Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டா அமெரிக்கா பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா அமெரிக்கா பயணம்

By RAJEEBAN

26 DEC, 2022 | 04:45 PM
image

கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று திங்கட்கிழமை (டிச 26) காலை முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வரும் அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளனர் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோட்டாபய ராஜபக்ச தனது மனைவி  மருமகள் மகன் பேரப்பிள்ளையுடன் அமெரிக்கா புறப்பட்டுள்ளார் என விமானநிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/144170

  • Replies 70
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாவுடன் அமெரிக்கா சென்றவர்கள் யார் ?

By DIGITAL DESK 2

26 DEC, 2022 | 05:02 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மக்கள் போராட்டத்திற்கு பின்னர் பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது குடும்பத்துடன் நாட்டிலிருந்து  வெளியேறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பேர் இவ்வாறு  திங்கட்கிழமை (டிச. 26) அதிகாலை 2.55 மணிக்கு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் நோக்கி சென்றதாகவும் அவர்கள் டுபாயிலிருந்து அமரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், அவர்களோடு மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ, பேரப் பிள்ளையான டி.எச்.ராஜபக்ஷ ஆகியோரும்   பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கு முன்னர் கடந்த ஜூலை 10ஆம் திகதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து,  நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பின்னர்  பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ  ஆகியோர் மீண்டும் நாடு திரும்பியிருந்தனர்.  

மாலைதீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் 50 நாட்களை கழித்த பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ  இவ்வாறு  கடந்த செப்டெம்பர் 2ஆம் திகதி  நள்ளிரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.  

அதன் பின்னர் அங்கிருந்து அவர்  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெள்ளாலோக்க மாவத்தைக்கு முகப்பாக அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு இல்லத்துக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்தார்.

இந் நிலையிலேயே தற்போது அவர் குடும்பத்தாருடன் அமரிக்கா நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/144175

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இன்று துபாய் ஊடாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி அயோமா ராஜபக்ச, மகன் தமிந்த மனோஜ் ராஜபக்ச, மருமகள் மற்றும் இரண்டு பேரப்பிள்ளைகளுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவர்கள் எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே.-649 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 2.55 அளவில் கட்டுநாயக்க விமானத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதி முக்கியஸ்தர்கள் வெளியேறும் முனையம் ஊடாக சென்று முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் விமானத்தில் ஏறியுள்ளனர்.

இவர்கள் முதலில் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்க புறப்பட்டுச் செல்லவிருந்ததாக விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவித்தன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கவுக்கான நேரடி விமான சேவைகள் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தினர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவரது மனைவி மனைவி அயோமா ராஜபக்ச, அவரது மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத்தாருடன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள கோட்டாபய..! | Gotabaya Gone To America

 

இவர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இவர்கள் அனைவரும் அமெரிக்கா சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

 

என்ற போதும் இந்த விடயம் தொடர்பில் கோட்டாபய தரப்பிலிருந்து எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

குடும்பத்தாருடன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள கோட்டாபய..! | Gotabaya Gone To America

https://tamilwin.com/article/gotabaya-gone-to-america-1672053089

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை... மறக்காமல், "ஜொக்கா" போட்டுக் கொண்டு போகிறாரா.  😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இந்த முறை... மறக்காமல், "ஜொக்கா" போட்டுக் கொண்டு போகிறாரா.  😂

இனி போட்டென்ன போடாமல் விட்டா என்ன?

புதிய புதிய செய்திகளில் பழைய படங்களையே இணைக்கிறார்கள்.

கோத்தபையனை படம் எடுப்பது சிரமம் போல.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எங்கே போய் ஒளிந்தாலும் இனி இவர்கள் விதியின் கையில், அது பாத்துக்கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இந்த முறை... மறக்காமல், "ஜொக்கா" போட்டுக் கொண்டு போகிறாரா.  😂

ஒன்பது நாளைக்குத்தான் தாங்குமாம்...இதலை அது முடிய 9 நாளில் திரும்பி வாறாராம்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடொன்றுக்கு குடும்பத்தோடு விடுமுறைக்காக சென்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

இந்த முறை... மறக்காமல், "ஜொக்கா" போட்டுக் கொண்டு போகிறாரா.  😂

ஜொக்கா? அப்படீன்னா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ராசவன்னியன் said:

ஜொக்கா? அப்படீன்னா? 🤔

ஜட்டி. 😂   சிங்களத்தில் அதனை "ஜொக்கா" என்று சொல்வார்கள்.
கோத்தா வசித்த, ஜனாதிபதி மாளிகையை... போரட்டக் கைப்பற்றிய போது 
இதனை எதிர்பாராத கோத்தபாயா... சில மணித்தியாலத்துக்கு முன்தான் 
மாளிகையை விட்டு அவசரமாக  வெளியேறும் போது... 
படுக்கையறையில்.. அவரின் மருந்து வகைகள், சில கோடி பணம் போன்றவற்றுடன்   
அவர் பாவித்த ஜட்டியையும் விட்டு விட்டு ஓடி விட்டார்.

கோடி பணம் எல்லாவற்றையும் விட... 
கோத்தா போட்ட ஜட்டியை, போராட்டக் காரர்கள் கைப்பற்றி 
உலகம் எங்கும் காணொளி மூலமாக  பரவ விட்டார்கள். 

உங்கள் பார்வையில்... அது படாதது அதிசயமாக உள்ளது, ராஜவன்னியன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உங்கள் பார்வையில்... அது படாதது அதிசயமாக உள்ளது, ராஜவன்னியன்

அவர் அடுத்தவரின் ஐட்டியைப்பார்பதில்லை  நல்ல பிள்ளை. இதில் எல்லாம் நேரத்தை செலவிட முடியுமா   ?  நேரம் =பணம்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kandiah57 said:

அவர் அடுத்தவரின் ஐட்டியைப்பார்பதில்லை  நல்ல பிள்ளை. இதில் எல்லாம் நேரத்தை செலவிட முடியுமா   ?  நேரம் =பணம்.  🤣

ஆயிரம் வருசத்துக்கு, ஒரு முறைதான் இப்படியான சந்தர்ப்பம் கிடைக்கும். 😁
 @ராசவன்னியன் பார்க்காமல் தவற விட்டதன் மூலம், மாபெரும் தவறை செய்து விட்டார். 😢

உலகின் முதல் பெண் பிரதமர்  ஸ்ரீமாவோ  இலங்கையை  சேர்ந்தவர் 
என்ற பெருமை நம் நாட்டுக்கு இருந்தது.
இப்போ... உலகில் முதல் முறையாக ஒரு ஜனாதிபதியின் ஜட்டி, 
பொது வெளியில் காட்டிய பெருமையையும் ஸ்ரீலங்காவே பெற்றுக் கொள்கின்றது. 👍

சதாம் குசைன், கடாபி... போன்ற தலைவர்களின் மாளிகைகள் கைப்பற்றிய போது..
ஜட்டியை மட்டும் கைப்பற்ற முடியாமல் போனது. 

ஆனால், ஸ்ரீலங்காவில்   ஜட்டி மட்டுமல்ல, திருமதி கோத்தாவின் உள் பாவாடையையும் 
கைப்பற்றி,  உலகுக்கு... பெருமை சேர்த்தவர்கள் நம், போராட்டக் காரர்கள். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது அமெரிக்கா எங்கும் பனி கொட்டுவதால், நீங்கள் அக்கறையாக சொல்கிறீர்கள் என் எண்ணினேன். அதனால் ஜொக்கா என்றால் குளிருக்கு அணியும் ‘ஸ்வெட்டர்’ என்றே நினைத்தேன். 🫣

கந்தையா என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. 😎

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

இப்பொழுது அமெரிக்கா எங்கும் பனி கொட்டுவதால், நீங்கள் அக்கறையாக சொல்கிறீர்கள் என் எண்ணினேன். அதனால் ஜொக்கா என்றால் குளிருக்கு அணியும் ‘ஸ்வெட்டர்’ என்றே நினைத்தேன். 🫣

கந்தையா என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. 😎

"ஒண்ணும் தெரியாத பாப்பா... கையை சூப்பிசுதாம்  சோக்கா..."  என்ற மாதிரி.
நீங்கள் சொன்னதை, நாங்கள் நம்ப வேணுமாம்.  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, தமிழ் சிறி said:

திருமதி கோத்தாவின் உள் பாவாடையையும் 

என்னாது பாவாடையா?????

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Winner - Discover & Share GIFs |  Comedy memes, Comedy pictures, Vadivelu comedy video

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

என்னாது பாவாடையா?????

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Winner - Discover & Share GIFs |  Comedy memes, Comedy pictures, Vadivelu comedy video

ஆம்... பாவாடையே தான். 🙃
மெல்லிய றோஸ் நிறத்தில் ஒன்றும், வெள்ளையில் ஒன்றுமாக..
இரண்டு பாவாடைகளை காட்டிய காணொளியை நான் பார்த்தேன்.
இணையத்தில் அதை மீண்டும்  கண்டால், இணைத்து விடுகின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் மகனும் குடும்பமும் அமெரிக்காவில் வாழ்வதால்.. அவர் தாய் தந்தையை கொலிடே விசாவில் கூட கூட்டிச் செல்ல முடியும். அப்படி நிறைய சிங்களவர்கள் இப்போ கூப்பிடுவதைக் காண முடிகிறது... குறிப்பாக இந்த பொருண்மிய நெருக்கடியில் இருந்து தப்பிக்க சிங்களவர்கள் தாய் நாட்டை விட்டு ஓடுவதை விரும்புவதை பார்க்கும் போது.. தமிழர்களுடான வெறுப்பு நாட்டுக்காக அல்ல.. தூண்டிவிட்ட இனவெறுப்பென்றே தோன்றுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ராசவன்னியன் said:

இப்பொழுது அமெரிக்கா எங்கும் பனி கொட்டுவதால், நீங்கள் அக்கறையாக சொல்கிறீர்கள் என் எண்ணினேன். அதனால் ஜொக்கா என்றால் குளிருக்கு அணியும் ‘ஸ்வெட்டர்’ என்றே நினைத்தேன். 🫣

கந்தையா என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. 😎

கந்தையா பாவம் அப்பாவி ராஜவன்னியன்.......சூது வாது தெரியாதவர்.......அதையெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம்.......!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கந்தையா பாவம் அப்பாவி ராஜவன்னியன்.......சூது வாது தெரியாதவர்.......அதையெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம்.......!  

அட ஆமாம், கந்தையா என்னை மாதிரியே அப்பாவி. 🤩சூது, வாது தெரியாதவர்தான். 😌

  • கருத்துக்கள உறவுகள்

சரி ரணில் கோத்தாவை பத்திரமாக அமெரிக்காவுக்கு அகனப்பிவிட்டார். அமெரிக்கா தான் {நாவில் போர்க்குற்றங்கள் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள். அனால் போர்க்கற்றவாளி கோத்தா அமெரிக்காவுக்கப் போகிறார். அந்த ஐநா தீர்மானம் வெறும் பேப்பர்தான் என்பது இப்பொழுது உண்மையாகிறது. தமிழர்களை அமெரிக்காவும்.இந்தியாவும் தமிழ்அரசியல்வாதிகளும் சேர்ந்து நல்லாப் பெய்க்காட்டி தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

அட ஆமாம், கந்தையா என்னை மாதிரியே அப்பாவி. 🤩சூது, வாது தெரியாதவர்தான். 😌

எல்லா கறுமமும். 60க்கு பின் தான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

ரணில் கோத்தாவை பத்திரமாக அமெரிக்காவுக்கு அகனப்பிவிட்டார்.

ரணிலை திறமையான தலைவர் என்று கோத்தா புகழ்ந்தது; இதுக்குதான் என்று கோத்தா பறந்த பின்தானே தெரிந்தது. நால்லாய் தலையில ஐஸ் வைத்திருக்கிறார்!

2 hours ago, புலவர் said:

அமெரிக்கா தான் {நாவில் போர்க்குற்றங்கள் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள்.

அவர் அமெரிக்காவுக்கு போகவில்லையென செய்திகள் சொல்கின்றன. இருந்தாலும் இனி அவர் அமெரிக்காவின் பிரச்சனை. அவர் விசாவுக்கு விண்ணப்பித்தபோது மறுத்த அமெரிக்கா, விஸா வழங்குகிறது என்றால் ஏதோ திட்டம் பின்னால் இருக்கும். நாண்டுகொண்டு குடியுரிமையை ரத்துச் செய்தவர் பெற்ற படிப்பினை போதாதென்றா மறுத்த, இழந்த விஷாவை பெறுகிறார் என்றால் எதுக்கும் ஒரு காரணம் பின்னாளில் வருந்துவார் கோத்தா. ஆனா திரும்பி ஓடிவர முடியாது, சுருக்கு கயிறு இறுக்கப்பட்டுவிடும். அண்மையில் ஒரு இராணுவ அதிகாரிக்கு பயணத் தடை போட்டது அமெரிக்கா என்பதும் நினைவிற் கொள்ள வேண்டும்.

11 hours ago, தமிழ் சிறி said:

ஆம்... பாவாடையே தான். 🙃
மெல்லிய றோஸ் நிறத்தில் ஒன்றும், வெள்ளையில் ஒன்றுமாக..
இரண்டு பாவாடைகளை காட்டிய காணொளியை நான் பார்த்தேன்.

"கனத்தை கனம் பாக்குமாம் வேறு எதையோ எது பாக்குமாம்" என்றொரு பழமொழி உண்டு. நீங்கள் பாத்தது வீட்டுகார அம்மாவுக்கு தெரியுமோ? தெரிந்திருந்தா விளக்குமாத்தால விழுந்திருக்குமே? இல்லை அப்படியொரு  ஆசை, நீங்கள் பாத்ததை நாங்கள் பாக்க கிடைக்கேல்லையே என்று. நீங்கள் பாத்தது திரைச்சேலையாய் இருக்கும் சிறியர், எதுக்கும் இன்னொரு தடவை பாத்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் இணைக்கமுன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2022 at 07:08, ஈழப்பிரியன் said:

கோத்தபையனை படம் எடுப்பது சிரமம் போல.

துபாயில்   குடும்பத்தோடு சுற்றித் திரிகிறாராம், சுடச் சுட  படம் எடுப்பதென்றால்; முந்துங்கள் அவர் ஓடி ஒளியுமுன்!

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people, people standing and text that says 'ஒரு காலத்தில எப்படி இருந்த மனிசன்'

பத்தோடு, பதினொன்றாக... ஒரு இடத்தில் நிற்கும் கோத்தா.
படம் எடுக்கப்பட்ட இடம், துபாயா... அமெரிக்காவா என்று தெரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

துபாய் என்று சொல்கிறார்கள். துபாய், அமெரிக்கா வாழும் நம் கள உறவுகள் உறுதிப்படுத்தலாம். 

அமெரிக்காவில் இப்போ குளிரா? கோத்தா உடுத்தியிருக்கும் உடைகளை பொறுத்து உறுதிப்படுத்தி கொள்ளலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.