமல் இவர்களை நாடு கடத்த வேண்டும் 

ரஷ்யாவுக்கு நாடுகடத்த வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

சிறிமாவுக்கு நடந்தது போல சிறிலங்கா  குடியுரிமையை இல்லாமல் இவர்களை நாடு கடத்த வேண்டும் 

பொருளாதார நெருக்கடியில் இதுவெல்லாம் நடக்கிறது. ஆனால் அந்தளவுக்கு தங்கள் கதாநாயகர்களை கொண்டு போகமாட்டாங்கள் என்று நினைக்கிறேன். றணிலைப்பாருங்கள்! எப்பிடியெல்லாம் ஆலோசனை கொடுத்து அவர்களை காப்பாற்ற பாடுபடுகிறார். ஏன் ஐ. நா. வில் அவர்ளுக்குரிய மின்சாரக் கதிரை தண்டனையை அதாவது அவர்கள் மேலுள்ள சர்வதேசத்தின் அழுத்தத்தை குறைத்ததே தான்தான் என்று சொன்னாரே. ஆனால் எனக்கு ஆசை இனவாதத்தை தூண்டுபவர்களை நாடு கடத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த @நிழலி  நிழலி  என்பவரை இந்த திரியில் ஒன்றும் எழுதாமல் அமசடக்கமாய்  இருக்கிறார் அன்று அவரும் நாங்களும் ............................................கோதாரி  எவன் எவன் யாழை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை பார்ப்பவர்களின் ip யை நாற்சந்தியில் போட்டால் நல்லது போல் உள்ளது இப்ப இருக்கும் ip டூல்கள் சூப்பராய் எந்த ஒபிஸ் என்று கூட காட்டுது .

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2022 at 18:45, ரஞ்சித் said:

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அங்கே நடந்தது நன்றாகவே தெரியும். ஆகவே, “அடிப்படைவாதிகள்” என்று முஸ்லீம்களை நோக்கி விரலை நீட்டும் கோத்தா - மகிந்த பருப்பு இனிமேல் வேகாது. குறிப்பாக, ஈஸ்ட்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது கோத்தாவே என்று சிங்களச் சனம் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கிற சந்தர்ப்பத்தில, உந்தப் பருப்பை இனி வேகவைக்க ஏலாது. அடி வேண்டிக்கொண்டுதான் போக வேணும்.

75 வருட அரசியல் ஏமாற்று என்று சொல்வதே பாரிய திருப்பம் தான். சிங்களசனம் அரசியல், மத அடிப்படையில் இருந்து விலகிச் சிந்திக்கத் தலைப்படுவது நல்ல சமிக்ஞையே!

சமுகவலைத்தளங்களில் கோத்தாவை தூசணத்தில் திட்டும் நிறைய சிங்கள மக்களை பார்த்தேன். ஏமாற்று வேலை இனி சரிவராது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nunavilan said:

சமுகவலைத்தளங்களில் கோத்தாவை தூசணத்தில் திட்டும் நிறைய சிங்கள மக்களை பார்த்தேன். ஏமாற்று வேலை இனி சரிவராது.

மண் கவ்வுவார் என்கிறீர்கள்! கேட்க சந்தோசமாக உள்ளது, சிங்கள மக்கள் உண்மையை உணர்ந்து கொண்டதில். விடிவு தூரமில்லை என நினைக்கிறன், நாங்கள் பட்டது போதும். ஊரில ஒரு பழமொழி சொல்வார்கள் "கலகம் பிறந்தாற்தான் நிஞாயம் பிறக்குமாம்." உண்மை போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2022 at 14:26, satan said:

சொன்னது ஒரு இளைஞன். இது ..... இது .... கேட்கத்தான்,  இந்த நன்னாளை காணத்தான் நான் ஆவலோடு காத்திருந்தேன். இது நாடு முழுவதும் தொடரவேண்டும். இந்தச் சந்தர்பபத்தை சாணக்கியன் சரியாக பயன்படுத்தவேண்டும். இனவாத அரசியலாளர்கள் தூக்கியெறியப்படவேண்டும். ஆரோக்கியமான இளைஞர் கையில் நாட்டை ஒப்படைக்க வேண்டும். அவர் சொன்னார் "நான் சஜீத்துக்காக போராட  இங்கு வரவில்லை, நாட்டில் நடந்த அக்கிரமங்களை முஸ்லிம்களையும், சிங்களவரையும் மோதவிட்டு சுகம் காணும் தந்திரத்தையும் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் தவறியும் தமிழருக்கு இழைத்த அனிஞாயங்களையோ, அதனாற்தான் நாடு இன்று வங்குரோத்து நிலையை அடைந்ததையோ குறிப்பிடவில்லை. ஆனால்  உண்மையை ஒத்துக்கொள்ளும்வரை இந்தப்போராட்டம் அணையாது!

போலீசை நோக்கி சொன்ன இளைஞனா? பிறகு போலீஸ் கொண்டுபோய் அடித்ததாகவும், அவர் hospital இல் கட்டுபோட்டு இருப்பதாகவும் படத்துடன் ஒரு செய்தி வந்தது, அது உண்மையா? 

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப்பார்த்ததும் அப்படித்தான் நினைக்கிறேன். பொறுங்கள்! யாராவது வந்து உறுதிப்படுத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
30 minutes ago, நீர்வேலியான் said:

போலீசை நோக்கி சொன்ன இளைஞனா? பிறகு போலீஸ் கொண்டுபோய் அடித்ததாகவும், அவர் hospital இல் கட்டுபோட்டு இருப்பதாகவும் படத்துடன் ஒரு செய்தி வந்தது, அது உண்மையா? 

13 minutes ago, satan said:

படத்தைப்பார்த்ததும் அப்படித்தான் நினைக்கிறேன். பொறுங்கள்! யாராவது வந்து உறுதிப்படுத்துவார்கள்.

வரும் படிமத்தை கவனமாக உண்ணோட்டமிடவும்(inspect). எமது ஈழம் வந்த இந்தியப்படை போன்று இருந்துவிடப்போகிறது!!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நன்னிச் சோழன் said:

வரும் படிமத்தை கவனமாக உண்ணோட்டமிடவும்(inspect). எமது ஈழம் வந்த இந்தியப்படை போன்று இருந்துவிடப்போகிறது!!

நன்றி சோழா!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நன்னிச் சோழன் said:

வரும் படிமத்தை கவனமாக உண்ணோட்டமிடவும்(inspect). எமது ஈழம் வந்த இந்தியப்படை போன்று இருந்துவிடப்போகிறது!!

உண்மையிலேயே நானும் இப்பிடி யோசித்துதான் கேட்டேன். எதை நம்புவது என்று தெரியவில்லை. இதை எங்கே பார்த்தேன் என்று சரியாக ஞாபகமில்லை, தமிழ் நியூஸ் ஆக இருக்கலாம், எமது ஊடகங்களின் தரம் சிரிப்பாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ சிறியர் வந்து உறுதிப்படுத்த மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? நான் அப்படி நினைக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அப்போ சிறியர் வந்து உறுதிப்படுத்த மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? நான் அப்படி நினைக்கவில்லை.

சாத்தான்…. நம்மை, கோத்து விடப் பார்க்கிறார். 😁 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்+
11 hours ago, satan said:

நன்றி சோழா!

🙏🙏

11 hours ago, நீர்வேலியான் said:

உண்மையிலேயே நானும் இப்பிடி யோசித்துதான் கேட்டேன். எதை நம்புவது என்று தெரியவில்லை. இதை எங்கே பார்த்தேன் என்று சரியாக ஞாபகமில்லை, தமிழ் நியூஸ் ஆக இருக்கலாம், எமது ஊடகங்களின் தரம் சிரிப்பாக உள்ளது

உண்மை, அவற்றின் 'கள்ளக் கரண்ட் கம்பி'யை வெட்டியை பெருமை சிறியரையே சாரும்.🤣🤣

நமது தமிழ்ப் பரப்பு ஊடகங்களில், இந்தியா + சிறிலங்கா + தமிழீழம், பெரும்பாலானவை வெட்டி ஒட்டுபவையே. சிலது எங்கேனும் இருந்து திருடி அதன் சொற்களில் மாற்றங்கள் செய்து அப்படியே தமது என்று போடுபவை. மேலும் வற்றில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மை என்பது எப்பொழுதும் கேள்விக்குறியே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.