Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

32 வருடங்களின் பின் பூர்வீக்காணிகளில் குடியேறிய அம்பாறை - கனகர் கிராம மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

32 வருடங்களின் பின் பூர்வீக்காணிகளில் குடியேறிய அம்பாறை - கனகர் கிராம மக்கள்

By T. SARANYA

17 OCT, 2022 | 01:26 PM
image

அம்பாறை மாவட்டத்தின் கனகர் கிராம மக்கள் சுமார் 32 வருடங்களுக்குப் பின்  தங்களது பூர்வீக் காணிகளில் குடியேறியுள்ளனர்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறுவதற்கு பல்வேறு எதிர்ப்புக்களைச் சந்தித்த மக்கள் தற்போது துணிச்சலாக தமது காணிகளை தாமாகவே முன்வந்து துப்பரவு செய்து வருகின்றனர். 

சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (16)  சர்வதேச உணவு தினமாகும்.  சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் பங்களிப்புடன் சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு மேற்படி   கிராமத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளில் தானியச் செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.  

WhatsApp_Image_2022-10-16_at_10.20.58_AM

தமது பூர்வீக காணிகளை துப்பரவு செய்துள்ள 25 பயனாளிகள் தானியச் செய்கைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயறு,சோளன்,கச்சான் ஆகிய தானிய வகைகள் வழங்கப்பட்டது.

இதேவேளை  அம்மக்களின் காணிகளில் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தித் தரக்கோரி அரச திணைக்களங்களுக்கும் பரிந்துரை செய்யும் செயற்பாடு திட்டமிடப்பட்டது.

இருந்தபோதிலும் அரசதிணைக்களங்கள் மக்கள் மீளக்குடியேறுவதற்கு எதிர்ப்பாக உள்ளமையால் மக்களாகவே முன் வந்து குடியேறியுள்ளனர்.

இம்மக்கள் மீளக்குடியேறுவதற்கு பக்க பலமாக உள்ள சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பிற்கு நன்றியைத் தெரிவித்ததோடு தமது பூர்வீக காணிகளை இனி எந்த சந்தரப்பத்திலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக்கொண்டனர்.

இவ்வாறான நிலையில் இதற்கு மறுபுறம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிலை காரணமாக மக்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு வேளை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் மக்கள் பெரும் போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரை தமக்கான சரியான அரசியல் தீர்வு கிடைக்காத நிலையில் மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த நிலைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி ஒரு காரணமாக அமைந்தாலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு தரப்பினரால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் முக்கிய காரணமாகும். 

கிழக்கைப் பொறுத்த வரையில் சுமார் 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அரசு மற்றும் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் காரணமாக தமக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 

பல்வேறு வழிகளிலும் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்படுமாயின் அவர்களின் வீட்டுத் தேவைக்கான உணவையேனும் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என்பது உறுதியான விடயமாகும்.

http://fe.virakesari.lk/article/137829

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி. மகிழ்ச்சி . மிக்க மகிழ்ச்சி. 👏

  • கருத்துக்கள உறவுகள்

திருப்தி தரும் செய்தி........!   👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கிழக்கைப் பொறுத்த வரையில் சுமார் 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அரசு மற்றும் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் காரணமாக தமக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 

அந்த பல்வேறு தரப்பினர் முஸ்லிம்களும், இராணுவத்தினரும் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

இதே மாதிரி சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் எமது மக்களையும் மீள குடியமர்த்தணும்.

  • கருத்துக்கள உறவுகள்

சோனகர் தங்கடை காணிபோட்டுது என்று ..கிழக்கில் கூட்டம் போட்டு ..சத்தம் போடுகினம்..அதுவு ம் அம்பாற  முசுலிம் வரிந்து கட்டிக்கொண்டு நிக்கினம்....அது வந்து தமிழரிட்டை பறிச்ச காணியை ...தன்களட்டை சிங்களவன் பறிச்சுபோட்டான் என்றபடியாலோ..இவை அப்பம் பிரிச்சு ஆதாயம் தேடின ஆக்களல்லோ..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

இம்மக்கள் மீளக்குடியேறுவதற்கு பக்க பலமாக உள்ள சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பிற்கு நன்றியைத் தெரிவித்ததோடு

இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள், மீண்டும் அச்சுறுத்தல் பறித்தல் இடம்பெறா வண்ணம் பாதுகாக்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள், மீண்டும் அச்சுறுத்தல் பறித்தல் இடம்பெறா வண்ணம் பாதுகாக்கவும்!

On 17/10/2022 at 21:46, Kapithan said:

மகிழ்ச்சி. மகிழ்ச்சி . மிக்க மகிழ்ச்சி. 👏

On 17/10/2022 at 22:28, suvy said:

திருப்தி தரும் செய்தி........!   👍

ம்கூம் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம் வரும் யானைக்கூட்டங்களை பார்த்தால் சில மாதங்களில் மீண்டும் வந்து விடுவார்கள்🙄🙄🙄

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்கூம் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம் வரும் யானைக்கூட்டங்களை பார்த்தால் சில மாதங்களில் மீண்டும் வந்து விடுவார்கள்🙄🙄🙄

என்ன தனி குண்டைதூக்கி போடுகிறீர்கள். யானைகளை விரட்ட காவல்துறையை அணுக முடியாதா? வெட்டியாக தானே திரிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம்கூம் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம் வரும் யானைக்கூட்டங்களை பார்த்தால் சில மாதங்களில் மீண்டும் வந்து விடுவார்கள்🙄🙄🙄

எல்லைகளில், தோட்டங்களில் தேனீக்களை வளர்த்தால், யானைகள் அண்டாது. (தேனீ வளர்ப்பு)

சில வகையான மரங்களை வளர்த்தாலும் யானைகள் அந்தப் பகுதிகளில் தலை வைத்தும் படுக்காது என்று அறிந்தேன. அந்த மரங்கள் பற்றிய விபரங்களை அறிய மினைகிறேன். இதுவரை வெற்றி கிட்டவில்லை. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிப்பகுதியிலும் முன்பு யானைகள் அறுவடைக்காலத்தில் வரும்போது மக்கள் கூட்டமாக காவலிருந்து பறை அடித்து, நெருப்புகொழுத்தி கலைத்தார்கள். தொடர்ந்து செய்தால் யானைகள் வேறிடம் தேடி போகலாம், சில அடங்காததுகள் தொடர்ந்துவரும். இப்படி பல கஷ்ரங்களின் மத்தியிலேயே நாம் அரிசியில் தன்னிறைவு கண்டோம் ஒரு காலத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2022 at 22:53, nunavilan said:

என்ன தனி குண்டைதூக்கி போடுகிறீர்கள். யானைகளை விரட்ட காவல்துறையை அணுக முடியாதா? வெட்டியாக தானே திரிகிறார்கள்.

காவல்துறை செய்யாது வனத்துறையினர் அவர்கள் வெடிக்கொழுத்தி புதினம் மட்டும்மே காட்டுவார்கள்.

எங்க ஊர்ல வயல்காணிகளில் எருமை மாடுகள் போல மேய்கிறது யானைகள் சுமார் எண்பது நூறு யானைகள் இருக்கம் இரவு வேளைகளில் ஊரில புகுந்து பயன்தரு மரங்களை உடைத்து நாசம் பண்ணுகிறது அரசாங்கம் வேடிக்கை மட்டும் பார்க்கும். 

மட்டக்களப்பில யானைத்தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது உயிர் இழப்புக்களுடன்

On 19/10/2022 at 00:07, Kapithan said:

எல்லைகளில், தோட்டங்களில் தேனீக்களை வளர்த்தால், யானைகள் அண்டாது. (தேனீ வளர்ப்பு)

சில வகையான மரங்களை வளர்த்தாலும் யானைகள் அந்தப் பகுதிகளில் தலை வைத்தும் படுக்காது என்று அறிந்தேன. அந்த மரங்கள் பற்றிய விபரங்களை அறிய மினைகிறேன். இதுவரை வெற்றி கிட்டவில்லை. 

பல யானைகள் பழக்கப்பட்ட யானைகள் அதாவது வளர்த்து காட்டில் (பன்சாலைகள், சரணாலயங்கள்,) விடப்பட்டவை அது விரட்டினாலும் போகிறது இல்லை . உணவை கண்டதும் ஓடி வரும்

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

காவல்துறை செய்யாது வனத்துறையினர் அவர்கள் வெடிக்கொழுத்தி புதினம் மட்டும்மே காட்டுவார்கள்.

எங்க ஊர்ல வயல்காணிகளில் எருமை மாடுகள் போல மேய்கிறது யானைகள் சுமார் எண்பது நூறு யானைகள் இருக்கம் இரவு வேளைகளில் ஊரில புகுந்து பயன்தரு மரங்களை உடைத்து நாசம் பண்ணுகிறது அரசாங்கம் வேடிக்கை மட்டும் பார்க்கும். 

மட்டக்களப்பில யானைத்தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது உயிர் இழப்புக்களுடன்

பல யானைகள் பழக்கப்பட்ட யானைகள் அதாவது வளர்த்து காட்டில் (பன்சாலைகள், சரணாலயங்கள்,) விடப்பட்டவை அது விரட்டினாலும் போகிறது இல்லை . உணவை கண்டதும் ஓடி வரும்

இந்த யானைகளின் தொல்லை, சிங்களப் பகுதிகளில் நடந்தால்…
அரசாங்கம் இதே போல்… அசட்டையாக இருக்குமா, அல்லது மாற்று நடவடிக்கை எடுப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

 கூட்டங்களில் இருந்து பிரிந்த யானைகளை, அந்த யானைகள் கண்டறியப்பட்ட சிங்கள ஊர்களின் காட்டுப் பகுதியில் இருந்து தமிழர் பக்கம் இருக்கும் காட்டுப் பகுதியில்    வேண்டும் என்றே வனத்துறை படித்து வந்து விடுகிறது.

யானைகள் தனிக்கும் போது, அதுவும் புதிய இடத்தில், (அல்லது எந்த மிருகத்தினதும்) பாதுகாப்பு, பயம் உணர்வு காரணமாக மதம், கோபம் கொள்ளும். 

இதுவே தமிழர் பகுதியில் யானைகளின் அத்துமீறல், தாக்குதல் மிகவும் அதிகமாக இருப்பதற்கு காரணம்.

ஓர் பிரதேசத்தில் வழமையாக இருக்கும் யானைகல், மிருகங்களுடன், , ஓர் வகையில் எதோ ஓர் உறவு வளரும், அத்துமீறல்கழும்  குறைவு. 

இது தமிழர்களை விரட்டும் சிங்கள அரசின் மறைமுக நடவடிக்கை, திட்டமிட்டு செய்யப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இந்த யானைகளின் தொல்லை, சிங்களப் பகுதிகளில் நடந்தால்…
அரசாங்கம் இதே போல்… அசட்டையாக இருக்குமா, அல்லது மாற்று நடவடிக்கை எடுப்பார்களா?

தமிழர் யானைக்கு பயந்து வெளியேறியபின் சிங்களவரை குடியேற்ற மாற்று நடவடிக்கை எடுக்கப்படும், ஆனால் அதை தவிர்த்து நாம் நிலைத்து இருப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நமது தலைவர்கள் என தம்மை அழைத்துக்கொள்பவர்கள் செய்து நமது மக்களையும், நிலங்களையும் காக்கும் கடமைப்பாடுடையவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2022 at 20:44, தமிழ் சிறி said:

இந்த யானைகளின் தொல்லை, சிங்களப் பகுதிகளில் நடந்தால்…
அரசாங்கம் இதே போல்… அசட்டையாக இருக்குமா, அல்லது மாற்று நடவடிக்கை எடுப்பார்களா?

மாற்று நடவடிக்கையாக அதை பிடித்து தமிழர்கள் பகுதிகளில் விட்டு விடுவார்கள்😏

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

@ஏராளன் , @Kapithan, @suvy@nunavilan, @ஈழப்பிரியன், @alvayan,

@satan, @தனிக்காட்டு ராஜா, @சுவைப்பிரியன், @Kadancha

யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் உயிரிழப்பு!

யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் உயிரிழப்பு!

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் குடும்ப பெண்ணொருவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை படு காயமடைந்து உயிரிழந்த நிலையில் இரு வீடுகளும் சேதமாக்கப்பட்டன.

மேலும் யானையின் தாக்குதலுக்கு உள்ளான உயிரிழந்தவரின் தாயாரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இரு பிள்ளைகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர் கண்ணகிகிராமம் 01 இல் வசித்துவந்த 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான நாகராசா சுலசுனா என தெரியவருவதுடன் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இன்று அதிகாலை கிராமத்தினுள் புகுந்த யானையொன்று வீடொன்றை முற்றாக சேதமாக்கிய பின்னர் வீதி அருகில் இருந்த இன்னுமொரு வீட்டினுள் நுழைந்து வீட்டை சேமாக்கியுள்ளது.

சத்தம் கேட்ட நிலையில் வெளியே வந்த குறித்த பெண் யானையை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் யானையை விரட்டி தனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக முயற்சித்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான பெண்ணின் மூத்த பிள்ளை அடிபட்டு வீழ்ந்த தாயை காப்பாற்ற முயற்சித்தபோதும் பயனளிக்காத நிலையில் தாயின் உத்தரவிற்கு அமைய வெளியே ஓடியுள்ளார். இந்நிலையில் இளைய பிள்ளையினை தும்பி கையால் யானை தூக்கியபோதும் அதிலிருந்து குறித்த பிள்ளை அதிஷ்டவசமாக தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் அயலவர்களும் உயிரிழந்த பெண்ணின் தாயும் கூக்குரலிட்டு யானையை விரட்ட முயற்சித்தபோதும் மீண்டும் யானை பெண்ணை தாக்கிவிட்டு வெளியேறி சென்றுள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த பெண்ணை கிராமத்தவர்கள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்றபோது தம்மை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்பதுடன் அருகில் இருந்த இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் தாய் அழுது புலம்பினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகத்தர் குறித்த இடங்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டதுடன் உயர் அதிகாரிகளுக்கும் அறிய கொடுத்துள்ளனர்.

அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நட்ட ஈட்டினை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் யானை தொல்லையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக கண்ணகிகிராமம் உள்ளிட்ட அயலில் உள்ள சிறு கிராமங்களிலும் யானையின் தொல்லை அதிகரித்து வருகின்றமையும் இதனால் அங்கு வாழும் மக்களும் விவாசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளும் அச்சத்தில் உறைந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1309881

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

முன்மாதிரி திட்டம்

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் ஹபரண பகுதியில் பெந்திவெவ என்ற பிரதேசத்தில் ஒரு முன்மாதிரி யானை - மனித மோதலை தடுப்பதற்கான செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அது வெற்றியளித்த திட்டமாக கருதப்படுகிறது. அதாவது இந்த கிராமத்தில் யானை -மனித மோதலை தடுப்பதற்காக சமூகமட்டத்திலான மின்சார வேலி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. யானைகள் ஆய்வு தொடர்பான விஞ்ஞானி மற்றும் யானைகள் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்கான நிலையத்தின் தலைவர் கலாநிதி பிரித்திவிராஜ் பெர்னாண்டோ கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆய்வின் விளைவாக இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

HEC_-_Fence.png

அதாவது ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டால் அங்கு அந்த கிராமத்தை சுற்றி ஒரு யானைகள் வராத முறையில் மின்சார வேலியை அமைக்காமல் அதற்கு மாறாக வீடுகளை சுற்றி மின்சார 3 வேலி அமைத்தல், மக்களின் பயிர் செய்கைகள் இருக்கின்ற இடங்களை சுற்றி மின்சார வேலிகளை அமைத்தல், மக்கள் அடிக்கடி நடமாடுகின்ற இடங்களை சுற்றி மின்சார வேலிகளை அமைத்தல் என்ற அடிப்படையில் சமூகமட்ட மின்சார வேலி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

புதிய திட்டம் பயனுள்ளது போல் தெரிகிறது, ஆனால் செலவு கூடியது. ஒவ்வொரு வீட்டையும் சுற்றி மின்வேலி என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி, மக்கள் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

புதிய திட்டம் பயனுள்ளது போல் தெரிகிறது, ஆனால் செலவு கூடியது. ஒவ்வொரு வீட்டையும் சுற்றி மின்வேலி என நினைக்கிறேன்.

இப்போதுள்ள நிலையில் வீடுகளுக்கே மின்சாரம் இல்லை.

அப்புறம் வேலிக்கு எப்படி மின்சாரம் கொடுப்பது?

1 hour ago, தமிழ் சிறி said:

யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் உயிரிழப்பு!

தகவலுக்கு நன்றி சிறி.

வாழ வேண்டிய பிள்ளை அநிஞாயமாக இறந்துவிட்டது.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழமைக்கு முன்னர் இரவு 12 மணியளவில் அம்மாவின் வீட்டுப் பகுதி அதாவது மெயின் வீதியில் வந்து போனது  @தமிழ் சிறி அண்ண அது மட்டுமல்லாமல் கரண்ட் கொடுத்த மின்கம்பங்களை விழுந்த அல்லது கரண்ட் அடிக்காத பட்ட மரத்தை இழுத்து வந்து அந்த கரண்ட் வேலியில் சாத்தி உடைத்து விட்டு உள்ளே வருகிறது இதை நீங்க நம்புவீர்களா? யானைகள் பழக்கப்பட்டு விட்டன 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போதுள்ள நிலையில் வீடுகளுக்கே மின்சாரம் இல்லை.

அப்புறம் வேலிக்கு எப்படி மின்சாரம் கொடுப்பது?

இரவில் ஓரளவு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுகிறது!
220வோல்ற் மின்சாரம் எனில் உயிராபத்து மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும், 110வோல்ற் எனின் ஆபத்து குறைவு என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதடவை எங்கோ வாசித்த நினைவு, மின்சாரவேலியில் தாக்குண்டு யானை இறந்ததால் வனவள திணைக்களம் விவசாயிக்கு நீதிமன்ற அழைப்பாணை விட்டதாக.  மின்சார வேலியில் வீட்டு மிருகங்களும், ஏன் மனிதரும் சிக்க வாய்ப்புண்டு, எச்சரிக்கையோடு திட்டம் முன்னெடுக்கப்படுமானால் வரவேற்கத்தக்கதே!

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மரங்களை அழித்த யானைகள்

வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்களை யானைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர் அளவில் பப்பாசி செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு தோட்டத்தினுள் உள்நுழைந்த யானைகள் அறுவடைப் பருவத்தில் காணப்பட்ட  சுமார் 150 க்கும் மேற்பட்ட பப்பாசி மரங்களை முறித்து அழித்துள்ளது.

இதேவேளை அருகாமையில் உள்ள காணிக்குள் புகுந்த யானைகள் ஒருதொகை தென்னை மரங்களையும் அழித்துள்ளது.

மேலும் யானை வேலி அமைக்கப்பட்டு இருந்தும் தமக்கு பிரியோசனம் இல்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேவேளை தற்போது வளர்ப்பு யானைகளை இப்பகுதியில் வருவதால் இவ் அழிவுக்கு காரணம் எனவும், விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே இதற்கான சரியான தீர்வினை தமக்கு பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1310184

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.