Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா!

யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா!

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலுடைய பிறந்த நாள் நேற்று (திங்கட்கிழமை) யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் கொண்டாடப்பட்டது.

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் பட்டேலின் கண்காட்சியை யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ், யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் சிவலிங்கராசா திறந்து வைத்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து, ஒற்றுமை மனித சங்கலியும் அதனை தொடர்ந்து ஒற்றுமை ஓட்டம் கலாச்சார மையத்திலிருந்து யாழ் இந்திய துணைத் தூதரகம் வரை இடம்பெற்றது.

IMG-20221031-WA0149-600x400.jpg

https://athavannews.com/2022/1308123

  • Replies 57
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

182 மீட்டர் உயரத்தில் சர்தார் பட்டேல் சிலை.. மோடி நாளை திறந்து வைக்கிறார்..  குஜராத்தில் விழாக்கோலம் | Narendra Modi to unveil Sardar Patel's 'Statue of  Unity' tomorrow ...

10 of the Tallest Statues of the World: Highest Statues on Earth

182 மீற்றர் உயரமுள்ள  சர்தார் வல்லபாய் பட்டேல்  சிலை குஜராத்தில் உள்ளது.
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை எல்லாம்... இவருக்கு கீழை தான். 
உலகத்தின் உயரமான சிலை இது.

A Landmark or a Monumental Fiasco: What Ails the India-Built Jaffna  Cultural Centre?

@Kapithan விரைவில்... யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தின் முன், 
இவரின் பிரமாண்ட சிலை வரும் என்றே நினைக்கின்றேன். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

யாழில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா!

இவர் யார்? இவர் யாழ்ப்பாணத்துக்கு அல்லது தமிழுக்கு அல்லது சிங்களத்துக்கு என்ன செய்தவர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nochchi said:

இவர் யார்? இவர் யாழ்ப்பாணத்துக்கு அல்லது தமிழுக்கு அல்லது சிங்களத்துக்கு என்ன செய்தவர்?

சிலதுகள்... இந்திய தூதரகத்தோடை தங்களுடைய சுயநலத்துக்காக ஒட்டி உறவாட...
அவர்கள்... இந்தியத் தலைவர்களை எங்கள் மண்ணில் திணிக்கிறார்கள்.

ஒவ்வொரு இனமும்... அந்த மண்ணில் பிறந்த தலைவர்களை தவிர 
மற்றவர்களுக்கு  சிலை வைத்தோ, பிறந்த நாள்களையோ  கொண்டாட மாட்டார்கள். 

ஆனால்  வடக்கு, கிழக்கில் உள்ள சில  தமிழர்களுக்கு இதில் எந்த குற்ற உணர்வும் இல்லை.
அதனால்  இப்போ... எமது சுயத்தை இழந்து வருகின்றோம்.

இன்னும் பத்து ஆண்டுகளில், எமது அடையாளங்கள் எல்லாவற்றையும் 
இந்தியா விழுங்கி விடும். பின்பு... வேதனைப்பட்டு எந்த அர்த்தமும் இல்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது நான் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா வேண்டாமா.......ப்ளீஸ் ஒரு முடிவுக்கு வரவும்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இப்பொழுது நான் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா வேண்டாமா.......ப்ளீஸ் ஒரு முடிவுக்கு வரவும்.....!  😁

சொல்லுங்கோ பாஸ் காசா பணமா.😄

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

சொல்லுங்கோ பாஸ் காசா பணமா.😄

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சர்தார்......!  💐

(ஒரேயொரு வாக்கால் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டது)......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

இப்பொழுது நான் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதா வேண்டாமா.......ப்ளீஸ் ஒரு முடிவுக்கு வரவும்.....!  😁

எதுக்கும் பேச்சு வாங்க... ரெடியாய் இருங்கோ. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

எதுக்கும் பேச்சு வாங்க... ரெடியாய் இருங்கோ. 😂

i am waiting ......அதுதானே தினமும் நடக்குது......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

சிலதுகள்... இந்திய தூதரகத்தோடை தங்களுடைய சுயநலத்துக்காக ஒட்டி உறவாட...
அவர்கள்... இந்தியத் தலைவர்களை எங்கள் மண்ணில் திணிக்கிறார்கள்.

ஒவ்வொரு இனமும்... அந்த மண்ணில் பிறந்த தலைவர்களை தவிர 
மற்றவர்களுக்கு  சிலை வைத்தோ, பிறந்த நாள்களையோ  கொண்டாட மாட்டார்கள். 

ஆனால்  வடக்கு, கிழக்கில் உள்ள சில  தமிழர்களுக்கு இதில் எந்த குற்ற உணர்வும் இல்லை.
அதனால்  இப்போ... எமது சுயத்தை இழந்து வருகின்றோம்.

இன்னும் பத்து ஆண்டுகளில், எமது அடையாளங்கள் எல்லாவற்றையும் 
இந்தியா விழுங்கி விடும். பின்பு... வேதனைப்பட்டு எந்த அர்த்தமும் இல்லை.

இவர் அகண்ட பாரதத்தை உருவாக்கியவர். இவரது பிறந்தநாளை யாழில் கொண்டாடவைத்து கிந்தியா குறியீட்டுவடிவில் தமிழருக்குச் சொல்கிறது. அதாவது தமிழ்த் தேசியத்தை மறந்துவிட்டு சிங்களத் தேசியத்துள் இணைந்துவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது என்பதே எனது புரிதல். கள உறவுகளுக்கு எப்படியோ?

  • கருத்துக்கள உறவுகள்

இரெண்டொரு தினங்களுக்கு முன்னர் கந்தையருடன் பிடுங்குப்படும்போது, "போகிறபோக்கைப் பார்த்தால் விரைவில்  யாழ்ப்பாணத்தில் வல்லபபாய் பட்டெலுக்கு சிலை வைப்பீர்கள் போலுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தேன். அது உண்மையில் நடக்கும்போல தென்படுகிறது. 

இந்துத்துவா என்பது பெளத்த சமயத்தை இந்து மதத்தின் ஒரு கிளையாக கருதுகிறது. ஆதலால் பெளத்தம் இந்து மதத்தின் எதிரியல்ல. இவர்கள் எதிரியாகக் கருதுவது அன்னிய மதங்களாகக் கருதும் இஸ்லாத்தையும் கிறீத்துவத்தையும்தான். இவைகள் இரண்டுமே இந்துத்துவத்தின் போட்டி மதங்கள். 

எனவே இந்தியா சிங்களத்தை அனுசரித்துப் போவது மிகவும் இயல்பான  விடயம்தான்.  இதனால்தான் சச்சியர் போன்ற  பல இலங்கை இந்து சமயத் தலைவர்கள் பெளத்த சமய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எதனையும் எதிர்ப்பதில்லை.

கறுப்பு மனிதர்களான திராவிடர்கள்தான் வட இந்திய சனாதன தர்மத்தினை எப்போதுமே கேள்விக்குட்படுத்துபவர்கள்.  எனவே இந்தியா தமிழருக்கு நீதி பெற்றுத்தரும் என நினைப்பதும், அவர்கள் எமக்கு ஆதரவளிப்பார்கள் என நாங்கள் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.. 

இது எங்களை இன்னொரு முள்ளிவாய்க்காலில்தான் எங்களைக்  கொண்டுபோய் நிறுத்தும். 

☹️

13 minutes ago, nochchi said:

இவர் அகண்ட பாரதத்தை உருவாக்கியவர். இவரது பிறந்தநாளை யாழில் கொண்டாடவைத்து கிந்தியா குறியீட்டுவடிவில் தமிழருக்குச் சொல்கிறது. அதாவது தமிழ்த் தேசியத்தை மறந்துவிட்டு சிங்களத் தேசியத்துள் இணைந்துவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது என்பதே எனது புரிதல். கள உறவுகளுக்கு எப்படியோ?

உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இந்தியனுக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள உறவு என்ன? எம்மைக் கருவறுத்த கருங்காலிகளின் அரசியல் கூத்தாடி ஒருவனுக்கும் காவடி தூக்கவேண்டிய தேவை தமிழருக்கு ஏன் வந்தது? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'கந்தசட்டி விரதநாளில் இந்திய இராணுவம் செய்த படுகொலை 27.10.1987 27.10.1987, கந்தசட்டி சூரன்போர் அன்று, சாவகச்சேரியிலிருக்கும் ஆலயத்தில் சூரன்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, இந்திய இராணுவத்தினரின் இரண்டு எம்.ஐ 24 ரக உலங்குவானூர்திகள் கூடியிருந்த மக்கள் மீது தாக்குதல் நடாத்தியதில் 65 பொதுமக்கள் உயிரிழந்தனர். 175 பேர் காயமடைந்தனர். ஆலயத்தில் வீதியுலா சென்ற சூரன் சிலையும் சேதமடைந்தது. #30sec2remember'

தமிழர்கள் எந்த மதமாக இருந்தாலும்.... அவர்கள் கொண்டாடும்.. 
எந்த நிகழ்விலும் குண்டு போடுவான் இந்தியன். 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

இரெண்டொரு தினங்களுக்கு முன்னர் கந்தையருடன் பிடுங்குப்படும்போது, "போகிறபோக்கைப் பார்த்தால் விரைவில்  யாழ்ப்பாணத்தில் வல்லபபாய் பட்டெலுக்கு சிலை வைப்பீர்கள் போலுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தேன். அது உண்மையில் நடக்கும்போல தென்படுகிறது. 

வருக...வருக....கபிதன். அவர்களே...உங்களை தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். 🤣🤣 உங்கள் விருப்பம் போல் உங்கள் உறவுகள் யாழ்ப்பாணத்தில். இந்திய தலைவர் வல்லபாய் பட்டெலுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் எடுத்து விட்டார்கள்   யாழ் மேயர் கூட கலந்து சிறப்பித்துளளார். இனி சிலையும. வைப்பார்கள்  அதில் நீங்களும் கலந்து கொள்ள கூடும  ஆனால் கண்டிப்பாக நான் செய்ய மாட்டேன்   சிலை வைக்க ஒரு சதமும். பங்களிப்புகள் செய்யமாட்டேன்......அதேநேரம் யாழ் மேயர் பதவி வகிக்கும் எவரும் மணிவண்ணன் போல் தான் செய்ய முடியும்..[..நான் நீங்கள்.......யாராக இருந்தாலும் ] இல்லையென்றால் பதவி வகிக்கமுடியாது    இப்போது நடத்துகொண்டிருப்பது.  வெளிநாட்டு தமிழரின் எண்ணங்களும் செயல்பாடுகழுக்கும் எதிராக இலங்கையில் உள்ள தமிழர்கள் செயல்படுகிறார்கள்   இவ்வாறான நிலையில் தீர்வு சாத்தியமா?. அல்லது தமிழ் ஈழம் சாத்தியமா?.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சர்தார்......!  💐

(ஒரேயொரு வாக்கால் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டது)......!  😂

அண்ணை நீங்கள் வாக்களிக்கவில்லையா. ?ஏன் ?.   பஸ்கரித்தீகளா.?   இல்லை நடுநிலை வகித்தீர்களா?.   

வல்லபாய் பட்டெலுக்கு.  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்      

எனக்கு ஒரு சந்தேகம் இறந்துபோனவரகளுக்கு பிறந்த நாள் கொண்டாடவும்.   வாழ்த்துக்கள் தெரிவிக்கவும் முடியுமா  ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

அண்ணை நீங்கள் வாக்களிக்கவில்லையா. ?ஏன் ?.   பஸ்கரித்தீகளா.?   இல்லை நடுநிலை வகித்தீர்களா?.   

வல்லபாய் பட்டெலுக்கு.  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்      

எனக்கு ஒரு சந்தேகம் இறந்துபோனவரகளுக்கு பிறந்த நாள் கொண்டாடவும்.   வாழ்த்துக்கள் தெரிவிக்கவும் முடியுமா  ?

இல்லை நான் வாக்களிக்கவில்லை.....சிறியர் வாக்களிக்கட்டும் என்று காத்திருந்தேன்.....!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nochchi said:

இவர் யார்? இவர் யாழ்ப்பாணத்துக்கு அல்லது தமிழுக்கு அல்லது சிங்களத்துக்கு என்ன செய்தவர்?

அவர் காந்தி தாத்தா, நேரு அங்கிள மாதிரி யாழ்ப்பாணத்துக்கு கனக்க செய்தவர்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'கந்தசட்டி விரதநாளில் இந்திய இராணுவம் செய்த படுகொலை 27.10.1987 27.10.1987, கந்தசட்டி சூரன்போர் அன்று, சாவகச்சேரியிலிருக்கும் ஆலயத்தில் சூரன்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, இந்திய இராணுவத்தினரின் இரண்டு எம்.ஐ 24 ரக உலங்குவானூர்திகள் கூடியிருந்த மக்கள் மீது தாக்குதல் நடாத்தியதில் 65 பொதுமக்கள் உயிரிழந்தனர். 175 பேர் காயமடைந்தனர். ஆலயத்தில் வீதியுலா சென்ற சூரன் சிலையும் சேதமடைந்தது. #30sec2remember'

தமிழர்கள் எந்த மதமாக இருந்தாலும்.... அவர்கள் கொண்டாடும்.. 
எந்த நிகழ்விலும் குண்டு போடுவான் இந்தியன். 

சரியாகச் சொன்னீர்கள் சிறியண்ணா! இந்தியன் இந்தியன் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

சரியாகச் சொன்னீர்கள் சிறியண்ணா! இந்தியன் இந்தியன் தான். 

கந்தையர் சண்டைக்கு வரப்போறார் 😀

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, suvy said:

இல்லை நான் வாக்களிக்கவில்லை.....சிறியர் வாக்களிக்கட்டும் என்று காத்திருந்தேன்.....!  😁

அண்ணை சிறியண்ணை கிரைட்டார்.  ரைஸ் குக்கர்.......4ஆயிரம்  5 ஆயிரம் இந்திய ருபாய் இரகசியமாக கொடுத்தால் தான் வாக்களிப்பார்.   இதே மாதிரி எதிர் தரப்பினரிடமும். வேண்டுவார்.  🤣 கொள்கை என்பது காற்று உள்ள போது துற்று என்பது மட்டுமே....

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

கந்தையர் சண்டைக்கு வரப்போறார் 😀

இல்லை கண்டிப்பாக இல்லை 1987 யாழ்ப்பாணம் இல்.  இந்தியா இராணுவம் செய்தவற்றை  மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்    ஆனால் ரிசி சுனக். போன்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிகக்கூடாது.  ...நட்புகரம். நீட்டலாம்.   இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு  ....இவர்களை வைத்து தான்  ..87 இல்.  நடத்தவற்க்கு   தண்டனை வழங்க முடியும்    அதாவது இந்தியனே இந்தியனுக்கு தண்டனை வழங்க வேண்டும்..முடியும் இலங்கை தமிழரால். அது முடியாவே. முடியாது 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'அளவெட்டி ஆச்சிரமப் படுகொலை 26.07.1987 அன்று இந்திய இராணுவந்தினரின் "முதலை" என்னும் எம்.ஐ.24ரக உலங்குவானூர்த்தியால் நடாத்திய றொக்கெட் தாக்குதலில் ஆச்சிரமத்திலுள்ள வயோதிபர்கள், சிறார்கள் உட்பட உயிரிழந்தனர் 12 பேர் படுகாயமடைந்தனர். இராசரத்தினம் கோமதி(15) சின்னத்துறை தங்கலிங்கம் இராசரத்தினம் ஞானகணேசன் (21) 10. சின்னத்தம்பி தம்பிராசா (56) குணசீலன் கோணேஸ்வரி( (38) 11 சின்னத்தம்பி இரத்தினம்( பத்மநாதன் செல்வசந்திரன் (12) 12. சின்னையா இராசரத்தினம் (62) தர்மலிங்கம் சிறீஸ்கந்தராசா (25) சிவகுருநாதன் சிவபாக்கியநாதன் (41) துரைசிங்கம் மதி (01) 14. (33) தம்பிராசா சிறீபவன் (12) 15. வினாசித்தம்பி ஐயாத்துரை (80) அமிர்தநாதர் நேசம்மா (50) 26.10.1988 அன்று மன்னாரில் இந்தியப்படை மற்றும் தேசவிரோதிகளால் கரடிக்குழி, மறிச்சுக்கட்டி பகுதிகளைச் சேரந்த தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 26.10.1987 அன்று சூராவத்தை, புத்தூர், அளவெட்டி ஆகிய இடங்களில் இந்திய இராணுவத்தினரால் 10தமிழர்கள் கொல்லப்பட்டனர். #30sec2remember'

May be an image of text

May be an image of 4 people, helicopter and text that says '22 10 A 1987 இந்திய இராணுவத்தினரின் உலங்குவானூர்தி தாக்குதல் இந்திய இராணுவத்தினர் உலங்குவானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதால் அராலித்துறை மடத்தடியில் தஞ்சம் புகுந்த மக்கள் 35 பேர் உயிரிழந்தனர். முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். ஏழிற்கும் மேற்பட்ட படகுகள் முழுமையாக சேதமடைந்தன. #30SEC2REMEMBER'

May be an image of 3 people and text that says 'OCT. 21 1987 இந்திய படையினர் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் தங்கியிருந்த மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகள் 59 பேரை சுட்டுக்கொன்றனர். #30sec2remember'

May be an image of 3 people and text that says '12.10.1986 அடம்பன் படுகொலை 12.10.1986 அன்று தள்ளாடி இராணுவமுகாமிலிருந்து வந்து அடம்பன் கிராமத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் 20 பொதுமக்களைச் சுட்டுப்படுகொலை செய்தனர். 1. யூலியன் ஜெயசீலன் (22) அந்தோனிப்பிள்ளை மெசியாஸ் (28) 2. கிறிஸ்தோடு யோவான் (65) ஆரோக்கியம் சந்தான் (30) ஐயம்பிள்ளை நாகமுத்து (84) 9. ரோசாய்ஸ் புலேந்திரன் (32) தங்கவேல் இராமன் 10. சபாபதிப்பிள்ளை தங்கம்மா (70) 5. மாமுண்டி செல்வராசு (14) 11. வஸ்தியான் சகாயநாதன் குரூஸ் 6. அந்தோனி கஸ்பார் (63) 12. வீரசிங்கம் மனோரஞ்சிதம் (24) கொல்லப்பட்டோரின் அனைவரது விபரம் பெறமுடியவில்லை இந்தியப் படையின் 12.10.1987 படுகொலைகள் 175 பேர் படுகொலை மல்லாகம் சுன்னாகம், கொல்லங்கலட்டி, பிரம்படியில் 75 தமிழர்கள் இந்தியப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொக்குவில் பொற்பதியைச் சுற்றிவளைத்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை நிலத்தில் படுக்கவைத்து கவசவாகனங்களை ஏற்றியும் சுட்டும், இந்தியப்படை படுகொலை செய்தது. #30seczremember'

May be an image of text that says '11 இந்தியப்படையின் எறிகணைவீச்சில் ழ்.பெரியபுலம் மகாவித்தியாலய அதிபர் 10 நாட்டுப்பற்றாளர் ஆறுமுகம் தாமோதரம்பிள்ளை கொல்லப்பட்டார். இந்தியப்படையின் துப்பாக்கிச்சூட்டில் 1987 காங்கேசன்துறையைச்சேர்ந்த திருநாவுக்கரசு சுரேஸ்குமார் கொல்லப்பட்டார். புதுக்காட்டுச் சந்தியில் இந்தியப்படையால் 8 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 11 1. கனகரத்தினம் (35) 2. குழந்தைவேலு செல்வராசா (22) 3. பொன்னையா நவரத்தினம் (34) 4. பொன்னையா சுப்ரமணியம் (40) 5. பேரம்பலம் மகேஸ்வரன் (10) 6.பேரம்பலம் கோகிலாதேவி (14) வேலாயுதம் செந்தில்நாதன் (14) சின்னத்தம்பி பசுபதிப்பிள்ளை (41) 11 திருகோணமலையில் இந்தியப்படையால் தமிழ் இளைஞரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் வைத்து பேருந்திலிருந்து இறக்கப்பட்டு 5 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #30sec2remember 10 1987 10 1988'

May be an image of one or more people and text that says '04.10.1988 இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டோர் 04.10.1988 யாழ்.தொண்டமனாறு கெருடாவில் பகுதியில்; தந்தையும் மகனுமான வேலுப்பிள்ளை செல்லக்கண்டு மற்றும் செல்லக்கண்டு சோதிலிங்கம் நினைவு கூருகின்றோம் 1992- 10 04 ஆண்டு இன அம்பாறை செருடாவில் எல்லப்பட்ட நாட் செல்லக்கண்டு கொ்லப்பட்ட தால் வவுனியாவில் சாளம்பைக்குள இளைஞன் கப்டன் வீரச்சாவெய்திய் முதூர், ஆகியோன இந்நாளில் நினை கூருகின்றோம் தமிமீழ விடுதலைப்புலிகள் (9/5155) யாழ். மத்திய பேருந்து நிலையம், யாழ்.பூநாறி மரத்தடிப்பகுதியில் இரண்டு தமிழர்கள் #30SEC2REMEMBER'

இந்திய இரணுவம் நடாத்திய அட்டூழியங்கள்.

ஈழத்தில்,  இந்திய ராணுவம்...
வைத்தியசாலை, கோவில், பாடசாலை, குடிமனை என்று 
எல்லா இடமும் குண்டு போட்டு தமிழர்களை கொன்றது போதாது என்று... 
பல சகோதரிகளை வன்புணர்வும் செய்தவர்கள், எந்த முகத்துடன்...
தமிழ்ப் பகுதிகளில்.. தங்கள் நாட்டு அடையாளங்களை நிறுவுகின்றார்கள். 😡

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

இவர் யார்? இவர் யாழ்ப்பாணத்துக்கு அல்லது தமிழுக்கு அல்லது சிங்களத்துக்கு என்ன செய்தவர்?

கபிதனை கேளுங்க விடை அவருக்குத்தான் தெரியும் 😃

22 minutes ago, Kandiah57 said:

ஆனால் ரிசி சுனக். போன்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிகக்கூடாது.  ...நட்புகரம். நீட்டலாம்.

ரிசியர் பட்ஜெட் ரிலிஸ் பண்ணும்போதுதான் அவரின் ஆட்சியின் ஆயுள் தெரியும் மேலும் கால அவகாசம் கேட்பார் என்று பட்சி கூறுகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

தங்கள் தேடலுக்கும் இணைப்புக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

இவர் யார்? இவர் யாழ்ப்பாணத்துக்கு அல்லது தமிழுக்கு அல்லது சிங்களத்துக்கு என்ன செய்தவர்?

4 hours ago, தமிழ் சிறி said:

182 மீற்றர் உயரமுள்ள  சர்தார் வல்லபாய் பட்டேல்  சிலை குஜராத்தில் உள்ளது.
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை எல்லாம்... இவருக்கு கீழை தான். 
உலகத்தின் உயரமான சிலை இது.

2 hours ago, ரஞ்சித் said:

இந்த இந்தியனுக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள உறவு என்ன? எம்மைக் கருவறுத்த கருங்காலிகளின் அரசியல் கூத்தாடி ஒருவனுக்கும் காவடி தூக்கவேண்டிய தேவை தமிழருக்கு ஏன் வந்தது? 

இவர் தான் ஆனையிறவு அழித்து தொடர்ந்து அரியாலை வரை போன விடுதலைப் புலிகளை பலாலியில் இருந்த ராணுவம் எப்படி தப்புவதென அங்கலாய்த்துக் கொண்டிருந்த நேரம் போரை நிற்பாட்டியவர் என எண்ணுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.