Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மையம் கொண்டுள்ள மாண்டஸ் சூறாவளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம்  சொல்லப்போனால் இரண்டு நாள் சரியான தூக்கம் இல்லை கடும் காற்று கடல் சீற்றம்  எனது வீடும் மிக அருகாமையில் உள்ளதால் ஒரு வித பயத்துடன் இரவைக் கழிக்க நேர்ந்தது  
கடலில் இருந்து ஒரு 100 மீற்றர் அருகிலே தற்போதும் வசிக்கிறேன் 

இங்கே கடற்கரையில் வீட்டுவிலை கூட.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

மாரிகாலம் தொடங்கியதற்கு நேற்றுத் தான் போர்வை போர்த்தி படுத்தது. 2 நாளா சூரியனை காணேல, நாளைக்கு உங்க வருவார்! எங்கட பக்கமும் அனுப்பிவிடுங்கோ.🤪

இஞ்ச வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது மனிசன் இந்த சனம் ஏசுறத்துக்கு லீவு எடுத்துட்டு போய்விட்டார் போல பகவானே வாங்க உங்க அருமை இப்ப தெரியுது 

1 minute ago, ஈழப்பிரியன் said:

இங்கே கடற்கரையில் வீட்டுவிலை கூட.

இங்க விலை குறைவு ஆனால் காணி இல்ல சுனாமி பயத்தால் விலை குறைவு  கொஞ்சம் தூரமான பகுதி பேர்ச் 10 லட்சத்துக்கு மேல் அதுவே மெயினாக இருந்தால் 20ம் 25 லட்சம் பேர்ச் அண்ண

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற காலநிலையால் கிளிநொச்சியில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிப்பு

By NANTHINI

09 DEC, 2022 | 04:53 PM
image

டும் காற்று மற்றும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கரைச்சியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரும், கண்டாவளையில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 448 பேரும், பூநகரியில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரும், பளையில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேருமாக, மொத்தம் 172 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

kilinochi.jpg

0.jpg

https://www.virakesari.lk/article/142658

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கே கடற்கரையில் வீட்டுவிலை கூட.

இஞ்சை ஜேர்மனியிலை ஆத்தங்கரை ஏரிக்கரை எண்டால் காணியும் வீட்டு பெறுமதியும் எக்கச்சக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

2001 என நினைக்கிறன் திருவாதிரை தீர்த்ததில் சக நண்பர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள் அவர்கள் நினைவாக கட்டியது இந்த நினைவு தூபி 

நான் கன காலம் மட்டக்களப்பு பகுதியில் இருந்திருந்தாலும் கடலில் குளிக்கவில்லை. வட பகுதி கடலை விட கிழக்கு பகுதி கடல் பயங்கரமானது.

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில்   பனிமழை   பெய்ததாக   கேள்வி உண்மை பொய் தெரியாது 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நான் கன காலம் மட்டக்களப்பு பகுதியில் இருந்திருந்தாலும் கடலில் குளிக்கவில்லை. வட பகுதி கடலை விட கிழக்கு பகுதி கடல் பயங்கரமானது.

வங்காள விரிகுடா ஆச்சே

காணாமல் போனோர் எக்கச்சக்கம் குளித்தவர்களும் சரி , மீன்பிடிக்காக கடலுக்கு சென்றவர்களும் சரி 

சிலர் காணாமல் போய் பர்மாவோ பங்களாதேசிலிருந்தோ  வந்ததாக சொல்வார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இரவு குளிர் சொல்லி வேலை இல்லை.எனக்கே இப்படி என்றால் இங்குள்ளவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

கடந்த இரவு குளிர் சொல்லி வேலை இல்லை.எனக்கே இப்படி என்றால் இங்குள்ளவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்.

உங்கை இருக்கிற சனத்துக்கு இதுவரைக்கும் வின்ரர் ஜக்கற்றும் புல்லோவரும் வின்ரர் சப்பாத்தும் அனுப்பேல்லை.....இனி அந்தக்குறையும் இல்லாமல் வந்துடும் போல....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

உங்கை இருக்கிற சனத்துக்கு இதுவரைக்கும் வின்ரர் ஜக்கற்றும் புல்லோவரும் வின்ரர் சப்பாத்தும் அனுப்பேல்லை.....இனி அந்தக்குறையும் இல்லாமல் வந்துடும் போல....

அது சரி உந்த சாமானுகள போட்டிற்று வயலுக்க களிக்க  இறங்கலாமோ??😎

9 minutes ago, சுவைப்பிரியன் said:

கடந்த இரவு குளிர் சொல்லி வேலை இல்லை.எனக்கே இப்படி என்றால் இங்குள்ளவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்.

இஞ்சால பெரிசுகள் எல்லாம் புகைச்சட்டியும் தேங்காய் உரிச்ச மட்டையும் சிலர் விறகு கட்டையும் தான் எரிச்சு குளிர் காய்ந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இங்க விலை குறைவு ஆனால் காணி இல்ல சுனாமி பயத்தால் விலை குறைவு  கொஞ்சம் தூரமான பகுதி பேர்ச் 10 லட்சத்துக்கு மேல் அதுவே மெயினாக இருந்தால் 20ம் 25 லட்சம் பேர்ச் அண்ண

 

38 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை ஜேர்மனியிலை ஆத்தங்கரை ஏரிக்கரை எண்டால் காணியும் வீட்டு பெறுமதியும் எக்கச்சக்கம்

இங்கேயும் தான்.
அழிவுகளும் கூட பெறுமதியும் கூட.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு வாரத்துக்கு முன் மாரிகாலம் போலவே இல்லை! நல்ல வெயில், மழை பெய்தும் ஒரு மாதாமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இங்கேயும் தான்.
அழிவுகளும் கூட பெறுமதியும் கூட.

நீர்க்கரையில் வீடு கட்டினால் செல்வம் வரும் என்றதொரு ஐதீகமும் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று எனது நண்பர் ஒருவர் புத்தளத்தில் இருந்து சில படங்கள் அனுப்பி இருந்தார்.....அவற்றை என்னால் இணைக்க முடியாமல் இருக்கு......இங்கு பிரான்ஸ்போன்ற நாடுகளில் எப்படி கடுங்குளிரில் பனிமழை கொட்டி மரங்கள் நிலம் வீதிகள் எல்லாம் பணியால் மூடுப்பட்டு இருக்குமோ அப்படி இருக்கின்றது ...பார்த்ததும் எனக்கு திகைப்பாய் இருந்தது, நான் அப்படி ஒன்றை இங்காலுப் பகுதிகளில் கண்டதேயில்லை.......(புத்தளத்துக்கு இங்காலுப் பக்கம்)........இயற்கையாய் ஏதோ நடக்கின்றது.....கவனமாய் இருக்கவும்......!  

  • கருத்துக்கள உறவுகள்

கரையை கடக்கத் தொடங்கியது மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)

image_77c7dcdb12.jpg


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயிரிழப்பு

By T. SARANYA

10 DEC, 2022 | 10:20 AM
image

பலத்த சூறாவளி மற்றும் குளிர் காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் நேற்று (09) உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்தியர்கள் சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ் மாவட்டத்தில் 80ற்கும் மேற்பட்ட ஆடுகளும் 20 தொடக்கம் 30ற்கு மேற்பட்ட மாடுகளும்  உயிரிழந்துள்ளன.

மழையுடன் கூடிய குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என்பதால்  கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும் இவ் இறப்பு இன்னும் கூடலாம் என  வைத்திய அதிகாரி  தெரிவித்துக் கொண்டார்.

குறிப்பாக நாய்கள் பூனைகள், கோழிகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை பாதுகாப்பான கொட்டில்களில் தங்க வைத்து குளிர் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/142691

11 hours ago, suvy said:

நேற்று எனது நண்பர் ஒருவர் புத்தளத்தில் இருந்து சில படங்கள் அனுப்பி இருந்தார்.....அவற்றை என்னால் இணைக்க முடியாமல் இருக்கு......இங்கு பிரான்ஸ்போன்ற நாடுகளில் எப்படி கடுங்குளிரில் பனிமழை கொட்டி மரங்கள் நிலம் வீதிகள் எல்லாம் பணியால் மூடுப்பட்டு இருக்குமோ அப்படி இருக்கின்றது ...பார்த்ததும் எனக்கு திகைப்பாய் இருந்தது, நான் அப்படி ஒன்றை இங்காலுப் பகுதிகளில் கண்டதேயில்லை.......(புத்தளத்துக்கு இங்காலுப் பக்கம்)........இயற்கையாய் ஏதோ நடக்கின்றது.....கவனமாய் இருக்கவும்......!  

அண்ணை இதற்கு காரணம் காற்று மாசு என்று தான் சொல்கிறார்கள். அதே நேரம் குளிரும் கூடத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இதற்கு காரணம் காற்று மாசு என்று தான் சொல்கிறார்கள். அதே நேரம் குளிரும் கூடத்தான்.

May be a cartoon of text

👆 இந்தியா விடுகின்ற கார் புகையாம் அது....  😁
சிங்களவன், இந்தியா மேல் பழியை போட்டு விட்டான்.
விடுதலைப் புலிகள் இருந்திருந்தால்... அவர்களை சாட்டி இருப்பார்கள். 
இப்ப... இந்தியா இருக்க, சிங்களவனுக்கு நல்ல வசதியாக போச்சு. 😂

சிங்களவன்... சரியான சுத்தமானவனும், 😁
மாசுக் கட்டுப்பாட்டு விடயத்தில்... அக்கறை? உள்ளவனும்  என்பதால்... 😂
இந்தியாவும்.. நவ துவாரங்களையும் மூடிக்  கொண்டு இருக்கின்றது. 🤣

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாண்டஸ் புயலால் முல்லைத்தீவில் 1,124 பேர் பாதிப்பு, 180 வீடுகள் சேதம், 800 க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

10 DEC, 2022 | 07:24 PM
image

 

கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை மற்றும் மாண்டஸ் புயல் தாக்கம் மற்றும் கடுமையான குளிருடனான காலநிலையின் காரணமாக  முலைத்தீவு மாவட்டத்தில் 181 குடும்பங்களை சேர்ந்த 1124 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக பாதிப்படைந்துள்ளதோடு 180 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும்  648 மாடுகள் 166 ஆடுகள்  உள்ளடங்கலாக 800 க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும்  முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

mullaitivu__4_.jpg

தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை கடும் காற்று உள்ளிட்ட காரணங்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, மணலாறு  ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 181 குடும்பங்களினன் வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஒரு வீடு முற்றாக பாதிப்படைந்துள்ளதோடு 180   வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

mullaitivu__7_.jpg

குறிப்பாக இந்த வீடுகளினுடைய கூரை பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததன் ஊடாகவும் காற்று காரணமாகவும் வீடுகளில் கூரைகள்  சேதமடைந்து இருப்பதாகவும் அதிகளவானவை தற்காலிக வீடுகளே  சேதம் அடைந்திருப்பதாகவும் அனர்த்த  முகாமைத்துவ பிரிவினுடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

mullaitivu__6_.jpg

இதே வேளையில் வெள்ளம் காரணமாக  வீடுகள் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் உறவினர்களுடைய  வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்த அளவில்  மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்திருப்பதாக அறியப்படுகின்றது

mullaitivu__11_.jpg

இதேவேளை முல்லைத்தீவு  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குளங்கள் வான் வாய்ந்து வருவதோடு உடையார்கட்டுகுளம் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்ட  நிலைமையில் அதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் 1500 உரப்பைகள்  வழங்கப்பட்டு  நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் தலையிலான ஊழியர்கள்  மற்றும் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் இணைந்து குறித்த பகுதியின் வேலைகளை சீர் செய்திருக்கிறார்கள்.

mullaitivu__23_.jpg

அதே வேளையிலே காற்று மற்றும் மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்து வீதிகளில் போக்குவரத்து தடைகள் ஏற்பட்டதோடு தொலை தொடர்பு மற்றும் மின் இணைப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது அவை தற்போது படிப்படியாக சீர் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

mullaitivu__19_.jpg

அத்தோடு கடுமையான குளிர்  காரணமாக குறிப்பாக ஆடு, மாடு, கோழி போன்றன பல நூற்றுக்கணக்கில் உயிரிழந்திருப்பதால் பண்ணையாளர்கள்  கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ளார்கள் அவர்கள் இதற்குரிய நட்ட ஈடுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

mullaitivu__16_.jpg

இதேவேளை கடற்கரையோர பிரதேசங்களில் கிராங்களுக்குள் வந்த வெள்ள நீர் கடலுக்குள் வெட்டிவிடப்பட்டுள்ளது இருப்பினும்தற்போதும்  தாழ்நிலங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலைமையிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினமும் மழை இடையே பெய்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

mullaitivu__24_.jpg

mullaitivu__41_.jpg

mullaitivu__57_.jpg

mullaitivu__58_.jpg

mullaitivu__63_.jpg

mullaitivu__60_.jpg

mullaitivu__67_.jpg

mullaitivu__64_.jpg

mullaitivu__74_.jpg

mullaitivu__60_.jpg

mullaitivu__67_.jpg

mullaitivu__64_.jpg

mullaitivu__74_.jpg

mullaitivu__73_.jpg

mullaitivu__83_.jpg

mullaitivu__87_.jpg

mullaitivu__82_.jpg

mullaitivu__89_.jpg

https://www.virakesari.lk/article/142762

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.