Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவலானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்ட தரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

https://athavannews.com/2022/1274466

Edited by தமிழ் சிறி

  • Replies 135
  • Views 11.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஏப்பிரல்  முதலாம் திகதிக்காக... நேற்று பதிந்த இந்தத் தலைப்பை, 24 மணித்தியாலத்தில் 2000 பார்வையாளர்கள், யாழ்.களத்தில் மட்டும் பார்த்துள்ளார்கள். 👍 அது மட்டும் இல்லாது...  லங்கா ஸ்ரீ,   தமிழ் நிய

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    என்னுடைய பதிவையும்... திருடுகின்றார்கள் என்று சந்தோசப் படுவோம். 😁

  • கிருபன்
    கிருபன்

    தமிழ் சிறி ஐயாவுக்கு “ஊடகப் பேரொளி” எனும் சிறப்புப்பட்டம் கொடுக்கப் பிரேரிக்கின்றேன். ஓடோடி வந்து பெரிய பந்தியில் ஆராய்வு விளக்கம் கொடுத்த சாத்தானுக்கும் “மெய்மை விளம்பி” என்ற பட்டம் கொடுக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை !

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்ட தரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

https://athavannews.com/2022/1274466

ஒவ்வொரு வருசமும், சிங்கன், ஏப்பிரல் பூல் செய்தியில் மினக்கெடுவார்.... உடனே.. பிடித்து விடுவார்கள், உறவுகள்....

இந்த முறை..... உந்தக் கட்டிலில படுத்துக் கிடந்து..... அட்டகாசம் பண்ணியிருக்கிறார்.

தேர்ந்து எடுத்த விடயம், நாட்டு நிலைமையுடன் அச்சொட்டாக, பொருந்தியதால்....  சிங்களவரையே கதிகலங்க வைத்துள்ளது.

கவலைப்பட்ட, வேலையிட சிங்கள நண்பரிடம், இம்முறை பிரபாகரன் இல்லையே..... எப்படி அனுப்புறது என்றவுடன்.... வெள்ளி பார்த்து, யோசிக்க தொடங்கி விட்டார்.

வாழ்த்துக்கள்.... 👌

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

வாங்கோ வாங்கோ நீண்ட விடுமுறை க்கு பின் வரவேற்கிறோம் .

மிக நீண்ட நாட்களின் பின்... உங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி நாதம்ஸ். 😁
பம்பல்  குறைவாக உள்ளது. எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி பரவ அவர் தேடியெடுத்து இணைத்த படம் நண்பர் ஒருத்தர்க்கு  ஏப்ரல் முட்டாள் தின செய்தி என்று சொல்ல  நம்ப முடியாது போட்டோ இணைத்துள்ளார்கள் என்கிறார் அப்படியா நாம ஒருக்கா தான் சொல்லுவம் இனி உன் நம்பிக்கை என்று சொல்லி விட்டு அமைதியாகினேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

செய்தி பரவ அவர் தேடியெடுத்து இணைத்த படம் நண்பர் ஒருத்தர்க்கு  ஏப்ரல் முட்டாள் தின செய்தி என்று சொல்ல  நம்ப முடியாது போட்டோ இணைத்துள்ளார்கள் என்கிறார் அப்படியா நாம ஒருக்கா தான் சொல்லுவம் இனி உன் நம்பிக்கை என்று சொல்லி விட்டு அமைதியாகினேன் .

Indian Air Force aircraft on a mission to rescue Indians || இந்தியர்களை  மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானம்..!!

இலங்கை - இந்திய இராணுவ யுத்த பயிற்சி நாளை ஆரம்பம் - Redeemer News

அந்தப் படமும்.... அடுத்து வந்த,  சாத்தானின் நீண்ட கருத்தும்...
செய்தியின் நம்பகத் தன்மையை... மேலும் உறுதியாக்கி,
இணையத் தளங்களையே... நம்ப வைக்க வைத்து விட்டது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

ஒவ்வொரு வருசமும், சிங்கன், ஏப்பிரல் பூல் செய்தியில் மினக்கெடுவார்.... உடனே.. பிடித்து விடுவார்கள், உறவுகள்....

இந்த முறை..... உந்தக் கட்டிலில படுத்துக் கிடந்து..... அட்டகாசம் பண்ணியிருக்கிறார்.

தேர்ந்து எடுத்த விடயம், நாட்டு நிலைமையுடன் அச்சொட்டாக, பொருந்தியதால்....  சிங்களவரையே கதிகலங்க வைத்துள்ளது.

கவலைப்பட்ட, வேலையிட சிங்கள நண்பரிடம், இம்முறை பிரபாகரன் இல்லையே..... எப்படி அனுப்புறது என்றவுடன்.... வெள்ளி பார்த்து, யோசிக்க தொடங்கி விட்டார்.

வாழ்த்துக்கள்.... 👌

மின்னல் வெட்டினால், இடிமுழங்கோணுமே எண்டு நினைச்சன் - இந்தா முழங்கீட்டு🤣.

கண்டது சந்தோசம் நாதம்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

மிக நீண்ட நாட்களின் பின்... உங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி நாதம்ஸ். 😁
பம்பல்  குறைவாக உள்ளது. எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 🙏

ஆனாலும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.....

வெளிநாட்டு ராணுவம், அது ஜநாவிலிருந்தாவது வந்தேதீரும்.

தனது வீட்டின் முன் நிகழ்ந்த ஆர்பாட்டத்தை, அமைச்சர் வீரசேகர மறுத்த போதும், அதை, இனவாத ரீதியில் முடிச்சுப்போட முணைந்த, கோத்தாவின் சிந்தனை இதை உறுதி செய்கிறது.

ராசபக்சேகள், பிரச்சணையை இனவாதமாக்குவார்கள்.....

இஸ்லாமியர்களோ, தமிழர்களோ போராடவில்லை.  சிங்களவர் மட்டுமே....

ஆகவே, அவர்கள், நாட்டு மக்கள் பணத்தை, பொருளை பதுக்கி வைத்துள்ளர்கள் என்றால் போதும்....

அவர்கள் தொடர்ந்து ஆளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அண்ணை நாங்கள் தமிழர்கள். 2ம் திகதி காலை 6 மணிக்குத்தான் விசயத்தை விடுவம். 

அண்ணையோ? ஐயா நீங்கள் சரோஜாதேவி, டி எம் எஸ் சோட இட்லி சாப்பிட்ட ஆள். நான் நயந்தாராவ டி வில பாக்கிற ஆள்🤣.

கண்டது சந்தோசம் பாஞ்ச் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒண்டும் இல்லை....

நம்ம பங்கோட, டீல் போட்டு.... இயற்கை வெவசாயம் செய்யலாம் எண்டு ஊர் பக்கம் போனால்..... பங்கு ஓடியாந்துட்டார்...

நான் வெட்டியாடிக் கொண்டு வந்துட்டேன்....

இயற்கை வெவசாயம் செய்யிறது, பிழையே....    😰

கோத்தா தானே செய்யச் சொன்னவர் எண்டு போனம்..... கனடாவுக்கு, எக்போற் பண்ணுறது தான் ஒரிஜினல் ஜடியா... 🤔

17 minutes ago, goshan_che said:

மின்னல் வெட்டினால், இடிமுழங்கோணுமே எண்டு நினைச்சன் - இந்தா முழங்கீட்டு🤣.

கண்டது சந்தோசம் நாதம்ஸ்.

பங்கு எப்படி சுகங்கள்....

இப்ப, படுத்துக் கிடந்த கத்திக்காரர்கள்.... எழும்பி கத்திய தீட்டப் போகினம் எண்டு நிணைக்கப் படாது...

வந்தமா, டபக்கெண்டு போனமா எண்டு இருக்கோணும்... ஓகே.. 😁

37 minutes ago, பெருமாள் said:

வாங்கோ வாங்கோ நீண்ட விடுமுறை க்கு பின் வரவேற்கிறோம் .

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

மின்னல் வெட்டினால், இடிமுழங்கோணுமே எண்டு நினைச்சன் - இந்தா முழங்கீட்டு🤣.

கண்டது சந்தோசம் நாதம்ஸ்.

மோகினிகளால்தான் முனிவர்களின் மெளனத்தைக் கலைக்க முடியும் என்று படித்துள்ளேன். இந்தத் தமிழ்சிறி கலைத்துவிட்டாரே!!🤔😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வேறு ஒண்டும் இல்லை....

நம்ம பங்கோட, டீல் போட்டு.... இயற்கை வெவசாயம் செய்யலாம் எண்டு ஊர் பக்கம் போனால்..... பங்கு ஓடியாந்துட்டார்...

நான் வெட்டியாடிக் கொண்டு வந்துட்டேன்....

இயற்கை வெவசாயம் செய்யிறது, பிழையே....    😰

கோத்தா தானே செய்யச் சொன்னவர் எண்டு போனம்..... கனடாவுக்கு, எக்போற் பண்ணுறது தான் ஒரிஜினல் ஜடியா... 🤔

பங்கு எப்படி சுகங்கள்....

இப்ப, படுத்துக் கிடந்த கத்திக்காரர்கள்.... எழும்பி கத்திய தீட்டப் போகினம் எண்டு நிணைக்கப் படாது...

வந்தமா, டபக்கெண்டு போனமா எண்டு இருக்கோணும்... ஓகே.. 😁

கீழே குறிப்பிடப் பட்டுள்ள மரத்தின், இயற்கை விவசாயமா செய்தீர்கள். 
சென்ற புதன்கிழமை திண்ணையில்... 
கோசான், நாதமுனி, ரதி... ஆகியோரைப் பற்றி நீண்ட நேரம் கதைத்தோம்.

பங்கு பற்றியோர்... விசுகு, குமாரசாமி, சுவி, பெருமாள், தமிழ் சிறி 
உங்களுக்கு... கடுமையாக,  தும்மி இருக்குமே.... 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

கீழே குறிப்பிடப் பட்டுள்ள மரத்தின், இயற்கை விவசாயமா செய்தீர்கள். 
சென்ற புதன்கிழமை திண்ணையில்... 
கோசான், நாதமுனி, ரதி... ஆகியோரைப் பற்றி நீண்ட நேரம் கதைத்தோம்.

பங்கு பற்றியோர்... விசுகு, குமாரசாமி, சுவி, பெருமாள், தமிழ் சிறி 
உங்களுக்கு... கடுமையாக,  தும்மி இருக்குமே.... 🤣

அத பார்த்த படியால தான்.... 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அத பார்த்த படியால தான்.... 😁

அப்ப… நீங்களும், கோசானும் ஒளிச்சு நிண்டு பார்த்திருக்கிறீர்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

 கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயம் வரை சேதி எட்டி இருக்கென்றால் பாருங்கோவன்   ....சிறீ யின் சிறப்பு செய்தியை 😃

கொஞ்ச நேரத்துக்கு முன் கொழும்பில் வசிக்கும் அம்மாவுக்கு தொலைபேசினேன்.

நான்: "அம்மா .. முழு நாட்டுக்கும் ஊரடங்கு போட்டுள்ளார்கள்... கவனம் வெளியே போக வேண்டாம்"

அம்மா: "ஓமடா.. கொழும்பில் இந்தியன் ஆமி வந்து நிற்குதாம்..அதுதான் ஊரடங்கு போட்டுள்ளார்கள்"

என்னத்தைச் சொல்ல...

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, Nathamuni said:

இந்திய ராணுவம் இலங்கையில் தரை இறங்கியது! சரத் பொன்சேகா ராணுவ புரட்சி?.. - Sri Lanka Crisis | India

7:19இல் ...
"இந்தியா தீடீரென தனது கமாண்டோ போஸ் எனப்படும் ..... அதிரடிப்படை  ....... 180 பேரை அங்கு கொண்டு சென்று தரையிறக்கியுள்ளது"

@தமிழ் சிறி  நீங்கள் போட்டதில பாதியையும் நான் போட்டதில பாதியையும் கலந்து கைகால் மூக்கு வைத்து இஞ்ச நடக்குது 😂😂.

இவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள்.🤦‍♂️ அடியா சக்கை!

🤣🤣🤣🤦‍♂️

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. இணையவழி செய்திகள் எப்படி காட்டுத்தீயாய் பரவும் என்பதை மனுஷன் செயல்முறை வடிவத்தோடு காட்டி இருக்கிறார். 
நேற்று நான் கலந்து கொண்ட கிளப் ஹவுஸ் விவாதத்தில் ஒரு ஐரோப்பிய தமிழ் ஊடகவியலாளர் இந்த செய்தியை அடித்து உண்மை என்று கூறினார்.... நானும் கொடுக்குப் பல்லுக்குள் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு எதிரே  பறந்த "இலையானை" பார்த்து தலையை ஆட்டினேன்.

6 minutes ago, நன்னிச் சோழன் said:

பரட்ட ..... பத்தவச்சுட்டியே பரட்ட... 😂

  • கருத்துக்கள உறவுகள்+
12 minutes ago, Sasi_varnam said:

தமிழ்சிறியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. இணையவழி செய்திகள் எப்படி காட்டுத்தீயாய் பரவும் என்பதை மனுஷன் செயல்முறை வடிவத்தோடு காட்டி இருக்கிறார். 
நேற்று நான் கலந்து கொண்ட கிளப் ஹவுஸ் விவாதத்தில் ஒரு ஐரோப்பிய தமிழ் ஊடகவியலாளர் இந்த செய்தியை அடித்து உண்மை என்று கூறினார்.... நானும் கொடுக்குப் பல்லுக்குள் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு எதிரே  பறந்த "இலையானை" பார்த்து தலையை ஆட்டினேன்.

😁

இன்னொன்ட கவனிச்சியளே,

யாழ் களத்தின் நம்பகத்தன்மை. இங்கு ஒரு செய்தி போட்டால் அது எவ்வளவு நம்பகமான செய்தி என்பதும் அதை மக்கள் எவ்வளவு தொலைவு கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறார்கள் என்பதும் இதன்மூலம் கண்கூடு,

மேலும், யாழ் களத்தின் செய்தி பரப்பல் வேகம் மிகையானது. எதிர்காலத்தில் எம்தேசம் தொடர்பான ஏதேனும் நல்ல செய்தி பரப்ப வேண்டுமென்றால், தமிழ்ப் பரப்பில், யாழை சரியான விதத்தில் பயன்படுத்தினால் சரி. காட்டுத் தீயாய் பரவும் என்பதற்கு இதுவொரு வெற்றியளித்த எதிர்பாராத சோதனை முயற்சி. 

Mr. Tamil Sri - April fool.jpg

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இணையங்களும் செய்திகள் போடுகின்றன.....ஆனால் யாழில்தான் எந்தவிதமான செய்தியையும் கருத்தாளர்கள் விவாதித்து விவாதித்து களையை அகற்றிவிடுவதால் அந்தச்செய்தி நம்பகத்தன்மை அடைந்து விடுகிறது........!   😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

ஒவ்வொரு வருசமும், சிங்கன், ஏப்பிரல் பூல் செய்தியில் மினக்கெடுவார்.... உடனே.. பிடித்து விடுவார்கள், உறவுகள்....

இந்த முறை..... உந்தக் கட்டிலில படுத்துக் கிடந்து..... அட்டகாசம் பண்ணியிருக்கிறார்.

தேர்ந்து எடுத்த விடயம், நாட்டு நிலைமையுடன் அச்சொட்டாக, பொருந்தியதால்....  சிங்களவரையே கதிகலங்க வைத்துள்ளது.

கவலைப்பட்ட, வேலையிட சிங்கள நண்பரிடம், இம்முறை பிரபாகரன் இல்லையே..... எப்படி அனுப்புறது என்றவுடன்.... வெள்ளி பார்த்து, யோசிக்க தொடங்கி விட்டார்.

வாழ்த்துக்கள்.... 👌

வணக்கம் நாதம் 
நீண்ட நாட்களின் பின் கண்டது சந்தோசம்.

இந்த வருட கதாநாயகன் தமிழ் சிறி தான்.

இலங்கையே மறுப்பறிக்கை விடுமளவிற்கு நிலமை போயிருக்கு.

சும்மா இருந்த மோடிக்கும் 

இதுவும் நல்லாதானே இருக்கென்று திட்டம் போடப் போறாங்களோ தெரியலை.

அல்லது

ஏற்கனவே இப்படி ஒரு திட்டம் இருந்திருந்தா எப்படி கசிந்தது என்று தலையை பிச்சுக்க போறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது செருப்படி வாங்கிய அருண் சித்தார்த் ஒட்டுக்குழு, மண்டையன் குழுவுடன் சேர்ந்து  கிளப் ஹவுசில் தமிழ் சிறியரின் ஏப்ரல் வதந்தியை பற்றி குத்தி முறிகிறார்

https://www.clubhouse.com/room/mg86njed?utm_medium=ch_room_merc&utm_campaign=Kt1MZwv70hpR17EiIUH-Bw-131558

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Sasi_varnam said:

தற்போது செருப்படி வாங்கிய அருண் சித்தார்த் கிளப் ஹவுசில் தமிழ் சிறியரின் ஏப்ரல் வதந்தியை பற்றி குத்தி முறிகிறார்

Logo
Happening now →
இலங்கையின் குரல்
icon_house.b8bca1eb933e.svg
அருண் சித்தார்த் உரையாடல்
 
Thamarai Wilkinson
Alahan Siva
Stalin Gnanam
Arun Siddharth
ஶ்ரீஸ்கந்தா Sriskanda
Karuna Sinna
Deva Selvarajah
ரதி தர்மலிங்கம்
Rahu Kathiravelu
மதன் මදන් Mathan Mathan
Kandiah SS
Manoranjan Selliah
Kkr
Vignesh Ganesh
47
icon_person.e6a2a074b0e3.svg
/
14

சசி வர்ணம்.... அதனைப் பற்றிய இணைப்பை, இங்கு பதிந்து விடுங்களேன். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சித்திரை முட்டாள் தின தலைப்பு.. இப்ப வேற லெவலில் போய்க்கிட்டு இருக்குது. ஹிந்திய தூதரகம் மறிப்பறிக்கை விடும் வரைக்கு போயிட்டா...?!

ஆனால்.. வாட் சப்பிலும் ஒரு செய்தி பகிரப்பட்டு வந்திருந்தது. இதே சாரம்சத்தில்..! 

ஒருவேளை... எல்லாம் சேர்ந்து ஹிந்திய தூதரகம் மறுப்பறிக்கை விட வைச்சிருக்குமோ..??! அல்லது உண்மையாகவே ஹிந்திய இராணுவம் இறங்கி இருக்குமோ..?! இப்ப எல்லாம் ஹிந்திய உயர் அதிகாரிகள் அடிக்கடி கொழும்பு வந்து போகினம். அதுதான் சந்தேகமா இருக்குது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.