Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரு பேரத்தில் negotiation இல் இரு தரப்புக்கும் இரு விடயங்கள் இருக்கும்.

1. நிலை position

2. நலன் interest

உதாரணம்:

ஐந்து ரொட்டி துண்டுகளும் மூன்று கோப்பை நீரும் இருக்கிறது.

இருவர் இதற்கு அடிபடுகிறார்கள்.

இங்கே இருவரின் நிலை : ஐந்து ரொட்டியும், மூன்று கோப்பை நீரும் எனக்கே வேண்டும்.

ஆனால்,

உண்மையில் முதலாமவருக்கு பசிக்கிறது ஆனால் அதிக தாகமில்லை

இரெண்டாமவருக்கு அதிக தாகம், குறைவான பசி.

இங்கே,

முதலாமவரின் நிலை : எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும்

முதலாமரின் நலன் : 3 ரொட்டி+1 கோப்பை நீரில் அவர் பசியாறி, தாக சாந்தியும் ஆகி விடுவார்.

இரெண்டாமவரின் நிலை: எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும்

இரெண்டாமவரின் நலன்: 2 ரொட்டி+2 கோப்பை நீருடன் இவரும் பசியாறி, தாகசாந்தி அடைந்து விடுவார்.

இங்கே இருவரும் அவரவர் நிலைகளை அடைய வேண்டும் என்றால் பேரம் படியாது.

ஆனால் நலன்களை அடைய வேண்டும் என்றால் பேரம்படியும்.

இதை நலன்சார் முறுகல் முடிப்பு interest based dispute resolution என்பார்கள்.

இப்போ எமது பிரச்சினைக்கு வருவோம்.

ஈழத் தமிழராகிய நமது நெடிய 75 வருட கால போராட்டத்தில் எமது

1. நிலைகள் என்ன?

2. நலன்கள் என்ன ?

அதேபோல் இலங்கையின்

1. நிலைகள் என்ன?

2. நலன்கள் என்ன ?

  • Like 9
  • Replies 65
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Sasi_varnam

கோஷன்... உங்களை போல ஆழமான அரசியல் பார்வை இல்லை என்ற "டிஸ்கிளேய்மரோடு" மனதில் பட்டத்தை இங்கே எழுதுகிறேன்.  தமிழர் நிலைகளாக நான் பார்ப்பது:  1. சுதந்திர தமிழீழம் - தனிநாடு - [பேரச்சிக்கல் கொண்டது

goshan_che

நன்றி சசி.  எனது அடுத்த பதிவை உங்கள் பதிவில் இருந்து தொடர்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் - தொடர்கிறேன். அடுத்து என் பார்வையில் எமது நலன்கள் என்றால் என்ன என பார்க்கும் முன், நிலை, நலன் என்

goshan_che

🤣 நன்றி அண்ணை.  இவை எமது நிலைகள். ‘48 முதல் எமது தலைவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கோரி வந்த வேறுபட்ட “தீர்வுகள்”. நீங்கள் சொன்னது போல் அவர்கள் 75 ஆண்டுகளாய் கதவே திறக்காத கோரிக்கைகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான கேள்விகள் கோஷன், நேரம் எடுத்து, நாம் எதிர்நோக்கும் அரசியல் அகச்சூழல் /புறச்சூழல் மனதில் கொண்டு யதார்த்தமாக  பதில் எழுதவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Sasi_varnam said:

அருமையான கேள்விகள் கோஷன், நேரம் எடுத்து, நாம் எதிர்நோக்கும் அரசியல் அகச்சூழல் /புறச்சூழல் மனதில் கொண்டு யதார்த்தமாக  பதில் எழுதவேண்டும். 

தயவு செய்து எழுதவும்🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழரின் நிலைகள்

1. சம மொழி அந்தஸ்து ( Parity of  languages)

2. 50:50

3. வடக்கு-கிழக்கு இணைப்பு

4. தனிநாடு

5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம்

6. சமஸ்டி

7. பிரிந்து போகா உரிமையுள்ள சுய நிர்ணயம்

வேறு ஏதேனும்?

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

தமிழரின் நிலைகள்

1. சம மொழி அந்தஸ்து ( Parity of  languages)

2. 50:50

3. வடக்கு-கிழக்கு இணைப்பு

4. தனிநாடு

5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம்

6. சமஸ்டி

7. பிரிந்து போக உரிமையுள்ள சுய நிர்ணயம்

வேறு ஏதேனும்?

நீங்கள் குறிப்பிட்ட ஏழு விடயங்களை பார்த்தால் கதவே திறக்கமாட்டார்கள். 😁

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

தமிழரின் நிலைகள்

1. சம மொழி அந்தஸ்து ( Parity of  languages)

2. 50:50

3. வடக்கு-கிழக்கு இணைப்பு

4. தனிநாடு

5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம்

6. சமஸ்டி

7. பிரிந்து போக உரிமையுள்ள சுய நிர்ணயம்

வேறு ஏதேனும்?

தமிழகத்தோடு இணைதல்! 🤭

(இது உங்களுக்கு தோன்றவே இல்லையா?)😜 so sad dear! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
37 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் குறிப்பிட்ட ஏழு விடயங்களை பார்த்தால் கதவே திறக்கமாட்டார்கள். 😁

🤣

நன்றி அண்ணை. 

இவை எமது நிலைகள்.

‘48 முதல் எமது தலைவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கோரி வந்த வேறுபட்ட “தீர்வுகள்”.

நீங்கள் சொன்னது போல் அவர்கள் 75 ஆண்டுகளாய் கதவே திறக்காத கோரிக்கைகள்.

ஆனால் - இவை மூலம் நாம் அடைய முனைந்த, முனையும் நலன்கள் என்ன?

என்பதுதான் பெரிய கேள்வி.

எனக்கும் இந்த நலன்கள் பற்றி ஒரு அறுதியான முடிவு இல்லை.

இந்த திரியில் எல்லாருடனும் சேர்ந்து கதைப்பதால் - இதற்கு ஒரு விடையை கண்டால் - நிலைகளை வற்புறுதாமல் நலன்களை அடையலாமா? என்றே யோசிக்கிறேன்.

33 minutes ago, ராசவன்னியன் said:

தமிழகத்தோடு இணைதல்! 🤭

(இது உங்களுக்கு தோன்றவே இல்லையா?)😜 so sad dear! 

🤣 முன்பே சொல்லி உள்ளேன் - be careful with what you wish for, for it may be granted 🤣.

எங்களோடு சேர்ந்து விட்டு, இவனுகளுக்கு பானிபூரி வாயனுகளே தேவல எண்டு நினைக்கும் படி ஆகலாம்.

பகிடிக்கு அப்பால்,

இந்தியாவின் அங்கமான தமிழகத்தோடு இணைய வேண்டும் என்பது ஒரு போதும் ஈழ தமிழரின் நிலைப்பாடாக இருந்ததில்லை. இப்போதும் இல்லை. 1% பேர் கூட இந்த நிலையில் இருப்பதாக நான் கருதவில்லை.

தமிழ் நாடு தனி நாடாகினால் இந்த % உயர கூடும்.

Edited by goshan_che
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, goshan_che said:

நன்றி அண்ணை. 

இவை எமது நிலைகள்.

‘48 முதல் எமது தலைவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கோரி வந்த வேறுபட்ட “தீர்வுகள்”.

நீங்கள் சொன்னது போல் அவர்கள் 75 ஆண்டுகளாய் கதவே திறக்காத கோரிக்கைகள்.

ஆனால் - இவை மூலம் நாம் அடைய முனைந்த, முனையும் நலன்கள் என்ன?

என்பதுதான் பெரிய கேள்வி.

எனக்கும் இந்த நலன்கள் பற்றி ஒரு அறுதியான முடிவு இல்லை.

இந்த திரியில் எல்லாருடனும் சேர்ந்து கதைப்பதால் - இதற்கு ஒரு விடையை கண்டால் - நிலைகளை வற்புறுதாமல் நலன்களை அடையலாமா? என்றே யோசிக்கிறேன்.

முதலில் சிங்களத்துடன் சார்ந்திருக்கும் தமிழர்களை உருவி வெளியே எடுக்க அரைவாசி பிரச்சனை தீர்ந்தததிற்கு சமன்.

எமது 70 ஆண்டு கால வரலாற்றை உற்று நோக்கினால் அதில் ஒரு தமிழ் ஒட்டுண்ணியாவது சிங்கள இனவாத்தத்துடன் ஒட்டிக்கொண்டு எட்டப்பர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்.

Posted
1 hour ago, குமாரசாமி said:

முதலில் சிங்களத்துடன் சார்ந்திருக்கும் தமிழர்களை உருவி வெளியே எடுக்க அரைவாசி பிரச்சனை தீர்ந்தததிற்கு சமன்.

எமது 70 ஆண்டு கால வரலாற்றை உற்று நோக்கினால் அதில் ஒரு தமிழ் ஒட்டுண்ணியாவது சிங்கள இனவாத்தத்துடன் ஒட்டிக்கொண்டு எட்டப்பர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்.

இது நடக்கின்ற காரியமா அண்ணா. சிங்களத்தின் வெற்றியே இந்த ஒட்டுக்குழுக்களில் தானே தங்கி இருக்கிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

முதலில் சிங்களத்துடன் சார்ந்திருக்கும் தமிழர்களை உருவி வெளியே எடுக்க அரைவாசி பிரச்சனை தீர்ந்தததிற்கு சமன்.

எமது 70 ஆண்டு கால வரலாற்றை உற்று நோக்கினால் அதில் ஒரு தமிழ் ஒட்டுண்ணியாவது சிங்கள இனவாத்தத்துடன் ஒட்டிக்கொண்டு எட்டப்பர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்.

மூன்று அவதானங்கள்.

1. மேலே நுணா சொல்லி இருப்பதை போல் இது நடவாத காரியம். இவர்கள் இல்லை என்றால் வேறு சிலர்.

2. தவிரவும். இது எமக்கு மட்டும் உரிய பிரச்சனை இல்லை. ஜிகாதி ஜோன் இன்னும் பல உதாரணக்கள் ஏனைய இனங்களிலும் உண்டு.

3. இப்போ இப்படியானவர்கள் உண்மையான மக்கள் ஆதரவில் (டக்லசுக்கு அப்பவே இருந்தது) தான் எம்பி ஆகியுள்ளனர் என்பதையும் நாம் ஏற்க வேண்டும். நம்மை ஒத்த நிலைப்பாட்டில் 80% மக்கள் இருந்தாலும் இந்த 20% த்தை, அதன் பிரதிநிதிகளை இலங்கை தனக்கு சாதகாமகே பயன்படுத்தும்.

ஆனால் ஜனநாயக மரபுப்படி பெரும்பான்மையான தமிழர்கள் தேசிய கட்சிகளுடனேயே என்பதை உலகும், இந்தியாவும் கூட ஏற்கிறன.

இந்த சமநிலை மாறமுன்னம் நாம் ஏதாவது ஒரு கெளரவமான தீர்வை அடைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கோஷன்... உங்களை போல ஆழமான அரசியல் பார்வை இல்லை என்ற "டிஸ்கிளேய்மரோடு" மனதில் பட்டத்தை இங்கே எழுதுகிறேன். 

தமிழர் நிலைகளாக நான் பார்ப்பது: 
1. சுதந்திர தமிழீழம் - தனிநாடு - [பேரச்சிக்கல் கொண்டது]
2. "பிரிந்து  போகும்" உரிமை உள்ள சுயநிர்ணயம் 
3. சமஸ்டி (இணைஆட்சி) 
4. இனவழிப்பு, போர் குற்ற விசாரணையும் தண்டனையும்

5. வெறுங்கையாக இருக்கும் இந்நேரத்தில், இடைக்கால தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையாக வைத்து (13+/-) ஏதாவது ஒரு சில நலன்களை பெற்றுக்கொள்வது. (ஒரு சில அரசியல்வாதிகளின் எண்ணப்பாடு)   

தமிழர் நலன்களாக நான் பார்ப்பது:
1. தமிழர் அரசியலுக்காக உருவாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மென்மேலும் பிரிந்து சிதைந்து போகாமல் ஒற்றுமையாக இணைந்து இன்னும் ஒருவரின் / ஒரு நாட்டின் (அஜெண்டா) அரசியலை கையெடுக்காமல் 40 வருட போராட்ட அரசியலை மையமாக கொண்டு மண்ணுக்கும், மக்களுக்குமாக நேர்மையாக பயணிப்பது. 
2. இனவழிப்பு, போர் குற்ற விசாரணையும் தண்டனையும் - "நல்லிணக்கம்" என்ற சொல்லுக்கு அடிப்படையாக நான் இதை பார்க்கிறேன். 
3. முஸ்லீம் மக்களுடனான சுமூகமான இணைந்த அரசியல் பலம் - இன்றைய நிலையில் மிகவும் அவதானமாக முன்னெடுக்கவேண்டிய ஒரு செயல்பாடு. 
4. வடக்கு-கிழக்கு தமிழர் தாயக இணைப்பு - அடிப்படை நகர்வு, ஆனாலும் முஸ்லீம் மற்றும் கிழக்கு வாழ் மக்களின் மனங்களை வென்று நகர்வுகள் மேற்கொள்ளப்படல் வெண்டும். 
5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம் - இங்கே இந்த "பிரிந்து போகும்" என்ற சொல்லாடல் சிக்கலாகவே இருக்கும் எனவே அதை வேறுவிதமாக அரசியல் சொல்லாடலாக பிரயோகிக்கலாம். 
6. சமஸ்டி (இணைஆட்சி) - பெரும்பான்மை சமூகம் இன்றுவரையிலும் இந்த ஆட்சிமுறைமையை கிஞ்சித்தும் பார்த்தது கிடையாது. சர்வதேச அழுத்தங்கள் மூலமே இது சாத்தியமாகலாம்.  
7. மலையக இலங்கை தமிழர் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்பு - சுயநல அரசியல்வாதிகளால் நாதி இழந்து நிட்கும் மக்கள் கூட்டம். இவர்கள் சார்ந்தும் எங்கள் அரசியல் குரல் ஒலிக்கவேண்டும், உதவிகள் விரிவடையவேண்டும்.  
6. சம மொழி அந்தஸ்து (Parity of  languages) - அடிப்படை உரிமை. இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது. ஆனால் சிங்களம் சரியாக புரிந்து கொள்வதாய் இல்லை. 
 
குறிப்பு:
*** தமிழீழம் என்ற ஒரு தனி நாட்டை நான் மானசீகமாக ஆதரித்து தினம் காணும் கனவாக அதை வரித்துக்கொண்டாலும் இன்றைய யதார்த்த சர்வதேச அரசியல் அதை நோக்கி எம்மை நகர முடியாமல் கட்டிவைத்திருக்கிறது.

*** மலையக மக்களின் அரசியல் அல்லது வாழ்வியல் குறித்து போராடும் இனமான எங்களுக்கு இன்னும் கூட சரியான புரிதல் அல்லது அவர்களுக்கான தார்மீக குரல் அரசியல் ரீதியில் எம்மவர் மத்தியில் இருந்து எழும்பாமல் இருப்பதாக உணர்கிறேன்.

*** இப்போதைக்கு தமிழர்களை கோர்த்துவைத்து இருக்கும் ஓர் நூல் தான் மாவீரர்களின் தியாகங்கள், இதனை அடிப்படியாக கொண்டு எமது அரசியல் முன்நகர்வுகளை மேற்கொள்வது. மீண்டும் மீண்டும் இந்தியாவிடம் போய்  மண்டியிடாமல் ஒரு அரசியல் அணுகுமுறையை கையாள்வது.

Edited by Sasi_varnam
  • Like 7
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/12/2022 at 20:30, goshan_che said:

ஒரு பேரத்தில் negotiation இல் இரு தரப்புக்கும் இரு விடயங்கள் இருக்கும்.

1. நிலை position

2. நலன் interest

உதாரணம்:

ஐந்து ரொட்டி துண்டுகளும் மூன்று கோப்பை நீரும் இருக்கிறது.

இருவர் இதற்கு அடிபடுகிறார்கள்.

இங்கே இருவரின் நிலை : ஐந்து ரொட்டியும், மூன்று கோப்பை நீரும் எனக்கே வேண்டும்.

ஆனால்,

உண்மையில் முதலாமவருக்கு பசிக்கிறது ஆனால் அதிக தாகமில்லை

இரெண்டாமவருக்கு அதிக தாகம், குறைவான பசி.

இங்கே,

முதலாமவரின் நிலை : எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும்

முதலாமரின் நலன் : 3 ரொட்டி+1 கோப்பை நீரில் அவர் பசியாறி, தாக சாந்தியும் ஆகி விடுவார்.

இரெண்டாமவரின் நிலை: எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும்

இரெண்டாமவரின் நலன்: 2 ரொட்டி+2 கோப்பை நீருடன் இவரும் பசியாறி, தாகசாந்தி அடைந்து விடுவார்.

இங்கே இருவரும் அவரவர் நிலைகளை அடைய வேண்டும் என்றால் பேரம் படியாது.

ஆனால் நலன்களை அடைய வேண்டும் என்றால் பேரம்படியும்.

இதை நலன்சார் முறுகல் முடிப்பு interest based dispute resolution என்பார்கள்.

இப்போ எமது பிரச்சினைக்கு வருவோம்.

ஈழத் தமிழராகிய நமது நெடிய 75 வருட கால போராட்டத்தில் எமது

1. நிலைகள் என்ன?

2. நலன்கள் என்ன ?

அதேபோல் இலங்கையின்

1. நிலைகள் என்ன?

2. நலன்கள் என்ன ?

இதில் விரிவாக இப்போது எழுத நேரமின்மைக்கு வருந்துகிறேன், ஆனால் சுருக்கமாக:

1. சிறி லங்கா வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான காட்டாப்பாகத் தான் பேச்சு வார்த்தை முஸ்தீபு செய்கிறது, எனவே தற்போது இருக்கும் சிங்களவரின் Achilles heel வெளிநாட்டு உதவி. முதலிடக் கூடிய தமிழர்கள் அதை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த வேண்டும், ஏனையோர் அமெரிக்கா, ஐ. ஒ ஆகியவை உதவியை உள்நாட்டுத் தீர்வோடு முடிச்சுப் போட வைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2. இந்தியா எப்போதுமே எங்களோடு சேர்ந்து வரும் ஒரு செய்வினை (ஊர் பாசையில் தரித்திரம்😂!) எப்படியாவது, கை நீளத் தூரத்தில் இந்தியாவை வைத்துக் கொண்டு அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளோடு தமிழர் தலைமைகள் நெருங்க வேண்டும். எப்படி செய்வது இதை என எனக்குத் தெரியாது!

மேலும் உரையாடலாம் பின்னர்!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

நன்றி அண்ணா. நேரம் கிடைக்கும் போது எழுதவும்🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோசான் - சே மற்றும் சசிவர்ணம் ஆகியோரால் சுட்டப்படும் சமகால அரசியற் கருத்தாய்வு விடயங்கள் சிறப்பு. ஏனையவர்களது கருத்துகளும் ஏமாற்றங்கள் மற்றும் பட்டறிவின் வழியே மனங்களை ஊடறுத்து நிற்பவையே. யாழ் களத்தினது நோக்குநிலையிலானதொரு திரியாக நகர்கிறது. இவை வெவ்வேறாகவும் தனித்தனியாகவும் பேசப்பட்டாலும், ஒரு விழிப்பு நிலைக்கானதும், கூட்டிணைந்த கருத்தாடலுக்கும், சமகால அரசியற் புரிதலுக்கும் தமிழரது எதிர்கால நலன் நோக்கிலான குறைந்தபட்சத் தெளிவை அடையவும் இதுபோன்ற கருத்தாடல்கள் அவசியமானது.  அனைவருக்கும் நன்றி.

தமிழர்கள் நூறு ஆண்டுகளாகச் சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டுவருகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, nochchi said:

நன்றி நொச்சி.

இதனால் ஏதும் நன்மை விளையுமா தெரியவில்லை. ஆனால் பலர் கூடி ஆராயும் போது எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும், நடைமுறை படுத்தும் இடத்தில் இருப்போர்க்கும் ஒரு தெளிவை கொடுக்குமாய் இருந்தால் அதுவே பெரிது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொழி மற்றும் அரசியற் புலமையுள்ள,கடமைஉணர்வோடு இனநலன் நோக்கிச் சிந்திப்போரை இனங்கண்டு ஒருங்கிணைத்துச் சமகாலத்தில் புலத்திலே ஒரு அழுத்தக்குழுவாகச் செயற்பட வைத்தல் குறித்தும் சிந்திக்க வேண்டும். 

1 minute ago, goshan_che said:

நன்றி நொச்சி.

இதனால் ஏதும் நன்மை விளையுமா தெரியவில்லை. ஆனால் பலர் கூடி ஆராயும் போது எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும், நடைமுறை படுத்தும் இடத்தில் இருப்போர்க்கும் ஒரு தெளிவை கொடுக்குமாய் இருந்தால் அதுவே பெரிது.

சாதாரண மக்களாக இருந்து யாழிலாவது நாம் உரையாடுகின்றோமே. இது குறைந்தபட்சம் களஉறவுகளிடையேயாவது இது குறித்த வாதப்பிரதிவாதங்களை(எழுதாவிட்டாலும்) மனதளவிலாவது ஏற்படுத்தினாற்கூட நன்றே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 13/12/2022 at 18:19, Sasi_varnam said:

கோஷன்... உங்களை போல ஆழமான அரசியல் பார்வை இல்லை என்ற "டிஸ்கிளேய்மரோடு" மனதில் பட்டத்தை இங்கே எழுதுகிறேன். 

தமிழர் நிலைகளாக நான் பார்ப்பது: 
1. சுதந்திர தமிழீழம் - தனிநாடு - [பேரச்சிக்கல் கொண்டது]
2. "பிரிந்து  போகும்" உரிமை உள்ள சுயநிர்ணயம் 
3. சமஸ்டி (இணைஆட்சி) 
4. இனவழிப்பு, போர் குற்ற விசாரணையும் தண்டனையும்

5. வெறுங்கையாக இருக்கும் இந்நேரத்தில், இடைக்கால தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையாக வைத்து (13+/-) ஏதாவது ஒரு சில நலன்களை பெற்றுக்கொள்வது. (ஒரு சில அரசியல்வாதிகளின் எண்ணப்பாடு)   

தமிழர் நலன்களாக நான் பார்ப்பது:
1. தமிழர் அரசியலுக்காக உருவாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மென்மேலும் பிரிந்து சிதைந்து போகாமல் ஒற்றுமையாக இணைந்து இன்னும் ஒருவரின் / ஒரு நாட்டின் (அஜெண்டா) அரசியலை கையெடுக்காமல் 40 வருட போராட்ட அரசியலை மையமாக கொண்டு மண்ணுக்கும், மக்களுக்குமாக நேர்மையாக பயணிப்பது. 
2. இனவழிப்பு, போர் குற்ற விசாரணையும் தண்டனையும் - "நல்லிணக்கம்" என்ற சொல்லுக்கு அடிப்படையாக நான் இதை பார்க்கிறேன். 
3. முஸ்லீம் மக்களுடனான சுமூகமான இணைந்த அரசியல் பலம் - இன்றைய நிலையில் மிகவும் அவதானமாக முன்னெடுக்கவேண்டிய ஒரு செயல்பாடு. 
4. வடக்கு-கிழக்கு தமிழர் தாயக இணைப்பு - அடிப்படை நகர்வு, ஆனாலும் முஸ்லீம் மற்றும் கிழக்கு வாழ் மக்களின் மனங்களை வென்று நகர்வுகள் மேற்கொள்ளப்படல் வெண்டும். 
5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம் - இங்கே இந்த "பிரிந்து போகும்" என்ற சொல்லாடல் சிக்கலாகவே இருக்கும் எனவே அதை வேறுவிதமாக அரசியல் சொல்லாடலாக பிரயோகிக்கலாம். 
6. சமஸ்டி (இணைஆட்சி) - பெரும்பான்மை சமூகம் இன்றுவரையிலும் இந்த ஆட்சிமுறைமையை கிஞ்சித்தும் பார்த்தது கிடையாது. சர்வதேச அழுத்தங்கள் மூலமே இது சாத்தியமாகலாம்.  
7. மலையக இலங்கை தமிழர் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்பு - சுயநல அரசியல்வாதிகளால் நாதி இழந்து நிட்கும் மக்கள் கூட்டம். இவர்கள் சார்ந்தும் எங்கள் அரசியல் குரல் ஒலிக்கவேண்டும், உதவிகள் விரிவடையவேண்டும்.  
6. சம மொழி அந்தஸ்து (Parity of  languages) - அடிப்படை உரிமை. இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது. ஆனால் சிங்களம் சரியாக புரிந்து கொள்வதாய் இல்லை. 
 
குறிப்பு:
*** தமிழீழம் என்ற ஒரு தனி நாட்டை நான் மானசீகமாக ஆதரித்து தினம் காணும் கனவாக அதை வரித்துக்கொண்டாலும் இன்றைய யதார்த்த சர்வதேச அரசியல் அதை நோக்கி எம்மை நகர முடியாமல் கட்டிவைத்திருக்கிறது.

*** மலையக மக்களின் அரசியல் அல்லது வாழ்வியல் குறித்து போராடும் இனமான எங்களுக்கு இன்னும் கூட சரியான புரிதல் அல்லது அவர்களுக்கான தார்மீக குரல் அரசியல் ரீதியில் எம்மவர் மத்தியில் இருந்து எழும்பாமல் இருப்பதாக உணர்கிறேன்.

*** இப்போதைக்கு தமிழர்களை கோர்த்துவைத்து இருக்கும் ஓர் நூல் தான் மாவீரர்களின் தியாகங்கள், இதனை அடிப்படியாக கொண்டு எமது அரசியல் முன்நகர்வுகளை மேற்கொள்வது. மீண்டும் மீண்டும் இந்தியாவிடம் போய்  மண்டியிடாமல் ஒரு அரசியல் அணுகுமுறையை கையாள்வது.

நன்றி சசி. 

எனது அடுத்த பதிவை உங்கள் பதிவில் இருந்து தொடர்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் - தொடர்கிறேன்.

அடுத்து என் பார்வையில் எமது நலன்கள் என்றால் என்ன என பார்க்கும் முன், நிலை, நலன் என்றால் என்ன என வரையறுத்தால் நல்லம் என நினைக்கிறேன்.

நாம் ஒரு உத்தியை வகுக்கும் முன் எமக்கு எது எம் நலன், எது நிலை என்ற தெளிவு வேண்டும். 

ஏனெனில் மேலே சொன்ன ரொட்டி உதாரணம் போல் எளிமையானவை அல்ல நிஜ வாழ்வின், குறிப்பாக அடையாளம்-சார் அல்லது இனம் சார் பிணக்குகள்.

ரொட்டி உதாரணத்தில் இருவருக்கும் ரொட்டி மேல் ஒரு உணர்வு பூர்வமான பிணைப்பும் இல்லை, ஆனால் நிலம், உரிமை சம்பந்த பட்ட பிணக்குகள் அப்படி அல்ல. இத்தோடு வரலாற்று காரணிகளான பயம், வெறுப்பு, பரஸ்பர அவநம்பிக்கையும் சேர்ந்திருக்கும் (நியாயமான காரணங்கள்தான்). 

ஆகவே எது நலன், எது நிலை என்ற தெளிவு முக்கியமானது எனக்கருதுகிறேன்.

———————-

நிலை, நலன் இரெண்டுமே - தேவையின் அடிப்படையில்தான் உருவாகின்றன.

ரொட்டி உதாரணத்தில் பசி ஆறல், தாகசாந்தி அடைதல்தான் இருவரினதும் தேவை.

நான் அறிந்ததின் படி,

நிலை என்பது - ஒரு தேவையை (need) அடைய, இது ஒன்றுதான் வழி - என ஒரு வழியை சொல்லி, அதில் விடாப்பிடியாக இருப்பது.

நலன் என்பது அதே தேவையை சற்றே வேறுபட்ட ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் மூலம் அடைவது.

ரொட்டி உதாரணத்தில் இருவரும் தாகம் தீர்ப்பது, பசி ஆறுவதுதான் தேவை.

ஆனால் முழுவதையும் நானே எடுத்துத்தான் பசி ஆறுவேன், தாகம் தீர்ப்பேன் என்பது நிலை.

அவரவர் தேவைக்கு ஏற்ப ரொட்டியையும், நீரையும் பங்கிட்டு, இருவரும் தேவையை பூர்த்தி செய்வது நலன்.

(இது மிக எளிய உதாரணம் என்பதை மனதில் வைக்கவும்).

இப்போ மீண்டும் நம் நிலைகளுக்கு வருவோம்.

கீழ்காணும் லிஸ்ட் என்பது ஒவ்வொரு காலகட்டதிலும் எமது பிரச்சனைக்கு தீர்வாக எமது தலைவர்கள் முன் வைத்த “நிலைகள்”. 

தமிழரின் நிலைகள்

1. சம மொழி அந்தஸ்து ( Parity of  languages)

2. 50:50

3. வடக்கு-கிழக்கு இணைப்பு

4. தனிநாடு

5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம்

6. சமஸ்டி

7. பிரிந்து போகா உரிமையுள்ள சுய நிர்ணயம்

தமிழரின் தேவைகள்

நலன்களை பார்க்க முன்னம், இந்த நிலைகளை எம் தலைவர்கள்/மக்கள் எடுக்க என்ன தேவைகள் காரணமாயின என ஒரு பட்டியல் இடுவோம்.

நான் எனக்கு மனதில் பட்டவற்றை எழுதுகிறேன். 

ஏனையோரும் எழுதுங்கள். இன்னும் ஒரு கிழமைக்கு (அடுத்த புதன் வரை) - தேவைகளை பட்டியல் இடுவோம்.

இந்த தேவைகள் உரிமை, அபிவிருத்தி, சமூகம்-சார் - எதுவாகவும் இருக்கலாம்.

இதை தொடர்ந்து இந்த தேவைகளை வகை பிரித்து, திரட்டி, அதன் அடிப்படையில் நம் நலன்களை பட்டியல் இடலாம்.

நலன்களை வரிசை படுத்தி விட்டோம் என்றால் - இப்போ எது சாத்தியமானது என கண்டு, அதன் அடிப்படையில் இந்த நலன்களை பூர்த்தி செய்யும் தீர்வு என எமக்கு ஏற்புடையதாக எது இருக்கும் என்ற தெளிவை பெறலாம்.

———

தமிழரின் தேவைகள் என நான் கருதுபவை (முற்றான பட்டியல் அல்ல).

1. உயிர் பாதுகாப்பு - இலங்கையில் அரச, அரசு சாரா வன்முறையில் இருந்து தனியாகவும், ஒரு இன குழுவாகவும், நாட்டின் எப்பாகத்திலும், குறிப்பாக வடக்கு-கிழக்கில் பாதுகாக்கப்படல். வன்முறை நிகழின் அதற்குரிய தகுந்த சட்ட நிவாரணத்தை பெற கூடியதாக இருந்தல்.

2. காணி உரிமை - இப்போ நாம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை தக்க வைத்தல் (கவனிக்க இது ஒரு தேவை, நிலை அல்ல - எமது நிலை ஒட்டு மொத்த வடக்கு கிழக்கும் எமது என்பது).

3. நிதிச் சுதந்திரம் - எமது பகுதிகளில் (இவை எவை என இன்னும் வரையறுக்கவில்லை, இதில் நிலை/நலன் மயக்கம் ஏற்படும் -பிறகு வருவோம்) நாம் வரி அறவிடவும், வெளிநாட்டு அரச, தனியார் நேரடி உதவிகளை பெறவும், நிதி சம்பந்தமான சட்டங்களை இயற்றவும், மாற்றவும் (இதில் வரையறை கட்டாயம் இருக்கும் - பூரண நிதிச் சுதந்திரம் = தனிநாடு) அதிகாரம் உடையோராய் இருத்தல்.

4. …..

பிகு

1. முரண்படும் கருத்துகள் வரவேற்கப்படுகிறன

2. இதை எழுத எந்த உள்நோக்கமும் இல்லை - 2009 ற்கு பின் ஒட்டு மொத்த இனமுமே சம்ஸ்டி, சுயநிர்ணயம், பிரிந்து போகா, வடக்கு-கிழக்கு இணைப்பு போன்ற தெளிவான அர்த்தம் இல்லாத வார்த்தைகளின் பின்னால் அலைவதாயும். இதை இலங்கை பயன்படுத்துவதாயும் உணர்கிறேன்.

எந்த முன் முடிவும் கூட என் மனதில் இல்லை. சில சிந்தனைகள் உள்ளது. ஆனால் அவை சரிதானா என்று எனக்கும் தெரியாது.

Edited by goshan_che
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பிகு

3. நாம் இனமா, இனக்குழுவா போன்ற சர்ச்சைகளை தவிர்க விரும்புகிறேன். இனம் எண்டுதான் எழுத வேண்டும் என்றாலும் சரிதான். 

ஆனால் நிலைகளுக்குள் இழுபடாமல், தேவைகள், நலன்கள் மீது கவனம் வைக்க விரும்புகிறேன்.

4.  சசி மேலே தெளிவாக தன் ஆசை எது என்பதை காட்டியுள்ளார். அது ஏன் இப்போ பொருத்தமற்றது எனவும் கோடிகாட்டியுள்ளார்.

அதை ஒட்டியே,

நான் கேட்பதும் ஆசைகளின் பட்டியல் அல்ல, தேவைகளின் பட்டியல். 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஞாயிற்றுக்கிழமை போடப்பட்ட செய்தி அதன் பின்னர் கோஷன் பதிவுசெய்த சிந்தனை அலை (Brainstorming) பெரிதாக இன்னும் உள்வாங்கப்படாமல் இருக்குதோ என்ற ஆதங்கம் எழுகிறது. மீண்டும் இப்போதைய தேவைகளாக எனக்கு சட்டென மனதில் படுவதை பகிர்கின்றேன் . 
அலசி ஆராய்வது சரி/ பிழை பின்னர் நடக்கட்டும்.  🙂

எனது தேவைகளின் பட்டியல்:

  • உயிர் அச்சமும் இன்றி, வன்முறை, அடக்குமுறை இன்றி இயங்கும் வாழ்வியல். 
  • பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், கல்வி  / பொருளாதார,  சுதந்திரம்.
  • என்னுடைய பாரம்பரிய நிலம், சுற்றுச்குழல், இயற்கை வளம் இவற்றை அடாத்தாக யாரும் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்கும் உரிமை.
  • என்னுடைய பிறந்த மண்ணில்  இரண்டாம் பிரஜையாக நடாத்தப்படாமல் கௌரவமாக வாழ ஒரு அரசியல்.
  • என்னுடைய மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு விழுமியங்கள் நான் விரும்பும் படியே ஒழுகி கடைபிடிக்கும்  தடையில்லாத வாழ்வியல். 
  • ஆண், பெண், மற்றும் இதர வர்க்கங்களுக்கிடையே சமூக ஒடுக்கு முறைகள்/வேறுபாடுகள்  கலைந்த தமிழ் தேசியம்.
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதே போன்ற ஒரு உரையாடல் முதல்வன் தனியான திரி ஆரம்பித்தும் முன்னகர முடியாமல் இருக்கிறது. அரூபமான (abstract) விடயங்கள் பற்றிப் பேசுவது ஏனைய சம்பவங்கள், இடங்கள் பற்றிப் பேசுவதை விடக் கடினமான விடயம் தான். ஆனால், விடயங்களை வரையறை செய்வதற்காகப் பேச வேண்டும்.

தேவைகள்:

தமிழருக்குப் பிரத்தியேகமான தேவைகள் என்று நான் கருதுவது உயிர்பாதுகாப்பு, உடமை - சிறப்பாக நிலப்- பாதுகாப்பு, தங்கள் மொழியில் எல்லாக் காரியங்களையும் வாழுமிடத்தில் செய்து கொள்ளக் கூடிய மொழிச் சேவை வசதி.

மேலே சசி குறிப்பிட்டிருக்கும் சில தேவைகள் இலங்கையர் எல்லாருக்கும் இருப்பவை: பொருளாதார வாய்ப்புகள், ஊழலின்மை, பால் சமத்துவம், இவையெல்லாம் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இல்லை - அதன் நீட்சியாக வடக்கு கிழக்கிலும் இல்லை!

எனவே மிக அடிப்படையாக எங்களுக்குத் தேவை:

1. வன்முறையில், உயிர்பயத்திலிருந்து பாதுகாப்பு
2. நிலம் மீது உரிமை
3. மொழி  

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னைப் பொறுத்தவரை சிங்கள மற்றும் தமிழரின் மனங்களில் மாற்றம் வரணும். அது வராது எதுவும் சாத்தியம் இல்லை. 

வெறும் காலம் கடத்துதலும் முதுகில் குத்துதலுமே தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

என்னைப் பொறுத்தவரை சிங்கள மற்றும் தமிழரின் மனங்களில் மாற்றம் வரணும். அது வராது எதுவும் சாத்தியம் இல்லை. 

வெறும் காலம் கடத்துதலும் முதுகில் குத்துதலுமே தொடரும்.

மனங்களில் மாற்றம் வரவேண்டும் ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா.
சிங்களவர், தமிழர், முஸ்லீம் இந்த இனங்களுக்கிடையே  மன மாற்றம் நிகழ்வதென்றால் கூட அவரவர் தேவையை நாங்கள் சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே சாத்தியமாகும் இல்லையா? 
அதைத்தான் இங்கே கோஷன் (இப்போதைக்கு நம்முடைய உண்மையான தேவைகளை) பட்டியலிட விரும்புகிறார் என நினைக்கிறன். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/12/2022 at 10:23, goshan_che said:

🤣

நன்றி அண்ணை. 

இவை எமது நிலைகள்.

‘48 முதல் எமது தலைவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கோரி வந்த வேறுபட்ட “தீர்வுகள்”.

நீங்கள் சொன்னது போல் அவர்கள் 75 ஆண்டுகளாய் கதவே திறக்காத கோரிக்கைகள்.

ஆனால் - இவை மூலம் நாம் அடைய முனைந்த, முனையும் நலன்கள் என்ன?

என்பதுதான் பெரிய கேள்வி.

எனக்கும் இந்த நலன்கள் பற்றி ஒரு அறுதியான முடிவு இல்லை.

இந்த திரியில் எல்லாருடனும் சேர்ந்து கதைப்பதால் - இதற்கு ஒரு விடையை கண்டால் - நிலைகளை வற்புறுதாமல் நலன்களை அடையலாமா? என்றே யோசிக்கிறேன்.

🤣 முன்பே சொல்லி உள்ளேன் - be careful with what you wish for, for it may be granted 🤣.

எங்களோடு சேர்ந்து விட்டு, இவனுகளுக்கு பானிபூரி வாயனுகளே தேவல எண்டு நினைக்கும் படி ஆகலாம்.

பகிடிக்கு அப்பால்,

இந்தியாவின் அங்கமான தமிழகத்தோடு இணைய வேண்டும் என்பது ஒரு போதும் ஈழ தமிழரின் நிலைப்பாடாக இருந்ததில்லை. இப்போதும் இல்லை. 1% பேர் கூட இந்த நிலையில் இருப்பதாக நான் கருதவில்லை.

தமிழ் நாடு தனி நாடாகினால் இந்த % உயர கூடும்.

கோஷான் மிக அருமையான கருத்துக்களை இந்தத்திரியில் சொல்லியிருக்கிறீர்கள்.இந்தத்திரியில் அலசப்படும் விடயங்களை எமது அரசியல்வாதிகள் கருத்திற்கெடுப்பார்களா என்பது சந்தேகம். 
எமது அரசியல் நிலைப்பாடு. அடைய முனையும் தீர்வு பற்றிய தெளிவான திட்டம் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் கட்சிக்கு அப்பால் அரசியல் சட்ட வல்லுநர்களைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களால் எழுத்து வடிவில் கொடுக்கப்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும்  அதற்குள் தலையை நுழைக்கக் கூடாது. ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை எழுத்து வடிவில் அந்த அமைக்கு வழங்கலாம். அந்த அமைப்பு அரசியல்கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்கி இறுதியானதும் உறுதியானதுமான தீர்வுத்திட்ட கொள்கையை எழுத்து வடிவில் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களே பேச்சு மேசைக்குப் போக வேண்டும். இதுவே அனைத்து அரசியல்கட்சிகளின் பங்களிப்போடு ஆதரவோடு ஆனால் அவர்களின் தலயீடு இன்றி வகுக்கப்படும் தீர்வுத்திட்டமாக அமையும்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் விரும்புவது

இணைந்த வடகிழக்கு

காணி

பொலிஸ்

கல்வி

அதிகாரங்கள் உள்ள ஒரு அலகு.

இதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம்.

ஒரு சிங்கள மகன் இலங்கையில் எப்படி வாழ்கிறானோ அதே மாதிரி உரிமையுடன் தமிழ் முஸ்லீம் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/12/2022 at 10:55, ராசவன்னியன் said:

தமிழகத்தோடு இணைதல்! 🤭

(இது உங்களுக்கு தோன்றவே இல்லையா?)😜 so sad dear! 

ஈழத்தமிழ் மக்கள் அன்றும் இன்றும் என்றும் இதயபூர்வமாக தமிழகத்தோடுதான் இணைந்திருக்கின்றார்கள்.
 
  • Like 3

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.