Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடினை கடுமையாக விமர்சித்த ரஷ்ய எம்.பி..! இந்தியாவில் மர்ம மரணம் – தொடரும் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புடினை கடுமையாக விமர்சித்த ரஷ்ய எம்.பி..! இந்தியாவில் மர்ம மரணம் – தொடரும் விசாரணை

1-37.jpg

புடினின் உக்ரைன் போரை கடுமையாக விமர்சித்த ரஷ்யாவின் பணக்கார எம்.பி. இந்தியாவில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பணக்கார எம். பி.களில் ஒருவரும், அதிபர் விளாடிமிர் புட்டினின் தீவிர விமர்சகருமான பாவெல் அன்டோவ் (Pavel Antov), இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள விடுதியில் இருந்து மர்மமான முறையில் விழுந்து இறந்து கிடந்தார்.

கோடீஸ்வரர் பாவெல் அன்டோவ் தனது 66 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ஒடிசாவின் Rayagada பகுதியில் விடுமுறையில் இருந்தார்.

அவர் மாடியில் இருந்து குதித்ததாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷ்ய தூதரக ஜெனரல் அலெக்ஸி இடம்கின், அவர் ஜன்னலில் இருந்து விழுந்ததாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அவரது மரணம் குறித்த விசாரணையை உன்னிப்பாகப் பின்பற்றுவதாகவும் மற்றும் ஒடிசா காவல்துறையினரிடமிருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வியாழன் அன்று மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படும் அவரது கட்சி சகாவான விளாடிமிர் புடானோவ் (61) மர்மமான முறையில் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இவர் இறந்துள்ளார்.

உக்ரைன் மீதான புடினின் போரை கடுமையாக எதிர்த்தவர்களில் அன்டோவ்வும் ஒருவர் ஆவார். கடந்த ஜூன் மாதம், ஒரு சமூக வலைதள பதிவில், உக்ரைன் மீதான போர் மற்றும் விமானத் தாக்குதல்களை ரஷ்ய “பயங்கரவாதம்” என்று அவர் விமர்சித்தார்.

ஆனால் இறுதியில், பெரும் அழுத்தத்திற்கு ஆளானதையடுத்து அவர் தனது அறிக்கையை திரும்பப் பெற வேண்டியதாயிற்று. மேற்கத்திய ஊடகங்கள் அவர் ஒரு “குழப்பமான மன்னிப்பு” வெளியிட்டதாக செய்தி வெளியிட்டது.

அவரது பதிவு “துரதிர்ஷ்டவசமான தவறான புரிதல்” மற்றும் “தொழில்நுட்பப் பிழை” என்று அவர் கூறினார். மேலும் அவர் “எப்போதும் புடினை ஆதரிப்பதாக” கூறினார்.
 
https://akkinikkunchu.com/?p=233537

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி என்னென்ன கதையெல்லாம் சொல்லுவினம் பாருங்கோ.....தடக்குப்பட்டு விழுந்தாலும் மாண்புமிகு புட்டின் தான் காரணம் எண்டுவினம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இனி என்னென்ன கதையெல்லாம் சொல்லுவினம் பாருங்கோ.....தடக்குப்பட்டு விழுந்தாலும் மாண்புமிகு புட்டின் தான் காரணம் எண்டுவினம்.😂

மேற்கு ஊடகங்களின்.. வண்டவாளம் உலகு அறிந்ததுதானே.
தற்கொலை கொலை செய்தவனையும், 
பிறந்த நாள் விழாவில்... வொட்கா அடித்து, வெறியில்.. ஜன்னலால் விழுந்தவனையும் 
அதி உத்தமர்  புட்டின் கொலை செய்து போட்டார் என்று ஒப்பாரி வைப்பார்கள் பக்கிரி பயலுகள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இனி என்னென்ன கதையெல்லாம் சொல்லுவினம் பாருங்கோ.....தடக்குப்பட்டு விழுந்தாலும் மாண்புமிகு புட்டின் தான் காரணம் எண்டுவினம்.😂

இல்லை இல்லை  ....இயமன்   பாசகயிற்றுடன்  வந்து யன்னலுடாக. வீசிவிட்டு......இழுந்தார்.   வந்து விழுந்தான் பெத்து என்று  ...🤪. இயமன்.   உயிரை பறிக்க வரவில்லை  ..😄😂.   கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு அழைத்து போக வந்தவர்.    ....இந்தாள் இயமனை     மான்புமிகு மாணிக்கம்  புடின்  என்று பயந்து தவறி விழுந்து விட்டார்  ......😎. விழுந்தபடியால்.   உயிரிழப்பு எற்பட்டது    பிறந்தவர்கள். இறக்க வேண்டும்   இது இயற்கையான செயலாற்றம் 😛.  ஆனாலும்  நம்ம தலைவர் தர்மிஸ்டர  புதின்.   உணவுகள் அருந்தாமால்.....கோப்பி வெஸ்கா....விஸ்கி...போன்றன   சாப்பிடமால்.   ஆழ்ந்த கவலையாக இருக்கிறார் புது மனைவி அவரை சந்தித்ததும்   ஒரே இரவில்  பழைய நிலைக்கு திரும்பி விடுவார் என.  பிரபல சோதிடர் கூறினார் 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

ஏன் அண்ணை ஏன்???🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

ஏன் அண்ணை ஏன்???🤣

மற்ற நாட்டுக்குள் போய் ஒரு மனிதனை   கொலை செய்வதை ஆதரிக்க முடியுமா   ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

மற்ற நாட்டுக்குள் போய் ஒரு மனிதனை   கொலை செய்வதை ஆதரிக்க முடியுமா   ?

ஊரில  ஒரு  பழமொழி இருக்கு

பூனைக்கு  விளையாட்டாம்

எலிக்கு உயிர்  போகுதாம் என்று...

என்ன  செய்வதண்ணா

வதைகளை பார்த்து ரசிக்கப்பழகிவிட்டது இவ்வுலகு???

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சிப்போரைக் கொல்லும் விதத்தில் கூட ஒரு புதுமையோ, படைப்பாற்றலோ இல்லாமல் இருக்கிறார்களே? எல்லோரும் மாடியில் இருந்து தவறி விழுந்து தான் இறக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

விமர்சிப்போரைக் கொல்லும் விதத்தில் கூட ஒரு புதுமையோ, படைப்பாற்றலோ இல்லாமல் இருக்கிறார்களே? எல்லோரும் மாடியில் இருந்து தவறி விழுந்து தான் இறக்கிறார்கள்.

பழைய இருப்பு  மட்டும்  தானே இருக்கு???🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

மேற்கு ஊடகங்களின்.. வண்டவாளம் உலகு அறிந்ததுதானே.
தற்கொலை கொலை செய்தவனையும், 
பிறந்த நாள் விழாவில்... வொட்கா அடித்து, வெறியில்.. ஜன்னலால் விழுந்தவனையும் 
அதி உத்தமர்  புட்டின் கொலை செய்து போட்டார் என்று ஒப்பாரி வைப்பார்கள் பக்கிரி பயலுகள். 🤣

மேற்குலகின்ரை நாறல்களை  எழுத வெளிக்கிட்டால் ஒரு வருசம் காணாது.😎
விக்கிலீக்ஸ் யூலியான்ர அவலங்கள்/கதையள் தெரியும் தானே 😂

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Justin said:

விமர்சிப்போரைக் கொல்லும் விதத்தில் கூட ஒரு புதுமையோ, படைப்பாற்றலோ இல்லாமல் இருக்கிறார்களே? எல்லோரும் மாடியில் இருந்து தவறி விழுந்து தான் இறக்கிறார்கள்.

large.DB71FCD3-1528-40D8-9B1D-9007D96A7826.jpeg.c8acb37ccaf9ef8b66cb2384a133fb4d.jpeg

யன்னல், பொலோனியம் தேனீர், கதவில் நொவிசொக் 😂

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

மேற்குலகின்ரை நாறல்களை  எழுத வெளிக்கிட்டால் ஒரு வருசம் காணாது.😎
விக்கிலீக்ஸ் யூலியான்ர அவலங்கள்/கதையள் தெரியும் தானே 😂

ஓம், இன்னும் அசாஞ்சே சாகவில்லை. ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து புகை போட்டுக் கிளப்பி சிறையில் தான் வைத்திருக்கிறார்கள். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Justin said:

ஓம், இன்னும் அசாஞ்சே சாகவில்லை. ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து புகை போட்டுக் கிளப்பி சிறையில் தான் வைத்திருக்கிறார்கள். 😂

அமெரிக்காவின் ஊத்தையளை வெளியில சொன்னதுக்குத்தானே உள்ளுக்கை வைச்சிருக்கினம்.

அதாவது மேற்குலகை பற்றி உள்ளதை கூறும் தளங்கள், ஊடகங்கள் தடை செய்யப்படும். அல்லது போட்டுத்தள்ளப்படும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அமெரிக்காவின் ஊத்தையளை வெளியில சொன்னதுக்குத்தானே உள்ளுக்கை வைச்சிருக்கினம்.

அதாவது மேற்குலகை பற்றி உள்ளதை கூறும் தளங்கள், ஊடகங்கள் தடை செய்யப்படும். அல்லது போட்டுத்தள்ளப்படும். 😂

யாரைப் போட்டிருக்கிறாங்கள்? பின் லாடனை, அல் பக்தாதியைச் சொல்றீங்களோ? 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

இல்லை இல்லை  ....இயமன்   பாசகயிற்றுடன்  வந்து யன்னலுடாக. வீசிவிட்டு......இழுந்தார்.   வந்து விழுந்தான் பெத்து என்று  ...🤪. இயமன்.   உயிரை பறிக்க வரவில்லை  ..😄😂.   கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு அழைத்து போக வந்தவர்.    ....இந்தாள் இயமனை     மான்புமிகு மாணிக்கம்  புடின்  என்று பயந்து தவறி விழுந்து விட்டார்  ......😎. விழுந்தபடியால்.   உயிரிழப்பு எற்பட்டது    பிறந்தவர்கள். இறக்க வேண்டும்   இது இயற்கையான செயலாற்றம் 😛.  ஆனாலும்  நம்ம தலைவர் தர்மிஸ்டர  புதின்.   உணவுகள் அருந்தாமால்.....கோப்பி வெஸ்கா....விஸ்கி...போன்றன   சாப்பிடமால்.   ஆழ்ந்த கவலையாக இருக்கிறார் புது மனைவி அவரை சந்தித்ததும்   ஒரே இரவில்  பழைய நிலைக்கு திரும்பி விடுவார் என.  பிரபல சோதிடர் கூறினார் 😂🤣

நான் இஞ்சை என்ன சத்தியவான் சாவித்திரி கதை கேக்கவே வந்தனான் 🤪

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு சில இளையோரிடம் புதின் அவர்களது யுத்தபேரிகை பற்றிக் கேட்டபோது, அவர்கள் சொன்னவிடயம். புதினுக்கு மூளை மாறிவிட்டதாக....  இதனை யாரையும் புண்படுத்தும் நோக்கிற பகிரவில்லை. இதற்கு இப்படியும் விளத்தம் கொடுக்கலாம். அதாவது, அவர்களை மேற்குலக ஊடகங்கள் மூளைச்சலவை செய்துவிட்டதாக......

இளையவர்கள் இன்றிருக்கும் மின்னியல் ஊடக வாய்ப்புகளைவிட்டுத் தனியே மேற்குலக ஊடகங்களை மட்டுமா பார்பார்கள் என்றும் சிந்திக்கவேண்டியுள்ளது. 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

யோசியுங்கள்.  நன்றாகவே யோசியுஙக.........எனக்குள் ஒரு கேள்வி உண்டு........விடை தெரியாது.......ரஷ்யா அதிபர்  புதின்  செய்யும் இந்த   வேலையை....மற்றைய நாடுகளின் தலைவர்களும் செய்யலாம் இல்லையா?.  ஏன் அவர்கள் செய்யக்கூடாது.....? புட்டின்  தனக்கு அல்லது தனனுடைய செயல்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைபபோரை  ரஷ்யாவிலும். உயிரை பறிக்கிறார்.  ரஷ்யாவிக்கு வெளியிலலும். உயிரை உயிரை பறிக்கிறார்.  இதன் மூலம் உமை மொழிகளில் அவர் சொல்வது.  எனக்கு அல்லது என் செயல்களுக்கு  எதிராக கருத்துகள் உரைப்போர்    உயிர் உடன் உலகில்…………… எநத மூலையிலும் வாழ முடியாது என்று........இப்படி ரணில் செயயலாம்.   இல்லையா?.  அப்படி செய்வராயின்.  எங்கள் நிலை யாது? இந்தியா ஏன் இதுவரை கண்டணம் தெரிவிக்கவில்லை ?உணமையான குற்றவாளியை கணடுபிடிப்பார்களா?

உடன் பறிககப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

ரம்புக்வெலவும் போதையில்.. அவுஸில் மாடியில் இருந்து குதிச்சவர்.. நல்ல காலம் புலிகள் இருக்கேல்ல. இல்லாடி அங்க தான் பழி வந்திருக்கும்.

இவரும் எப்படி இறந்தார் என்றில்லை.. உடன புட்டின்.

ஆனால் நிறைய கார் குண்டு வெடிப்பு.. கார் விபத்தென்று உக்ரைன் காரர்கள்.. பல ரஷ்சிய விசுவாசிகளை மேல அனுப்பிட்டினம். அதைப் பற்றி இங்க யாரும் மூச்.

இஸ்ரேல்காரன் ஊரெல்லாம் மேஞ்சு மேஞ்சு போட்டுத்தள்ளுறான் அப்பவும் மூச்.

சி ஐ ஏ காரன் நாடு நாடா பூந்து போட்டுத்தள்ளுறான் அப்பவு மூச்.

பிரித்தானிய உளவு (MI6- SIS)) மற்றும் ஆழ ஊடுருவும் கும்பல் (SAS) எத்தனையோ கொடும் செயல் எல்லாம் செய்யுது அப்பவும் மூச். 

ஆக புட்டின் செய்தால் தான் நாங்க வாக் வாக் என்று கத்துவம். 

  • கருத்துக்கள உறவுகள்

அதானே? இப்பிடி பல தற்செயல் மரணங்களுக்கு சும்மா சும்மா புட்டினைக் குற்றம் சொல்வார்கள்:

அன்னா பொலிற்கோவ்ஸ்காயா சில மர்ம மனிதர்களின் துப்பாக்கி இயங்கும் நேரம் பார்த்து தற்செயலாக துப்பாக்கியின் முன் நின்றதால் இறந்தார். இவரைப் போல இன்னும் சில ரஷ்ய பத்திரிகையாளர்களும் தற்செயலாகத் துப்பாக்கியின் முன்னாள் நின்றதால் இறந்திருக்கின்றனர்.

செர்கி மக்னிற்ஸ்கியை ரஷ்ய பொலிஸ் கைது செய்து கொண்டு சென்ற போது அவர் தனது நீரிழிவுக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துச் செல்லத் தவறி விட்டார், அதனாலேயே சிறையில் அவர் நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். இதுக்கெல்லாம் புட்டின் என்ன செய்வார்?

நீங்க தொடருங்கோ நெடுக்கர்!😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ரம்புக்வெலவும் போதையில்.. அவுஸில் மாடியில் இருந்து குதிச்சவர்.. நல்ல காலம் புலிகள் இருக்கேல்ல. இல்லாடி அங்க தான் பழி வந்திருக்கும்.

இவரும் எப்படி இறந்தார் என்றில்லை.. உடன புட்டின்.

ஆனால் நிறைய கார் குண்டு வெடிப்பு.. கார் விபத்தென்று உக்ரைன் காரர்கள்.. பல ரஷ்சிய விசுவாசிகளை மேல அனுப்பிட்டினம். அதைப் பற்றி இங்க யாரும் மூச்.

இஸ்ரேல்காரன் ஊரெல்லாம் மேஞ்சு மேஞ்சு போட்டுத்தள்ளுறான் அப்பவும் மூச்.

சி ஐ ஏ காரன் நாடு நாடா பூந்து போட்டுத்தள்ளுறான் அப்பவு மூச்.

பிரித்தானிய உளவு (MI6- SIS)) மற்றும் ஆழ ஊடுருவும் கும்பல் (SAS) எத்தனையோ கொடும் செயல் எல்லாம் செய்யுது அப்பவும் மூச். 

ஆக புட்டின் செய்தால் தான் நாங்க வாக் வாக் என்று கத்துவம். 

இந்த‌ கோதாரி பிடிப்பான் எப்ப‌ விழுந்தான்.........2009க்கு பிற‌க்கு சொறில‌ங்கா செய்திக‌ள் வாசிப்ப‌த‌ நிறுத்தி விட்டேன்

அந்த‌ நாட்க‌ளில் ஊட‌க‌ பேச்சாளாரா இருந்து கொண்டு எவ‌ள‌வு பொய்க‌ளை அவுட்டு விட்ட‌வ‌ன்..............
 
ப‌ழைய‌ செய்தியாய் இருந்தாலும் முடிந்தால் லிங்கை இணைத்து விடுங்கோ 
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

அண்மையில் ஒரு சில இளையோரிடம் புதின் அவர்களது யுத்தபேரிகை பற்றிக் கேட்டபோது, அவர்கள் சொன்னவிடயம். புதினுக்கு மூளை மாறிவிட்டதாக....

புதினை  நவீன  உலகத்திற்கு பொருந்ததாத யதார்த்தத்துடன் தொடர்பில்லாதவராகவே பார்க்கிறார்கள். ரஷ்யாவிலேயே புதினது திட்டமிட்டு மீடியாவை கட்டுபடுத்தி அடக்குமுறை செய்து உருவாக்கிய அவரை பற்றிய மாயைகள் உருக தொடங்கி விட்டது. மேற்குலக நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களின் புதின் ரஷ்ய மீதான குருட்டு விசுவாசம் மட்டும் தொடரும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

இந்த‌ கோதாரி பிடிப்பான் எப்ப‌ விழுந்தான்.........2009க்கு பிற‌க்கு சொறில‌ங்கா செய்திக‌ள் வாசிப்ப‌த‌ நிறுத்தி விட்டேன்

அந்த‌ நாட்க‌ளில் ஊட‌க‌ பேச்சாளாரா இருந்து கொண்டு எவ‌ள‌வு பொய்க‌ளை அவுட்டு விட்ட‌வ‌ன்..............
 
ப‌ழைய‌ செய்தியாய் இருந்தாலும் முடிந்தால் லிங்கை இணைத்து விடுங்கோ 
 
அவர்   மாடியிலிருந்து. விழவில்லை.    படியிலிருந்து   வீட்டுக்கு உள்ளே விழுந்தார்....வீட்டுக்கு வெளியில் விழவில்லை.    மற்றும் எவரும் அவரை விழுந்தவில்லை.   

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

இந்த‌ கோதாரி பிடிப்பான் எப்ப‌ விழுந்தான்.........2009க்கு பிற‌க்கு சொறில‌ங்கா செய்திக‌ள் வாசிப்ப‌த‌ நிறுத்தி விட்டேன்

அந்த‌ நாட்க‌ளில் ஊட‌க‌ பேச்சாளாரா இருந்து கொண்டு எவ‌ள‌வு பொய்க‌ளை அவுட்டு விட்ட‌வ‌ன்..............
 
ப‌ழைய‌ செய்தியாய் இருந்தாலும் முடிந்தால் லிங்கை இணைத்து விடுங்கோ 
 
பையன்... கீழே உள்ள இணைப்பை பாருங்கள்.
இன்னும் ஒரு பெரிய திரி விபரமாக இருந்தது 
அதனை தேடிக் கொண்டு இருக்கின்றேன். கிடைத்தால்... இணைக்கின்றேன். 👇

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

பையன்... கீழே உள்ள இணைப்பை பாருங்கள்.
இன்னும் ஒரு பெரிய திரி விபரமாக இருந்தது 
அதனை தேடிக் கொண்டு இருக்கின்றேன். கிடைத்தால்... இணைக்கின்றேன். 👇

இணைப்புக்கு நன்றி த‌மிழ் சிறி அண்ணா
இப்ப‌ தான் வாசித்தேன்
ச‌ம்ப‌வ‌ம் 2012ம் ஆண்டு ந‌ட‌ந்து இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

இணைப்புக்கு நன்றி த‌மிழ் சிறி அண்ணா
இப்ப‌ தான் வாசித்தேன்
ச‌ம்ப‌வ‌ம் 2012ம் ஆண்டு ந‌ட‌ந்து இருக்கு 

ஹெகலிய ரம்புக்வெல.... வெறியால் பல்கனியில் இருந்து விழுந்ததைப் பற்றி 
இன்னும் ஒரு திரி... பல உறவுகள் கருத்து எழுதி, பல பக்கங்களுடன் இருந்தது. 
அதில் சிரிப்புக்கும் பஞ்சம்  இல்லை. அதனை தேடுகின்றேன் கண்டு பிடிக்க முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.