Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தனது ஆக்கிரமிப்பு யுத்த முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களை வெளியேற்றக்கூடிய மனிதாபிமான பாதைகளைவேண்டுமென்றே தடுத்து மூடிய ரஸ்ஸியா

Zelenskyy accuses Russia of attack on humanitarian corridor in Mariupol |  Business Standard News

மரியோபுல் மீதான முற்றுகையின்பொழுது, உள்ளே அகப்பட்டிருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பல சர்வதேச அமைப்புக்களும் நாடுகளும் முயன்றன. இவ்வாறான முயற்சிகளின் விளைவாக ரஸ்ஸியா தன்னால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து மக்கள் சிலரை வெளியேற்ற இணக்கியபோதும், அவ்வாறு திறக்கப்பட்ட பாதுகாப்பான வழிகள் மீது கடுமையான எறிகணை வீச்சினை நடத்தி மக்கள் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்தியதுடன் அவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்ட மக்களையும் கொன்றுதள்ளியது. 

பங்குனி 5 ஆம் நாளன்று, ஐந்து மணித்தியால யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு ரஸ்ஸியா இணங்கியபோதும்கூட, மக்கள் பாதுகாப்பாக வெளியேற முற்பட்ட வேளையில் யுத்த நிறுத்தத்தையும் மீறி மக்கள் செல்லும் பாதை நெடுகிலும் மிகக் கடுமையான செல்த் தாக்குதலை நடத்தியது. இதனால் இந்த முயற்சியையும் யுத்த நிறுத்த கால எல்லைக்குள்ளேயே கைவிடவேண்டியதாகியது. 
மறுநாள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையில் மீண்டும் மக்களை வெளியேற்ற எடுத்த முயற்சியையும் ரஸ்ஸியாவின் கடுமையான தாக்குதல்கள் முறியடித்திருந்தன.  மேலும், பங்குனி 7 ஆம் திகதி சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ரஸ்ஸியாவினால் பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பாதையினைப் பரிசோதித்தபோது, அப்பாதை முழுதும் ரஸ்ஸிய ராணுவம் கண்ணிவெடிகளைப் புதைத்துச் சென்றிருந்ததைச் சாட்சியப்படுத்தியிருக்கிறது. 

Russian attack on railway station in eastern Ukraine leaves dozens dead,  officials say | Fox News

 

சிலவேளை ரஸ்ஸியா மக்களை மீட்கவே மனிதாபிமான மீட்பு நடவடிக்கையினை நடத்துகிறது (இலங்கை அரசும் அவ்வாறுதான் தமிழர்களை புலிகளிடமிருந்து மீட்க யுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது) என்று நம்பும் சிலருக்கு ரஸ்ஸியாவின் இந்த செயல் முள்ளிவாய்க்காலில் தானே அறிவித்த யுத்த சூனிய வலயங்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதல்கள் நடக்கவில்லையோ என்கிற சந்தேகத்தினை ஏற்படுத்தலாம். கருணா துரோகம் செய்யவில்லையென்று தற்போது நம்பத் தொடங்கியிருக்கும் இவர்களுக்கு இலங்கையின் முள்ளிவாய்க்கால் கொலைகளும், ரஸ்ஸியாவின் மரியோபுல் கொலைகளும் நியாயப்படுத்தப்படக்கூடியவைதான் என்று தோன்றினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. 

Edited by ரஞ்சித்
  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அணுமின் நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியமை

 

Russia-Ukraine war: Fire at Zaporizhzhia nuclear plant put out | Russia-Ukraine  war News | Al Jazeera

பங்குனி 3 ஆம் திகதி, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்போரிச்சியா மின் நிலையம் அமைந்திருக்கும் பகுதியை நோக்கி இரண்டு ரஸ்ஸியத் தாங்கிகளும், 10 கனரக ரஸ்ஸிய வாகனங்களும் முன்னேறிவந்தன. நிலையத்திற்கு வெளியே காவலில் ஈடுபட்டிருந்த உக்ரேனிய ராணூவத்திற்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குமிடையே துப்பாக்கிச் சமர் ஆரம்பித்தது. இச்சமரின்போது, அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ரஸ்ஸியப் படை தாக்கத் தொடங்கியது. இத்தாக்குதலில் கனரக துப்பாக்கிகள், மோட்டார்கள், ராக்கெட் உந்துகணைகளைச் செலுத்தி ரஸ்ஸிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ரஸ்ஸிய ராணுவத்தின் தாக்குதல்களின் விளைவாக அணுமின் நிலையத்தைன் உட்பகுதியில் தீப்பிடித்துக்கொண்டதுடன், ஏனைய காடிடங்களுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட தீ பின்னர் கட்டுக்குள் கொன்டுவரப்பட்டபோதும் கூட, அந்நிலையம் கடுமையான சேதத்தினைச் சந்தித்தது.

தமது அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் ஒன்றினை நடத்தி, பாரிய அழிவு ஒன்றினை ஏற்படுத்தவே ரஸ்ஸியா முயன்றதாக உக்ரேன் அரசு அறிவித்திருந்தது. இத்தாக்குதலின்போது ரஸ்ஸியாவினால் ஏவப்பட்ட எறிகணைகள் நிலையத்தின் பயிற்சிப் பட்டறைகள் மீது வீழ்ந்து வெடித்தபோதே தீப்பற்றிக்கொண்டதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.  ஆனால், தம்மீது அணுமின் நிலையத்திலிருந்து தாக்குதல் நடத்தியதாலேயே தாம் திருப்பித் தாக்கியதாகவும், அணுமின் நிலையத்தை உக்ரேனியர்களே தீவைத்துக் கொழுத்தியதாகவும் ரஸ்ஸியா மறுத்திருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தைப் பார்க்கும்போது முள்ளிவாய்க்கால் யுத்த சூனிய வலயத்திற்குள்  கனரக ஆயுதங்களை நகர்த்திய புலிகள் அங்கிருந்து தம்மீது தாக்கியதாலேயே தாம் திருப்பித் தாக்கியதாகவும், மக்களை புலிகளே கொன்றதாகவும் இலங்கை அரசு கூறியது நினைவிற்கு வருகிறது.

ஜெனீவா சாசனத்தின்படி மக்களின்பாவனைக்கென்று இயங்கும் அணுசக்தி மின்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறானது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட, ரஸ்ஸியா இதனை உதாசீனம் செய்தே இந்த  மின் நிலையம் மீது தாக்குதலினை மேற்கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உக்ரேனின் கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலினை நடத்தியமை

Ukrainian adviser to UNESCO: "I know Russians, and they will not respect  the heritage of Ukraine" - ePrimefeed

உக்ரேனின் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் மீது மக்களின் பாதுகாப்புக் குறித்து சட்டை செய்யாது ரஸ்ஸிய நடத்திவரும் சகட்டுமேனித் தாக்குதல்களினால் உக்ரேனின் பல கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள், புராதன நினைவாலயங்கள், கலையம்சம் பொருந்திய சிற்பங்கள், புராதன தேவாலயங்கள் மற்றும் உக்ரேன் மக்களின் கலாசாரத்தினை, வரலாற்றினை எடுத்தியம்பும் பல கட்டிடங்கள் அடங்குகின்றன. தமிழர் தாயகத்தின் பல கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்களையும் அடையாளங்களையும் சிங்கள அரசு இலக்குவைத்து அழித்தமைக்கு ஒப்பானது ரஸ்ஸியாவின் இந்த திட்டமிட்ட கலாசார அழிப்பு.

ரஸ்ஸியாவினால் உக்ரேனில் அழிக்கப்பட்ட கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்களில் மரியோபுல்லில் அமைந்திருக்கும் குயின்ட்ஸி கலை நூதனசாலை, சேர்னிவ் பகுதியில் அமைந்திருந்த சோவியத் ஒன்றிய காலத்து திரையரங்கு மற்றும் புராதன சிற்பக்கலைகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்த நூலகம், தலைநகர் கியிவில் அமைந்திருந்த நாஜிகளால் கொல்லப்பட்ட உக்ரேனியர்களின் நினைவாலயம், சைடொமிர் பிராந்தியத்தில் அமைந்திருந்த மரத்தால் முழுதுமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த 19 ஆம் நூற்றாண்டு தேவாலயம், இவன்கிவ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சரித்திர தொன்மைவாய்ந்ததும், உக்ரேனிய மக்களின் தனித்துவமான கலாசாரத் தொன்மையினைக் கொண்டிருந்ததுமான நூதணசாலை ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

உக்ரேனில் ரஸ்ஸியா நடத்திவரும் திட்டமிட்ட கலாசார அழிப்புப் பற்றி அறிக்கை ஒன்றினை பங்குனி 1 இல்  வெளியிட்டிருக்கும் யுனெஸ்கோ அமைப்பு, ஆக்கிரமிப்பு ஆரம்பித்த முதல் இரு வாரங்களுக்குள் உக்ரேனின் கலாசாரத் தொன்ப்மையினையும், தனித்துவத்தையும் எடுத்தியம்பிய 98 சரித்திர கட்டிடங்கள், புராதன தேவாலயங்கள், நூதணசாலைகள் ஆகியவை முற்றாக அழிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஒரு இனத்தின் கலாசாரப் பாரம்பரியம் மிக்க சொத்துக்களுக்கான பாதுகாப்பென்பது சர்வதேசச் சட்டங்களில் முக்கியமானதென்பதுடன், இவற்றின் மீதான தாக்குதல்கள் மனிதாபிமானத்திற்கெதிரான தாக்குதல்களாகக் கணிக்கப்படுகின்றன. ஜெனீவா சாசனத்தின்படி கலாசாரத் தொன்மை மிக்க கட்டிடங்கள் சொத்துக்கள் போரின்போது இரு தரப்பாலும் பாதுக்காக்கப்படவேண்டும் என்கிற நியதி இருப்பதுடன், இவற்றின் மீதான தாக்குதல்கள் அவ்வினத்தின் மீதான தாக்குதல்களாகக் கணிக்கப்படக் கூடியவை என்று சொல்கின்றது.

ஒரு இனத்தின் கலாசாரத்தினை, வரலாற்றினை, அவர்களின் கலை பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றுகின்ற கட்டிட அமைப்புக்கள், சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் இனவழிப்பாகக் கருத்தப்படுவதுடன், இதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்படும் தரப்பு வழக்குத் தொடர்வதற்கான சாத்தியங்களும் இருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் இருந்த பல நூற்றுக்கணக்கான புராதன கோயில்களும், சின்னங்களும் சிங்கள ஆக்கிரமிப்பில் வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது எமது கலாசாரச் சின்னங்கள் ராணுவத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சிங்கள பெளத்தம் முளைக்கத் தொடங்கியிருக்கிறது.

ஆகவே ஈழத்தமிழினம் சந்தித்த கலாசார இனவழிப்பை உக்ரேனும் தற்போது சந்தித்து வருகிறது.

எமது முள்ளிவாய்க்காலினை ஒத்த, உக்ரேனில் ரஸ்ஸியா நடத்தும் போர்க்குற்றங்களும் இனவழிப்பும் பற்றிய விபரங்கள் தொடரும்.........
Ukraine added 158 monuments and cultural sites damaged or destroyed by  Russia - ePrimefeed

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முள்ளிவாய்க்காலை இன்னொரு நாட்டின் யுத்தத்துடன் ஒப்பிடுவது சுத்த அயோக்கியத்தனம் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Kapithan said:

முள்ளிவாய்க்காலை இன்னொரு நாட்டின் யுத்தத்துடன் ஒப்பிடுவது சுத்த அயோக்கியத்தனம் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. 

நீங்கள் எப்பிடிச்சொன்னாலும் எனக்கு உறைக்காது.ஏனெண்டால் நானொரு விடாக்கண்டன் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மீதான ரஸ்ஸியாவின் திட்டமிட்ட தாக்குதல்கள்

உக்ரேனில் செயற்பட்டுவரும் ஐ நா மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் பங்குனி 26 ஆன்று வெளியிட்ட அறிக்கையில் குறைந்தது 74 வைத்தியசாலைகள், மருத்துவ நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்திருக்கிறது. இவற்றுள் 61 வைத்தியசாலைகள் உக்ரேன் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஸ்ஸிய வான்படை மற்றும் ஏவுகணைகளைக்கொண்டு தாக்கப்பட்டிருக்கின்றன. இத்தாக்குதல்களில் பலத்த சேதமடைந்த வைத்தியசாலைகளில் இஸியம், மரியோபுல், ஒவ்ருச், வொல்னொவாகா, வூலெடார் ஆகிய வைத்தியசாலைகளைக் குறிப்பிட முடியும்.
அதேபோன்று ரஸ்ஸிய ராணுவத்தின் துணையுடன் போராடும் கிளர்ச்சிக் காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 9 வைத்தியசாலைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.  மேலும் 4 வைத்தியசாலைகள் உக்ரேனிய அரசின் கட்டுப்பாடின் கீழ் அல்லாமலும், ரஸ்ஸிய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லாமலும் இருக்கும் பகுதிகளில் தாக்கப்பட்டிருக்கின்றன. 

இன்றுவரைக்கும், குறைந்தது 6 சிசுப் பராமரிப்பு நிலையங்களும், மகப்பேற்று மருத்துவமனைகளும், 10 சிறுவர் வைத்தியசாலைகளும் ரஸ்ஸிய ராணுவத்தால் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கப்பட்டிருக்கின்றன. 

மாசி 24 ஆம் திகதியன்று, வுலெடார் வைத்தியசாலை மீது ரஸ்ஸியா கொத்தணிக் குண்டுகளை ஏவித் தாக்கியதில் குறைந்தது 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் 10 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள். இத்தாக்குதலில் வைத்தியசாலையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டதோடு, வெளியே நின்றிருந்த பல நோயாளர் காவுவண்டிகளும் தீக்கிரையாக்கப்பட்டன. 

பங்குனி 8 ஆம் திகதி அன்று இஸியம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த மத்திய மருத்துவமனை மீது ரஸ்ஸியா தாக்குதல் நடத்தி முற்றாக அழித்திருந்தது. மேலும் பங்குனி 11 அன்று இதே பகுதியில் அமைந்திருந்த மனநலம் குன்றியோரைப் பராமரிக்கும் மருத்துவமனைமீது ரஸ்ஸியா நடத்திய தாக்குதலில் இந்த மருத்துவமனையும் கடுமையான சேதங்களுக்கு உள்ளானது. 

இவ்வாறே பங்குனி 9 ஆம் திகதி, தெளிவாக அடையாளமிடப்பட்டிருந்த மரியோபுல் மருத்துவமனையினை ரஸ்ஸியா இலக்குவைத்துத் தாக்கியது. இத்தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது பிறவாத சிசுவும் கொல்லப்பட்டதுடன், இன்னும் 17 பேர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள்.

புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மருத்துவமனைகள் தெளிவாக அடையாளம் காணப்பட்டபோதும், செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவல்களைப் பாவித்து இலங்கை ராணுவம் இவ்வைத்தியசாலைகள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு நிகரானது ரஸ்ஸியாவின் இத்தாக்குதல்கள்.

பங்குனி 30 ஆம் திகது உலக சுகாதார ஸ்த்தாபனம் வெளியிட்ட அறிக்கையில்,"மாசி 24 முதல் ரஸ்ஸியா நடத்திவரும் தாக்குதல்களில் குறைந்தது 82 வைத்தியசாலைகள், மகப்பேற்று மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனைகள், மனநிலை குன்றியோர் கண்காணிப்பகங்கள் உட்பட பல மருத்துவ நிலைகள் தாக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களும், வைத்திய உதவியாளர்களும் இத்தாக்குதல்களின்போது கொல்லப்பட்டிருக்கின்றனர்" என்று உறுதிப்படுத்தியிருக்கிறது.

மேலும் வைத்தியசாலைகளில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் வைத்திய சேவையாளர்களீன் எண்ணிக்கை தமக்குக் கிடைத்த ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களின்படி 72 என்று கூறும் சுகாதார ஸ்த்தாபனம், உண்மையில் இத்தாக்குதலின் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறுகிறது.  இதே காலப்பகுதியில் வைத்தியசாலைத் தாக்குதல்களில் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 என்றும் அது கூறுகிறது.
இறுதியாக இத்தாக்குதல்களின் எண்ணிக்கையினை மதிப்பிட்டிருக்கும் உலக சுகாதார ஸ்த்தாபனம், இன்றுவரை 91 வைத்தியசாலைகளை ரஸ்ஸிய ராணுவம் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழித்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஒரு நாட்டின் வைத்தியசாலைகள் போரின்போது தவிர்க்கப்படவேண்டிய பகுதிகள் என்று இருக்க, அவற்றின்மீதான ரஸ்ஸியாவின் வேண்டுமென்று திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும் தாக்குதல்கள் , இலங்கையின் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் சிங்கள ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு நிகரானவை. இவை போர்க்குற்றங்களாகக் கணிக்கப்படக் கூடியவை. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ரஸ்ஸிய ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்கள் சிலவற்றின் விபரங்கள்

டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட்

The aftermath of the missile attack at Kramatorsk, Donetsk oblast.  https://t.co/C0AUwEH4iC - EU Agenda

மாசி 24 ஆம் திகதி, ரஸ்ஸிய ராணுவமும், ரஸ்ஸிய ஆதரவுபெற்ற கிளர்ச்சிக்காரர்களும் முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட துறைமுக நகரான மரியோபுல் மீது மிகக் கடுமையான ஏவுகணை மற்றும் பல்குழல் எறிகணை வீச்சினை மேற்கொண்டிருந்தனர். இப்பகுதியில் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ரஸ்ஸியா முற்றாகத் தடுத்துவிட்டு நடத்திய இத்தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் பலியானார்கள். வன்னிக் கொலைக் களத்தில் எமது உறவுகளுக்கான உணவையும் மருந்தையும் முற்றாகத் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது இலங்கை ராணுவம் மேற்கொண்ட அழித்தொழிப்புத் தாக்குதலுக்கு நிகரானது இத்தாக்குதல். 
மரியோபுல் முற்றுகைக்குள் நாளாந்தம் பலியிடப்படும் பொதுமக்களின் அவலங்கள் தொடர்பாக பிரிதொரு இணைப்பில் மேலும் பேசலாம்.

மரியோபுல் நாடக அரங்கு மீதான ரஸ்ஸியாவின் ஏவுகணைத் தாக்குதல்

Mariupol theatre bombing killed 300, Ukrainian officials say | Ukraine |  The Guardian

பங்குனி 16 அன்று, டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்திருந்த நாடக அரங்கு மீது ரஸ்ஸிய ராணுவம் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதலினை மேற்கொண்டது. மரியோபுல் பகுதியில் இருந்த இந்த நாடக அரங்கினை வான்குண்டுவீச்சில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் ஒரு காவல்க் கட்டிடமாக மரியோபுல் நகர நிர்வாகம் பாவித்து வந்தது. மரியோபுல் மீதான் முற்றுகை ஆரம்பித்த நாட்களிலிருந்து சுமார் 1200 பொதுமக்கள் இந்த அரங்கினுள் தஞ்சம் அடைந்திருந்தனர். ரஸ்ஸியாவின் தாக்குதலில் இந்த நாடக அரங்கு ஏறக்குறைய முழுவதுமாக அழிக்கப்பட்டது. போரிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளவென்று மக்கள் தஞ்சமடையும் இடங்களை இலக்குவைத்துத் தாக்குவது போர்க்குற்றங்களுக்குள் அடங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது. 

தாக்குதல் நடந்த சில நாட்களின் பின்னர் கருத்துத் தெரிவித்த மீட்புப் பணியாளர்கள், கட்டிட இடிபாடுகளுக்கிடையேயும், இன்னமும் எரிந்துகொண்டிருக்கும் கட்டிடப் பகுதிக்குள்ளும் பெருமளவு பொதுமக்கள் அகப்பட்டிருப்பதாகவும், கொல்லப்பட்ட மக்களின் முற்றான எண்ணிக்கை தெரிய சில வாரங்களாவது ஆகும் என்று கூறினர். அத்துடன், இப்பகுதிமீது ரஸ்ஸியா தொடர்ச்சியாக நடத்திவரும் மூர்க்கத்தனமான எறிகணைத் தாக்குதல்களால் இடிபாடுகளிடையே அகப்பட்டிருப்போரை உயிருடன் மீட்பதற்கான சாத்தியங்கள் குறைந்துவருவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த நாடக அரங்கு உக்ரேன் நாட்டு மக்களின் கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடமாகக் கருதப்பட்டு வந்தது. அதனாலேயே இக்கட்டிடத்தைக் குறிவைத்து ரஸ்ஸியா தாக்கியதாக நம்பப்படுகிறது. பங்குனி 14 அன்று இக்கடிடத்தை படமெடுத்த செய்மதிகள் இக்கட்டிடத்தின் இரு புறங்களில் "சிறுவர்கள்" என்று ரஸ்ஸிய மொழியில் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. குண்டுவீச்சிலிருந்து சிறுவர்களையும் பொதுமக்களையும் காத்துநிற்கும் இக்கட்டிடத்தினை ரஸ்ஸிய ராணுவம் தாக்குதலில் இருந்து தவிர்ப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டிருந்தது. மரியோபுல் பகுதியில் இருந்த மிகப்பெரிய குண்டுவீச்சு காப்புக் கட்டிடமான இந்த அரங்கினை ரஸ்ஸியா திட்டமிட்டே தாக்கி அழித்திருக்கிறது. 

War in Ukraine: Estimated 300 dead in Mariupol theatre strike - BBC News

பின்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி சிறுவர்கள் உட்பட குறைந்தது 300 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருப்பதை மரியோபுல் நகர நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், தனது தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டது வெளித்தெரிய ஆரம்பித்ததையடுத்து, இவ்வரங்கம் உக்ரேனிய சிறப்புப் படையணியான அசோவ் பட்டாலியனின் தளமாகப் பாவிக்கப்பட்டதாக ரஸ்ஸியா அப்பட்டமாகப் பொய்யுரைத்தது. ஆனால், தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில் அங்கு சென்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் ரஸ்ஸியாவின் குற்றச்சாட்டினை முற்றாக மறுத்ததோடு, அப்பகுதியில் உக்ரேனிய ராணுவத்தினரின் பிரசன்னமோ அல்லது ராணுவ வாகனங்களின் பிரசன்னமோ இருக்கவில்லையென்பதை உறுதிப்படுத்தியிருந்தார்கள். 
 

வன்னிக்கொலைக்களத்தில் செஞ்சோலைச் சிறார்களின் இல்லத்தைக் குண்டுவீசி அழித்து 58 சிறுமிகளைக் கொன்றுவிட்டு புலிகளின் பாசறையென்று கதிர்காமரும் சிங்களமும் நியாயப்படுத்தியது நினைவிற்கு வருகிறது. 

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மரியோபுல் வைத்தியசாலை மீதான விமானத் தாக்குதல்

Russia shifts stance on hospital bombing that sparked world outrage |  Reuters

பங்குனி 9 ஆம் திகதியன்று மரியோபுல் மருத்துவமனை மீது ரஸ்ஸியா விமானத் தாக்குதலை மேற்கொண்டது. தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக இயங்கிவந்த இந்த பிரதான வைத்தியசாலையினையே ரஸ்ஸிய விமானப்படை இலக்குவைத்துத் தாக்கியது. தாக்குதலின்போது வைத்தியசாலை முற்றாகச் சேதமாக்கப்பட்டதுடன் பலர் காயங்களுக்கு உள்ளானார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அவளது பிறவாத சிசிவும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். ரஸ்ஸியாவினால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட வைத்தியசாலை மீதான தாக்குதல் போர்க்குற்றமாகவும், இனவழிப்பின் கூறுகளைக் கொண்டிருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

Ukrainian woman and baby carried on stretcher from bombed Mariupol hospital  die after surgery - ABC News

 

மரியோபுல்லின் மக்கள் குடியிருப்புப் பகுதிமீது நடந்த கடுமையான பல்குழல் எறிகணைத் தாக்குதல்

பங்குனி 2 ஆம் திகதி, 15 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மரியோபுல்லின் மக்கள் செறிந்துவாழும் குடியிருப்புக்களை நோக்கி ரஸ்ஸிய ராணுவம் மிகக் கடுமையான பல்குழல் எறிகணை வீச்சினை நடத்தியது. நகர்ப்பகுதியின் இடதுபக்கம் இத்தாக்குதல்களினால் முற்றாக சிதைத்தழிக்கப்பட்டது. 
மேலும் பூரண முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மரியோபுல் வெளித்தொடர்புகள் அனைத்துமிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருப்பதுடன், நகருக்கான நீர் விநியோகம், மின்சாரம், உணவு வழங்கல்கள், எரிவாயு என்பனவும் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளன. போதிய நீர்வசதியின்றி 6 வயதுச் சிறுமி உட்பட இன்னும் சிலர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கின்றனர்.

செய்மதியூடாகப் பெறப்பட்ட ஒளிப்படங்களின்படி மரியோபுல் நகருக்கு ஏற்பட்டிருக்கும் அழிவின் அளவு வெளித்தெரிய ஆரம்பித்திருக்கிறது. பங்குனி 9 ஆம் திகதி எடுக்கப்பட்ட இந்தச் செய்மதிப் புகைப்படங்களில் மக்கள் குடியிருப்புக்களாக இருந்த பல்லடுக்குத் தொடர்மாடிகள், கடைத்தொகுதிகள், வங்கிகள், மக்கள் கூடும் முற்றங்கள் என்பன மிகக் கடுமையான சேதத்தினைச் சந்தித்திருக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது.

Mariupol Residents Fight to Survive in Bombed and Besieged City - The New  York Times

மரியோபுல் நகர நிர்வாகத்தினர் இந்தத் தாக்குதல் பற்றிக் கூறும்போது நகரின் 90 வீதமான கட்டிடங்கள் இலக்குவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றுள் 30 - 40 வீதமான கட்டிடங்கள் பாவிக்கமுடியாதளவிற்கு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். "நகரின் எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணுக்குத் தெரிவது எரியுண்டு கோதுகளாகத் தெரியும் மக்களின் குடியிருப்புக் கட்டிடங்கள் மட்டும் தான்" என்று தாக்குதலின் பின்னர் அங்கு சென்ற ரொயிட்டர்ஸ் செய்தியாளர் கூறுகிறார்.

பங்குனி 16 அன்று பி பி ஸி வெளியிட்ட செய்தியில் இந்நகர் மீதான ரஸ்ஸியாவின் தொடர்ச்சியான செல்த்தாக்குதல்களால் மரியோபுல் நகரும், சுற்றியுள்ள பகுதிகளும் முற்றாகப் பாழடைந்த நிலம் போலக் காட்சியளிக்கிறது என்று கூறியது. ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களூடாக மரியோபுல் மீது நடத்தப்பட்ட அகோரம் தெரிவதாகவும், பல கட்டிடங்களிலிருந்து தீயும், கரிய புகை மண்டலமும் இன்னும் வெளிவந்துகொண்டிருப்பதாகவும் அது கூறியது. கட்டிட இடிபாடுகளால் நிரப்பட்ட தெருக்கள், அடையாளம் தெரியாது உருக்குக்லைந்து போன வாகனங்கள், பிரதேசத்திலிருந்து மேலெழும் புகை மண்டலம்..இவை எல்லாமே மரியோபுல் நகரைச் சுடுகாடு போல ஆக்கிவிட்டிருந்தது என்று அது மேலும் கூறியது. 

யுத்தங்களின்பொழுது மக்களின் அவலங்களை அவதானித்து ஆவணப்படுத்தும் ஐ.எஸ். டபிள்யூ அமைப்பு இத்தாக்குதல் பற்றிக் கூறுகையில், "மரியோபுல் நகரத்தின் அடையாளமே தெரியவில்லை. அங்கே எந்தவி மக்கள் குடியிருப்பும் எழுந்து நிற்கவில்லை, எல்லாமே முற்றாக அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகக் கிடக்கின்றன. பொதுமக்களை இலக்குவைத்து ரஸ்ஸியா நடத்தும் இந்தத் தாக்குதல் முற்றான போர்க்குற்றம் அன்றி வேறில்லை" என்று கூறுகிறது.

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மரியோபுல் மீதான அழித்தொழிப்பின்போது படுகொலைசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகளை பாரிய புதைகுழிகளில் போட்டு மூடிமறைத்து வருகிறது சர்வாதிகாரி புட்டினின் ஆக்கிரமிப்பு ராணுவம்

Mariupol: Satellite images suggest mass graves dug near besieged city - BBC  News

செய்மதிகளூடாக எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மரியோபுல் பகுதிகளில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகளை ரஸ்ஸிய ராணுவம் பாரிய குழிகளில் புதைத்துவருவது தெரிந்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்போது யுத்த சூனிய வலயத்தில் அகப்பட்ட குறைந்தது மூன்று லட்சம் மக்களை கொன்றொழித்துவந்த சிங்கள ராணுவம் பலரை அவர்கள் பதுங்கியிருந்த பதுங்கு குழிகளுக்குள்ளும், இன்னும் பலரை பாரிய புதைகுழிகளிலும் மூடி தனது போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை இறுதிநாட்களில் அழித்துவந்தது. அதற்கு நிகரான சாட்சிய அழித்தல்களையே ரஸ்ஸியா தற்போது மரியோபுல்லில் செய்துவருகிறது.

Corpses In The Street: Mariupol Is Being Devastated By Relentless Russian  Attacks

மரியோபுல்லின் தெருக்களில் கொல்லப்பட்டு வீசப்பட்டிருந்த அப்பாவி உக்ரேனியர்களின் உடல்களை ரஸ்ஸிய ராணுவத்தின் பாரவூர்திகள் சேகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் உக்ரேனியர்களின் உடல்கள் மன்ஹுஷ் எனும் பகுதியில் அமைந்திருக்கும் பழைய சேமக்காலைக்கு அருகில் ரஸ்ஸியாவினால் தோண்டப்பட்டு வரும் பாரிய மனிதப் புதைகுழிகளில் கொட்டப்பட்டு மூடப்படுவதாக மரியோபுல்லின் நகர மேயர் வாடிம் போய்செங்கோ கூறுகிறார். 

"ஆக்கிரமிப்பாளர்கள் தமது போர்க்குற்றங்களை மறைப்பதில் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள். பழைய சேமக்காலைக்கும் எரிபொருள் களஞ்சியசாலைக்கும் இடையே அமைந்திருக்கும் நிலத்தில் 30 மீட்டட் நீளத்தில் பல குழிகளை தோண்டிவரும் ரஸ்ஸிய ராணூவம் அவற்றில் எமது மக்களைப் புதைக்கத் தொடங்கியிருக்கிறது" என்று கூறுகிறார்.

கடந்த வியாழன் அன்று இப்பகுதியை தனது செய்மதிகள் மூலம் படம்பிடித்த அமெரிக்க நிறுவனமான மக்ஸார் டெக்னோலொஜி, அப்பகுதியில் பாரிய மனிதப் புதைகுழிகள் இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர்வரையில் வெற்று நிலமாக இருந்த இப்பகுதியில் தற்போது ரஸ்ஸியா குறைந்தச்து 200 புதைகுழிகளை தோண்டியிருப்பதை செய்மதிகள் தெளிவாகப் படம்பிடித்திருக்கின்றன.

மன்ஹுஷ் பகுதியில் எடுக்கப்பட்ட, இருவாரங்களுக்கு முன்னரான செய்மதிப்படங்களை தற்போது எடுக்கப்பட்டிருக்கும் செய்மதிப் படங்களோடு ஒப்பிடுகையில் இந்த பதுங்குழிகள் அண்மையில் ரஸ்ஸியாவினால் அமைக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது.

இப்பகுதியில் ரஸ்ஸிய ஆக்கிரமிப்புப் படை இனக்கொலையினை ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரையில் குறைந்தது 20,000 மக்கள் கொல்லப்பட்டிருப்பதை தம்மால் உறுதிப்படுத்த முடியும் என்று மேயர் கூறுகிறார். கொல்லப்பட்ட பலரின் உடல்கள் தற்போது அவசர அவசரமாக ரஸ்ஸியர்களீனால் அகற்றப்பட்டு வருவதுடன், பலர் நடமாடும் தகன வாகனங்களில் ஏற்றப்பட்டு உடனுக்குடன் எரிக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

Russia Using Mobile Crematoriums in Ukraine

"மரியோபுல் பகுதியை தாம் உக்ரேனிலின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்திருக்கிறோம்" எனும் சர்வாதிகாரியும், போர்க்குற்றவாளியுமான புட்டினின் பிதற்றலைக் கடுமையாகச் சாடும் மேயர், "நாம் எமது பிரதேசத்திலிருந்து முற்றாக விலகவில்லை. எமது வீரர்கள் இன்னும் அப்பகுதியில் இருக்கும் இரும்புத் தொழிற்சாலையில் இருந்து போராடி வருகிறார்கள், அவர்களுடன் இன்னும் 1000 பொதுமக்களாவது அங்கே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் " என்று அவர் கூறுகிறார்.

"உண்மையாகவே அங்கு முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை எமக்குத் தெரியாது. அவர்களை எம்மால் இதுவரையில் மீட்க முடியவில்லை. ஒரு நாள் யுத்த நிறுத்தம் ஏற்பட்டால்க் கூட நாம் அவர்களை வெளியே பாதுகாப்பாக அழைத்துவரமுடியும். மிகவும் கடுமையான சூழ்நிலையிலும், பலத்த காயங்களுடனும், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஏதுமின்றி அவதிப்படும் எம்மக்கள் மீது புட்டினின் படைகள் கொடுமையான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன" என்றும் அவர் கூறினார்.
 

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Situation in Azovstal steel plant 'desperate,' Ukraine says - ABC News

ரஸ்ஸிய சர்வாதிகாரி புட்டின் தனது ஆதரவாளர்களிடையே பேசும்போது தனது ராணுவத்தை மரியோபுல் இரும்புத் தொழிற்சாலைமீது தாக்குதலை மேற்கொள்ளவேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளதாக கூறினார். தனது பாதுகாப்பு அமைச்சர் சேர்கி ஷொகு தமது ராணுவம் இன்னும் ஆயிரக்கணக்கான உக்ரேனிய ராணுவத்தினருடம் சண்டையிட்டு வருவதாக அறிவித்த சில மணிநேரத்தின்பின்னரே சர்வாதிகாரி புட்டினின் மேற்படி அறிக்கை வெளிவந்திருந்தது.

"இரும்புத் தொலிற்சாலையினுள் உள்நுழைவது சாத்தியமற்றது. பல சுரங்கப் பாதைகளையும், நிலக்கீழ் வலையமைப்பையும் கொண்ட அத்தொழிற்சாலையினுள்நுழைந்து போராடுவதைக் காட்டிலும், அப்பகுதியைச் சுற்றி முற்றான முற்றுகையினைக் கொண்டுவருவதன் மூலம், இன்னமும் உள்ளிருந்து போராடும் உக்ரேனியர்களை அடிபணியவைக்க முடியும்" என்று புட்டின் கூறினார்.

மேற்குலக ராஜதந்திரிகளின் கணிப்பின்படி தொழிற்சாலையினைச் சூழ்ந்து சுமார் 5000 முதல் 10,000 வரையான ராணுவத்திணரை ரஸ்ஸியா நிறுத்தியிருப்பதாக நம்புகிறார்கள். உள்ளிருந்து எதிர்த்துச் சண்டையிடும் உக்ரேனியர்களின் எண்ணிக்கை ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்கே இருப்பதனால், மேலதிக ஆக்கிரமிப்புப் படைகளை ரஸ்ஸியா டொன்பாஸ் பகுதியில் தம்மை எதிர்த்துச் சண்டையிடும் உக்ரேனிய வீரர்களுக்கெதிரான சண்டையில் பாவிக்க சர்வாதிகாரி புட்டின் முயலக்கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டொன்பாஸ் பகுதியில் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் ஆரம்பித்திருக்கும் புதிய நில ஆக்கிரமிப்பு குறைந்தது ஒருவருடமாவது செல்லும் என்று நம்பப்படுகிறது. 

மரியோபுல் பகுதியை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவிட்டதாக சர்வாதிகாரி புட்டினும் அவரது ஆதரவாளர்களும் கூற ஆரம்பித்திருப்பதை எள்ளிநகையாடியிருக்கும் உக்ரேனிய அதிபர், "அவர்களால் அசோவ்டல் பகுதியை ஒருபோதுமே முழுவதுமாகக் கைப்பற்ற முடியாது. அது அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. நாம் அவர்களுக்கு மிகக் கடுமையான இழப்புக்களை அங்கே ஏற்படுத்தியிருக்கிறோம்" என்று கூறுகிறார்.

Ukraine: Mariupol says Russia forcefully deported thousands

மரியோபுல் நகர மேயர் மேலும் கூறுகையில், "குறைந்தது ஒரு லட்சம் உக்ரேனியர்களை ரஸ்ஸிய ராணுவம் தனது ஆக்கிரமிப்பில் வைத்திருக்கிறது. மேலும் 40,000 உக்ரேனியர்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக ரஸ்ஸியாவினுள் இழுத்துச் சென்றிருக்கிறது. இன்னும் ஒரு லட்சம் பேர் ரஸ்ஸிய முற்றுகைள்ளிருந்து தப்பித்து வெளியேறி இருக்கின்றனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் ரஸ்ஸிய "புலநாய்வு" முகாம்களில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள்" என்று கூறுகிறார்.

Russia transfers thousands of Mariupol civilians to its territory - BBC News

முள்ளிவாய்க்கால் இனக்கொலை முடிந்த நாட்களில் சிங்கள ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட 280,000 பொதுமக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து புலிகளைத் தேடுகிறோம் என்கிற பெயரில் பல ஆண்களையும் பெண்களையும் இழுத்துச் சென்று கொன்றும், பாலியல் வன்புணர்விற்குப் பின்னர் படுகொலை செய்தும் தமது வக்கிரத்தைக் காட்டிய சிங்கள மிருகங்களுக்கு நிகரான அட்டூழியங்களை சர்வாதிகாரி புட்டினின் ஆக்கிரமிப்பு ராணுவம் மரியோபுல் மக்கள் மீது நடத்தி வருகிறது என்பது தெளிவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

திரும்பவும் முட்ஞலில் இருந்தா ? 

உக்ரேனில் சண்டை முடிந்தாலும் இராணுவ மனிதாபிமான ஆய்வாளர்களின் ஆய்வுகள் முடியாது போலகிடக்கு ?

🤣

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைனில் இருந்த 7 வருடங்களில் குறைந்தது முன்று தடவை மரியோப்புல் போயுள்ளேன். ஒவ்வொரு தடைவையும் இரண்டு கிழமைகள் அங்கு தங்குவேன்.

அழகான அசோவ் மோரே ( கடற்கரை )  றால் அவித்து விற்கும் ரஷ்யன் பாட்டிகள், சுவையான சவர்மா என்று மறக்க முடியாத நாட்கள் அவை.

இப்பொழுது இந்த அழிவு நடந்த இடங்களை பார்க்கும் பொழுது எனக்கு  அங்குள்ள பலரின் ஞாபகங்கள் வந்து போகின்றது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, பகிடி said:

உக்ரைனில் இருந்த 7 வருடங்களில் குறைந்தது முன்று தடவை மரியோப்புல் போயுள்ளேன். ஒவ்வொரு தடைவையும் இரண்டு கிழமைகள் அங்கு தங்குவேன்.

அழகான அசோவ் மோரே ( கடற்கரை )  றால் அவித்து விற்கும் ரஷ்யன் பாட்டிகள், சுவையான சவர்மா என்று மறக்க முடியாத நாட்கள் அவை.

இப்பொழுது இந்த அழிவு நடந்த இடங்களை பார்க்கும் பொழுது எனக்கு  அங்குள்ள பலரின் ஞாபகங்கள் வந்து போகின்றது.

இங்கே நாங்கள் எல்லாம் உக்ரேனை கூகிள் மப்பில் (மப்பிலும்) பார்த்த கூடங்கள்தான்.

அந்த மக்கள் பற்றிய உங்கள் அனுபவங்கள் எப்படி? அவர்கள் பெரும்பாலும் இன, நிற வெறியர், நாஜிகள் என பலரும் மேற்கு ஐரோப்பாவில் இருந்து சொல்வது எந்தளவு உண்மை. 

எனது வேலையின் நிமித்தம் உக்ரேனில் இருக்கும் மட்டுபட்ட நாஜி பிரசன்னம் பற்றி அறிந்துள்ளேன்.  ஆனால் இது பல்கேரிய, ஹங்கேரி ஏன் ஜேர்மனியில் கூட உள்ள விடயம்தான். இதை விடவும் மேலதிகமாக இன வெறியர்களா உக்ரேனியர்கள்? உங்கள் அனுபத்தில்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன்.

நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன்.

படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன்.

டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள்.

நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள்  போய் இருக்கின்றேன் இவர்களுடன்.

குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான்.

நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான்.

 

நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன்.

Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர்.

 

வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது.

இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால்.

நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார்.

நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம்.

எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம்.

ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி.

மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள்.

ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை.

கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் 

கிவ்

இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும்.

இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல😄.)

ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள்.

கிரிமியா

இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம்.

2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க

வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன்.

இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே..

அனுப்பவ படிப்பினைகள் இவைதான்

1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில்.

2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு .

3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 

4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 

4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

  • Like 9
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பகிடி said:

பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.

இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே..

நீங்கள் படிக்கும் காலத்தில், கண்டு அனுபவித்த சம்பவங்களை... 
எமக்கு தொகுத்து தந்தமைக்கு, மிக்க நன்றி பகிடி.  👍

உக்ரைனுக்கு... வெள்ளைக்காரனின் பத்திரிகை செய்திகளை நம்பி,
முட்டுக் கொடுக்கும் யாழ். கள  அனுதாபிகள்...
மேலே  மேற்கோள் காட்டியதை,
மூளையில்  பதியும் மட்டும்,
திரும்ப, திரும்ப படிக்கவும்.  😎

உக்ரேன்காரன் பயங்கர சுத்துமாத்து காரன் என்று..
பலமுறை நாம் சொல்லியும், நம்பாமல் இருந்தவர்களுக்கு 
அந்த சம்பவத்தை போல்... பிணம் மாதிரி நடித்து 
மேற்குலகின் அனுதாபத்தை பெற என்னவும் செய்வார்கள் என்பதற்கு
நேரில் கண்ட சாட்சி அது.

இனியும்...  வெள்ளைக்காரனுக்கு, முட்டுக்  கொடுப்போருக்கு,
ஆழ்ந்த அனுதாபங்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் படிக்கும் காலத்தில், கண்டு அனுபவித்த சம்பவங்களை... 
எமக்கு தொகுத்து தந்தமைக்கு, மிக்க நன்றி பகிடி.  👍

உக்ரைனுக்கு... வெள்ளைக்காரனின் பத்திரிகை செய்திகளை நம்பி,
முட்டுக் கொடுக்கும் யாழ். கள  அனுதாபிகள்...
மேலே  மேற்கோள் காட்டியதை,
மூளையில்  பதியும் மட்டும்,
திரும்ப, திரும்ப படிக்கவும்.  😎

உக்ரேன்காரன் பயங்கர சுத்துமாத்து காரன் என்று..
பலமுறை நாம் சொல்லியும், நம்பாமல் இருந்தவர்களுக்கு 
அந்த சம்பவத்தை போல்... பிணம் மாதிரி நடித்து 
மேற்குலகின் அனுதாபத்தை பெற என்னவும் செய்வார்கள் என்பதற்கு
நேரில் கண்ட சாட்சி அது.

இனியும்...  வெள்ளைக்காரனுக்கு, முட்டுக்  கொடுப்போருக்கு,
ஆழ்ந்த அனுதாபங்கள். 😁

தமிழ் சிறி ஐயா, திரும்பத் திரும்ப மூளையில் பதியும்படி படியுங்கள்!👇🏾

 

4 hours ago, பகிடி said:

அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்

பேய்க்காட்டியது ரஷ்ய ரவுடிகள்தான்..

 

தனது அனுபவங்களையும், உக்கிரேன் பற்றிய தகவல்களையும் தொகுத்துத் தந்த “பகிடி”க்கு நன்றி🙏🏽

 

சிங்களக் காடைகளை வடக்கு கிழக்கில் குடியேற்றத் திட்டங்களில் குடியமர்த்தியது மாதிரி டொன்பாஸில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு அனுப்பிய ரஷ்யக் குற்றவாளிகளைக் குடியேற்றியிருக்கின்றார். இப்போது அவர்களின் பரம்பரையினரை வைத்து பூட்டின் உக்கிரேனை இரண்டாகப் பிளக்கின்றார். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, கிருபன் said:

தமிழ் சிறி ஐயா, திரும்பத் திரும்ப மூளையில் பதியும்படி படியுங்கள்!👇🏾

 

பேய்க்காட்டியது ரஷ்ய ரவுடிகள்தான்..

 

தனது அனுபவங்களையும், உக்கிரேன் பற்றிய தகவல்களையும் தொகுத்துத் தந்த “பகிடி”க்கு நன்றி🙏🏽

 

சிங்களக் காடைகளை வடக்கு கிழக்கில் குடியேற்றத் திட்டங்களில் குடியமர்த்தியது மாதிரி டொன்பாஸில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு அனுப்பிய ரஷ்யக் குற்றவாளிகளைக் குடியேற்றியிருக்கின்றார். இப்போது அவர்களின் பரம்பரையினரை வைத்து பூட்டின் உக்கிரேனை இரண்டாகப் பிளக்கின்றார். 

நானும் இதே மாதிரிதான் யோசித்தேன், வடக்கு கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றி எம்மை இரண்டாம் தர பிரசைகள் ஆக்கியது போல நடந்துள்ளது. எந்த நாடாக இருக்கட்டும், பெரும்பான்மை இனங்களுக்கு பக்கத்தில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு எப்பவுமே சிக்கல்தான் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, பகிடி said:

நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன்.

நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன்.

படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன்.

டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள்.

நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள்  போய் இருக்கின்றேன் இவர்களுடன்.

குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான்.

நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான்.

 

நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன்.

Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர்.

 

வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது.

இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால்.

நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார்.

நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம்.

எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம்.

ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி.

மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள்.

ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை.

கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் 

கிவ்

இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும்.

இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல😄.)

ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள்.

கிரிமியா

இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம்.

2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க

வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன்.

இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே..

அனுப்பவ படிப்பினைகள் இவைதான்

1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில்.

2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு .

3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 

4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 

4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

நண்பர் பகிடி .....மிகவும் சிறப்பான தகவல்கள் கொண்ட ஒரு கட்டுரை தந்திருக்கிறீர்கள்......இதை நீங்கள் நிர்வாகத்திடம் சொல்லி தனியாக யாழ் 24 அகவைக்கு மாற்றலாமே ......பலரும் படிப்பார்கள்.....இன்னும் 3/4 நாட்கள்தான் இருக்கின்றன........ முடிந்தால் கூடுதலான சம்பவங்களையும் சேர்க்கலாம்.......!  👍

Edited by suvy
சிறு திருத்தம்.
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, suvy said:

நண்பர் பகிடி .....மிகவும் சிறப்பான தகவல்கள் கொண்ட ஒரு கட்டுரை தந்திருக்கிறீர்கள்......இதை நீங்கள் நிர்வாகத்திடம் சொல்லி தனியாக யாழ் 24 அகவைக்கு மாற்றலாமே ......பலரும் படிப்பார்கள்.....இன்னும் 3/4 நாட்கள்தான் இருக்கின்றன........ முடிந்தால் கூடுதலான சம்பவங்களையும் சேர்க்கலாம்.......!  👍

நன்றி

எனக்கு எப்படி இதை நிர்வாகத்திடம் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லையே 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பகிடி said:

நன்றி

எனக்கு எப்படி இதை நிர்வாகத்திடம் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லையே 

நீங்கள் மேலே எழுதியதை… கொப்பி பண்ணி, 
சுய ஆக்கம் பகுதியில், புதிய தலைப்பை திறந்து… பதிந்து விடுங்கள்.
இதுகும் அப்படியே இருக்கட்டும்.

Posted

@பகிடி,

உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பொன்றைத் தந்தால் இதனை யாழ் 24 அகவைக்கு மாற்றி விடுகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, இணையவன் said:

@பகிடி,

உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பொன்றைத் தந்தால் இதனை யாழ் 24 அகவைக்கு மாற்றி விடுகிறேன்.

 

எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓம்.....சிறியர் சொல்வதுபோல் இதுவும் அப்படியே இங்கும் இருக்கட்டும்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் மேலே எழுதியதை… கொப்பி பண்ணி, 
சுய ஆக்கம் பகுதியில், புதிய தலைப்பை திறந்து… பதிந்து விடுங்கள்.
இதுகும் அப்படியே இருக்கட்டும்.

நன்றி தமிழ் சிறி அவர்களே.யாழ் அகவை 24 இல் சுய ஆக்கம் பகுதியில் பதிந்து உள்ளேன் 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee   “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந்த சந்திரமோகனின் தோளைப் பற்றியபடி மெதுவாக நடந்து வெளியில் வந்தான். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். நல்லவேளை என்று டாக்டர் சொன்னது நீலகண்டனின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நல்லவேளைதான். இடுப்பில் அடிபடவில்லை. காலையில் அந்தப் பல்லங்காடிக்குச் சென்றபோது மனம் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வழக்கத்தைக் காட்டிலும் வண்டியை வேகமாக ஓட்டினான். வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வருகையில் வழக்கத்தைக் காட்டிலும் நடை வேகம் கூடியிருந்தது. சொல்லப்போனால் சிறு துள்ளல் இருந்தது. பக்கத்தில் வந்த சந்திரமோகன் வியப்பாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அங்காடியின் நுழைவாயிலுக்கு முன்பு மூன்று படிகள் இருந்தன. நீலகண்டன் தரையிலிருந்து தன்னையறியாமல் துள்ளி மூன்றாம் படிக்குத் தாவினான். மூன்றாம் படியில் காலை வைக்கும்போது கால் பிரண்டு தடுமாறி விழுந்தான். சந்திரமோகன் பதறிப்போய்த் தாங்கிப் பிடித்தான். நீலகண்டன் சுதாரித்தபடி எழுந்து நின்றான். லேசாக வலித்தது. அங்காடியின் நுழைவாயிலில் இருந்த காவலர் தன்னுடைய நாற்காலியில் உட்காரச் சொன்னார். சந்திரமோகன் உள்ளே சென்று தண்ணீர் வாங்கிவந்து குடிக்கச் சொன்னாள். நேரமாக ஆகக் கால் வலி கூடியபடி இருந்தது. ஏதேனும் பெரிதாக அடிபட்டிருக்குமோ என்று பயந்த நீலகண்டன் கால் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க எழுந்து நின்றான். மறுகணம் உடல் முழுவதும் உதறலெடுக்க, சடாரென்று உட்கார்ந்துகொண்டான். காலைக் கீழே வைக்கையில் பொறுக்க முடியாத வலி உடல் முழுவதையும் உலுக்கியது. சந்திரமோகன் பயந்துபோனான். “என்ன ஆச்சு நீலா…” என்று அவன் தோள்களைப் பற்றினான். நீலகண்டன் சற்று ஆசுவாசமடைந்ததும் சந்திரமோகன் கீழே மண்டியிட்டு அமர்ந்து நீலகண்டனின் காலைப் பார்த்தான். “செருப்ப கழட்டு” என்றான். நீலகண்டன் கழற்றினான். சந்திரமோகன் அவன் காலைத் தொட்டதும் நீலகண்டன் விறுக்கென்று காலை இழுத்துக்கொண்டான். சந்திமோகன் கவலையுடன் நீலகண்டனின் முகத்தைப் பார்த்தான். “ஃப்ராக்சரா இருக்குமோன்று தோணுது நீலா…” என்றான் தணிந்த குரலில். நீலகண்டனின் முகத்தில் வலியின் வேதனை படர்ந்திருந்தது. இடுப்பில் ஏதாவது ஆகியிருக்கிறதா என்று லேசாக இடுப்பை அசைத்துப் பார்த்தான். நல்லவேளை. ஒன்றுமில்லை. “எதுக்கு சார் ஜம்ப் பண்ணி வந்தீங்க?” என்று காவலர் கவலையோடு கேட்டார். நீலகண்டன் தலையைக் குனிந்துகொண்டான். சந்திரமோகன் கேட்க விரும்பிய கேள்விதான் அது என்றாலும் இந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஆட்டோ பிடித்து இருவரும் மருத்துவமனை சென்றார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த டாக்டர் எலும்பு முறிவு இல்லை என்று சொன்னார். உள்ளே பலமாக அடிபட்டிருக்கிறது என்றார். அவனை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போன சந்திரமோகன், நீலகண்டன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினான். வண்டியை மாலையில் கொண்டுவருவதாகச் சொன்னான். “உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? படியில ஒழுங்கா ஏற மாட்டீங்களா? அவ்வளவு என்ன அவசரம்?” என்று கேட்டாள் மஞ்சு. நீலகண்டன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து மஞ்சுவே தொடர்ந்தாள். “ரொம்ப பாத்து பாத்துதானே படில ஏறுவீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு?” என்றாள். நீலகண்டன் பதில் சொல்லவில்லை. அவனுடைய அமைதியைக் கண்டு மஞ்சுவும் அமைதியானாள். அவள் முகத்தில் தெரிந்த வேதனை நீலகண்டனை வருத்தியது. “டீ போட்டு தரயா?” என்றான் நீலகண்டன். மஞ்சு எழுந்து உள்ளே போனாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்காடியின் படிகளில் துள்ளி ஏறிய கணம் திரும்பத் திரும்ப அவன் மனதில் தோன்றியபடி இருந்தது. தெருவின் முனையில் இருந்த பிள்ளையார் கோவிலை ஒட்டித் திரும்பியதும் அவன் கண்கள் ரயில் நிலையத்தின் மதில் சுவருக்கு அப்பால் நீளும் தண்டவாளத்தைப் பார்த்தன. ரயில் வருவது தெரிந்தது. ஓட்டமெடுக்கத் தொடங்கினான். இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிலைய வாசல். பிறகு 22 படிகள். பிறகு 50 அடி நடைபாதை. அதன் பிறகு 22 படிகள். நடந்துபோனால் ரயில் வந்துவிட்டுப் போய்விடும். வேகமாக ஓடி ரயில் நிலையத்தை அடைந்து, மக்கள் கூட்டத்திடையே புகுந்து ஓடி, மூன்று மூன்று படிகளாகத் தாவி ஏறி, படிகளுக்கிடையில் இருந்த பாதையை வேகமாகக் கடந்து மூன்று மூன்று படிகளாகத் தாவி இறங்குவதற்கும் ரயில் நிலையத்திற்குள் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ரயிலில் ஏறி ஓரமாக நின்றுகொண்டான். இது அடிக்கடி நடப்பதுதான். 8.36க்கு மாம்பலம் வர வேண்டிய ரயில் இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக வருவது வழக்கம். நீலகண்டன் 8.35க்குள் ரயில் நிலையத்துக்குள் வந்தால் போதும். ஆனால், அப்படி வருவது அபூர்வம். தாமதமாக வந்து இப்படி ஓடியும் தாவியும் ரயிலைப் பிடிப்பதே வழக்கமாகிவிட்டது. சில சமயம் கணக்குச் சற்றுப் பிசகி ரயில் கிளம்பியிருக்கும். அப்படியும் விடாமல் ஓடி அது ரயில் நிலையத்தைக் கடக்கு முன் தாவி ஏறிவிடுவான். பள்ளியில் படிக்கும்போது நீலகண்டன் எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொள்வான். கபடி, கோகோ, வாலிபால், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் என்று எல்லாவற்றிலும் தீவிரமாக ஈடுபடுவான். விளையாட்டின் வேகம் விளையாடாதபோதும் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதையும் மெதுவாகச் செய்யும் வழக்கம் இல்லை. எனவே நடந்து வந்து ஆசுவாசமாக ரயிலில் ஏறவில்லை என்ற குறையே அவனுக்குத் தெரியவில்லை. ஓடி வந்து ஏறுவதையே இயல்பானதாக அவன் மனம் கருதியது. ஓடி வந்து ரயிலில் ஏறுவது, படிகளில் தாவித் தாவி ஏறுவது, இறங்குவது, சைக்கிளை வேகமாக ஓட்டுவது, மழைக்காலங்களில் சாலைகளில் இருக்கும் சிறிய நீர்த்தேக்கங்களைத் தாண்டிக் கடப்பது என வேகமான இயக்கம் உடலில் இயல்பாகிவிட்டது. தேநீர் இதமாக இருந்தது. மஞ்சு மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்ததுக் கொண்டிருந்தான். மாத்திரைகள் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. வலி குறையவில்லை. அவன் கவனம் வலியில் இல்லை. அங்காடியின் முன் படிகளில் தாவி ஏறிய கணம் மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. மாலதி புன்னகைத்தாள். “என்ன இது, சின்னப் பையன் மாதிரி” என்றாள். “எது!” என்றான் அவள் வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றியவாறே. அவன் உள்ளே வர ஒதுங்கி வழிவிட்ட மாலதி, “வாசப்படில ஏறி வர்ரதுக்குப் பதிலா தாண்டி வந்தீங்களே அதைச் சொன்னேன்” என்றாள். நீலகண்டன் சிரித்தான். “தாவியா வந்தேன்? எனக்குத் தெரியல. இதையெல்லாம் யோசிச்சா செய்வாங்க?” என்றான். மாலதியும் சிரித்தாள். “பரவால்ல. நீங்க நேச்சுரல் அத்லீட்தான்” என்றாள். நீலகண்டன் அந்தப் பாராட்டைப் புன்னைகையுடன் ஏற்றுக்கொண்டான். “டீயா, காஃபியா?” “ம்… டீ. கொஞ்ச நேரம் கழிச்சு. இப்பதான் காஃபி சாப்ட்டேன்.” “ஓ.கே…. சொல்லுங்க நீலகண்டன்… ஈவன்ட எப்டி ப்ளான் பண்ணியிருக்கீங்க?” நீலகண்டன் விளக்க ஆரம்பித்தான். மாலதி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய திருத்தமான புருவங்கள், அகன்ற விழிகள், நேர்த்தியான மூக்கு, எப்போதும் புன்னகையைப் பிரதிபலிக்கும் அழகிய உதடுகள், சற்றே துருத்தி நிற்கும் உருண்டையான மோவாய், புஷ்டியான கன்னங்கள், தலையாட்டும்போது அழகாக ஆடும் காதணிகள், அவ்வப்போது முகத்தில் வந்து விழுந்து அழகைக் கூட்டும் மயிர்க் கற்றைகள், அதை விலக்கிவிடும் அவள் விரல்களின் நேர்த்தியான அசைவுகள் என அவளுடைய அழகை ரசித்தபடி நீலகண்டன் பேசிக்கொண்டிருந்தான். “ஜஸ்ட் எ மினிட்” என்று மாலதி எழுந்துகொண்டாள். அவள் வயதுக்குப் பெரிய உடம்புதான். எழுந்திருப்பதில் சிரமம் தெரிந்தது. மெல்ல நடந்து சென்று குளிர்பதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டு இருக்கையின் மீது இரு கைகளையும் ஊன்றியபடி மிகவும் கவனமாக அமர்ந்துகொண்டாள். நடமாட்டத்தில் அவள் பட்ட சிரமங்களைக் கண்டு நீலகண்டன் வருந்தினான். பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுக் கேட்டான். “எனக்குத் தண்ணி வேணும்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிது?” மாலதி புன்னகைத்தாள். வசீகரமான அந்தப் புன்னகை நீலகண்டனை மயக்கியது. “நீங்க பேசும்போது உங்க நாக்கு ட்ரையா இருந்தது தெரிஞ்சுது” என்றாள். நன்றியைப் புன்னகையால் தெரிவித்த நீலகண்டன் பாட்டிலைக் கையில் எடுத்தபடி எழுந்துகொண்டான். “இஃப் யூ டோன்ட் மைன்ட், நானே உள்ள போய் நார்மல் வாட்டர் எடுத்துக்கலாமா? கோல்ட் வாட்டர் குடிக்கறதில்ல” என்றான். “ஓ ஸாரி…” என்றபடி எழுந்திருக்க முயன்றாள். அவள் நினைத்தாலும் சட்டென்று எழுந்திருக்க முடியாது என்பதை அறிந்த நீலகண்டன், “ப்ளீஸ்… நீங்க இருங்க. நா எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் பாட்டிலை மீண்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தான். போகும்போதும் வரும்போதும் தன்னுடைய வழக்கமான வேகத்தைக் கவனமாகக் குறைத்துக்கொண்டான். மீண்டும் பேசத் தொடங்கினான். “வீக் என்ட்ல டி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியல கூட்டம் அதிகமா இருக்கும்ன்றதால மாம்பலத்துல வெச்சிருக்கோம். நல்லவேளயா பார்க்கிங் ஸ்பேஸோட பெரிய இடம் கிடைச்சிருக்கு…” என்று சொன்னவன் மாலதி தன் உரையாடலைப் பின்தொடரவில்லை என்பதை அறிந்து பேச்சை நிறுத்தினான். அவள் கண்கள் எதிரில் இருந்த சுவரை வெறித்தபடி இருந்தன. அவள் தற்கணத்தில் இல்லை என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. அவளது பருத்த மார்புகள் விம்மித் தாழ்ந்தன. மடியின் மீது வைத்திருந்த கைகளின் பருமன் ஒரு கணம் அவனை அச்சுறுத்தியது. சற்று அகலமான அந்த இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ள அவள் சிரமப்படுவது தெரிந்தது. அதே அளவுள்ள இருக்கை தனக்கு இடம் கொடுத்துக் கிட்டத்தட்டப் பாதி அளவு காலியாக இருப்பது அவனுக்கு உறைத்தது. இந்தப் பருமன் இயல்பானதல்ல என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. முகத்தின் அழகும் அதில் ததும்பும் குழந்தைத்தனமும் அவள் உடலுக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தன. அதிகபட்சம் இவளுக்கு 30 வயது இருக்கலாம். சூமோ பயில்வானைப் போல உடல் இல்லாவிட்டால் அவளைப் பேரழகிகள் பட்டியலில் எளிதாகச் சேர்த்துவிடலாம். நல்ல உயரம். நீளமான விரல்கள். செதுக்கிய சிலை போன்ற முகம். இவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை என்று நீலகண்டன் வருந்தினான். “நீலன்…” என்றாள். தனிப்பட்ட முறையில் பேசும்போது நீலன் என்றுதான் அழைப்பாள். அவள் பேசவிருப்பது அடுத்த மாத நிகழ்வைப் பற்றியல்ல என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். “யூ நோ… ஐம் எ க்லாஸிகல் டான்சர். போத் பரதம் அன்ட் வெஸ்டன்…” என்றாள். முகத்தில் விழும் மயிர்க் கற்றைகளை விலக்கிய விரல்களின் நளினத்திலும் தண்ணீர் பாட்லை நீட்டிய விதத்திலும் அவளுக்குள் இருந்த நடனமணியை உணர்ந்திருந்ததால் நீலகண்டனுக்கு இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை. தான் கேட்க நினைத்ததை உணர்ந்து அவளே அதைப் பற்றிப் பேசத் தொடங்கியதுதான் வியப்பாக இருந்தது. “காலேஜ் கல்சுரல்ஸ், அவுட்டிங்னு எதுவா இருந்தாலும் என்னோட டான்ஸ் இல்லாம இருக்காது. அதுவும் பஸ்ல ஆடின ஆட்டமெல்லாம் மறக்க முடியாது. சிம்ரன் டான்ஸெயெல்லாம் கேட்டு கேட்டு ஆடச் சொல்லுவாங்க. ஒரு மணிநேரமெல்லாம் சலிக்காம ஆடுவேன்…” என்றாள். நீலகண்டன் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அதற்குத் தேவையும் இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. மாலதி தனக்குள் ஆழ்ந்திருந்தாள். தன்னியல்பாக அவள் குரல் ஒலித்தது. மார்புகள் விம்மித் தணிந்தபடி இருந்தன. “போன மாசம் நடந்த ஈவன்ட்ல நீங்க எனக்குப் பண்ணின உதவிய மறக்க மாட்டேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆம்பளைங்க வயசு வித்தியாசம் இல்லாம என்னை சுத்தி சுத்தி வருவாங்க. நான் எப்பவும் மான்போலத் துள்ளிக்கிட்டே இருப்பேன். காலேஜ் பியூட்டி கன்டெஸ்ட்ல மூணு வருஷமும் நான்தான் வின்னர். பசங்க எங்கூட பேசவும் என்னோட நடந்து வரவும் என்ன வண்டில கூட்டிட்டு போகவும் தவம் கெடப்பாங்க. ஆனா இப்ப ஒருத்தனும் கிட்ட வர்ரதில்ல. என் ஒடம்பு அவங்கள மெரட்டி தொரத்தி அடிக்குது. தூரத்துலருந்தே ஒரு ஹாய், ஒரு ஸ்மைல்னு நிறுத்திக்கறாங்க. அழகில்லாத கேல்ஸ ஆம்பளைங்களுக்குப் பிடிக்கறதில்லன்னு நெனைக்கறேன். க்லோஸ் ஃப்ரென்ஸ்கூட கொஞ்சம் தள்ளிப்போக ஆரம்பிச்சபோதுதான் அந்த க்லோஸ்னஸ்ஸுக்கு அர்த்தம் புரிஞ்சிது. எனக்கு அண்ணன் தம்பி யாருமில்ல. அப்பா நான் சின்னவளா இருக்கும்போதே வீட்ட விட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை நேர்ல பாத்த ஞாபகம்கூட எனக்கு இல்ல. போட்டோல பாத்துருக்கேன். ரொம்ப அழகா, ஸ்லிம்மா, ஸ்மார்ட்டா இருப்பாரு. அம்மா பிரசவத்துக்கப்பறம் கொஞ்சம் குண்டடிச்சிட்டாங்க. சைல்ட் கேர், ஃபேமலி கேர், ஆஃபீஸ் வேலைன்னு மூழ்கிப்போனதுல அவங்க பழைய ஸ்டேஜுக்கு வரவேயில்ல. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்ட நடக்கும். அப்பா கோபத்துல கத்தி எதையாவது தூக்கி வீசிட்டு போயிடுவாரு. அப்படி ஒருநாள் போனவர் திரும்பி வரவேயில்ல. அப்படியும் எப்பவோ ஒரு பொண்ணோட அவரை அம்மா எங்கயோ பாத்துருக்கா. அந்தப் பொண்ணு பாக்க நக்மா மாதிரி இருந்தான்னு எங்கிட்ட சொல்லும்போது அம்மா குமுறிக் குமுறி அழுதா. நக்மா மாதிரின்னா என்னன்னு புரிஞ்சிக்கற அளவுக்கு அப்ப எனக்கு வயசாயிருந்துது. அதுக்கு மேல எதுவும் பேசல. அம்மா இன்னும் அதிகமா குண்டாயிட்டே போனா. ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா. டான்ஸ், கராத்தே, மியூஸிக் எல்லாம் கத்துக்க வெச்சா. அவளே கணக்கு, அக்கவுன்ட்ஸ் எல்லாம் சொல்லித் தருவா. ப்ரில்லியன்ட் டீச்சர். ஒரு வருஷத்து சுமையை ஒரே மாசத்துல கொறச்சிட்டா…” மாலதி மூச்சு வாங்கிக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள். “எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்ல? போன மாச ஈவன்ட்ல நான் படி ஏற கஷ்டப்பட்டபோது நீங்கதான் ஓடிவந்து ஹெல்ப் பண்ணினீங்க. உங்க தோள புடிச்கிக்கிட்டு பாதுகாப்பா படி ஏறினேன் இறங்கும்போதும் மறக்காம என்கூட வந்தீங்க. இவ்வளவு பெரிய ஹால்ல ஸ்டெப்ஸுக்குக் கைப்பிடி வெக்கணும்ன்ற அறிவுகூட இல்லாம கட்டியிருக்காங்க. நான் ஏதாவது ஹெல்ப் கேக்க மாட்டனான்னு என்ன பாத்து ஏங்கற ஆம்பளைங்களைப் பாத்து பாத்து சலிச்சிருக்கேன். அதே ஆம்பளைங்க இப்ப சம்பிரதாயமா ஹாய் சொல்லிட்டு ஒதுங்கறதயும் பாக்கறேன். ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க பண்ணின உதவிய மறக்கவே மாட்டேன்…” நீலகண்டன் நெகிழ்ந்து போயிருந்தான். “அதெல்லாம் ஒரு ஹெல்ப்பா மாலதி? எனக்கு முதுடியலன்னா நீங்க கை குடுக்க மாட்டீங்களா?” “நானா, இப்ப இருக்கற நெலமைலயா?” என்று விரக்தியாகச் சிரித்த மாலதி, “அஃப்கோர்ஸ். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது. அப்டி ஹெல்ப் பண்றதுதான் ஹ்யூமன் டென்டன்ஸி. அப்படித்தான் நானும் நம்பறேன். ஆனா அழகான பொண்ணுக்குக் கிடைக்கற உதவில நூத்துல ஒரு பங்குகூட அழகில்லாத பொண்ணுக்குக் கிடைக்காதுன்றத புரிஞ்சிகிட்டபோது மனசுல கூர்மையா ஒரு வலி வருது. அந்த வலியதான் தாங்க முடியல. அதுவும் எப்பவும் ஜென்ஸ் எங்கிட்ட கையேந்தி நிக்கறத பாத்து வளந்ததுனால இந்த வலி இன்னும் அதிகமாகுது…” மாலதி கண்களைத் திறக்கவில்லை. அவள் முகம் வாடியிருந்தது. நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு நிலவிய மௌனமே அவஸ்தையாக மாறத் தொடங்கியபோது நீலகண்டன் மௌனத்தைக் கலைத்தான். “எப்படி இந்த மாதிரி ஆச்சு மாலதி?” மாலதி கண்களைத் திறந்தாள். “பொண்ணா பொறந்த சாபம் நீலன். மென்ஸ்டுரல் ப்ராப்ளம்லதான் எல்லாம் ஆரம்பிச்சுது. இர்ரெகுலர் பீரியட்ஸ். சில சமயம் மூணு நாலு மாசம்கூட பீரியட்ஸ் வராது. அதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்போய் அதோட சைட் எஃப்க்ட்ஸ் ஒடம்பையும் மனசையும் பாதிக்க ஆரம்பிச்சுது. நடுவுல யாரோ சொன்னாங்கன்னு டாக்டர மாத்தி, ஆல்ட்ர்னேட் மெடிசனுக்கு மாறி, மறுபடியும் ஆலோபதிக்கு வந்து அப்டீன்னு ஏகப்பட்ட அலக்கழிப்பு. இந்த வயசுல எப்பவும் மாத்தர சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு நெனச்சாலே கொலவெறி வரும். பீரியட்ஸ் வரதுக்காக கான்ட்ராசெப்டிவ் மாத்திரை சாப்பிட்டு அதனால ஒபிசிட்டி வந்து, ஒபிசிட்டியால டிப்ரஷன் வந்து, டிப்ரஷனால அதிகம் சாப்ட்டுன்னு விஷஸ் சர்க்கில்ல மாட்டிக்கிட்டேன். ஒருவழியா மாத்திரைகள்லேந்து விடுதலையாறதுக்குள்ள ஒடம்பு ரொம்ப பெருத்துப் போச்சு. அதைக் குறைக்கணும்னா டயட், எக்சர்சைஸ்னு எல்லாத்தையும் கவனிக்கணும். வேலைக்குப் போய்கிட்டே இதையும் கவனிக்க முடியல. ஒரு ஸ்டேஜ்ல போதுண்டா சாமின்னு எல்லாத்தையும் உட்டுட்டேன். ஒடமபு குண்டானதால கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி வலின்னு இலவச இணைப்பா நெறய வலி. இத்தனையும் சுமந்துக்கிட்டு எதுக்காக இன்னும் உயிரோட இருக்கேன்னு எனக்கு நெஜமாகவே தெரியல…” மாலதியின் கண்கள் கலங்கியிருந்தன. கண்களைத் துடைக்க அவள் முயலவில்லை. பார்வை விட்டத்தில் நிலைகுத்தியிருந்தது. அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல அர்த்தமுள்ள ஒரு சொல்கூடத் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நீலகண்டன் மௌனமாக அமர்ந்திருந்தான். “என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம என் பின்னால ஓடிவந்த ஆம்பளைங்க, என் பக்கத்துல நின்னு பேசவே அவ்ளோ ஆசைப்பட்ட ஆம்பளைங்க இப்ப என்னைப் பாத்து அரை சிரிப்பு சிரிச்சிட்டு ஒதுங்கிப் போறததான் என்னால தாங்கவே முடியல…” “அது உண்மையிலேயே அவ்வளோ முக்கியமா மாலதி?” நீலகண்டன் மெல்லிய குரலில் கேட்டான். “ஆக்சுவலா பாத்தா இல்லதான். ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் இருந்த நிலமயோட கம்பேர் பண்ணும்போது மனசு கேக்க மாட்டேங்குது. இதுலேந்து எப்படி வெளில வரதுன்னு தெரியல. மேபி உங்கள மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்போல இருக்கு.” அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்காமல் போக மாட்டார்கள் என்று சொல்ல நினைத்து நிறுத்திக்கொண்டான். இதுபோன்ற ஆயத்த பதில்கள் அவளை மேலும் சோர்வடையச் செய்யும் என்று நினைத்தான். “ஸாரி நீலன். ரொம்ப பேசிட்டேன்னு நெனைக்கறேன். ரொம்ப ஸாரி… நீங்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன். கொஞ்சம் இருங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” கஷ்டப்பட்டு எழ முயன்றவளுக்குக் கை கொடுத்து உதவிய நீலகண்டன், “வாங்க, ரெண்டு பேரும் சேந்து டீ போடலாம்” என்றான். “டீ போடறதுக்கு ரெண்டு பேரா” என்று சொன்னபடியே எழுந்துகொண்ட மாலதி கலகலவென்று சிரித்தாள். கல்லூரியில் அவள் வாங்கிய அழகிப் பட்டங்களுக்கான அடையாளமாய் இருந்தது அந்தச் சிரிப்பு. அந்த அழகான முகத்திற்குக் கீழே மெலிந்த கட்டுடலையும் அந்த உடல் ‘மனம் விரும்புதே’ பாடலுக்கு நடனமாடுவதையும் நீலகண்டன் ஒருகணம் கற்பனை செய்துபார்த்தான். “வலி இப்ப எப்படி இருக்கு?” என்றாள் மஞ்சு. தூக்கத்திலிருந்து முழுமையாக வெளியே வராத நீலகண்டன் காலை அசைத்துப் பார்த்தான் சுரீரென்று வலித்தது. வலியின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததைக் கண்ட மஞ்சு பதறினாள். “அடிபட்ட கால அசைக்கக் கூடாதுன்னு தெரியாதா? எதுக்கு இந்த வேல உங்களுக்கு” என்றாள். நீலகண்டன் அசையாமல் படுத்திருந்தான். “சாப்பிடறீங்களா?” என்றாள் மஞ்சு. “பாத்ரூம் போகணும்” என்றான். மஞ்சு கைத்தாங்கலாக அவனைக் கட்டிலிலிருந்து கீழே இறக்கிக் கழிவறைக்கு அழைத்துச் சொன்றாள். மனைவியாகவே இருந்தாலும் இன்னொருவரின் துணையோடு நடக்க வேண்டியிருப்பதை எண்ணி மனம் வருந்தியது. கல்லூரிகளுக்கிடையிலான வாலிபால் போட்டிக்கான பயிற்சிகளும் பயிற்சி ஆட்டமும் முடிய நெடுநேரம் ஆகிவிட்டது. சாம்பல் போர்வை பூமியின் மீது படர ஆரம்பித்திருந்தது. ஆடுகளத்திலிருந்து வண்டியை ஓடடிக்கொண்டு காலியாக இருந்த கல்லுரி வளாகத்தைத் தாண்டும்போது மதில் சுவரின் ஒரு கோடியில் ஏதோ சலனம் கண்டு திரும்பிப் பார்த்தான். யாரோ ஒருவன் இன்னொருவனைப் பலமாகத் தாக்கியது தெரிந்தது. அடி வாங்கியவன் தடுமாறிப் பின்னால் போனபோது இன்னொருவன் அவனை எட்டி உதைத்தான். அடி வாங்கியவன் பின்புறமாகத் தரையில் விழுந்தான். தடுமாறி எழுந்து ஓடப் பார்த்தவனை மூன்றாமவன் இடுப்பில் எட்டி உதைத்தான். அவன் சுருண்டு கீழே விழுந்தான். நீலகண்டனின் ரத்தம் கொதித்தது. “டேய்…” என்று பெரிதாகச் சத்தம் எழுப்பியவாறே வண்டியை அவர்களை நோக்கித் திருப்பினான். வளாகம் முழுவதும் எதிரொலித்த அந்த கர்ஜனையைக் கேட்டு அவர்கள் மூவரும் இவனை நோக்கித் திரும்பினார்கள். சில நொடிகளில் அந்த இடத்தை அடைந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வேகமாக முன்னேறினான். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது அவன் நண்பன் மூர்த்தி. மூர்த்தியை அடித்த ஆட்களை நீலகண்டன் அந்தக் கல்லூரியில் பார்த்ததில்லை. தங்களை நோக்கி ஒண்டி ஆளாக ஒருவன் தைரியமாக முன்னேறுவதைக் கண்ட அந்த மூவரும் இவனைத் தாக்க ஆயத்தமானார்கள். அவர்களில் ஒருவனை நெருங்கிய நீலகண்டன் சட்டென்று இடது காலைத் தரையோடு முன்புறமாகச் சுழற்றி வலது காலுக்கு வலப்புறமாகக் கொண்டுசென்று அந்தக் காலை ஊன்றியபடி வலது காலைச் சுழற்றிப் பின்புறமாக உதைத்தான். சரியாக மோவாயில் இடிபோல இறங்கியது அந்த உதை. அடிபட்டவன் மல்லாந்து விழுந்தான். கோபத்துடன் தன்னை நெருங்கிய இரண்டாமவனைச் சற்றே குனிந்து இடுப்பில் தோள் கொடுத்துத் தூக்கி அப்படியே கீழே போட்டு இடுப்பில் உதைத்தான். ஒரு கணமும் தாமதிக்காமல் மூன்றாமவனின் தாடையில் எட்டி உதைத்தான். ஓரிரு கணங்களில் மூவரும் தரையில் கிடந்தார்கள். உதைக்கும்போது நீலகண்டன் எழுப்பிய ஹுங்காரங்களைக் கேட்டுச் சாலையிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். அடி வாங்கிய மூவரும் ஆட்களின் தலைகள் தெரிவதைப் பார்த்து எழுந்து ஓடினார்கள். நீலகண்டன் மூர்த்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு மதில் சுவரைத் தாண்டிச் சாலையில் இறங்கி ஒரு ஆட்டோவை நிறுத்தினான். கழிவறையிலிருந்து படுக்கைக்கு வர ஐந்து தப்படிகள் போதும். நீலகண்டன் 18 தப்படிகள் நடந்து வர வேண்டியிருந்தது. மஞ்சு பிசைந்து தந்திருந்த உணவைப் படுக்கையில் சரிந்து உட்கார்ந்தபடி தேக்கரண்டியில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தும் சாப்பாடு இறங்கவில்லை. வண்டியை வேகமாக ஓட்டும் பழக்கம் இருந்தாலும் விவஸ்தையில்லாமல் ஓட்டுவதில்லை. தவறு நேரக்கூடிய இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வான். என்றாலும் ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த வண்டி தன்மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாகத் திருப்பியவன் பின்னால் வந்த வண்டியின் மீது மோதிக்கொண்டான். மோதிய வேகத்தில் வண்டி ஒரு புறமும் அவன் ஒரு புறமுமாகக் கீழே விழுந்ததில் வண்டியின் ஒரு பக்கம் பலத்த சேதம். இவனால் எழுந்திருக்க முடியவில்லை. விளையாட்டிலும் சண்டைகளின்போதும் பலமுறை விழுந்து உடனே துள்ளி எழுந்திருக்கிறான். இப்போது அசைய முடியவில்லை ஆம்புலன்ஸ் வந்துதான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இடுப்பெலும்பு முறிந்ததில் அறுவை சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் என எழுந்து நடக்க எட்டு மாதங்கள் ஆயின. சேமிப்பெல்லாம் கரைந்துபோனது. சம்பள இழப்பும் சேர்ந்துகொண்டது. அதையெல்லாம்விடப் பெரிய வலியை டாக்டரின் அறிவுரைகள் தந்தன. உங்களுக்கு இடுப்பில் கம்பி வைத்திருக்கிறோம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேகமாக நடக்கக் கூடாது. அதிக தூரம் நடக்கக் கூடாது. ஓடவே கூடாது. காலில் இயக்கும் கியர் வைத்த வண்டியை விட்டுவிட்டுத் தானியங்கி கியர் வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள். படி ஏறும்போதும் இறங்கும்போதும் கவனம் தேவை. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. யோகாசனம் செய்தால் முன்னால் வளையும் ஆசனங்களைத் தவிர்த்துவிடுங்கள். பேருந்தில் உட்கார்ந்தபடி நீண்ட பயணங்களைச் செய்யாதீர்கள். மாடி வீட்டில் இருந்தால் கீழ்த்தளத்துக்கு மாறிவிடுங்கள் அல்லது எப்போதும் லிஃப்ட் பயன்படுத்துங்கள். பளு தூக்காதீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. எடை கூடினால் இடுப்பில் வலி எடுக்கும். டாக்டர் சொல்லச் சொல்ல நீலகண்டன் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தான். பதில் தெரிந்திருந்தும் தவிர்க்க முடியாமல் அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஸ்போர்ட்ஸ்…?” டாக்டர் கருணையே இல்லாமல் தலையை இடவலமாக ஆட்டினார். “கேரம்போர்டு, செஸ் இதெல்லாம் ஆடலாம். அதிலும் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது.” சாப்பிட்ட தட்டை மஞ்சு எடுத்துக்கொண்டு போனாள். நீலகண்டன் மாத்திரை சாப்பிட்டான். வேகத்தைக் குறைப்பதற்கான ஐந்து ஆண்டுக் காலப் போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காலையில் எங்கிருந்து அந்த வேகம் வந்தது? ஐந்து ஆண்டுக் காலப் பயிற்சி அந்த ஒரு கணத்தில் என்ன ஆயிற்று? அன்றாடம் எத்தனையோ படிகளைப் பொறுமையாக, மெதுவாக, ஒவ்வொரு படியாக ஏறி இறங்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும் இந்தப் படியைப் பார்த்ததும் அந்தத் துள்ளல் ஏன் வந்தது? நல்லவேளை, பட்ட இடத்திலேயே படவில்லை. காலிலும் எலும்பு முறிவு இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்து மீண்டும் படுத்த படுக்கையாகும் நிலை வந்திருந்தால் என்று நினைக்கும்போதே மனம் நடுங்கியது. நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது. தொலைவில் ரயில் சத்தம் கேட்டது. மாலதிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். https://amruthamagazine.com/2024/11/29/281-aravindan-short-story/  
    • சிலரின் அமைதி திமிர் அல்ல அது அவர்களுக்குள் இருக்கும் வலி..
    • வைரமுத்துவின் இரங்கல் பா...   10 பேர் கூட இல்லாத கடைசி ஊர்வலம் இளங்கோவன் செய்த கேவலமான செயல்களுக்கு இதுவே சாட்சி! ஒருவன் இறப்பில் தான் தெரியும் அவன் நல்லவனா கெட்டவனா என்று இதிலிருந்து தெரிகிறது இந்த இளங்கோவன் யார் என்று!    
    • ஆமா..... சுமந்திரன் ஏன் இன்னும் கட்சியின் பேச்சாளர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி, கொள்கையா? சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூட்டம் கூட்டிய போது சுமந்திரன் என்ன செய்தார்? ஏன் அதை நிறைவேற்ற முடியாமல் போனது? இவருக்கு வக்காலத்து  வாங்குவோரின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அடாவடி, சர்வாதிகாரம், தான் மட்டும் முன்னிலை என்கிற கொள்கை.  
    • சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.