Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Indian Air Force aircraft on a mission to rescue Indians || இந்தியர்களை  மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானம்..!!

இலங்கை - இந்திய இராணுவ யுத்த பயிற்சி நாளை ஆரம்பம் - Redeemer News

கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று,  இந்திய இராணுவ விமானம். 

நேற்று... நள்ளிரவு, ஸ்ரீலங்காவில்  ஏற்பட்ட 
அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா...
அதன்  நட்பு நாடான... இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில்.... 

டெல்லி.. இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 
180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்...
பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து..  215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்,
தமிழ்நாடு, தாம்பரம்  இந்திய இராணுவத் தளத்திலிருந்து.... 
மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த....  200  இராணுவ வீரர்களும், 
முதல் கட்டமாக... கொழும்பு கட்டுநாயக்கா... 
விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள்.

இன்று இரவும்... மீண்டும் வன்முறை பெரிய அளவில், 
தலை தூக்கும்  என கருதப் படுவதால்...
இலங்கையின் வேண்டு கோளுக்கு இணங்க... 
இவ் அவசர உதவி செய்யப் பட்டதாக  டெல்லியில் இருந்து தெரிவிக்கப் படுகின்றது.

அத்துடன்... இன்று மாலை,  இந்திய போர் கப்பலான... "விக்ரமாதித்யா", 
4500 இராணுவ வீரர்களை ஏற்றிக்  கொண்டு... 
கொழும்பு துறை முகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக,
இந்திய தூதரகத்தை சேர்ந்த, அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

ஒரே நாளில்.... ஆறாயிரம்  இந்திய இராணுவம், இலங்கைக்கு வந்துள்ளதை...
இலங்கையின்.. இறையாண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று,
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள்...  
மிகுந்த கண்டனத்தை அரசுக்கு தெரிவித்ததுடன்,
கோத்தபாயாவை.... உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

விரைவில்..  மேலதிக செய்திகளுக்கு... எம்முடன் இணைந்திருங்கள்... 

https:// Suya Aakkam .COM

  • Replies 135
  • Views 11.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஏப்பிரல்  முதலாம் திகதிக்காக... நேற்று பதிந்த இந்தத் தலைப்பை, 24 மணித்தியாலத்தில் 2000 பார்வையாளர்கள், யாழ்.களத்தில் மட்டும் பார்த்துள்ளார்கள். 👍 அது மட்டும் இல்லாது...  லங்கா ஸ்ரீ,   தமிழ் நிய

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    என்னுடைய பதிவையும்... திருடுகின்றார்கள் என்று சந்தோசப் படுவோம். 😁

  • கிருபன்
    கிருபன்

    தமிழ் சிறி ஐயாவுக்கு “ஊடகப் பேரொளி” எனும் சிறப்புப்பட்டம் கொடுக்கப் பிரேரிக்கின்றேன். ஓடோடி வந்து பெரிய பந்தியில் ஆராய்வு விளக்கம் கொடுத்த சாத்தானுக்கும் “மெய்மை விளம்பி” என்ற பட்டம் கொடுக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணையை மேற்பார்வை செய்ய, அல்லது நல்லெண்ண செயற்படுகளை கண்காணிக்க ஓரிருவர் வந்தாலே நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முக்கினவை, அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களும் அறிக்கைகளும் விட்டவை, இந்தியா தமிழருக்கு ஈழம் பெற்றுக்கொடுத்துவிடும் என்று அப்பாவி சிங்களவர் பயப்படுகிறார்கள் என்று  இங்க கூட சிலர் மூக்காலை அழுதவை. இப்ப என்னடாவென்றால் ஒரு இரவில் ஆறாயிரம் இராணுவம், இன்னும் போர்க்கப்பல்கள் விரைந்து வந்துகொண்டிருக்காம். நாட்டில் என்ன நடக்கிறது? தங்கள் பிழைகளை மறைக்க உடனே போரை ஆரம்பிக்கிறது. சிங்கள மக்கள் உணரும் காலமிது. இந்த நன்னாளுக்காவே நான் காத்திருந்தேன், இவ்வளவு விரைவாக வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை. இனவாதம் பேசி வாக்கு கேட்ப்பவர்களை செருப்பாலடித்து வீட்டுக்கனுப்பவேண்டும்! தங்கள் சுகபோகத்துக்காக மக்களை ஏமாற்றி, உசுப்பேற்றி வாக்கு வாங்கி, கதிரை ஏறிய பின் அந்த மக்களை நடுவீதியில் அலையவிட்டு, அதை அடக்குவதற்கு அயல்நாட்டு இராணுவம் வருவிப்பு. இந்த முட்டாளுகள் கூப்பிட்ட உடனே அவையும் தாரை தம்பட்டையோடே வருகினமாம்,  எல்லாம் பழக்கதோஷம். அந்த முட்டாளுக்கு அறிவு வேண்டாம்? சர்வதேசமே விடுதலைப்புலிகளை உங்களால் அழிக்க முடியாது என்று  சொன்னபோதும் எமது இராணுவம் அவர்களை  இலகுவாக வெற்றிகண்டார்கள் என்று வருடாவருடம் விழா எடுத்து கொண்டாட, சொந்த இன மக்களை அடக்க ஏன் எங்களை அழைக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம்? தன் இராணுவத்தையும், தன்னையும் பாதுகாத்து இந்தியாவை சிங்கள இனவாதப்போரில் மாட்டிவிட்டு தான் தப்பும் நோக்கமாக இருக்கலாம், இந்தியா தானாக வராமல்  இதே சாட்டோடு இங்கு வந்து குந்துற நோக்கமாக இருக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். ஆனால் சேர்ந்து அழித்தவர்கள் சேர்ந்தே அனுபவிக்கவும் வேண்டும் என்று விதி நினைத்ததோ யார் கண்டா? முள்ளிவாய்க்கால் போரில் என்ன நடந்திருக்கும் என்று சிங்கள மக்களும் உணரவேண்டும், தமது அரசின், இராணுவத்தின் யோக்கியதை தெரிய வேண்டும். வாக்கு போட்ட எங்களை அடக்க அயல் நாட்டு இராணுவத்தை அழைக்கும் இவர்கள், பாதைகளை அடைத்து எங்களை எப்படி சித்திரவதை செய்துஇருக்கும் என்பதை யோசித்து பார்க்கட்டும். சணல் நான்கின் படம் இருந்தால் சிங்களவரின் முகநூலில் இணைத்து விடுங்கள் பார்த்து உணரட்டும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, satan said:

இப்போ... வந்து இறங்கிய, இந்திய  இராணுவம்
ஸ்ரீலங்காவில் நிரந்தரமாக தங்கினால்... என்ன செய்வது?

ஈழப் போராட்டத்தின் போது..   முன்பு அமைதிப் படை என்று வந்த.. 
இந்திய இராணுவத்தை.. அடித்து, திரத்த.... புலிகள் இருந்தார்கள்.

ஆனால் இப்போ... அவர்களை, திருப்பி அனுப்ப... 
ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு அவ்வளவு கெட்டித்தனம் இல்லை.  

சீன... இராணுவத்தை கூப்பிடவும்,
ஸ்ரீலங்கா தயங்காது என்று நினைக்கின்றேன்.

ஆனால்... இந்தியாவிடம் கெஞ்சி கூத்தாடி... 
கைநீட்டி  வாங்கின கடனுக்காக,
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்....
ஸ்ரீலங்கா மனதிற்குள்.. புழுங்கிக் கொண்டு இருக்கப் போகுதா...
என்பதை, வருகின்ற காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுமட்டும்... சிங்கள கடும் போக்காளர்களும், பிக்குகளும்..
இந்தியாவின் பிரசன்னத்தை...  எவ்வளவு நாள்  
சகித்துக் கொண்டு இருப்பார்கள் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால் இப்போ... அவர்களை, திருப்பி அனுப்ப... 
ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு அவ்வளவு கெட்டித்தனம் இல்லை.  

அவர்களின் கையாலாகாத்தனத்தினாலேயே இவர்கள் வரவழைக்கப்பட்டார்கள் இனி இந்திய இராணுவம்; புலிகளை அழிக்க முடியாது என்று எல்லோரும்  நம்பிய போது அவர்களை அடக்கிய இலங்கை இராணுவத்தை நாங்கள் அடக்கினோம் என்று தங்களை புகழ்ந்து  கொள்வார்கள். சீனனை தடுக்க இதுதான் தருணம் என்று இந்தியா போர் இல்லாமல் வந்து புகுந்து கொண்டது. சிங்கள மக்கள் வருந்தி வினையை வேண்டினார்கள், வந்த வினையோ வலிய வேதனையை வருவித்துக்கொண்டது.

12 minutes ago, தமிழ் சிறி said:

சீன... இராணுவத்தை கூப்பிடவும்,
ஸ்ரீலங்கா தயங்காது என்று நினைக்கின்றேன்.

நல்லது! பங்காளிகள் அடிபட்டு சாக, இலங்கை கடன் கொடுக்க வேண்டுமேயென்று முழிக்கத் தேவையில்லை. இலங்கை ஒரு கல்லில் பல மாங்காய்கள் என்கிற திட்டத்தோடதான் இந்திய இராணுவத்தை அழைத்திருக்கு. கதையோட கதை, பஷிலின் மகள் இந்திய றோ தலைவரின் மகனைத்தான் திருமணம் செய்துள்ளாராமே! கேள்விப்பட்டனீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வருகிற இந்திக்கார இந்திய ராணுவத்துக்கு சிங்களவன் யார், தமிழன்யார் என்று தெரியாமல் குழம்பி பழக்க தோஷத்தில  அவங்களை தெருவில கிடத்திப்போட்டு டாங்கியை ஏத்திக்கொண்டு போகப்போறாங்கள்.......வேலியால போன ஓணானை வேட்டிக்குள்ள புடிச்சு விட்டாச்சு.....  மக்களே கவனம்......!   🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

அவர்களின் கையாலாகாத்தனத்தினாலேயே இவர்கள் வரவழைக்கப்பட்டார்கள் இனி இந்திய இராணுவம்; புலிகளை அழிக்க முடியாது என்று எல்லோரும்  நம்பிய போது அவர்களை அடக்கிய இலங்கை இராணுவத்தை நாங்கள் அடக்கினோம் என்று தங்களை புகழ்ந்து  கொள்வார்கள். சீனனை தடுக்க இதுதான் தருணம் என்று இந்தியா போர் இல்லாமல் வந்து புகுந்து கொண்டது. சிங்கள மக்கள் வருந்தி வினையை வேண்டினார்கள், வந்த வினையோ வலிய வேதனையை வருவித்துக்கொண்டது.

நல்லது! பங்காளிகள் அடிபட்டு சாக, இலங்கை கடன் கொடுக்க வேண்டுமேயென்று முழிக்கத் தேவையில்லை. இலங்கை ஒரு கல்லில் பல மாங்காய்கள் என்கிற திட்டத்தோடதான் இந்திய இராணுவத்தை அழைத்திருக்கு. கதையோட கதை, பஷிலின் மகள் இந்திய றோ தலைவரின் மகனைத்தான் திருமணம் செய்துள்ளாராமே! கேள்விப்பட்டனீங்களோ?

இந்தியா... ஓடி, ஓடி.... கடன் கொடுக்கும் போதே...
சோழியன் குடும்பி, சும்மா ஆடாது என்று நினைத்தனான்.

இந்தியா... குடுத்த 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும்...
மொத்தமாக ஸ்ரீலங்காவை, எடுக்கப் போகிறார்கள் போலுள்ளது.

சீனாக்காரன்... அம்பாந்தோட்டை  துறை முகத்திலும்,
கொழும்பு கிழக்கு முனைய துறைமுகத்திலும்... 
மீன் பிடித்து விற்று... குடுத்த கடனை, கழிக்க வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்பிரல் 1 என்பதற்காக இப்படிப் பீதியைக்கிளப்பி விடுகிறீங்களே ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

இல்லையென்றால்; உள்நாட்டு கலவரத்தையடக்க கூட்டம் கூட்டமாக இராணுவ விமானங்களும், பெருந்தொகை இராணுவமும் கூப்பிட்டவுடன் கேட்டுகேள்வியில்லாமல் வந்து இறங்குவினமே? அவையும் ஆயத்தமாகத்தான் சந்தர்பத்துக்காய் காத்திருந்திருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திக்கிடைத்த செய்தி— மூண்டு விமானத்தில ஒண்டு அம்பாந்தோட்டையில் இருந்து சீனக்காரன் அடிச்ச ஏவுகணையில தரை இறங்க முன்னமே விழுந்து நொருங்கிப்போச்சு..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

இப்ப வருகிற இந்திக்கார இந்திய ராணுவத்துக்கு சிங்களவன் யார், தமிழன்யார் என்று தெரியாமல் குழம்பி பழக்க தோஷத்தில  அவங்களை தெருவில கிடத்திப்போட்டு டாங்கியை ஏத்திக்கொண்டு போகப்போறாங்கள்.......வேலியால போன ஓணானை வேட்டிக்குள்ள புடிச்சு விட்டாச்சு.....  மக்களே கவனம்......!   🤔

வந்த ஆமியிலை... தமிழ்நாடு,   இந்திய இராணுவத் தளத்திலிருந்து.... 
மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்தவர்களும் இருப்பதால்...
தமிழனை அவர்கள் கண்டு பிடிப்பார்கள் என நினைக்கின்றேன்.

ஆனாலும் அதிக... வட இந்திய இராணுவம் என்ற படியால்,
சிங்களவனுக்கும், தமிழனுக்கும் கஸ்ர காலம்தான்.

தொப்பி... போட்ட, சோனகன்... தப்பி விடுவான். 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை முடக்குங்கள் - மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் ஜனாதிபதியிடம்  கோரிக்கை - ஐபிசி தமிழ்

அஸ்கிரிய பீடாதிபதியை... அவசரமாக  சந்தித்த, ஜனாதிபதி கோத்தபாயா.

கோத்தபாயா... அவசரமாக, அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து,
நாட்டை இக்கட்டான  நிலைமையில் இருந்து, மீட்க...
தனக்கு உடனடி தெரிவாக... வேறு எதுவும் இருக்கவில்லை என்றும்,
இது, தான்... தனித்து, எடுத்த முடிவு அல்ல,
ஜனாதிபதி ஆலோசர்களின்... ஒட்டு மொத்த தீர்மானத்தின் படியே,
இந்திய இராணுவத்தின் உதவியை நாடியதாகவும், பீடாதிபதியிடம் தெரிவித்தார்.

அதனை கேட்டுக் கொண்ட... அஸ்கிரிய பீடாதிபதி,
ஒரு மாதத்துக்கு மேல்... இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் 
தங்கி இருக்க அனுமதிக்கக் கூடாது, என்ற வாக்குறுதியை....
கோத்தபாயா எழுத்தில், தர வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைய...
உடனே... ஜனாதிபதி அதனை எழுதி, அஸ்கிரிய பீடாதிபதியிடம்  கொடுக்க...
அவரும்,  அரை மனதுடன்  சம்மதித்தாக தெரிய வருகின்றது.

https:// Suya Aakkam .COM

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

வடா இந்திய இராணுவம் என்ற படியால்,
சிங்களவனுக்கும், தமிழனுக்கும் கஸ்ரகாலம்தான்.

ராஜீவ் காந்திக்கு பிடரியில போட்ட கோபத்தையும் வைத்து சாத்துவான்.

16 minutes ago, தமிழ் சிறி said:

உடனே... ஜனாதிபதி அதனை எழுதி, அஸ்கிரிய பீடாதிபதியிடம்  கொடுக்க...
அவரும்,  அரை மனதுடன்  சம்மதித்தாக தெரிய வருகின்றது.

இந்தியா, இலங்கை பட்ட கடன் பத்திரத்தை நீட்ட கோத்தா எந்தப்பக்கம் போவார்? இப்ப பிக்குகளும் சேர்ந்து சாத்தப்போகுதுகள். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  சரத் வீர சேகரவும்  சேர்ந்து திட்டுறார். நான் சொல்லேல .... ராஜபக்சாக்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். அவர்களை தலைமேல் ஏற்றி கொண்டாடி தலைகால் தெரியாமல் ஆடவைத்த கூட்டம், கலைத்து கலைத்து தாக்குது. அந்த முட்டாளுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மோசமான நிலைக்கு இலங்கை செல்கிறது, ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை திவாலாகும் என நிதி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக ஆண்டின் ஆரம்பத்திலேயே யாழில் குறிப்பிடப்பட்டது, ஆனாலும் இலங்கையை வெளிநாடுகள் கைவிடாது என ஒரு கருத்து நிலவுவதனால் புலம்பெயர் தமிழர் அதிக கவனம் செலுத்தாத நிலை காணப்படுகிறது, இது ஒரு ஆபத்தானது இலங்கை திவாலாவதுதான்  வெளிநாட்டிற்கு அனுகூலம் அதனால்தான் தற்காலிக கடன் என்ற பெயரில் உலகை ஏமாற்றுகிறார்கள்.

உண்மையான அக்கறை இருந்தால் இலங்கைக்கு கடனல்லாமல் மானியமாக காசு வழங்கவேண்டும். 

இது பெரும்பான்மை மக்கள் மட்டுமல்ல சிறுபான்மை மக்களும் பாதிப்படையும் பிரச்சினை, அத்தியாவசிய உணவுப்பொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு வரப்போகிறது.

கடந்த 6 மாதத்தில் பணவீக்கம் இரட்டிப்பாகியுள்ளது அதுவும் அரசின் புள்ளிவிபரமே அதை குறிப்பிடுகிறது.

இலங்கை மீட்டெடுக்கும் நிலைமையைக்கடந்து விட்டது, இலங்கையின் இறையாண்மை என்பதே இனிமேல் இருக்காது.

பல அரசியல் தலைவர்கள் இலங்கையை விட்டு இரவோடிர்வாக தலை மறைவாகும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நடுப்பகுதியளவில் இலங்கையில் இவ்வாறு ஒரு பிரச்சினை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பது புரியாமல் இருந்தபோதே யாழில் இலங்கை பொருளாதாரப்பிரச்சினை பேசப்பட்ட போது, இலங்கையிலிருந்த கள உறவுகள் கூட எதிர்வாதம் செய்த நிலை காணப்பட்டது.

இலங்கை இன்று உள்ள நிலை வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை, இலங்கை தனது நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிற்து என்பது ஏனோ பலருக்கு புரியவில்லை, இதனால் ஏற்படும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள புலம்பெயர் தமிழர் இன்னும் தாயாராகவில்லை, இது ஆபத்தான விளைவை உருவாக்கப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் சில மட்டங்களில் சிறிலங்காவை தங்களின் ஒரு மாநிலமாக கொண்டுவரும் எண்ணங்கள் அடிபடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, vasee said:

அத்தியாவசிய உணவுப்பொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு வரப்போகிறது.

வந்தே விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

ஏப்பிரல் 1 என்பதற்காக இப்படிப் பீதியைக்கிளப்பி விடுகிறீங்களே ஐயா!

நானும் அப்படித்தான் நினைச்சேன்😂

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் ஏப்ரல் முதலாம் திகதியை இனி யாழ் கள கருத்தாளர்கள் தினமாக கொண்டாடலாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

Indian Air Force aircraft on a mission to rescue Indians || இந்தியர்களை  மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானம்..!!

இலங்கை - இந்திய இராணுவ யுத்த பயிற்சி நாளை ஆரம்பம் - Redeemer News

கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று,  இந்திய இராணுவ விமானம். 

நேற்று... நள்ளிரவு, ஸ்ரீலங்காவில்  ஏற்பட்ட 
அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா...
அதன்  நட்பு நாடான... இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில்.... 

டெல்லி.. இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 
180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்...
பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து..  215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்,
தமிழ்நாடு, தாம்பரம்  இந்திய இராணுவத் தளத்திலிருந்து.... 
மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த....  200  இராணுவ வீரர்களும், 
முதல் கட்டமாக... கொழும்பு கட்டுநாயக்கா... 
விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள்.

இன்று இரவும்... மீண்டும் வன்முறை பெரிய அளவில், 
தலை தூக்கும்  என கருதப் படுவதால்...
இலங்கையின் வேண்டு கோளுக்கு இணங்க... 
இவ் அவசர உதவி செய்யப் பட்டதாக  டெல்லியில் இருந்து தெரிவிக்கப் படுகின்றது.

அத்துடன்... இன்று மாலை,  இந்திய போர் கப்பலான... "விக்ரமாதித்யா", 
4500 இராணுவ வீரர்களை ஏற்றிக்  கொண்டு... 
கொழும்பு துறை முகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக,
இந்திய தூதரகத்தை சேர்ந்த, அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

ஒரே நாளில்.... ஆறாயிரம்  இந்திய இராணுவம், இலங்கைக்கு வந்துள்ளதை...
இலங்கையின்.. இறையாண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று,
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள்...  
மிகுந்த கண்டனத்தை அரசுக்கு தெரிவித்ததுடன்,
கோத்தபாயாவை.... உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

விரைவில்..  மேலதிக செய்திகளுக்கு... எம்முடன் இணைந்திருங்கள்... 

https:// Suya Aakkam .COM

தமிழ் சிறி இது நீங்கள் எழுதிய கற்பனை செய்தியா? ஏனென்றால் நீங்கள் சுய ஆக்கம் என போட்டிருக்கிறியள்.  

கனடாவில் இருந்து சிரியாவுக்கு விமானம் ஓடிய தமிழன் கதை போல நீங்களும் சுய ஆக்கம் படைச்சியளோ? 😂

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

நடைபெறப்போவதை எதிர்வு கூறியிருப்பினும் ஆரம்பத்தில் நானும் ஏமாந்துபோனேன். 

👍

பிந்திக் கிடைத்த தகவல்களின் படி பாரதப் பிரதமர் மோடியும் அதி உயர்ரக போர் விமானம் ஒன்றை தானே செலுத்தியபடி இலங்கை விரைகின்றார். இலங்கைக்கு உடனடியாக உதவுவதில் தன்னுடன் இணையுமாறு ராகுலை அவர் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இலங்கையில் திராவிட மாடலை அமுல்படுத்தினால் எல்லாப் பிரச்சனைகளும் தீரும் என்று தமிழ் நாட்டு முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

கனடாவில் இருந்து லிபியாவுக்கு விமானம் ஓடிய தமிழன் கதை போல நீங்களும் சுய ஆக்கம் படைச்சியளோ? 😂

  சாந்தி…. கனடாவில்  இருந்து லிபியாவுக்கு, விமானம் ஓடின தமிழன் கதையை… எமக்கும் சொல்லுங்களேன். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

. கதையோட கதை, பஷிலின் மகள் இந்திய றோ தலைவரின் மகனைத்தான் திருமணம் செய்துள்ளாராமே! கேள்விப்பட்டனீங்களோ?

பசிலின் மகள்…இந்திய றோ தலைவரின் மகனை திருமணம் முடித்தததை பற்றி கேள்விப் படவில்லையே…
இது…எப்போ நடந்த திருமணம்?
முன்பு ஈழப் போர் நடந்த போது…. ஐ.நா. செயலாளராக இருந்த பான் கி மூனின் மகளை
அப்போது இந்திய வெளியுறவு செயலாராக இருந்த நம்பியாரின் மகன் திருமணம் செய்ததாக அறிந்தேன்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு கதைக்கப் போய்…
சம்பந்த சம்பந்தம் இல்லாமல் கலியாணம் கட்டுகிறார்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

  சாந்தி…. கனடாவில்  இருந்து லிபியாவுக்கு, விமானம் ஓடின தமிழன் கதையை… எமக்கும் சொல்லுங்களேன். 😁

சாமீ சிரியா மாறி விழுந்திட்டுது திருத்தம் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஐயா. 🤭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, shanthy said:

சாமீ சிரியா மாறி விழுந்திட்டுது திருத்தம் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஐயா. 🤭

இந்த நகைச்சுவையை… முன்பு வாசித்த நினைவு சாதுவாக உள்ளது. 
உங்களால் முடியுமானால் இணைத்து விடுங்கள். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று,  இந்திய இராணுவ விமானம். 

நேற்று... நள்ளிரவு, ஸ்ரீலங்காவில்  ஏற்பட்ட 
அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா...
அதன்  நட்பு நாடான... இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில்.... 

 சார்!  இறங்கின இந்திய இராணுவ விமானம் எத்தினை நாளுக்கு நிக்கும் ? 😷

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.