Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நன்னிச் சோழன் said:

இந்தச் செய்தியை உறுதிப்படுத்தி லங்கா சிறியே வெளியிட்டுவிட்டது. ஜேவிபிலையும் வந்துள்ளது... 

கடவுளே, ஆண்டவா

https://jvpnews.com/article/colombo-cames-india-military-aircraft-gotabaya-1648835513

நன்னிச் சோழன்….. லங்கா ஶ்ரீ இணைப்பையும், இங்கே பதியுங்கள்.
வேறு இணையங்களில்… இந்த செய்தி வந்திருந்ததை கண்டால்,
உடனே… கொப்பி எடுத்து, இங்கே பதிந்து விடுங்கள். 😁
 
37 minutes ago, பெருமாள் said:

தமிழ் சமூக  ஊடகங்களில் உள்ள அரைகுறையள் வெடிப்புளுகு ஆய்வாளர்கள் மற்றையவரின் செய்தியை திருடி தங்களின் செய்தி போல் போடும் கள்வர்கள் சகலரும் இன்று சிறியன்னாவின் மிசேல் தாக்குதலில் சின்னாபின்னமாகி உள்ளனர் சில தளம்கள் செய்தியை போட்டுவிட்டு உண்மையை தேட பொய் என்றவுடன் அவசர அவசரமாய் தூக்கினவையல் அப்பதான் தெரியுது முழு கூட்டமும் யாழை பார்க்கினம் என்ற விடயம் .

 வாழ்த்துக்கள் தமிழ் சிறியண்ணாவுக்கு .

பெருமாள்… வேறு இணையங்களில், இந்த செய்தி வந்து இருந்ததை கண்டால்,
இங்கு பதிந்து விடுங்கள். எத்தனை இணையங்கள் ஏமாந்து இருக்கு என்று பார்க்க ஆசையாக உள்ளது. 😁

  • Replies 135
  • Views 11.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஏப்பிரல்  முதலாம் திகதிக்காக... நேற்று பதிந்த இந்தத் தலைப்பை, 24 மணித்தியாலத்தில் 2000 பார்வையாளர்கள், யாழ்.களத்தில் மட்டும் பார்த்துள்ளார்கள். 👍 அது மட்டும் இல்லாது...  லங்கா ஸ்ரீ,   தமிழ் நிய

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    என்னுடைய பதிவையும்... திருடுகின்றார்கள் என்று சந்தோசப் படுவோம். 😁

  • கிருபன்
    கிருபன்

    தமிழ் சிறி ஐயாவுக்கு “ஊடகப் பேரொளி” எனும் சிறப்புப்பட்டம் கொடுக்கப் பிரேரிக்கின்றேன். ஓடோடி வந்து பெரிய பந்தியில் ஆராய்வு விளக்கம் கொடுத்த சாத்தானுக்கும் “மெய்மை விளம்பி” என்ற பட்டம் கொடுக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்+
31 minutes ago, தமிழ் சிறி said:

நன்னிச் சோழன்….. லங்கா ஶ்ரீ இணைப்பையும், இங்கே பதியுங்கள்.
வேறு இணையங்களில்… இந்த செய்தி வந்திருந்ததை கண்டால்,
உடனே… கொப்பி எடுத்து, இங்கே பதிந்து விடுங்கள். 😁

சிறி ஐயனே, உதெல்லாம் பொய்ச் செய்தி என்டு பொய் சொல்லாதீங்கோ. இது உண்மை. உண்மையிலேயெ நடந்திருக்கு. தயவு செய்து பொய்யென்று யாரும் கூறாதீர்கள்.😡😡

எம் தீவில் இந்தியர் இறங்கிவிட்டார்கள்

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+
  • புதிய தகவல்: 

விக்கிரமாதித்யா கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

ஶ்ரீலங்கா இராணுவ வீரர்களின் இசை வாத்திய முழக்கத்துடன்…. பசில் ராஜபக்ச அவர்களை வரவேற்றார்

இந்திய இராணுவ வீரர்களை பசில் ராசபக்ச வரவேற்கும் காட்சி:

sri-lankas-senior-presidential-advisor-basil-rajapakse-talks-to-picture-id1183593461?s=2048x2048

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நன்னிச் சோழன் said:
  • புதிய தகவல்: 

விக்கிரமாதித்யா கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

ஶ்ரீலங்கா இராணுவ வீரர்களின் இசை வாத்திய முழக்கத்துடன்…. பசில் ராஜபக்ச அவர்களை வரவேற்றார்

இந்திய இராணுவ வீரர்களை பசில் ராசபக்ச வரவேற்கும் காட்சி:

sri-lankas-senior-presidential-advisor-basil-rajapakse-talks-to-picture-id1183593461?s=2048x2048

முகக்  கவசம் 😷 அணியாமல்... கைக்கு கவசம் 🤜🤛 இல்லாமல்... 
ஆர்வ மிகுதியிலும், சந்தோசத்திலும்...   கை குலுக்கி வரவேற்கிறார்கள்.
கொரோனா... தொற்றினால் தெரியும்,
எல்லாரும்... கூண்டோடை, கயிலாயாம்தான்.  😮

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3-வது விமானம் தாங்கி போர்க்கப்பலை களமிறக்க இந்தியா முடிவு... பங்காளிகளுக்கு  புது ஆப்பு! - Tamil DriveSpark

இந்தக் கப்பலில்தான்... 4500 இந்திய  இராணுவ வீரர்கள், வந்தவர்கள்.
அவர்களை துறைமுகத்தில் இறக்க முதல், 
கப்பல் நடுக்கடலில் தரித்து நின்ற போது எடுத்த படம்.

இந்தியா டூ யாழ்ப்பாணம்: மீண்டும் விமான சேவை - விரிவான தகவல்கள் - BBC News  தமிழ்

பலாலிக்கு விமானம் அடுத்த மாத நடுப்பகுதியில்? - www.pathivu.com

நாளை.... இரண்டு இந்திய  இராணுவ  விமானம், 
பலாலி விமான நிலையத்தில்  தரை இறங்க இருப்பதாக...
இந்திய தூதரக அதிகாரி தெரிவித்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியாக பதவிப்பிரமாணம் செய்ய வருவதற்காகத்தான் மோடி இலங்கை விஜஜத்தை பின்போட்டாரோ? நாடே நாறப்போகுது! 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

தமிழ் சிறி ஐயாவுக்கு “ஊடகப் பேரொளி” எனும் சிறப்புப்பட்டம் கொடுக்கப் பிரேரிக்கின்றேன். ஓடோடி வந்து பெரிய பந்தியில் ஆராய்வு விளக்கம் கொடுத்த சாத்தானுக்கும் “மெய்மை விளம்பி” என்ற பட்டம் கொடுக்கலாம்!

நன்றி சார் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஐயா! யான் தவறொன்றும் இழைத்திலேன், சொன்னவர் மேல் அதீத நம்பிக்கை கொண்டவன் நான். அதிலும் இன்றைய நாட்டின் நிலை கருதியும் அதனால் இந்த முட்டாள்கள் தினம் நினைவுக்கு வரவில்லை, எதிர்காலத்தில் இந்நாளை சிறியர் நினைவாக வைத்திருப்பேன். சிரிப்பேன், பகிர்வேன்.

7 hours ago, தமிழ் சிறி said:

பசிலின் மகள்…இந்திய றோ தலைவரின் மகனை திருமணம் முடித்தததை பற்றி கேள்விப் படவில்லையே

மகன் பிரித்தானிய பிரஜையை செய்துள்ளாராம், இவரோ அமெரிக்க பிரஜை! இவர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு நாட்டுப்பற்று பற்றி  இப்போ புலம்பி என்ன பலன்? அரசியல் வங்குரோத்து ஆகிவிடும் என்பதால் இரகசியமாக செய்கிறார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

தமிழ் சிறி ஐயாவுக்கு “ஊடகப் பேரொளி” எனும் சிறப்புப்பட்டம் கொடுக்கப் பிரேரிக்கின்றேன். ஓடோடி வந்து பெரிய பந்தியில் ஆராய்வு விளக்கம் கொடுத்த சாத்தானுக்கும் “மெய்மை விளம்பி” என்ற பட்டம் கொடுக்கலாம்!

அதை அப்படியே கொண்டினியூ பண்ணிய விதம் இருக்கே… இராஜதந்திரத்தில் ஹென்றி கீசிஞ்சர் பிச்சை வாங்கணும் நம்ம  சாத்ஸ் கிட்ட🤣.

ஊடக பேரிடி என்பது பொருத்தம் கூட அல்லவா?

2 hours ago, நன்னிச் சோழன் said:

சிறி ஐயனே, உதெல்லாம் பொய்ச் செய்தி என்டு பொய் சொல்லாதீங்கோ. இது உண்மை. உண்மையிலேயெ நடந்திருக்கு. தயவு செய்து பொய்யென்று யாரும் கூறாதீர்கள்.😡😡

எம் தீவில் இந்தியர் இறங்கிவிட்டார்கள்

தம்பி 1ம் திகதி மதியம் பன்னிரெண்டு மணியோட விசயத்தை விட்டுடோணும். இதென்ன 2ம் திகதி தாண்டி இழுக்கிறியள்🤣

  • கருத்துக்கள உறவுகள்+
31 minutes ago, goshan_che said:

தம்பி 1ம் திகதி மதியம் பன்னிரெண்டு மணியோட விசயத்தை விட்டுடோணும். இதென்ன 2ம் திகதி தாண்டி இழுக்கிறியள்🤣

கொஞ்சம் ஆர்வக் கோளாறு பாருங்கோ😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நன்னிச் சோழன் said:

கொஞ்சம் ஆர்வக் கோளாறு பாருங்கோ😁

🤣 ஆனால் உண்மையிலே வர்தமானி அறிவுப்பிற்கு பின் நாடெங்கும் இரவோடிரவாக இராணுவம் நிறுத்த படுகிறதாம். வட கிழக்கில் இருந்து ஏனைய இடங்களுக்கு நகர்வதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, goshan_che said:

🤣 ஆனால் உண்மையிலே வர்தமானி அறிவுப்பிற்கு பின் நாடெங்கும் இரவோடிரவாக இராணுவம் நிறுத்த படுகிறதாம். வட கிழக்கில் இருந்து ஏனைய இடங்களுக்கு நகர்வதாக சொல்கிறார்கள்.

சிங்களப் படையினர் தங்கட மக்களில கைவைப்பினமா என்டது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் கடந்த கால வரலாற்றைப் பாக்கேக்கில கண்டிப்பா செய்வான் என்டே தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

அதை அப்படியே கொண்டினியூ பண்ணிய விதம் இருக்கே… இராஜதந்திரத்தில் ஹென்றி கீசிஞ்சர் பிச்சை வாங்கணும் நம்ம  சாத்ஸ் கிட்ட🤣.

ஊடக பேரிடி என்பது பொருத்தம் கூட அல்லவா?

தம்பி 1ம் திகதி மதியம் பன்னிரெண்டு மணியோட விசயத்தை விட்டுடோணும். இதென்ன 2ம் திகதி தாண்டி இழுக்கிறியள்🤣

அவ்வளவும் எனக்குள்ளே கனன்று கொண்டிருக்கும் வெறுப்புத்தீ, சின்ன பொறி பட்டாலே பற்றி எரியும் நிலையில், கையாலாகாத்தனம், நப்பாசை என்றுஞ் சொல்லலாம்.   

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

அவ்வளவும் எனக்குள்ளே கனன்று கொண்டிருக்கும் வெறுப்புத்தீ, சின்ன பொறி பட்டாலே பற்றி எரியும் நிலையில், கையாலாகாத்தனம், நப்பாசை என்றுஞ் சொல்லலாம்.   

பகிடியாதான் சாத்ஸ். உங்கள் உணர்வு புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

பேசாமல் ஏப்ரல் முதலாம் திகதியை இனி யாழ் கள கருத்தாளர்கள் தினமாக கொண்டாடலாம் 🤣

பாஸ் நீங்கள் தான் முக்கிய கருத்தாளர் ஸ்ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .😀

1 hour ago, goshan_che said:

தம்பி 1ம் திகதி மதியம் பன்னிரெண்டு மணியோட விசயத்தை விட்டுடோணும். இதென்ன 2ம் திகதி தாண்டி இழுக்கிறியள்🤣

அதுதான் வெள்ளிக்கிழமை ட்ரபிள் .😀

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

🤣 ஆனால் உண்மையிலே வர்தமானி அறிவுப்பிற்கு பின் நாடெங்கும் இரவோடிரவாக இராணுவம் நிறுத்த படுகிறதாம். வட கிழக்கில் இருந்து ஏனைய இடங்களுக்கு நகர்வதாக சொல்கிறார்கள்.

இப்பிடியாவது எங்கடத் தாகயத்தைப் பிடிச்ச சனி குறையட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள்… வேறு இணையங்களில், இந்த செய்தி வந்து இருந்ததை கண்டால்,
இங்கு பதிந்து விடுங்கள். எத்தனை இணையங்கள் ஏமாந்து இருக்கு என்று பார்க்க ஆசையாக உள்ளது. 😁

விண்ணும் பேஜும் இரண்டும் போட்டு ரிவெர்ஸ் பண்ணியவைகள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, goshan_che said:

பகிடியாதான் சாத்ஸ். உங்கள் உணர்வு புரிகிறது.

நீங்கள் சாத்ஸ் சாத்ஸ் எண்டு சொல்ல நான் எங்கையோ போய் நிக்கிறன்....🤣

  • கருத்துக்கள உறவுகள்+
6 hours ago, தமிழ் சிறி said:

நன்னிச் சோழன்….. லங்கா ஶ்ரீ இணைப்பையும், இங்கே பதியுங்கள்.
வேறு இணையங்களில்… இந்த செய்தி வந்திருந்ததை கண்டால்,
உடனே… கொப்பி எடுத்து, இங்கே பதிந்து விடுங்கள். 😁
 
பெருமாள்… வேறு இணையங்களில், இந்த செய்தி வந்து இருந்ததை கண்டால்,
இங்கு பதிந்து விடுங்கள். எத்தனை இணையங்கள் ஏமாந்து இருக்கு என்று பார்க்க ஆசையாக உள்ளது. 😁

thamiz.png

fsa.png

JVP:

jvp.png

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நன்னிச் சோழன் said:

நீங்கள் பம்பலுக்கு எழுதினது வேசுபுக் எல்லாம் போய் சிலர் போன் எடுத்துக்கூட விசாரிக்கின்றனர், மெய்யா என்டு!🤣🤣

இலங்கையில இருந்து குடும்ப நண்பர் போன் எடுத்து விசாரிக்கிறார்.🤣🤣

தவறான இந்த பதிவை நீக்கவும் ஒரு இறைமை உள்ள ஒரு நாட்டினை இது பரிகாசிப்பது போல உள்ளது , ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்றாலும் மிக நெருக்கடியான சூழ்நிலையில் நாம் இருக்கும் போது உங்கள் பதிவு எங்களை இலங்கையர்களை நோகடிப்பதாக உள்ளது,, நீக்கிவிட்டு தவறான செய்திக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் உங்கள் செயல் ஊடக தர்மம் அல்ல,,

இல்லை இவர் சொல்வது உண்மை. எனது மாமா ஒராள் கட்டுநாயக்காவில்தன வேலை செய்கிறார். அவர் இதை உறுதிப்படுத்திவிட்டார்.

ஆனால் இலங்கை எதுவம் சொல்லவில்லை
 
இவ்வாறு    மக்கள் யு tube  காணொளிக்கு   பதில் போடுகிறார்கள் 😃
 
  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, நிலாமதி said:

அடி சக்கை. 😂😂
நல்லா பத்தியெரியட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சாத்ஸ் சாத்ஸ் எண்டு சொல்ல நான் எங்கையோ போய் நிக்கிறன்....🤣

அது எங்கை என்று சொன்னால் நாங்களும் அறிவோம்  கூட வருவோம் அல்லவா!

அது ஒன்றுமில்லை  சாமியார்! சாத்தான் என்று சொல்ல சிலர்க்கு ஒவ்வாமை அதாவது பயம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி, நீங்கள் இப்ப பெரிய ஆள் ஆகிவிட்டீர்கள் , இன்னும் இது youtube இல் ஓடிக்கொண்டு இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

Daily Mirror ஊடகரின் ற்விற்றர் இப்படி இருக்கு!

இந்தியன் எம்பஸி மறுதலிக்கும் அளவுக்கு செய்தி தீயாய் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது😃

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

தம்பி 1ம் திகதி மதியம் பன்னிரெண்டு மணியோட விசயத்தை விட்டுடோணும். இதென்ன 2ம் திகதி தாண்டி இழுக்கிறியள்🤣

அண்ணை நாங்கள் தமிழர்கள். 2ம் திகதி காலை 6 மணிக்குத்தான் விசயத்தை விடுவம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

April Fools Love GIF by Rahul Basak

ஏப்பிரல்  முதலாம் திகதிக்காக... நேற்று பதிந்த இந்தத் தலைப்பை,
24 மணித்தியாலத்தில் 2000 பார்வையாளர்கள், யாழ்.களத்தில் மட்டும் பார்த்துள்ளார்கள். 👍

அது மட்டும் இல்லாது...  லங்கா ஸ்ரீ,   தமிழ் நியூஸ்,    ஜே. வி.பி நியூஸ்,   
தமிழ் பேஜ்,  ரமோ நியூஸ்,   தமிழ் வின்,    முகநூல்,  வாட்ஸப் குழுமம்,
ருவிற்றர்,    யூ ரியூப்,   கிளப் ஹவுஸ்,   டெய்லி மிரர் நிருபர்,   இந்திய தூதரகம்... 
என்று,  பலரையும்.. நேற்று அலற விட்டுள்ளது. 🤣

எமக்குத் தெரியாமல் வேறு... தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும் 
இந்தப் பதிவை பார்த்து,  அரசிடம்  விளக்கம் கேட்டிருக்கலாம் என்று,  
நம்புகின்றோம். 🙂

ஆக... இதனால், ஏப்பிரல் முதலாம் திகதியை...
நாம் எல்லோரும்... சிரித்து கொண்டாடி உள்ளது, மகிழ்ச்சியை  தருகின்றது.  😁

என்றாலும்... இதன் மூலம், சிரமத்தை சந்தித்த யாழ். உறவுகளிடம் 
நண்பர்கள் என்ற முறையில், மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். 🙏

இந்த  செய்தியை பார்த்து, ஊரில் இருந்து... தொலை பேசி எடுத்து...
விசாரித்த உறவுகளுக்காக மிகவும் வருந்துகின்றேன். 🥲

இந்தச் செய்தியை...  ஊர்ஜிதப் படுத்தாமல்,
தமது செய்தி போல், வெட்டி ஒட்டிய...  
மற்றைய இணையத் தளங்களுக்கு, ஆழ்ந்த அனுதாபங்களுடன்,
ஹாப்பி... "ஏப்பிரல் ஃபூல்" வாழ்த்துக்கள். 🤣

இந்தத் திரியை... கலகலப்பாக கொண்டு சென்ற,
யாழ்.கள உறவுகளுக்கு... சிரம் தாழ்ந்த நன்றிகள்.  🙏

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.