Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபுணர்கள் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர்கள் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

01- இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி.

02- ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர், பேராசிரியர் சாந்தா தேவராஜன்.

03- நிறுவனத் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் IMF இன் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி திருமதி ஷார்மினி குரே,

ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக செயற்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியைச் சந்தித்த ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் உரிய தேவைகளுக்காக தொடர்ந்தும் தொடர்பாடல்களைப் பேணுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணல் மற்றும் இலங்கையின் நிலையான மீட்சிக்கு அவசியமான வழிகாட்டுதல்களை வழங்குதல், ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் பொறுப்புக்கள் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
https://www.tamilmirror.lk/செய்திகள்/நபணரகள-கழவ-நயமததர-ஜனதபத/175-294403

நிபுணர்கள் அடங்கிய விசேட ஜனாதிபதி ஆலோசனை குழு நியமனம்

பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

01- இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி. 

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கிளிநொச்சி விஜயம்

02- ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர், பேராசிரியர் சாந்தா தேவராஜன்.

Shanta Devarajan: Economist Who Cannot Get Disconnected From His Motherland  - Colombo Telegraph

03- நிறுவனத் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் IMF இன் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி திருமதி ஷார்மினி குரே,

Sharmini Coorey to Retire as Director of the IMF's Institute for Capacity  Development

இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக செயற்படுவார்கள். ஜனாதிபதியைச் சந்தித்த ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் உரிய தேவைகளுக்காக தொடர்ந்தும் தொடர்பாடல்களைப் பேணுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தல், தற்போதைய கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணல் மற்றும் இலங்கையின் நிலையான மீட்சிக்கு அவசியமான வழிகாட்டுதல்களை வழங்குதல், ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் பொறுப்புக்கள் ஆகும்.

https://www.virakesari.lk/article/125404

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

நிபுணர்கள் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

01- இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி.

02- ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர், பேராசிரியர் சாந்தா தேவராஜன்.

03- நிறுவனத் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் IMF இன் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி திருமதி ஷார்மினி குரே,

ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக செயற்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிபுணர்கள் குழுவில் உள்ள மூன்று பேரில்... இருவர் தமிழர், ஒருவர் சிங்களவர்.
தமிழரின் அருமை... கோத்தாவுக்கு, புரிய ஆரம்பித்து விட்டதா. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

நிபுணர்கள் குழுவில் உள்ள மூன்று பேரில்... இருவர் தமிழர், ஒருவர் சிங்களவர்.
தமிழரின் அருமை... கோத்தாவுக்கு, புரிய ஆரம்பித்து விட்டதா. 

உலகத்தை வெட்டி ஆடுவதற்கும்  தமிழர்கள்தான் எப்போதும் வேணும் ....... உள்நாட்டில் வெட்டி அட்டகாசம் பண்ணவும் தமிழர்கள்தான் வேணும்....... !   🤔

  • கருத்துக்கள உறவுகள்

இது  நாட்டின் பொருளாதாரம் கீழ் நோக்கி செல்ல தொடங்கும் போது நியமிக்கப்பட வேண்டியவர்கள்.

29 minutes ago, தமிழ் சிறி said:

நிபுணர்கள் குழுவில் உள்ள மூன்று பேரில்... இருவர் தமிழர், ஒருவர் சிங்களவர்.
தமிழரின் அருமை... கோத்தாவுக்கு, புரிய ஆரம்பித்து விட்டதா. 

இதுக்கு மட்டும் தான் நாங்கள் .  சில வேளை தமிழரையும் கவரவோ தெரியாது . ஏதாவது தமிழருக்கு உரிமை என்று வந்தா ஆமத்துறு மார் தான் குழுவில் இருப்பினம், தமிழர் இராயினம் .

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் பிரச்சினையில்லை...தேங்காய்ப்பூக்ளுக்கு வவுத்துவலி வரப்போகுது....நாங்கள்தான் உங்கடை வலது கரமாச்சே..ஏன்  எங்கள  எடுக்கலே..

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, suvy said:

உலகத்தை வெட்டி ஆடுவதற்கும்  தமிழர்கள்தான் எப்போதும் வேணும் ....... உள்நாட்டில் வெட்டி அட்டகாசம் பண்ணவும் தமிழர்கள்தான் வேணும்....... !   🤔

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கவும் சிங்களம் தமிழர்களைத்தானே வேண்டிநின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

நிபுணர்கள் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

2 hours ago, கிருபன் said:

01- இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி. 

2 hours ago, கிருபன் said:

02- ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திப் பயிற்சி தொடர்பான பேராசிரியர் மற்றும் உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர், பேராசிரியர் சாந்தா தேவராஜன்.

சிங்கள மக்களால் சிங்கள பௌத்தத்திற்காக தெரிவானவரின் நிலை  இப்போது எங்கு போய் நிற்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தை இக்கட்டில் இருந்து காப்பதில் தமிழர்கள் எஜமான விசுவாசத்தோடு செயற்படுவது இராமநாதன் காலம் தொடங்கி நடக்குது. ஆனால் சொந்த இனத்தின் உரிமையை நிலைநாட்ட ஒரு வக்கில்ல. 

சொறீலங்காவுக்கு இந்த தருணத்தில் உதவ வேண்டின்.. தமிழர்களின் உரிமைகளுக்கு அரசியலமைப்புத் திருத்தம் மூலமான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை அமைவதே.. சூழலை தக்க முறையில் பாவிக்கும் புத்திசாலித்தனமாக இருக்கும். இந்தக் கோரிக்கை சிங்களத்தை நோக்கி மட்டுமல்ல.. சர்வதேசத்தை நோக்கியும் வைக்கப்பட வேண்டும்.. குறிப்பாக தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை மையமாக வைத்து. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழனுக்கு வன்ம புத்தியுமில்லை.வைச்சு சாதிக்கும் குணமுமில்லை. மாற்றானை அழிக்கும் குணமுமில்லை. இதைத்தான் தலைவரும் செய்தார்.தான் அழிந்தாலும் மக்கள் நன்றாக வாழட்டும் என நினைத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் எல்லாம் தோட்டாக்கள் மாதிரி......துப்பாக்கி வைத்திருக்கிறவனுக்கு விசுவாசமாக பாய்வார்கள்.....!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் காவலன் என்கிற கோஷத்தோடு வந்து, அவனவன் தன்பங்குக்கு அந்த மக்களை சுரண்டி சுருட்டிக்கொண்டு வெளியேற தயாராகி விட்டார்கள். இப்போ வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது அணை கட்ட தேவைப்படுவது தமிழன். முடியட்டும் அதே மண்வெட்டியால் விழும் பிடரியில். கோத்தா போனாலும் இன்னொரு இனவாதியை அமர்த்தும் சிங்களம். நாட்டில் ஊறிப்போயிருப்பது இனவாதம் எனும் நஞ்சு.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல்வாதிகள் வீடுகள் தாக்கப்படுகின்றனவாம். இனி ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள். எங்கட சிலது எஜமான் விசுவாசத்தில திறந்து வாங்கிக் கட்டினாலும் ஆச்சரியப்படமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிங்கள தலைமையை சிங்கள மக்களே நிராகரிக்கும் பொழுது தமிழர்கள் தூக்கி நிறுத்த முடியுமா.தாண்டு கொண்டிருக்கும் கப்பலில் ஏறி தாமும் தாண்டு தம் இனத்தையும் தாள வைப்பதில் எல்லாம் தெரிந்த எம் இனத்தவர் வல்லவர்.தமிழருக்கு தீர்வை கொடு என்ற நிபந்தனையின் அடிப்படையிலாவது இவர்கள் முன் வந்திருக்கலாம்.தம் அதிகாரத்தை தக்க வைக்க ஆளும் தரப்பின் சூழ்சிக்குள் விழுவது தானே தமிழன் இராஜதந்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.