Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இனவெறி - உண்மை நிலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவெறி - உண்மை நிலை

ஆஸ்திரேலியா , மெல்போர்ன் நகரில் ராஜபக்சேக்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் குறித்து கொடுத்த துண்டு பிரசுரமொன்றை, கிழித்து எறிந்தார் ஒரு இனவெறியன்.

அந்த ஒரு கணத்திலேயே, தமிழ், சிங்கள ஒற்றுமையும் கிழித்து வீசப்பட்டது.

இதுதான் சிங்களம்.

  • கருத்துக்கள உறவுகள்

1000 தடவை சொல்லியும் நம்மவர் சிலர் விட்டில் பூச்சி போல் சிங்களவனுக்கு முன்னாள் போய்  அவனின் செருப்பை கிளீன் பண்ண லைனில்  நிற்பது வழமையானது .

என்று புத்த பிக்குகள் இனவாதம் கதைக்கும் போது  கலைத்து  கலைத்து அடிபோட வெளிக்கிடுகிறார்களோ  அன்று ஓரளவுக்கு நம்பலாம் .

அந்த குண்டன் சத்தமிட்டு கிழித்தபின் மற்றவர்கள் துண்டை  வாங்காமல் அமைதியாகி நிக்கினம் இதுதான் சிங்களம் . 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் தமக்குள் அடிபட்டுக் கொண்டாலும்.. தமிழனை எதிர்க்கனும் என்றால்.. வேற்றுமை மறந்து ஒன்றாகி விடுவார்கள். ஆனால்.. தமிழர்கள் அப்படியல்ல.. அதற்குள்ளும் கன்னை பிரிச்சு சிங்களவனுக்கு வக்காளத்து வாங்குபவர்கள் இருப்பார்கள். தமிழனை தமிழன் எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அதனால் தான் 1.8 கோடி சிங்களவனுக்கு ஒரு நாடிருக்குது.. 9 கோடி தமிழனுக்கு ஒரு நாடில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு நாட்டில் தான் சகல உரிமைகளையும் அந்நாட்டு குடிமக்களுக்கு சமமாக அனுபவித்துக்கொண்டு தம் சொந்த நாட்டில் தமிழர் அடிமைகளாக வாழவேண்டும் என நினைப்பதும், அவர்கள் உரிமையை பறிப்பதும் எந்தவகையில் நிஞாயம்? அந்த நாட்டில் நின்றுகொண்டு தான் ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமென்றால், தமிழர் ஏன் செய்யக்கூடாது? அதை தடுப்பதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அந்த நாட்டு அரசு இவர்களின்  இரட்டை முகத்தை அறிந்து, வந்த நாட்டிலேயே தமிழரை இப்படி அடக்குகிற இவன் தன் சொந்த நாட்டில் எப்படி தமிழரை அடக்கியிருப்பான் என புரிந்து, இவனை நாடு கடத்த வேண்டும். பிரித்தானியாவில் கழுத்தை வெட்டுவேன் என்று தமிழருக்கு சைகை காட்டியவனில் இவன் ஒன்றும் குறைந்தவனில்லை. அண்டிப்போன நாட்டிலேயே இவ்வளவு திமிரும் சண்டித்தனமும் காட்டுகிறான் முட்டாள்! 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

சிங்கள இனவெறி - உண்மை நிலை

ஆஸ்திரேலியா , மெல்போர்ன் நகரில் ராஜபக்சேக்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் குறித்து கொடுத்த துண்டு பிரசுரமொன்றை, கிழித்து எறிந்தார் ஒரு இனவெறியன்.

அந்த ஒரு கணத்திலேயே, தமிழ், சிங்கள ஒற்றுமையும் கிழித்து வீசப்பட்டது.

இதுதான் சிங்களம்.

கொழும்பிலை தான்... சோத்துக்கும், பாணுக்கும் பஞ்சம்.
அதனால் தான் கொழும்பில்... தமிழருடன் முரண்படாமல் நிற்கிறார்கள்.

அவுஸ்திலேயாவில்... பஞ்சம் இல்லை.
அதுதான்... சிங்களவனுக்கு, இனத் துவேஷம், கொப்பளித்துக் கொண்டு வருகின்றது.

சிங்களவனின் புத்தி... நாய் வாலைப்  போன்றது, அதை நிமிர்த்த சான்ஸே... இல்லை. 🐕

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சிங்களவர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஏன் இந்த தமிழர்ககள் சென்று இந்த நோட்டிசை கொடுக்கின்றார்கள். இவர்கள் இன வெறியர்கள் என்று தெரியும்தானே. பிறகேன் இந்த சந்தர்ப்பத்தில் சென்று கொடுக்க வேண்டும். இது ஒரு புத்திசாலித்தனமான காரியமாக தெரியவில்லை. சிறிது கூட்டம் கலைந்தவுடன் கொடுத்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, colomban said:

இவ்வளவு சிங்களவர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஏன் இந்த தமிழர்ககள் சென்று இந்த நோட்டிசை கொடுக்கின்றார்கள். இவர்கள் இன வெறியர்கள் என்று தெரியும்தானே. பிறகேன் இந்த சந்தர்ப்பத்தில் சென்று கொடுக்க வேண்டும். இது ஒரு புத்திசாலித்தனமான காரியமாக தெரியவில்லை. சிறிது கூட்டம் கலைந்தவுடன் கொடுத்திருக்கலாம். 

இதன் பின்னராவது சிங்களம் கொஞ்சம் மாறி  இருக்கும் என்ற  நப்பாசை  தான்?

நீங்கள்  எங்களை  விட  சிங்களத்தை புரிந்து  வைத்துள்ளீர்கள்  போலும்???

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

இதன் பின்னராவது சிங்களம் கொஞ்சம் மாறி  இருக்கும் என்ற  நப்பாசை  தான்?

நீங்கள்  எங்களை  விட  சிங்களத்தை புரிந்து  வைத்துள்ளீர்கள்  போலும்???

இரண்டு பகுதிக்கும் நோக்கம், கோத்தா வெளியேறவேண்டும்.

ஒரு பகுதி, தமது மக்களை அழித்தார் என்று சொல்கிறது, மறுபகுதி தனது நாட்டினை கொள்ளை அடித்து, வங்குரோத்து நிலை ஆக்கினார் என்கிறது.

பாதை வேறானாலும், நோக்கம் ஒன்று. அதனை புரியாமல், இந்த சிங்கள இனவெறியன் கிழித்து எறிந்தது தவறு. பின்னால் உள்ளவர்கள், வாங்கி, வைத்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்.

அதாவது, கோத்தா வெளியே போகவேணும், நீங்கள் கூறும் காரணத்துக்காக அல்ல, நாம் கூறும் காரணத்துக்காக.

அந்த முட்டாளுக்கு தெரியவில்லை, லசந்தா, எக்னாலிகொட போன்ற சிங்களவர் குடும்பங்களும், நீதி கோரி ஓடுகிறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஆனால் எனக்குத்தெரியும்  கிழித்து  எறிவார்கள்  என்று

போனது  தப்பு  என்பேன் என் அனுபவப்படி....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்தையும் பதிவிடுகிறேன்:
ஒட்டு மொத்தமாக "சிங்கள இனத்தவரை" நம்பி அவர்கள் மூலம் தமிழர் எமக்கு தேனும், பாலும் ஓடும்.. ஒழுகும் என்று எந்த ஒரு தமிழனும் எப்போதும் நினைக்கும் நிலையில் இல்லை.
ஆனாலும் சில யதார்த்தங்களும் உண்டு.
இன்றும் கூட சில மூத்த சிங்கள பத்திரிகையாளர்கள், சமூக செயட்பாட்டாளர்கள், மாணவர்கள் என்று பல தரப்பில் இருந்து தமிழர்களின் உரிமை பறிப்பு, அவர்களின் அழிவுகள் குறித்த ஆழமான பார்வையும், அதற்கான நீதிக்கான செயல்பாடுகளும் இன்றுவரை இருக்கத்தான் செய்கின்றன.

இந்த மெல்போர்ன் நிகழ்ச்சிகூட எமக்கு ஒருவகையில் சாதகம் தான். இதன்மூலம் மீண்டும் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கருத்துக்கள், நியாயங்கள் பக்கம் பக்கமாக இங்கே எழுதுவதைவிட சொல்லப்பட வேண்டிய இடத்தில்  சொல்லப்பட்டால் வெண்டும்.
மேலே உள்ள மெல்போர்ன் தொடர்பான செய்தியில் உள்ள பின்னூட்டங்களையும்  பாருங்கள்,  அதில் கருத்திடும் சிங்களவர்கள் அந்த செயலை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் பாருங்கள். என்னை பொறுத்தவரை இதுகூட தேவைதான்.
கடமையை செய்... பலனை எதிர்பாராதே.    

Edited by Sasi_varnam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

என்னைப் போல் பலருக்கு ட்விட்டர் கணக்கு இல்லை என்பதால், screen shot எடுத்து, இங்கே ஒட்டி விடுங்கள். சிங்களவர்கள் சொல்வதை அறிய உதவும். 👍

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

என்னைப் போல் பலருக்கு ட்விட்டர் கணக்கு இல்லை என்பதால், screen shot எடுத்து, இங்கே ஒட்டி விடுங்கள். சிங்களவர்கள் சொல்வதை அறிய உதவும். 👍

நாதம் அதில் இருக்கும் "Read 132 replies" இணைப்பை சொடுக்க ட்விட்டர் கணக்கு இல்லாதவர்களும் அதில் பதிந்துள்ள பின்னூட்டங்களை வாசிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Sasi_varnam said:

நாதம் அதில் இருக்கும் "Read 132 replies" இணைப்பை சொடுக்க ட்விட்டர் கணக்கு இல்லாதவர்களும் அதில் பதிந்துள்ள பின்னூட்டங்களை வாசிக்கலாம்.

நன்றி.... நான் யூரியூப்பில மினக்கெடுவதால், டிவீட்டர், விசயம் தெரியாது..

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, Sasi_varnam said:
இந்த மெல்போர்ன் நிகழ்ச்சிகூட எமக்கு ஒருவகையில் சாதகம் தான். இதன்மூலம் மீண்டும் பெரும்பாலான சிங்கள மக்களின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய கருத்துக்கள், நியாயங்கள் பக்கம் பக்கமாக இங்கே எழுதுவதைவிட சொல்லப்பட வேண்டிய இடத்தில்  சொல்லப்பட்டால் வெண்டும்.

நான் இதைச் சொல்லவந்தேன், தாங்கள் ஏற்கனவே கூறிவிட்டீர்கள். 

இந்த நிகழ்ச்சிக்குச் சென்ற இளையோர் தமிழின உணர்வாளர்களே (22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே தலைவி; ஏதிலிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ஆஸ். வாழ் தமிழ்ப்பெண்). அவர்களின் அமைப்பின் நிகராளி கோத்தா மாமாவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர் சார்பில் பங்கெடுக்க அழைக்கப்பட்டதின் காரணமே அவர்கள் அங்கு சென்றனர். சென்று தமிழினப்படுகொலை பம்லெட்களை அப்போராட்டத்தில் வழங்கினர். இனவாதமும் வெடித்தது; சிங்கள பெரும்பான்மையின் இனவாத முகம் மீண்டொருமுறை சிரித்தது. 
 
---------------

சிங்களவர் எப்போதும் இந்த இனவாத மனநிலையில் தான் இருக்கின்றார்கள்; அது இடத்திற்கும் சூழ்நிலைக்கும் தக்காற்போல மாறும். அவர்கள் அதிலிருந்து ஒருபோதும் மீளப்போவதில்லை. துவிட்டரில் கருத்திட்டுள்ள சிங்களவர் (தமிழ் இனப்படுகொலையை ஓமென்ற ஐயா தவிர்த்து) அனைவரும் தங்கள் இனமோர் 'இனவாத இனம்' என்ற சிந்தனை மீண்டும் வெளிப்பட்டுள்ளது/ தெரியவந்துள்ளது என்ற அச்சத்தாலே அங்கு நொண்டிச்சாட்டுக்கள் கூறியுள்ளனரே ஒழிய இவர்களும் அவ்விடத்தில் இருந்திருந்தால் இதுதான் அவர்களின் கருத்தாகவும் இருந்திருக்கும் என்று உறுதியாக நம்பிக்கூறுகிறேன். அவர்கள் இதைக் கண்டித்ததின் காரணம், தற்சமயம் அவர்கட்கு தமிழனின் கை தேவைப்படுவதால்தான். இல்லையேல் இன்று தமிழ்கார்டியனை வசை பாடியிருப்பர்.

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை சரிசெய்தல்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

தற்சமயம் அவர்கட்கு தமிழனின் கை தேவைப்படுவதால்தான். இல்லையேல் இன்று தமிழ்கார்டியனை வசை பாடியிருப்பர்.

100 வீத உண்மையுள்ள கருத்து  நன்னி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியகீதம், தமிழில் பாடும் கிளுகிளுப்புகளால், தமிழர் எடுபடாமல் அமைதியாக இருந்ததுக்கு சான்று இந்த கண்ணாடியின் மனஓட்டம் தான்.

வயிற்றுப்பாட்டுக்கு வசதி இல்லை, பசி வந்தவுடன் தமிழர் மனிதராக கொழும்பில் தெரிந்த அதேவேளை, வசதி வந்தவுடன் சிங்களம் எப்படி நடக்கும் என்பதற்கு, மெல்போனில், வசதியாக வாழும் இந்த சிங்களவர் உதாரணமாக இருக்கிறார்.

சிங்களத்தை நம்ப ஒரு காரணமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்+
39 minutes ago, பெருமாள் said:

100 வீத உண்மையுள்ள கருத்து  நன்னி .

🙏🙏

சென்ற அக்கா எதையோ எதிர்பார்த்துச் செல்ல, ஆனால் அங்கே அவர்/நாம் எதிர்பாராத ஆனால் எமக்கு சாதகமான அதே நேரம் சிங்களவரின் கள்ளத்தனத்தை - ஒன்றித்தல் - வெளிப்படுத்தும் விதமான சம்பவம் நடந்துவிட்டது; நல்லதே நடந்தது. 

அங்கே சென்றோர் அடிவாங்காமல் திரும்பியது வரை மகிழ்ச்சியே!

ஒன்றிப்போம் என்ற பசுத்தோலின்கீழ் ஒளிந்திருந்த சிங்களம் என்ற ஓநாய் கெதிப்பட்டு வாய்திறந்து புலப்பட்டுவிட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

இவ்வளவு சிங்களவர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஏன் இந்த தமிழர்ககள் சென்று இந்த நோட்டிசை கொடுக்கின்றார்கள். இவர்கள் இன வெறியர்கள் என்று தெரியும்தானே. பிறகேன் இந்த சந்தர்ப்பத்தில் சென்று கொடுக்க வேண்டும். இது ஒரு புத்திசாலித்தனமான காரியமாக தெரியவில்லை. சிறிது கூட்டம் கலைந்தவுடன் கொடுத்திருக்கலாம். 

சிங்களவர் மனம்  என்றும் மாறாது, தமிழர் காயம் என்றும் ஆறாது என்பதை இவர்களின் இனவெறியை உலகுக்கு வெளிச்சம்  போட்டு காட்டியுள்ளது. சிங்களத்தின் கள்ள முகத்தை  அங்கே கிழித்து காட்டியவர்களுக்கு எனது பாராட்டுக்கள். கூட்டம் கலைந்தபின் சென்று கொடுப்பதால் யாருக்கு என்ன தெரிந்துவிடப்போகிறது? இனிமேல் இவனின் முகத்தை காணும் யாவரும் இவனது இன வெறியை காண உதவியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிங்களவர்களை குறை சொல்ல முடியாது, இது இயற்கை, பல ஆயிரமாண்டிற்கு முன்பு மனிதன் காடுக்ளில் திரிந்த போது கூட்டமாக தனது பாதுகாப்பினை கருதி வாழ்ந்துள்ளான், இந்த கூட்ட மனப்பான்மை அந்த கூட்டத்தின் முடிவெடுப்பவர்க்ளின் தவறுகளை கண்ணை மூடிக்கொண்டு தனது தவறாகவே நினைத்து நியாப்படுத்துகின்ற நிலைப்பாடுதான்.

காலம் மாறினாலும் மனிதனது கற்கால தற்காப்பு  பொறிமுறை மாறாது, தானாகவே கற்காலம் போலவே செயல்படுகிறது. 

தமிழர்கள் எவ்வாறு தம்மை விட சிறுபான்மையாக உள்ள இனத்துடன் செயற்படுகிறார்கள்?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காத்தான் குடி படுகொலைகளை பற்றிய துண்டு பிரசுரம் வினியோகிப்பட்டால் எவ்வாறு தமிழர்கள் எதிர்வினையாற்றுவார்கள்? என்ற கேள்வியினை எமக்கு நாமே கேட்டுக்கொண்டால், இனவாதத்திற்கு எமக்கும், சிங்களவர்களுக்குமிடையே உள்ள இடைவெளி புரியும்.

இந்த கருத்து யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல, அவ்வாறு யாராவது புண்பட்டிருந்தால், மன்னிக்கவும்.

எமது பார்வையிலும் மாற்றம் வேண்டும். நாங்கள் தமிழர்கள் ஒரு முன் மாதிரியான இனமாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஸக்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்களவர் மட்டுந்தான், அவர்களின் ஆர்பாட்டத்தில் தமிழர் சென்று துண்டுப்பிரசுரம் வழங்கியது தவறு என்கிறீர்களா? காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகை மட்டுந்தான் நடந்தது, அவர்கள் தமிழருக்கு எந்த தவறும் இழைக்கவில்லை என்கிறீர்களா? அல்லது இந்த போராட்டம் இலங்கையில் நடந்தது ஆகவே சிங்களவருக்கு மட்டுந்தான் என்று சொல்ல வருகிறீர்களா? அவர்களே எங்களை அடிமைப்படுறத்துகிறார்கள் காலங்காலமாய், பின் அவர்களுக்கு பயம் என்று உணர்கிறீர்களா? அப்போ எங்களுக்கு பயமேயில்லை என நினைக்கிறீர்களா? இப்போ என்னதான்  சொல்ல வருகிறீர்கள்  என்று புரியவில்லையே? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/5/2022 at 21:55, Nathamuni said:

ஆஸ்திரேலியா , மெல்போர்ன் நகரில் ராஜபக்சேக்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் குறித்து கொடுத்த துண்டு பிரசுரமொன்றை, கிழித்து எறிந்தார் ஒரு இனவெறியன்.

 சருகு ஆமையை கட்டிலில் படுக்க வைத்தாலும் அது சருகைத்தான் தேடிப்போகுமாம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இங்கு சிங்களவர்களை குறை சொல்ல முடியாது, இது இயற்கை, பல ஆயிரமாண்டிற்கு முன்பு மனிதன் காடுக்ளில் திரிந்த போது கூட்டமாக தனது பாதுகாப்பினை கருதி வாழ்ந்துள்ளான், இந்த கூட்ட மனப்பான்மை அந்த கூட்டத்தின் முடிவெடுப்பவர்க்ளின் தவறுகளை கண்ணை மூடிக்கொண்டு தனது தவறாகவே நினைத்து நியாப்படுத்துகின்ற நிலைப்பாடுதான்.

காலம் மாறினாலும் மனிதனது கற்கால தற்காப்பு  பொறிமுறை மாறாது, தானாகவே கற்காலம் போலவே செயல்படுகிறது. 

தமிழர்கள் எவ்வாறு தம்மை விட சிறுபான்மையாக உள்ள இனத்துடன் செயற்படுகிறார்கள்?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காத்தான் குடி படுகொலைகளை பற்றிய துண்டு பிரசுரம் வினியோகிப்பட்டால் எவ்வாறு தமிழர்கள் எதிர்வினையாற்றுவார்கள்? என்ற கேள்வியினை எமக்கு நாமே கேட்டுக்கொண்டால், இனவாதத்திற்கு எமக்கும், சிங்களவர்களுக்குமிடையே உள்ள இடைவெளி புரியும்.

இந்த கருத்து யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல, அவ்வாறு யாராவது புண்பட்டிருந்தால், மன்னிக்கவும்.

எமது பார்வையிலும் மாற்றம் வேண்டும். நாங்கள் தமிழர்கள் ஒரு முன் மாதிரியான இனமாக இருக்கவேண்டும்.

முள்ளி நினைவேந்தலில் காத்தான்குடி பிரசுரம் விநியோகிப்பது பற்றி எமது உண்மையான அபிப்பிராயங்கள் என்ன ??  சிந்தனையை தூண்டும் ஒரு பகுதி ......

பிரசுரம் தர வரும் போது முசுலிம் ஊர்காவலினர் அரங்கேற்றிய காட்டுமிராண்டித்ததனங்கள் பற்றிய விபரங்களையும் கூடவே கொண்டு வந்து விநியோகித்தால் , இரண்டு பிரசுரங்களையும் ஒன்றாகக் பெற்றுக்கொள்ளுதல் கொளகை அடிப்படையில் எனக்கு சம்மதமே ....

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்று-  பிரசுர விநியோகிப்பிற்கு முன்னர் அவர்கள் அஞ்சலி செலுத்தி முள்ளி கஞ்சியும் குடித்திருப்பார்கள் என்பது அடிப்படை எடுகோளும் அனுமானமும் ஆகி நிற்கின்றது ....

பெரும்பான்மை தமிழர் கோகோத்தாவை ஆதரிப்பது போல ...............

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

ராஜபக்ஸக்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்களவர் மட்டுந்தான், அவர்களின் ஆர்பாட்டத்தில் தமிழர் சென்று துண்டுப்பிரசுரம் வழங்கியது தவறு என்கிறீர்களா? காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகை மட்டுந்தான் நடந்தது, அவர்கள் தமிழருக்கு எந்த தவறும் இழைக்கவில்லை என்கிறீர்களா? அல்லது இந்த போராட்டம் இலங்கையில் நடந்தது ஆகவே சிங்களவருக்கு மட்டுந்தான் என்று சொல்ல வருகிறீர்களா? அவர்களே எங்களை அடிமைப்படுறத்துகிறார்கள் காலங்காலமாய், பின் அவர்களுக்கு பயம் என்று உணர்கிறீர்களா? அப்போ எங்களுக்கு பயமேயில்லை என நினைக்கிறீர்களா? இப்போ என்னதான்  சொல்ல வருகிறீர்கள்  என்று புரியவில்லையே? 

4 hours ago, சாமானியன் said:

முள்ளி நினைவேந்தலில் காத்தான்குடி பிரசுரம் விநியோகிப்பது பற்றி எமது உண்மையான அபிப்பிராயங்கள் என்ன ??  சிந்தனையை தூண்டும் ஒரு பகுதி ......

பிரசுரம் தர வரும் போது முசுலிம் ஊர்காவலினர் அரங்கேற்றிய காட்டுமிராண்டித்ததனங்கள் பற்றிய விபரங்களையும் கூடவே கொண்டு வந்து விநியோகித்தால் , இரண்டு பிரசுரங்களையும் ஒன்றாகக் பெற்றுக்கொள்ளுதல் கொளகை அடிப்படையில் எனக்கு சம்மதமே ....

எந்த நிக்ழ்விலும் யாரும் துண்டு பிரசுரம் கொடுக்கலாம், அதில் தவ்றில்லை.  கூற வந்த விடயம் என்னவென்றால் சிங்களவர்களைப்போலவே தமிழர்களுக்கும் இனவாதமுண்டு, இஸ்லாமியர்களிடமும் உண்டு. அனைவரும் தவறு செய்தவர்கள்தான், ஆனால் அனைவரும் தவறுகளை ஏற்றுகொள்ள முன்வருவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் இனவாதம் கொண்டு யாரையும் அழிக்கவில்லை, தம்மை அழிக்க வந்தவர்களிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்ததே ஒழிய தாமாக போய் யாரையும் தாக்கி  அழித்து சம்பாதிக்கவில்லை, அடிமைப்படுத்தவும் இல்லை யானறிய. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.