Jump to content

இரா.சம்பந்தனுக்கு தங்க விருது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கற்கை நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஒப் பொலிடிக்ஸ் நிறுவனம் வருடாந்தம் நடத்தும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகள் சம்பந்தமாக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல்வாதிகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

இரா.சம்பந்தனுக்கு தங்க விருது | Gold Award To R Sampanthan

இதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும் ஜனநாயகத்திற்கான தங்க விருது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தனுக்கு தங்க விருது | Gold Award To R Sampanthan

வருடத்தின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி பிரேம்நாத் சீ தொலவத்த ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

https://tamilwin.com/article/gold-award-to-r-sampanthan-1667819231

  • Confused 1
  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி  போடு அரிவாளை...

சிங்களம்  சொன்னாலும் தமிழருக்கு உறைக்காது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TNA MP apologizes for raising national flag | Colombo Gazette

சம்பந்தன்.... சிங்களவனுக்கு செய்த சேவைக்கு, 
தங்க விருது என்ன பிளாட்டினம் விருது கூட கொடுப்பார்கள்.

தமிழ்  இனத்திடம் இருந்து சம்பந்தனுக்கு... தகர விருது கூட கிடையாது.
எல்லோரும் சம்பந்தனை பார்த்து காறித் துப்புகிறார்கள். 🤮

சொந்த மக்களின் மனதில் குடியிருப்பவனே உண்மையான தலைவன்.
அதுக்கு.. சம்பந்தன் லாயக்கற்றவர். 😡

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

TNA MP apologizes for raising national flag | Colombo Gazette

சம்பந்தன்.... சிங்களவனுக்கு செய்த சேவைக்கு, 
தங்க விருது என்ன பிளாட்டினம் விருது கூட கொடுப்பார்கள்.

தமிழ்  இனத்திடம் இருந்து சம்பந்தனுக்கு... தகர விருது கூட கிடையாது.
எல்லோரும் சம்பந்தனை பார்த்து காறித் துப்புகிறார்கள். 🤮

சொந்த மக்களின் மனதில் குடியிருப்பவனே உண்மையான தலைவன்.
அதுக்கு.. சம்பந்தன் லாயக்கற்றவர். 😡

உண்மை  அண்ணா .

Link to comment
Share on other sites

சிங்களவரை காப்பாற்றிய சமபந்தருக்கு  கொடுக்கப்பட்ட விருது. தமிழர்கள் பெருமைப்பட எதுவுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில் அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும் ஜனநாயகத்திற்கான தங்க விருது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதை தமிழ்மக்களால் வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

உலகத்தவர்களை திருப்திபடுத்தியதற்கு அவர்களால் வழங்கப்படும் விருதுக்காக

தமிழ்மக்கள் வெட்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

நல்லிணக்கம்

சரியான ஆளுக்குத்தான் குடுத்திருக்கிறாங்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சம்பந்தன் இதுக்கு மரத்தில் கயிறு கட்டி சுருக்குப்போட்டு தலையை தலையை உள்ளுடுத்திச் செய்யிறதைச் செய்யலாம்.

நாளுக்கு நாள் சம் சும் ஆல் தமிழினம் அழிகிறது.

இந்த விருதை சிங்களவன் பரப்புரைக்குப் பயன்படுத்துவான்.

தமிழருக்கு எல்லாவற்றிற்கும் ஒத்துழைப்பு நல்குகின்றனர் என வரலாற்றை சிங்களவன் மாற்றுவான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2022 at 17:19, பெருமாள் said:

அரசியல் கற்கை நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஒப் பொலிடிக்ஸ் நிறுவனம் ..

இரா.சம்பந்தனுக்கு தங்க விருது | Gold Award To R Sampanthan

memees.php?w=240&img=dmFkaXZlbHUvdmFkaXZ

👍..👌

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா இதுவரை காலமும் உழைத்தது இதற்காகத்தான்! உழைத்தவன் ஊதியத்திற்கு சொந்தக்காரனே. இதில பெருமைப்படுவதற்கோ, புலம்புவதற்கோ தமிழருக்கு ஒன்றுமில்லை. ஐயா சொன்னதுதானே! சிங்களவர் விரும்பாத, அவர்களை கோபப்படுத்தும் தீர்வினை ஏற்க மாட்டோம் என்றாரே. சொன்னதை இறுதிவரை கடைப்பிடித்ததால் தங்கத்தை தட்டிச்சென்றார், அதுவும் தேடி வந்தது வேண்டாமென்பாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேரில் சென்று வாழ்த்து !

11 NOV, 2022 | 08:47 PM
image

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான  இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயகப் பொன் விருது' வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்,பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா,பிரதி தலைவி அனுசியா சிவராஜா, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர். 

இரா.சம்பந்தன் ஆற்றிய சேவைகளுக்காக  இவ்விருது பல வருடங்களுக்கு முன்னதாக கிடைத்திருக்க வேண்டியது என்றும்,இவ்விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை எடுத்துக் காட்டுகிறது எனவும் இவ்விருது கிடைத்தமைக்கு முழு மலையக  மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இ.தொ.கா தெவித்துள்ளது.

இரா.சம்பந்தன் இ.தொ.காவின் வாழ்த்துக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்ததுடன், தனக்கும் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குமிடையிலான நட்புறவையும் நினைவுப்படுத்தினார்.

மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது சிறந்த நண்பர் அவருடன் இணைந்து பல அறிவுப்பூர்வமான  கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டுள்ளளோம். மலையக மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் வரலாற்று சாதனைப் படைத்தவை என்றும், அரசாங்கத்தால் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்க்கப்பட்டு, முகவரியற்ற சமூகமாக மாற்றப்பட்ட போது  அம்மக்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக முன்னின்று பல போராட்டங்கள் செய்து, அதை வெற்றிக்கொண்டு,  மலையக மக்களுக்காக பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்து அவர்களை ஒரு ஆளும் சமூகமாக மாற்றினார். அவருடைய அரசியல் சாணக்கியத்தை ஈடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்தும் வெற்றிகரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/139769

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தாலை செய்த ஆறடிப் பெட்டி ஒன்று கொடுத்திருக்கலாம்..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

இரா.சம்பந்தன் ஆற்றிய சேவைகளுக்காக  இவ்விருது பல வருடங்களுக்கு முன்னதாக கிடைத்திருக்க வேண்டியது என்றும்,இவ்விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை எடுத்துக் காட்டுகிறது எனவும்

அப்படி என்ன சேவை செய்து தமிழரை நிமிர வைத்தார் என்றும் சொல்றது? உப்பிடி வெட்டியாய் வாழ்த்தினா எப்படியென்று ஊகிக்கிறது நாங்கள்?

11 hours ago, ஏராளன் said:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்தும் வெற்றிகரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இவர் பணியாற்றி களைத்துவிட்டார் அறிவுரை வைக்கிறார் மற்றவர்களுக்கு.

11 hours ago, ஏராளன் said:

மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது சிறந்த நண்பர் அவருடன் இணைந்து பல அறிவுப்பூர்வமான  கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டுள்ளளோம். மலையக மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் வரலாற்று சாதனைப் படைத்தவை என்றும், அரசாங்கத்தால் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்க்கப்பட்டு, முகவரியற்ற சமூகமாக மாற்றப்பட்ட போது  அம்மக்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக முன்னின்று பல போராட்டங்கள் செய்து, அதை வெற்றிக்கொண்டு,  மலையக மக்களுக்காக பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்து அவர்களை ஒரு ஆளும் சமூகமாக மாற்றினார். அவருடைய அரசியல் சாணக்கியத்தை ஈடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.  

தனது சமுதாயத்திற்கு தான் ஆற்றிய பணி என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை இவரிடம் ஆகவே மற்றவரின் பணியில் புழகாங்கிதம் அடைகிறார் நம்ம தலீவர்! தன் மக்களை நடுவீதியில் விட்டு வேடிக்கை பாத்துக்கொண்டு. நல்ல தலைவனாய் இருந்திருந்தால் இதை நிராகரித்திருக்க வேண்டும் இவர்.

தான் என்ன சேவை செய்ததற்காக இந்த விருதை பெறுகிறேன் என்று தன் மக்களுக்கு விளக்குவாரா இவர்? முடியுமா இவரால்?

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.