Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தைவானில் மோதும் அமெரிக்கா, சீனா: நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் பிராந்தியத்தில் பதற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தைவானில் மோதும் அமெரிக்கா, சீனா: நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் பிராந்தியத்தில் பதற்றம்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 
நான்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவானுக்குச் சென்றிருக்கிறார். இது மிகவும் ஆபத்தானது என்று சீனா கூறியுள்ளது.

"நெருப்புடன் விளையாடுகிறார்" என்று சீனா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது. நெருப்புடன் விளையாடுவோர் அழிந்து போவார்கள் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

தைவான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை.

கடந்த 25 ஆண்டுகளில் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் மிக மூத்த அமெரிக்க அரசியல்வாதி நான்சி பெலோசி.

"நான்சி பெலோசியின் பயணம் சர்ச்சையையோ, மோதலையோ ஏற்படுத்துவதற்கான எந்தக் காரணமும் இல்லை" என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

தைவானில் வந்திறங்கிய நான்சி பெலோசி, தனது பயணம் நீண்ட கால அமெரிக்காவின் கொள்கைக்கு இசைவானது என்றும் எந்த நாட்டின் இறையாண்மையையும் மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.

பெலோசியின் விமானம் தைவானில் வந்திறங்கியபோது, சீனாவின் பெருநிலப்பரப்புக்கும் தைவானுக்கும் இடையே உள்ள தைவான் ஜலசந்தியை சீனாவின் ராணு விமானங்கள் கடந்து சென்றதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் தைவான் அப்போது அதை மறுத்தது. பின்னர் 20 ராணுவ விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு எல்லைக்குள் வந்ததை ஒப்புக் கொண்டது.

தைவானை பிரிந்து சென்ற மாகாணமாக கருதும் சீனா, ஒரு நாள் அதனுடன் ஒன்றிணையும் என்று நம்புகிறது. தைவான் விவகாரத்தில் தலையிட்டால் ஆயுதப்படைகள் "சும்மா நிற்காது" என்று முன்னர் எச்சரித்தது.

விமானம் வந்த ஒரு மணி நேரத்திற்குள், தனது ராணுவம் இந்த வார இறுதியில் தைவானைச் சுற்றி வான் மற்றும் கடலில் தொடர்ச்சியான ராணுவப் போர் ஒத்திகைகளை நடத்தும் என்று அறிவித்தது. இந்தப் பயிற்சியில் உண்மையான குண்டுகள் பயன்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கும் சீனா, இந்தப் பகுதிகளுக்குள் கப்பல்கள் மற்றும் விமானங்கள் நுழைய வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறது.

ஏற்கெனவே சீனாவுக்கும் தைவானுக்கும் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற எல்லைக் கோட்டை ஒட்டி தனது விமானங்களை சீனா நிறுத்தியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

"தைவானின் துடிப்பான ஜனநாயகத்தை ஆதரிப்பதில் அமெரிக்காவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை" மதிப்பதாகவே தனது பயணம் அமைந்திருப்பதாகவும், அமெரிக்க கொள்கைக்கு முரணாக இல்லை என்றும் நான்சி பெலோசி கூயிருக்கிறார்.

தைவான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

நான்சி பெலோசியின் வருகைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் தைவானில் பேரணிகள் நடந்தன

தைவான் நாடாளுமன்றத்தில் அவர் இன்று உரையாற்ற இருக்கிறார். அதிபர் சாய் இங்-வென்னை சந்தித்துப் பேச இருக்கிறார்.

இதனிடையே, நான்சி பெலோசியின் தைவான் பயணம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு அமெரிக்கத் தூதருக்கு சீனா சம்மன் அனுப்பியுள்ளது.

தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே ஆழமான பொருளாதாரப் பிணைப்பு இருக்கும் நிலையில், பெலோசியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தைவானின் பல்வேறு பொருள்களுக்கு சீனா தடை விதித்திருக்கிறது.

சீனா - தைவான் என்ன பிரச்னை?

தைவான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலான "முதல் தீவு சங்கிலி" (first island chain) என்றழைக்கப்படும் பட்டியலில் தைவான் உள்ளது.

சீனா தைவானை கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும் என்றும் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க ராணுவ தளங்களை அது அச்சுறுத்தக் கூடும் என்றும் சில மேற்கத்திய வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சீனா, தைவான்

ஆனால், சீனா தனது நோக்கங்கள் முழுவதும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது.

தைவான் சீனாவில் இருந்து பிரிந்தது ஏன்?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா-தைவான் பிரிவு ஏற்பட்டது.

கம்யூனிஸ்டுகள் 1949-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தைவானுக்கு தப்பி ஓடியது.

தைவானுக்கு தப்பியோடிய பிறகு, சியாங் காய்-ஷேக் கோமின்டாங் கட்சியை வழிநடத்தினார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தைவானுக்கு தப்பியோடிய பிறகு, சியாங் காய்-ஷேக் கோமின்டாங் கட்சியை வழிநடத்தினார்

தைவான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இப்போது, தைவானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாட்டிகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

தைவானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.

தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சர், சீனா உடனான தங்களது உறவு கடந்த 40 ஆண்டுகளில் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

தைவான் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியுமா?

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற ராணுவமல்லாத வழிகளில் சீனா மீண்டும் தைவானுடன் ஒன்றிணைவதற்கான முயற்சிகளை எடுக்கலாம்.

ஆனால், ராணுவ மோதல் என்று வரும்போது, அது எந்த வகையில் இருந்தாலும், சீனாவின் படைகள் தைவான் படைகளை எளிதில் தோற்கடித்துவிடும்.

அமெரிக்காவுக்கு அடுத்து மற்ற உலக நாடுகளைவிட அதிகளவில் சீனா பாதுகாப்புத் துறைக்காகச் செலவழிக்கிறது. கடற்படையிலிருந்து ஏவுகணை தொழில்நுட்பம், விமானம், சைபர் தாக்குதல்கள் வரை பெரியளவிலான ஆற்றலைப் பெறுவதற்காக, சீனா செலவு செய்கிறது.

சீனா மற்றும் தைவானின் ராணுவ பலம்

சீனாவுடைய ராணுவ சக்தியின் பெரும்பகுதி வேறு இடங்களில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக செயலிலுள்ள பணியாளர்களைப் பொறுத்தவரை, இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.

ஒரு வெளிப்படையான மோதலில், தைவான் சீனத் தாக்குதலின் வேகத்தைக் குறைப்பது, சீன படைகள் தைவானில் கரையிறங்குவதைத் தடுக்க முயல்வது, வெளியிலிருந்து உதவி கிடைக்கும் வரை காத்திருக்கும்போது கொரில்லா தாக்குதல்களை மேற்கொள்வது ஆகியவற்றைச் செய்ய முடியும் என்று சில மேற்கத்திய வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவிடம் இருந்து அந்த உதவி வரலாம்.

நிலைமை மோசமடைந்து வருகிறதா?

2021-ஆம் ஆண்டில், தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு ராணுவ விமானங்களை அனுப்பியதன் மூலம் சீனா அதன் அழுத்தத்தை அதிகரிக்க முயன்றது.

தைவான் 2020-ஆம் ஆண்டில் விமான ஊடுருவல் பற்றிய தரவுகளைப் பொதுவில் வெளியிடத் தொடங்கியது.

அதன்படி, அக்டோபர் 2021-இல், ஒரே நாளில் 56 ஊடுருவல்கள் என்ற அளவில் சீனாவின் ஊடுருவல் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.

உலகின் பிற பகுதிகளுக்கு தைவான் ஏன் முக்கியமானது?

தைவான் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது.

உலகின் அன்றாட மின்னணு உபகரணங்களான கைபேசிகள், மடிக்கணினிகள், கடிகாரங்கள், கேம் கன்சோல்கள் எனப் பெரும்பாலானவை, தைவானில் தயாரிக்கப்பட்ட கணினி சிப்களால் இயக்கப்படுகின்றன.

தைவான் கணினி சிப் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது

ஓர் அளவீட்டின்படி, தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் அல்லது டிஎஸ்எம்சி என்ற ஒரு தைவானிய நிறுவனம், உலக சந்தையில் பாதியைத் தன்னகத்தே வைத்துள்ளது.

டிஎஸ்எம்சி என்பது, வார்ப்பகம் என்றழைக்கப்படும், நுகர்வோர் மற்றும் ராணுவ வாடிக்கையாளர்களால் வடிவமைக்கப்பட்ட சிப்களை உருவாக்கும் நிறுவனம். இந்தத் துறையின் 2021-ஆம் ஆண்டு மதிப்பு கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்.

தைவானில் சீனாவின் கையகப்படுத்தல், உலகின் மிக முக்கியமான தொழில்களில் ஒன்று மீது பெய்ஜிங்கிற்கு கட்டுப்பாட்டைக் கொடுக்கலாம்.

ராணுவ தாக்குதல் இருக்காது என்றே தைவானியர்கள் கருதுகின்றனர்

தைவான் மக்கள் இதுகுறித்துக் கவலைப்படுகிறார்களா?

சீனாவுக்கும் தைவானுக்கு இடையே சமீபகால பதற்றங்கள் இருந்தபோதிலும், பல தைவானிய மக்கள் ஒப்பீட்டளவில் கவலையற்று உள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது.

அக்டோபரில் தைவான் பொதுக் கருத்து அறக்கட்டளை, இறுதியில் சீனாவுடன் போர் நடக்கும் என்று நினைக்கிறீர்களா என மக்களிடையே கேட்டது.

தைவானியர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

அதில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் (64.3%) இல்லையென்று பதிலளித்துள்ளனர்.

தைவானில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களை தைவானியர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதாக மற்றுமொரு ஆராய்ச்சி கூறுகிறது.

1990-களின் முற்பகுதியிலிருந்து தேசிய செங்ச்சி பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகள், சீனர்கள் அல்லது சீனர்கள் மற்றும் தைவானியர்கள் என அடையாளம் காணும் மக்களின் விகிதம் குறைந்துள்ளது என்றும் பெரும்பாலான மக்கள் தங்களை தைவானியர்கள் என்றே கருதுவதாகவும் கூறுகிறது.

https://www.bbc.com/tamil/global-62392941

Edited by ஏராளன்
heading mistake

  • ஏராளன் changed the title to தைவானில் மோதும் அமெரிக்கா, சீனா: நான்சி பெலோசியின் தைவான் பயணத்தால் பிராந்தியத்தில் பதற்றம்
  • கருத்துக்கள உறவுகள்

""தைவான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை""

இன்றுவரை ஒரு/ஒரே சீனா One China(One China principle)."  என்கின்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே அமெரிக்க-சீன இராசதந்திரவ் உறவு கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது.  (இதே போன்றதொரு நிலைமை 1964-65 களிலும் ஏற்பட்டுள்ளது)

BBC யின்  அப்பட்டமான பொய் பிரட்டு என்பதற்கு  இது நல்ல எடுத்துக்காட்டு. இந்திய பார்ப்பன ஊதுகுழல்களின் கைகளில் BBC தமிழ் எப்போது சென்றடைந்ததோ அன்றிலிருந்து BBC க்கு இறங்குமுகம்தான்..

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

""தைவான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை""

அதாகப்பட்டது ரஷ்யாவுக்கு பக்கத்திலையும் சீனாவுக்கு பக்கத்திலையும் தங்கியிருக்க அமெரிக்காவுக்கு ஒரு  குட்டி பிரதேசம் வேணும் அப்பிடித்தானே? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

அதாகப்பட்டது ரஷ்யாவுக்கு பக்கத்திலையும் சீனாவுக்கு பக்கத்திலையும் தங்கியிருக்க அமெரிக்காவுக்கு ஒரு  குட்டி பிரதேசம் வேணும் அப்பிடித்தானே? :cool:

அதாகப்பட்டது, பக்கத்தில் இருக்கும் உக்கிரைன், தன் பாட்டுக்கு பேசாமல் இருந்திருந்தால், ரசியா சும்மா இருந்திருக்கும். அதுபோல பக்கத்தில் இருக்கும் தைவான் அப்படியே இருந்திருந்தால், சீனா நீ என் வைப்புதான்  எண்டு சொல்லிட்டு பேசாமல் இருந்திருக்கும்.

ரசியா, சீனா இரண்டு நாடுகளும், பக்கத்தில் இருக்கும் இலங்கை விவகாரத்தில், அணில் ஏற விட்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும், இந்தியா போல இருக்க விரும்பவில்லை என்பதே புரியும் நிதர்சனம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அதாகப்பட்டது ரஷ்யாவுக்கு பக்கத்திலையும் சீனாவுக்கு பக்கத்திலையும் தங்கியிருக்க அமெரிக்காவுக்கு ஒரு  குட்டி பிரதேசம் வேணும் அப்பிடித்தானே? :cool:

பேட்டை ரவுடிக்கும் ஒரு ஏரியா ரவுடி தேவை என்பது போல...🤣

  • கருத்துக்கள உறவுகள்

1989ல் சீனாவில் போராட்டம் நடாத்திய மாணவர்கள் சீன அரசால் கொல்லப்பட்டனர். 1991ல் நான்சி பொலோசி சீன விஜயத்தின் போது மேற்படி பதாகையை திடீரென ஒரு நிகழ்வில் காட்டி சீனாவின் வெறுப்பை சம்பாதித்தார்.

GKYWVFQSUYI63BECA3A4QTHI6I.jpg&w=916

GJICX4ASUYI63BECA3A4QTHI6I.jpg&w=767

1989ல் சீனாவில் கொல்லப்பட்ட டாங்மானின் சிலையை வேசிங்டனில் திறந்து வைத்து (2007ல்) சீனாவுக்கு மேலும் கடுப்பு ஏத்தினார்.

jhrinftz4bu31.png?width=640&crop=smart&a
 2022ல் சபாநாயகராக ( 2007லும் சபாநாயகர் ஜோஜ் W. புஸ்சின் ஆட்சியில்) தாய்வான் சென்றதில் மேலும் சீனாவை கடுப்பேத்துபவர் தான் அதே நான்சி பெலோசி.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

""தைவான் தங்களது ஆட்சிக்கு உள்பட்ட பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அமெரிக்கா இதை ஏற்கவில்லை""

இன்றுவரை ஒரு/ஒரே சீனா One China(One China principle)."  என்கின்ற கொள்கையை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே அமெரிக்க-சீன இராசதந்திரவ் உறவு கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது.  (இதே போன்றதொரு நிலைமை 1964-65 களிலும் ஏற்பட்டுள்ளது)

BBC யின்  அப்பட்டமான பொய் பிரட்டு என்பதற்கு  இது நல்ல எடுத்துக்காட்டு. இந்திய பார்ப்பன ஊதுகுழல்களின் கைகளில் BBC தமிழ் எப்போது சென்றடைந்ததோ அன்றிலிருந்து BBC க்கு இறங்குமுகம்தான்..

😏

The One China policy is a key cornerstone of Sino-US relations. It is also a fundamental bedrock of Chinese policy-making and diplomacy. However, it is distinct from the One China principle, whereby China insists Taiwan is an inalienable part of one China to be reunified one day.

The US policy is not an endorsement of Beijing's position and indeed as part of the policy, Washington maintains a "robust unofficial" relationship with Taiwan, including continued arms sales to the island so that it can defend itself.

https://www.bbc.co.uk/news/world-asia-china-38285354

One China policy யும் One China principle உம் ஒன்றல்ல.

https://www.csis.org/analysis/what-us-one-china-policy-and-why-does-it-matter

The United States did not, however, give in to Chinese demands that it recognize Chinese sovereignty over Taiwan (which is the name preferred by the United States since it opted to de-recognize the ROC). Instead, Washington acknowledged the Chinese position that Taiwan was part of China.

சுருங்க சொல்லின்;

சீனாவின் அங்கமே தைவான் என்ற சீனாவின் உரிமைகோரலை அமெரிக்கா “கண்டு கொள்கிறதே” ஒழிய (acknowledge), அங்கீகரிக்கவில்லை (recognise).

ஆனால் சட்டபடி சீனா என்றால் அது (பெய்ஜிங் - சீனா) - PRC தான்,  தாய்வானில் உள்ள RoC அல்ல என்பது யூ எஸ் சின் நிலைப்பாடு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

யூ எஸ் - தைவான் (RoC) சுதந்திர நாடு என்பதையும் ஏற்கவில்லை.

தைவான் தீவு PRC யின் ஆளுகைக்கு உட்பட்டது, அதன் அங்கம் என்பதையும் ஏற்க இல்லை.

சீனா என்றால் அது PRC மட்டுமே என்பதை மட்டும்தான் யூ எஸ் ஏற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

1989ல் சீனாவில் போராட்டம் நடாத்திய மாணவர்கள் சீன அரசால் கொல்லப்பட்டனர். 1991ல் நான்சி பொலோசி சீன விஜயத்தின் போது மேற்படி பதாகையை திடீரென ஒரு நிகழ்வில் காட்டி சீனாவின் வெறுப்பை சம்பாதித்தார்.

GKYWVFQSUYI63BECA3A4QTHI6I.jpg&w=916

GJICX4ASUYI63BECA3A4QTHI6I.jpg&w=767

1989ல் சீனாவில் கொல்லப்பட்ட டாங்மானின் சிலையை வேசிங்டனில் திறந்து வைத்து (2007ல்) சீனாவுக்கு மேலும் கடுப்பு ஏத்தினார்.

jhrinftz4bu31.png?width=640&crop=smart&a
 2022ல் சபாநாயகராக ( 2007லும் சபாநாயகர் ஜோஜ் W. புஸ்சின் ஆட்சியில்) தாய்வான் சென்றதில் மேலும் சீனாவை கடுப்பேத்துபவர் தான் அதே நான்சி பெலோசி.

இதை பைடன் ரசிக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

நான்சி லேசுபட்ட ஆளில்லை. 

ஒரு வேளை அடுத்த எலக்சனில் democratic nomination க்கு primary யில் பைடனை எதிர்த்து சவால் விடும் எண்ணமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

யூ எஸ் - தைவான் (RoC) சுதந்திர நாடு என்பதையும் ஏற்கவில்லை.

தைவான் தீவு PRC யின் ஆளுகைக்கு உட்பட்டது, அதன் அங்கம் என்பதையும் ஏற்க இல்லை.

சீனா என்றால் அது PRC மட்டுமே என்பதை மட்டும்தான் யூ எஸ் ஏற்கிறது.

அமெரிக்காவை பார்த்து சீனா என்ரை ஏரியாவிலை வந்து நீ கதைக்க யார் உரிமை தந்தது எண்டு கேக்கேலாதோ? 😂

இதே  மாதிரி சீனா அமெரிக்கா பக்கம் போய் மீன் பிடிக்க ஏலுமோ தெரியாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இதை பைடன் ரசிக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

நான்சி லேசுபட்ட ஆளில்லை. 

ஒரு வேளை அடுத்த எலக்சனில் democratic nomination க்கு primary யில் பைடனை எதிர்த்து சவால் விடும் எண்ணமோ?

வெள்ளை/அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னொரு கோர வடிவமே நான்சி. இவர் அமெரிக்காவிற்குத் தலைமெ ஏற்குமிடத்து உலKல் பல்வேறு யுத்தங்கள் இவரது காலத்தில் நடைபெறும் என்பது மட்டும் உறுதி. 

ஆனால் ஒபாமா மாதிரி புறா வேடமிட்டு வல்லூறாக மாறுவதைவிட இது எவ்வளவோ மேல். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Kapithan said:

வெள்ளை/அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னொரு கோர வடிவமே நான்சி. இவர் அமெரிக்காவிற்குத் தலைமெ ஏற்குமிடத்து உலKல் பல்வேறு யுத்தங்கள் இவரது காலத்தில் நடைபெறும் என்பது மட்டும் உறுதி. 

82 வயதிலையும் மனிசி குடு குடுவெண்டு நடந்து திரியுது. நாங்கள் இப்பவே இருந்திட்டு பக்கெண்டு எழும்பி ஓடேலாமல் கிடக்கு. என்ன மருந்து மாத்திரைகளை அமுக்கி தள்ளுதுகளோ???? 😁

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

இதை பைடன் ரசிக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

நான்சி லேசுபட்ட ஆளில்லை. 

ஒரு வேளை அடுத்த எலக்சனில் democratic nomination க்கு primary யில் பைடனை எதிர்த்து சவால் விடும் எண்ணமோ?

எப்படியான ஆள் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவரின் நடவடிக்கைகள் தீவிரமானவை. எதிர்பார்க்க முடியாதவை.
சீனாவுக்கு எதிர்ப்பை காட்டி அமெரிக்க மக்களின் வாக்குகளை அள்ளலாம் என்ற உள்நோக்கம் கட்டாயம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவை பார்த்து சீனா என்ரை ஏரியாவிலை வந்து நீ கதைக்க யார் உரிமை தந்தது எண்டு கேக்கேலாதோ? 😂

இதே  மாதிரி சீனா அமெரிக்கா பக்கம் போய் மீன் பிடிக்க ஏலுமோ தெரியாது 🤣

🤣 கேக்கலாம்.  

அருணாச்சலில் செய்வது போல்,  டெக்சசை, சீனாவின் டென்சொங் மாகாணம் என்றும் அறிவிக்கலாம் - பலமிருந்தால்.

இப்போதைக்கு தைவானை சுத்தி இரு கிழமைக்கு சீறுவாணம் விடுவதை தாண்டி போகமாட்டார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் 20 வருடம் முதல் யூ எஸ் சபாநாயகர் நியூட் ஜிங்ரிச் தைவான் போனபோது பெரிதாக ஒன்றையும் செய்யவில்லை சீனா.

இப்போ குத்தி முறிவது சீனாவின் தம் மதிப்பீடு  உயர்ந்துள்ளதை காட்டுகிறது.

7 hours ago, Kapithan said:

வெள்ளை/அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னொரு கோர வடிவமே நான்சி. இவர் அமெரிக்காவிற்குத் தலைமெ ஏற்குமிடத்து உலKல் பல்வேறு யுத்தங்கள் இவரது காலத்தில் நடைபெறும் என்பது மட்டும் உறுதி. 

ஆனால் ஒபாமா மாதிரி புறா வேடமிட்டு வல்லூறாக மாறுவதைவிட இது எவ்வளவோ மேல். 

அதிகாரத்தின் பின்னால் போகும் எவரும் புறா இல்லை. புறா வேடம் இடலாம்.

7 hours ago, குமாரசாமி said:

82 வயதிலையும் மனிசி குடு குடுவெண்டு நடந்து திரியுது. நாங்கள் இப்பவே இருந்திட்டு பக்கெண்டு எழும்பி ஓடேலாமல் கிடக்கு. என்ன மருந்து மாத்திரைகளை அமுக்கி தள்ளுதுகளோ???? 😁

அதிகாரம் எண்டு ஒரு பேப்பரில எழுதி காட்டினா, சவக்கிடங்கில் இருந்து எழும்பி வரகூடிய மனிதர்கள் உள்ள பூமி இது🤣.

7 hours ago, nunavilan said:

எப்படியான ஆள் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவரின் நடவடிக்கைகள் தீவிரமானவை. எதிர்பார்க்க முடியாதவை.
சீனாவுக்கு எதிர்ப்பை காட்டி அமெரிக்க மக்களின் வாக்குகளை அள்ளலாம் என்ற உள்நோக்கம் கட்டாயம் இருக்கும்.

ஓம் இருக்கும் குடியரசு கட்சி காங்கிரஸ் உறுபினர்களில் பாதி பேருக்கு மேல் சீன விஜயத்தில் இவரை ஆதரித்து அறிக்கை கொடுத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

உக்கிரேன் பக்கம் திரிஞ்ச எங்கட உடான்சு சுவாமியாருக்கு புது அசைன்மென்ற், தாய்வானில கிடைச்சோன்ன பிசியாப்போனார்.... 😁😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

🤣 கேக்கலாம்.  

அருணாச்சலில் செய்வது போல்,  டெக்சசை, சீனாவின் டென்சொங் மாகாணம் என்றும் அறிவிக்கலாம் - பலமிருந்தால்.

இப்போதைக்கு தைவானை சுத்தி இரு கிழமைக்கு சீறுவாணம் விடுவதை தாண்டி போகமாட்டார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் 20 வருடம் முதல் யூ எஸ் சபாநாயகர் நியூட் ஜிங்ரிச் தைவான் போனபோது பெரிதாக ஒன்றையும் செய்யவில்லை சீனா.

இப்போ குத்தி முறிவது சீனாவின் தம் மதிப்பீடு  உயர்ந்துள்ளதை காட்டுகிறது.

அதாகப்பட்டது உங்கள் கருத்தின் சாரம்சம்:- பெரியவாள் எது செய்தாலும் நல்லதுக்கே செய்வாள். நாமள்(ஒலகம்) கையை கட்டிக்கிட்டு பேசாம நிக்கணும்  🤣

Samuel Merigala (@themerigala) / Twitter

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்து ஹிந்தியா.. நிலைமையை உன்னிப்பாக் கவனிச்சுக்கொண்டிருக்கிறம்.

கிழக்கு முனைய விவகாரம்; விசேட அறிக்கை வெளியிட்ட இந்தியா! - ஊர்ப் புதினம் -  கருத்துக்களம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

உக்கிரேன் பக்கம் திரிஞ்ச எங்கட உடான்சு சுவாமியாருக்கு புது அசைன்மென்ற், தாய்வானில கிடைச்சோன்ன பிசியாப்போனார்.... 😁😉

உடான்ஸ்…. சீனாவுக்கா, தாய்வானுக்கா… சப்போர்ட் குடுக்கிறார் என்று, நைசாக அறிஞ்சு பாருங்கோ. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில்  ரசியாவின்  பலம்  அறிஞ்சாச்சு?

இனி  சீனாவின்  பலம்?

ஆனால் கரணம்  தப்பினால்  மரணம்  விளையாட்டு

உலக அழிவு  சிலரது  கைவிரல்களில்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, தமிழ் சிறி said:

உடான்ஸ்…. சீனாவுக்கா, தாய்வானுக்கா… சப்போர்ட் குடுக்கிறார் என்று, நைசாக அறிஞ்சு பாருங்கோ. 🤣

உட்டான்ஸ் எப்பவும் நீதி நேர்மை நியாயத்தின்ர பக்கம்......:cool:

Top 30 Sarath Kumar & Simran GIFs | Find the best GIF on Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

உட்டான்ஸ் எப்பவும் நீதி நேர்மை நியாயத்தின்ர பக்கம்......:cool:

Top 30 Sarath Kumar & Simran GIFs | Find the best GIF on Gfycat

அப்ப…. அமெரிக்கா  ஆதரவு கொடுக்கும்  தாய்வான் பக்கம். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப…. அமெரிக்கா  ஆதரவு கொடுக்கும்  தாய்வான் பக்கம். 😂

இத வேற என்ரை வாயால சொல்லணுமாக்கும்......? 🤣

இந்த உலகத்திலை  இப்ப இருக்கிற நாடுகளுக்குள்ள நீதி நேர்மையோட இருக்கிற அரிச்சந்திர நாடு எண்டால் அமெரிக்காதானே 🤪

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

உக்கிரேன் பக்கம் திரிஞ்ச எங்கட உடான்சு சுவாமியாருக்கு புது அசைன்மென்ற், தாய்வானில கிடைச்சோன்ன பிசியாப்போனார்.... 😁😉

🤣 உடான்ஸ் சாமியார் ஒரு கொள்கை குன்று, மலை, சிகரம் என்றெல்லாம் சொல்லமுடியாவிட்டாலும்…அவர் ஒரு கொள்கை குப்பைமேடு என்று சொல்லும் அளவுக்காவது இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

உக்ரேன் விடயத்தில் அவர் எடுத்தது, அமெரிக்க ஆதரவு நிலையோ, ரஸ்ய எதிர் நிலையோ அல்ல - நலிந்த பலகாலமாக அடக்கபட்ட ஒரு தேசிய இனத்தின் ஆதரவு நிலை.

தய்வான் சிக்கலில் இரு பக்கமும் இருப்பது சீனர்களே. ஒரு காலத்தில் சீனாவை ஆண்டு பின் மாவோவா துரத்தி விட்ட பின் தய்வானில் தஞ்சம் அடைந்த முன்னாள் சீன அரசின் வாரிசே தய்வான்.

ஆகவே இதில் உடான்ஸ் சாமியார் 🥤🍿

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அதாகப்பட்டது உங்கள் கருத்தின் சாரம்சம்:- பெரியவாள் எது செய்தாலும் நல்லதுக்கே செய்வாள். நாமள்(ஒலகம்) கையை கட்டிக்கிட்டு பேசாம நிக்கணும்  🤣

Samuel Merigala (@themerigala) / Twitter

தனிப்பட்ட வாழ்வில், ஒரு நாட்டுக்கு உட்பட்ட பொதுவாழ்வில் இல்லை.

சர்வதேச உறவில் இதுதான் யதார்த்தம்.

இந்த திரியில் நான்சியை விட உடான்ஸியை பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது🤣.

பார்த்து செய்துங்க🤣.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2022 at 10:56, Nathamuni said:

உக்கிரேன் பக்கம் திரிஞ்ச எங்கட உடான்சு சுவாமியாருக்கு புது அசைன்மென்ற், தாய்வானில கிடைச்சோன்ன பிசியாப்போனார்.... 😁😉

@goshan_che

உடான்சை…. உள்ளூர் பக்கமும் ஒரு கண் வைக்கச் சொல்லுங்கள்.
வாற 11’ ம் திகதி சீன உளவு கப்பல், அம்பாந்தோட்டைக்கு வருகுது.
இந்தியா… சிவப்பு கொடி காட்டுது. அதையும் மீறி வந்தால்….
அம்பாந்தோட்டையில்தான்…. இந்திய / சீன யுத்தம் ஆரம்பிக்கலாம்.

இதில் உடான்ஸ்… ஆருக்கு, சப்போர்ட் எண்டு… கேட்டுச் சொல்லுங்கோ.. 🤪 😁 😂 🤣

20 hours ago, குமாரசாமி said:

உட்டான்ஸ் எப்பவும் நீதி நேர்மை நியாயத்தின்ர பக்கம்......:cool:

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.