Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உணவகங்களில்... விலை அதிகரிப்பை, மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை... எடுக்கும் பொறுப்பு, அதன் உரிமையாளர்களுக்கு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கு?

உணவகங்களில்... விலை அதிகரிப்பை, மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை... எடுக்கும் பொறுப்பு, அதன் உரிமையாளர்களுக்கு?

சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், சிற்றுணவக தொழிற்துறை வீழ்ச்சியடையும். இது பாரிய பிரச்சினையாகும்.

எனவே, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தங்களது தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தாங்கள் விரும்பியவாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு சிற்றுணவக உரிமையாளர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், தாங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டால், உண்மையில் இந்த தொழிற்துறை வீழ்ச்சியடையும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1278760

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் உணவக வியாபாரிகள் கோடீசுவரர்களாக  போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கு மேல தமிழ் சாப்பாட்டு கடையள் புங்குடுதீவாரின்ர… இதோட புங்குடுதீவு தனி நாடு ஆகப்போகுது..

21 minutes ago, விசுகு said:

இத்துடன் உணவக வியாபாரிகள் கோடீசுவரர்களாக  போகிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாதிக்கு மேல தமிழ் சாப்பாட்டு கடையள் புங்குடுதீவாரின்ர… இதோட புங்குடுதீவு தனி நாடு ஆகப்போகுது..

எழுதும்போதே நினைத்தேன்  யாராவது  எழுதுவார்கள்  என்று  சகோ

பாம்பின்  கால்  பாம்பறியும்?🤣

(அத்தோட அப்படியே  இந்தியாவோட இணைவதற்கு  ராசவன்னியரோட @ராசவன்னியன்பேச்சுவார்த்தை  தொடங்கியாச்சு)😝

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாதிக்கு மேல தமிழ் சாப்பாட்டு கடையள் புங்குடுதீவாரின்ர… இதோட புங்குடுதீவு தனி நாடு ஆகப்போகுது..

no comment...:cool:

Vadivel Sundarc GIF - Vadivel Sundarc - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

எழுதும்போதே நினைத்தேன்  யாராவது  எழுதுவார்கள்  என்று  சகோ

பாம்பின்  கால்  பாம்பறியும்?🤣

(அத்தோட அப்படியே  இந்தியாவோட இணைவதற்கு  ராசவன்னியரோட @ராசவன்னியன்பேச்சுவார்த்தை  தொடங்கியாச்சு)😝

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

பிரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புங்குடுதீவு புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

பலிக்க கடவது 🤪

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

புங்குடுதீவு தீவார் எங்கேயோ போயாச்சு. நீங்கள் இன்னும் புகையிலைக்குள்ள?? 

கந்தன் கோவணத்தை இழந்த பாதிப்பு இன்னும் உங்களுக்கு போகலை போல??🤪

லா சப்பலில் 300 கடைகள் இருந்தால் 150 எங்கட தான்.👍

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

பலிக்க கடவது 🤪

புங்குடுதீவு தீவார் எங்கேயோ போயாச்சு. நீங்கள் இன்னும் புகையிலைக்குள்ள?? 

கந்தன் கோவணத்தை இழந்த பாதிப்பு இன்னும் உங்களுக்கு போகலை போல??🤪

கஞ்சா போல.. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புங்குடுதீவு புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

யாழ்ப்பாணத்தாரிட்ட இருக்கிற நண்டுக்குணம் புங்குடுதீவாரிட்ட இல்லை.நீங்கள் சொன்னது நடக்க நூறுவீதம் சாத்தியம் இருக்கு...😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணத்தாரிட்ட இருக்கிற நண்டுக்குணம் புங்குடுதீவாரிட்ட இல்லை.நீங்கள் சொன்னது நடக்க நூறுவீதம் சாத்தியம் இருக்கு...😁

அது யூதர்களிடம் இருந்து எடுத்தது?🙏

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

புங்குடுதீவு தீவார் எங்கேயோ போயாச்சு. நீங்கள் இன்னும் புகையிலைக்குள்ள?? 

கந்தன் கோவணத்தை இழந்த பாதிப்பு இன்னும் உங்களுக்கு போகலை போல??🤪

லா சப்பலில் 300 கடைகள் இருந்தால் 150 எங்கட தான்

புகையிலை பயிர்செய்கை தடைசெய்துட்டாங்களோ?

40 minutes ago, goshan_che said:

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

அப்போ அது இந்திய மாநிலம் இல்லையா கோபால்?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்போ அது இந்திய மாநிலம் இல்லையா கோபால்?

நீங்கள் பிழையாக விளங்கி கொண்டீர்கள் அண்ணா.

@விசுகு அண்ணா பேச்சுவார்த்தை என சொன்னது இந்தியாவை புங்குடுதீவு மக்கள் குடியரசின் ஒரு மாநிலமாக ஏற்பது  பற்றிய பேச்சுவார்த்தை.

37 minutes ago, விசுகு said:

அது யூதர்களிடம் இருந்து எடுத்தது?🙏

யூதா நீயும் புகையிலை வித்தனியா🤣. (பகிடி). 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணத்தாரிட்ட இருக்கிற நண்டுக்குணம் புங்குடுதீவாரிட்ட இல்லை.நீங்கள் சொன்னது நடக்க நூறுவீதம் சாத்தியம் இருக்கு...😁

நாம் ஒன்று நினைக்க, புட்டின் ஒன்று நினைப்பார் என்கிறார் உடான்ஸ் சாமியார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நான் அமெரிக்காவில் இறங்கி ஒரு ஆள் அரவமில்லாத, தண்ணியில்லா காட்டுக்கு படிக்க வந்த போது, அங்கு எங்கடை தமிழ் பேராசிரியர் ஒருவர் இருந்தவர், அவர் எங்களுக்கு படிப்பிக்கவில்லை, மிகவும் அந்நியோன்னியமாக பழகுவார், அவர் அடிக்கடி சொல்லுவார்:

தம்பி உங்களை மாதிரி ஆட்கள் இங்க வாறாதை விட்டுட்டு, யாராவது புங்குடுதீவாங்கள் இருந்தால் அவங்களை கூட்டிக்கொண்டு வாங்கோ, அப்பதான் நாங்களும் இங்கை எழும்பலாம். அவருக்கு பிசினஸ்இல் ஆர்வம் அதிகம். எங்களோடு பேராதனையில் புங்குடுதீவார்கள் படிப்பதில்லையா என்று அடிக்கடி கேட்பார். நான் அதுவரை காரைநகர்தான் பிசினஸ் இல் பெரிய ஆட்கள் என்று நினைத்திருந்தேன். ஆள், அரவமில்லாத பாலைவனத்தில்கூட புங்குடுதீவார் பேமஸ்ஆக இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நாம் ஒன்று நினைக்க, புட்டின் ஒன்று நினைப்பார் என்கிறார் உடான்ஸ் சாமியார் 🤣

புட்டினின் வெற்றிக்கும் அது தான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

ஆள், அரவமில்லாத பாலைவனத்தில்கூட புங்குடுதீவார் பேமஸ்ஆக இருக்கிறார்கள்

அவர்களும் தமிழர் என்பதில் மகிச்சியே. அப்போ; நாமெல்லோரும் சோம்பேறிகள் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு பொருள் ஈட்டுபவர்கள் முக்கியம். தமிழ் நாட்டில் செட்டியார் நாடார் போல இலங்கை தமிழருக்கு யாழ்ப்பாணத்தில் தீவார். இலங்கை தமிழரின் பொருளாதாரதில் எப்படியும் 80 வீதம் இவர்களிடம் தான். இவர்கள் இல்லை என்றால் அனைத்து பலசரக்கு,சாப்பாட்டு கடைகளும் முஸ்லீம்களிடம் போய் இருக்கும். ஆனா ஒன்று இவர்கள் கொஞ்சம் ஒண்டடி மண்டடி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, satan said:

அவர்களும் தமிழர் என்பதில் மகிச்சியே. அப்போ; நாமெல்லோரும் சோம்பேறிகள் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். 

நாமெல்லாம் சோம்பேறிகள் எண்ட அர்த்தம் இல்லை பாருங்கோ....😂

இப்ப  நான் என்ன சொல்ல வாறனெண்டால் புங்குடுதீவார்ரை எந்தக்கடை எண்டாலும் பலசரக்கு கடை தொடக்கம் நகைக்கடை வரைக்கும்...... நீங்கள் அவையின்ரை கடைக்கு சாமான் பார்க்க/ வாங்கப்போனால் அது பிடிக்கேல்லை, இது பிடிக்கேல்லை, விலை கூட, பேந்து வாறன்,  நான் தேடினது இதில்லை , கலர் சரியில்லை,  டிசைன் சரியில்லை , உழுந்து சரியில்லை, பருப்பு சரியில்லை எண்டு சாக்குப்போக்கு சொல்லிப்போட்டு வெறும் கையோடை கடையை விட்டு வெளியிலை வரமாட்டியள். அது எந்த கொம்பனெண்டாலும் சரி.எந்த மொழி விளங்காதவன் எண்டாலும் சரி......😁

வியாபார திறன்.🤔

இப்ப நான் சொன்னது விளங்குதோ?
திறமையும் முயற்சியும் அவர்களுக்கு கொஞ்சம் கூட இருக்கின்றது அவ்வளவுதான்.

ஊரிலை சும்மா ஒரு கதைக்கு ஒரு வசனம் சொல்லுவினம் "காகம் பறக்காத ஊருமில்லை புங்குடுதீவான் இல்லாத ஊருமில்லை" எண்டு🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஊரிலை சும்மா ஒரு கதைக்கு ஒரு வசனம் சொல்லுவினம் "காகம் பறக்காத ஊருமில்லை புங்குடுதீவான் இல்லாத ஊருமில்லை" எண்டு

எங்கடை ஊரில "காரைதீவார் இல்லாத ஊருமில்லை" என்றுதான் சொல்வார்கள்.

எனக்கு தெரிந்த இன்னோர் ஊருமுண்டு. அவர்கள் கடைக்கு போய் நீங்கள் சொன்ன காரணங்களை சொல்லி கடையை விட்டு தப்ப முடியாது. கடையில் உள்ளது எல்லாவற்றையும் எடுத்து பரப்பி விடுவார்கள். இல்லை என்றால் அடுத்த கடையில் இருந்தென்றாலும் வரவழைத்து விடுவார்கள். ஆனால் தீவகமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, kalyani said:

புட்டினின் வெற்றிக்கும் அது தான் காரணம்.

அவர் தோல்விக்கும் இதுவே காரணமாய் அமையும். கொஞ்சம் வெயிட் பண்ணவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக தீவுபகுதி மக்கள் வியாபார நுணுக்கம் கூடியவர்கள்தான். ஆனால் சாப்பாட்டு வியாபாரத்தில் ஏனோ தெரியவில்லை புங்குடுதீவு ஆட்கள் தனி திறமைசாலிகள்.

தமிழ்நாட்டில் மலையாளிகளை இப்படி சொல்வாகள். ஆம்ஸ்டிரோங் நிலவில் இறங்கிய போது அங்கே ஒரு மல்லு சாயா ஆத்தி கொண்டிருந்ததாக.

மருதர் ஒருக்கால் தீவுபகுதிக்கும்-கேரளாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதினவர். இந்த பூர்வ ஜென்ம வாசனாவாகவும் இருக்கலாம்.

கொழும்பு, லண்டன், பரிசில் எங்கபோனாலும் இந்த துறையில் முன்னுக்கு நிற்பது அவர்கள்தான்.

அதே போல் என் அனுபவத்தில் “குறிச்சி பேதம்” புங்குடுதீவை போல் வேறெங்கும் நான் பார்க்கவில்லை. பொதுவான சடங்குகள் கூட குறிச்சிக்கு குறிச்சி வேறுபடும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, satan said:

எங்கடை ஊரில "காரைதீவார் இல்லாத ஊருமில்லை" என்றுதான் சொல்வார்கள்.

காரைநகர்,குறிகட்டுவானை பற்றி  சுவாரசியமாய் எழுதலாம்.பிறகு  எனக்கு இந்த நிலைமைதான்......🤣

IMMJ Episodes Discussion Thread #CXLIII - Page 115 | Ishq Mein Marjawan 2

2 hours ago, satan said:

எனக்கு தெரிந்த இன்னோர் ஊருமுண்டு. அவர்கள் கடைக்கு போய் நீங்கள் சொன்ன காரணங்களை சொல்லி கடையை விட்டு தப்ப முடியாது. கடையில் உள்ளது எல்லாவற்றையும் எடுத்து பரப்பி விடுவார்கள். இல்லை என்றால் அடுத்த கடையில் இருந்தென்றாலும் வரவழைத்து விடுவார்கள். ஆனால் தீவகமில்லை. 

அந்த ஊர்   எம் பெருமான் செல்வச்சந்நிதியானுக்கு பக்கத்து ஊர் தானே? 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அந்த ஊர்   எம் பெருமான் செல்வச்சந்நிதியானுக்கு பக்கத்து ஊர் தானே? 😁

May be an image of 1 person

என்னது.... கேக்கல. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@தமிழ் சிறி

May be an image of 1 person

என்னது.... கேக்கல. 🤣

இப்ப கேக்குதா?.......கேட்டுச்சா? 😂😂😂

Piragu Vadivelu GIF - Piragu Vadivelu Comedy - Discover & Share GIFs |  Comedy pictures, Comedy, Comedy memes

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.