Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

பிழைகளை பிழை என்றும் , சரியானதை சரியென்றும் கூறுங்கள். அதுதான்  நேர்மை. 

 இதை தாங்களும், எல்லோர் விடயங்களிலும் கடைப்பிடித்தால்; வரவேற்கவும் பின்பற்றவும் தக்கதே!

  • Replies 136
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

ஓணாண்டியார், நீங்கள் நினைப்பது போல அல்ல இங்கே விடயம். insider dealing என்றால்..... நான் ஒரு கொம்பனி கணக்கர். கணக்கு தயாரிக்கும் எனக்கு தெரிகிறது, இந்த முறை கொழுத்த லாபம் அல்லது பெரு நஷ்டம் எ

தமிழ் சிறி

@Kapithan மேலே மேற்கோள் காட்டியவர்களின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தீர்களானால்…. பலர் அவரை நேரடியாக சந்தித்தும், நீண்ட காலமாக தாயக தொடர்பிலும் இருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது.  அத்

விசுகு

வணக்கம்  உறவுகளே இவரது  தந்தையை  நான்  சந்தித்திருக்கின்றேன் தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர் எதைச்செய்தாலும்  அம்மாவிடம் கேட்டுவிட்டு தருகின்றேன் என்பார் பாசத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, satan said:

 இதை தாங்களும், எல்லோர் விடயங்களிலும் கடைப்பிடித்தால்; வரவேற்கவும் பின்பற்றவும் தக்கதே!

நிச்சயமாக தொடர்ந்து(😉) முயற்சிப்பேன். 

😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, satan said:

கடைசியாய் ஒரு கேள்வி. இப்போ, ராஜ் ராஜரட்ணம் தாயகமக்களுக்கு உதவி செய்ய  வேணுமா வேண்டாமா சார்?

கடைசி (👈)க்கேள்விக்கான பதில்👇

தாயகத்திற்கு யார் வேண்டுமானாலும் தாராளமாக உதவலாம். அதில் தவறேயில்லை.  ஆனால் ராஜ் ரஜரட்ணத்தின் insider trading வழக்கு விடயத்திற்கு யாழ் கள தமிழ்த்தேசிய காவலர்கள் வெள்ளை அடிக்க முற்படுவது ஏன் ? 

கவனிக்க; லைக்கா சுபாஸ்கரனின் கடந்தகாலப் பின்ணணியைக் கிண்டிக் கிளறிய யாழ் களத்தினர் தற்போது அவரை மெல்ல மெல்ல வரவேற்கத் தொடங்கியிருக்கிறார்கள். 😉

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

OJ Simpson வழக்கின் தகிடு தத்தங்கள் குறித்து உலகளாவிய ரீதியில் ஆய்வுகள் வந்துள்ளன. அமெரிக்க நீதித்துறையின் தரம் என்ன என்று, அங்கிருக்கும், ஸ்ரீ லங்கன் கறுத்த தோல்காரர் வக்காலத்து வாங்கும் கொடுமையை என்னென்பது.

அமேரிக்க சிறையில் மிக நீண்ட காலம் வாடும், பிரிட்டிஸ் கறுப்பினத்தவர் ஒருவரும், இந்தியர் ஒருவரும் தமக்கு எவ்வாறு மோசமான நீதி கிடைத்தது என்று புலம்பும் டிவி டாக்குமெண்டரி இங்கே ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்க விமான நிலையம் ஒன்றில், பரிசோதனையின் போது, ட்ராவல் பாக்கினில் குண்டு இருக்கிறது கவனம் என்று சொல்லி பகிடி விட்டு, 10 வருடத்துக்கு குறையாத தண்டனைக்குரிய குற்றத்தினை புரிந்த பிரிட்டிஷ் வெள்ளை இனப்பெண் நீதிமன்று கொண்டு செல்லப்பட்டு, எச்சரிக்கையுடன் விடுதலை ஆனார்.

இது போல் பல விடயங்களை சொல்ல முடியும். அமேரிக்காவில், வெள்ளைகளுக்கு ஒரு நீதி, கறுப்பர்களுக்கு ஒரு நீதி என்று நிலையில், பைத்தியக்கார, அறபடித்த விதண்டாவாதம் தேவையில்லை.

எந்த ஒரு லிங்குமே, இனத்துவேசம் குறித்து சொல்லாது, காரணம் contempt of court.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இப்படித்தான்... தமிழக அரசியல் கட்சிகளின், ஊழல்களைப்  பற்றி விவாதங்கள் நடந்த போது...
மோகன் அண்ணா வெறுத்து... இதனால் தாயக மக்களுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை 
யாழ்.களம் தடுத்து விடுமோ என்று அஞ்சி...
யாழ்.களத்தை... பூட்டுகின்ற முடிவை ஒரு கட்டத்தில் எடுத்தார்.

அதனை ஒத்த விவாதம் தான், இங்கே நடந்து கொண்டு இருக்கின்றது. 🙁
இங்கு பலர் தாயக மக்களுக்கு வரும் உதவிகளை தடுக்கவே களமாடுகின்றதை  
அவதானிக்க முடிகின்றது.
அவர்களின் முன்னைய கால நகர்வுகளும்  அதனை உறுதிப்  படுத்துகின்றது.

ராஜ் ராஜரத்தினம் அவர்கள்.... தன்னுடைய பணத்தை வைத்து, 
எங்காவது உல்லாசமாக வாழ்ந்து இருந்தால்...  நிம்மதியாக இருந்திருப்பார்.
தாயக மக்களுக்கு உதவி செய்ய வெளிக்கிட்டதால் எத்தனை வசவுகளை கேட்க வேண்டி உள்ளது.

இங்கு... ராஜ் ராஜரத்தினம் அவர்களை விமர்சித்தவர்கள் எல்லோரும்,
வாழ்க்கையில் தப்பு செய்யாதவர்கள் போலுள்ளது.
 ⁉️
போய்.... உங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை  கழுவி விட்டு, மற்றவனை விமர்சியுங்கள். 😡

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆக நீ திருடுரத திருடு.. திரூடிட்டு பந்தா காட்டாத.. கம்முன்னு இரு.. ஊருக்கு கொஞ்சத்தை குடு.. திருட்டு நோர்மலைஸ் அண்ட் ஜெனரலைஸ் ஆக்கப்படும்.. 

தாகம் எடுக்கிறது என்பதுக்காக நீங்கள் ஒரு நாளைக்கு 5 போத்தல் தண்ணி உங்கள் சொந்த காசில் வாங்கி குடித்தாலும்  அதுவே பெரும் திருட்டுதான். எங்கோ ஒரு ஏழைக்கு இலவசமாக இந்த பூமியில்  இருந்த தண்ணீரை அவர்களுக்கு கிடைக்க விடாது தடுத்து தண்ணீரை தனிநபர் சொத்தாக்கி உங்களை என்னைப்போன்ற பணக்காரவர்க்கத்தின் அடியாட்கள் ஆகிய எங்களை வடிக்கையாளராக்கி. பணம் பார்க்கும் ஆதிக்க வெறியர்களுக்கு நாம் துணையாக நின்றுகொண்டே.... திருட்டு பற்றி.... திருநீறு பூசிய நெற்றியுடன் நியாயம் பேசிக்கொண்டு இருக்கிறோம். 
 
கடந்த 3 மாதத்தில் டெஸ்லா நிறுவனர் எலன் மாஸ்க் 200 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்து இருக்கிறார் 
இந்தளவு பணத்தை உலகில் இதுவரை இழந்தவர்கள் யாரும் கிடையாது. அந்த 200 பில்லியனும் எலன் மாஸ்கின்  குடும்ப சொத்தில்லை ..... கடின உழைப்பே உயர்வை தரும் என்று மூளைச்சலவை செய்யப்பட்டு அமெரிக்க நடுத்தர ஏழை வர்க்க மக்கள் இரவுபகலாக உழைத்து ஓய்வூதிய காலத்துக்கு என்று ஒதுக்கி சில முதலீட்டு நிறுவங்களில் முதலீடு செய்த பணம் ஆகும். பணம் ஒன்று நீர் அல்ல நீராவியாகி மேலே போவதுக்கு. இன்று அமெரிக்க உழைப்பாளிகளின் 200 பில்லியன் டாலர்கள் பணக்கரவர்க்கத்தின் கைகளுக்கு ...... வெறும் வார்த்தைகளான டெஸ்லா லாஸ்ட் 80% ( ) என்பதோடு கைமாறி இருக்கிறது. எம் கண்முன்னே நடந்த இந்த திருட்டுக்கு யார் குற்றவாளியாகி உள்ளே போவார்கள்? 

அமெரிக்க சடடத்தின் பிரகாரம் குற்றவாளியாக உள்ளே செல்லவேண்டும் என்றால் நான் இந்த யாழ்களத்தில்  உண்மையாக எழுதிய சில கருத்துக்களே போதும்.

ராஜரட்ணம் என்ன குற்றம் செய்தார் .......அது உண்மையில் குற்றமா இல்லையா என்று நீங்கள் தெரிந்துகொள்ள  வேண்டும் என்றால் நீங்கள் முதலில் வால் ஸ்ட்ரீட் பற்றி குறைந்தது 20-25 புத்தகம் வாசிக்க வேண்டும். அல்லது இனொருவரது பணத்தை பறிக்காமல் எப்படி பங்கு வர்த்தகம் செய்வது என்ற உங்கள் சூட்ஷமத்தை தெளிவாக எமக்கும் சொல்லி தரவேண்டும். 

ராஜரட்ணத்தை சிறைபிடித்த போது கொழும்பில் சிங்கள மக்கள் அமெரிக்க துராலயம் முன்பு அவரை விடுதலை செய்ய சொல்லி  ஆர்பாடடம் செய்தார்கள். ஏன் என்று நீங்கள் தெரிந்துகொள்ள முயன்றால் ஏன் குற்றவாளி  ஆக்கப்படடார் என்பதை பாதியாவது புரிந்துகொள்வீர்கள். 

(ராஜரட்ணம் செய்த மாபெரும் குற்றம் என்ன?  என்று கேட்டிருந்தேன் பதில் எழுத உங்களுக்கு நேரம் இல்லை என்று நினைக்கிறன் இன்று புதுவருடம் வேறு)  

இந்த கருத்தை உங்கள் எண்ண பாட்டில் ஏதும் மாறுதலை கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பில் நான் எழுதவில்லை. பிடித்த கொப்பில் நின்று தொங்குவதை கைவிடுவது யாழ் களத்துக்கே இழுக்கு என்றுதான்  நான்  எழுதுவதையே குறைத்துக்கொண்டேன். கருத்து பரிமாற்றம் என்பதுக்கு நாம் துளியும் இடம் கொடுக்கலாகாது. கருது திணிப்பில் கவனமாக இருக்கவேண்டும்.

புதுவருட நாளில் எதையாவது எழுதிடலாம் என்று தோன்றியதால் எழுதினேன் 
எல்லோருக்கும் பொதுவாக இருந்த தண்ணீர் இன்று ஓர் இரு பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஆனதை  நேரில் பார்த்த தலைமுறை நாம் 

காற்றும் சூரிய ஒளியும் எமக்கு கிடைக்கிறது வரும்கால சந்ததிக்கு அதுக்கும் வரி வருமோ தெரியாது 
காற்றை உள் இழுத்து சுவாசத்தை ஆரோக்கியமாக்கி  பிறந்திருக்கும் புத்தாண்டில் எல்லோரும் கொஞ்சம் ஆரோக்கியமாக  வாழுவோம். 

புத்தாண்டு வாழ்த்துக்கள் !

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊருக்கே சொந்தமான குளத்தையே திருடியவனிடம் இருந்து ஒரு ஏழையின் தாகம் தீர்க்க நீங்கள் ஒரு 100 மில்லி லீடடார் தண்ணி திருடினால் நீங்கள் சிறை செல்ல வேண்டும் என்பதே அமெரிக்க சடடம்.

யார் குற்றவாளி என்பதை காலம்தான் முடிவு செய்யும் 
கரையும் காகங்கள் இரைச்சல் விரத சோறோடு முடிந்துபோகும் 

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/12/2022 at 20:40, விசுகு said:

ஆமாம் கண்ணை திறந்திருந்தவர்கள் கிழித்து கொட்டுவதை தான் 13 வருடங்களாக பார்க்கிறோமே.

அவர்கள் திரும்ப எழும்பவே கூடாது என்று முற்றாகவே அழித்து விட்டிர்களே...இனி மேல் உங்கட எண்ணத்திற்கு எல்லாம் அங்கிருப்பவர்கள் எழும்பி நிக்க மாட்டார்கள்

20 hours ago, Maruthankerny said:

இவர் எவ்வாறான தவறான வழிகளில் பணம் சேர்த்தார் என்று கொஞ்சம் தெளிவாக எழுதுகிறீர்களா?
வாசிக்க ஆவலாக இருக்கிறேன் 

அவர் எப்படி பணம் சேர்த்தார் என்று என்னை   விட உங்களுக்கு நல்லாத் தெரியுமே பிறகேன் என்னிடம் கேட்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Nathamuni said:

ம்.ம்ம்

காத்தான்குடி வங்கி, திருநெல்வேலி வங்கி எல்லாம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதே. விடுதலை போராட்டத்துக்கு பணம் தேவை என்பதால்... 🤔

ஆகவே நான் சொல்லவருவது, தவறாகினும், போராட்டத்துக்கு உதவியதால், எதிர்ப்பில்லை.

கள்ள மட்டை அடித்து, பத்து கடை திறந்து, பந்தா காட்டினால் திட்டாமல் என்ன செய்வார்கள்?

உதாரணமாக, ஊரில் ஒருவர், பெரிய வீடு கட்டி, தாய், தகப்பனுக்கு சிலையும் வைத்து, பந்தா காட்டினார். அவரின் தொழில், பணம் சம்பாதித்த வழி எல்லாம், அதே வீடியோ கீழ் எழுதி விட்டார்கள்.

லைக்கா குறித்தும் எழுத ஆரம்பித்தார்கள். இவ்வளவு பணத்தினை தென் இந்திய சினிமாவில் கொட்டுகிறார் என்றார்கள். இப்போது அவரும் ஊரில் சில வேலைகளை செய்கிறார்.

ஆக, சொல்ல வருவது என்னெவென்றால், ஏழை தமிழனோ, பணக்கார தமிழனோ, உழைப்பதில், முன்னர் கோவிலுக்கு கொடுத்தது போல, இப்போது முடிந்தளவு ஊருக்கு செய்யுங்கள். எங்கள் திட்டு, அல்லது பாராட்டு உங்களுக்கு தேவை இல்லை. சுஜநலம் தம்பட்டம் இல்லாமல் இருந்தால் போதும். 

கொள்ளையடி ,என்ன கள்ள வேலை என்றாலும் செய் ...ஆனால் அதில் ஒரு பங்கை ஊருக்கு கொடு ....சுத்தம் ...வருங்கால தமிழினம் உருப்படும் .
உங்களை ஒரு விதத்தில பாரடட வேணும் நாதம்ஸ் ...உண்மையை ஒத்து கொண்டு கொண்டதற்கு🙂 

18 hours ago, island said:

கப்பிரான், அவர் அமெரிக்க சட்டப்படி குற்றம் இழைத்தார். அதற்கான தண்டனையை அனுபவித்து விட்டார். இப்போது அவர் மூலம் தாயகத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு நன்மை கிடைக்க வேண்டும்்என்று அனைவரும் எதிர்பார்ப்பது தவறில்லையே.

உதைத் தான் நானும் கேட்கிறேன் நாளைக்கே இங்கு துரோகிகள் என்று உங்களால் பட்டியல் இட பட்டவர்கள் அங்குள்ளவர்களுக்கு உதவுகிறேன் என்று போனால் உங்கட/உங்களை போல ஒத்த கருத்து உடையவர்களின்  கருத்து என்ன என்பது தான் என் கேள்வி?

  • Like 1
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, ரதி said:

அவர் எப்படி பணம் சேர்த்தார் என்று என்னை   விட உங்களுக்கு நல்லாத் தெரியுமே பிறகேன் என்னிடம் கேட்கிறீர்கள்.

உங்களுக்கும் தெரியாதா?
சரி விடுங்கள் 

புத்தாண்டு வாழ்த்துக்கள் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரதி said:

கொள்ளையடி ,என்ன கள்ள வேலை என்றாலும் செய் ...ஆனால் அதில் ஒரு பங்கை ஊருக்கு கொடு ....சுத்தம் ...வருங்கால தமிழினம் உருப்படும் .

ஆங்கிலேயன் கோட் சூட் போட்டுக்கொண்டு கொள்ளையடித்தால் பரவாயில்லையா? 😁

5 hours ago, தமிழ் சிறி said:

இப்படித்தான்... தமிழக அரசியல் கட்சிகளின், ஊழல்களைப்  பற்றி விவாதங்கள் நடந்த போது...
மோகன் அண்ணா வெறுத்து... இதனால் தாயக மக்களுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை 
யாழ்.களம் தடுத்து விடுமோ என்று அஞ்சி...
யாழ்.களத்தை... பூட்டுகின்ற முடிவை ஒரு கட்டத்தில் எடுத்தார்.

அதனை ஒத்த விவாதம் தான், இங்கே நடந்து கொண்டு இருக்கின்றது. 🙁
இங்கு பலர் தாயக மக்களுக்கு வரும் உதவிகளை தடுக்கவே களமாடுகின்றதை  
அவதானிக்க முடிகின்றது.
அவர்களின் முன்னைய கால நகர்வுகளும்  அதனை உறுதிப்  படுத்துகின்றது.

ராஜ் ராஜரத்தினம் அவர்கள்.... தன்னுடைய பணத்தை வைத்து, 
எங்காவது உல்லாசமாக வாழ்ந்து இருந்தால்...  நிம்மதியாக இருந்திருப்பார்.
தாயக மக்களுக்கு உதவி செய்ய வெளிக்கிட்டதால் எத்தனை வசவுகளை கேட்க வேண்டி உள்ளது.

இங்கு... ராஜ் ராஜரத்தினம் அவர்களை விமர்சித்தவர்கள் எல்லோரும்,
வாழ்க்கையில் தப்பு செய்யாதவர்கள் போலுள்ளது.
 ⁉️
போய்.... உங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை  கழுவி விட்டு, மற்றவனை விமர்சியுங்கள். 😡

சரியாச்சொன்னியள்.எல்லாத்துக்கும்  நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க வெளிக்கிட்டால் அன்னதான மடத்திலை ஒரு கவளம் சோறு கூட சாப்பிட முடியாது.

ஒரு சிலவற்றை கடந்து போய்க்கொண்டே இருக்கணும்.இதுதான் மனித வாழ்க்கை யதார்த்தம்

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு இப்ப ஒரு டவுட்.. கே.பி இப்பொழுது கிளிநொச்சியில் ஏழை அநாதைக்குழந்தைகளுக்கு உதவ தன் மீதி வயதான நாட்களை ஒப்படைத்து அவர்களோடு வாழ்கிறார்.. அவர் முன்னர் இயக்க பணத்தை எடுக்க செய்தது எதுவாகவும் இருக்கட்டும்.. இப்பொழுது அதில் ஒரு பகுதியை ஏழைக்குழந்தைகளுக்கு கொடுத்து உதவுகிறார்.. இவர் நமது தமிழ்தேசிய தீவிர வலதுசாரிகளின் பார்வையில் இனி துரோகியா..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு இப்ப ஒரு டவுட்.. கே.பி இப்பொழுது கிளிநொச்சியில் ஏழை அநாதைக்குழந்தைகளுக்கு உதவ தன் மீதி வயதான நாட்களை ஒப்படைத்து அவர்களோடு வாழ்கிறார்.. அவர் முன்னர் இயக்க பணத்தை எடுக்க செய்தது எதுவாகவும் இருக்கட்டும்.. இப்பொழுது அதில் ஒரு பகுதியை ஏழைக்குழந்தைகளுக்கு கொடுத்து உதவுகிறார்.. இவர் நமது தமிழ்தேசிய தீவிர வலதுசாரிகளின் பார்வையில் இனி துரோகியா..?

கேபி, கிளிநொச்சியில் என்று நம்பும் அபபாவியான இடதுசாரி, உஙகட டவுட்டு தீரவே தீராது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு இப்ப ஒரு டவுட்.. கே.பி இப்பொழுது கிளிநொச்சியில் ஏழை அநாதைக்குழந்தைகளுக்கு உதவ தன் மீதி வயதான நாட்களை ஒப்படைத்து அவர்களோடு வாழ்கிறார்.. அவர் முன்னர் இயக்க பணத்தை எடுக்க செய்தது எதுவாகவும் இருக்கட்டும்.. இப்பொழுது அதில் ஒரு பகுதியை ஏழைக்குழந்தைகளுக்கு கொடுத்து உதவுகிறார்.. இவர் நமது தமிழ்தேசிய தீவிர வலதுசாரிகளின் பார்வையில் இனி துரோகியா..?

எங்களிடம் அறம் Moral என்பது அறவே இல்லை.  எனவே  Results எப்படியும் வரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரதி said:

கொள்ளையடி ,என்ன கள்ள வேலை என்றாலும் செய் ...ஆனால் அதில் ஒரு பங்கை ஊருக்கு கொடு ....சுத்தம் ...வருங்கால தமிழினம் உருப்படும் .
உங்களை ஒரு விதத்தில பாரடட வேணும் நாதம்ஸ் ...உண்மையை ஒத்து கொண்டு கொண்டதற்கு🙂 

வேறு ஒருவரின், கருத்துக்கு பதிலாக கொடுத்த ஒரு கருத்தை, உங்கள் கருத்துக்காக எடுக்க வேண்டாமே (taken out of context ) 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Maruthankerny said:

தாகம் எடுக்கிறது என்பதுக்காக நீங்கள் ஒரு நாளைக்கு 5 போத்தல் தண்ணி உங்கள் சொந்த காசில் வாங்கி குடித்தாலும்  அதுவே பெரும் திருட்டுதான். எங்கோ ஒரு ஏழைக்கு இலவசமாக இந்த பூமியில்  இருந்த தண்ணீரை அவர்களுக்கு கிடைக்க விடாது தடுத்து தண்ணீரை தனிநபர் சொத்தாக்கி உங்களை என்னைப்போன்ற பணக்காரவர்க்கத்தின் அடியாட்கள் ஆகிய எங்களை வடிக்கையாளராக்கி. பணம் பார்க்கும் ஆதிக்க வெறியர்களுக்கு நாம் துணையாக நின்றுகொண்டே.... திருட்டு பற்றி.... திருநீறு பூசிய நெற்றியுடன் நியாயம் பேசிக்கொண்டு இருக்கிறோம். 
 
கடந்த 3 மாதத்தில் டெஸ்லா நிறுவனர் எலன் மாஸ்க் 200 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்து இருக்கிறார் 
இந்தளவு பணத்தை உலகில் இதுவரை இழந்தவர்கள் யாரும் கிடையாது. அந்த 200 பில்லியனும் எலன் மாஸ்கின்  குடும்ப சொத்தில்லை ..... கடின உழைப்பே உயர்வை தரும் என்று மூளைச்சலவை செய்யப்பட்டு அமெரிக்க நடுத்தர ஏழை வர்க்க மக்கள் இரவுபகலாக உழைத்து ஓய்வூதிய காலத்துக்கு என்று ஒதுக்கி சில முதலீட்டு நிறுவங்களில் முதலீடு செய்த பணம் ஆகும். பணம் ஒன்று நீர் அல்ல நீராவியாகி மேலே போவதுக்கு. இன்று அமெரிக்க உழைப்பாளிகளின் 200 பில்லியன் டாலர்கள் பணக்கரவர்க்கத்தின் கைகளுக்கு ...... வெறும் வார்த்தைகளான டெஸ்லா லாஸ்ட் 80% ( ) என்பதோடு கைமாறி இருக்கிறது. எம் கண்முன்னே நடந்த இந்த திருட்டுக்கு யார் குற்றவாளியாகி உள்ளே போவார்கள்? 

அமெரிக்க சடடத்தின் பிரகாரம் குற்றவாளியாக உள்ளே செல்லவேண்டும் என்றால் நான் இந்த யாழ்களத்தில்  உண்மையாக எழுதிய சில கருத்துக்களே போதும்.

ராஜரட்ணம் என்ன குற்றம் செய்தார் .......அது உண்மையில் குற்றமா இல்லையா என்று நீங்கள் தெரிந்துகொள்ள  வேண்டும் என்றால் நீங்கள் முதலில் வால் ஸ்ட்ரீட் பற்றி குறைந்தது 20-25 புத்தகம் வாசிக்க வேண்டும். அல்லது இனொருவரது பணத்தை பறிக்காமல் எப்படி பங்கு வர்த்தகம் செய்வது என்ற உங்கள் சூட்ஷமத்தை தெளிவாக எமக்கும் சொல்லி தரவேண்டும். 

ராஜரட்ணத்தை சிறைபிடித்த போது கொழும்பில் சிங்கள மக்கள் அமெரிக்க துராலயம் முன்பு அவரை விடுதலை செய்ய சொல்லி  ஆர்பாடடம் செய்தார்கள். ஏன் என்று நீங்கள் தெரிந்துகொள்ள முயன்றால் ஏன் குற்றவாளி  ஆக்கப்படடார் என்பதை பாதியாவது புரிந்துகொள்வீர்கள். 

(ராஜரட்ணம் செய்த மாபெரும் குற்றம் என்ன?  என்று கேட்டிருந்தேன் பதில் எழுத உங்களுக்கு நேரம் இல்லை என்று நினைக்கிறன் இன்று புதுவருடம் வேறு)  

இந்த கருத்தை உங்கள் எண்ண பாட்டில் ஏதும் மாறுதலை கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பில் நான் எழுதவில்லை. பிடித்த கொப்பில் நின்று தொங்குவதை கைவிடுவது யாழ் களத்துக்கே இழுக்கு என்றுதான்  நான்  எழுதுவதையே குறைத்துக்கொண்டேன். கருத்து பரிமாற்றம் என்பதுக்கு நாம் துளியும் இடம் கொடுக்கலாகாது. கருது திணிப்பில் கவனமாக இருக்கவேண்டும்.

புதுவருட நாளில் எதையாவது எழுதிடலாம் என்று தோன்றியதால் எழுதினேன் 
எல்லோருக்கும் பொதுவாக இருந்த தண்ணீர் இன்று ஓர் இரு பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஆனதை  நேரில் பார்த்த தலைமுறை நாம் 

காற்றும் சூரிய ஒளியும் எமக்கு கிடைக்கிறது வரும்கால சந்ததிக்கு அதுக்கும் வரி வருமோ தெரியாது 
காற்றை உள் இழுத்து சுவாசத்தை ஆரோக்கியமாக்கி  பிறந்திருக்கும் புத்தாண்டில் எல்லோரும் கொஞ்சம் ஆரோக்கியமாக  வாழுவோம். 

புத்தாண்டு வாழ்த்துக்கள் !

ரொம்ப  நன்றி ஐயா

எனது  நேரமும் மிச்சம்

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு இப்ப ஒரு டவுட்.. கே.பி இப்பொழுது கிளிநொச்சியில் ஏழை அநாதைக்குழந்தைகளுக்கு உதவ தன் மீதி வயதான நாட்களை ஒப்படைத்து அவர்களோடு வாழ்கிறார்.. அவர் முன்னர் இயக்க பணத்தை எடுக்க செய்தது எதுவாகவும் இருக்கட்டும்.. இப்பொழுது அதில் ஒரு பகுதியை ஏழைக்குழந்தைகளுக்கு கொடுத்து உதவுகிறார்.. இவர் நமது தமிழ்தேசிய தீவிர வலதுசாரிகளின் பார்வையில் இனி துரோகியா..?

என்னாச்சு என் தம்பிக்கு?

கேபிக்கும் ராஜரட்ணத்துக்குமான வித்தியாசத்தை  நான்  எழுதவேண்டும்

அதை  நீங்கள் தெரிந்துகொள்ளும்நிலை??

என்னாச்சு என் தம்பிக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Nathamuni said:

OJ Simpson வழக்கின் தகிடு தத்தங்கள் குறித்து உலகளாவிய ரீதியில் ஆய்வுகள் வந்துள்ளன. அமெரிக்க நீதித்துறையின் தரம் என்ன என்று, அங்கிருக்கும், ஸ்ரீ லங்கன் கறுத்த தோல்காரர் வக்காலத்து வாங்கும் கொடுமையை என்னென்பது.

அமேரிக்க சிறையில் மிக நீண்ட காலம் வாடும், பிரிட்டிஸ் கறுப்பினத்தவர் ஒருவரும், இந்தியர் ஒருவரும் தமக்கு எவ்வாறு மோசமான நீதி கிடைத்தது என்று புலம்பும் டிவி டாக்குமெண்டரி இங்கே ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்க விமான நிலையம் ஒன்றில், பரிசோதனையின் போது, ட்ராவல் பாக்கினில் குண்டு இருக்கிறது கவனம் என்று சொல்லி பகிடி விட்டு, 10 வருடத்துக்கு குறையாத தண்டனைக்குரிய குற்றத்தினை புரிந்த பிரிட்டிஷ் வெள்ளை இனப்பெண் நீதிமன்று கொண்டு செல்லப்பட்டு, எச்சரிக்கையுடன் விடுதலை ஆனார்.

இது போல் பல விடயங்களை சொல்ல முடியும். அமேரிக்காவில், வெள்ளைகளுக்கு ஒரு நீதி, கறுப்பர்களுக்கு ஒரு நீதி என்று நிலையில், பைத்தியக்கார, அறபடித்த விதண்டாவாதம் தேவையில்லை.

எந்த ஒரு லிங்குமே, இனத்துவேசம் குறித்து சொல்லாது, காரணம் contempt of court.  

அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு (கறுப்புத் தோல் உடையோருக்கல்ல!) பொலிஸ் கைது செய்யும் நேரம் முதல், தீர்ப்பு வரை பாரபட்சம் இருக்கிறது. ஆனால், இது பிணை முதற்கொண்டு சட்ட ஆலோசனை வரை due process எதுவும் நியாயமாகக் கிடைக்காத ஏழ்மை நிலையில் இருக்கும் கறுப்பின மக்களான ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கும், கரீபியன் வழி மக்களுக்கும் தான் பாரிய பிரச்சினை.

ஒரு குற்றத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டு, மில்லியன் டொலருக்கு சட்ட நிறுவனம் மூலம் வாதாடி, அப்பீல் செய்து ஜூரி முறையில் சான்றுகளூடாகக் குற்றம் நிரூபிக்கப் பட்ட ராஜரட்ணம், மேல் குறிப்பிட்ட ஏழைக் கறுப்பின மக்களின் poster boy அல்ல😂

இதைத் தான் முதலே குறிப்பிட்டேன், நீங்கள் வாசிக்காமல் கடந்து போயிருப்பீர்கள்: ராஜரட்ணம் தனது நூலில் கேட்கும் நீதி மறுசீரமைப்பும், கிம் கர்டாஷியன் கேட்கும் ஏழை மக்களுக்கான நீதி மறு சீரமைப்பும் ஒன்றல்ல - முற்றிலும் வேறானவை! ராஜரட்ணம் கேட்பது தன் போன்ற நிதி நிறுவன முதலாளிகள் குற்றம் செய்தாலும் சும்மா விட்டு விடும் படி, கிம் கர்டாஷியன் கேட்பது ஏழை அமெரிக்கர்களுக்கு due process இனை வழங்கும் படி.

இன/நிற பாரபட்சத்தினால் தண்டிக்கப் பட்டேன் என்று ராஜரட்ணம் ஆதரவாளர்கள் சொல்வது தவறு மட்டுமல்ல, காகக் கூட்டில் குயில் டோரா போடும் கீழத்தரமான நுட்பமும் கூட!

பி.கு: ஆவணப் படம் , விக்கிபீடியாவை மட்டும் வைத்துக் கொண்டு இது போன்ற விடயங்களை நீங்கள் புரிந்து கொண்டால் ஒரு பாதகமும் இல்லை, ஆனால் பலர் வாசிக்கும் ஒரு பொது இடத்தில் உங்கள் அரை குறைப் புரிதலைப் பரப்பினால் கேள்விகள் வருவது தவிர்க்க இயலாதது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குறைந்தபட்சம் வெள்ளைகள் பின்புறம் கழுவும் அடிமைப்புத்தியை விடுத்து, ஒரே தோல் நிறம் கொண்ட சக தமிழருக்கு, முன் ஒருபோதுமே சான்றாக எடுத்துக்கொள்ளாத ஒட்டுகேட்டலை சான்றாக எடுத்து நீதிபதி அநீதி இழைத்துள்ளார் என்ற நிதர்சனத்தை ஏற்று, தேவையில்லாத அலம்பறைகளை விடுத்து நகர்வோம்.

அவரது புத்தகத்தில், race card பாவிக்கவில்லை, பாவிக்க முடியாது. ஆனால் வாசிப்பவர்கள், வசனங்களுக்கு இடையே உள்ள விடயங்களை புரியும் அறிவு இருக்க வேண்டும். (read between the lines)

இந்த முதிர்வு இல்லாத கோதாரி (கிம் காடசியன்) அலம்பறை காரணமாகவே, கருத்தாடலை தவிர்த்தாலும், என்னையும் கவனி என்று வந்து முதுகு சொறியாமல், விசயம் இருந்தால் மட்டும் பதில் தரலாம், இல்லாவிட்டால் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Nathamuni said:

தமிழன், என் தோல் நிறத்தவர், என் கொள்கையை ஆதரிப்பவர்  இது போன்ற காரணங்களுக்காக தரவுகளைப் புறக்கணித்து (அல்லது உங்களைப் போல தரவுகளை உரிய மூலங்களில் போய் எட்டியும் பார்க்காமல்😅) யார் பின்பக்கத்தையும் கழுவ வேண்டிய மனநிலை இருக்கக் கூடாது!

வரலாற்றில் முன்னர் எடுக்கப் படாத ஆதாரம் ஏன் அனுமதிக்கப் பட்டது என்பதற்கு போய் கேஸ் ஆவணங்களை வாசிக்கும் ஆட்களுக்குப் புரியும் - நீங்கள் வாசிக்காதீர்கள்! உங்கள் நிலைக்கேற்ற ஆவணப் படங்களோடு நின்று கொள்ளுங்கள்!

ராஜரட்ணம் செய்த குற்றத்திற்கு தண்டனை பெற்று விட்டார் - இனி அவர் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியவர் அல்லர்.

ஆனால், அவரது வழக்கை உங்கள் கற்பனைகளும் கலந்து, அரைகுறைப் புரிதலையும் வைத்துக் கொண்டு நீங்கள் எழுதும் புனைகதைகள் பயனற்றவை மட்டுமல்ல, இளம் தமிழ் சமூகத்திற்குத் தீங்கானவை!

"நேர்வழி நட" என்று சொல்லிக் கொடுப்பதை விட்டு , "கொஞ்சம் கோணலாக நடந்து விட்டு தோல் நிறத்தின் பின்னால் போய் ஒளிந்து கொள்" என்று சொல்லிக் கொடுப்பது, தமிழ் சமூகத்திற்குத் தீங்கானது!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தாம் வாழும் நாட்டின் நீதி நெறி குறித்து, அறிந்து கொள்ள

https://library.harvard.edu/confronting-anti-black-racism/criminal-justice

அரை குறை புரிதல் எனக்கல்ல. எமக்கு பாடமெடுக்க முனையும், சட்ட துறை சாராதோருக்கு.... 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கொஞ்சம் தரவுகளை மட்டும் (facts) பார்போமா?

1. ராஜ் யார்? அமெரிக்க மேன்முறையீட்டு நீதி மன்றில் குற்றம் என தீர்க்கப்பட்ட மனிதர் (fact).

2. அவரிடம் இப்போ இருக்கும் பணம் முழுவதும் கொள்ளை அடித்த பணமா? தெரியவில்லை. ஆனால் அவர் செய்த குற்றத்துக்கு தண்டம் கட்டி விட்டார். இப்போ அவர் வசம் மீதம் இருக்கும் பணம், தவறான வழியில் சேர்த்தது என்று எந்த வழக்கும் இல்லை (fact).

3. ஒருவர் செய்த குற்றத்துக்கு வாழ்நாள் பூராவும் தண்டை அனுபவிக்க வேண்டுமா? இல்லை. குற்றத்துக்கான தண்டனை கிடைத்த பின், அவர் மீண்டும், மீண்டும் அதே குற்றத்துக்காக தண்டிக்க, சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க்கப்பட தேவையில்லை (பொதுவான வழமை) .

4. ஆக, ராஜின் பணத்தை நாம் பொதுகாரியங்களுக்கு பெறுவது தவறா? இல்லை - விளக்கம் புள்ளி 2 இல் உள்ளது.

5. ராஜை நாம் எமது சமூகத்துக்குள் வரவேற்பது தவறா? இல்லை.

சொல்லப்போனால் இப்படி மனம் திருந்திய முன்னாள் குற்றவாளிகளை ஒதுக்காது, சமூகத்தில் அவர்களுக்கு ஒரு பங்கை கொடுத்து - அவர்களை நல்வழிக்கு இட்டு செல்வது ஒரு சமூகத்தின் கடமை. இதன் மூலம் இவரோ அல்லது வேறு எவரோ இதே குற்றத்தை மீள செய்ய முனைவது தடுக்கப்படும்.

6. அப்போ ராஜ் குற்றவாளி இல்லை என வெள்ளையடிக்க தேவையா?

ஒரு ஆணியும் புடுங்க தேவையில்லை.

நாமே அரைகுறையாக விளங்கிய சட்டம் பற்றி மேலும் பிழையான தகவல்களை பரப்ப்பி, ஓஜே சிம்சன், அமெரிக்க நீதி முறை, என்று யானை பார்த்த விழிபுலன் அற்றவர் மாதிரி எழுதவும் தேவையில்லை.

டெஸ்லாவின் பங்கு விலைச்சரிவையும், insider trading ஐயும் ஒன்றாக போட்டு குழப்பவும் தேவையில்லை( டெஸ்லா விடயத்தில் price manipulation அல்லது insider trading இருந்தது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை). பங்கு ஏறும், இறங்கும் - எப்போதும் ஏறுமுகமாக இருக்கும் பங்கு என்று எதுவும் இல்லை. 

உலகில் சட்டம் பிழைத்த நிலை (miscarriage of justice) வரும் முதல் நாடு அமெரிக்கா இல்லை. யூகேயில் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு வரை போன கேசுகள் உண்டு. 

அதே போல் நான் நிரபராதி, சட்டத்தில்தான் பிழை என கூறிய முதல் அல்லது கடைசி குற்றவாளி ராஜும் அல்ல. அவர் தனது புத்தகத்தில் தான் நிரபராதி என கூறவும் இல்லை.

ராஜ் தன்னை தண்டித்த சட்டம்  மறுமலர்ச்சிக்கு (reform) உட்படுத்தபடவேண்டும் என்றே சொல்கிறார். அது அவரின் கருத்து. அதுக்காக குரல் கொடுக்க, போராட அவருக்கு முழு உரிமையும் உண்டு. இவ்வாறு போராட்டங்கள் மூலம் சட்டங்கள் மாற்றப்பட்ட சந்தர்பங்கள் பல உள.

இந்த சட்டத்தால், சட்ட நடைமுறையால் தண்டிக்க பட்டவர் என்ற வகையில், அவரின் கருத்துக்கு ஒரு “வாழ்ந்த-அனுபவ” (lived-experience) கனமும் உண்டு.

ஆனால் சட்டம், சட்ட நடைமுறைகளை தனிமனித, அல்லது ஒரு குழுவின் கருத்துகள் தீர்மானிப்பதில்லை.

இந்த சட்ட மறுமலர்சியை சமூகம் ஏற்றுகொள்ள வேண்டும் - அது சட்ட மூலமாகி, சட்டமாக வேண்டும். 

இதை அடைய ராஜ் முயலலாம் (முயல்வதாக தெரியவில்லை).

ஆனால் அப்படி நிகழும் வரை ராஜ் ஒரு - தண்டனையை அனுபவித்த குற்றவாளி. 

தொடர்ந்து ராஜை, அவரின் பணத்தை நாம் ஒதுக்க ஒரு அவசியமும் இல்லை, ஏனென்றால் அவர் ஏலவே குற்றத்துக்கு சிறை அனுபவித்து, கேட்ட தண்ட தொகையையும் கட்டி விட்டார்.

ஆகவே ராஜ் வரட்டும். இதுவரை குற்றமே செய்யாத மகானாக அல்ல, ஒரு தண்டையை பூர்த்தி செய்து, சமூகத்தில் மீள இணையும் பிரசையாக.

Edited by goshan_che
  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, Nathamuni said:

தாம் வாழும் நாட்டின் நீதி நெறி குறித்து, அறிந்து கொள்ள

https://library.harvard.edu/confronting-anti-black-racism/criminal-justice

அரை குறை புரிதல் எனக்கல்ல. எமக்கு பாடமெடுக்க முனையும், சட்ட துறை சாராதோருக்கு.... 

தருகிற இணைப்பின் சுருக்கக் குறிப்பைக் கூட வாசிக்க மாட்டீர்களா நாதம்?😂

ஏழை கருப்பின மக்கள் மீதான பொலிஸ், நீதி முறைமைகள் பற்றியது. ராஜரட்ணம் வழக்கிற்கும், தண்டனைக்கும், இப்போது நீங்கள் செய்யும் வெள்ளையடித்தலுக்கும் இந்தக் கட்டுரைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது!

நீங்கள் சட்டத்துறை சார்ந்தவராக இருந்தால் நிச்சயமாக உங்களால் ஒரு கேஸ் கூட வெல்ல முடியாது என்று உறுதியாகக் கூறலாம் - அப்படி இருக்கிறது உங்கள் ஒவ்வொரு கருத்தும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிகு

1. ராஜ்ஜுக்கு நாம் நன்றியாக இருக்க வேண்டுமா?

அவரிடம் ஒரு இனமாக உதவி பெற்றுள்ளோமா? ஆம்.

அப்படியாயின் ராஜ் என்ன செய்தாலும் அவர் எமக்கு செய்தது - இல்லை என்றாகாது. இது தனி வாழ்விலும் நடக்கும் விசயம்தான்.

ஆனால் நமது நன்றி உணர்வுக்காக அவரை வெள்ளை அடிக்க தேவையில்லை.

2. அப்புறம் penal reform எல்லாம் பெரிய சப்ஜெக்ட். ராஜுக்கு கூட இதில் அதிக புரிதல் இல்லை என்பது அவர் பேட்டியை பார்த்த போது புரிந்தது. 

அவர் புத்தகத்தில் எழுதியது, நாம் டிவி, யூடியூப்பில் பார்த்ததை வைத்து இதை ஓரளவுக்கு மேல் புரிய முடியாது - இதனிடையே ஏனைய கருத்தாளருக்கு சட்டம் தெரியாது, வெள்ளையின அடிமை புத்தியில் எழுகுகிறார்கள் என்பதெல்லாம் - just silly.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

கொஞ்சம் தரவுகளை மட்டும் (facts) பார்போமா?

1. ராஜ் யார்? அமெரிக்க மேன்முறையீட்டு நீதி மன்றில் குற்றம் என தீர்க்கப்பட்ட மனிதர் (fact).

2. அவரிடம் இப்போ இருக்கும் பணம் முழுவதும் கொள்ளை அடித்த பணமா? தெரியவில்லை. ஆனால் அவர் செய்த குற்றத்துக்கு தண்டம் கட்டி விட்டார். இப்போ அவர் வசம் மீதம் இருக்கும் பணம், தவறான வழியில் சேர்த்தது என்று எந்த வழக்கும் இல்லை (fact).

3. ஒருவர் செய்த குற்றத்துக்கு வாழ்நாள் பூராவும் தண்டை அனுபவிக்க வேண்டுமா? இல்லை. குற்றத்துக்கான தண்டனை கிடைத்த பின், அவர் மீண்டும், மீண்டும் அதே குற்றத்துக்காக தண்டிக்க, சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க்கப்பட தேவையில்லை (பொதுவான வழமை) .

4. ஆக, ராஜின் பணத்தை நாம் பொதுகாரியங்களுக்கு பெறுவது தவறா? இல்லை - விளக்கம் புள்ளி 2 இல் உள்ளது.

5. ராஜை நாம் எமது சமூகத்துக்குள் வரவேற்பது தவறா? இல்லை.

சொல்லப்போனால் இப்படி மனம் திருந்திய முன்னாள் குற்றவாளிகளை ஒதுக்காது, சமூகத்தில் அவர்களுக்கு ஒரு பங்கை கொடுத்து - அவர்களை நல்வழிக்கு இட்டு செல்வது ஒரு சமூகத்தின் கடமை. இதன் மூலம் இவரோ அல்லது வேறு எவரோ இதே குற்றத்தை மீள செய்ய முனைவது தடுக்கப்படும்.

6. அப்போ ராஜ் குற்றவாளி இல்லை என வெள்ளையடிக்க தேவையா?

ஒரு ஆணியும் புடுங்க தேவையில்லை.

நாமே அரைகுறையாக விளங்கிய சட்டம் பற்றி மேலும் பிழையான தகவல்களை பரப்ப்பி, ஓஜே சிம்சன், அமெரிக்க நீதி முறை, என்று யானை பார்த்த விழிபுலன் அற்றவர் மாதிரி எழுதவும் தேவையில்லை.

டெஸ்லாவின் பங்கு விலைச்சரிவையும், insider trading ஐயும் ஒன்றாக போட்டு குழப்பவும் தேவையில்லை( டெஸ்லா விடயத்தில் price manipulation அல்லது insider trading இருந்தது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை). பங்கு ஏறும், இறங்கும் - எப்போதும் ஏறுமுகமாக இருக்கும் பங்கு என்று எதுவும் இல்லை. 

உலகில் சட்டம் பிழைத்த நிலை (miscarriage of justice) வரும் முதல் நாடு அமெரிக்கா இல்லை. யூகேயில் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு வரை போன கேசுகள் உண்டு. 

அதே போல் நான் நிரபராதி, சட்டத்தில்தான் பிழை என கூறிய முதல் அல்லது கடைசி குற்றவாளி ராஜும் அல்ல. அவர் தனது புத்தகத்தில் தான் நிரபராதி என கூறவும் இல்லை.

ராஜ் தன்னை தண்டித்த சட்டம்  மறுமலர்ச்சிக்கு (reform) உட்படுத்தபடவேண்டும் என்றே சொல்கிறார். அது அவரின் கருத்து. அதுக்காக குரல் கொடுக்க, போராட அவருக்கு முழு உரிமையும் உண்டு. இவ்வாறு போராட்டங்கள் மூலம் சட்டங்கள் மாற்றப்பட்ட சந்தர்பங்கள் பல உள.

இந்த சட்டத்தால், சட்ட நடைமுறையால் தண்டிக்க பட்டவர் என்ற வகையில், அவரின் கருத்துக்கு ஒரு “வாழ்ந்த-அனுபவ” (lived-experience) கனமும் உண்டு.

ஆனால் சட்டம், சட்ட நடைமுறைகளை தனிமனித, அல்லது ஒரு குழுவின் கருத்துகள் தீர்மானிப்பதில்லை.

இந்த சட்ட மறுமலர்சியை சமூகம் ஏற்றுகொள்ள வேண்டும் - அது சட்ட மூலமாகி, சட்டமாக வேண்டும். 

இதை அடைய ராஜ் முயலலாம் (முயல்வதாக தெரியவில்லை).

ஆனால் அப்படி நிகழும் வரை ராஜ் ஒரு - தண்டனையை அனுபவித்த குற்றவாளி. 

தொடர்ந்து ராஜை, அவரின் பணத்தை நாம் ஒதுக்க ஒரு அவசியமும் இல்லை, ஏனென்றால் அவர் ஏலவே குற்றத்துக்கு சிறை அனுபவித்து, கேட்ட தண்ட தொகையையும் கட்டி விட்டார்.

ஆகவே ராஜ் வரட்டும். இதுவரை குற்றமே செய்யாத மகானாக அல்ல, ஒரு தண்டையை பூர்த்தி செய்து, சமூகத்தில் மீள இணையும் பிரசையாக.

இதே கருத்துத் தான் ஏறத்தாழ என்னுடையதும். ராஜரட்ணம் சமூகத்தில் இணைவது மட்டுமல்ல, அடுத்த தலைமுறை தமிழ் இளையோருக்கு முன்னுதாரணமாக இருக்கவும் உரிமையும், தகுதியும் உள்ளவர் தான்.

ஆனால், அடிப்படைச் சட்டமும் தெரியாமல், அமெரிக்க சமூகங்களில் நீதி மறுப்பினால் யார் பாதிக்கப் பட்டிருக்கின்றனர் என்ற ஒரு துளிப் புரிதலும் இல்லாமல் பரப்பும் கற்பனைகளைக் கடந்து போக முடியவில்லை.

குறைந்த பட்சம் பொது வெளியில் இருக்கும் வழக்காவணங்களையாவது வாசிக்காமல் சும்மா அலட்டிக் கொண்டிருக்கிறார் நாதம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Justin said:

தருகிற இணைப்பின் சுருக்கக் குறிப்பைக் கூட வாசிக்க மாட்டீர்களா நாதம்?😂

ஏழை கருப்பின மக்கள் மீதான பொலிஸ், நீதி முறைமைகள் பற்றியது. ராஜரட்ணம் வழக்கிற்கும், தண்டனைக்கும், இப்போது நீங்கள் செய்யும் வெள்ளையடித்தலுக்கும் இந்தக் கட்டுரைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது!

நீங்கள் சட்டத்துறை சார்ந்தவராக இருந்தால் நிச்சயமாக உங்களால் ஒரு கேஸ் கூட வெல்ல முடியாது என்று உறுதியாகக் கூறலாம் - அப்படி இருக்கிறது உங்கள் ஒவ்வொரு கருத்தும்!

கறுப்பின மக்களை விகிதாசாரத்தில் குறிவைத்த "போதைக்கு எதிரான போர்" முதல், பெரும்பான்மையான கறுப்பினப் பகுதிகளில் வெகுஜன சிறைவாசம் மற்றும் அதிக-காவல்துறை வரை - அமெரிக்க குற்றவியல் நீதி அமைப்பின் வன்முறை மற்றும் கறுப்பின அமெரிக்கர்களுக்கு எதிரான சமத்துவமின்மை ஆகியவை இனவெறியின் நீண்ட வரலாற்றால் தூண்டப்படுகின்றன.

இது, எனதல்ல, கூகிள் மொழிபெயர்ப்பு.

இதில் எங்கே ஏழை கறுப்பினத்தவர்கள் என்று சொல்ல பட்டிருக்கிறது?

விதண்டாவாதம் செய்ய வேறு யாரையும் பாருங்கள். இதுக்கும் மேலே, நான் முன்னர் செய்த முடிவு சரியானது என்றே கருதுகிறேன், மேலும் கருத்தாடல் இப்படியானவர்களுடன் இல்லை.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.